Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Epi 16

 

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 16



Advertisement

 

“பந்தை மட்டும் அடிக்கல, எதிர் டீமோட நம்பிக்கையையே அடிச்சு நொறுக்கிட்டாரு ஜகதீஷ். ஃபர்ஸ்ட் பாலே சிக்ஸ்”

 

Advertisement

இறுதியாட்டம் தொடங்க, இரண்டு அணிகளுக்கிடையிலான இறுதிச்சுற்று தீவிரமாக நடந்துக்கொண்டிருந்தது.

Advertisement

 

இந்த முறை டோஸில் சிறு தோல்வியை சந்தித்து முதல் துடுப்பாட்டத்தை ஏற்றாலும் பலத்த நம்பிக்கையோடு தன் ஆட்டத்திற்காக காத்திருந்தான் யாதவ்.

 

Advertisement

கிட்டத்தட்ட நான்கைந்து வீரர்கள் விளையாடிய பிறகே அவனுக்கான நேரம் வர, களத்தில் இறங்கினான் யாதவ்.

 

ஹெல்மெட்டை போட்டு கையுறையை அணிந்த வண்ணம் அவன் மைதானத்தில் இறங்க, “பெயர் சொல்ல தேவையில்ல, ஜெர்சி நம்பர் பாத்தாலே பாலர்ஸுக்கு ப்ரெஷர் ஏறிடும்!” என்ற கிரிக்கெட் கம்மென்டரரின் குரலில் மொத்த மைதானமும் கரகோஷம் எழுப்பியது.

 

வழக்கம் போல மூன்று சிக்ஸ் இரண்டு ஃபார் என நன்றாகத்தான் சென்றது.  சட்டென அவனே எதிர்பார்க்காத விக்கெட்.

 

எத்தனை தூரம் பயிற்சி செய்திருப்பான், அனைத்தும் வீணானது போல தோன்ற கோபத்தோடு பேட்டை எறியப் போனவன் இடம் பொருள் பார்த்து கோபத்தை அடக்கிக்கொண்டு தன் இடத்தை நோக்கிச் சென்றான்.

 

அப்போதுதான் அவன் விழிகளில் தென்பட்டது அந்த ஒரு உருவம்.

 

பவிலியனை சுற்றி போடப்பட்டிருக்கும் கம்பி வலையை பாவமாக பற்றிக்கொண்டு அவனையே பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் நிஹாரிகா.

 

ஒருகணம் அதிர்ந்தவன் ‘இது பிரம்மையா, இல்லன்னா நெஜமாவே வந்திருக்காளா?’ என்ற ரீதியில் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அப்படியே இருக்க, “விடுங்க சார், ஃபீல்டிங்ல அவங்கள ஜெயிச்சிடலாம்” என்றாளே பார்க்கலாம்.

 

அவனுடைய மொத்த அதிர்ச்சியும் கோபமாக மாற, அவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவன், வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையை நோக்கி வேகமாகச் சென்றான்.

 

அடுத்த பத்தே நிமிடங்களில், நிஹாரிகாவை நோக்கி வந்த ஒரு பாதுகாவலாளி, “ஏய் பொண்ணு, உன்ன சார் கூப்பிடுறாரு” என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல, “பார்த்தியா நான் சொன்னேன்ல, கில்லி படத்துல விஜய் கபடி விளையாடுறத த்ரிஷா பார்க்க வந்தப்போதான் அவர் லவ்வயே ஃபீல் பண்ணாரு. உன் ஆளு ஃபீல் பண்ணிட்டான் போய் பேசு!” என்று காதில் கிசுகிசுத்த ஆதிரா தோழியை முன்னோக்கி தள்ளிவிட்டாள்.

 

“அவன் மூஞ்சு போன போக்க பார்த்தா எனக்கென்னவோ அப்படி தெரியல” என்று வாய்விட்டே சொன்னவள் அந்த காவலாளி பின்னாலேயே செல்ல, அங்கு அவளுக்காகவே காத்திருப்பவன் போல இரு கைகளைக் கோர்த்து முட்டியில் ஊன்றி கோபத்தோடு அமர்ந்திருந்தான் யாதவ்.

 

“சார்…” அவள் அழைத்ததும்தான் தாமதம், “என்கிட்ட லீவு கூட கேக்கல, உன் இஷ்டத்துக்கு இங்க வந்திருக்க. ஹவ் டேர் யூ டூ திஸ்? இதுக்கப்பறமும் உன்ன நான் வேலையில வச்சுக்கணுமா?” என்று பற்களைக் கடித்துக்கொண்டு அமைதியாக அதேமயம் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான் அவன்.

 

நிஹாரிகாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 

“அய்யோ சார், நீங்க கொடுக்குற சம்பளத்துலதான் என் பொழப்பே ஓடுது. ப்ளீஸ் என்னை துரத்திடாதீங்க, ஃப்ரீ டிக்கெட் கிடைக்கவும் ஒரு ஆர்வத்துல வந்துட்டேன். நீங்க போன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அடுத்த ஃப்ளைட்லயே சென்னைக்கு போயிடுவேன். ப்ராமிஸ்” அவள் பாவம் போல் முகத்தை வைத்தபடி பேச, “அப்போ சரி, போ..” என்றான் அவன் சட்டென்று.

 

அசடுவழிந்தவாறு தலையை சொரிந்தவள், “சட்டுன்னு போன்னா எப்படி சார், எங்கப்பா ஏர்போர்ட்டா என்ன! நீங்க வேணா இந்த நாளுக்கான சம்பளத்த வேணா கட் பண்ணுங்க சார்” என்று தீவிர முகபாவனையோடு சொல்ல, அவளெதிரே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி விறைப்பாக நின்றிருந்தவனின் இதழ்கள் அவளின் முகபாவனையில் லேசாக விரிந்தது போல தோன்றியது.

 

அதை பெண்ணவளும் சரியாகக் கண்டுகொண்டாள்.

 

“சார், நீங்க…” அவள் ஒற்றை விரலை நீட்டி அவன் இதழைக் காட்டிய வண்ணம் அவனை நெருங்க, உடனே பின்னே நகர்ந்தவன், “கெட் அவுட் ஃப்ரொம் ஹியர்” என்றான் கோபமாக.

 

“இல்ல சார் அது…” அவள் ஆரம்பிக்க, “உன்ன போக சொன்னேன்” என்று அழுத்தமாக சொன்னவன் அவளைக் கடந்து தன் அணியாற்கள் இருக்கும் இடத்தை நோக்கி ‘தப்பித்தால் போதும்’ என்பது போல விறுவிறுவென்று சென்றான்.

 

போகும் அவனை வெறித்துப் பார்த்தவள் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிவிட்டு மீண்டும் தன் தோழியின் அருகே சென்று நிற்க, நடந்ததை கேட்டவளுக்கு சப்பென்று இருந்தது.

 

“அன்ரொமேன்டிக் பர்சென்டீ உன் ஆளு, இது சரிபட்டு வராது” திட்டம் சொதப்பியதில் அவள் எரிச்சலாக சொல்ல, சில நிமிடங்கள் கடந்து அடுத்த ஆட்டமும் ஆரம்பித்தது.

 

இப்போது ஃபீல்டிங்கில் இருந்த யாதவ்வை நிஹாரிகாவால் அப்பட்டமாக ரசிக்க முடியுமாக இருக்க, உள்ளுக்குள் உணரும் ஊசித் துளைக்கும் பார்வை அவளென மனம் அடித்துச் சொன்னாலும் திரும்பவில்லை அவன்.

 

கிட்டத்தட்ட விளையாட்டு முடிவடையும் நேரமும் வந்துவிட்டநு.

 

எதிரணியின் கடைசி இரு பந்துகள். ஐந்து பாய்ன்ட்ஸ் எடுத்தாலே விளையாட்டை முடித்துவிடலாம்.

 

வீரர் ஒருவரின் வேகமான பந்திற்கு அந்த எதிரணி வீரர் ஓங்கி அடிக்க, அதுவோ தூரத்தே பறந்து சென்று கைகளில் சிக்காமல் விழுந்து மைதானத்தின் மைய கோட்டை நோக்கி உருண்டோடியது.

 

ஆனால் கோட்டைத் தொடும் முன்னரே அதை எடுத்த வீரரொருவர், அதை யாதவ்வின் புறம் எறிய, சரியாக அதைப் பிடித்துக்கொண்டவன் கணங்களில் யோசித்தான்.

 

அவன் பக்கத்தில் நொன்ஸ்ரைக்கர் விக்கெட் இருந்தாலும் ஸ்ட்ரைக்கர் க்ரீஸை விட்டு பாதி தூரம் வந்திருப்பதை கவனித்தவன் அந்த வீரர் மீண்டும் க்ரீஸை தொடும் அந்த கணங்களுக்குள் தான் நின்றிருந்த இடத்திலிருந்தே ஸ்ட்ரைக்கரின் விக்கெட்டை குறி வைத்தான்.

 

அவன் எதிர்பார்த்தது போல அந்த பந்து விக்கெட் கம்புகளை தகர்த்தெறிய, மைதானமே கத்தலிலும் சந்தோஷக் கூச்சலிலும் நிரம்பியது.

 

“வாவ்! வாட் அ த்ரோ… ப்ரெஷர் நேரத்துல தான் ரியல் ஹீரோ யாருனு தெரியும், இன்னைக்கு ஆன்சர் கிடைச்சிருச்சு.. யாதவ் அர்ஜூனா…”

 

என்ற கம்மென்ட்டரி உற்சாகக் குரலில் ஒலிக்க, யாதவ்வின் அணி வீரர்கள் அவனை தாவி அணைத்துக்கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

 

விழிகளில் வெற்றி கொடுத்த சந்தோஷம் மிதக்க, புன்னகைக்கான லேசான அடையாளம் இதழில் தோன்றியிருந்தது.

 

அவனுடைய பார்வை நிஹாரிகா இருக்கும் திசைக்கு தானாக திரும்ப, அத்தருணம் பெண்ணவளின் ஆழ்மனதில் அழியா வடுவாக பதிந்துப் போனது என்னவோ உண்மைதான்.

 

அடுத்த சில நாட்கள் யாதவ்விற்கு வெற்றிக்கொண்டாட்டங்கள் கேளிக்கை விருந்துகள் என கடந்து ஒருவழியாக கொஞ்சநாட்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஹோட்டலுக்கு வந்தான் அவன்.

 

அதிரடியாக ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்தவன், “சீக்கிரம் வா, நிவ் ஹோட்டலோட கன்ஸ்ட்ரக்ஷன் நடக்குற சைட்க்கு போகணும்” என்றுவிட்டு வந்த வேகத்தில் வெளியேற, அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் படாதபாடு பட்டது என்னவோ நிஹாரிகாதான்.

 

ஹோட்டல் கட்டுமானம் வேலை நடக்கும் இடத்தை நோக்கி கார் புறப்பட, “சார், ரொம்ப நாளைக்கப்பறம் ஹோட்டல் வேலையில இறங்கியிருக்கீங்க. கொஞ்சம் பொறுமையா ஹேன்டல் பண்ணலாமே!” என்றவளை நோக்கி
பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தான் யாதவ்.

 

அவளே எதிர்பார்க்காதது போல சடாரென அவளை அவன் நெருங்கி வர, பட்டென்று விழிகளை மூடிக்கொண்டவளுக்கு மூச்சுக்கு சிரமப்படுவது போல ஒரு உணர்வு.

 

ஆனால், யாதவ்வின் விழிகள் அவளை கூர்மையாக நோக்கின.

 

கரத்தை அவளை நோக்கி கொண்டு சென்றவன் சீட்பெல்ட்டை போட்டுவிட்டு விலகி அமர்ந்தவாறு தன் கோர்ட்டை சரிசெய்ய, பெண்ணவளுக்கு சப்பென்று இருந்தது.

 

‘இதை வாய தொறந்து சொன்னா நானே போட்டிருப்பேனே! பதட்டத்துலயே வச்சிருக்கான் பாவி’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவள், வர வேண்டிய இடத்தில் கார் நின்றதுமே வேகமாக இறங்கிக்கொண்டாள்.

 

யாதவ்வோ அங்கிருக்கும் இன்ஜீனியர்களோடு ஹோட்டலின் டிஸைன் பற்றி பேசிய வண்ணம் இருந்தாலும் ஓரக்கண்ணால் நிஹாரிகாவை நோட்டமிடவும் தவறவில்லை.

 

அவளோ சுற்றிமுற்றி பார்த்த வண்ணம் அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்க, வேலையை முடித்துவிட்டு அவளெதிரே வந்தவன், “பக்கத்துல ஒரு கெஃபே இருக்கு,  வா போகலாம்” என்றுவிட்டு காரில் ஏறிக்கொண்டான்.

 

நிஹாரிகாவுக்கு யாதவ்வின் பார்வையிலும் பேச்சிலும் ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது.

 

இதுவரை அவன் விழிகளில் கொழுந்துவிட்டெரிந்த கோபம் இப்போது சற்று மாயமானது போலிருந்தது.

 

குறையாத ஆச்சரியத்தோடு அவனோடு சென்றவள் அந்த கஃபேயில் அவனுக்கு எதிரே அமர்ந்துக்கொண்டாள்.

 

சாதாரண தேநீரே விலை ஐநூறை தாண்டும் போல!

 

அந்த கஃபே அத்தனை வசதி படைத்திருந்தது. உள்ளூர்க்காரர்களை பார்ப்பதை விட வெளியூர்காரர்களே அதிகமாக சுற்றியிருக்க, அந்த இடத்தை தன் முட்டை விழிகளை உருட்டி உருட்டி ஆச்சரியத்தோடு பார்த்தாள் நிஹாரிகா.

 

யாதவ்வோ தனக்கானதை ஆர்டர் செய்துவிட்டு தன்னெதிரே அமர்ந்திருந்தவளை இமை வெட்டாமால் பார்த்துக்கொண்டிருக்க, அவனின் பார்வையில் சங்கடப்பட்டவள் அந்த பார்வை வீச்சை தாங்க முடியாது மேசை மீதிருந்த மெனூ கார்டில் பார்வையை பதித்தாள்.

 

அதிலிருந்த விலைகளைப் பார்த்தவளுக்கோ பிபி எகிறியது.

 

“ஆத்தாடி ஆத்தா! இந்த இடத்தை தங்கத்தால கட்டியிருக்காங்களா இல்லன்னா கொடுக்குற காஃபில தங்கத்த கலக்குறானா இம்புட்டு விலையா இருக்கு” அவள் மைன்ட் வாய்ஸ் என நினைத்து வாய்விட்டு புலம்பிவிட, அவனுடைய இதழ்கள் கேலியாக வளைந்தன.

 

“உன்ன விட வேல்யூ இல்ல நீஹா” அவன் சட்டென்று சொன்னான்.

 

அவனுடைய வார்த்தைகள் தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று யோசித்தவளுக்கு அதை கிரகிக்கவே சில நிமிடங்கள் எடுத்தன.

 

அவள் அதை முழுதாக உணர்வதற்குள், யாதவ்வின் எண்ணிற்கு அழைப்பு வர, திரையைப் பார்த்தவன் அழைப்பையேற்று எழுந்துச் சென்றான்.

 

“ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ் யாதவ், வாட் ச சர்ப்ரைஸ்! நிஹாரிகாவோட டேட் பண்ற மாதிரி இந்த கஃபேல என்ன பண்றடா செல்லக்குட்டி?” என்று மறுமுனையில் சித்தார்த் நக்கல்தொனியில் கேட்டு சிரிக்க, இவனோ வேகமாக கட்டிடத்தின் கண்ணாடி வழியே வெளியே சுற்றிமுற்றிப் பார்த்தான்.

 

“மண்ணாங்கட்டி எங்கடா இருக்க நீ?” என்று அவன் கடுப்பாகக் கேட்க, “அதை விடு! ஐ அம் ரியலி ஹேப்பீ ஃபார் யூ யாதவ், நீஹாதான் உனக்கு பொருத்தமானவ, நடந்தத மறந்து ஏத்துக்கடா” என்றான் சித்தார்த் ஒரு நல்ல நண்பனாக.

 

ஒருசில கணங்கள் யாதவ் எதுவும் பேசவில்லை.

 

“இப்போ இதை சொல்லதான் என் கண்ணுல கூட படாம ஒளிஞ்சுக்கிட்டு பேசுறியா? என்ட்… உனக்கு எப்போதிலிருந்து நீஹாவும் நானும் சேருறதுல அவ்வளவு ஆர்வம்?” என்று நக்கல் தொனியில் அவன் கேட்க, மெல்ல புன்னகைத்தான் மற்றவன்.

 

“ஐ நோ யாதவ், ஷீ இஸ் யூவர் ஹேப்பினெஸ். அது உனக்குமே தெரியும். அவ உன்னதான் நினைச்சுட்டு இருக்கா, நீயும் நடந்தத மறந்துரு! எல்லாமே பழைய மாதிரி மாறிடும்”

 

என்ற சித்தார்த்தின் வார்த்தைகளில் தன் நண்பனின் மீதான அக்கறை அப்பட்டமாகத் தெரிந்தது.

 

ஆனால், யாதவ்வின் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது.

 

“இஸ் இட்!” என்று கேட்டவாறு நிஹாரிகா அமர்ந்திருந்த டேபிளைப் பார்த்தவன், “வில் சீ…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, பெண்ணவள்தான் அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் யோசனையில் இருந்தாள்.

 

அன்றிரவு, ஆதிராவோடு இரவுணவை தயார் செய்துக்கொண்டிருந்த நிஹாரிகாவுக்கு இன்று யாதவ் சொன்ன வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.

 

இன்று காலையிலிருந்தே அவனிடத்தில் ஏதோ ஒன்றை நெருக்கமாக என்று சொல்வதை விட வித்தியாசமாக உணர்ந்தாள் அவள்.

 

உணவு கருகுவதை கூட உணராமல் சட்டியை கிளறிக்கொண்டிருந்தவளை உலுக்கிய ஆதிரா, “ஏய் என்னாச்சுடீ உனக்கு, நீ நல்லாதானே இருக்க. உன் ஹிட்லர் பாஸ் ஏதாச்சும் சொன்னானா என்ன?” என்று கேட்டாள் சிறு கோபத்தோடு.

 

“அது.. ஆமா. ஆனா வழக்கமா திட்டல ஆதி, இது வேற மாதிரி… அதை எப்படி சொல்றது… ஒரு மாதிரி புதுசா…” எப்படி விளக்குவதென்று தெரியாமல் நீட்டி முழக்கி அவள் எதையோ உளற, தன் தோழியை மேலிருந்து கீழ் ‘ஙே’ என பார்த்து வைத்தாள் ஆதிரா.

 

“ஸ்டாப் இட்! ஆல்ரெடி என் அப்பா பெரிய மீசையால நான் பைத்தியம் பிடிக்காத குறையா இருக்கேன். என்னை முழுசா பைத்தியமாக்கி கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வச்சிராத!’

 

அவள் கடுப்பாக சொல்ல, தோழியை பாவமாகப் பார்த்தாள் நிஹாரிகா.

 

ஆதிராவோ விழிகளை அழுந்த மூடித் திறந்து ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டாள்.

 

“அப்பா இங்க வர்றதா சொல்லிட்டு இருக்காரு, மாடலிங்லாம் என்னன்னு கூட அவங்ககிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது. என்ன பண்ணுவாருன்னு தெரிஞ்சாலே பயமா இருக்கு நீஹா.

 

இதுக்கு நடுவுல அந்த வருண் வேற.. என்மேல அவனுக்கு ஏதோ இருக்கு, ஓவரா என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்குறான். என்ட் இன்னும் வன் வீக்ல கம்பனில ஒரு பெரிய பார்ட்டீய வேற அர்ரேன்ஞ் பண்ணியிருக்கான் அந்த பரதேசி. எனக்கு தலையே சுத்துது”

 

தரையில் அமர்ந்து தலையை தாங்கிய வண்ணம் இயலாமையோடு சொல்லி முடித்தாள் மற்றவள்.

 

நிஹாரிகாவுக்கு அவளின் நிலை நன்றாகவே புரிந்தது. ஆனால், தீர்வுதான் அவளுக்கும் தெரியவில்லை.

 

“அப்பாகிட்ட சொல்லிரு ஆதி, அவர் புரிஞ்சுப்பாரு” தோழியை அணைத்து அவள் தன் யோசனையை சொல்ல, அதுவே சரியென்று தோன்றினாலும் அருவாளோடு தந்தை நின்றுக்கொண்டிருக்கும் விம்பமே அவள் மனக்கண் முன் தோன்றி அவளுடைய அடிவயிற்றை கலக்க வைத்தது.

 

அன்றைய நாள் இவ்வாறு கழிய, அடுத்தநாள் ஆயுத பூஜை போலும்!

 

தன் ஆஃபீஸ் ரூமில் அமர்ந்திருந்த யாதவ்வின் விழிகள் கடிகாரத்தையும் கணினித் திரையையும் மாறி மாறி பார்த்தன.

 

இன்னும் அவளைக் காணவில்லை. நேரம் செல்லச் செல்ல அவனுடைய கோபத்தின் அளவும் கூடிக்கொண்டே போக, சட்டென கதவு திறக்கப்பட்டது.

 

யாரென்று தெரிந்தது போல கோபத்தோடு நிமிர்ந்தவனின் பார்வை மறுகணம் அதிர்ச்சியில் விரிந்தன.

*********

-Sheha zaki

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!