Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 9(2)

உளமாற உனதாகிறேன் – 9(2)

 

“அப்பப்பா என்னா வெயிலு… ஏய் பிரபா.. ஏய் பிரபா… கொஞ்சம் நீர்மோர் கொண்டு வா… ஏய் ரோஜா எதுக்கு இப்போ சத்தம் போட்டு சிரிச்சிட்டு இருக்க… இது வீடா இல்லா வேற எதாச்சுமா… ஒரே தலைவலியா இருக்கு…” என்று சோபாவில் அமர்ந்தவர் அப்போது தான் வாசு இருப்பதை உணர்ந்து கொஞ்சம் ஜெர்கானாலும்… தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்…

 



Advertisement

“என்ன தம்பி… வேலைக்கு போகலாயா…‌ எதுக்கு தம்பி அப்படி பார்க்குறீங்க… இல்ல போலீஸ்கெல்லாம் ஞாயிறு கூட லீவ் இல்ல தானே… அதுதான் கேட்டேன்…” என்று மென்று முழுங்க…

 

“ஓ… அந்த அர்த்தத்துல கேட்டீங்களா… நான் கூட நீ இன்னும் வேலை போகாம என்னடா பண்றா… அப்படின்னு கேட்குறீங்களோ நினைச்சேன்…” என்று அவர் மனதில் இருப்பதை அப்படியே கூறியவன்…

Advertisement

 

Advertisement

“பாப்பு குட்டி இங்க வாங்க… எதுக்கு விளையாடுறதை நிறுத்துனீங்க… தப்பு செஞ்சா தான் பயப்படனும்… இல்லன்னா எதுக்காகவும்… யாருக்காகவும் பயப்பட கூடாது… அப்படி யாராச்சும் உங்களை திட்டுனா சித்தப்பாக்கிட்ட வந்து சொல்லுங்க” என்று கூறிட… வேகமாக மண்டையை ஆட்டியது அவ்வாண்டு…

 

வண்டியை நிறுத்திவிட்டு உள் நுழைந்த அர்ஜூன் அப்படியே நின்றுவிட்டான்… அவன் பார்வை எல்லாம் இனியாளின் மீதுதான்… என்னவோ அவள் இன்று இன்னும் அழகாய் இருப்பது போன்று தோன்ற… வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தவன்… வாசுவின் செருமலில் அவனை நோக்க… அவ்விழிகளில் தெரிந்த கோவத்தில் உறைந்து தான் போனான்…

Advertisement

 

“அது… அது… பர்ஸ் தொலைச்சிட்டேன்… அதுதான் பார்த்திட்டு இருந்தேன்…” என்று என்னவோ உளர…

 

“தொலைச்சது கிடைக்காது பாஸ்… அதனால அதை பார்க்காம வேற எதையாச்சும் புதுசா வாங்கிக்கோங்க… இல்லன்னா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல” என்ற ஆழ்ந்த குரலில் கூறிய வாசு கைகளை தூக்கி நெட்டி முறிக்க… தானாய் அர்ஜூனின் கரம் அவன் கன்னத்தை தொட்டு மீண்டது… யாருக்கும் எதுவும் புரியவில்லை…

 

“என்ன சொல்ற தம்பி ஒன்னும் புரியலயே” என்ற ஞானசெல்விக்கு…

 

“புரிய வேண்டியவங்களுக்கு புரியும்… நீங்க கவலை படாதீங்க… என்ன இனி அப்படியே டீ கப்போடு நிக்குற… போய் உன் அத்தை மகனுக்கு கொடு” என்றிட… அர்ஜூனிடம் டீயை நீட்டியவள்… அப்படியே சென்றுவிட… அவளின் எதுவும் நடவாத பாவனை அர்ஜூனை சாய்த்தது உண்மை… தான் அவளுக்கு ஒன்றுமே இல்லையா என்ற ஏக்கம் கோபமாய் படர்ந்திட… டீயை குடிக்காது அப்படியே மேஜை மீது வைத்துவிட்டான்…

 

முகமெல்லாம் சூடாகிட… தன்னை கடந்து சென்றவளை பிடித்து உலுக்கும் ஆவேசம் ஏற்பட… அதனை செயல்படுத்தும் முன் ஞான செல்வியின் குரல் அவனை தன் சுயத்திற்கு கொண்டு வந்தது…

 

“இந்தாடி ஒரு நிமிஷம் நில்லு… ஆமா எங்க உன் கொலுசு… எங்கேயாவது தொலைச்சிட்டியா… இதே வேலை தான உனக்கு…இன்னும் சின்ன பிள்ளையா நீ… கல்யாணம் ஆகியும் இன்னும் திருந்தல… ஏன் தம்பி இப்படி பொறுப்பு இல்லாதவள கட்டிட்டு நீங்க என்ன செய்ய போறீங்களோ தெரியல போங்க” என்று என்னவோ அது பெரிய விடயம் போல் இனியாளை சாடியவர் பரிதாபமாக வாசுவிடம் முடிக்க… அவனோ அவரை அழுத்தமாக பார்த்தபடி…

 

“கொலுசு தொலைஞ்சதுன்னு அவ சொன்னாளா… நீங்களா ஒன்னை கற்பனை பண்ணிட்டு பேசிட்டு இருக்கிங்க… கொலுசு ரொம்ப டிஸ்டர்பா இருந்துச்சு… அதனால கழட்டி வைச்சிட்டோம்… இப்போ அதனால உங்களுக்கு என்ன பிரச்சினை… அது எங்க பிரைவசி” என்றவனின் பதிலில் அவர் மட்டுமல்ல அனைவரும் வாயடைத்து நின்றிட… எதுவும் பேச இயலாது வீட்டின் பின் சென்று விட்டாள் இனியாள். முகம் மட்டும் செந்தனலாய் சிவந்து இருந்தது… அப்படியே அவளை பின் தொடர்ந்து வாசு சென்றிட… அதனை வெறித்து பார்த்திருந்தான் அர்ஜூன்…

 

“என்ன இனி வெட்கபடுறீயா… முகம் எல்லாம் சிவக்குது… ம்ம்…” என்றவனை கோவமாக நோக்கியவள்… அப்படியே கையை கொண்டு போய் அவன் கழுத்தை நெறிப்பது போன்று கொண்டு சென்றிட…

 

“ஐ ஆம் யுவர்ஸ் இனி…” என்றவனின் புன்னகையில் கையை கீழ் இறக்கியவள்… தலையை பிடித்து அமர்ந்துவிட…

 

“நீங்க தெரிஞ்சு பண்றீங்களா… இல்ல தெரியாம பண்றீங்களா… எதுக்கு இப்போ அப்படி சொல்லி இருக்கிங்க… அதுக்கு என்ன அர்த்தம்னு புரியுதா… என்னை பத்தி என்ன நினைப்பாங்க… உங்க இஷ்டத்துக்கு என்னை வளைக்காதீங்க…” என்று இயலாமையோடு வார்த்தைகள் வந்து விழுந்தது…

 

அவளின் முகம்… அவள் கொட்டும் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு வலியினை கொடுத்திட…

அப்படியே அவள் அருகில் அமர்ந்தவன்… மெல்ல அவள் தாடையை பற்றி தன்னை பார்க்க வைத்தான்… தன் மனதில் இருப்பதை வெளிக் கொணர நினைக்க… சரியாக வெளியே என்னமோ சத்தம்…

 

யாரோ யாரையோ திட்டுவது போன்று கேட்டிட… அவன் பிடியில் இருந்து தானாய் வெளி வந்தவள் கண்டது காச் மூச்சென்று கத்திக் கொண்டு இருந்த நமச்சிவாயத்தை தான்… அவர் முன்னே அமைதியாய் நின்றிருந்தாள் வெண்பா… இனியாள் வந்து நின்றதும் தானாய் அவள் விழிகள் அவளையும்… அவள் பின்னே வந்து நின்ற வாசுவையும் நோக்கியது…

 

தொடரும்…

 

One thought on “உளமாற உனதாகிறேன் – 9(2)

  • Divyalakshmi Sugumar

    Intresting
    Venba vandhu yenna 💣💣💣💣poda podaralooo

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!