Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 41

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 41

சிவராமனுடன் லட்சுமியும் தற்போது கடைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

லட்சுமி எனக்கு போண்டா சாப்பிடலானு இருக்கு. வாங்கிட்டு வா.

டாக்டர் உனக்கு எண்ணெய் பண்டம் எல்லாம் கொடுக்க வேண்டானு சொல்லிருக்காங்க…



Advertisement

டாக்டர் அப்படிதான் சொல்லுவாங்க. அதுக்காக அப்படியே இருக்க முடியுமா?
கங்கா காலைலே உன்கிட்ட என்ன சொல்லிட்டு போச்சு?அப்பா என்ன கேட்டாலும் வாங்கி கொடும்மானு தானே…

சரி நீ கங்காகிட்ட ஃபோன் பண்ணி கேளு.அவ வாங்கி கொடுக்க சொன்னா. நான் வாங்கி தரே..

இருவரின் பஞ்சாயத்தையும் அவளிடம் கொண்டு சென்றனர்.

Advertisement

அப்பா டாக்டர் அதெல்லா சாப்பிடக் கூடாதுனு சொல்லிருக்காரு.

Advertisement

கங்கா,எனக்கு ஒரே ஒரு போண்டா அதுக்குமேலே நான் கேட்க மாட்டேன்.

சரிப்பா ஒன்னே, ஒன்னுதான்.அதுவும் எண்ணெய் அதிகமா இருந்தா. அம்மாக்கு கொடுத்தரனும்.

“சரி கங்கா” என ஃபோனை வைத்தவர். லட்சுமி!”கங்கா, என்கிட்ட ஏன்ப்பா ஒன்னு மட்டும் இன்னொன்னு கூட வாங்கி சாப்பிடுனு சொல்லுச்சு. அதுனால எனக்கு ரெண்டு போண்டா வாங்கி தா” என குழந்தையை போல அடம்பிடித்து வாங்கி உண்டார் சிவராமன்.

Advertisement

சல்மான் அடுத்த நாளே கன்னியாகுமரி சென்றுவிட்டதாக நித்யா கூறினாள். அதை கேட்ட கங்காவிற்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.அன்று அவனை பார்த்து வந்ததோடு சரி, ஃபோன் கூட செய்து கொள்ளவில்லை.

அன்று காதலர் தினம்.. பழைய நாட்களின் நினைவுகளால் சரியான தூக்கம் இல்லை, கங்காவிற்கு… மணியை பார்க்க காலை ஐந்து மணி. அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது. எனவே அவனது யுனிவர்சிட்டியின் இன்ஸ்டா பக்கங்களை புரட்டினாள்.அவனது ஃபோட்டோவையாவது பார்க்கலாம் என….

அதில் ஒரு வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு பதிவிடப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்யும் பேராசியர் முதல் கொண்டு துப்புரவு பணியாளர் வரை அனைவருக்கும் கிஃப்ட் கொடுக்கும் வீடியோ அது..அதில் சல்மான் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு,சிரித்து முகமாக பேசிக் கொண்டிருந்தான். அவனின் சிரித்த முகத்தை கண்ட கங்காவிற்கு தன்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தது.

அந்த வீடியோ யாருக்காக யாரால் எடுக்கப்பட்டது என்றெல்லாம் தெரியவில்லை… ஆனால் அதன் பின்னணியில் வந்த”அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற பாட்டு கங்காவிற்கு தான் யார்? என்பதையும் சல்மான் எந்தளவு அவள் எண்ணங்களில், நினைவுகளில், இதயத்தில் நிறைந்து இருக்கிறான் எனவும் உணர்த்தியது.

அந்த வீடியோவின் இறுதியில்,”அன்பு என்பது சில நேரங்களில் பெரிய விஷயமல்ல…யாரோ ஒருவருக்காக மனதார நாம் செய்யும் ஒரு சிறிய அக்கறை கூட…அலை போல வாழ்க்கையில் பரவி, ஒருநாள் பல மடங்கு அன்பாக மீண்டும் நம்மிடமே வந்து சேரும்.” என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.

சரிதானே…சல்மான் தனக்காக காட்டிய சிறிது அன்புதான். இன்று தன்னுள் பலமடங்காக பெருகி காத்திருக்கிறது என எண்ணிக் கொண்டாள்.

“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!”
என்பதை போன்ற காதலில் எல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை.அதைப்போல அவனை பார்த்தும் எல்லாம் காதல் வரவில்லை.

கங்காவை பொறுத்தவரை சிவராமன் சுவற்றில் ஆணி அடித்தால் கூட ஹீரோவாகத்தான் தெரிவார். சிறுவயதில் எல்லார் வீட்டிலும் கரண்ட் இருக்க சிவராமன் வீட்டில் மட்டும் பீஸ் போய் விட்டது.எட்டு மணிக்கு வந்தவர் திரிவிளக்கு வெளிச்சத்தில் வீட்டின் ஓரிடத்தில் மண்ணை கொஞ்சம் தோண்டி, ஒரு குச்சியை நட்டு அதில் ஒயர் செருகி ஐந்து நிமிடத்தில் கரண்ட்டை வர வைத்தார். இருமகள்களும் கரண்ட் வந்த குஷியில் விளக்கை ஊதி அணைக்க போட்டி போட்டனர்.

சிவராமன் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்,டூ,திரி என சொல்லி இருவரையும் விளக்கை ஊதி அணைக்க வைத்தார். ஆனால் கவனமாக விளக்கை கங்கா பக்கம் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவார்.

இதை போன்ற எந்த ஹீரோயிசத்தையும், அக்கறையையும் அவன் இவளின் மனதை அடைய காட்டவில்லை.தன் இயல்பான பேச்சினாலும், நற்குணங்களாலுமே இவளின் மனதை நிரப்பி நிற்கிறான்.

கங்காவின் பார்வையில்,மற்ற ஆண்களோடு ஒப்பிடுகையில் எப்படி சிவராமன் தனித்து தெரிவாரோ… அதற்கு சற்றும் குறைவில்லாது சல்மானும் தனித்து தெரிவான் அவளுக்கு மட்டும்…

அவன் வேற்று மதத்தை சார்ந்தவன், அதுமட்டுமல்ல தன்னை விட ஒருவயது குறைந்தவன் இதெல்லாம் சிவராமன் ஏற்றுக்கொள்ள மாட்டார். என்றெல்லாம் அறிவு கூற,அவனை மறந்துவிட இதயம் மறுத்தது.அவன் தன்னைவிட நீ வயதில் பெரியவள் என்ற எல்லையில் இவளை நிறுத்தி இருந்தால், இவளும் அந்த எல்லையிலேயே நின்றிருப்பாள். ஆனால் அவனே அந்த தடையை உடைத்து இவளை இயல்பாக்கினான்.

அதுமட்டுமல்ல… இதுவரை சல்மான் என்ற ஒருவனை மட்டுமே அவளது எண்ணங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவன் வீட்டிற்கு சென்று வந்த பிறகுதான், அவன் பின்னால் இருந்த அந்த குடும்பத்தின் அன்பும், பாசமும், நம்பிக்கையும் அவளுக்கு புரிந்தது.

அவன் அப்பாவும் அம்மாவும் எத்தனை உணர்வுகளோடு அவனை வளர்த்திருக்கிறார்கள்… இப்போது அந்த வீட்டின் மொத்த நம்பிக்கையும் சல்மான் ஒருவன் மீது மட்டுமே நிற்கிறது.

அப்படி இருக்க, அவன் கூறியது போல வேறு மதப் பெண்ணை அவன் மணந்தால் சுற்றத்தார் என்ன சொல்வார்கள்? அவன் அம்மா அதை ஏற்றுக் கொள்வார்களா? என்ற எண்ணங்கள் அவளை குழப்பின.

ஆனால் இத்தனைக்கும் நடுவில் கூட… எந்த நிலையிலும் அவனை விட்டு விலக அவளது மனம் மட்டும் மறுத்தது.

சல்மான் நாற்பது நாள் கழித்து அவன் அம்மாவையும் கன்னியாகுமரியே அழைத்துச் செல்ல முடிவு செய்திருப்பதாக மாலதி கூறினாள்.

அவர்கள் கிளம்புவதற்கு முன், மீண்டும் ஒருமுறை நித்யா,மாலதி, கங்கா மூவரும் சல்மான் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

கங்கா அவன் அம்மாவிற்காக ஒரு ப்ரேயர் மேட்டையும், சால்வையும் வாங்கினாள்.

தினமும் மாலதி ஃபோன் செய்வது… “இன்று வேண்டாம். அவர்கள் வீட்டில் ஏதோ சடங்காம்” என ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டாள்.

நித்யா கடுப்பாகி, கங்கா!” நான் வரலே.. இவள பத்திதா நமக்கு தெரியுமே. சரியான கேப்மாறி.அவன் வீட்டுல நடக்கற விசயம் இவளுக்கு எப்படி தெரியுமாம்?இவ ஏதோ கேம் ப்ளே பண்றா.இதுக்கு மேல இவள நம்ப வேண்டா..

எனக்கும் அந்த சந்தேகம் வந்துச்சு நித்தி.நான் உனக்கு எப்படி தெரியும்னு? கேட்டே… ‘கோ ஸ்காலர்’சொன்னாங்கனு சொன்னாடி.

‘கோ ஸ்காலர்’ ஒரு பையன்.அவன் எப்படி இவ்வளவு தூரம் சல்மான் வீட்டுல நடக்கறதே எல்லாம் தெரிஞ்சுகிட்டு இவகிட்ட சொல்வானா?எனக்கு என்னமோ இவதான் அவங்க அம்மாகிட்ட பேசிட்டு, உன்கிட்ட ‘கோ ஸ்காலர்’ னு பொய் சொல்லிட்டு இருக்கானு தேணுது.

“சரி நானும் போகல” என நித்யா வழிக்கே கங்காவும் சென்றாள்.

அன்று சிவராமனை மன்த்லி செக்கப்பிற்கு அழைத்துச் சென்றாள் கங்கா.அவரை பரிசோதித்த டாக்டர்.. அவருக்கு ஹார்டில் இருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்யை கொழுப்பு அடைத்துள்ளது. இது ஆரம்ப நிலைதான் மாத்திரையிலேயே சரிபடுத்தி விடலாம் என அதற்கும் மாத்திரையை எழுதி கொடுத்தனர்.

எவ்வளவு மாத்திரையைதான் அவருக்கு கொடுப்பது? என்ற கவலையிலேயே வந்தவளை…ஏன் கங்கா முகம் ஒருமாதிரி இருக்கு?என கேட்டார் சிவராமன்.

“நான் எப்போப்பா பழைய அப்பாவை பார்ப்பே?என்னாலே தானேப்பா உனக்கு இவ்வளவு கஷ்டம். என்னால தானேப்பா உனக்கு இவ்வளவு மாத்திரை டெய்லியும் சாப்பிடற மாதிரி ஆயிடுச்சு” என அதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றி அழுக ஆரம்பித்தாள்.

“கங்கா,அப்பானாலே இப்ப முன்னமாதிரி எல்லா இருக்க முடிறது இல்ல..அப்பாவுக்கு வயசாகிடுச்சு. அதுக்கும் உனக்கும் சம்பந்தமில்ல கங்கா. ஆனாலும் என்னோட சக்திக்கு மீறி நான் உங்க ரெண்டு பேருக்காக எல்லாம் செய்வேன்.என்னோட பேர பசங்கள நான் பாக்கணும். அதுனால இந்த மாத்திரை என்ன இதைவிட அதிகமா கூட நான் சாப்பிடுவேன்” என்றார்.

இந்த வயசுலையும் அப்புச்சி எல்லா நல்லாதானேப்பா இருக்கு…

“ஆமா அவங்க அப்பனுக்கு என்ன கவல. வதவதன்னு ஆறு உருப்படியே பெத்துட்டான்.என் மாமியார் மட்டும் இல்லனா அந்த குடும்பம் வீணா போயிருக்கும்” என நிலையை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினார்.

“எங்க அப்பனுக்காது நீ ஒருத்தன்தான் பேசிட்டு இருக்கே.உனக்கு ரெண்டு பேரு வந்து பேசுவானுங்க பாரு” என லட்சுமியும் அந்த நிலையை கலகலப்பாக்கினார்.

என்னதான் இருவரது நகைச்சுவைக்கு கங்கா சிரித்தாலும்,சிவராமனின் உடல்நிலை பற்றிய கவலை அவளை விட்டு நீங்கவில்லை.இருவரையும் கடையில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு மனமே கேட்கவில்லை. எதாவது அதிசயம் நடந்து,இந்த மருந்து மாத்திரைகளில் இருந்து சீக்கிரமாக அவருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள்.

அந்த சமயம் மாலதி ஃபோன் செய்தாள். கங்கா இன்னைக்கு சல்மான் அம்மாவை பாக்க போலாமா?

“நாம்ம சரின்னு சொல்லுவோம். ரெடியாக சொல்லுவா. அரைமணி நேரம் கழிச்சு கூப்பிட்டு, அவங்க வீட்டுல சடங்கு.’கோ ஸ்காலர்’ சொன்னா இன்னொரு நாள் போலானு சொல்லுவா.அந்த ‘கோ ஸ்காலர்’ மட்டும் கைல கிடைச்சான்…சாணியே கரைச்சு அவன் மூச்சிலே ஊத்தனும்” என மனதினுள்ளே கறுவிய வாறே…

“இல்ல மாலதி.நான் ஹாஸ்பிடல்லே இருக்கே.வர லேட் ஆகும்.நான் நாளைக்கு போய் சல்மான் அம்மாவை பாத்துக்கறே.நீ அந்த ‘கோ ஸ்காலர்’ கிட்ட கேட்டு.. அவங்க அம்மா ஃபோன் நம்பரை மட்டும் வாங்கி தாடி” என அவளது தந்திர வழியிலேயே இவளும் சென்றாள்

இவள் கூறியதும் பதட்டத்தோடு… “ஃபோன் நெம்பர் எல்லா எதுக்கு.நீ ஃபோன் பண்ணினாலும் அவங்க அம்மாக்கு நீ யாருனே தெரியாது. இன்னைக்கு மணி பத்தானாலும் பரவா இல்லை.நாம்ம போய் அவங்க அம்மாவை பாத்துட்டு வருவோம்” என ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறையும் ஃபோன் செய்து இவள் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

இதற்குமேல் கங்காவும் அமைதியாக இருக்க விரும்பவில்லை.
சல்மானுக்கு ஃபோன் செய்ய,பிஸி என வந்தது.மேற்கொண்டு அவனை தொந்தரவு செய்யாமல்,இவளது திட்டம் எதுவரை என்றும் அது சல்மானை எதுவரை பாதிக்க போகும் என்றும் தெரிந்து கொள்ள முடிவெடுத்தாள்.
குளித்து முடித்து, ரெடியாகினாள்.அவன் அம்மாவிற்காக வாங்கி வைத்த… சால்வையையும், பிரேயர் மேட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மீண்டும் அவளிடம் இருந்து ஃபோன்.. கங்கா போகும் போது எதாச்சும் வாங்கிட்டு போலாம்..அவளது வழிக்கே இவளும் சென்றாள்.

என்ன வாங்கலாம்?

எதாச்சு பழம் வாங்கிட்டு வா..

சரி! என இறங்கி ஆப்பிளும், மாதுளையும் வாங்கிக் கொண்டாள்.

வந்தவுடன் அவளது பையை வாங்கி ஆராய ஆரம்பித்தாள்.கங்காவிற்கு கோபம்..அவள் சால்வையையும், பிரேயர் மேட்டையும் எடுப்பதற்குள் பிடிங்கி விட்டாள்.

இதுவரை அவன் அப்பா இறந்த அன்று போய் வந்தது.அதன் பிறகு அவன் அம்மாவை பற்றி கோ ஸ்காலரிடம் மட்டுமே கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று பொய் மழையை பெய்ய வைத்தவள்… போகும் வழியில் “அம்மாவும்,நானும் போன வாரம் சென்றோம் என்ற தகவலை சொன்னாள்.
ஒருவேளை சல்மான் அம்மா இவள் முகத்திரையை கிழித்து விட்டால் என்ன செய்வது? என இவளே முந்திக் கொண்டாள்.

அவங்க அம்மா சொன்னாங்க நித்யாவிற்கு கல்யாண வயசு தாண்டிருச்சுனு

ஓ!சம்பந்தம் வரையிலும் பேச்சு சென்றிருக்கும் போலவே..

நமக்கு மட்டும் பதினாறு வயதா மாலதி. நம் மூவருக்கும் ஒரே வயதுதானே என அவளிடம் கேள்வி கேட்டாள்.

அந்த கேள்விக்கு ஏதோதோ மலுப்பி அங்கே சென்றதை பாதி மென்று, தின்று, துப்பி என இவளை அழைத்துச் சென்றாள்.

இவள் முன் சல்மான் அம்மா அன்றைக்கு பேசியது போல் இயல்பாக பேசிவிடக் கூடாது என மனதில் மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் கேட்டை திறக்க.. அவன் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கும் ஒரு பெண்..”யாரும்மா நீங்க மொதல்ல வெளியே போங்க” என முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டே நாய் மாதிரி லொள் என வந்தார்.

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!