Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 15

பூவே 15

 

 

 



Advertisement

“ச்சே! இவகூட ஜோடி சேர்ந்ததுக்கு.. நம்ம தனியாவே ஆடி இருக்கலாம், இவளை தேடி கண்டு புடிக்க! என்னை சேத்துல எல்லாம் நடக்க விடுறாளே?” என்று புலம்பிக்கொண்டு அந்த வரப்பில் நடந்துக்கொண்டிருந்தாள் முனிஸ்வரி.

 

சட்டென நடை நின்றது.

Advertisement

மெல்ல விழிகளை உயர்த்தி பார்க்க, இரண்டு வயலுக்கு அண்டை வெட்டி வரப்பிலே சேற்றை போட்டிருந்ததை பார்த்தவளுக்கு இன்னும் வேலு மேல் கோவம் கொண்டாள்.

Advertisement

 

மீண்டும் அந்த வரப்பை விட்டு குறுக்கால நடந்து பாதி தூரம் போனதும் கால்களுக்கு பிரேக் போட,

வரப்பில் அமர்ந்திருந்த முத்துபாண்டியை கண்டு, திரும்பி போக பார்த்தாலும், இன்னும் நேரமாகுமே என்று சற்று ஒதுங்கி போகலாம் என்று காலை எட்டி வைத்தாள்.

Advertisement

 

அவனை கண்டுக் கொள்ளாமல் தான் போக நினைத்தாள்.

வரப்பில் அமர்ந்திருந்தவன் முகம், கால் கிலோ கவலையை விலைகொடுத்து வாங்கியவன் போல் இருந்தது.

 

அவனை தாண்டி போகவும் மனம் கேட்காமல் அவன் முன்னே வந்தாள்.

 

“இப்ப எந்த நாட்டு கப்பல் கவுந்து போச்சுன்னு ஒக்கார்ந்து இருக்கிறே?” என்ற முனிஸ்வரி சத்தத்தில், நிமிர்ந்து பார்த்தான்.

 

அவளை பார்த்தவனுக்கு கண்களை நம்பவே முடியவில்லை. ஒரு முறை தன்னை சுற்றி பார்த்து மீண்டும் அவளை பார்த்தான்.

 

“யோவ், என்ன கொழுப்பா உனக்கு? சுத்தி முத்தி பாக்குற நா! என்ன பேயா, பூதமா?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

 

“அப்டி இல்ல புள்ள.. இத்தனை நாளா என்னை முறைச்சிட்டு போனவ, இன்னைக்கு நேர்ல நின்று பேசுறதை கண்டு கனவுனு நெனைச்சேன்” என்றவன் மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.

 

“சரியா! என்னாத்துக்கு இந்த மொட்ட வெயில்ல, வயசுக்கு வந்த புது பொண்ணு மாறி குத்த வச்சு ஒக்கார்ந்து இருக்குற?” என்றாள் சிரிப்புடன்.

 

“அது ஒன்னுமில்லை புள்ள.. மனசு என்னவோ பண்ணுது. அது என்னன்னு தெரியுமா அப்படியே ஒக்காந்துட்டேன். ஆமா, நீ எதுக்கு இந்த வெயில்ல நடந்து போற? பள்ளிக்கொடம் இல்லையா?” என்றான் எழுந்து நின்றபடி.

 

“இன்னைக்கு லீவு. டான்ஸ் பிராக்டிஸ் இருக்கு. வேல்விழியை தேடி போறேன். சரியா? உன் மனசுக்கு எந்த மோகினி புடிச்சதுன்னு கேட்டு வை. திரும்பி வரும்போது நீ இருந்தா கேட்டு தெரிஞ்சிக்குறேன். எனக்கு நேரமாச்சு, வரேன்” என்று அவனை விட்டு தள்ளி நின்றாள்.

 

“அதுக்குள்ள போறீயா? கொஞ்ச நேரம் என்கூட இருக்க முடியாதா?” என்றான் தவிப்புடன்.:

 

“எது, உன் கூட இருக்க நா? உன் பொண்டாட்டி பாரு. போவியா, வேலை வெட்டியை பாத்துட்டு வந்துட்டாரு!” என்று அவனை இடுப்பில் கை வைத்து முறைத்துக்கொண்டு நடந்தாள்..

 

இதுவரை இருந்த அவன் மனக்கலக்கம் தீர்ந்த நேரத்தில், அவனின் பட்டன் ஃபோன் சத்தம் கொடுக்க,

 

“சொல்லுண்ணா.”

 

“பாண்டி, அக்கா நல்லா இருக்காங்க. இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க,” என்ற தகவலை சொல்லி மாணிக்கம் ஃபோன் வைத்ததும்,

 

இதுவரை சோகத்தில் மூழ்கியிருந்தவன் முகம் புன்னகை தவழ, போகும் முனிஸ்வரியை பார்த்தவன்,

 

“பொண்டாட்டியா இருந்தா, கூட இருப்ப தானேடி,” என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டான்.

 

கடுகடுவென முகத்துடன் வந்த முனிஸ்வரி கண்டதோ!

 

வெற்றியும், வேல்விழியும் செய்துகொண்டிருந்த செயலை கண்டதும், கண்கள் பூதக்கண்ணாடி போல் விரிந்திருந்தது.

 

சற்று நேரத்திற்கு முன்புதான் இருவரும் வயல்வெளிக்கு வந்திருந்தனர்.

 

வெற்றி விதை நெல்லை வண்டியின் முன்பக்கம் வைத்தவன். வேல்விழி பின்னே, அன்னக்கூடையில் பூஜைக்கு தேவையான பொருட்களுடன் வந்து சேர்ந்திருந்தனர்.

 

வெற்றி மா இலை, வேப்ப இலைகளை கொண்டு வந்தவன்.

ஏற்கனவே உழுது வைத்திருந்த கால் பகுதி இடத்தில், வரப்பின் ஓரம் கையில் கொண்டு வந்த இலைகளை வைத்தவன், பூஜைக்கு தேவையான அனைத்தையும் செய்தவன், வேலுவை பூஜை செய்ய கூப்பிட,

 

“நீங்களே கற்பூரம் ஏத்து மாமா,” என்றாள்.

 

“ரெண்டு பேரும் சேர்ந்தே காட்டலாம் வா,” என்று அவள் கைபிடித்து பூஜையை முடித்து வைத்தவன்.

 

மாப்பிள்ளை சம்பா அரிசியில் வெல்லம் கலந்ததை அவளுக்கு கொஞ்சம் கொடுத்து, அவனும் சிறிது எடுத்துக்கொண்டான்.

 

விதை நெல்லை அள்ளி அவள் கைகளில் கொடுக்க, சிறு பெண்ணவளும் சற்று பதறிதான் போனால்.

 

“மாமா நானா?” என சொல்லும்போதே உள்ளுக்குள் சிறு பயம் பிடித்துக்கொண்டது.

 

“ஏன்? வேலு இவ்ளோ பயம் உனக்கு?” என்று முகத்தை கைகளில் ஏந்தினான்.

 

அவன் முகம் பார்த்தாலும், “இல்லை மாமா, வெதை நெல்லுக்கே பாட்டி திட்டினாங்க. இப்ப நா தான் வெதை நெல் போட்டது தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு மாமா,” என்றாள்.

 

“சரி, ரெண்டு பேரும் சேர்ந்து வெதை போடலாம். இப்ப சரியா உனக்கு?” என்றதும்,

அவளும் சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

 

அவளை தனக்கு முன்பே நிற்க வைத்து, அவள் கைகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டு,

“ரெடியா போடலாமா?” என்று அவள் காதருகே குனிந்து கேட்க,

 

வேகமாக தலையை ஆட்டினாள்.

 

இருவரின் கைகளும் விசைக்கொண்டு விதை நெல்லை தூக்கி போட, ‘சளக்’ என்று சத்தம் கொடுத்து மண்ணுக்குள் விழுந்திருந்தது.

மொத்த விதை நெல்லையும் இருவரும் பிரியாமலே விதைச்சிருந்தனர்.

 

வேலுக்கு, கொஞ்சம் கூட தன் மாமனை ஒட்டி நிற்பது தெரியவே இல்லை. முதல் முறை தன் கைகளால் போட்ட அத்தனை விதைகளும் நல்லபடியாக வளர வேண்டும் என்பதே அவள் வேண்டுதலாக இருந்தது.

 

வெற்றியின் மனநிலையை வார்த்தையில் வடிக்க முடியாதளவுக்கு சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறை தான்.

 

இவர்களை ஒருத்தி வாயை பிளந்துக்கொண்டு பார்ப்பது கூட தெரியாமல் இருவரும் நிற்க,

 

இங்கு அசையாது நின்றவள் தலையில் வலியெடுக்க, திரும்பி பார்த்தாள்..

 

அவள் அருகே நின்றிருந்தான் முத்துப்பாண்டி.

 

“எதுக்குய்யா என் தலையில் கொட்டுன?” என்று தலையை தேய்த்துக்கொண்டே கேட்டாள்.

 

“அங்க என்ன கூத்தா நடக்குது? அப்படி மரம் மாறி நிக்குற?” என்றவன் தன் பங்காளியை விசிலடித்து கூப்பிட,

 

இருவரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர்.

“மாமா, ஈசு வந்துட்டா நா போறேன். நீங்க முடிச்சிட்டு வாங்க,” என்று வரப்பில் சொல்லிக்கொண்டே ஓட தொடங்கினாள்.

 

அவள் ஓட்டத்தை கண்டவன், ‘முதல்ல இந்த ஈசு பிரண்ஷிப்பை கட் பண்ணனும்னு’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு அவள் பின்னே வந்தான்.

 

இருவரும் மேட்டுக்கு வந்தனர்.

அந்த சரிவில் ஏற போன வேல்விழி கால் வழுக்கி கீழே விழப்போனவளை, பின்னே வந்தவன்..

 

“ஏய்! பார்த்து,” என்று அவளை தன் நெஞ்சில் தாங்கியவன் கையிலிருந்த கூடையை கீழே போட்டு,

அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு மேட்டு மேல் ஏறினான்.

 

மாமனின் திடீர் செய்கையில் “மாமா” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் அந்த மைதானத்தில் அவளை கீழே இறக்கி விட,

இந்த காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிஸ்வரி, முத்துப்பாண்டி மீதே மயங்கி விழுந்தாள்.

 

“அடியே இராட்ஷஸி, இவ்ளோ நேரம் நல்லாதாண்டி இருந்த, திடீர்னு எந்த பூதம் வந்திச்சுன்னு மயங்கி விழுந்த?” என்று அவளை தாங்கியபடி இவன் புலம்பினான்.

 

“வேலு நீ போய் மோட்டர் ரூம்ல இருந்து தண்ணீ கொண்டா,” என வெற்றி சொன்னதும்,

 

உள்ளே ஓடியவள் தண்ணீரை கொண்டு வந்து மாமனிடம் கொடுக்க,

அவன் அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க, அவளிடம் கொஞ்சம் கூட அசைவு இல்லை.

 

“அட நீ என்ன பங்காளி கலியாணத்துல பன்னீர் தெளிக்குற?” என்றவன்,

வெற்றி கையிலிருந்த தண்ணீரை வாங்கி, தன் கைகளில் ஊற்றி, கைகளை விசைகொண்டு அடித்தான்.

 

தன் முகத்தில் ‘சுரீர்’ என்று வலி தெரிய தன் கண்களை திறந்தாள்.

 

எதிரே இருந்தவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஐய்யோ! இவ எதுக்கு முறைக்குற? ஒரு வேளை நம்ம பேசினதை எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தாளோ?” என்று பாண்டி மனதில் நினைத்துக்கொண்டு அவளை பார்த்தான்.

அவன் எண்ணம் சரி என்பது போலத்தான்…

 

 

“நா இராட்ஷஸியா?” என்று கண்களை உருட்டி கேட்டவளைப் பார்த்தவனுக்கு, இப்போது மயக்கம் வரும்போல் இருந்தது.

 

“ஈசு, உனக்கு ஒன்னும் இல்லையே! நா கூட பயந்துட்டேன்டி!” கண்ணை கசக்கியவளை கண்டு, இப்போதுதான் முழு கோவம் வேலு மீது விழுந்தது.

 

“எருமை, பிசாசே! இன்னைக்கு டான்ஸ் பிராக்டிஸ் இருக்குன்னு டீச்சர் சொன்னாங்கல்ல, எதுக்குடி வரல?” என்று மூச்சு வாங்கக் கேட்க,

 

அந்த இடத்தில் பெண்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை.

 

வேலு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவளை பார்த்தாள்.

 

“அடியே! இந்த பார்வைக்கெல்லாம் நா அசர மாட்டேன்டி. ஊமை கொண்டான் மாறி இருந்துக்கிட்டு என்னென்ன வேலை பார்த்து வச்சியிருக்க?” என்று உட்கார்ந்திருந்தவள் எழ முடியாமல், முட்டி போட்டுக்கொண்டு அவளை நெருங்கினாள்.

 

“நா என்னடி பண்ணேன்? மாமா தான் வெதை போட கூட்டி வந்தாங்க. நா அப்பவும் அவருகிட்ட சொன்னேன், கேட்கல. முடிச்சிட்டு போகலாம்னு கூட்டி வந்தாரு,” என்றாள் பாவமாக.

 

வேல்விழியின் பேச்சை கேட்டவளுக்கு, உண்மையிலே மயக்கம் வரும்போல் இருந்தது.

அந்த இடத்தை சுற்றி பார்வையாலே பார்த்தாள்.

 

கொஞ்சம் தள்ளி, பக்கத்து வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்களின் தலை, நிமிடத்திற்கு ஒரு முறை இந்தப் பக்கம் வந்து போவதை கண்டவளுக்கு,

தன் எதிரே நின்றவளை பார்க்க பாவமாக இருந்தது.

 

‘இவ தான் புரியாம இருக்கா? இந்த மனிஷனுக்கு அறிவு வேணாம். வெட்ட வெளியில் அவளோட ஒட்டிட்டு நிக்குது,’ என்று இவள் நினைத்ததைத் தான்,

 

சற்று தள்ளி அழைத்து வந்த பாண்டியும் கேட்டான்.

 

“பார்த்தா பாத்துட்டு போகட்டும்டா. ஊரறிய தாலி கட்டினாதான் அவ என் பொண்டாட்டின்னு இல்லை. எம் மனசுல அவளை அப்படித்தான் வச்சிருக்கேன்,” என்றான் சிரிப்புடன்.

 

“என்னவோ! நீ அவசரப்படுறியோன்னு தோணுது, பங்கு. உங்க வீட்டுல அந்த புள்ளையை கிள்ளுக்கீரையாதான் பாக்குறாங்க. ஏதோ நீயும் அப்பாத்தாவும் இருக்குற தைரியத்துல தான் அந்த புள்ளை இருக்கு,” என்ற முத்துப்பாண்டியை,

பார்த்து சிரித்தவன்,

 

“யாரு எப்படி பார்த்தாலும்.. அவங்களுக்கு வில்லன் நான் தாண்டா.. என்னை சேர்ந்தவங்களே இருந்தாலும் அவளுக்கு அடுத்து தான் அவங்க” என்று சொல்லும்போது! அவன் முகத்தில் வந்து போன, பாவனையை கண்டவனுக்கு சற்று திகைப்பு தான்..

 

“டேய்! நா சாதாரணமா தான் சொன்னேன்.. அதுக்கு ஏண்டா? உன் கண்ணு செவக்குது” என்று அவன் தோள்களை பற்றினான்..

 

அவனை நிமிர்ந்து பார்த்தான் “அவளே என்னை விட்டாலும், நா விடமாட்டேன்டா அவளை,” என்றவனுக்கு தெரியாதே!

 

காலம் இவர்களை பிரித்து, வலியில் துடிதுடிக்க காத்திருக்கிறது என்று.

 

இப்போது

சொன்ன வார்த்தையை காப்பாற்றுவானா? காலம் மட்டுமே அறிந்த இரகசியம்.

சிரிக்க வைக்க ஒரு காலம் இருக்கும் போது, அழ வைக்குற காலமும் அவர்களை நெருங்கும் நாள் தொலைவில் இல்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!