Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 14

ரிதம் 14

“சொல்லு நத்தாஷா”? என்று அவன் கேட்க.



Advertisement

அவள் நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்.

“ரிலாக்ஸ், உனக்கு திருமணமானது அங்க இருந்த பத்து பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அந்தக்கோயில் பிராப்பரா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ற கோயிலும் இல்லை. உங்க மேரேஜை நீங்க ரிஜிஸ்டர் பண்ணல. தாலி கட்டின அடுத்த நிமிஷம் ட்ரங்க் அண்ட் டிரைவ் ஆக்சிடென்ட்ல கட்டினவன் இறந்துட்டான். அந்த ஒரு மணி நேரத்துக்கு நீ அவனோட மனைவியா”? என்று கௌதம் கேட்க, அவள் தடுமாறிப் போனாள்.

Advertisement

Advertisement

“திருமணத்துக்குக் கூட குடிச்சிட்டு வர ஒரு ட்ரங்க் அண்ட் டிரக் அடிக்ட்டை தான் உங்க அப்பா உனக்குக் கட்டி வச்சாரு. உங்க அப்பாவோட ஃபிரெண்ட்ஷிப்பை அவரோட ஃபிரெண்ட் மிஸ்யூஸ் பண்ணியிருக்காரு. நியாயமா நீங்க கேஸ் போட்டிருக்கணும். ஆனா, எங்க தாத்தா சொத்து பேரனுக்கு, பேரன் இறந்துட்டதனால, அவன் மனைவிக்கு வந்துடப் போகுதுன்னு பயந்து, பிராப்பர்ட்டீஸ்ல எங்க நீ ஷேர் கேட்கப் போறியோன்னு உனக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்லிட்டாங்க.”

“பையனே இறந்துட்டான், அதனால அவங்களுக்கு பிராப்பர்ட்டி தேவைப்பட்டது. பையனை இழந்த துக்கத்தைவிட, பிராப்பர்ட்டியை காப்பாத்தணும்ன்ற எண்ணம் அதிகமா இருந்துச்சு. சோ, குடிச்சிட்டு வண்டி ஓட்டி செத்துப்போன அவங்க பையன் மேல இருந்த தப்பை மறைச்சு, உன் மேல ராசி இல்லாதவனு பட்டம் சூட்டி உன்னை அவங்க ஓரம் தள்ளிட்டாங்க. இன்ஃபேக்ட், அவங்க வீட்டுக்கே உன்னை கூட்டிட்டுப் போகல, அவங்க வீடு எங்க இருக்குன்னு கூட உனக்குத் தெரியாது.”

Advertisement

“உன் அம்மா வீட்டிலருந்து வந்த மாதிரி, திரும்பவும் உன் அம்மா வீட்டுக்கே போயிட்ட. அப்படியும் கேள்வி கேட்கப்போன உன் அப்பாகிட்ட, என் பையனுக்கு கல்யாணமே ஆகலைன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணிட்டாங்க. அந்த இத்துப் போன தாலியையும் வாங்கிட்டு போயிட்டாங்க. அவங்களே அவங்க பையன் கட்டின தாலிக்கு மரியாதை கொடுக்காதபோது, நீ எதுக்காக அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற?? அதுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இல்லைன்னு அவங்களே உணர்த்திட்ட பிறகு, நீ எதுக்கு இன்னும் மிஸஸுன்ற நேம் போர்டை மாட்டிட்டு சுத்துற”? அழுத்தமாக முடித்தான் கௌதம்.

அவள் அதிர்ந்து நிற்க, அருகில் இருந்த ப்ரீத்திக்கும் அதே அதிர்ச்சி தான்.

நத்தாஷாவின் விஷயத்தை அவள்தான் கூறினாள். ‘ஆனால், இவ்வளவு விளக்கங்களை இவன் எங்கே கண்டறிந்தான்?? ஆராய்ந்து தெரிந்து கொண்டானா? அல்லது விடுபட்ட வாக்கியங்களை அவனே கற்பனையாக நிரப்பிக் கொண்டானா?? ஆனால், நேரில் இருந்து பார்த்தது போல தத்ரூபமாக அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறானே?? கண்டிப்பாக இவன் அறிந்து தெரிந்து கொண்டுதான் பேசுகிறான்’ என்று நினைத்தாள் ப்ரீத்தி.

“என்ன ரெண்டு பேரும் பேய்விழி விழிக்கிறீங்க?? நான் சொல்றதெல்லாம் சரிதானே? ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா? இல்ல எதையாவது கூடக் குறைச்சலா சொல்லிட்டேனா”? என்று நிதானமாகக் கேட்டான் கௌதம்.

அவள் ‘ஆமாம்’ என்று தலையாட்டினாள்.

“உனக்குக் கொஞ்சம் கூட வேல்யூவே கொடுக்காம, உன்னைப்பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாம, இழப்பு உனக்கும் தான்னு கொஞ்சம் கூட யோசிக்காம, உன் அப்பா சாவுக்கும் காரணமானவங்களுக்காக நீ உன்னுடைய பெயருக்கு முன்னாடி மிஸஸ் போட்டுக்கப்போறியா?. அந்தக்குடும்பம் உன்னை ஏத்துக்கல. லீகலாவும் உனக்குச் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எந்த உரிமையில மிஸஸ்னு சொல்லச் சொல்ற??” என்று அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் பதில் இல்லை. அதிர்ச்சி விலகாமல் இருவரும் அவனைப் பார்த்திருந்தார்கள்.

“ஓகே ஃபைன், லீவ் இட். இந்த நல்ல நேரத்துல பழசு எல்லாத்தையும் கிளறி ஞாபகப்படுத்த வேண்டாம். நீ ஒரே நேரத்துல உன் அப்பா, உன்னோட சந்தோஷம், உன்னோட லைஃப் எல்லாத்தையும் இழந்திருக்க. உன்னோட அப்பாவை என்னால மீட்டுக்கொடுக்க முடியாது. ஆனா, உன் அம்மா, உன் தங்கச்சி, உன்னோட சந்தோஷம் இது எல்லாத்தையும் என்னால மீட்டுக்கொடுக்க முடியும். இந்தச் சங்கீதம் உன்னை அதிலிருந்து மீட்டு எடுத்துட்டு வரும்”என்றான்.

 ‘ஆமாம் அது உண்மைதான். நான் மீண்டு வந்து தான் ஆக வேண்டும். தேங்கி நிற்கக்கூடாது. அதுவும் இந்த சங்கீதத்தின் உதவியுடன்’ அவள் மனதினில் அதை உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்புறம் நீ என்னைவிடச் சின்ன பொண்ணுதான். சோ, வாங்க போங்கன்னு சொல்ல விருப்பப்படல. நீ, வா போன்னு கூப்பிடுறேன். நீயும் அப்படி என்னைக் கூப்பிடலாம், எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. அப்பத்தான் உரிமையா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறினான்.

அவள் சரி என்பது போலத் தலையாட்டினாள்.

“ஆனா கௌதம் சார், உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் எப்படித் தெரியும்?? நேர்ல பார்த்தது போல சொல்றீங்களே”? மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள் ப்ரீத்தி.

“ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா தெரிஞ்சுக்கலாம் மிஸஸ் ப்ரீத்தி. உங்க ஃபிரெண்டுக்குச் சொல்லுங்க, அவங்க மிஸ்தான்னு. அதைச் சொல்லிச் சொல்லி அவங்க மனசுல பதிய வைங்க. என் கூட சேர்ந்துட்டாங்கள்ள, இனி அவங்களுக்கு எல்லாம் ஏறுமுகமாதான் இருக்கும். அடிக்கடி பேட்டி கொடுக்க வேண்டியதா இருக்கும். இனிமே அவங்க எப்பயுமே மிஸ் நத்தாஷாவாதான் இருப்பாங்க. இவங்க கண்டிப்பா டாப் சிங்கரா வருவாங்க. அப்ப இவங்களை வீட்ல கூடச் சேர்த்துக்காத அந்தச் சொந்தக்காரங்க தேடி வரலாம். இராசி இல்லாதவனு ஒதுக்கி வச்சவங்களும் தேடி வரலாம். இவங்களுக்கு இனிமே பணம், புகழ், பேர் எல்லாம் கிடைக்கும்னு தங்களோட மருமகள்னு சொல்லிக்கவும் நினைக்கலாம். ஆனா, அதுக்கான எந்த எவிடன்ஸும் இல்லை, எல்லாத்தையும் நெருப்பு வச்சு அவங்கதானே அழிச்சாங்க. உங்க ஃபிரெண்டையும் அதை அக்செப்ட் பண்ணிக்க வேணாம்னு சொல்லுங்க” அவன் தன் பாட்டிற்குப் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் அதிர்ச்சி விலகாமல் நின்றனர்.

ஆனால், அவன் சொல்வதில் நியாயம் இருப்பதாகத்தான் தோன்றியது ப்ரீத்திக்கு. அசரீரி போலவும் தோன்றியது.

“ஓகே கய்ஸ்” என்று கைதட்டினான் கௌதம். ஆங்காங்கே இருந்தவர்கள் எல்லாம் கௌதம் அருகில் வந்து நின்றார்கள்.

“உங்கள்ள நிறைய பேருக்கு நத்தாஷாவைத் தெரிஞ்சிருக்கும், சில பேருக்குத் தெரிஞ்சிருக்காது. ஒரு போட்டியோட கண்டஸ்டன்ட்டா மட்டும் இல்லாம, நம்ம அகாடமிக்கு வந்து போனவங்கன்ற சார்புல சில பேருக்குத் தெரியும். இவங்களோட அறிமுக படலம் முடிஞ்சிடுச்சா?? இல்ல நான் நடத்தணுமா”? என்று கேட்டான்.

“முடிச்சிட்டேன் சார். நீங்க வர்றதுக்கு முன்னாடி கீழே லாபியிலேயே நாங்க எல்லாம் பார்த்துப் பேசிட்டோம். ஒருத்தரையொருத்தர் இண்ட்ரடியூஸும் பண்ணிக்கிட்டோம்” என்று கூறினான் ஸ்ரீதர்.

“தட்ஸ் குட்” என்றவன், அவள் புறம் திரும்பினான். “நத்தாஷா, இதுதான் நம்மளோட மியூசிக் அகாடமி. முதல்ல இன்னைக்கு இது எல்லாத்தையும் சுத்திப் பாருங்க. இவங்களோட பேசிப் பழகுங்க, ரெஸ்ட் எடுத்துக்குங்க. நாளையிலிருந்து பிராக்டிஸ் வச்சுக்கலாம். அப்புறம் எல்லாருக்குமே லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருக்கு, சாப்பிட்ட பிறகு போகலாம். அப்புறம் நீங்க பொறுமையா சுற்றிப் பாருங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றான் கௌதம்.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர் இருந்தார்கள். அதில் பத்து பேர் பாடகர்கள், மற்றவர்கள் எல்லாம் மியூசிஷியன்ஸ்.

சரியாக அவனுடைய தாயும் உணவு நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார். உணவும் அவர்கள் வீட்டில் இருந்துதான் கொண்டுவரப்பட்டிருந்தது. விருந்து போலத் தடபுடலாக இருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் அந்த மியூசிக் அகாடமியில் வேலை செய்பவர்கள், ரிசப்ஷனிஸ்ட், கணக்கு வழக்குகள் பார்ப்பவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் என்று இன்னும் இருபது பேருக்கு மேலே இருந்தார்கள். எல்லோரும் எந்தப் பாகுபாடும் இன்றி ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அதற்காகவே தனிப்பட்ட அறை பெரிய டேபிள் சேருடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பொருத்தமாக இருந்த அதை கவனித்துவிட்டுப் பெருமையாகப் பேசினாள் நத்தாஷாவிடம் ப்ரீத்தி.

“சார், உங்க அப்பா வரலையா”? என்று கேட்டாள் ப்ரீத்தி. நிருபர் சொன்னது வேறு அவள் மண்டையைக் காய்த்துக் கொண்டிருந்தது. அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது என்றுதான் தெரியவில்லை??

அவன் சிரித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையாட்டினான்.

‘தப்பா கேட்டுட்டேனா?? ஒருவேளை அப்பா இல்லையோ”? சங்கடமாக உணர்ந்தாள் ப்ரீத்தி.

“இல்லல்ல, கௌதம் சாருக்கு அப்பா இருக்காரு. ஆனா அவரோட இல்லை, தனியா இருக்காரு” என்றான் ஸ்ரீதர்.

அவளும் அப்படித்தான் நினைத்தாள். இறந்துவிட்டதாக நினைக்கவில்லை. அதுதான் இப்பொழுது தொலைக்காட்சி நிருபர் கேள்வி கேட்டாரே?? அவர்களுக்குள் ஏதாவது பூசலாக இருக்குமோ என்றுதான் நினைத்தாள்.

“அப்படியா? ஏன் தனியா இருக்காங்க”? ப்ரீத்திக்குக் கதை கேட்கும் ஆர்வம் கூடியது. அவள் தொடையைப் பிடித்துக் கிள்ளினாள் நத்தாஷா.

“இல்லடி, கௌதம் சார்தான் இப்ப ஒன்னுக்குள் ஒன்னு ஆயிட்டாருல்ல?? அவரைப் பத்தி எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிறதுல தப்பு இல்லையே?? அதுவும் அந்தப் பேட்டி எடுக்கிறவன் வேற எதையோ சொன்னானே?? அது என்னனு தெரிஞ்சுக்கணும்” என்று அவள் கூறும்போது அது அவன் காதிலும் விழுந்தது. சற்று அருகேதான் அமர்ந்து கொண்டிருந்தான். உணவு முடியும் வரை அமைதியாக இருந்தவன்,

பிறகு அவரவர் தனித்தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தவன், சேரை இழுத்து அவர்கள் அருகில் போட்டபடி அமர்ந்தான்.

“சொல்லு ப்ரீத்தி?? என்ன தெரிஞ்சுக்கணும் என் அப்பாவைப்பத்தி”? என்று நேரடியாகக் கேட்டுவிட்டான்.

அவளுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. “இல்லை சார், சும்மா தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன். இப்ப வேண்டாம்” என்றாள் ப்ரீத்தி.

“இது ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை ப்ரீத்தி. இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும். ஏன், பேட்டி எடுக்கிறவங்களுக்கும் தெரியும், தெரிஞ்சிருந்ததால தான் கேட்டாங்க. அதனாலதான் அவங்களுக்குப் பதில் சொல்லல. அப்பா செய்யறது பிடிக்கல, அதனால நான் தனியா வந்துட்டேன். அம்மா எனக்குத் துணையா வந்துட்டாங்க. எனக்கும் அப்பாவுக்கும் நடுவுல அம்மாதான் பாவம் ஊசலாடிக்கிட்டு இருக்காங்க. அப்பா பகல்ல சேனல் ஆபீஸ்ல இருப்பாரு, சோ வீட்ல இருக்க மாட்டாரு. அதனால என்னைப்பார்த்துக்க வந்துடுவாங்க. அப்புறம் ஈவினிங் போல அவங்க வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க” என்று புன்னகையோடு கூறினான் கௌதம்.

“அப்படியா?? யாரு சார் உங்க அப்பா?? எதுக்கு உங்க அப்பா செய்யுறது உங்களுக்கும் பிடிக்காம போச்சு”? மேலும் சுவாரசியமாகக் கேட்டாள் ப்ரீத்தி.

“சொன்னா நீங்க அடிக்க வரமாட்டீங்களே”? என்று அவன் லகுவாகச் சிரித்துக்கொண்டே கேட்க,

“என்ன சார்?? நாங்க எதுக்கு சார் உங்களை அடிக்க வரப்போறோம்”? என்றார்கள் இருவரும் கோரஸாக.

“சரிகமபதநி இந்தியாவுக்கான குரல் தேடல், இதை நடத்துற இந்தச் சேனலோட, ஐ மீன் நிலா டிவியோட சேர்மன்தான் என்னோட அப்பா மிஸ்டர் ஆதிகேசவன்” என்று முடித்ததும்,

அதைப்பற்றித் தெரியாத பலர் எழுந்து நின்றனர். அதில் ப்ரீத்தியும் நத்தாஷாவும் அடக்கம். தெரிந்தவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

நிருபர் கேட்கும்போதே சந்தேகம்தான், ஆனாலும் அவன் பதிலளித்தது சிலருக்குப் புரியவில்லை, அவர்கள் உட்பட.

“சார், என்ன சார் சொல்றீங்க?? உங்க அப்பாவுக்கு எதிராவா நீங்க இதெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க”? என்று ப்ரீத்தி கேட்க,

“நான் எங்க அப்பாவுக்கு எதிரா பண்ணல, அவர் பண்ற தப்புகளைத்தான் சரி பண்றேன்” என்றான்.

“சார், நீங்க உங்களுடைய இன்ஃப்ளூயன்ஸ் வச்சு இன்னும் பெரிய ஆளா வந்திருக்கலாமே?? இத்தனை வருஷம் மியூசிக் ட்ரூப் ஆரம்பிச்சு கஷ்டப்பட்டு மேல வந்திருக்கீங்க”? என்று கேட்டாள் திவ்யா.

“எனக்கு அந்தச் சேனல்ல நடத்துற எந்தப் புரோகிராமும் பிடிக்காது. எல்லாமே கமர்சியல் மோட்டிவோட இருக்கும். மனித மனங்களோடு விளையாடுறது பிடிக்காது. அதனால சண்டை போட்டுட்டு அப்பாகிட்டயிருந்து வெளிய வந்துட்டேன். அந்தப் பங்களா என் தாத்தா எனக்கு எழுதிக் கொடுத்தது. அங்க நான் எனக்கும்னு தனிப் பாதையை அமைச்சுக்கிட்டேன். எனக்கு மியூசிக்ல சின்ன வயசுல இருந்தே இன்ட்ரஸ்ட் இருந்தது. ஒரு பெரிய மியூசிக் டைரக்டர்கிட்ட அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ணியிருக்கேன். அப்பாவோட இன்ஃப்ளுயன்ஸ்ல எல்லாத்தையும் பண்ணியிருக்கலாம், பட் நான் என் சொந்தக் கால்ல முன்னேறணும்னு நினைச்சேன். இங்க மியூசிக் ட்ரூப்ல இருக்கிற எல்லா மியூசிஷியனுக்கும் அது தெரியும். அவங்களை முதல்ல ஃபார்ம் பண்ணினேன், அதுதான் எனக்கு ரொம்ப ஸ்ட்ரகிளா இருந்தது.”

 “அதுக்கப்புறம் எங்க அப்பாவோட சேனல்ல வர்ற இந்த புரோகிராம்ல பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவங்களை தேர்ந்தெடுத்து அவங்களை என் ட்ரூப்புக்குள்ள இணைச்சேன். உங்க எல்லாருக்கும் வாழ்க்கையோட போராடணும், அதுல ஜெயிக்கணும்னு ஒரு உந்துதல் இருந்தது. அதனால இந்த மகாலட்சுமி அகாடமி உருவாச்சு. உங்களையெல்லாம் என் கூடவே மேல ஏத்தணும்னு நினைச்சேன். இப்ப நீங்களும் ஷைன் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க” என்று பெருமையாகக் கூறினான்.

“சார், நீங்க உண்மையிலேயே கிரேட்தான். இவ்வளவு பெரிய பணக்கார வீட்டுல பிறந்தும் சாதாரணமா இருக்கீங்க, போராடி மேல வந்திருக்கீங்க. உங்க அப்பாவோட இன்ஃப்ளுயன்ஸ நீங்க உபயோகப்படுத்தவே இல்லை. இந்தச் சினி இண்டஸ்ட்ரில பேக்கிரவுண்ட் இல்லாமல் யாராலயும் மேல வர முடியாது. ஆனா, நீங்க மேல வந்ததில்லாம, இங்க இருக்கிற எல்லாரையும் மேல கொண்டு வந்திருக்கீங்க. உண்மையிலேயே இது பெரிய விஷயம் சார்” என்று ஸ்ரீதர் கூற,

அதுவேதான் நத்தாஷாவின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!