Skip to content
Post Views: 311
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 43.2
பழனிச்சாமி வீட்டை விற்கலாம் என அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தார். சிவராமன் உன் பங்கை விற்றுக் கொள். நான் எனது பங்கை விற்க மாட்டேன் என பிடிவாதமாக நின்றார்.
சரி இந்த வீட்டை பங்கி கொடுக்கற வரை குடிக்க தண்ணி பிடிக்காதே.. ஏனா அதை நான்தான் பணம் கட்டி வாங்குனே,அதே மாதிரி நான் இங்க இருக்கறே வரை நீ கட்டுன பாத்ரூம் பயன்படுத்த மாட்டேன்.
“சரிப்பா உன் வழிக்கே நானும் வரேன். நான் தண்ணீ பிடிக்கல.நீ பாத்ரூம் போக வேண்டாம்” என பிரச்சினையை முடித்தார் சிவராமன்.
Advertisement
தினமும் லட்சுமி பொது பைப்பில் இருந்து தண்ணீர் சுமந்து வந்து, நால்வருக்கும் சமையல் செய்து, துணிமணிகளை துவைத்து, சிவராமனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்து,அவரோடு கடைக்கு போன பின்பே ‘அப்பாடா’என சோர்ந்து போய் அமருவார்.
லட்சுமி,”என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்.எனக்கும் எல்லா வேலையும் செய்யனும்..கங்கா கெளசிக்கும் எல்லா வேலையும் செய்யனும்.என்னோட எல்லா வேலையும் மாதவன் பிடிச்சதுக்கு அப்பறோம் காசுக்கும் கஷ்டம்.கங்காவும் கெளசியும் ஸ்கூல்ல நாள் முழுக்க நிக்றது பத்தாதுனு…நைட் டியூஷன் வேற வெளியே போய் எடுத்துட்டு வர்றாங்க. அவங்களுக்கும் கஷ்டம்.இந்த நிலைமை எப்ப புள்ளே சரியாகும்?
பத்தாவதுக்கு எங்க அண்ணன் வேற தண்ணீ புடிக்க வேண்டானு சொல்லிட்டான்.நங்கை கூட இதை பத்தி எதுவுமே சொல்லுலே இல்ல.ஏன் தண்ணீ பிடிக்காம இருக்கீங்க?வந்து புடிங்கனு ஒரு வார்த்தை சொல்லுலே பாரு.நங்கை சொன்னாலும் நீ தண்ணீ பிடிக்காதே. நான் சொல்றே வரைக்கும் நீ இந்த வீட்டுல தண்ணீ பிடிக்காதே.
Advertisement
சேரி.நீ எப்போ தண்ணீ பிடினு சொல்றையோ. அப்போதா நான் இந்த வீட்டுல தண்ணீ பிடிப்பே.இந்த முப்பத்தியோரு வருஷ கல்யாண வாழ்க்கைல நீ வேண்டானா நான் அதை செய்ய மாட்டேன்.இப்பவும் அப்படிதான் நீ சொல்ற வரை நான் இந்த வீட்டுல தண்ணி பிடிக்க மாட்டேன்.
Advertisement
இவர்கள் பேசிக் கொண்டிருக்க கங்கா சிவராமனுக்கு ஃபோன் செய்தாள்.
அப்பா நான் இப்போதா வீட்டுக்கு வந்தேன். பாத்ரூம் போலானு கதவை திறந்தா நம்ம கதவு வெளியே பூட்டி இருக்கு.வெளியே கதவு உள்ளே பூட்டி இருக்குப்பா.
பெரியப்பா வந்து அவங்க வீட்டு கதவை திறந்தாதான் ரெண்டு பக்கமும் கதவை திறக்க முடியும்ப்பா.
பழைய சிவராமனாக இருந்திருந்தால்.. இந்த வார்த்தையை கேட்ட அடுத்த நிமிடமே கதவை பிளந்து சிவதாண்டவம் ஆடி இருப்பார்.ஆனால் இன்று பொறுமையாக தனது நங்கையிடம் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல.. அரைமணி நேரத்தில் கதவு திறந்துவிடப்பட்டது.
Advertisement
‘உனது பங்கை விற்றுக் கொள்’ என சம்மதமும் சொல்லியாயிற்று.. பழனிச்சாமியேதான் “தண்ணீர் பிடிக்க வேண்டாம்.நான் பாத்ரூம் பயன்படுத்த வில்லை” என்றார். அதற்கும் சிவராமன் இறங்கியே போனார். ஆனால் எதற்கு இரண்டு பக்கமும் கதவை அடைத்து வைக்க வேண்டும்.
இதைப்பற்றி பழனிச்சாமியிடம் கேட்க, ‘நான் தாழ்பாள் போடவில்லை’ என்றார்.
யாருமே நான் இல்லை. நீ இல்லை என்றால்.. யார்தான் இதை செய்தது? என சிவராமன் கேட்க… பழனிச்சாமி மகள் வைஷ்ணவி,
“சித்தப்பா சண்டை வேண்டா” என அழுக ஆரம்பித்தாள்.
“எனக்கும் உங்க அப்பனுக்கும் ஆயிரம் சண்டை வரும்.நாங்க இன்னைக்கு அடிச்சுக்குவோம் நாளைக்கு ஒன்னா போய்டுவோம்.
வயித்துல புள்ளையே வெச்சிட்டு மாலை நேரம் கண்ணீர் வடிக்க கூடாது.நீ தெம்பா இரு” என தைரியம் கூறி அமைதியானார் சிவராமன்.
தற்போதெல்லாம் நித்யா,ஃபோன் செய்து டிப்ரசனாக உள்ளது வெளியே போகலாம் என வம்படியாக கங்காவை அழைத்துச் செல்வது, அவள் கதையை கூறாது. சல்மானையும்,மாலதியையும் இணைத்து பேசுவது.கங்காவிற்கு ஏற்கனவே வீட்டுப் பிரச்சனை கொஞ்சம் வெளியே போனால் பரவாக இல்லை என்று இவளோடு வந்தால்… இவள் அதற்குமேல் செய்கிறாள் என தோன்றியது.
இவளோடு விட்டால் கூட பரவா இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாரிடமும் சல்மானை பற்றியும் மாலதி பற்றியும் பேசுவது.
நித்யா, உனக்கு சல்மானையும் மாலதியும் பிடிக்கலைன்னா விட்டுரு. ஏன் எல்லார் முன்னாடியும் அவங்கள இப்படி பேசறே?
அன்னைக்கு எல்லாரும் பேசும் போது நீயும் தானேடி இருந்தே.
அவங்க பேசறது வேறே,நீயும் நானும் அவங்க ஃபிரண்ட்ஸா இருந்துட்டு இப்படி பேசறது வேறே.
அவங்களுக்குள்ளே என்னமோ இருந்துட்டு போகட்டும்.இனிமே நீயும் நானும் அவங்க ரெண்டு பேரே பத்தியும் பேச வேண்டா.
அவங்க பண்றது என்ன தெய்வீக காதலா?நீ மாலதி சிஸ்டம்லே வெச்ச ஃபோட்டோவே பார்த்திருந்தா இப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டே.
ஒரு ஃபோட்டோக்காக அவங்க ரெண்டு பேரையும் இப்படி சேத்து வெச்சி எல்லார்கிட்டேயும் பேசலாமா?ஒரு பையனும் பொண்ணும் ஒன்னா நின்னு ஃபோட்டோ எடுத்தா தப்பா?
பையனும் பொண்ணும் ஒன்னா நின்னு ஃபோட்டோ எடுத்தா தப்பு இல்ல கங்கா. சட்டை இல்லாம பொண்ணு பக்கத்துல பையன் நின்னு ஃபோட்டோ எடுத்தா தப்பு.
அப்போ சல்மான் அந்த ஃபோட்டோல சட்டை இல்லமா இருந்தானா?
ஆமா.
நீ பாத்தியா?
இல்ல.
அப்பறோம் எதுக்கு இப்படி பொய் சொல்றே?
நான் பொய் சொல்லுல கங்கா.சுமந்த் கிட்ட கேளு அவன் சொல்லுவான்.ஏனா அவன்தான் அந்த ஃபோட்டோவை பார்த்தவன்.
“சரி இப்போவே கூப்பிடறே” என சுமந்த் நெம்பருக்கு டையல் செய்தாள் கங்கா.
—தலைவன் வருவான்…
error: Content is protected !!