“மாயா நாங்க வெளியே போறோம் நீயும் வர்ரீயா ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்” என்று அழைக்க ..
“எனக்கு உடம்பு முடியலப்பா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று கூற..
“மாயா பொண்ணு நீயும் வா” என்று ரதி அழைக்க..
“இல்லம்மா இன்னொரு நாளைக்கு போகலாம். நாம காலையில கோவிலுக்கு போயிட்டு வந்ததே எனக்கு டயர்டா இருக்கு”.. என்று அவள் இடுப்பை பிடித்தபடியே கட்டிலில் சாய்ந்து கொள்ள..
“சரிடா நீ ரெஸ்ட் எடு” என்று ரதியை அழைத்துக் கொண்டு கிளம்பினார் உலகநாதன்..
உலகநாதன் எப்போதும் கார் ஓட்டினாலும் ரதியும்,மாயாவும் பின்னாடி அமர்ந்து வருவார்கள்..
இன்று ரதி மட்டும் இருக்க.. அவளை முன்சீட்டில் ஏறி அமர சொன்னவர், அவர் சென்று கார் எடுக்க..
இரவு நேரம், சில்லென்று காற்று ரதி பக்கத்தில் இருக்க அவளை பார்த்துக்கொண்டே காரோட்டினார் உலகநாதன்….
எத்தனை நாள் நினைத்து இருப்பார் ரதியுடன் காரில் செல்ல வேண்டும் என்று..
அது இன்று நிறைவேற அதை ரசித்துக்கொண்டே மெதுவாக கார் ஓட்டிக்கொண்டிருந்தவர்…
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் காரை நிப்பாட்ட..
“இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு” என்று கேட்க..
“இது பைவ் ஸ்டார் ஹோட்டல் டா உனக்கு புடிச்சிருக்கா வா உள்ள” என்று அவளை கைபிடித்து அழைத்துச் செல்ல ..
உலகநாதன் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டவள் சுத்தி முத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே வர..
ஹோட்டலின் முன் பகுதி பார்க் போல அமைந்து இருக்க, பார்க்க அழகாக இருந்து,, ஹோட்டலின் ஓரத்தில் சின்னதாக நீர்வீழ்ச்சி போல் அமைத்திருக்க, சில்லென்று காற்று வீச,, வண்ண வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் பண்ணி இருந்த அந்த ஹோட்டலின் பளபளப்பே அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது..
புடவை கட்டிகொண்டு அவளுக்கு அந்த ஹோட்டலின் நடப்பதற்க்கு சிரமமாக இருக்க,, தரை வழுக்குவது போல தெரிந்ததும் உலகநாதனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நடந்துவர..
“என்னாச்சு ரதி” என்றார்..,,
“இந்த தரை வழுக்குது” என்று கூற….
“நல்லா புடிச்சுக்கோ” என்றவர்..
அவர் இங்கே வரும் முன்பே இடத்தை புக் பண்ணி இருக்க..
அந்த இடத்திற்கு ரதியை அழைத்துக் கொண்டு சென்றார்…
இருவரும் அமர்ந்ததும்.. உலகநாதன் மெனு கார்டை எடுத்து ரதியிடம் தர..
“என்ன?” என்பது போல் அதை திருப்பி திருப்பி பார்த்தவள்.
உலகநாதனிடம் தந்து விட..
“உனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணுடா ரதி ” என்று கூற..
” இதுல இருக்குறது எனக்கு ஒண்ணுமே தெரியலையே” என்றவளை…
“சரி வாடா” என்று செல்ஃப் சர்வீஸ் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்..
அங்கே வகை வகையான உணவுகள் சூடான பாத்திரத்தில் மூடி வைத்திருக்க.. அங்கே ரதியை அழைத்து வந்தவர் ரதியின் கையில் ஒரு பிளேட்டை கொடுத்து.. “உனக்கு என்ன பிடிக்குமோ எடுத்துக்கோடா என்று கூற..
ரதி அவளுக்கு பிடித்தமான உணவை அளவாக எடுத்துக்கொண்டு வந்து சேரில் அமர..
“போதுமாடா உனக்கு”.
” போதும் வளர்ந்தவனே” என்றவள்…
“நீங்க சாப்பிடலையா” என்று கேட்க..
” நான் வீட்டிலேயே சாப்பிட்டேன் டா நீ சாப்பிடு”…
அவளுக்கு தனியாக சாப்பிட பிடிக்காமல் “நீயும் கொஞ்சம் சாப்பிடு” என்று உலகநாதனின் வாய்யருகே உணவை ரதி நீட்ட”..
“நீ சாப்பிடுமா” என்று அவர் கூற..
” நீ கொஞ்சம் சாப்பிடு” என்ற ரதி அவர் வாய் அருகே உணவைக் கொண்டு செல்ல…
வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல் உலகநாதன் ரதியை பார்க்க… “கொஞ்சம் சாப்பிடேன்” என்று அவள் கெஞ்சிய பார்வையில்,,
சொக்கி போனவர் வாய் தானாக விறிய,, அவர் வாயில் உணவை திணித்திருந்தாள் ரதி..