Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 10

ஆகாயமே  என் ஆதாரமே 10

கிருஷ்ணன்  வார நாளில் ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து இருந்தார். மகள் ராகவனை பிடித்து இருக்கிறது என்று நேரடியாகவே சொல்லிவிட்ட பிறகு இன்னமும் தாமதம் செய்வதற்கு பெற்றவர்களுக்கு விருப்பமில்லை  ,மகள் அலுவலகம் சென்ற பிறகு ராகவனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து தாங்கள் இன்று நேராக வந்து பேசுவதாகவும் வீட்டில் இருக்கிறீர்களா என்றும் கேட்டுக்கொண்டார் கிருஷ்ணன் ,’ தாங்கள் இன்று நேராக வந்து பேசுவதாகவும் வீட்டில் இருக்கிறீர்களா’ என்றும் கேட்டுக்கொண்டார் கிருஷ்ணன்.அன்று  தினசரி காலண்டர் எடுத்து நல்ல நேரம் எத்தனை மணிக்கு என்று பார்த்தாள் ராதா.

அதன்படி ,அவர்கள் வீட்டில் காலை பதினோரு மணி சுமாருக்கு வருவதாக சொல்லிவிட்டு இருவரும் தயாராக ஆரம்பித்தார்கள்.

காலை 11:00 மணி அளவில் ராதாவும் கிருஷ்ணனும் ராகவனின் வீட்டில் அமர்ந்திருந்தார்கள் ராகவன் அலுவலகம் கிளம்பி சென்று இருந்தார் காலை 8:30 மணிக்கு எல்லாம் ராகவன் அலுவலகம் கிளம்பி விடுவது தான் அதற்கு பிறகு தான் கிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து பேசியது அதனால் ராகவனுக்கு இவர்கள் வருவது பற்றி ஒன்றும் தெரியாது ராகவனின் வீடா வீடு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட கொஞ்சம் பழைய  வீடு .  புதியதாக பெயிண்ட் செய்திருந்தார்கள்.



Advertisement

“மூணு வருஷத்துக்கு ஒருமுறை வீட்டை பெயிண்ட்  செஞ்சிடணும்னு என்னோட வீட்டுக்காரர் சொல்லுவாரு.இப்போ வரைக்கும் அதை நாங்க செஞ்சுகிட்டு வரோம். அப்போதான் நீடிச்சு இருக்கும்”என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ராகவனின் அம்மா. அதில் கணவர்மீதான மரியாதையும் பாசமும் வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டார் கிருஷ்ணன். அது அடுக்ககம் இல்லை.தனிவீடு. எப்படியும் ஒன்றேகாவ் கிரவுண்டு நிச்சயம் இருக்கும்.சென்னையின் வளரும் பகுதிகளில் ஒன்று. பேருந்து  வசதி இருந்தது.

ராகவன் தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று விடுவான் என்றார்  அவனது அம்மா. சூடான காபியும், கொஞ்சம் மிக்சரும்,ஒரு துண்டு பால்கோவாவும் சாப்பிட கொடுத்தார்கள். பால்கோவா வீட்டில் செய்தது என்று அதன் சுவையே சொல்லிவிட., ராதா வாய் விட்டே சொல்லிவிட்டாள் .”பால்கோவா வீட்டுல செஞ்சீங்க போலிருக்கு.நல்ல டேஸ்ட்.”என்று .அந்த அம்மாள் லேசாக சிரித்துவிட்டு சொன்னார்கள்.”ஆமா ,ராகவனுக்கு வெளியே சாப்பிட அவ்வளவா பிடிக்காது.அதனால முடிஞ்ச வரைக்கும் வீட்டுலேயே செஞ்சிருவேன்.”

அவர் சொன்னதை கேட்ட ராதா கிருஷ்ணன் இருவருக்கும் தங்கள் மகளுக்கு உருப்படியாக சமைக்க மட்டும் தெரியும்.இதெல்லாம் தெரியாதே!என்றுதான் தோன்றியது.அதையெல்லாம் கற்றுக்கொள்வதற்கு அவளுக்கு பொறுமையும் விருப்பமும் இல்லை என்பதும் நிஜம் .

Advertisement

கிருஷ்னன் நேரடியாகவே சொல்லிவிட்டார்.,” ஜானகிக்கு ரெகுலர் சமையல் நல்ல வரும்.இதெல்லாம் செஞ்சது இல்ல….”

Advertisement

அதற்க்கு அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. நானும் கல்யாணம் ஆன பிறகுபசங்களுக்காக தான் செய்ய கத்துகிட்டேன் .அதுக்கு முன்னால இதெல்லாம் செய்ய தெரியாது. தினமும் சாப்பாடுதானே சாப்பிடுவோம். ஒன்னும் பெரிய விஷயம் இல்ல விடுங்க “என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார்.

வீடு வெகு சுத்தமாக இருந்தது. சில கிரோஷா வேலைகள் செய்து அங்கங்கே மாட்ட பட்டிருந்தது. “என்னோட பொண்ணு இங்கே வெகேஷனுக்கு வந்த பொழுது போட்டது. அவளுக்கு இதெல்லாம் செய்ய ரொம்பவே பிடிக்கும்” என்றவரிடம் ராதா ,”ஓஹ்..ரொம்பவே நல்லா இருக்கு. உங்க பொண்ணு வருஷா வருஷம் வெகேஷனுக்கு சென்னை வருவாளா…”என்று சாதாரணம் போல கேட்டுக்கொண்டாள்.

ராகவனின் அம்மாவுக்கு  ராதாவின் கேள்வி நன்றாகவே புரிந்தது.”இல்லேங்க.. மூணு வருஷத்துக்கு ஒரு முறை வருவா.அவங்க மாமியார் வீடு இங்கே தாம்பரம் தான்.  நேர அங்கே போயிட்டு ,ஒரு பத்து நாள் இங்கே நம்ம வீட்டுல இருந்துட்டு போவா”.

Advertisement

அந்த பதிலில் ராதாவுக்கு கொஞ்சம் மூச்சு சீரானது. அடிக்கடி வந்து நாத்தனார் தொல்லை செய்ய மாட்டாள் என்று ஆஸ்வாசம் கொண்டாள் .  ராகவனின் அம்மாவுக்கு ராதாவின் கேள்வி வலித்தது.  நல்லவேளை பெண்ணிற்கு திருமணம் செய்து கொடுத்து நிறைய வருஷங்கள் ஆகிவிட்டது.  இதுபோல் நிறைய கேள்விகளை சமீப  காலங்களில் அவர் கேட்க நேரிடுவதால் மனதின் வலியை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டார். ராகவனின் திருமணம் நல்லபடியாக நடந்துவிட்டால் போதும் என்ற நிலை. ஜாதகத்தில் இருக்கும் தோஷமும்,அவனது வேலை நிலைமையும் அவனது திருமணத்தை தாமதம் செய்து விட்டது.இல்லாவிட்டால் இன்னும்  மூன்று வருஷங்கள் முன்பாகவே மகனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார் .மகனும் நல்ல பெண்ணாக கிடைக்கவேண்டும்.திருமண வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என்று இவ்வளவு வருஷங்கள் அம்மா சொல்வதை கேட்டு அமைதியாக இறந்துவிட்டான் .சீக்கிரம் திருமணம் நடந்து விட்டால் பரவாயில்லை என்று அந்த தாயின்  மனது இறைவனிடம் வேண்டிக்கொண்டது.

ராதா கிருஷ்னன் இருவருக்கும் ராகவனின் வீடு மிகுந்த திருப்தியை கொடுத்தது.பெண்ணை நம்பி கொடுக்கலாம் என்று தீர்மானித்துவிட்டார்கள்.இருந்தாலும் ராகவனின் வேலை தளத்துக்கே சென்று பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்த கிருஷ்னன் தனக்கு தெரிந்த ஆடிட்டரின் உதவியுடன் அவன்  வேலை செய்வதாக சொன்ன அலுவலகம் சென்று நேரில் ராகவனை பார்த்துவிட்டு வந்தார். உடன் வந்த ஆடிட்டர்,ராகவனிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் திரும்ப வரும் பொழுது  ,”இந்த பையனுக்கு நல்ல டீப் கினோலேட்ஜ் இருக்கு கிருஷ்ணா.. நம்பி பொண்ணு கொடு.நல்லா வருவான்”என்றார்.  பெண்ணை பெற்றவரின் மனம் சந்தோசம் கொண்டது.

இருபத்தைந்து சவரன் நகைகளும், பெண்ணின் பெயரின் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபொசிட் செய்து விடுவதாகவும் சொல்லிவிட்டார் கிருஷ்ணன்.தங்கள் சார்பாக பெண்ணுக்கு தாலிக்கொடியும் கூரை புடவையும் வாங்குவதாகவும்,கல்யாண செலவுகளில் பாதியை ஏற்பதாகவும் ராகவனின் தரப்பிலிருந்து அவனது மாமா பேசினார்.திருமணம் இன்னமும் நாப்பது நாட்களில் என்றும் திருமண சமயத்தில் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. அதற்க்கு முக்கிய காரணம் ராகவனின் சகோதரி  மற்றும் அவர்களது குடும்பம் இன்னும் பத்து நாட்களில் இந்தியா வருகிறார்கள்.மாப்பிள்ளையின் பெற்றவர்களுக்கு அறுபதாம் கல்யாணம்.அதனால் இந்த திருமணத்தையும் வைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றாள்  அந்த பெண். அதோடு திருமண ஏற்பாடுகளும் விரைவாக செய்து விடலாம்.தாமதிக்க அவசியம் என்ன என்பது தான்.

அவசரமாக தேடியதில் சமையலுக்கு ,மற்ற வேலைகளுக்கு ஏஜென்சி மூலம் ஏற்பாடு செய்தார்கள். மண்டபம் மட்டும் கிடைப்பது கஷ்டமாக இருந்தது,எப்படியோ மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்தார்கள்.  அங்கேயும் ஒரு பிரச்சனை வந்தது.திருமணத்திற்கு மண்டபம் புக் செய்யும் பொழுது எதுவும் செல்லாதவர்கள், திருமணத்திற்கு  பத்து நாட்களே மீதம் எனும் நிலையில் மண்டபத்தில் பின்புறத்தை இடிக்கத் தொடங்கி இருந்தார்கள்.கேட்டதற்கு ரெனோவேஷன் வேலை என்றார்கள்.

மண்டபத்தில் பேசவேண்டும் என்று வேறு காரணத்திற்க்காக வந்த ராகவனின் அம்மாவுக்கு இதயமே  நின்றுவிடும் போல ஆகிவிட்டது.  எவ்வளவு கஷ்டப் பட்டு இந்த திருமண ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.இப்படி நடப்பது அவருக்கு கண்ணீரை வரவழைத்தது.

திருமண மண்டப உரிமையாளர்கள் ,வரும் விருந்தினர் தங்குவதற்கு என்று  தங்களுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஆறு அறைகள் கொடுக்கவே ராகவனின் அம்மாவுக்கு மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

திருமணத்தின் முதல்நாள் நிச்சயதாம்பூலமும் ,மாலையில் மாப்பிள்ளை அழைப்பும் நடந்தது. திருமணத்திற்கு பிறகுதான்  வரவேற்பு வைக்கவேண்டும் என்று ராகவன் ஜானகியிடம் பேசும்பொழுது சொல்லியிருந்தான்.

சொல்ல மறந்துவிட்டேனே! திருமணம் உறுதி செய்தபிறகு ராகவன் தானாகவே ஜானகியின் எண்ணுக்கு அழைத்து பேச தொடங்கியிருந்தான் இருவருக்கும் இரவுகளை இனிமையாக்கும் உரையாடல்கள் நிறைந்து இருந்ததில் திருமண இரவு பற்றிய எதிர்பார்ப்புகளும் கூடி இருந்தது. அப்போதுதான் ராகவன் தனது எண்ணத்தை சொல்லி இருந்தான்.

ஜானகி ராகவனின் எண்ணத்தை அப்படியே தனது எண்ணமாக பெற்றவர்களிடம் பதிவு செய்திருந்தாள் . திருமணத்திற்கு வருவதற்கு சீதாவுக்கு விடுப்பு கிடைக்கவில்லை.அதனால் அவள் வரவில்லை. அக்காவின் திருமண செலவுக்கென்று ஒரு பெரும் தொகையை அவள் தனது அப்பாவின் வங்கி கணக்குக்கு அனுப்பி இருந்தாள் .

“கையை கடிக்குதுன்னு கஷ்டப்படாதீங்கப்பா . உங்களுக்கு தோள் கொடுக்க உங்க பொண்ணும் இப்போது சம்பாதிக்கிறேன் .அக்காவுக்கு சந்தோஷமா இருக்கணும். அதுதான் ரொம்பவே முக்கியம்.எனக்கு லீவு இல்லை.ரொம்ப ஷாட் நோட்டீஸ்ல கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு. நா என்ன செய்யட்டும்”என்று பெற்றவர்களிடம் சொல்லி புலம்பினாள்.வீட்டின் முதல் கல்யாணம்.தன்னால் கலந்து கொள்ளமுடியாதது வருத்தம். மகளின் வருத்தம் ராதாவுக்கும் தொற்றிக் கொண்டது.

மாப்பிள்ளையின் உடன்பிறப்பு வர வேண்டும் என்று இவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்துகிறார்கள்.என்னுடைய பெண் வரவேண்டாமா..”என்று நெக்குருகல் . வாயை விட்டு சொல்லவில்லை. உண்மையில் சீதா வராமல் இருப்பது ஜானகிக்கு சந்தோஷமாக இருந்தது. குறைந்தபட்சம் ‘இது எனக்கான ,ஒருமுறை மட்டுமே நிகழும் நிகழ்வு.இங்கே நான் தான் கதாநாயகியாக இருக்க வேண்டும்.சீதா வந்தால் இங்கே இருப்பவர்கள் அவளை சுற்றி இருப்பதும் ,புகழ்ந்து கொண்டே இருப்பதும் நிச்சயம் என்னால் சகிக்க முடியாது ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் .  வெளியே மறந்தும் தனது எண்ணப்போக்கை  அவள் காண்பித்துக் கொள்ளவில்லை.

ஜானகியின் திருமணத்தில் இன்னொரு பெரிய தாக்கம் ராகவனின் தங்கை வெகு அழகாய் இருந்தாள் .போதாத குறைக்கு அவளது உயரமும், பண செழுமையும் ஜானகியை அசர வைத்தது .திருமணத்தில் அவளது முக்கியத்துவமும்,ராகவன் தனது தங்கையிடம் சிரித்துப் பேசுவதும், நாத்தனாரின் குடும்பம் என்று ஜானகிக்கு எல்லாமே கடுப்பை கொடுக்க ,அப்போதே நாத்தனாரை பிடிக்காமல் போய் விட்டது. வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.அவ்வளவுதான்!

இதெல்லாம் போதாத குறைக்கு,ஜானகியின் காது படவே ராகவனின் அம்மாவிடம்,” நம்ம ராகவன் அழகுக்கு ஏத்த மாதிரி பொண்ணு பார்த்திருக்கலாமே .பொண்ணு ரொம்ப சுமார். கலரும் கம்மி. படிப்பும் ஏதோ நியூட்ரிஷன்ன்னு கேள்விப்பட்டேன்.”என்று விசாரிக்க,அவர்களோ வருங்கால மருமகளை விட்டுக் கொடுக்காமல் ,” இப்போ எதுக்கு இந்த பேச்சு. ராகவனுக்கு பிடிச்சு இருக்கு. ஜாதகம் ஒத்து போகுது.பொண்ணும் நல்ல மாதிரி. அழகு முக்கியம் இல்ல. “என்றார். அந்த வார்த்தைகள் மட்டும் ஜானகிக்கு ஆறுதல் தந்தது. தான் ராகவனின் அழகுக்கு சரி இல்லையோ என்று இப்போது ஒரு எண்ணம் வந்து மனதில் அமர்ந்தது.அடுத்தநாள் திருமணம் கோலாகலமாக நடந்தது.ராகவனுக்கு அவ்வளவு உறவுக்காரர்கள்.மண்டபம் நிறைந்தது. ராதாவுக்கு மனதில்,”இவ்ளோ பெரிய குடும்பமா..நம்ம பெண்ணால் சமாளிக்க முடியுமா”என்ற கேள்வி. ஜானகிக்கு மனதில் நிம்மதி. எப்படியும் ராகவன் வெளியூரில் வேலை  தேடிக்கொண்டு செல்வதாக சொல்லி இருக்கும் பொழுது  என்ன கவலை. இவர்கள் எல்லாம் என்றோ ஒருநாள் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டாள் .ராகவன் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பற்றி இன்னமும் ஜானகி தனது பெற்றவர்களிடம் சொல்லவில்லை.அவர்கள் தங்கள் பெண் சென்னையில் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மாலை வரவேற்பு சமயத்தில் ஜானகிக்கு என்று வைர மோதிரம் வாங்கி வைத்திருந்தான் ராகவன். அதுவும் தனது சம்பளப் பணத்தில். வரவேற்பு ஆரம்பிக்கும் பொழுது தன்னிடம் இருக்கும் அந்த மோதிரத்தை எடுத்து அவன் ஜானகியின் விரலில் அணிவிக்க,”தன்னிடம் கூட சொல்லாமல் ராகவன் தனது வருங்கால மனைவிக்கு என்று மோதிரம் வாங்கி வைத்திருப்பது அவனது அம்மாவுக்கு மனதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை.தன்னிடம் சொல்லியிருந்தால் என்ன என்று இருந்தது.

திருமணத்திற்கு முன்பே மகன் வருங்கால மனைவிக்கு என்று யோசிக்கிறான்.இனி, தான் இரண்டாம் பட்சம் தான் என்று அதிர்ந்து போனார். ஜானகிக்கு மனதில் அடைத்துக்கொண்டு இருந்த அழுத்தம் விலகி சென்றது. அந்த அழுத்தம் ராகவனின் அம்மா மனதில் சென்று அமர்ந்து கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!