Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே….2

உயிர் உருகும் காதல் என்தே….2

அந்த இருட்டு அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தது அந்த இதயம்.வேறு எதை தன்னை நேசித்தவளை தான் தேடிக் கொண்டிருந்தது.

“வீரா…..”என்ற அன்னையின் அழைப்பு செவியை தீண்ட,தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு,

“வ….வரேன்மா….கொ….கொஞ்ச நேரம்…..”என்று திக்கி திணறி கூற,அறையின் வெளியே நின்ற அன்னைக்கு நெஞ்சம் துடிதுடித்துக் கொண்டிருந்தது.வாயில் கை வைத்து தன் கேவலை மறைத்துக் கொண்டவர்,



Advertisement

“சரிப்பா….நா….நான் அம்…அம்மா இருக்கேன்….உனக்கு….சரியா….”என்று கதறும் நெஞ்சுடுன் கூற,

“தெரியும்மா….தெரியும்….நீ பயப்படாத….போ….நான் வந்துடுவேன்…எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்….”என்றவனின் குரல் இப்போது முற்றிலும் உடைந்திருக்க,

“அய்யோ…..நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியலையே என் பிள்ளை இப்படி கஷ்டப்படுதே….கடவுளே உனக்கு கண்ணு இல்லையா….”என்று கதறவே தொடங்கிவிட்டார் அவர்.வீரபத்திரனுக்கு அன்னையின் அழுகுரல் கூட கேட்கவில்லை தன்னிலை எண்ணி மருகிக் கொண்டிருந்தான்.இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இந்த அவபெயரை சுமந்து கொண்டு வாழ்வது.சிறிது நாட்கள் வரை அவனை பற்றிய வாதங்கள் குறைந்திருந்த போதிலும் இதோ இன்று மீண்டும் பேசும் பொருள் ஆனாது.

Advertisement

கற்பகத்திற்கு தான் மனது ஆறவில்லை தன்னால் தான் மகன் மீண்டும் தன் கூட்டிற்குள் அடங்கிவிட்டான் என்று மருக தொடங்கியவர் தன் கணவன் படத்தின் முன் கதற தொடங்கிவிட்டார்.

Advertisement

“இவனே வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறான்….இவன எதுக்கு கூப்பிட்டீங்க….”என்று ஒரு குரல்,

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிலாம்ல…..”

“அது தான் முடியாதே இவன் ஆம்பளையே இல்லைனு தான இவன் பொண்டாட்டி சொல்லிட்டு போயிட்டா…..”என்று ஒரு மற்றொரு குரல் வீராவின் செவிப்பறையில் அறைய தன் காதுகளை இறுக பொத்திக் கொண்டான்.எதுவும் வேண்டாம் எதுவும் கேட்க வேண்டாம் என்று தனக்குள் கூறிக் கொண்டாலும் நல்லதை காட்டிலும் கெட்டது தானே முன்னே வரும் என்பது போல அவர்களின் கிண்டல் பேச்சுக்கள் தான் முன் வந்தன.ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவன் கதறி துடிக்க,

Advertisement

“கண்ணா…..நான் இருக்கேன்டா உனக்கு…..”என்று தகப்பனின் குரல் எங்கோ கேட்க,

“அப்பா…..”என்றவனின் குரல் அவரை எட்டியது போல மூடிய ஜன்னல் காற்றின் வேகத்தில் திறந்து தென்றலாக அவனின் மீது மோதியது.அதுவரை தகித்த நெஞ்சம் சற்று சமன் பட தன்னை போல கண்களை மூடி தன் தந்தையின் நினைவில் மூழ்கினான் வீரா.

ராஜன்,கற்பகத்தின் ஒற்றை பிள்ளை தான் வீரபத்திரன்.இவனிற்கு அடுத்து இனி பிள்ளை வரம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.அதனால் வீரபத்திரன் தான் அந்த வீட்டிற்கு உயிர் நாடி போல ஆனான்.கற்பகத்தை பற்றிக் கூற வேண்டாம் பிள்ளைக்கு ஒன்று என்றால் உயிரையே விட்டுவிடுவார்.அத்தனை பிரியம் மகனின் மேல்.ராஜன் கற்பகத்தை போல் அல்லாமல் பாசமும் கண்டிப்பும் மிகுந்த தந்தை.

ராஜன் சொந்தமாக மளிகை கடை ஒன்றை வைத்திருந்தார்.ஒரளவிற்கு குடும்ப சொத்துகளும் இருக்க அவர்களின் வாழ்வு நன்றாகவே சென்றது.வீரபத்தரன் இளங்கலை இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம் தந்தையுடன் கடைக்கு சரக்கு எடுத்துவிட்டு திரும்பும் போது ஒரு விபத்தில் சிக்க அதில் சம்பவ இடத்திலேயே ராஜன் இறந்துவிட்டார்.வீரபத்தரன் அபாய கட்டத்தை தாண்டவே நான்கு நாட்கள் கடந்திருந்தது.

இதில் கற்பகம் முற்றிலுமாக உடைந்துவிட்டார்.ஒரு நொடியில் அவர்களின் வாழ்வே மாறியது போல் இருந்தது.ஒரு பக்கம் கணவன் இறந்து கிடக்க அதை உணரும் நிலையில் கூட தன் மகன் இல்லை என்பது இன்னுமே நிலைகுலைய செய்திருந்தது அவரை.கற்பகத்துடன் இந்த கடினமான நாட்களில் அவருடன் இருந்தது அவரின் தங்கை மகள் நர்மதாவும் அவள் கணவன் பிரபஞ்சனும் தான்.

மூன்று மாத காலம் கடந்திருந்து ராஜன் இறந்து.வீரபத்திரன் அப்போது தான் சற்று தெளிந்து அமரும் தருவாயில் இருந்தான்.அவனிற்கு இன்னும் தந்தையின் இறப்பு அறிவிக்கப்படவில்லை.மருத்துவர் இப்போது வேண்டாம் என்று கூறியிருக்க,கற்பகமும் மகனிடம் ராஜனிற்கு வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை நடப்பதாக கூறியிருந்தார்.வீராவிற்கு ஏதோ நெருடலாக தோன்றினாலும் இப்போது இருக்கும் நிலையில் அவனால் மேற் கொண்டு எதையும் கேட்கவும் முடியவில்லை.இதில் இன்னும் கைகளில் நடுக்கம் குறையவில்லை.

வீரபத்திரன் முழுமையாக குணமடைய மேலும் ஒரு மாத காலம் பிடித்திருந்தது.அவன் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் தான் தந்தை இறந்த விடயத்தை கூற முற்றிலுமாக உடைந்துவிட்டான் வீரா.அவனை கற்பகம் தான் தேற்றி வீட்டிற்க்கு கொண்டு வந்திருக்க,வந்த இரண்டு நாட்களில் கை,கால்கள் நடுக்கம் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இது அதீத பயத்தால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அதிர்வுகள் தான் அதனால் மனதை அமைதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி அவனிற்கு சில மருந்துகள் கொடுத்து அனுப்பினர்.ஆனால் அது தான் அவனின் வாழ்வையே மாற்றிவிட்டது.

தந்தையின் இறப்பிற்கு பின் வீரா தன் படிப்பை நிறுத்திவிட்டு கடை பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.கற்பகம் எவ்வளவு தடுத்தும் தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை அவன்.மூன்று வருடங்கள் கடந்திருந்தது ராஜன் இறந்து வீரபத்திரனிற்கு வரன் பார்க்க துவங்கியிருந்த சமயம் வீரா தான் ஒரு பொண்ணை விரும்புவதாக கூறி நந்தினியை கை காட்டினான்.இருவரும் கல்லூரி காலம் முதலே காதல் என்று கூற கற்பகத்திற்கு அதிர்ச்சி தான் என்றாலும் மகனின் விருப்பதிற்கு எந்த தடையும் சொல்லவில்லை.

ஆனால் நந்தினியின் வீட்டில் அவளின் காதலுக்கு அத்தனை எதிர்ப்பு தெரிவித்தனர்.நந்தினியின் குடும்பம் வீராவை விட நல்ல வசதியான குடும்பம் என்பதால் அவர்களுக்கு தங்கள் நிலைக்கு கீழ் இருக்கும் வீராவை தங்கள் மருமகனாக பார்க்க முடியவில்லை.அதோடு அவனிற்கு படிப்பு இல்லாதது பெரிய குறையாகவே பட அவர்கள் முடியாது என்றுவிட்டனர்.ஆனால் நந்தினி வீராவை தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்து திருமணமும் செய்து கொண்டாள்.

ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக தான் சென்றது.நந்தினி வீராவின் வீட்டுடன் பொருந்த முயற்சி செய்தாள் கற்பகமும் மருமகளை கையில் வைத்து தாங்கினார்.வீராவும் தன் மனைவியின் பின் குழந்தை போல் தான் சுத்துவான்.ஆனால் வீராவால் கணவனாக அவளை பரிபூரணமாக திருப்திபடுத்த முடியாமல் போனது.அது நந்தினிக்கு முதலில் பெரிதாக தெரியாமல் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அது ஒரு குறையாகவே தெரிய தொடங்கியது.இது குறித்து இருவரும் மருத்துவர்களை ஆலோசிக்க இதற்கு மருந்துகள் என்று கிடையாது மனதையும்,உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் நல்லது என்றுவிட்டனர்.

நந்தினி இதை தன் தாயிடம் புலம்ப அது தான் தவறாக போனது ஏற்கனவே தகுதியில்லாத இடத்தில் மகள் கஷ்டப்படுகிறாள் என்று கவலைப்பட்டு கொண்டிருந்தவருக்கு இது இன்னும் கோபத்தை மூட்ட அவர் வீராவின் வீட்டில் வந்து பெரிய பிரச்சனையே செய்துவிட்டார்.அதோடு வீராவை ஆண்மை இல்லாதவன் என்று கூறிவிட கற்பகம் வெகுண்டுவிட்டார்.

அவர் தன் மகனிற்காக பேச நந்தினியின் தாய் தன் மகளிற்காக பேச கடைசியில் பேச்சுகள் முற்றியதில் கற்பகத்தை நந்தினியின் தந்தை கோபத்தில் தள்ளிவிட அதுவரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த வீரபத்திரன் நந்தினியின் தந்தையை அடித்துவிட்டான்.அதன் பின் இருகுடும்பத்திற்கும் கைகலப்பாக மாறி போக,

“நீங்க யாருடா என்னை பத்தி பேச….என் பொண்டாட்டிக்கு தெரியும் வெளில போங்கடா….”என்ற வீரா நந்தினியிடம்,

“வா நந்தினி….”என்று அவளின் கைபற்றி அழைக்க,அவளோ அவன் கையை உதறிவிட்டு தன் தந்தையிடம் சென்றவள்,

“எவ்வளவு தைரியம் இருந்தா என் அப்பாவை அடிப்ப…..என்ன இல்லாதையா சொன்னாங்க எங்க வீட்ல….உன் கிட்ட குறையை வச்சிக்கிட்டு என் வீட்டு ஆளுகளை நீ அடிப்பியா….என் அப்பா அப்பவே சொன்னாரு என் தகுதிக்கு நீ சரியில்லாதவன்னு நான் தான் கேட்கல….இனி உனக்கும் எனக்கும் எதுவும் ஒத்துவராது…..”என்று அனைவர் முன்பும் கூறிவிட்டாள்.ஒரு ஆண்மகனாக அந்த இடத்தில் தோற்று போனதாகவே உணர்ந்தான் வீரா.இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் அவன் மனைவியின் கைகளை விட்டுவிட்டான்.அதுவரை வெளிச்சத்தில் சென்று கொண்டிருந்தவனின் வாழ்வு இருளை நோக்கி செல்ல தொடங்கியது.

நந்தினியின் தந்தைக்கு வீரா தன்மீது கை வைத்ததில் அத்தனை ஆத்திரம் அதனால் அவனை ஊராரின் முன் ஆண்மை அற்றவன் என்று கூறி  பரப்பிவிட அது ஊராரின் பேச்சு பொருளாக மாறியது.நந்தினி தன் தந்தை வீட்டிற்கு சென்ற அடுத்த வாரத்திலேயே விவாகரத்திற்கு நோட்டீஸ் அனுப்பினாள்.வீரா மனைவியை சமாதனப்படுத்த எவ்வளவோ முயன்றும் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல வீணாக அதோ இதோ மேலும் இரண்டு மாதங்கள் கழித்து தான் இருவருக்கும் விவாகரத்து என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது.அழகாக ஆரம்பித்த திருமண பந்தம் ஒரு வருடம் கூட நீடிக்காமல் முடிந்தும் போனது.

அந்த இரண்டு மாதங்களில் வீராவை ஒன்றுக்கும் லாயிக்கு இல்லாதவன் என்று ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கூறும்படி வைத்துவிட்டார் நந்தினியின் தந்தை.வெளிவுலகத்தை பொறுத்தவரை அனைத்தையும் கடந்து வந்துவிடுவது போல் காட்டிக் கொள்கிறான் வீரபத்திரன் ஆனால் தனிமையில் தன் பாரங்களை தனியாகவே சுமந்து சுமந்து தனக்குள் பாறை போல இறுகி போகிறான்.

சில நேரங்களில் உடல் நோய்க்கு மறுந்து நம் பிரியமானவர்களின் அன்பு தான்.அதேபோல் தான் வீரபத்திரனின் உடல்நிலையை நந்தினி நினைத்திருந்தாள் தேற்றி கொண்டு வந்திருக்க முடியும் ஆனால் அவளின் நிலையற்ற தன்மை அவளை பிரிந்து செல்ல உந்தி தள்ளிவிட்டது.தன் மனைவியே தன்னை ஆண்மையற்றவன் என்று கூறியதில் முற்றிலுமாக உடைந்துவிட்டான் வீரபத்திரன்.உயிரற்றவனாக வலம் வருகிறான் அதுவும் தன் அன்னைக்காக மட்டுமே.தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று முற்றுபுள்ளி வைத்துவிட்டான் ஆனால் கடந்து போவது தான் வாழ்க்கை என்பதை காலம் அவனிற்கு உணர்த்த போகிறது.

ஒருமுறை என் வாழ்வில் தோற்று போனால் என்ன எனக்கான வாழ்க்கை என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் வாழும் ஒருவள்,ஒருமுறை தோற்றுவிட்டேன் இனி எனக்கு எதிர்காலம் என்பதே கிடையாது என்று கூறும் ஒருவன் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!