வண்ண வண்ண புத்தாடைகள், நூற்றுக்கணக்கான பலகாரங்கள், கண்களைப் பறிக்கும் பரிசுப் பொருட்கள், அடுக்கடுக்காய் பட்டாசு வகைகள் என நிரம்பி வழிந்தது அந்தக் கடை. எஞ்சியிருந்த குறுகிய இடைகழிகளில் வாடிக்கையாளர்கள் எறும்புக் கூட்டமென ஊர்ந்து நகர,
“டிஸ்கவுன்ட் ஆஃப்ஃபர் இருக்கும்போது வாங்கினால் தானே நமக்கு லாபம். பேசாம வாங்க,” அதட்டி, “முதல்ல கம்பெனி ஸ்டாஃப்க்கு கொடுக்க வேண்டிய கிஃப்ட்ஸ் வாங்கிடலாம்,” என அவனை வலுக்கட்டாயமாகப் பரிசுப் பொருட்கள் குவிந்திருந்த பகுதிக்கு இழுத்துச் சென்றாள் ரம்யா.
பித்தளையிலான பூஜை பாத்திரங்கள், லட்சுமி தேவி விக்ரஹங்கள், மரப்பெட்டிகள் என வழிபாடு சார்ந்த பொருட்களின் தரத்தையும் விலையையும் ஆராய்ந்து அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தவளுக்குக் கடனே எனத் தலையாட்டிக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.
“ஷ்ர்வன்!!!” என்ற கட்டையான ஆண்குரலில் திடுக்கிட்ட இருவரும் திரும்ப,
Advertisement
“எப்படிடா இருக்குற? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து!” பற்கள் மின்ன நலன்விசாரித்தான் அந்த ஆடவன்.
Advertisement
“அட கௌதம்!” உற்சாகம் கொண்ட ஷ்ரவன், “என் காலேஜ் & ஹாஸ்டல் மேட் ரம்யா,” அறிமுகம் செய்து,
“ஷீ இஸ் மை வைஃப்,” என ரம்யாவின் தோளினைச் சுற்றி பெருமிதம் பொங்க அரவணைத்தான்.
“எதுக்கு ஓவரா யோசிக்குறீங்க. காலேஜ் மேட்ன்னு சொல்றீங்க. கல்யாணத்துக்கு வர மத்த ஃப்ரெண்ட்ஸையும் மீட் பண்ணா மாதிரி இருக்கும்ல,” அவன் கன்னத்தில் வருடினாள்.
வருடிக்கொடுக்கும் அவள் கரம் மேல் தன் கரம் வைத்தவன், “ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல ரம்யா. பானுவும் வருவா. அவன் சிஸ்டரும் பானுவும் க்ளாஸ்மேட்ஸ்,” என்றான் இமைகள் தாழ்த்தி.
“அப்போ கண்டிப்பா போகுறோம்!” வெடுக்கென்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.
“இல்ல ரம்யா. இன்னொரு முறை நீ இந்தமாதிரி குழம்பாம இருக்கணும்னுனா, உன் கற்பனைக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கணும்,” என்றவன், அவள் உம்மென்ற முகத்தை விரல்களில் குவித்து,
“இந்த ரம்யாதாசனின் காதலை நேரில் வந்து பாருங்க பொண்டாட்டி,” எனக் காதலாய் மொழிந்து அவளைத் தன்வசப்படுத்தினான்.
“அவதான் பானு. காருக்குள்ள ஏறிக்கிட்டது அவளோட அக்கா புருஷன் ரஹீம்,” ஷ்ரவனின் குரல் கரகரக்க, புறப்படும் ரஹீமுக்கு கையசைத்த படி நிறைமாத கர்ப்பினியாய் அவர்கள் பக்கம் திரும்பி காட்சியளித்து, இருவருக்கும் பேரதிர்ச்சியைத் வாரியிரைதாள் ஷர்மிலாபானு.
ஷர்மிலாபானு மண்டபத்தின் வாசலை நோக்கி நடக்க, விருட்டென காரைவிட்டு இறங்கிய ரம்யா, அவளை எட்டிப்பிடிக்க வேக எட்டுக்களை வைத்தாள்.
“குழந்தை, கலாச்சாரம்ன்னு சாக்கு சொல்லி உன் மாமன் நாடகமாடினது எல்லாம் உன்னை ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கத்தானா!” எடுத்த எடுப்பிலேயே பொங்கினாள் ரம்யா.
ஷர்மிலாபானு குழப்பத்தில் முழிக்க, “ரம்யா! வா போகலாம்!” குனிந்த தலை நிமிராமல் அவள் கையைப் பிடித்து இழுத்தான் ஷ்ரவன்.
“ஷ்ரவன்… நீயா…” ஷர்மிலாபானு கண்கள் அகல வினவ,
“நீங்க ஏன் பயப்படுறீங்க ஷ்ர்வன்,” சடாரென அவன் கை பிடியிலிருந்து விலகிய ரம்யா,
“தனக்குன்னு வாரிசே இல்லேனாலும் பரவாயில்லன்னு குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிட்ட இந்த உத்தமனோட தியாகத்தை மறந்து உங்களால எப்படித்தான் சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுதோ! ச்சீ!” முகம் சுருக்கினாள்.
“விடு ரம்யா,” வலிய இழுத்தான் ஷ்ரவன்.
ரம்யாவின் ஆவேசத்தில் அவள் காதலை மட்டுமே உணர்ந்தாள் ஷர்மிலாபானு.
ஷ்ரவனுக்கு அமைந்திருக்கும் நல்வாழ்க்கையை எண்ணி பூரித்தாள். அவளிடம் பேசவேண்டியது ஏராளம் இருக்கிறது என அசைபோட்டவள், தான் தங்கியிருக்கும் விடுதியின் விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதி,
“நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு இந்த அட்ரெஸ்க்கு வாங்க. நாங்க எப்படிச் சந்தோஷமா குடும்பம் நடத்துறோம்னு நேருலேயே பார்க்கலாம்,” காகிதத்தை ரம்யாவின் கையில் திணித்தாள்.
ரம்யா திடுக்கிட்டு மௌனம்காக்க, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட ஷ்ரவன், அவள் தோள்சுற்றி வளைத்து அரவணைத்தவாரு தன் வண்டியை நோக்கி நடந்தான்.
“நாலு மணிக்கு நீங்க வரலேன்னா, ஆறு மணிக்கு நானும் என் புருஷனும் உங்க வீட்டுக்கு வந்துடுவோம் மிஸர்ஸ். ஷ்ரவன்,” குரலை உயர்த்திய ஷர்மிலா, அவர்கள் வீட்டு விலாசத்தை பிசிரற்ற குரலில் உரைக்க, சிலையாக நின்றனர் ரம்யாவும் ஷ்ரவனும்.
அவர்கள் எதிரே வந்த ஷர்மிலா, “ஐ ஏம் வெரி சீரியஸ் அபௌட் இட். வந்தீங்கன்னா அதுவே முதலும் கடைசியுமான சந்திப்பா இருக்கும்,” அழுத்தமாகக் கூறி நகர்ந்தாள்.
“என்னால எங்கேயும் வரமுடியாது. உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்,” என வண்டியில் ஏறினான்.
மறுநாள் காலை வரை அவன் கோபம் கிஞ்சித்தும் தணியாத நிலையில்,
“அம்மா! இன்னைக்கு காலேஜ்லேந்து அப்படியே ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டுவரதா இருக்கேன். வர எட்டுமணியாகிடும்,” மாமியாரிடம் பொய்காரணம் கூறும் சாக்கில் தன் முடிவை கணவனிடம் மறைமுகமாகத் தெரிவித்தாள் ரம்யா.
கல்லூரி முடிந்து வாசலுக்கு வந்தவள், ஷ்ரவனைக் கண்டதும் வியந்துபோனாள்.
அவள் வண்டியில் ஏறியும் அவன் அமைதிகாக்க,
“இப்ப மட்டும் ஏன் வந்தீங்களாம்,” என முகம் சுருக்கினாள்.
“நல்லதோ கெட்டதோ, என் பொண்டாட்டிக்காக நான்தானே முதல் ஆளா நிக்கணும்,” இறுகிய குரலில் அவன் பதிலுரைக்க,
“உங்க பேச்சு கேட்காதது தப்புதான்,” வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவள் முகபாவனையில் கோபமெல்லாம் மாயமாக, “இனிமேலாவது என் பேச்சைக் கேளு,” என அவள் தலையில் வருடினான்.
அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியின் மூன்றாம் தளத்தை நோக்கி மின்தூக்கி மேலேற,
“அவ என்ன சொன்னாலும் ரியாக்ட் பண்ணிக்காத; அடென்டென்ஸ் போடுறோம்; கிளம்புறோம்,” நினைவூட்டினான் ஷ்ரவன்.
மடமடவென மண்டையை ஆட்டினாள் ரம்யா.
விலாசத்தில் குறிப்பிட்டிருந்த அறையில், முன்பின் தெரியாத ஒருவரைக் கண்டதும், “இங்க பானு… ஐ மீன்… ஷர்மிலாபானு,” தயங்கினான் ஷ்ரவன்.
இருவரும் திருதிருவென முழிக்க, கணவரின் கை இடுக்கில் தன் கைகளைப் பின்னிக்கொண்ட ஷர்மிலாபானு, “என்ன மிஸர்ஸ். ஷ்ரவன், நானும் என் புருஷணும் சந்தோஷமா குடும்பம் நடத்துறோமா இல்லையா?” நமுட்டுச் சிரிப்புடன் கண்சிமிட்டி சீண்டினாள்.
குழப்பம் கப்பிய விழிகளுடன் இருவரும் திணறி நின்றனர்.
“விளையாடினது போதும் ஷர்மி,” என மனையாளிடமிருந்து விலகி நின்றவன், “ரஷீத்! ஷர்மிலாவின் பெட்டர் ஹாஃப் & ரஹீமோட தம்பி,” அறிமுகம் செய்துகொண்டான்.
அனைத்தையும் உள்வாங்க அவர்களுக்குச் சில நிமிடங்கள் ஆனது. அச்சமயம் வசிப்பறைக்கு வந்த ரஹீம்,
அவன் ஆறடி உயரத்தையும் ஆஜானுபாகுவான தோற்றத்தையும் பார்த்து மிரண்ட ரம்யா, கணவனை நசுக்காத குறையாக அவன் புஜத்தில் ஒட்டிக்கொண்டாள்.
அவளை வாஞ்சையாக அரவணைத்த ஷ்ரவன், “என் வைஃப்க்கு எங்க பிரேக் அப் பத்தி எல்லாமே தெரியும் ரஹீம்… அதான் உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் பார்த்ததும்… நீங்க பானுவ… ஐ மீன் ஷர்மிலாவை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுகிட்டீங்கன்னு நெனச்சு சட்டுன்னு கோபப்பட்டுட்டா,” கைகூப்பி மன்னிப்பை யாசித்தான்.
“ஹாஹாஹா!” பெருங்குரலில் சிரித்தவன், “அவளை டிராப் பண்ண மட்டும்தான் அங்க வந்தேன் மிஸர்ஸ். ஷ்ரவன். மற்றபடி ஏமாத்துறது, சீண்டுறது, லவ் டார்ச்சர் கொடுக்கிறது எல்லாம் இந்த நல்லவன்தான்,” என தம்பியின் தோளில் செல்லமாக அடிக்க, அழகாய் அசடுழிந்தான் ரஷீத்.
ரம்யாவின் முகத்திலும் ஒரு வழியாக புன்னகை மலர,
“என் பொண்ணுங்க ரெண்டுபேரும் ப்ளே ஏரியால விளையாடிட்டு இருக்காங்க. உங்கள சந்திக்க வந்தேன். ரொம்ப நேரம் தனியா விடமுடியாது. நீங்க பேசிட்டு இருங்க,” கனிவாகப் பேசி அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்தான் ரஹீம்.
வீணாகப் பழித்துப் பேசிவிட்டேனே எனக் குற்றவுணர்ச்சியில் ரம்யாவும், தர்மசங்கடத்தில் ஷ்ரவனும் தயங்கி நிற்க, ஷர்மிலாபானுவே அங்கு நிலவிய மௌனத்தைக் களைந்தாள்.
“உங்கள சொல்லி, தப்பில்ல மிஸர்ஸ் ஷ்ரவன். ரஷீதோட கல்யாணம்னு வீட்டுல எல்லாரும் பிடிவாதமா இருந்தபோது, அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஏமாத்துறாங்களேன்னுதான் இருந்துது. ஆனால் போகப்போகத்தான் அவங்க எனக்காக எந்தளவுக்கு யோசிச்சிருக்காங்கன்னு புரிஞ்சுது,” கணவன் தோளில் வருடிய ஷர்மிலாபானு,
“இந்த உண்மைகளை உடனே சொல்லணும்னுதான் இருந்துது. ஆனால் மேடமிருந்த நிலையில் நான் சொல்லப்போகுற எதையும் நம்பமாட்டீங்கன்னு புரிஞ்சுது. அதான் மிரட்ட வேண்டியதா போச்சு,” என அசடுவழிந்தாள்.
“ரம்யா,” அறிமுகம் செய்துகொண்டு அளவாய் புன்னகைத்தாள் ரம்யா.
பானுவிற்கு அமைந்திருக்கும் நல்வாழ்வை எண்ணி மனத்தில் நெகிழ்ந்தான்.
“இப்பவாவது மனசவிட்டுப் பேசிக்கலாமே,” இருவரையும் இருக்கையில் அமருமாறு கண்கள் சுருக்கி கெஞ்சினாள் ஷர்மிலாபானு.
ரம்யா, ஷ்ரவனின் விருப்பத்தை அறிய அவனை ஏறிட, ‘உட்காரலாம்,’ எனக் கண்ணசைத்தான் ஷ்ரவன்.
“நமக்கு பிரேக்கப் ஆனது தெரிஞ்சதும் ரஷீத், குழந்தைகளை நாங்க வளர்த்துக்குறோம்னு சொல்லி, என்னை உன்னோட சமரசமா போகச் சொன்னாரு ஷ்ரவன். அப்பா பிஸினஸ்ன்னு கொடிப்பிடிக்குற உனக்காக நான் ஏன் தழைஞ்சுபோகணும்னு மாட்டேன்னு சொல்லிட்டேன்.
குழந்தைகளை யார் வளக்குறதுன்னு நாங்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமா சண்டைபோட, நாங்க கல்யாணம் செஞ்சிண்டா மட்டும்தான் இனி குழந்தைகளைக் கண்ணுல காட்டுவேன்னு மாமா தீர்மானமா சொல்லிட்டாரு,” ஷர்மிலாபானு இடைநிறுத்த, ரஷீத் தொடர்ந்தான்.
பதிலுக்குச் சிரித்தவள், “பின்ன என்ன! இவர் ஓகே சொல்லி எல்லார் கிட்டயும் நல்லபேரு வாங்கிட்டாரு. காதல் தோல்வியில் தவிக்கும் என் வலியை யாருமே புரிஞ்சுக்க முயற்சி செய்யல. எல்லாரும் என்னை கார்னர் பண்றமாதிரி இருந்துது. இவ்வளவு பிடிவாதம் ஒரு பொண்ணுக்கு நல்லதில்ல; இதனாலத்தான் உன் லவ்வரும் உன்னைவிட்டு எஸ்கேப் ஆகிட்டான்னு சொந்தகாரங்க ஆளாளுக்கு புரளி பேச ஆரம்பிச்சிட்டாங்க,” பெருமூச்சுவிட,
அவள் சுபாவம் அறிந்திருந்த ஷ்ரவனும் ரஷீதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
“வலிக்குதுடி,” பொய்கோபம் கொண்டவன், “எல்லாரும் போட்ட ப்ரெஷர்ல கல்யாணத்துக்குச் சம்மதிச்சவ, ‘இவளை ஏன் கல்யாணம் செஞ்சுகிட்டேன்னு உன்னை தினம் தினம் ஃபீல் பண்ண வைக்கிறேன் பாரு’ன்னு வார்னிங்க் மெசேஜோட என் வாழ்க்கையில் டெரர் என்ட்ரி கொடுத்தாங்க,” என இன்னும் அழகாய் சிரித்தான்.
“என்ட்ரி மட்டும்தான் டெரர்; கல்யாணமான ரெண்டே நாளுல ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்லி என் மனசைக் கொள்ளை அடிச்சிட்டாரு,” ஷர்மிலாபானு நெளிய,
“அதே ரகசியத்தை இப்போ உங்க ரெண்டுபேர் கிட்டயும் சொல்லி உங்க மனசையும் கொள்ள அடிக்கப்போறேன்,” குறும்பு செய்தான் ரஷீத்.
இருவரின் விழிகளிலும் ஆர்வம் மேலோங்க, கண்கொட்டாமல் காத்திருந்தனர்.
“இதுக்கு முன்னாடி நாம சந்திச்சிருக்கோம் ஷ்ரவன். உங்களுக்கு என்னை நியாபகமில்லையா,” பொடிவைத்துப் பேசினான்.
“ம்ஹூம்,”
“காதலைத் தக்கவச்சுக்க, நீங்க எடுத்த முட்டாள்தனமான முடிவுக்கு ட்ரீட்மென்ட் செய்த டாக்டர் நான்தான்,” ரஷீத் சொல்லவும், பேரதிர்ச்சியும் அவமானமும் முட்டிமோத தலைகுனிந்தான் ஷ்ரவன்.
“உங்கள சத்தியமா நியாபகமில்ல ரஷீத். அந்தச் சமயத்துக்கு அது முட்டாள்தனம்ன்னும் எனக்குத் தெரியல,” கண்கலங்க, ரம்யாவின் கைவிரல்களைக் கோத்துக்கொண்டான்.
“செய்யறது சரியா தவறான்னு நீங்க வேணும்னா புரிஞ்சுக்குற மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு டாக்டரா, என் பேஷன்ட்க்கு எது சரி எது தவறுன்னு தெளிவா சிந்திக்கிற பக்குவமும் நிதானமும் எனக்கு ரொம்ப ரொம்ப அவசியம்,” ரஷீத் கூறவும்,
“அப்படின்னா,” அதிர்ந்தான் ஷ்ரவன்.
“நீங்க கேட்ட சர்ஜரியை செஞ்சதா சொல்லி பொய் ரிப்போர்ட் தந்து உங்களை வீட்டுக்கு அனுப்பிட்டேன்,” என மென்னகைத்தான்.
வெட்கம் கலந்த சிரிப்புடன் ரம்யா இமைகள் மூடித் தலையசைக்க,
“எங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷாச்சுன்னு உனக்கு யாரு சொன்னா பா… ஷர்மிலா?” தலையே வெடித்துவிடும் போல இருந்தது ஷ்ரவனுக்கு.
“ஷர்மிலானே கூப்பிடுடா,” அவன் தயக்கத்தைக் களைந்தவள் ரம்யா பக்கம் திரும்பி,
“என்னை பானுன்னு கூப்பிட்டிடக் கூடாதுன்றதுல அவன் காட்டுற அக்கறையிலேயே அவன் உங்கமேல எத்தனை அன்பு வச்சிருக்கான்னு புரியுது ரம்யா,” பூரித்தவள் தன்னவனின் பெருந்தன்மையை விவரித்தாள்.
“ஷ்ரவன் விஷயத்தில் ரஷீத் செஞ்சதைக் கேட்டதும் எனக்கு அவர்மேல பெரிய மரியாதை ஏற்பட்டுது. ஆனால் அவருக்கு ஒரு மனைவியா நடந்துக்கு முடியாதபடி, மனவுளைச்சலில் தவிக்கும் ஷ்ரவனோட நினைவுகள் வந்து வாட்டியெடுக்கும்.
அப்போதான் ரஷீத்… ‘ஷ்ரவனோட வாழ்க்கையிலும் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டால் உன்னோட இந்த கில்டி ஃபீலிங்க் தானா மறைஞ்சிடும். அது வரைக்கும் லெட்ஸ் ஜஸ்ட் பி ஃப்ரெண்ட்ஸ்’ன்னு எனக்கான ஸ்பேஸ் கொடுத்தாரு,” கண்ணீர் மல்க உரைத்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“உண்மைதான் என ஆமோதித்த ரம்யா, “மனசவிட்டுப் பேசிக்க முடியுற நம்மளுக்கு நிதர்சனத்தை ஏத்துட்டு சகஜமா உறவாடுற மனப்பக்குவமும் இருக்கும்ன்னு நம்புறேன். இதுதான் என் செல் ஃபோன் நம்பர் ஷர்மிலா,” மனமுவந்து நட்பு பாராட்டினாள்.
மடமை என்னை ஆட்கொள்ள, மன்னிப்பே இல்லாத பாவங்களைச் செய்தேன் – நல்ல மனிதர்களின் ரூபத்தில் தெய்வம் தடுத்தாட்கொள்ள, மறுவாய்ப்பையும் தவறவிட்டு பிராயச்சித்தம் யாசிக்கிறேன்!
சோகங்கள் அனைத்தையும் உள்ளத்தில் பூட்டி, சந்தோஷங்களை மட்டும் அள்ளி அள்ளித் தரும், சரிபாதியே! உன் சங்கடங்களைத் தீர்க்க -விடை தேடுகிறேன் சிந்தையில் நிழலாடும் நின் நினைவில்….