Skip to content
Post Views: 286
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 42.1
சல்மான் வீட்டை அடைந்ததும் கேட்டை திறக்க, அவன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒரு பெண், “யாரும்மா நீங்க? முதல்ல வெளியே போங்க” என கடுமையாக கூறினார்.
அதற்குள் சல்மான் அம்மா கதவை திறந்து, “யார்?” என கேட்டார்.
மாலதியை பார்த்ததும் உடனே அடையாளம் கண்டு, “வா மாலதி” என்றார்.இரண்டு மூன்று முறை பார்த்திருப்பார் போல….
Advertisement
பின்னால் நின்ற கங்காவை பார்த்தவர் சற்று யோசித்தார். அன்று புடவையில் பார்தவருக்கு இன்று சுடிதாரில் பார்க்க அடையாளம் காண சற்று சிரமமாக இருந்தது போல.. இது யார் மாலதி? என்றார்.
“அம்மா… நான் கங்கா” என்றாள்.
உடனே எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.கங்கா அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்தாள்.அன்று நன்றாக பேசியவர் இன்று ஏன் எதுவும் பேசாமல் செல்கிறார்? என்ற குழப்பம் அவளை விட்டு போகவில்லை.அன்று நடந்ததை மீண்டும் யோசித்து பார்த்தாள். ஒரு இருபது நிமிடம் மட்டுமே பேசி இருப்போம் என எண்ணியவளுக்கு வேறு எதுவும் நினைவில் வரவில்லை.
Advertisement
சிறிது நேரத்தில் சல்மானை பற்றியும், அவன் வேலையை பற்றியும் பேசியவர், நாளை சல்மான் வீட்டிற்கு வருகிறான் என்ற செய்தியையும் கூறினார். அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கங்காவிற்கு, இந்த விஷப்பாம்பு ஏன் இன்று இவ்வளவு மெனக்கெட்டு தன்னை அழைத்து வந்தது என புரிந்தது.
Advertisement
அப்போது சல்மானின் அத்தை வீட்டிற்கு வந்தார். மாலை ஆறரை மணிக்கு சல்மான் அப்பாவிற்காக ரொட்டி சுட்டு சாமி கும்பிட வேண்டும் என சமையலறைக்கு சென்றார் அவன் அம்மா. உடனே மாலதியும் அவருக்கு உதவுவது போல பின்னே சென்றாள்.
சல்மானின் அத்தை கங்காவிடம் பேச ஆரம்பித்தார்.“எங்க அண்ணன் ரொம்ப பாசமானவரும்மா. சொந்தம் சூழ்ந்து இருக்கறது அவருக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க சித்தப்பா பசங்க பெரியப்பா பசங்க இருந்தாலும் சொந்த தங்கச்சி போலவே எங்க அண்ணன் பாசமா இருப்பாருமா” என்றார்
அதை கேட்ட கங்காவிற்கு அவளது ரவி மாமா நினைவுக்கு வந்தார்.அவரும் அம்மாவின் பெரியப்பா மகன் இருந்தும் அம்மா,சித்தி,மாமா என யாருமே அவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
Advertisement
“பாய் இறந்தப்போ இங்கதான் படுக்க வெச்சிருந்தாங்க. தூங்குற மாதிரியே இருந்தாரு…”
“அம்மா… சல்மான் அப்பா ஃபோட்டோ இருக்கா?” என கேட்டாள் கங்கா.
ஃபோனில் தேடியவர், “அவரோட ஃபோட்டோ இல்லம்மா. சல்மான் தாத்தா பாட்டி ஃபோட்டோ மட்டும் இருக்கு” என காட்டினார்.
“நீங்க வீட்டுல இறந்தவங்க ஃபோட்டோ எல்லா வெச்சுக்க மாட்டீங்களாம்மா?”
“இல்லம்மா. நாங்க உருவங்களை வீட்டுல வைக்க மாட்டோம்.”
அதை கேட்ட கங்காவிற்கு, “அச்சச்சோ! தெரியாம சல்மானுக்கு ஃபோட்டோ கொடுத்துட்டோமே…” என தோன்றியது.
“எங்க வீட்டுக்காரரும் இப்படித்தான்… பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற வயசுலேயே இறந்துட்டாரு. இப்போ சல்மானும் அந்த வயசுல நிக்கிறான்…”
அவர் பேச்சில் இருந்த வருத்தம் கங்காவை அமைதியாக்கியது.
அந்த நேரம் சல்மான் அம்மாவின் ஃபோன் அடித்தது. அது சல்மான்தான் என கங்காவிற்கு தோன்றியது.
மாலதி ஃபோனை எடுத்து,“அம்மா… யாரோ கூப்பிடறாங்க யாருனு தெரிலே பாருங்க” என கொடுத்தாள்.
ஓ!அவளுக்கு சல்மான் நம்பர் தெரியாதா? என கங்காவிற்கு எரிச்சலாக இருந்தது.
அது சல்மானேதான். அம்மா தனியாக இருப்பாரோ என வீடியோ கால் செய்திருந்தான். இவர்கள் வந்திருப்பதை அவன் அம்மா கூற,.
“சரிம்மா… எனக்கு வேலை இருக்கு. அப்பறம் கூப்பிடறேன்” என ஃபோனை வைத்து விட்டான்.
அவன் அப்பாவிற்கு கடலை பருப்பி ரொம்ப பிடிக்கும் என்பதால், அதை வாங்கி வர மாலதியை அனுப்பினார்.அவளும் வாங்கி வந்து கொடுத்தாள்.
சாமி கும்பிட்ட பிறகு, மாலதி கடலை பருப்பியை எல்லோருக்கும் கொடுத்தாள்.
அவள் அந்த வீட்டின் மருமகள் போல தன்னை நினைத்துக் கொண்டு சமையலறையில் இயல்பாக பழகுவது கங்காவிற்கு கடுப்பாக இருந்தது. அவளது வீட்டில் கூட இப்படி வேலை செய்வாளா? என்ற எண்ணம் தோன்றியது.
அதே நேரம் மசூதியில் பாங்கு ஒலித்தது. “கடவுளே… இவளோட உண்மை முகம் சல்மான் அம்மாவுக்கு தெரியணும்…” என மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
சல்மான் அத்தை கங்காவை பார்த்து,
“நாம்ம பொண்ணா பிறந்துட்டோம். நம்மால முடியுமா என நமக்கே சந்தேகம் வரக் கூடாது. தைரியமா இருக்கணும்…” என சில அறிவுரைகளை வழங்கினார்.
“சிறிது நேரம் பேசிவிட்டு,சரிம்மா… நான் கிளம்பறேன்” என அவர் எழுந்தார்.
புறப்படுவதற்கு முன், தலை முக்காட்டை சரி செய்து கொண்டு சல்மான் அம்மாவின் கைகளை பிடித்து மெதுவாக ஏதோ ஓதி விட்டு கதவு வரை சென்றவர்.. திரும்பி “பாய் ஃபோட்டோ இருந்தா காட்டுங்க அண்ணி கங்கா கேட்டுச்சு” என்றார். பின் கங்காவை பார்த்து “வாம்மா வீட்டுக்கு” என அழைத்தார்.அதற்குள் இந்த குள்ளநரி தன்னைத்தான் அழைக்கிறார்கள் என முந்திக் கொண்டு இன்னொருநாள் வருகிறோம் என்றது.
சல்மான் அம்மா அவனது அப்பா போட்டோவை காட்டாது,சல்மான் ரத்த தானம் செய்த ஃபோட்டோவை காட்டினார்.மணி ஆறே முக்கால் என காட்ட, “நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்திருங்க நான் தொழுதுட்டு வரேன்” என உள்ளே சென்றார்.
அதற்குள் மாலதி வேகமாக சல்மான் போட்டோவை அவளது ஃபோனில் ஏற்றிக் கொண்டாள்.அதோடு அவன் அப்பா ஃபோட்டோ இருக்க அதை கங்காவிடம் காட்டினாள்.அவள் யோசித்தவாறே அவர் அவளது ரவிமாமா மாதிரியே இருந்தார் அவர்.பின் அவர் ஃபோட்டோவையும் அவள் ஃபோனில் ஏற்றிக் கொண்டாள்.
அவன் அம்மா வந்ததும்,மாலதி உடனே எழுந்து நின்று, அவர் அமர்ந்த பின் அமர்ந்து என பல நாடகங்களை அரங்கேற்றினாள்.
அவரே இயல்பாக ஒரு தோழியை போலத்தான் நடந்து கொள்கிறார்.இவள் செய்வது கேடித் தனத்தின் உச்சம். அதற்குமேல் அவளின் லீலைகளை காண சகிக்காது.”எப்போம்மா ஊருக்கு கிளம்பறீங்க?” என்றாள் கங்கா.
வரும் திங்கட்கிழமை. நான் இதுவரைக்கும் அவ்வளவு தூரம் எல்லாம் சென்றது இல்லைம்மா.ஏதோ அப்பார்ட்மென்ட்டில் நாலாவது மாடியில் வீடு பார்த்திருக்கிறானாம்.என்னால் மாடி ஏறி இறங்க முடியுமா?என கேட்டதற்கு… “நானே கடைக்குச் சென்று எல்லாவற்றையும் வாங்கி தரேன் என்கிறான்” என்றார் அவர்.
பரவாயில்லையே, பையனுக்கு பொறுப்பு வந்துவிட்டது என எண்ணியவளுக்கு…
இப்படி மொத்த குடும்ப பொறுப்பும் அவன் தோள்மீது சென்று விட்டதே என்ற கவலையும் வாட்டியது. சல்மான் அப்பா ராஜாவா என்றெல்லாம் கங்காவிற்கு தெரியாது.ஆனால் நிச்சயமாக அவர் சல்மானை இளவரசனாகவே வளர்ந்துள்ளார் என தோன்றியது.
சரிம்மா நாங்க கிளம்பறோம்..உங்க உடம்பே பாத்துக்கோங்க.ஏனா நீங்கதான் சல்மானுக்கு உலகம். நீங்க இல்லைனா அவன் அவ்வளவுதான் என அண்டார்டிகாவில் இருக்கும் மொத்த பனிக்கட்டியையும் அவர் தலைமீது வைத்தாள் மாலதி.
இதை பார்த்த கங்காவிற்கு”உலக மகா நடிப்பு” என்றே தோன்றியது. அம்மா எல்லாருக்குமே உயிர்தான்.அதுவும் சல்மான் வீட்டிற்கு ஒரே பையன்.தற்போது அப்பாவும் இல்லாத நிலையில் அம்மாதானே எல்லாம் அவனுக்கு. இவள் ஏன் தேவை இல்லாது இப்படி தேன் ஒழுகும் வார்த்தைகளை உபயோகிக்கறாள் என்ற கேள்வி வந்தது.
பிரேயர் மேட்டையும், சால்வையும் இவள் முன் கொடுக்க கங்காவிற்கு தயக்கம். வீட்டிற்கும் எடுத்துச் செல்ல முடியாது என தயங்கியவாறே அவரிடம் கொடுக்க மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கி கொண்டார்.
கங்காவை பஸ் வைத்துவிட மாலதியும் வந்தாள்.கங்கா, சல்மான் இப்போ ரொம்ப பொறுப்பானா பையனா மாறிட்ட இல்ல.
மாறித்தானேடி ஆகனும்.
ரெண்டு பெட்ரூம் வெச்ச வீடு கூட பார்திருக்கனாம்
இதை யாரு உன்கிட்ட சொன்னா?
சல்மான் அம்மாதானடி இப்போ சொன்னாங்க…
சத்தியமாக கங்காவிற்கு அந்த வார்த்தையை அவர் பேசியதாக நினைவில் இல்லை.
அந்த முகத்தில் இருந்த நரியை போன்ற தந்திரமும்,வெட்கமே வராவிட்டாலும் வேண்டுமென்றே வலிய அதை முகத்தில் கொண்டு வந்து சிரிப்பதையும் பார்த்த கங்காவிற்கு… இந்த மூச்சி சல்மான் ஜோடியா?உவ்வே!அருளின் இன்டிமசி வீடியோ பார்த்த போது.. எப்படி உமட்டிக் கொண்டு வந்ததோ? அப்படியே தற்போதும் வயிற்றை பிறட்டியது. எந்த நிலையிலும் இவளை சல்மான் ஜோடியாக ஏற்றுக் கொள்ள அவள் மனம் மறுத்தது.
வீட்டிற்கு வந்த மாலதிக்கு..சல்மான் அம்மா கங்காவிடம் சரியாக பேசாதது மகிழ்ச்சியே இருந்தும்…ஏன் அவர் அவளிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?இருவருக்கும் வாய்க்கால் வரப்பு பிரச்சைனையா?இல்லை அங்காளி, பங்காளி சண்டையா?அதுவும் இல்லையே. பின் ஏன்? என்ன வென்று தெரிய வேண்டும் என மீண்டும் நரித்தந்திரம் தீட்ட ஆரம்பித்தாள்.
கங்காவிற்கும் அதே கேள்வி.மாலதியை பற்றிய நல்ல எண்ணம்தான் அவர் மனதில் உள்ளது.இந்த நிலையில் கங்காவை கோள்மூட்டிக் கொடுத்து அதை அவள் கெடுத்துக் கொள்ள மாட்டாள்.பின் இருந்தும் ஏன் அவர் தன்னிடம் நன்றாக பேசவில்லை என்ற வருத்தம்.
—தலைவன் வருவான்…
error: Content is protected !!