Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன்      அத்தியாயம் 31

யுகத்தின் தலைவன்      அத்தியாயம் 31

சல்மான் தன்னை பற்றி எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறி விட்டு, கங்கா,”நான் கோகைன் குடிச்சு இருக்கே,ஜெயிலுக்கு எல்லாம் போய்ருக்கே. இப்படி இருக்கறே என்னை உன் ப்ரெண்டா நீ ஏத்துக்க வேண்டா” என்றான்.

அவனின் நேர்மையான பேச்சில் ஒரு கணம் அமைதியான கங்கா, சிரித்துக் கொண்டே, “சரி…”என மட்டும் ரிப்ளை செய்தாள்.

சில நொடிகளில், அவன் ஒரு வீடியோ சேர் செய்தான். அதை திறக்கவே கங்காவிற்கு பயமாக இருந்தது.



Advertisement

அருளின் இன்டிமசி வீடியோ நினைவில் மின்னியது.ஒரு நொடி அவளது விரல்கள் நடுங்கின.

சிறிது தயக்கத்துடன் வீடியோவை ஓபன் செய்தாள்.

திரையில் வெண்பனியால் மூடப்பட்ட மலைகள்…

Advertisement

இரவின் அமைதியில் மெதுவாக விழும் பனித்துளிகள்…

Advertisement

தொலைவில் மங்கலான மஞ்சள் விளக்குகள்…

பார்ப்பதற்கே வேறொரு உலகம் போல இருந்தது.

அந்த காட்சியில் கங்கா சில நொடிகள் மெய்மறந்து போனாள்.

Advertisement

“சல்மான்… இது கிராபிக்ஸா?”என்று குழந்தை போல கேட்டாள்.

“இல்ல கங்கா… இது கசோல். நியூ இயர் அங்கதான் செலிபிரேட் பண்ணேன். இந்த வீடியோ விடியற்காலை இரண்டு மணிக்கு எடுத்தது.”

கங்காவின் கண்கள் ஒளிந்தன.

“எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு…”

நீ வந்தா நான் உன்னை அங்கே கூட்டிட்டு போறேன் கங்கா.

இது எங்க இருக்கு?

கசோல்,இமாச்சல பிரதேசம்.

அவ்ளோ தூரம் எல்லா எங்க வீட்டுல விட மாட்டாங்க சல்மான். ஆனா இந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. காலைலே நாலு மணி்க்குகூட கிளம்பறே, ஆனா சாயந்தரம் ஆறு மணிக்கு என்னை வீட்டுல விட்டுருவையா?

இன்னமும் நாலைந்து கசோல் வீடியோவை அனுப்பி…நீ ஃபோன்லயே கசோல் பாத்துக்க.ரொம்ப நேரம் ஆச்சு போய் தூங்கு.குட் நைட் என உரையாடலை முடித்தான்.

பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட, கங்கா தற்போது வீட்டில் இருந்தாள்.
மீண்டும் விட்டத்தை பார்த்து யோசனையில் ஆழ்ந்தாள்.இந்த முறை அவளது எதிர்கால லட்சியத்தை பற்றி சிந்தித்தாள்.

அப்பாவின் கையை எதிர்பார்க்காது பிஎச்டி முடிக்க வேண்டும்.பின் ஒரு கவர்மென்ட் வேலை.பூர்வீக வீட்டை இடித்து தொட்டி கட்டு வீடு கட்டி அப்பாவிற்கு தர வேண்டும்.அதன் பிறகு அவருக்கு தன்மேல் உள்ள மனஸ்தாபம் சரியாகும்.

அம்மாவையும் கெளசியையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்கு பெரிய ரூம் கட்டி கொள்ள வேண்டும்.ராக் சேரில் ஆடிய படியே இளையராஜா பாடல் கேட்க வேண்டும். அவ்வளவுதான் தன்னுடைய வாழ்நாள் ஆசை. அதுபோக கயிலாய மலையை தரிசித்து விட்டால், பிறவி பயனையே அடைந்து விடுவோம் என கற்பனைகளில் குதிரை ஓட்டினாள்.

மும்மூர்த்திகளில் பிரம்மன் மேரு மலையில் வசிப்பதாகவும், சிவபெருமான் கயிலாய மலையில் வசிப்பதாகவும்,பெருமாள் வைகுண்டத்தில் வசிப்பதாகவும் புராணத்தில் படித்துள்ளாள்.அதில் நம் கண்ணிற்கு தெரிவது கைலாய மலை மட்டுமே, இதுவரை அதை தாண்டியவர்கள் எவரும் இல்லை.

புண்ணிய ஆத்மாக்கள் மட்டுமே மனித உருவோடு,
கயிலாயத்தை தாண்டினால்..மேரு மலையை தரிசிக்க முடியுமாம்.அதன் பிறகே புஷ்ப விமானம் வந்து நம்மை வைகுண்டம் அழைத்துச் செல்லுமாம். இதெல்லாம் உண்மையா என கங்காவிற்கு தெரிய வில்லை.ஒரு முறை ஆன்மீக சொற்பொழிவில் இதை கேட்டதில் இருந்து கைலாயம் செல்ல வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.அது மட்டுமல்ல அந்த கைலாய தரிசனம் என்பது வெறும் சிவலிங்கத்தையோ,
பிற சிலைகளை தரிப்பதோ அல்ல.

பனிபடர்ந்த அந்த கைலாயத்தின் மீது சூரிய ஒளி படும்போது,அது தங்க நிறத்தில் ஜொலிக்கும். அதுவே கைலாய தரிசனம்.எல்லோருக்கும் அந்த தரிசனம் கிட்டாது.சிவபெருமான் யாருக்கு காட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கிறாரோ அவருக்கு மட்டுமே கிடைக்கும்.

திடீரென அந்த நினைப்பு வர, எழுந்தவள்.கூகுளில் அதை பற்றிய செய்திகளை தேட ஆரம்பித்தாள்.அதில் ஒருவர் கயிலாயம் சென்ற செய்திகளை பகிர்ந்திருந்தார்.அதில் அவருக்கு ஒரிடத்தில் ‘கோகைன்’ கிடைத்ததாகவும் ,அது என்ன என தெரியாமல் சாப்பிட்ட பிறகு,ஒரு ஆயிரம் யானை பலம் வந்ததாகவும்,கைகள் மூன்று நான்காக வளர்ந்தாகவும் உணர்ந்ததாக எழுதி இருந்தார். அதை படித்த கங்காவிற்கு சல்மான் நினைவு வந்தது.

அடுத்த நொடி அவனுக்கு ஃபோன் செய்தாள்.
சல்மான் என்ன பண்றே?

ரிசர்ச் வோர்க் கங்கா.

“ஓ!”
சல்மான் நான் ஒரு வ்லாக் படிச்சே, அதுல ஒருத்தர் உன்ன மாதிரியே கோகைன் சாப்பிட்டு இருக்காரு. அதே சாப்பிட்ட உடனே அவரோட கைகள் நான்கா வளர்திடுச்சாமா.
ஆயிரம் யானை பலம் வந்ததாகவும்,இந்த உலகமே தன்னோட கால் கீழே இருக்கறதாகவும் நினைச்சுகிட்டாங்களா.உனக்கும் அப்படிதான் இருந்துச்சா?

கங்கா,கோகைன் சாப்பிட்டது, ஜெயிலுக்கு போனது இதெல்லா எனக்கும் எங்க அப்பா அம்மாக்கும் வலி நிறைஞ்ச ஒன்னுதான்.அதுக்காக நான் அதை பத்தியே நினைச்சு என் வாழ்க்கையே அழிச்சுக்கலே. இப்போ என்னோட எய்ம் எல்லா பிஎச்டி முடிச்சு நல்ல புரோபசர் ஆகனும்.

சரி சல்மான் பெஸ்ட் ஆஃப் லக்.

உனக்கும் தான் இதையெல்லா சொல்லிட்டு இருக்கே.நீயும் அதெல்லா விட்டுட்டு வெளியே வா. உன்னோட ப்ரோபசனல் லைப் ஓகே.ஆனா பர்சனல் லைப் கொஞ்சம் பாரு.

பர்ஸ்ட் எல்லார்கிட்டேயும் உன்னோட கதையே சொல்றது நிறுத்து. நீயே சொல்லி ஏன் உன்னை தாழ்த்திக்கறே கங்கா. வெளியே வந்து பாரு பொண்ணுங்க எல்லா எப்படி இருக்காங்கன்னு. உன்னைவிட அதிகம் பிரச்சினை உள்ள பொண்ணுங்க எல்லா இருக்காங்க.

நீ நல்ல பொண்ணு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும். நல்ல லைப் பார்ட்னர் வருவாங்க என்றான்.

நான் மேரேஜ் பண்ணுனா அது ரெண்டாவது கல்யாணம் சல்மான். அதுமட்டுமல்ல அவன் ரெண்டாவது புருஷன்னு எல்லாரும் தப்பா பேசுவாங்க என்றாள் அருளின் அக்கா குரலில்.

நீ உனக்கு பிடிச்சுதான் அங்கே போனியா?

இல்ல.

உனக்கு பிடிச்சுதான் அவனை கல்யாணம் செஞ்சியா?

இல்ல.

அப்பறோம் எப்படி அது உன்னோட முதல் கல்யாணம் ஆகும். என்ன பொருத்தவரை அது ஒரு கல்யாணமே இல்ல.அது ஒரு ஏக்ஸிடன்ட்.உனக்கு பிடிச்சு எப்போ நீ கல்யாணம் பண்றையோ அதுதான் உன் முதல் திருமணம். உன் மனசுக்கு பிடிச்ச ஒருத்தர நீ எப்போ கல்யாணம் செய்யறையோ அவன் தான் உன்னோட முதல் கணவன்.அதுவரை நீ எவ்வளவு திருமணம் செய்தாலும் அவன் உன் கணவன் கிடையாது.

நீ என் மனசு கஷ்டப்படுத்த கூடாதுனு சொல்றே சல்மான்.என்ன மாதிரி ஒரு பொண்ணை நீ கல்யாணம் செய்வையா? என சற்றும் யோசிக்காமல் கேட்டு விட்டாள்.

என்கூட படிச்ச பொண்ணு உன்ன மாதிரிதான் அவங்க வீட்டுல ரெண்டு மூனு கல்யாணம் கூட பண்ணி வெச்சிடாங்க.ஆனா எதுவுமே சரியா அமையல. அவளுக்கு ஒரு குழந்தை கூட இருக்கான்.எனக்கு அவளே பாக்க பாவமா இருந்துச்சு.இனி அவளே கஷ்டபடுத்தாம நாமளே ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு யோசிச்சே. அப்பறோம் பரிதாபத்துல காதல் வரக் கூடாது.அவங்க மேலே உண்மையா காதல் வரனுனு விட்டுட்டே.

நீ யாரையாச்சு லவ் பண்ணிருக்கையா சல்மான்.

இல்ல கங்கா.ஆனா என்கூட ஜெயானு ஒரு பொண்ணு படிச்சா அவளே எனக்கு ரொம்ப புடிக்கும்.நல்ல டேலண்ட்டான பொண்ணு .அவ யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்.அவளுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்.என்னை கல்யாணம் செய்துகறேனு கூட சொன்னா.ஆனா நான் வேண்டானு சொல்லிட்டே

ஏன் சல்மான்.உனக்கும் பிடிச்சுதானே இருந்துச்சு.அந்த பொண்ணுக்கும் பிடிச்சு இருக்கு. அப்பறோம் ஏன் வேண்டானு சொன்னே?

கங்கா என்னால முஸ்லிம் பொண்ணை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.

ஏன்?

கங்கா,வேற மதம் சேர்ந்தவங்கள நான் கல்யாணம் பண்ணனும்னா அவங்க என் மதத்திற்கு மாறனும். எனக்காக ஒரு பொண்ணு மதம் மாறறதுல எனக்கு விருப்பம் இல்ல.நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல கங்கா.

அந்த பொண்ணே மதம் மாற சம்மதம்னுதானே சொல்லுச்சு.

மதம் மாறறது விளையாட்டு இல்ல கங்கா.மதம் அப்படின்னா வெறும் பெயர் இல்ல.அது அவங்க வளர்ப்பு, நம்பிக்கை, குடும்பம், நினைவுகள் எல்லாத்தோடும் சேர்ந்தது.அது நம்முடைய அடையாளம். ஒருத்தரோட அடையாளத்தை அளிக்க எனக்கு விருப்பமில்ல கங்கா.

 மதம் மாறாத ஒருத்தரே எங்க வீட்டுல ஏத்துப்பாங்கனு தோணுல.வேற மதத்துல கல்யாணம் பண்ணுனா எங்க அம்மா அப்பாவை யாருமே மதிக்க மாட்டாங்க.அப்பறோம் என்னாலே அவளும் கஷ்டப்படனும். அதுனால நான் எங்க வீட்டுல பாக்குற பொண்ணைதா மேரேஜ் பண்ணுவே.

ஒருவேளை அவங்க பாக்குற பொண்ணு உனக்கு புடிக்கலனா என்ன பண்ணுவே?

எனக்கு எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்ல கங்கா.எதிர்ப்பார்ப்பு இல்லாத இடத்துல
ஏமாற்றமும் இருக்காது.

கங்கா அவனுடைய எண்ணங்களை கேட்டு எதுவும் பேசவில்லை.

சரி கங்கா எனக்கு ரிசர்ச் வொர்க் இருக்கு நான் அதை பார்க்கறே. நீயும் உன் வேலையே பாரு அப்பறோம் கூப்பிடறேன் என ஃபோனை வைத்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் எண்ணங்களின் மூலம் இவள் மனதில் கால் ஊன்ற ஆரம்பித்தான்.

அன்று காதலர் தினம். கங்கா பள்ளிக்கு வேனில் சென்று கொண்டிருக்க சல்மானிடம் இருந்து ஃபோன்.

ஹாப்பி வேலன்டைன்ஸ் டே கங்கா.

அவன் எதோ கெட்ட வார்த்தை கூறியது போல.என்ன சல்மான் என்னை பாத்து சொல்றே?என்றாள் கோபமாக…

ஏன் உன்னை பாத்து சொல்லக் கூடாதா. என்றான் அவன் கூலாக…

இதெல்லா லவ் பண்றவங்கதான் சொல்லிப்பாங்க.

நீ ஒரு பழைய பஞ்சாங்கம் கங்கா. காதலர் தினங்கறது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இல்ல. இந்த உலகத்துல நாம யார் மேல எல்லாம் அன்பு வெச்சிருக்கோமோ எல்லாரோடவும் கொண்டாடலாம்.

சரி சல்மான்.

என்ன சரினு முடிக்கறே.எனக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போறே.

சல்மான் நீ எனக்கு ஒரு நல்ல நண்பன். நீ சொல்றே மாதிரி காதலர் தினம் நாம்ம அன்பு வச்சிருக்க யார் கூட வேணாலும் கொண்டாடலாம்.ஆனா எனக்கு இதெல்லா புதுசு சல்மான். என்னை பொருத்தவரை இதெல்லா என் கணவர் கிட்ட மட்டும்தான் இருக்கனுனு நினைக்கறே.அதுனால கிப்ட் எல்லா என்னால முடியாது சல்மான். என்னை மன்னிச்சிடு.

சரி கங்கா.நான் உன்னை கட்டாய படுத்துல.

சரி நான் ஈவ்னிங் கூப்டறே என ஃபோனை வைத்தாள்.

வகுப்பிற்குள் சென்றவளுக்கு ஒரு சிறு பெண் ஓடி வந்து.மேம் இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே. இந்தாங்க கிப்ஃட் என நீட்டினாள்.

சல்மான்தான் நினைவில் வந்தான் அவளுக்கு.சின்ன சிரிப்புடன் அதை பிரிக்க இரண்டு சிவப்பு ரோஜாப்பூக்கள் உள்ளே இருந்தது. எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள்.

வீடு வந்ததும் சல்மானுக்கு கிப்ட் கொடுக்க நிறைய அலசல் செய்தாள். விரசம் ஏற்பட கூடாது என கவனமாக தேடினாள்.
அதுமட்டுமல்ல அவனுக்கு கொடுக்கும் முதல் பரிசு கடைசி வரை அவன் நினைவில் வைத்திருக்க வேண்டும் என தேடினாள்.எதுவுமே சரிபட்டு வரவில்லை.

இறுதியாக முஸ்லிம்கள் தொழுகைக்கு பயன்படுத்தும் வெள்ளை தொப்பியை ஆர்டர் செய்து வாங்கினாள்.

வீட்டிற்கு வந்த பார்சலை பிரித்து, சல்மானுக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பினாள்.

எதுக்கு கங்கா இது?

லவ்வர்ஸ்டே கிப்ட்.

எங்க வீட்டுல இது மாதிரி நிறைய இருக்கு கங்கா.ஆனா இது எனக்கு எப்பவும் ஸ்பெசல்.

சரி இதை எப்ப வாங்கிகறே.

நாம மீட் பண்ணும் போது கொண்டுவா.

அதற்குள் கெளசி வந்து விட்டாள்.

வாவ்! இந்த தொப்பி ரொம்ப அழகா இருக்கே என தலையில் மாட்டிக் கொண்டாள்.ஆனா இது முஸ்லிம்ஸ் போடற மாதிரி இருக்கே.இதே எதுக்கு நீ ஆர்டர் பண்ணிருக்கே என சந்தேக தொனியில் கேட்டாள்.

எனக்கு இல்லடி நித்யாக்கு அவ ஏதோ போட்டோ ஷூட் பண்றாளா அதுக்கு ஆர்டர் பண்ணி வாங்கி இருக்கே என பொய்யுரைத்தாள்.

பின் அதை எடுத்து பீரோவில் பத்திரமாக வைத்தாள்.இதுவரை சல்மானை நேரில் பார்த்து இல்லை. பார்க்கும் போது கொடுத்து விடலாம் என நினைத்தாள்.

முதல் முறையாக காதலர் தினத்தை பற்றிய அவளது கண்ணோட்டத்தை அவன் மாற்றினான்.வருங்காலத்தில் வரும் காதலர் தினம் சல்மான் எந்தளவு கங்காவை தன் நல்எண்ணங்களாலும், செயல்களாலும் அவளது மனதை ஆக்கிரமித்து உள்ளான் என்பதை காட்ட ஆர்வமாக இருந்தது.
–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!