Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 30.2

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 30.2

காலை நியூ இயர். இருவரும் குளித்து ரெடியாகி டவுன் பஸ்ஸில் கோவிலுக்கு சென்றனர்.

சயன கோலத்தில் இருந்த பெருமாள் கோவில்.நல்ல தரிசனம்.இருவரும் கோவிலில் புளியோதரை வாங்கி உண்டுவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.நித்யா ஜன்னலோரமும்,கங்கா அவள் பக்கத்திலும் அமர்ந்து கொண்டாள்.

நித்யா, “கங்கா ஒரு நிமிஷம் உன் ஃபோன் கொடு.இந்த மாலதி ஃபோன் எடுக்கவே மாட்டீங்கறா”என்று இவளது ஃபோனில் இருந்தும் கூப்பிட்டு விட்டாள் எடுக்க வில்லை.



Advertisement

யார் மாலதி?

இவளும் நம்ம காலேஜ்தான்.என் டிபார்ட்மென்ட் ஆனா நீ அவளை பாத்திருக்க மாட்டே.இப்போ மாலதி பிடிஏ வா வேலை செஞ்சிட்டு இருக்கா.

ஓ!பிஎச்டி முடிச்சிட்டாலா?

Advertisement

இல்லடி.பண்ணிட்டு இருக்கா.நான் சல்மான்,மாலதி மூனு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ்.நானும் சல்மானும் ஒரே சார்கிட்ட பிஎச்டி பண்ணிட்டு இருக்கோம்.மாலதி மட்டும் வேற ஒருத்தர்கிட்ட பண்ணிட்டு இருக்கா.

Advertisement

சல்மான் நியூ இயர் செலிப்ரேசனுக்கு டெல்லி போய்ருக்கான். அவனுக்கு முடி ரொம்ப கொட்டுதுனு ஃபீல் பண்ணுனா. அதா எண்ணெய் காய்ச்சி எடுத்துட்டு வந்திருக்கேன்.மாலதி கிட்ட கொடுத்தா. அவன் கிட்ட கொடுத்துருவா என்றாள்.

சல்மான் ரொம்ப டேலண்ட்டான பையன். நான் மாலதி சல்மான் மூணு பேரும் நல்லா என்ஜாய் பண்ணுவோம்.
இப்போ கூட டெல்லி வானு என்னை கூப்பிட்டான். நான்தான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறே,வரலேனு சொல்லிட்டேன்.அப்பறோம் அவனுக்கு அஞ்சாயிரம் பணம் மட்டும் கொடுத்தேன் என்றாள்.

இவ இன்னமும் கதை அளந்து விடறதுல இருந்து மாறல போல என கங்கா நினைத்துக் கொண்டாள்.மேலும் சல்மானை பற்றி கேட்கவும் கங்காவிற்கு விருப்பம் இல்லை.

Advertisement

ஒரு வழியாக மாலதி ஃபோனை எடுத்து விட்டாள்.அவள் வீட்டருகே உள்ள பஸ்ஸ்டாபில் வந்து எண்ணெய்யை வாங்கி கொண்டாள்.

பஸ்ஸில் இருந்தவாறே எண்ணெய்யை கொடுக்க,அவள் கங்கா எங்கே? என்றாள்.அதன்பிறகே கங்கா எட்டிப்பார்த்தாள்.

ஹாய் கங்கா எப்படி இருக்கே?

நல்லா இருக்கே.நீ எப்படி இருக்கே என்றாள் இவளும்

நல்லா இருக்கே. வீட்டுக்கு வா கங்கா.

இன்னொருநாள் வரேன் என்றாள்.

அதற்குள் பஸ் கிளம்ப இருவரும் புன்னகையுடன் ‘பை’ சொல்லி அவரவர் வழிகளில் பயணித்தனர்.

ஒருமாதம் கடந்த நிலையில் மாலை ஆறரை மணி நித்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

டியூசன் பிள்ளைக்கு அல்ஜீப்ரா சொல்லித்தந்தவள் காலை கட் செய்து விட்டாள்.மீண்டும் ஃபோன் வந்தது. ஏதோ அவசரம் போல என எண்ணி ஃபோனை எடுத்தாள்.

கங்கா நான் சொன்னே இல்ல என் பிரண்ட் சல்மான் லைன்ல இருக்கான். அவன்கிட்ட உனக்கு அஸ்ட்ராலஜி தெரியும்னு சொன்னே, அவனுக்கு அஸ்ட்ராலஜி பாத்து சொல்லுவையா?

சல்மான்?முஸ்லிம்?அஸ்ட்ராலஜி?என ஒரு நிமிடம் யோசித்தாள். அந்த யோசனையை கலைத்தான் அவன்.

ஹலோ கங்கா.நான் சல்மான்.உன் பிரெண்ட் உனக்கு அஸ்ட்ராலஜி தெரியும்னு சொன்னா.எனக்கு கொஞ்சம் பாத்து சொல்லேன்.

மரியாதை இல்லாமல் ‘நீ வா போ’ என பேசியது அவளுக்கு பிடிக்கவில்லை.

என்ன கங்கா ‘நீ வா போனு’ பேசறேனு நினைக்கறியா எனக்கு அதான் கம்ப்பர்டபிள். நீயும் வேணுணா என்னை ‘நீ வா போனு’ பேசு என்றான்.

இவன் பேச்சு அவளுக்கு கடுப்பைதான் தந்தது. நீங்க உங்க பிறந்த நேரம் டிடெயில்ஸ் கொடுங்க என்றாள். அவன் கூற குறித்து கொண்டாள்.

கங்கா உன்னோட டேட் ஆஃப் பர்த் என்ன? என்றான்.

இவள் கூற,நான் உன்னை விட ஒரு வயசு சின்ன பையன். நான் உன்னை ‘நீ வா போனு’ சொல்றது உனக்கு ஓகே தானே ?

அதுதா கூப்பிட்டுட்டையே அப்பறோம் என்ன?என எண்ணியவாறே அதெல்லா ஒன்னு இல்ல.நீங்க கூப்பிடுங்க என்றாள்.

சிறிது நேரத்தில் அவனது கட்டத்தை கணித்து,சல்மான் உங்களுக்கு கன்னி ராசி,ரிஷப லக்னம்.

பொதுவா ரிஷப லக்ன காரங்களுக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க.நீங்க அம்மாவாசையிலே பிறந்து இருக்கீங்க. அம்மாவாசையிலே பிறந்து இருந்தா அவங்க ரொம்ப அறிவாளியா இருப்பாங்க.

பதினொன்னாம் இடத்துல உங்களுக்கு சனியும் கேதுவும் சேர்ந்து இருக்கு இது கோடிஸ்வர யோகம். நீங்க பியூச்சர்ல பெரிய பணக்காரரா ஆகுவீங்க.

அப்பறோம் முக்கியமான விஷயம் உங்களுக்கு லவ்மேரேஜ்தான் நடக்கும்

யார் கூட கங்கா?

என்ன என்னை கேட்கறீங்க?அது உங்களுக்குதானே தெரியும்.

கங்கா நீ சொன்ன எல்லாத்தையும் ஏத்துக்குவேன்.ஆனா லவ் மேரேஜ் மட்டும் நடக்கவே நடக்காது.

நான் எங்க அப்பா, அம்மா யாரை பாக்கறாங்களோ அவங்கள தான் மேரேஜ் பண்ணிக்குவேன்.

முஸ்லீம் பொண்ணை தவிர வேற யாரையாவது நான் மேரேஜ் பண்ணுனா எங்க அப்பாவையும் அம்மாவையும் யாருமே மதிக்க மாட்டாங்க என்றான்.

ஏற்கனவே இவன் பேச்சு கடுப்பை தர, இதில் இவன் திருமண கதை அதிலும் முஸ்லிம் பெண் என்றதும் நஸ்ரின் பானு,முபீனா முகங்கள் வந்து போக. சரிங்க சல்மான் உங்க ஆசைப்படியே உங்களுக்கு நல்ல முஸ்லீம் பெண் அமைய வாழ்த்துக்கள்! மீதியை நான் நித்யாவுக்கு அனுப்புகிறேன் என ஃபோனை வைக்க போனாள்.

கங்கா ஒரு நிமிஷம்.

சொல்லுங்க சல்மான்.

நீ இப்படி என்னை நீங்க வாங்கனு பேசறது புருஷன் ஃபீல் தருது கங்கா.
‘நீ வா போனு ‘பேசு என்றான்.

சரிங்க சல்.. சரி சல்மான். டியூஷன் போயிட்டு இருக்கு. நான் நித்யா கிட்ட மொத்த டிடெயில்சும் அனுப்பி வைக்கிறேன் என ஃபோனை வைத்தாள்.

டியூசன் முடிந்ததும், நித்யாவுக்கு ஃபோன் செய்து,”யாருடி இவன், இவ்ளோ வாய் பேசறான்.’நீ வா போங்கறான்.’ அவன்கிட்ட என்ன பத்தி சொல்லி வெச்சிரு”என்றாள்.

சல்மான் ரொம்ப நல்ல பையன்டீ. நீ நினைக்கிற மாதிரி எல்லா அவன் இல்ல.

அவன் எப்படியோ இருந்துட்டு போட்டும். இனிமேல் அவனே என்கிட்ட பேச வெக்காதே என ஃபோனை கட் செய்தாள்.

அடுத்த நாள் மாலை பள்ளி முடிந்து, வேனில் வந்து கொண்டிருக்க, நித்யாவிடம் இருந்து ஃபோன்.

சொல்லு நித்யா.

கங்கா, சல்மான் உன்கிட்ட பேசனும்னு சொன்னான்டீ

இங்க பாரு நேத்தே நான் உன்கிட்ட சொல்லலிட்டே.அந்த கிறுக்கு புடிச்சவனே எல்லா என்கிட்ட பேச வைக்காதே.எனக்கு அவன்கிட்ட பேச விருப்பமில்லனு சொல்லிரு

அவன் லைன்லதா இருக்கான்.நீயே சொல்லிரு.

அடிப்பாவி

என்ன கங்கா என்னை பத்தி ரொம்ப பெருமையா நித்யா கிட்ட சொல்லிட்டு இருப்பே போல.

சாரிங்க சல்…சாரி சல்மான்.எனக்கு உன்கிட்ட பேச விருப்பமில்ல.

ஏன்?

பிடிக்கல

நீ இப்படியெல்லா சொன்னா,என்னால ஏத்துக்க முடியாது.என் ஃபோன் நெம்பரை நோட் பண்ணிக்க, எனக்கு ஃபோன் பண்ணி உன்கிட்ட பேச பிடிக்கலனு சொல்லு. நான் பேசாம போய்டறே.

‘சரி சொல்லு’ என அவன் நம்பரை நோட் செய்து கொண்டாள்.

கான்பரன்ஸ் காலை கட் செய்து, சல்மானுக்கு கூப்பிட்டாள்.

சொல்லு கங்கா ஏதாச்சு முக்கியமான விஷயமா?

சல்மான் விளையாடதே.எனக்கு உன்கிட்ட பேச பிடிக்கல.இனிமே கூப்பிடாதே.

நான் என்னமோ உன்பின்னாடி ‘லோ லோ’னு அலையற மாதிரி பேசறே.நீ ஏதோ டிப்ரசன்லே இருக்கேனு நித்யா சொன்னா.நீ கொஞ்சம் அவகிட்ட பேசி சரிப்படுத்துனா அதா கூப்பிட்டேன்.

ஆமா நான் டிப்ரசன்லேதான் இருக்கே.ஆனா அதை உன்னாலே சரிப்படுத்த முடியாது.

நீ பர்ஸ்ட் என்னனு சொல்லு,அப்பறோம் சரிப்படுத்த முடியுமா?முடியாதானு யோசிக்கலாம் என்றான்.

அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் தான் அவள் நினைவில் வந்தார்கள்.எல்லா ஆண்களும் இப்படிதான் என எண்ணிக் கொண்டாள்.

சரி காலைலே எத்தனை மணிக்கு எந்திருப்பே?

பத்து மணி

அப்போ நாளைக்கு ஏழு மணிக்கு ரெடியா இரு, நான் கால் பண்றே என ஃபோனை வைத்தாள். எப்படியோ தொல்லை ஒழிந்தால் சரி என நினைத்தாள்.

காலை கங்கா குளித்து கொண்டிருக்க ஃபோன் அடித்தது.சிவராமன்தான் எடுத்தார். மகள்களின் பிரைவசியை மதிப்பவர்.எப்போதும் ஆன் செய்து பேச மாட்டார்.எடுத்து உரியவரிடம் கொடுப்பார்.
அவரது பழக்கம் லட்சுமியிடமும்.

இன்று எடுத்து,”லட்சுமி, யாரோ ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிடாங்க. கங்கா குளிச்சிட்டு இருக்கு. நான் எதாவது சொன்னா கங்காவுக்கு கோபம் வந்துரும்.நீ போய் ஃபோன் அடிக்குதுனு சொல்லு” என்றார்.

கங்கா……

என்னம்மா?

யாரோ ஃபோன் பண்றாங்கடி.

என்ன பேரு வருது?

எஸ்,ஏ,எல்,எம் என ஸ்பெல்லிங் சொல்ல.
கங்காவிற்கு ‘பக்’ என்றானது.நல்ல வேளை கெளசி படுக்கையில் இருந்து எழவில்லை.

வேக வேகமாக குளித்து வெளியே வந்து ஃபோனை எடுத்தாள்.

சொல்லுங்க சார்.

என்னை ஏழு மணிக்கு ரெடியா இருக்க சொல்லிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்கே? கங்கா.

உங்க பையன் சாப்பிடாம அடம் பிடிக்கறதாலே ஸ்கூல்க்கு கூட்டிட்டு வரீங்களா?

கங்கா, எனக்கு இன்னமும் கல்யாணமே ஆகுலே.அதுக்குள்ளே நீ புள்ளை பெத்து ஸ்கூல் வரை சேத்திட்டையே.

சார் நான் இன்னமும் பத்து நிமிஷத்துல ரெடி ஆகிட்டு வந்தரேன் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.

‘சரி சரி சீக்கிரமா வந்து சேரு’ என ஃபோனை வைத்தான்.

அம்மா நான் சீக்கரமே ஸ்கூல் போகனு. நீ டிபன்னை ஒரு பாக்ஸ்லே போட்டு கொடு என தயாராக வந்தாள்.

போயிட்டு வரேன்மா என சிவராமனுக்கும் சேர்த்து சொல்லி கிளம்பினாள்.ஒரு மரத்தடியில் நின்று கொண்டு, ஃபோன் செய்தாள்.

உனக்கு அறிவு இருக்கா சல்மான்?எதுக்கு இவ்ளோ டைம் கூப்பிடுவே?எங்க அப்பா ஃபோன் எடுத்து பேசியிருந்தா என்ன ஆகும்?

என்ன ஆகும் கங்கா. நான் உங்க பொண்ணோட ப்ரெண்ட் பேசறேனு சொல்லி இருப்பே.

இங்க பாரு சல்மான்,நீ நித்யாவோட ப்ரெண்ட் அவ்ளோதா

அப்போ உன் ப்ரெண்ட் இல்லையா கங்கா.

இல்லே

சரி.உன் கதையே சொல்லு கங்கா என்று தன் கருத்தில் கவனமாக இருந்தான்.

அனைத்தையும் சொல்லி முடித்தாள். பொறுமையாக கேட்ட அவன்,இப்போ எங்கே இருக்கே கங்கா?

ஸ்கூல் வேன்ல போய்ட்டு இருக்கே.

நீ பேசறதே யாரும் கேட்க மாட்டாங்களா?

எல்லாம் குழந்தைங்கதான் கேட்டாலும் ஒன்னும் புரியாது.

சரி நீ ஸ்கூல்க்கு போ. இவ்னிங் பேசிக்கலாம்.

மாலை வீட்டில் கறி. அதனால் கங்கா டியூசனுக்கு லீவ் விட்டிருந்தாள்.

சல்மான் மெசேஜ் செய்திருந்தான்.

என்ன பண்றே கங்கா?

இப்போ எதுக்கு மெசேஜ் பண்றே.நீதா என் கதையே கேட்டதும் போய்டுவேனு சொன்னே இல்ல.

ஆமா,சொன்னே.உன் கதையையும் எங்க அம்மா கிட்ட சொன்னே.அவங்க உன் மேலே எந்த தப்பும் இல்லைனு சொன்னாங்க. அதை சொல்லதா மெசேஜ் பண்ணுனேன்.

இவளது கதையை கேட்ட எல்லாரும் ‘நீ ஒரு படிச்ச முட்டாள் கங்கா’ என சொல்ல ஒருவராவது தன் மீது தவறு இல்லை என சொல்வார்களா ?என ஏங்கி இருந்தவளுக்கு இவனின் செய்தி நிம்மதியை தந்தது.

இவளும் அவனுக்கு பதில் ரிப்ளை கொடுக்க ஆரம்பித்தாள்.

கங்கா நான் என்னை பத்தி சொல்றே

என்ன?

நா காலேஜ் படிக்கும் போது,என் கூட படிச்ச பொண்ணு ஒருத்தனே லவ் பண்ணுனா. அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை.நா அவங்கள சாமாதான படுத்தி சேர்த்து வைக்க போனே.அவன் எனக்கு ‘கோகைன்’ கொடுத்தான்.

எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது. அதை சாப்பிட்டு ரொம்ப அடிக்ட் ஆயிட்டே. ஒருநாள் போலீஸ் வந்து என்னை அரஸ்ட் பண்ணி கூப்பிட்டுட்டு போனாங்க.நல்லா அடிச்சு என் லெப்ட் லெக் ஒடைஞ்சு போச்சு.

எங்க அப்பா எனக்காக அழுதாங்க. உன்னை இப்படி பாக்கவா காலேஜ் அனுப்புனோம்னு. அவரோட கண்ணீரை பாத்த நான் இனிமே இதை தொடக்கூடாதுனு முடிவு பண்ணுனே. அதுல இருந்து அதை நான் தொடரது இல்ல.

எல்லாருக்கும் வாழ்க்கையில கஷ்டம் இருக்கும் கங்கா. யாரும் அதை நினைச்சிட்டு இருக்கறது இல்ல. நீயும் எல்லாத்தையும் விட்டு வெளியே வா

சரி சல்மான்.

அவன் ஃபோலீஸ் ஸ்டேசனை பற்றி கூற, அந்த இருபத்தி ஓர் நாட்கள் அவள் கண்முன் வந்தது.நாம் தான் இவனை தவறாக நினைத்து கொண்டோம் போல, இவன் நல்லவன்தான் என கொஞ்சமே கொஞ்சம் இடம் தந்தாள்.

என்ன கங்கா?இந்த கொஞ்சம் இடமெல்லா எனக்கு பத்தாது. உன்னோட நினைவுகள், எண்ணங்கள்,மனசு எல்லா இடமும் எனக்கு மட்டும்தான் வேணும் என விடாகண்டனாய் மாறி நிற்க போகிறான் என கங்காவிற்கு அப்போது தெரியவில்லை.
–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!