விழி கொல்லும் விஷமா நீ EPI 02
விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 02
Advertisement

பிரபலங்களும் பணக்காரர்களும் மட்டுமே வருகைத் தரும் அந்த நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தாள் மேக்னா.
Advertisement
Advertisement
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகையவளிடம் சினிமாவுக்கே உரித்தான அழகும் நிறமும் கொட்டிக் கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அரைகுறை நீச்சல் உடை அவளுடலோடு ஒட்டி அவளின் உடல் நெளிவு வளைவுகளை அப்பட்டமாகக் காட்ட, அந்த இடத்திலிருந்த சில ஆண்களின் பார்வையோ தேனீ போல் அவளைதான் மொய்த்துக்கொண்டிருந்தது.
Advertisement
மேக்னாவோ உடலிலிருந்த நீர்துளிகள் தரையில் சொட்ட சொட்ட எழுந்து வந்தவள் நீச்சல்குளத்திற்கு பக்கத்திலிருந்த லாஞ்ச் சேரில் வந்து சாய்ந்துக்கொண்டாள்.
“எல்லாரும் உன்னதான் வாய பொழந்து பார்த்துட்டு இருக்காங்க” அவளுக்கு பக்கத்திலிருந்த தோழி கல்பனாவின் வார்த்தைகளில் அவளிதழ் கர்வப் புன்னகை சிந்த, “ஆஸ் யூஷுவல்” என்றாள் அலட்சியமாக.
“ஆனா மேகா… எனக்கு ஒன்னு மட்டும் புரியல. உன்னை மாதிரி ஒருத்திய விடுறதுக்கு அந்த யாதவ்வுக்கு எப்படி மனசு வந்துச்சு. சோ சேட்..” என்று அவள் சொல்ல, கையிலிருந்த ஜூஸ் க்ளாஸில் ஒரு மிடறு அருந்தியவள், “ஹேய் ஷட் அப்! அவன் ஒன்னும் என்னை ப்ரேக்கப் பண்ணல. நான்தான் விட்டேன். அவன் கூட மனுஷன் வாழுவானா? ரோபோஸ் கூட அவன் பக்கத்துல இருக்க முடியாது. ஊஃப்ப்…” என்று ஒரு பெருமூச்சோடு முடித்தாள்.
அப்பாடா தப்பிவிட்டேன் என்பது போல அவள் சொன்னது ஏனென்று மற்றவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
“என்ன மேகா, ஏதேதோ சொல்ற. எனக்கு என்னவோ நீ சொல்றது உண்மைன்னு தோனல. ஹவ் ஸ்மார்ட் ஹீ இஸ்! சாரி டூ சே, அவன் உன் பாய் ஃப்ரென்டா இருக்கும் போதே அவன் மேல எனக்கொரு கண்ணு இருந்துச்சு”
என்ற கல்பனா தோழியை நம்பாத பார்வைப் பார்க்க, அவளை எரிச்சலாக ஒரு பார்வைப் பார்த்தாள் மற்றவள்.
“ஒருநாள் கேர்ள் ஃப்ரென்டா இருந்து பாரு புரியும். அவன் கூட டூ இயர்ஸ் இருந்திருக்கேன். யூ நெவர் அன்டர்ஸ்டேன்ட் த ரியலிட்டி. உதாரணத்துக்கு சொல்லணும்னா அவன் ஃபீலிங்க்ஸ்ஸ அவ்வளவு ஈஸியா எக்ஸ்போஸ் பண்ணவே மாட்டான். நாங்க லிவ்வின்ல இருக்கும் போது ஃபிஸிகல்லி ஒன்னா இருந்திருக்கோம்.
நல்லாதான் இருப்பான். திடீர்னு என்ன நடக்கும்னு தெரியல அவன் கோபம் மொத்தத்தையும் என்மேல காமிக்க ஆரம்பிச்சிருவான். சரியான சைக்கோ! ஒரு லவ்வர்கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா பேசுவோம், எப்போ பாரு கடுகடுன்னு இருப்பான். சிரிக்கவே மாட்டான், விட்டுட்டு போறேன்னாலும் விட மாட்டான்.
நான் ப்ரேக்கப்னு ஆரம்பிச்சாலே ஏதேதோ பண்ணி என்னை போக விட மாட்டான். ஈஸியா பேசியே மயக்குவான் பாவி! பட் திஸ் டைம் ரொம்ப பிடிவாதமா நின்னு விலகிட்டேன். ஆனா ஒன்னு என்கூட ஃபிஸிகல்லி ஒன்னா இருக்கும் போது ஏதோ ஒரு பேர சொல்லுவான் கல்பனா, வாட் வோஸ் தட் ஐ டோன்ட் ரிமெம்பர். அதை கேட்டாலே இர்ரிடேட்டிங்கா இருக்கும் ஊஃப்…”
மூச்சை இழுத்துப் பிடித்து படபடவென பேசி முடித்தவள் ஒரு பெருமூச்சை இழுத்து விட, வாயில் ஈ போகாத குறையாக தோழியை பார்த்திருந்தாள் கல்பனா.
அவள் முன் சொடக்கிட்டு இரு புருவங்களை கேள்வியாக ஏற்றி இறக்கினாள் மேக்னா.
“இந்தியாவே கொண்டாடுற யாதவ் அர்ஜூனா பின்னாடி இப்படியொரு முகமா? ஐ கான்ட் பிளீவ் திஸ்” என்று கல்பனா சொன்னதைக் கேட்ட மற்றவளோ, “தெயார் இஸ் அ ரீசன் பிஹைன்ட் தட் ஃபேஸ், ஐ நோ” என்றாள் யோசனையோடு.
அடுத்தநாள், ஆதிரா கொடுத்த எண்ணை அலைப்பேசியில் அழுத்திவிட்டு சில கணங்கள் அதை வெறித்துப் பார்த்திருந்த நிஹாரிகாவின் மனம் குழப்பத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
யோசித்துக்கொண்டே அந்த எண்ணிற்கு அழைக்கப் போனவளின் செயலை குறுக்கிடுவது போல் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வர, அதைப் பார்த்தவளுக்கு கோபமும் எரிச்சலும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.
அவள் அழைப்பை ஏற்காமல் இருந்தால் மட்டும் விட்டுவிடுவானா அவன்!
அந்த விளைவு தெரிந்ததாலோ என்னவோ அழைப்பையேற்று காதில் வைத்தாள் நிஹாரிகா.
“ஹேய் ஸ்வீட்ஹார்ட், பரவாயில்லயே ஒரே கால்ல அட்டென்ட் பண்ணிட்ட. ஒருவேள பழைய லவ்வ ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்ன!” அவனின் நக்கலான கேள்வியில் கோபம் உச்சத்தில் எகிற அதை அடக்கிக்கொண்டு, “இல்ல, பழகிப்போச்சு ஆரவ்” என்றாள் விட்டேற்றியாக.
அதில் அவனுடைய இதழ்களோ ஏளனமாக வளைந்தன.
“ஆனா ஒன்னுடீ, பச்சபுள்ள மாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு என்ன வேலையெல்லா பார்த்திருக்க. துரோகி! நீ பண்ண காரியத்துக்கு நான் பண்ணது ரொம்ப கம்மியோன்னு தோனிட்டே இருக்கு. ஏதாச்சும் பண்ணணும் நீஹா, நீயே சொல்லு என்ன பண்ணலாம்?”
அவனின் வார்த்தைகளில் இதயம் சுக்கு நூறாக உடைந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள் அவள்.
“ஆரவ், நான் பண்ண துரோகத்துக்கு ரொம்ப பெரிய தண்டனைய அனுபவிச்சிட்டேன். இதுக்குமேல என்னை என்ன பண்ண சொல்லுற? யாதவ்.. அவன் என்னை வெறுக்குறத விட வேற என்ன தண்டனை எனக்கு இருக்க போகுது? ப்ளீஸ் இனாஃப் ஆரவ்… ப்ளீஸ்!”
அவனுடைய வார்த்தைகளை தாங்கிக்கொள்ளும் திராணியின்றி அவள் வெடித்தழ, சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
விழிநீரைத் துடைத்துக்கொண்டவள் மீண்டும் நடந்த சம்பவங்களின் நினைவில் உண்டான தாக்கத்தில் ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டு தோழி கொடுத்த எண்ணைப் பார்த்தாள்.
உடனே அந்த எண்ணிற்கு அழைத்தவள் மறுமுனை குரலுக்காக காத்திருக்க, ஒரு சில கணங்களிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹெலோ…” என்ற ஆண்குரல் காதில் கேட்டதும், “ஹெலோ சார், என்னோட பேரு நிஹாரிகா. ஆதிரா என்னோட ஃப்ரென்ட் அவதான்…” எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் தடுமாறினாள் பெண்ணவள்.
ஆனால் அவரோ அவள் பேசி முடிக்க அவகாசம் கொடுக்கவில்லை. ‘ஆதிரா’ என்ற பெயரைக் கேட்டதுமே குறுக்கிட்டு வேகமாக பேச்சை ஆரம்பித்தார் அவர்.
“யாஹ் யாஹ்.. ஐ நோ, என்னோட மருமக பொண்ணு ஆதிராவ பத்தி சொன்னா. நீ அந்த பொண்ணோட ஃப்ரென்டாமே! பேரு கூட… ஆங் நிஹாரிகா. இஃப் யூ டோன்ட் மைன்ட் நாளைக்கே நான் சொல்ற இடத்துக்கு என்னை வந்து மீட் பண்ண முடியுமா? ஐ கென் எக்ஸ்ப்ளைன் எவ்ரிதிங்”
அவர் சொன்னதும் உடனே சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கேலன்டரைப் பார்த்தவள் சம்மதித்ததோடு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
புது வேலை, சிறு பயம், தயக்கம் என அன்றைய நாளை கழித்தவள் அடுத்தநாள் அவர் அனுப்பிய லொக்கேஷனின் முன்னே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக சென்று நின்றாள்.
அவள் கிட்டத்தட்ட எதிர்பார்த்த ஆடம்பரம்தான். கண்ணை பறிப்பது போன்ற கண்ணாடியிலான கட்டிடம் அவளெதிரே இருக்க, அந்த நட்சத்திர விடுதியை புருவ முடிச்சுகளோடு பார்த்தாள் நிஹாரிகா.
ஆட்டோக்காரனுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த ஹோட்டலுக்குள் நுழையப் போனவள் ஒருகணம் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டாள்.
ஆடம்பரம் இல்லாத சாதாரண வெள்ளைநிற சுடிதான். ஆனால் அந்த இடத்திற்கு பொருத்தமா என்று கேட்டால் சத்தியமாக இல்லை.
ஆனால் வேறுவழி..
கலைந்த தலைமுடியை சரிசெய்துவிட்டு ஆடையை தடவி விட்டுக்கொண்டவள் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்துவிட்டு அந்த எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹெலோ மிஸ் நிஹாரிகா…” காதில் உற்சாகமாக விழுந்த குரலில் புன்னகைத்தவள், “சார் நான் ஹோட்டல்லதான் இருக்கேன், நீங்க எங்க…” என்று கேட்டுக்கொண்டே சுற்றிமுற்றி பார்த்தவள் தன்னை நோக்கி ஒரு ஆண் கையை உயர்த்தி அசைப்பதை கண்டுகொண்டாள்.
“பார்த்துட்டேன் சார்” அவள் சொல்லிவிட்டு அவரின் முன்னே சென்றமர்ந்துக் கொள்ள, வெயிட்டரிடம் அவளுக்கு ஜூஸை கொண்டு வந்து கொடுக்குமாறு விழியசைத்தார் அவர்.
‘இன்று என்னாகுமோ?’ என்ற பதற்றத்தில் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாததை ஜூஸை கண்டதும் அவளுடைய வயிறு கத்தி கூப்பாடு போட்டு உணர்த்த, உடனே அதையெடுத்து மடமடவென வாயில் சரித்தாள் நிஹாரிகா.
“மிஸ் நிஹாரிகா, என் மருமகளுக்கு ஆதிரா ரொம்ப பழக்கம். அவ ஃப்ரென்டுக்காக என்கிட்ட உன்ன ரெகமெண்ட் பண்ணா. அவ ரெக்கமென்ட் பண்ணதாலதான் எக்ஸ்பீரியன்ஸ் இல்லன்னாலும் இந்த வேலைய உங்களுக்கு தரலாம்னு யோசிச்சேன். ஏற்கனவே ஒரு கம்பனில வர்க் பண்ணியிருக்கீங்க. அதை விட்டு ஏன் விலகினீங்கன்னு சாரி சாரி ஏன் உங்கள விலக்கினாங்கன்னு மட்டும் சொல்ல முடியுமா?”
அவர் சுற்றி வளைத்து எதுவும் பேசாமல் தனக்குள் இருந்த ஒரே சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுவிட, இவளுக்கு தர்மசங்கடமாகிப் போனது.
கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு என்ன சொல்வது எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
ஆனால், அவரெதிரே அமர்ந்திருந்தவரோ பதிலை தெரிந்தே ஆக வேண்டும் என்ற தோரணையோடு விழிகளை கூர்மையாக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.
முயன்று தைரியத்தை வரவழைத்து, “சம் கைன்ட் ஆஃப்… ஆங்… அது… அந்த கம்பனி ஓனர்… அவர் என்கிட்ட…” என ஒவ்வொரு வார்த்தைகளாக சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக நிஹாரிகா தடுமாறிக்கொண்டிருக்க, அதை உணர்ந்தாரோ என்னவோ!
“இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே. ஜஸ்ட் என்னோட டவுட்ட க்ளெரிஃபை பண்ணிக்கதான் கேட்டேன்” என்று முடித்தவர் பேன்ட்டை சரி செய்துக்கொண்டே எழுந்து நிற்க, “சார் உங்க பேரு…” என்று கேட்டவளை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை அவர்.
” ஓ ஷீட்! என்கூட வாங்க…” பதற்றமாக சொல்லிக்கொண்டு ஹோட்டலின் மேல்தளத்திற்கு அழைத்துச் செல்ல, ஒரு பெருமூச்சோடு அவர் பின்னாலேயே சென்றாள் அவள்.
அவரோ அலைப்பேசியை நோண்டியவாறு முன்னே செல்ல, “சார், உங்க பேரு…” என்று மீண்டும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள் நிஹாரிகா.
ஆனால் இந்த முறையும் அவளுடைய கேள்வி எடுபடவில்லை போலும்!
“உனக்கு கிரிக்கட் பிடிக்குமா?” அவர் அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்க, உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு இல்லையெனும் விதமாக தலையாட்டி வைத்தாள் அவள்.
“ரியலி! கிரிக்கட் பிடிக்காதவங்களும் இருக்காங்களா? ஐ கான்ட் ப்ளீவ் தட்” அவர் சொல்லிக்கொண்டே லிஃப்ட்டிற்குள் நுழைய, “நான் உங்க பேர கேட்டேன் சார்” என்று மீண்டும் சற்று சத்தமாகவே கேட்டாள் அவள்.
ஆனால் அப்போதும் அவளுக்கு பதில் கிடைத்தபாடுதான் இல்லை.
“உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு, இந்த வேலையில ரொம்ப கவனம் இருக்கணும். அலட்சியமா மட்டும் இருந்துர கூடாது. புரியுதா?”
அவர் எச்சரிக்கும் குரலில் சொல்ல, இவளுக்குதான் அய்யோ என்றிருந்தது.
அவரிடம் தன் கேள்விகளை விட்டு சுற்றிமுற்றி கவனிக்க ஆரம்பித்தாள் நிஹாரிகா.
பார்த்துப் பார்த்து கட்டியிருப்பார்கள் போல, அத்தனை பிரம்மாண்டமாகவும் கலைநயத்தோடும் இருந்தது அந்த ஹோட்டல்.
கீழே ரெஸ்டாரென்ட் மற்றும் மேல்தளங்கள் முழுக்க வசதி படைத்த அறைகளாக இருக்க, அப்போதுதான் ஒரு விடயத்தை கூர்ந்து கவனித்தாள் பெண்ணவள்.
சுற்றியிருந்த சுவர் முழுக்க பழைய கிரிக்கட் விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் உபயோகித்த பேட்டுகள், ஜெர்சி வரை அனைத்தும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்க, இவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
கூடவே அவளுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
“சா.. சார் இந்த ஹோட்டல் யாரோடது?” அவள் கேட்டு முடிப்பதற்குள் இருவரின் கால்களும் ஒரு விஷேட அறையின் முன் வந்து நிற்க, கதவைத் தட்டிவிட்டு திறந்தவர் திரும்பி நிஹாரிகாவை பார்த்தார்.
“உள்ளதான் சார் இருக்காரு, நீ கிரிக்கட் ஃபேனா இருந்திருந்தா இது உன் லைஃப்ல பெஸ்ட் மூமென்ட்டா இருந்திருக்கும். பட் வாட் டு டூ?” அலட்சியமாக தோளைக் குலுக்கியவர், “என் பேர கேட்டல்ல, ஐ அம் ஜகன்” என்றுவிட்டு உள்ளே செல்ல, ஏனோ நிஹாரிகாவின் மனம் ஏனென்று தெரியாமல் வேகமாக அடித்துக்கொண்டது.
அறை வாசலிலிலேயே நின்றுக்கொண்டு நெஞ்சை நீவி விட்டுக்கொண்டவள், படபடப்பை மறைக்க முயற்சிக்க அதுவோ அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அந்த ஏசி குளிரிலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்க, உடனே முந்தானையால் முகத்திலுள்ள வியர்வையைத் துடைத்துக்கொண்டவள் உள்ளுக்குள் பல கேள்விகளோடு அறைக்குள் நுழைந்தாள்.
பெண்ணவளின் விழிகள் சுற்றி அலைந்து ஒரு இடத்தில் நிலைக்குத்தி நிற்க, சரளமான ஆங்கிலத்தில் யாருடனோ வளவளத்துக் கொண்டிருந்தவனின் முதுகுப் புறம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது.
ஆனால், சிறு கணமும் மனதிற்குள் தோன்றும் அவனின் விம்பத்தை அவளால் அடையாளம் காண முடியாதா என்ன!
அந்த பழக்கப்பட்ட உருவம் அவன்தான் என அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்த, அடுத்து அவன் கை மணிக்கட்டிலிருந்து செங்குத்தாக குத்தியிருந்த டாட்டூ மீதுதான் அவள் பார்வை பதிந்தது.
‘இது அவனேதான்’ அவள் தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள்.
குற்றவுணர்ச்சி, பயம், தயக்கம், அளவுகடந்த காதல் என பல உணர்ச்சிகள் ஒன்று சேர்ந்து அவளுக்குள் ஒரு போரையே நடத்திக்கொண்டிருந்தன.
அத்தனை பிரம்மாண்டமான பெரிய அறை. ஆனால் காற்றுக்கே இடம் போதாதது போல அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பிக்க, கால்கள் சற்று தடுமாறின.
“சார், என்னோட இடத்துக்கு புதுசா வேலைக்கு வந்திருக்குற பொண்ணு. நீங்க இன்டர்வியூ பண்ணிட்டீங்கன்னா நான் ட்ரெயினிங் கொடுக்க ஸ்டார்ட் பண்ணிடுவேன்”
ஜகனின் குரல் காதில் விழுந்ததும் உடனே திரும்பிப் பார்த்தான் யாதவ் அர்ஜூனா.
அறை நடுவே வெள்ளை சுடியில் நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததுமே அவனுடைய விழிகளில் சிறு அதிர்ச்சி தோன்றியது.
அவனையும் மீறி அவன் கரத்திலிருந்த அலைப்பேசி நழுவி விழச் சென்றது. உடனே சுதாகரித்து அதை கரத்தோடு இறுக்கிக்கொண்டான் அவன்.
ஒருசில கணங்கள்தான் அவன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பான். ஆனால் அவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகாவின் விழிகளுக்குள் அது சரியாக சிக்கிக்கொண்டது.
‘தன்னை மறக்கவில்லை இவன்’ அந்த ஒரு நிம்மதி அவளிதயத்தில் பரவ, இப்போது அவனின் விழிகளில் தெரிந்தது அவளை நோக்கிய ஒரு அந்நியத்தன்மை.
************
மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க செல்லங்களா… 😍😍
-Sheha zaki
