Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..1

உயிர் உருகும் காதல் எனதே…..1

தன் கைகளில் இருக்கும் காகிதத்தை பார்த்திருந்த துர்காவிற்கு மனதில் அத்தனை நிம்மதி பரவியது.எத்தனை நாட்கள் தூக்கம் தொலைத்து நின்றிருந்தாள்.அவளின் ஒட்டு மொத்த பிராத்தனைக்கும் இதோ இன்று பலன் கிடைத்துவிட்டது.அந்த காகிதத்தை தன் தந்தை படத்தின் முன் வைத்தவள் தன் அன்னை வானாதியிடம் திரும்பி,

“ம்மா….நான் தூங்கப்போறேன்….என்னை எழுப்பாத….”என்று விட்டு தன் அறைக்குள் சென்றுவிட,

“ம்மா உன் பெரிய பொண்ணு பண்ணுறது ஒண்ணும் சரியில்லை….இப்படியே போச்சுனா எனக்கு நல்ல வரனே கிடைக்காம பண்ணிடுவா…..”என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள் வாசினி.



Advertisement

“வாயை மூடு வாசினி….நானே என் பொண்ணு இன்னைக்கு தான் நிம்மதியா தூங்கப்போறானு சந்தோஷப்படுறேன்….நீ தேவையில்லாம எதாவது பேசி அவளை புண்படுத்தாத….”என்று சற்று காட்டமாகவே கூறினார் வானாதி.அவருக்கு பெரிய மகளை பற்றி தான் நன்கு தெரியுமே அனைத்திலும் நிதானம்,திடத்துடன் தான் செயல்படுவாள். அவள் ஒரு காரியம் செய்கிறாள் என்றாள் அதில் நிச்சயம் ஒன்று இருக்கும்.ஆனால் சின்னவள் அதற்கு எதிர்மறை அனைத்திலும் அவசரம் துடுக்குத்தனமும் அதிகம்.

“ஆமா நான் எதாவது சொன்னவுடனே உன் பொண்ணு அப்படியே கேட்டுட்டு அழுதுட போறா….என் வாய் அடைக்கிற மாதிரி பேசுவா இல்ல எனக்கு தேவையானதை செய்யமாட்டேனு சொல்லி என்னை வெறி ஏத்திட்டு போவா….”என்று வாசினி அதற்கும் நொடிக்க,

“ஏன்டீ இப்படி இருக்க…என்னைக்காவது அவ உன்னை இப்படி நொகடிக்கிற மாதிரி பேசியிருக்காளா….உன் அப்பா இறந்து  இரண்டு வருஷமா அவ தான் உனக்கு எல்லாம் செய்யுறா அவளையே இப்படி நீ குத்தம் சொல்லிக்கிட்டு இருக்க….போ போய் உன் வேலையை பாரு….”என்றுவிட்டு வானாதி சென்றுவிட,

Advertisement

“மக்கும் இப்படியே அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருங்க….அதான் இவ்வளவு ஆடுறா…எல்லாம் வேலைக்கு போகுறோம்ன்ற திமிரு….வேற எதுவுமில்ல….”என்று அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க,துர்காவின் அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் வேகமாக ஓடிவிட்டாள்.

Advertisement

அறைக்குள் படுத்திருந்த துர்காவிற்கு தாயும்,தங்கையும் பேசிக் கொண்டது அனைத்தும் காதில் விழுந்தது தான் முன்பானால் எழுந்து சென்று தங்கையின் வாயை அடைத்துவிட்டு தான் வருவாள்.இன்று மனது ஏதோ போல் இருந்தது ஒரு பக்கம் நிம்மதியாகவும் மற்றொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.இப்படி நினைக்கையிலேயே அவளின் நினைவுகள் தன் பழைய காலத்தை அசைப்போட துவங்கியது.

வானாதி,ரமணன் தம்பதியின் மூத்த மகள் தான் துர்கா.அமைதி,அடாவடி,நெஞ்சுரம் அனைத்தும் கலந்த கலவை தான் அவள்.தங்கை வாசினி பிடிவாதமும்,துடுக்குதனமும் நிறைந்தவள். ரமணன் திருச்சியில் ஒரு தனியார் வங்கியில் கணக்கராக இருந்தார்.அவரின் நீண்ட நாள் ஆசையே தன் மகள்கள் இருவரும் அரசு பணியில் அமர வேண்டும் என்பது தான்.அதனாலே சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு படிப்பின் அவசியத்தை கூறி தான் வளர்த்தார்.துர்கா தந்தையின் மீது மிகுந்த பிரியம் கொண்டவள்.அதனால் தந்தை சொல்லே மந்திரம் என்பது போல் நன்கு படித்தாள்.ஆனால் வாசினி சிறு வயதிலிருந்தே படிப்பில் அத்தனை நாட்டம் இல்லை.

ரமணன் அவளை ஏதாவது கூறினால் உடனே அழுது வீட்டையே இரண்டாகக்கிவிடுவாள்.அதோடு அவள் பிறக்கும் போதே உடல் எடை சற்று குறைவு என்பதால் உடல் நிலையும் அடிக்கடி பின் தங்கிவிடும்.அதனாலே வானாதி அவளை சற்று கருத்துடன் பார்த்துக் கொள்வார்.

Advertisement

துர்கா கல்லூரி முடித்து அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக தேர்வுகள் எழுதிக்கொண்டிருந்தாள் அப்போது திடீர் என்று ரமணனிற்கு மாரடைப்பு ஏற்பட அதில் அவரின் ஒரு கையும்,காலும் செயலிழந்துவிட்டது.

அதன் பின் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை எனலாம்.சுற்றி நின்ற உறவுகள் எல்லாம் இரு மகள்கள் இருக்க இப்படி படுத்துவிட்டாய் இனி மகள்களின் கதி என்ன என்று கூறி கூறியே ரமணனை மொத்தமாக படுக்கையில் தள்ளிவிட்டனர்.இதில் அவர் உயிருடன் இருக்கும் போதே மகளுக்கு திருமணத்தை முடித்துவிடு என்று உறுவுகள் கூறிவிட,வானாதிக்கும் அதுவே சரி என்று பட அவர் கணவரிடம் கூறினார்.முதலில் மறுத்த ரமணன் தன் உடல்நிலை இன்னும் மோசம் அடைந்தால் மகளின் திருமணத்தை கூட பார்க்க முடியாது போய்விடும் என்று அஞ்சியே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். துர்காவிற்கு இதில் விருப்பம் இல்லை என்ற போதிலும் தந்தையின் ஆசைக்காக திருமணத்திற்க்கு சம்மதித்தாள்.

அடுத்த மாதத்திலேயே துர்காவிற்கு திருமணம் முடிவானது.மாப்பிள்ளை சென்னையில் பிரபல ஐடி கம்பெனியில் வேலை கைநிறைய சம்பளம் என்று வர,வானாதிக்கு பார்த்தவரை திருப்தி அதில் ராகவனின் குடும்பமும் நல்ல முறையில் இருக்க வேறு எதுவும் யோசிக்காமல் திருமணத்தை முடித்துவிட்டார்கள்.

இனி பெரிய மகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை இல்லை என்று பெற்றவர்கள் நினைத்திருக்க திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே  தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள் துர்கா.இரவு நேரத்தில் வந்து நின்ற மகளை கண்ட வானாதி,

“என்னடீ இப்படி வந்து நிக்குற….என்ன ஆச்சு….”என்று கத்த,மகளோ,

“எல்லாம் முடிஞ்சு போச்சுமா….எல்லாம் முடிஞ்சு போச்சு….”என்றுவிட்டு தன் தாயைக் கட்டிக் கொண்டு அழ,வானாதி திக் பிரம்மை பிடித்தவர் போல் நின்றுவிட்டார்.அவர் நின்றது சில மணித்துளிகள் தான் வேகமாக தன்னை மீட்டிக் கொண்டவர்,

“எ….என்ன….என்ன சொன்ன….துர்கா….”என்று கேட்க,

“நாம மோசம் போயிட்டோம்….”என்று திக்கி திணறி பதில் வந்தது அவளிடம் இருந்து.அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவர்,

“என்னை பாருடீ….என்னை பாரு…..என்ன நடந்துச்சுனு என்கிட்ட ஒழுங்கா சொல்லு….எனக்கு நெஞ்சு கடந்து அடிச்சிக்குது….”என்ற வானாதி மகளை உலுக்க,

“உன் மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கலையாம்…..என் மூஞ்சி நல்லா இல்லையாம்…எனக்கு படிப்பு பத்தலையாம்….அவங்க அப்பா,அம்மா கட்டாய படுத்தி தான் கல்யாணம் செஞ்சு வச்சாங்களாம்…..நான் அவருக்கு தகுதி இல்லாதவளாம்….”என்று கூறிக் கொண்டே போக,

“என்னடீ என்னனெமோ பேசிக்கிட்டே இருக்க….என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ….அய்யோ கடவுளே……”என்று தலையில் அடித்துக் கொண்டு வானாதி அழ,

“ம்மா அழாத….ப்பா முழிச்சிப்பார்….”என்றாள் வாசினி.தாயின் சத்தத்தில் எழுந்து வந்திருந்தவள் துர்கா கூறியவற்றை கேட்டு அதிர்ந்துவிட்டாள்.

“க்கா கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன்….எனக்கே பயமா இருக்கு நீ இருக்க கோலத்தை பார்த்தா….”என்று வாசினி துர்காவின் தோள்களை தொட்டு கூற,மொத்தமாக உடைந்துவிட்டாள் பெரியவள்.வாசினிக்கு அத்தனை பயம் தன் அக்காவா அழுவது அத்தனை சீக்கிரத்தில் எல்லாம் அழுதுவிடமாட்டாள் துர்கா அப்படிபட்டவள் இன்று உடைந்து அழுகிறாள் என்றால் பயம் கவ்வியது.

“க்கா…அக்கா என்னை பாரு ப்ளீஸ் சொல்லு….எனக்கு பயமா இருக்கு….”என்று அவளும் அழுதுவிட,துர்கா தன் வாயை திறந்தாள்.

பல கனவுகளுடன் தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்த வைத்த துர்காவிற்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான் முதல் இரவிலேயே கணவன் மதுவுடன் அமர்ந்திருக்க அதிர்ந்துவிட்டாள் துர்கா.அவனிடம் பேச முயற்சிக்கும் முன்னரே,

“இங்க பாரு எனக்கு உன்கூட வாழ விருப்பம் இல்லை…..இது இந்த கல்யாணம் எல்லாம் என் அப்பா,அம்மா என்னை பிளாக் மெயில் பண்ணி தான் என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க….எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலைனு சொல்லியும் என்னை மிரட்டி….அய்யோ…என் ஸ்வேதா என்ன பாடுபடுறாளோ….”என்று தன் கையில் இருந்த முழுபாட்டிலையும் குடித்துவிட்டு தூக்கி எறிய அது துர்காவின் காலடியில் விழுந்து நொருங்கியது.துர்காவிற்கு எதுவும் புரியவில்லை ஒருவித பயமும்,கோபமுடன் தன் மாமனார்,மாமியாரிடம் இதை முறையிட அவர்களோ ஒரு கதையை கூறினார்கள்.

ராகவனி ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண் அவனை ஏமாற்றிவிட்டு சென்றவிட்டாள் அவளை மறக்க முடியாமல் இருந்தவனை நாங்கள் மனம் மாற்றி திருமணம் செய்து வைத்தோம் என்றவர்கள்.

“ஏதோ கோபத்துல பேசுறான்மா….நீ தப்பா எடுத்துக்காத….கொஞ்ச நாள் ஆனா தானா சரியாப்போயிடும்….எங்களை நம்புமா…..”என்று ராகவனின் தாய் அவளின் கை பிடித்த கெஞ்ச,துர்காவிற்கு வேறு வழி இருக்கவில்லை அவர்கள் கூறுவது போல் பொறுத்துதான் போக வேண்டும் அதோடு தன் குடும்பம் இதை எப்படி எடுத்துக்கொள்ளுமோ என்று பயந்தே வாழ்வை வாழ தொடங்கினாள்.

ஆனால் துர்காவின் நிலை இன்னும் தான் மோசமாக மாறியதே தவிர அவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.ராகவனோ துர்காவை துச்சமாக நடத்த துவங்க வெகுண்டுவிட்டாள் பெண்ணவள்.இதன் விளைவு வீட்டில் தினமும் சண்டை சச்சரவு தான் அதிகமானது.இன்று அதுவும் எல்லை மீறிவிட்டது முழுபோதையில் வந்த ராகவன் எந்த கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் துர்காவை கண்டு உள்ளுக்குள் அமுங்கி கிடந்த ஆத்திரம் மீண்டும் கிளர்ந்து எழ,

“ஏய் எந்திரிடீ…..”என்று அவளை காலால் உதைக்க,திடுக்கிட்டு எழுந்தவளை தோள் பற்றி எழுப்பியவன்,

“என் வாழ்க்கையை நாரடிச்சிட்டு உனக்கு தூக்கம் ஒரு கேடா….”என்று உலுக்க,

“என் வாழ்க்கை கூட போச்சு உங்களால…..நான் என்ன பண்ணட்டும்….”என்று துர்காவும் குறையா கோபத்துடன் கேட்க,

“உன் மூஞ்சிக்கு கல்யாணமே பெரிய விஷயம்….இதுல வாழ்க்கை ஒரு கேடா….”என்று தெணாவட்டாக கேட்க,துர்காவிற்கு பிடித்து வைத்திருந்த பொறுமை பறந்தது.

“ஏன் என் முகத்துக்கு என்ன….குறை உள்ளவன் கண்ணுக்கு எல்லாம் குறையா தான் தெரியும்….”என்று துர்கா அவனை உதறி தள்ள,நிலை தடுமாறி கீழே விழுந்தான் ராகவன்.பொதுவாக இதுபோல் பெண்களை அவர்களின் உருவத்தை குறை கூறினால் அவர்கள் நிலைகுலைந்து போவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறான்.ஆனால் இவளோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னையே எதிர்த்து நிற்கிறாள் என்று கோபம் தலைக்கேற,

“ஏய் என்னையவே அடிக்கிறியா….உன்னை என்ன செய்யுறேன் பாரு….”என்று ஆக்ரோஷமாக எழுந்தவன் செய்த செயல்கள் அனைத்தும் துர்காவை அனைத்து தடைகளையும் உடைத்து திருமண பந்தத்தில் இருந்து வெளிவர முடிவெடுத்துவிட்டது.தன் மாமனார்,மாமியார் எத்தனை தடுத்தும் அங்கிருந்து கிளம்பியிருந்தாள் துர்கா.அனைத்தையும் கேட்ட வானாதி உடைந்துவிட்டார் என்றால் வாசினிக்கோ எப்படி வினையாற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.சற்று நேரம் வரை அமைதியாக இருந்த வானாதி,

“இவளை பாருடீ என்னென்னவொ பேசுறா….நான் சம்மந்தி அம்மாவுக்கு போன் போடுறேன்….”என்றுவிட்டு தன் கைபேசியில் ராகவனின் அம்மாவிற்கு அழைப்பு விடுத்தார்.மறுமுனை எடுக்கப்பட்டதும்,

“சம்மந்தி….”என்று தான் வானாதி கூறியிருப்பார்.ஆனால் அவரை பேச விடாமல் மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ அவரின் கை நழுவி கைபேசி கீழே விழுந்து நொருங்கியது அவரின் மனதை போல.

“ம்மா….”என்று அவரை தாங்கி பிடித்தார்கள் துர்காவும்,வாசினியும்.துர்காவிற்கு புரிந்து போனது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று அவர்களை கொன்று போடும் வேகம் கூட எழுந்தது ஆனால் இது சமயம் அல்லவே என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.அதன் பின் நடந்தவை அனைத்தும் அனர்த்தங்கள் தான்.வானாதி எவ்வளவு கூறியும் கேட்காமல் துர்கா விவாகரத்திற்கு கொடுத்துவிட்டாள்.ரமணனும் மகளின் நிலை கண்டு மனமுடைந்துவிட்டாலும் மகளின் பக்கம் தான் நின்றார்.ராகவனின் பெற்றொருக்கு இது பெரும் தலைகுனிவை கொடுத்துவிட அவர்கள் துர்காவிற்கு விவாகரத்து தராமல் இழுத்தடிக்க தொடங்கியிருந்தனர்.பண பலமும்,ஆள் பலமும் ஒன்று சேர்ந்தால் எளியவர்கள் ஒன்று செய்யயிலாது என்று நிருப்பிக்க தொடங்கியிருந்தனர்.

ராகவனின் பெற்றோர்கள் துர்காவை தூற்றி தன் மகன் நல்லவன் என்று ஊரார் முன்பு காட்டினர்.ஊரார் முன்பு துர்கா திமிர் பிடித்தவளாக சித்தரிக்க பட,அது இன்னும் துர்காவின் கோபத்தை தூண்டிவிட்டது.அதன் விளைவு அவள் ராகவனை தனியாக பிடித்து,

“நீ எனக்கு என்ன கொடுமை படுத்துனனு என்கிட்ட ஸ்டாராங் ப்ரூப் இருக்கு….”என்று ஒரு காணொளியை காட்ட,அதில் அவன் தண்ணி அடித்து விட்டு அவளை தரைகுறைவாக பேசிய பேச்சுகள் அனைத்தும் பதிவாகியிருந்தன.அதை கண்டவனுக்கு நெஞ்சம் நடுங்கியது.

“எ….எ…என்ன மிரட்டுறியா….நான் இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்….”என்று நடுங்கியவாரே பதில் வர,இதை தானே அவளும் எதிர்பார்த்தாள்.இவன் ஒரு தொடை நடுங்கி என்று தெரிந்து தான் இவனை தைரியமாக சந்திக்க வந்தது.

“இங்க பாரு….எனக்கு உன்னை மிரட்டனும் அவசியம் இல்ல….ஒழுங்கா விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இரு….அதோட உன் அம்மா,அப்பா என்னை பத்தி இனி வாயை திறக்கக் கூடாது மீறி திறந்தாங்க  உனக்கு தான் பிரச்சனை….”என்று மிரட்டலாகவே கூற,அவள் நினைத்தது போல் அது நன்றாகவே வேலை செய்தது.அதன் பின்னும் பல போராட்டங்களுக்கு பின் தான் அவளுக்கு விவாகரத்து கிடைத்தது.இந்த போரட்டதில் துர்கா தன் தந்தையையும் இழந்திருந்தாள்.

வாழ்வில் பல இருண்ட பக்கங்களுக்கு பின் இன்று தான் அவளின் வாழ்வு ஒளி வீச துவங்குகிறது.இனி என் வாழ்வில் அனைத்தும் நன்றாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் துர்கா கண்ணயற,அதே நேரம் அதே ஊரில் இருந்த மற்றொருவன் தன் வாழ்வில் அனைத்தையும் தொலைத்துவிட்டு தன் அறையில் ஒளி வீசிய சாரளத்தை மூடிக் கொண்டான்.இனி தனக்கு அனைத்தும் இருண்ட காலம் தான் என்று அவன் வீரபத்தரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!