Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..8

உயிர் உருகும் காதல் எனதே….8

“என்னம்மா சொல்லுற…அந்த வீராவுக்கு போய் கட்டிக் கொடுப்பேன்னு சொல்லுற….அவருக்கு இருக்கற பிரச்சனை என்ன புரியாம…..”என்று வாசினி தாயிடம் கைபேசியில் புலம்ப,

“நீ கவலை பாடதடீ….எனக்கும் அது தான் பயமா இருந்துச்சு….ஆனா துர்கா அது ஒரு பிரச்சனையே இல்லனு சொல்லிட்டா….அவ இப்ப வீரா கூட தான் பேச போயிருக்கா….எல்லாம் சரியா வந்துடுச்சுனா அடுத்த மாசம் கல்யாணம் இருக்கும்டீ….”என்று வானாதி மகிழ்ச்சியுடன் கூற,

“ம்மா….நான் இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்….நீ என்னடானா….”என்று ஏதோ பேச வந்தவளை,



Advertisement

“என்னடீ இப்படி பேசுற…என் மனசு இப்ப தான் நிம்மதி அடைஞ்சிருக்கு….நீ இப்படி அபசகுனமா பேசுற….”என்றவருக்கு குரல் கரகரத்துவிட்டது.எப்போதும் வாசினியின் பேச்சை கேட்பவர் என்றாலும் இன்று அவள் பேசியது சரியாக படவில்லை.

“ம்மா நான் சொல்லுறதை கேளு….”என்று வாசினி ஏதோ கூற வரும் முன்,

“யாருக்கிட்டமா பேசிக்கிட்டு இருக்க….”என்று கேட்டபடி துர்கா வீட்டிற்குள் நுழைய,

Advertisement

“சரிடீ அவ வந்துட்டா நான் அப்புறம் பேசுறேன்….”என்றுவிட்டு வாசினி அந்த பக்கம் கத்துவதைக் கூட பொருட்படுத்தாமல் வைத்துவிட்டார்.

Advertisement

“வாசினிகிட்ட தான்…..”என்றவர் மகளின் பின்னே செல்ல,அவரின் நோக்கம் புரிந்தவள்,

“என்னமா…..”

“அது….”

Advertisement

“ம்மா….பேசிட்டு வந்திருக்கேன்…இனி அவங்க தான் சொல்லனும்….”என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைய,வானாதிக்கு சொத்தென்று ஆனது.நேற்று கற்பகம் திருமண மண்டபம் வரை பேசியிருக்க இன்று மகள் இப்படி சொல்லிவிட்டு செல்ல மலர்ந்திருந்த மனம் சோர்ந்து சூம்பியது.தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த துர்கா வானாதி சோர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவரின் அருகில் அமர்ந்து அவரின் கை பிடித்துக் கொண்டு,

“ம்மா….யோசிச்சு சொல்லுறேன் சொல்லியிருக்காங்க….அவங்களும் யோசிக்கனும் இல்ல….”என்று பொறுமையாக கூற அப்போதும் வானாதியின் முகம் தெளியவில்லை,இப்படியே இருந்தா சரி வராது என்று நினைத்த துர்கா,

“சரி என்ன சொன்னா உன் சின்ன பொண்ணு…..”என்று வாசினியை பற்றி கேட்க,

“அவளுக்கென்ன ஏதாவது உளறிக்கிட்டு இருப்பா….அவளை விடு….அவங்க போன் பண்ணுறேன் சொன்னாங்களா….”என்று கேட்க,

“ஆ…ஆமா…சொல்லுவாங்க…”என்று சாமாளித்து வைத்தாள் துர்கா.அவளுக்கு இது சரியாக வரும் என்று தோணவில்லை.ஆனால் அதை தானாக கூறினால் அன்னை வருந்துவார் எதுவாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து வரட்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.

“என்ன பெரிமா வீரா வந்துட்டானா….”என்று நர்மதா இதோடு நூறாவது முறையாக கைபேசியில் கேட்டிருப்பாள்.

“இன்னும் இல்லடீ…எப்போதும் ஒன்பது மணிக்கே வந்துடுவான் இன்னைக்கு இன்னும் வரலை….நானும் அவனுக்கு தான் காத்துக்கிட்டு இருக்கேன்….”

“சரி வந்ததும் என்ன நேரமானாலும் பேசிட்டு எனக்கு பேசு….நான் உன் போனுக்காக தான் வெயிட் பண்ணுவேன்….”என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.கற்பகத்திற்கு வானாதிக்கு போன் போட கைகள் பரபரத்துக் கொண்டிருந்தது ஆனால் மகன் தான்,

“நான் வர வரைக்கும் யார் கிட்டயும் பேசக்கூடாது புரியுதா….”என்று அழுத்தமாக கூறியிருக்க கற்பகமும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.மேலும் அரைமணிநேரம் அவரை சோதனை செய்தே தான் வீரா வீடு திரும்பினான்.அவன் வந்தவுடன்,

“வாடா….இன்னைக்குனு இம்முட்டு நேரமாக்கிட்ட….பேசினியா….”என்று ஆர்வமாக கேட்க,அவரை முறைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்துகொள்ள கற்பகத்திற்கு அதுவரை இருந்த தைரியம் குறைவதை போல இருந்தது.தன் போல மனதும்,உடலும் சோர்ந்துவிட தன் ஆஸ்தான இடமான சாப்பாட்டு மேஜை நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

தன் அறைக்குள் நுழைந்த வீரா வெளியில் வர வெகு நேரம் எடுத்தது.அவன் வரும் வரை கற்பகம் அந்த இடத்திலேயே அமர்ந்திருக்க,

“ம்மா சாப்பாடு எடுத்து வைக்காம உட்கார்ந்திருக்க….”என்று கேட்டபடி வர,

“ம்ம் வரேன்…உட்கார்….”என்றுவிட்டு அவர் எழ,

“இல்ல வேண்டாம் நீங்க உட்காருங்க….நான் எடுத்துட்டு வரேன்….”என்றுவிட்டு அவன் சமையலறையின் உள்ளே நுழைய,அங்கு அவனிற்கான இட்லி ஹாட் பாக்ஸில் இருந்தது,அதனுடன் கார சட்னியும் இருக்க அதையும் எடுத்துக் கொண்டு வந்து கற்பகத்திற்கு எதிரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க,கற்பகம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் அமர்ந்திருக்க,

“என்னமா அமைதியா இருக்க….”என்று அவனே ஆரம்பிக்க,

“நீயே சொல்லுபா….நான் கேட்டா என்கிட்ட சத்தம் போடுவ….”

“ம்ம்….சத்தம் போடுவேன்னு தெரிஞ்சே நீ உன் இஷ்டத்துக்கு தான இருக்க….”என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று கண்டுகொள்ள முடியவில்லை.

“ப்ப என்னதான்டா சொல்லவர….உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அதான….”என்று கற்பகம் கோபமாக எழுந்து கொள்ள,

“அட இன்னைக்கு என்ன எல்லாரும் நான் பேசறதுக்கு முன்னாடியே அவங்களா பேசினா….நான் என்ன செய்யட்டும்….”

“என்ன யார் என்ன சொன்னா….எனக்கு புரியல…..போடா போ….என்னவோ பண்ணு இனி உனக்கு நான் பொண்ணே பார்க்கலை….உன் இஷ்டபடியே இரு….நான் போறேன் காசி,இராமேஸ்வரம்னு…என்னால உன்ன இப்படி பார்த்துக்கிட்டு இருக்க முடியல…..”என்று அவர் பாட்டிற்கு பேசிக் கொண்டே இருக்க,

“ம்மா ம்மா….நான் சொல்லுறதை கேட்காம நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்க…உனக்கும் உன் வருங்கால மருமகளுக்கு எதுல பொருத்தமோ இல்லையோ இதுல பொருந்தும் போல….என்பாடு கஷ்டம்னு நினைக்கிறேன்…..”என்று கூற,கற்பகத்திற்கு சற்று நேரம் எடுத்தது மகன் கூறியதன் பொருள் புரிய புரிந்த அடுத்த நோடி,

“எய்யா…..வீரா நேசமா….நான் கேட்டது நேசமா…..”என்று தன் மகனின் முகத்தை வழித்து முத்தம் கொடுத்தவர்,தன் கணவர் படத்தின் முன் நின்று,

“அய்யோ என் சாமி உங்களுக்கு கேட்டுச்சா….”என்று அழுது கொண்டே கேட்க,பார்த்துக் கொண்டிருந்த வீராவிற்கு நெஞ்சம் அடைத்தவுணர்வு.இப்போதும் தான் எடுத்த முடிவு சரியா என்று தெரியவில்லை.ஆனால் ஒன்று துர்கா அவன் மனதில் கல்லை எறிந்துவிட்டு சென்றிருந்தாள்.ஆம் அவளை பார்க்கும் முன்பு வரை திமிர் பிடித்த பெண் போல தான் இருந்தது.ஆனால் பேசும் போது தான் நன்கு பக்குவபட்ட பெண் என்று புரிந்து கொண்டான்.அதோடு அவள் என்னை பிடிக்கவில்லை என்றாலோ,என் முந்தைய திருமண வாழ்வு அது தான் காரணம் என்றாலோ கூறிவிடுங்கள் என்று கூறியது வீராவின் மனதில் ஏதோ அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது.அது தான் இந்த திருமணத்தின் ஆரம்ப புள்ளி.

அடுத்த நாள் காலை துர்கா எழும் போதே வரவேற்பறையில் வாசினியின் பேசும் சத்தம் அதிகமாக கேட்க,

“ஏய் வாசினி எதுக்குடீ கத்திக்கிட்டு இருக்க….”என்று தன் அறையில் இருந்து வெளி வந்து கேட்டாள் துர்கா.

“நீ என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்கியிருக்க….”என்ற வாசினி தமக்கையின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க,

“இன்னைக்கு ஞாயிற்றுகிழமை தான அதான்…..”என்று தங்கைக்கு பதில் தந்தவள்,

“ம்மா எனக்கு காபி போடுங்க நான் வந்துடுறேன்….”என்று மீண்டும் தன் அறைக்குள் நுழைந்து கொள்ள,

“பார்த்தியாமா….உன் பெரிய பொண்ணு என்கிட்ட எதாவது பேசினாளா…..”என்று மீண்டும் ஆரம்பிக்க,

“அவளே இப்ப தான் எந்திரச்சு வந்திருக்கா….நீ உட்காரு நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்…..”என்றுவிட்டு தன் வேலையில் முழ்கிவிட்டார்.

வாசினியும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.அவளுக்கு துர்கா மீது பொறாமை என்று கிடையாது அவளின் கண்டிப்பு பிடிக்காது அவ்வளவே.ஆனால் இன்று துர்கா எடுத்திருக்கும் முடிவு வாசினிக்கு சரியாக படவில்லை எங்கே மீண்டும் தன் வாழ்வை வீணாக்குகிறாளோ என்கிற பயம்.அதான் இதோ காலையிலேயே தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

துர்கா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர,அவளுக்காவே காத்திருந்ததை போலவே வாசினி,

“என்னக்கா இப்படி பண்ணிட்ட….அந்த வீரா தான் உனக்கு கிடைச்சானா…..அவனை பத்தி ஊரெல்லாம்….”என்று மேலும் என்ன கூறியிருப்பாளோ,

“போதும் வாசினி….”என்று இறைந்துவிட்டாள் துர்கா.அப்போது தான் வானாதியிடம் பேச வந்த நர்மதாவும் வாசினியின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றுவிட,

“நீ படிச்சிருக்க தான….உன் கிட்டேந்து இப்படி ஒன்னை எதிர்பார்க்கல….”என்று கத்திவிட,வானாதியும் மகளின் சத்ததில் சமையலறையிலிருந்து வெளியில் வந்துவிட்டார்.

“யாரோ ஏதோ சொன்னா அதை நாமளும் பேசனுமா…..அது எப்படி யாருன்னே தெரியாத ஒருத்தரை பத்தி நாம கிரிட்டிசய்ஸ் பண்ணலாம்….எவ்வளவு பெரிய தப்பு….இதனால பாதிக்கப்படுருவங்க நிலைமைய பத்தி யோசிச்சு பார்த்தீங்களா….”என்று துர்கா தங்கைக்கு புரிய வைக்கும் நோக்குடன் கூற,

“க்கா உனக்கு தான் புரியமாட்டேங்குது….”

“எனக்கு நல்லாவே புரியுது வாசினி….என்னை பொறுத்தவரை நாம பார்க்குற பார்வை தான் முக்கியம்…..நீயும்,மத்தவங்களும் சொல்லுற விஷயம் என் பார்வையில பெரிசா தெரியலை….இதுக்கு மேல நான் இதை பத்தி பேச விரும்பல….நீயும் பேசாத….”என்றுவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.வாசலில் நின்றிருந்த நர்மதா அமைதியாக தன் வீட்டீற்கு சென்றுவிட்டாள்.

“என்னடீ இப்படி பேசிட்ட….நானே இந்த வரன் நல்லபடியா முடியனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்….”

“ம்மா….அவ தான் லூசு மாதிரி பேசறானா நீயுமா….உனக்கு ஒன்னு சொல்லுறேன்….”என்று கூற வந்தவளை தடுத்த வானாதி,

“நான் உன் கிட்ட ஒண்ணு கேட்குறேன் நீ பதில் சொல்லு….உன்னால உங்க அக்காவுக்கு நல்ல வரன் கொண்டு வர முடியுமா….”

“ம்மா நான் எப்படிமா…..அப்படியே தேடுனாலும் அவளுக்கு கிடைக்குமா….”என்று வாசினி பார்த்து விரக்தியாக சிரித்த,

“அப்ப நீ இந்த விஷயத்துல தலையிடாத…..நான் என் பொண்ணுக்கு பார்த்துக்குறேன்….”என்றுவிட வாசினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.தன் தாய் எப்போதும் தன் பேச்சை கேட்பார் என்று நினைத்து வந்தவளுக்கு இன்று தோல்வி கிடைக்க,

“நீயாம்மா…..இப்படி பேசுற….ஏன்மா நான் துர்காவுக்கு நல்லது செய்யமாட்டேனா…..”என்று கேட்க,

“உன்னால தான் முடியலனு சொல்லுறீயே….எத்தனை நாளைக்கு அவளை இப்படியே வச்சிருக்கிறது….அவளுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது…..அவளும் உன்னை போல வாழ வேண்டாமா…..”என்று வானாதி கூறிவிட்டார்.

“என்னமோ பண்ணுங்க….நான் சொன்னா உங்களுக்கு புரியலை கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனைனு அவ நின்னா நீங்க தான் பார்க்கனும் பார்த்துக்கோங்க….”என்றுவிட்டு வாசினி சென்றுவிட்டாள்.

“ம்மா……ம்மா…..”என்று வீரா இரண்டு முறை அழைத்தும் கற்பகம் தன்னிலையில் இருந்து மாறாமல் அமர்ந்திருக்க,

“ம்மா….”என்று அவரின் தோள் பற்றவும் தான் நிகழ்வுக்கு வந்தவர்.

“ஆங்….என்னப்பா….”என்று கேட்டவரின் குரல் கரகரத்து போய் இருக்க,

“என்னம்மா என்ன ஆச்சு…”என்று பதறிவிட,அப்போது தான் தன்னிலை உணர்தவர்,

“ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லப்பா…..”

“என்ன ஒண்ணுமில்ல….அழுதுக்கிட்டு இருக்கீங்க….என்ன ஆச்சு…..”என்று சற்று கடுமையுடன் கேட்க,

“அட போடா இது ஆனந்த கண்ணீர்டா….நான் இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கேன்…..”

“என்ன????”

“ஆமா…..என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு….”என்று ஆர்பரித்துக் கூறிக் கொண்டிருக்க,வீராவிற்கு ஒண்ணும் புரியவில்லை அவன் தன் அன்னையை பார்த்துக் கொண்டிருக்க,கற்பகம் துர்கா வாசினியிடம் பேசியதை கூறினார்.

“பார்த்தியா என் மருமக எப்படினு???…..”என்று பெருமையுடன் கூற,

“உங்களுக்கு எப்படி தெரியும்….”

“நான் அந்த நேரம் தான் நர்மதாவுக்கு போன் போட்டேன்….அவ அப்ப தான் அவங்க வீட்டுக்கு போயிருப்பா போலிருக்கு….வாசினி பேசியதைக் கேட்டதும் வாசல்ல அப்படியே நின்னுட்டா போல….அப்ப தான் துர்கா பேசினது எனக்கு கேட்டுது…..”என்று கூற,வீரா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னடா அப்படி பார்க்குற….நான் இந்த துர்காவை என்ன நினைச்சேன் தெரியுமா…சரியான திமிரு பிடிச்சவ,அடங்காத பொண்ணுனு நினைச்சிட்டேன்டா….ஆனா பாரேன் அந்த பொண்ணு எவ்வளவு பக்குவமா பேசுது….”என்று கூற,வீராவும் அதை தான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.

“உன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் பாரு…..எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு….”என்றுவிட்டு எழ,

“அப்படி என்ன வேலை உங்களுக்கு…..”

“எல்லாம் உன் கல்யாண வேலை தான்….கொஞ்ச நேரத்துல நாங்க எல்லாரும் ஜோசியரை பாரக்க போகனும்…..”

“எல்லாரும்னா???”

“நானு,நர்மதா,அப்புறம் துர்கவோட அம்மா….”என்று கூற,

“ஓஓ…”என்றவன் அமைதியாகிவிட,

“சரிடா உனக்கு எல்லாம் சமைச்சிட்டு வச்சிட்டேன்….நீ சாப்பிடு….நான் கிளம்புறேன்….”

“எல்லாம் பிளான் பண்ணி தான் இருக்க போல….”என்று கூற,

“ஆமா தான் போடா….”என்று மலர்ந்த முகத்துடன் கூறிவிட்டு அவனின் தோளை தட்டிவிட்டு சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!