Skip to content
Post Views: 987
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 26
கங்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து கெளசி சிவராமனிடம் கண்டிஷன் போட ஆரம்பித்துவிட்டாள்.
அப்பா இந்த கங்கா நீ ஒரு எரும மாட்டை கூட்டிட்டு வந்தாலும் நல்லா இருக்குனு கட்டிக்குவா.அதுனாலே நான் பார்த்து மாப்பிள்ளையே ஓகே பண்றே. அப்படினாதா மாப்பிள்ளை அழைப்பு அப்போ நான் ஆர்த்தி எடுக்க வருவே. இல்லைனா நீ வேற ஆள பாத்துக்க என பேரம் பேசினாள்.
இன்று தான் இல்லாமல் அக்கா திருமணம் நடக்கும் என கனவிலும் நினைக்க வில்லை. சிவராமனை மீறி அங்கு செல்லவும் துணிவில்லை.தன் இடத்தில் இருந்து கங்காவிற்கு உதவ தன் தோழி மீராவை அனுப்பி வைத்தாள்.
Advertisement
இதற்கிடையில் கங்காவின் பள்ளியில் இருந்து அழைப்பு.ஏன் ஒருவாரமாக லீவு என…சிவராமன் கங்காவின் தன்மானம் குறைய கூடாது என எண்ணினார். அதனால் லட்சுமியையும், கெளசியையும் பள்ளிக்கு அனுப்பினார்.
ரெண்டு வெத்தலை பாக்கு வாங்கிட்டு ஸ்கூல் ஓனர் அம்மாகிட்ட போ லட்சுமி. எங்க வீட்டுகாரருக்கு உடம்பு சரியில்ல அதுனால கங்காவுக்கு திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிடோம்.தூரத்து சொந்தத்துல மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு.மாப்பிள்ளை ஊருல கல்யாணம் வெக்கறோம்னு சொல்லு..
கெளசி,அவங்க ஏதாச்சு கேட்க போய் உங்க அம்மா உண்மைய உளறுனா நீ சமாளிச்சு கூட்டிட்டு வா. எங்கையும் கங்காவ பத்துன உண்மையே சொல்லி அவமான படுத்திரக் கூடாது என சொல்லி அனுப்பினார்.
Advertisement
அவர் சொன்னதை கிளிப்பிள்ளையாக வனிதாவிடம் ஒப்பித்துவிட்டு வந்தார் லட்சுமி.
Advertisement
காலை கங்காவின் கைக்கு வளையல் அணிவித்தவாறே அக்கா,”அம்மா அப்பா இல்லாம கல்யாணம் பண்றதுக்கு உங்களுக்கு சம்மதமா?என மீரா கேட்க..
தன்னையும் மீறி இரண்டு கைகளால் தன் தலையில் அடித்துக் கொண்டே அழுதாள் கங்கா..
அக்கா அழாதீங்க.. எல்லாம் சரி ஆகிடும் என அமைதிபடுத்தினாள் மீரா.
Advertisement
அந்த ஊர் பெரியவன் என ஒருவனை கல்யாணத்தை முன்னின்று நடத்த அழைத்து வந்தார் அருளின் அப்பா. கங்காவை ஒரு முக்காலியில் அமர வைத்து நலங்கு வைத்தனர்.பின் கல்யாண புடவையை எடுத்து வர சொல்ல பையில் இருந்து எடுத்து கொடுத்தாள்.
இன்னைக்கு என்ன எல்லாம் போட போறையோ எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து தட்டுல வை. நா பூஜை பண்ணி தரே என்றான் அந்த பெரியவன்.
அந்த ஊரில் உள்ள ஆண்கள் வீட்டில் எல்லாம் பெண்களே இல்லை என்ற மாதிரியும்,அவர்கள் இதெல்லாம் அணிய மாட்டார்கள் என்பதை போலவும் இருந்தது அவர்கள் நடத்தை.
இதற்கெல்லாம் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் பல்லை இளித்துக் கொண்டு நின்றிருந்தான் அருள்.
எல்லா நாடகமும் நடந்து முடிய ஒருவழியாக,சங்கமேஸ்வரர் கோவில் வந்து சேர்ந்தனர்.அங்கு இறப்பவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஒருவர் தன் அப்பாவிற்கு திதி கொடுத்தபின் அதே அக்னியை எடுத்து வைத்து இவர்களை மனப்பலகையில் அமர வைத்தார் ஐயர். நிறைய மந்திரம் கூற, அருளை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாள் கங்கா.
அவளின் உள்ளுணர்வு,” கங்கா இது உன்னுடையது இல்ல கங்கா. உன்னுடையது பத்திரமா இருக்கு கங்கா.இந்த இடத்துல இருந்து எப்படியாச்சு தப்பி ஓடிரு” என கூக்குரல் இட்டது.
எங்கு ஓடுவது? பரந்து விரிந்த கூடுதுறை பவானி ஆறு அவள் முன்… எழுந்து அந்த ஆற்றில் குதித்து விடுவோமா?அப்பா அம்மா தங்கை என மூவர் முகமும் அவள் கண்ணில் நினைவுகளாக வந்து போனது.
வேண்டா நாம விழுந்து செத்து போய்ட்டா நம்ம உடம்பே எடுத்து இவனுங்க ஏதாச்சு பண்ணிருவாங்க.
நம்ம அப்பாகிட்ட போயே செத்து போய்ரலாம் என மடத்தனமான யோசனை அவள் எண்ணங்களில்..
எல்லா மந்திரமும் கூறி முடித்தபின் ஐயர் தாலியை கேட்க,அது வீட்டில் மறந்து வைக்கப்பட்டு இருந்தது.இதை கேட்டவுடன் ஐயர் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார்.
கல்யாணம் பண்ணதானே வந்தீங்க. உங்கள பாத்தா அப்படி தெரியலயே என்றார். எங்கே குட்டு வெளியே வந்து விடுமோ என்ற பயம்.பின் உறவுப்பெண் ஒருவரின் தாலியை கழற்றி,அதில் புது மஞ்சள் கயிறை அவசர அவசரமாக மாற்றி ஊர் பெரியவன் எடுத்து வந்து,சரியா பாக்கமா சொல்லிட்டாங்க இந்தா இருக்கு என தாலியை கொடுத்து சமாளித்தான்.
கங்காவிற்கு அந்த தாலியை பார்த்ததும் புரிந்தது இவர்களின் கேடித்தனம். மாட்டிற்கு மூக்கணாங் கயிறு கட்டுவது போல அந்த தாலியை அருளும், அவனின் அக்காவும் கங்கா கழுத்தில் கட்டினர்.
பின் வீட்டிற்கு செல்லும் வழியில் கங்காவும் அருளும் பின்சீட்டில் அமர்ந்திருக்க,முன்னால் டிரைவரும், ஊர் பெரியவனும் அமர்ந்து கொண்டனர்.நல்ல மழை. அதுவரை அருளின் உறவுப் பெண்ணுடன் வண்டியில் வந்த மீரா காரில் பின் சீட்டில் ஏற போனாள்.
அவளை தடுத்து முன் சீட்டில் அமர வைத்துக் கொண்டான் ஊர் பெரியவன். பின்னால் தாரளமாக இடம் உள்ளது. கங்காவும் அருளை விட்டு தள்ளி கதவோரம் அமர்ந்திருக்க,மீராவை இங்கேயே உட்கார வைத்திருக்கலாம்.
அவன் நடத்தை சரியில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.இங்கேயும் அருள் எதுவும் பேச வில்லை.
முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.ஒரு பெண் திருமணத்திற்காக வயதளவிலும்,உடலளவிலும் தயாராவதற்கு முன்பு மனதளவில் தயராக வேண்டும்.
மனதளவில் கங்கா தயாரா என்றால் இல்லை.இருவரையும் அறைக்கு அனுப்பி விட்டு கூட்டம் கலைந்தது.
ஃபோனில் பேசியபடி உள்ளே வந்த அருளிடம் கேள்விகளை அடுக்கினாள் கங்கா.
இன்னைக்கு உங்க ஊர் பெரியவரு மீராகிட்ட நடந்த விதம் எனக்கு சுத்தமா பிடிக்கல.
ஆமா கங்கா நானும் பாத்தே
அப்பறோம் ஏன் நீங்க எதுமே சொல்லுலே?
அவரு ஊர் பெரியவர் கங்கா அவரு என்ன செஞ்சாலும் நாம பொறுமையா போகனும்
அப்ப நாளைக்கு அவன் என்னையே அப்படி பண்ணுனா கூட பொறுமையா போய்ருவீங்களா ?
சற்றும் தயங்காமல் ஆமா என்றான்.
இந்த பதிலை எதிர்பார்க்காத கங்காவிற்கு அதிர்ச்சி எதையும் வெளி காட்டி இவன் முன்னால் தோற்று விடக் கூடாது என உறுதியாக நின்றாள்.
மீண்டும் மீண்டும் அருளிற்கு ஃபோன் வந்து கொண்டே இருந்தது.
யார் ஃபோன்ல
ஃபிரெண்ட்
எடுத்து பேசுங்க
இல்ல காலைலே பேசிக்கறேன்.
சரி கொடுங்க நான் பேசறே என சட்டென ஃபோனை பிடுங்கி விட்டாள்.
அதில் நான் ரம்யா. அருளின் காதலி என ஒருவள் அறிமுகப்படுத்தி கொண்டாள்.
நாங்க ரெண்டு பேரும் எட்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தோம்.
எட்டு வருஷமா?அப்பறோம் ஏன் என்கூட கல்யாணம் என தன் மனதில் தோன்றியதை நேரில் நின்ற அருளிடமும், ஃபோனில் இருந்த ரம்யாவிடமும் ஒரு சேர கேட்டாள் கங்கா.
எங்க வீட்டுல எங்க மாமாவுக்கு மேரேஜ் பண்ணி கொடுத்துட்டாங்க என்றாள் ரம்யா
மறுமுறையும் தோல்வி கங்காவிற்கு.
சரி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்பறோம் ஏன் இன்னமும் இவருக்கு ஃபோன் பண்ணிட்டு இருக்கீங்க?
என்னால அவனே மறக்க முடிலே.நாங்க கணவன் மனைவியா வாழ்ந்துட்டோம் ஆனா விதி எங்கள பிரிச்சிருச்சு என கண்ணீர் வடித்தாள்.
கங்காவை பொறுத்தவரை காதல் கூட தவறுதான்.இப்படி திருமணத்திற்கு முன் கணவன் மனைவியாக வாழ்வது எல்லாம் அன்றைய சினிமாவில் கூட அவள் பார்த்து இல்லை.
ரம்யா கூறியதை உணரவே ஒரு யுகம் தேவைப்பட்டது கங்காவிற்கு. கல்யாணமாகி கணவன் இருக்க இவனை மறக்க முடியவில்லை எனவும் தங்கள் அந்தரங்க விஷயங்களை இப்படி வெளிப்படையாக கூறிய ரம்யாவை விட கங்காவிற்கு உடம்பெல்லாம் கூசியது.
இதற்குமேல் ஃபோனை தொடர விருப்பமில்லாமல் கட் செய்து விட்டாள்.
அருளிடம் இதை பற்றி கேட்க எல்லாம் உண்மைதான் கங்கா,ரம்யாவை அவங்க மாமாவுக்கு விட்டு கொடுத்துட்டு நான் விலகிட்டேன் என ஏதோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி பெருமையாக கூறினான்.
“எனக்கு தலைவலிக்குது வெளியே போங்க” என கத்த,அமைதியாக வெளியே சென்றான். தலையில் கைவைத்து ஒருமணி நேரம் அழுது முடித்தாள்.எப்போது தூங்கினாள் என தெரியவில்லை.
திடீரென முழிப்பு தட்டியது.மணி அதிகாலை இரண்டு.
எழுந்து அமர்ந்து கொண்டாள்.தினமும் பள்ளி செல்லும் முன் சகுனம் பார்த்து அனுப்பும் சிவராமன் முகம் நினைவில் வந்தது.எதிரே விறகு வந்தால் கூட திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார். தண்ணீர் குடித்து சிறிது நேரம் கழித்தே அழைத்து செல்வார். இன்று தன் திருமணம் நடந்த விதம் என நினைக்கையில் மனம் பதைபதைத்தது.
அதன் பின் தூக்கம் வரவில்லை. இன்னமும் மூன்று மணி நேரம் ஓட்ட வேண்டுமே.அருளின் ஃபோன் பக்கத்தில் கிடக்க அதை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.
அருள் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் இன்டிமசி வீடியோ அதில் இருந்தது.ரம்யா வாகத்தான் இருக்கும் என யூகித்தாள்.
அதை பார்த்ததும் வயிற்றை பிறட்டிக் கொண்டு வாந்தி வந்தது.எழுந்து பாத்ரூம் சென்று அனைத்தையும் வெளியே துப்பினாள். அதன்பின் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தாள்.
காலை விடிந்தது. கங்கா ஒரு திடமான முடிவெடுத்தாள்.இனி தன்னை தான்தான் காப்பாற்ற வேண்டும். எப்படியும் இந்த விஷயங்கள் சிவராமனுக்கு தெரிந்தால் சிவதாண்டவம்தான்.
இதற்காகவா இத்தனை நாள் இவர்களின் சூழ்ச்சியை தாங்கி கொண்டோம்.
இனி ஒரு நிமிடம் இங்கு இருக்க கூடாது. அவினாசியே சென்று விடுவோம் என முடிவெடுத்தாள். அருளையும் உடன் அழைத்து செல்லலாம். அவனுக்கு அங்கே ஒரு வேலை ஏற்பாடு செய்து விடலாம். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவனை திருத்தி விடலாம் என முடிவெடுத்தாள்.
தன் முடிவை சொல்ல உள்ளே செல்ல, மீண்டும் அருளின் அப்பா,அம்மா,மாமா அவன் உறவினர் இருவர் என எல்லோரும் முதலிரவுக்கு வாங்கிய பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
என்ன ஒரு கேடு கேட்ட ஜென்மங்கள் என கங்காவிற்கு தோன்றியது. இதற்குமேல் முடியாமல் தன் முடிவை கூற,அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரி என சொல்லி விட்டனர்.
பின் நேற்று கட்டிய தாலியை மாற்றி கங்காவின் புது தாலியை கட்டினார் அருளின் அக்கா.
கங்கா லட்சுமிக்கு ஃபோன் செய்து ஊரில் தனக்கு வீடு பார்க்க சொன்னாள்.ராதாவும் லட்சுமியும் நாள் முழுவதும் அலைந்து அடுத்த ஊரில் வீட்டை பிடித்தனர்.
வெள்ளி திருமணம், சனிக்கிழமை இரவே அருளை அழைத்துக் கொண்டு கங்கா கிளம்ப,அவனின் அம்மாவும் அப்பாவும் உடன் வந்தனர்.
ஊர் வந்து சேர்ந்த கங்காவை பார்த்தும் லட்சுமி கண்கள் கலங்க அவளை அணைக்க வந்தார்.
கங்கா அவர் கையை தட்டிவிட்டு கலாவிடம் வந்து நின்று கொண்டாள்.
கலா,” உனக்கு அறிவு இருக்கா கங்கா?எதுக்கு இப்படி ஒரு வேலை பண்ணுன.
என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருந்தா நான் ஏதாச்சு பண்ணிருப்பே” என ஆதங்கப்பட்டார்.
கங்கா எதுவும் பேசாது மெளனமாக நின்றாள்.
உங்க அப்பா பாண்டவர் பூமி படத்துல வரமாதிரி உன்ன வெட்ட போது பாரு என கூற மீண்டும் மூவருக்கும் நடுக்கம்.
லட்சுமி சிவராமனிடம் பொய் கணக்கு சொல்லி சேர்த்து வைத்த பணத்தில், சமையல் பாத்திரங்கள்,மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்திருந்தார்.கலா தன்னுடைய கேஸ் அடுப்பை தந்தார்.
அருளின் அப்பாவும் அம்மாவும் என்ன வீட்டுல ஒன்னுமே இல்ல.நாங்க கூட பீரோ,கட்டில் எல்லாம் இருக்கும்னு வந்தோம். அதுமட்டுமல்ல வீடும் சின்னதா ஓட்டு வீடா இருக்கு.நல்லா பெரிசா டார்ச்சு வீடா பார்த்திருக்கலாம் என்றனர்.
கங்கா, இங்கே வர கேட்க ஏன் உடனே சம்மதம் தெரிவித்தார்கள்? என இப்போது அவளிற்கு புரிந்தது.பின் தங்கள் காசை போட்டு ஒரு ஃபேனை வாங்கி மாட்டிவிட்டார் அருளின் அப்பா.
கிளம்பும் போது கங்காவையும், அருளையும் தனியே அழைத்து “சிவராமனை வீட்டிற்கு அழைக்க வேண்டாம். அவர் அங்கே கூப்பிட்டாலும் போக வேண்டாம் என அறிவுரை கூறி சென்றார்.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!