உயிர் உருகும் காதல் எனதே….10
உயிர் உருகும் காதல் எனதே….10
தன் அறையின் சாளரத்தின் வழியே நிலவை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் வீரபத்தரன்.அவனின் மனதை போலவே அவனின் அறையும் வெறிச்சோடி அமைதியாக இருந்தது.அந்த அமைதியை கலைக்கும் விதமாக அவனின் கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் உடல் தன் போல் இறுகி உடலில் பல ரசாயன மாற்றங்கள் உருவாவது போல் ஒரு பிரம்மை ஏற்பட வீராவின் கைகள் ஒன்றை ஒன்று இறுக்கமாக பற்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தன.
அறையில் நுழைந்து துர்காவின் முகமும் ஒருவித பதட்டத்துடன் தான் இருந்தது.இருவருக்குமே தங்கள் பழைய நினைவுகள் மேல் எழுபம்புவதை தடுக்க முடியவில்லை.துர்கா கையில் இருந்த பாலை டீப்பாயில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.இருவரும் பேசிக் கொள்ளும் நிலையில் தற்போது இல்லை என்று புரிந்தது அதனால் எதுவும் பேசாமல் சில நிமிடங்களை கடத்தினர்.
சற்று நேரத்திற்குள் துர்கா தன்னை நிலைப்படத்திக் கொண்டு வீராவை பார்க்க அவனோ இவளை பார்த்தேனா பார் என்ற ரீதியில் வானை பார்த்துக் கொண்டு நிற்க சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.
Advertisement
“என்ன தெரிகிறது…..”என்று துர்காவின் குரல் வீராவின் மிக அருகில் கேட்க திடுக்கிட்டு திரும்ப,துர்காவோ வேகமாக இரண்டடி பின் சென்று அவனை போலவே வானத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்ன…..”
“என்ன என்ன…..”என்று அவளும் அவனை போலவே ராகமாக கேட்க,
Advertisement
“நீ ஏதோ சொன்ன தான…..”என்றவனுக்கு தான் கேட்டது நிஜம் தானா என்ற நினைப்பு வந்துவிட்டது.
Advertisement
“ஆமா சொன்னேன்….”
“என்ன சொன்ன…”
“ம்ம் மேலே என்ன தெரிகிறது…..”என்று ராகமாக மீண்டும் கேட்க,அவளை முறைத்து பார்த்த வீராவின் மனது தன்னை போல் அமைதி அடைந்தது.அதை அவன் உணரவில்லை ஆனால் துர்கா உணர்ந்தாள்.
Advertisement
“என்ன முறைக்கிறீங்க….நீங்க தான ரொம்ப நேரமான வானத்தை பார்த்துக்கிட்டு இருந்தீங்க….அதான் ஏதாவது புதுசா தெரியுதானு கேட்டேன்….”
“உன் வாய் கொழுப்பு அடங்காது இல்ல….”என்று எப்போதும் போல் அவன் கூறிவிட,துர்காவின் முகம் சற்றென்று மாறிவிட்டது.சிறுவயதில் வீரா அடிக்கடி அவளை இப்படி தான் திட்டிவிட்டு செல்லுவான்.அது நியாபகத்தில் வந்துவிட்டது.வீராவிற்கு தான் கூறிய பிறகு தான் புரிந்தது,
“அது சாரி…நான்….”
“அட விடு வீராசாமி…..எத்தனை நாள் ஆச்சு….நீ இப்படி என்னை திட்டி….ஸ்கூல் டேஸ்ல இப்படி தான திட்டிட்டு போவ….”என்று துர்கா அதை சாதாரணமாக தான் கூறினாள் ஆனால் வீராவிற்கு தான் ஏதோ போல் ஆனது.தான் அவளை நினைத்தது பற்றி தெரிந்தால் என்ன நினைப்பாள் என்று பயம் பிடித்தது.அவனையே பார்த்துக் கொண்டு நின்ற துர்கா அவனின் முகமாற்றத்தை கண்டு,
“எப்போதும் உங்களுக்குள்ள தான் பேசிப்பீங்களா….வேற யார் கிட்டேயும் பேச மாட்டீங்களா….”என்று கேட்க,
“ஆங்…..என்ன…..”என்றவனுக்கு நிஜத்திற்கும் இதற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.அவன் தடுமாறுவதை பார்த்தவளுக்கு மனதில் அத்தனை வலி எப்படி இருந்தவன் இன்று இப்படி என்று தான் நினைக்க தோன்றியது.ஆம் அவள் பார்த்த வீராவிற்க்கு முகத்திற்கு பேச தான் தெரியும்,அதோடு கையும் சற்று நீளும் என்று தெரியும் ஆனால் இப்போது தனக்குள்ளே மருகுபவனை அவளாள் பார்க்க முடியவில்லை.ஏதோ அவன் மனவுளைச்சளை உடனடியாக போக்க வேண்டும் என்று ஒரு உந்துதல் எழ,
“உங்க கூட கொஞ்சம் பேசனும்…..”என்றுவிட்டு அவனின் முகம் பார்க்க அவனோ எதுவும் கூறாமல் நின்றான்.அவனின் அமைதியை அனுமதியாக ஏற்றுக் கொண்டவள்,
“நம்ம இரண்டு பேரு வாழ்க்கையும் முன்னாடி எப்படி இருந்துச்சோ ஆனா இனி அப்படி இருக்காது…எனக்கு மனசுல ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில ஒண்ணு பேச தெரியாது எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேராவே கேட்டுட்டுவேன்…..அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது….இதை ஏன் சொல்லுறேன்னா நான் பேசுறது அந்த நிமிஷம் உங்களையோ இல்ல உங்களை சார்ந்தவங்களையோ காயப்படுத்துர மாதிரி தெரியும் ஆனா அது அப்படி இல்லை அதை நீங்க புரிஞ்சிக்கனும்….அதோடு எனக்கும் என் கற்பூக்கும் பல கணக்கு இருக்கும் அதுக்குள்ள நீங்க வரவே கூடாது….இப்பவே சொல்லிட்டேன்….இப்போதைக்கு இது தான் தோணுச்சு சொல்லிட்டேன்…..”என்றுவிட்டு அவன் முகத்தை பார்க்க அவனோ பேச்சற்று நின்றிருந்தான்.
“ஹலோ…..”என்று அவனின் முன் கைகளை ஆட்ட,
“ஆங்….என்ன….”
“போச்சு….அப்போ நான் சொன்னது எதுவும் காது விழலையா…..”என்று துர்கா பாவமாக கேட்க,
“ஏய்….இல்ல இல்ல…அப்படி இல்ல…அது நான்….”என்றவனுக்கு இன்னும் தடுமாற்றம் இருக்க தான் செய்தது.
“இதோ இது தான்….இந்த மாதிரி நீங்க என்கிட்ட தடுமாறி நிக்க வேண்டிய அவசியம் இல்லை அதை தான் சொன்னேன்….மனசுல இருக்குறத சொல்லிட்டா இவ்வளவு வேதனையில்லல…..உங்களுக்கு இன்னும் இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியலை எனக்கு புரியுது அதுக்காக அப்படியே இருந்துட்டா நல்லது இல்லை….பேச முயற்சி பண்ணுங்க…..”என்றுவிட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து கொண்டே,
“எனக்கு இப்போ இருக்குற வீரபத்திரனை விட ஸ்கூல்ல எதுக்கெடுத்தாலும் கெத்து காட்டுற வீரச்சாமியை தான் பிடிக்கும்…..”என்றுவிட்டு செல்ல வீராவின் மனதில் அதுவரை அழுத்திக் கொண்டிருந்த பாரங்களின் மீது ஒரு மெல்லிய மயிலறகு கொண்டு வருடியது போல் இருந்தது அவளின் வார்த்தைகள்.
துர்காவிற்கு நன்கு புரிந்தது வீராவின் நிலை அவனின் காதல் திருமணமே தோற்று போயிருக்க இந்த திருமணம் எப்படி இருக்க போகிறது என்று தான் பயப்படுகிறான்.அதை போக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது பேசியது அதை அவன் உடனே புரிந்து கொண்டு நடப்பான் என்று எல்லாம் அவள் நினைக்கவில்லை ஆனால் ஒரு நாள் புரிந்து கொள்ளுவான் என்று நம்பினாள்.நம்பிக்கைகள் பொய்பதில்லை என்பது போல,
“நீ எதுக்கு அழுதுக்கிட்டு இருந்த அப்போ….நான் வந்தேனே…..”என்று காலை நடந்ததை நினைவு கூர்ந்து கேட்க அவன் கேட்க,
“ப்பா பேசிட்டீங்களே…..”என்று ஆச்சரியம் போல அவளின் பதிலில்,
“நீ எப்போதும் இப்படி தான் இருப்பியா…..எல்லாம் உனக்கு விளையாட்டு தானா…..”என்று தன் மனதில் நினைத்ததை கேட்டுவிட்டு அவளின் முகத்தை பார்க்க அவளின் சிரிப்பு மறைந்தது.அதைக் கண்டவனுக்கு தான் அதிகமாக பேசிவிட்டோமோ என்று தோன்ற,
“சாரி….”என்றான் சிறிய குரலில்.
“எதுக்காம்….நீங்க ஒண்ணும் தப்பா கேட்கல…..நீங்க கேட்ட இரண்டாவது கேள்விக்கு பதில் எல்லா நேரமும் இருக்க மாட்டேன்…..ஆனா எல்லா விஷயத்தையும் விளையாட்டு போல தான் கேட்டுக்குவேன்…..என்னோட பலவீனம் மத்தவங்க கண்ணுக்கு தெரியக்கூடாது பாருங்க….”
“என்ன சொல்லுற நீ எனக்கு புரியலை…..”
“அதான் மக்கு புருஷன்…..”
“ஓய்…..என்ன சொன்ன நான் மக்கா….”என்று எகிறிக் கொண்டு வந்துவிட்டான் வீரா.
“இத இதை தான் எதிர்பார்த்தேன்….”என்றுவளின் கிண்டலில் இன்னும் இன்னும் தான் கோபம் வந்தது.அவனின் முகத்தின் மாற்றத்தை வைத்தே கண்டு கொண்டவள்,
“அச்சோ வீராசாமி சாந்தி சாந்தி….இவ்வளவு கோபம் எல்லாம் ஆகாது…..”என்று இரு கைகளையும் காத்தில் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட,தன்னையும் மீறி சிரித்துவிட்டான் வீரா.அகமும்,முகமும் மலர்ந்த சிரிப்பு அத்தனை அழகாக இருந்தது.அதனை இரசித்து பார்த்தாள் துர்கா.அவளின் பார்வை உணர்ந்து சிரிப்பை நிறுத்திவிட்டு என்ன என்று கேட்க,
“நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க…..”என்று கூற,வீராவின் முகத்தில் வெட்கத்தின் சாயல்,
“அட ஒரு சின்ன பொய் சொன்னதுக்கு இவ்வளவு வெட்கமா…..”
“அடிங்க…..”
“அச்சோ நானில்ல ப்பா….”என்றுவிட்டு தனக்கான மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழையும் முன்,
“நீங்க மக்கு தான்றதை நிரூப்பிக்கிறீங்க பார்த்தீங்களா….”
“என்ன….”
“பின்ன என்னவாம் நீங்க இரண்டு கேள்வி கேட்டீங்க நான் ஒண்ணுக்கு தான் பதில் சொன்னேன்….இன்னொரு கேள்விக்கு பதிலே சொல்லலை….நீங்களும் மறந்துட்டீங்க……”என்றுவிட்டு சிரிக்க,அவளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் வீரா.
“சரி சரி டென்ஷன் ஆகாதீங்க….நானே சொல்லுறேன்…..எங்க அம்மா அழுததும் கொஞ்சம் பீல் ஆகிடுச்சு….அதான் என் அப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்….அப்ப தான் நீங்க வந்துட்டீங்க….”
“என்ன பேசிக்கிட்டு இருந்த….”
“ம்ம்…அது இந்த கல்யாணம்….அது நான் சரிதானானு அப்பாக்கிட்ட கேட்டேன்….”
“ஓ….அவரு என்ன சொன்னாரு….”
“வாழ்க்கையில ஒரு தடவை தோத்துட்டா நம்ம வாழ்க்கையே முடிஞ்சு போயிடுச்சுனு உட்கார்ந்து இருக்குறது தான் முட்டாள்தனம்….அதை தான்டி வெளில வந்து வாழ்ந்து காட்டுறது தான் புத்திசாலிதனம் அதனால நீ செஞ்சது தப்பில்லைனு சொன்னாரு…..”என்றுவிட்டு அவள் குளியலறைக்குள் புகுந்து கொள்ள வீரா அமைதியாக அவள் கூறியதை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
துர்கா கூறியது சரிதான் என்று புத்திக்கு புரிகிறது ஆனால் மனது அதை ஏற்க மறுக்கிறது இன்றளவும் அவனால் கடந்து வர முடியவில்லை.இருவரும் காதலித்து தான் திருமணம் முடித்தோம் என்னை பற்றி நன்கு தெரியும் அவளிற்கு பிறகு ஏன் இப்படி செய்துவிட்டாள்.எப்படி முடிந்தது அவளாள் வேறு ஒரு திருமணம் என்று நினைக்கையிலேயே மனது கசக்க துவங்கிவிட தன் கட்டிலில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
குளியறையில் இருந்து வெளிவந்த துர்காவோ வீரா அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவனிடம் வந்து அவனின் தோல் தொட்டாள்.திடீர் தொடுகையில் நிகழ்வுக்கு வந்தவன் அதிர்ந்து விலக,
“நான் தான்….”என்றவளின் பதிலில் கூட அவன் தெளியவில்லை,கண்கள் இரண்டும் கலங்கி எதையோ தேடிக் கொண்டிருந்தது.அது அவனின் பழைய நினைவுகளின் சொச்ச மிச்சங்கள் அதை உணர்ந்த துர்காவிற்கு அத்தனை வலியும்,வருத்தமாகவும் இருந்தது.எத்தனை காதல் இருந்தால் இன்றளவும் அதனை மறக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருப்பான் என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வழிய முயன்று அதனை அடக்கியவள்,
“வீரா….வீரா….என்னை பாருங்க….ப்ளீஸ்….”என்று அவனின் கன்னங்களில் தட்டி சுயம் அடைய செய்ய,சற்று நேரம் எடுத்தது அவனிற்கு தன்னை மீட்டு கொண்டுவர,பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வீராவிடம் நீட்ட அதனை மறுக்காமல் குடித்தவனின் கைகள் நடுக்கத்தால் அது அவனின் உடல் எங்கு சிதறியது.அவனின் நிலை கண்ட துர்காவிற்கு மனதின் வலி கூடி தான் போனது.அவன் குடித்து முடித்ததும்,
“இப்ப பரவாயில்லையா வீரா….”என்றவள் கேட்க,அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் ரத்தமென சிவந்திருக்க,
“வீரா…..வேண்டாம்…பழசை நினைக்காதீங்க….”என்றவளின் குரலும் உடைந்து வர,வீராவால் அத்தனை எளிதாக அந்த நினைவுகளின் பிடியில் இருந்து வெளிவர முடியவில்லை.அவன் தவிப்பை உணர்ந்தவள் அவனின் நடுங்கும் ஒற்றை கரத்தை தன் கரத்துக்குள் வைத்து அழுத்திக் கொண்டே,
“ரொம்ப லவ் பண்ணிட்டீங்கல அதான்…. எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு காலம் ஒரு சிறந்த மறுந்து அது பல காயங்களை ஆர வச்சிடும்னு….ஆனா சில காயங்கள் ஆறவே ஆறாது அப்படிபட்ட காயங்களை நாம மறந்து போயிடனும் இல்ல அது இன்னும் இன்னும் நம்மளை ரணமாக்கிட்டே இருக்கும்னு…..எனக்கு உங்களோட நிலை புரியுது நம்ம ரொம்ப நேசிச்சவங்களே நம்மளை புரிஞ்சிக்காம போயிட்டா அதை யாரால தான் ஏத்துக்க முடியும்…. உங்க கிட்ட ஒண்ணு சொல்லவா….அழுதுடுங்க….உங்க மனசை விட்டு அந்த நினைப்பு போகும் வரை அழுதுடுங்க….”என்று கூற,வீராவின் பார்வை அவளிடம் மட்டும் தான் நிலைக் கொண்டிருந்தது.
“என்ன பாரக்குறீங்க…..”
“இல்ல நீ இப்படி தான….என்னால நம்ப முடியல….நான் பார்த்த துர்கா அது திமிரா…..”என்று விட்டு நிறுத்திக் கொண்டான்.குரல் கரகரத்து தான் ஒலித்தது ஆனால் முன்பு போல் மனதின் அழுத்தம் இல்லை சற்று குறைந்திருந்தது.
“என்ன திமிர கண்டுட்டீங்க நீங்க….என்கிட்ட ஓவரா பேசினான் உங்க பிரண்ட் நான் சண்டை போட்டேன் அது தப்பா….அது உங்களுக்கு திமிரா தெரியுதா….”என்று மூக்கு விடைக்க சண்டைக்கு தயாராக,அத்தனை அழுத்திலும் வீராவின் முகத்தில் சின்ன புன்னகை,
“என்ன என்ன சிரிப்பு….எப்படியும் ஒண்ணும் நடக்க போறதில்ல….தள்ளுங்க எனக்கு தூக்கம் வருது….நீங்க அப்படி ஓரமா போயி உங்க கடந்த காலத்தை நினைச்சிக்கிட்டு அழுங்க…..”என்றவளின் நேரிடியான பேச்சில் வீரா பேச்சற்று போனான்.
“என்ன முழிச்சிக்கிட்டு இருக்கீங்க…..ஓஓ….நான் கீழ போய் படுக்கனுமா….நோ வே…..என்னை பார்த்தா எல்லாருக்கும் எப்படி இருக்கு….அவனும் அப்படி தான் என்னை கண்டாலே எரிஞ்சி எரிஞ்சி விழுவான்….உங்களுக்கு ஒண்ணு தெரியுமா….அவன் படுத்த கட்டில்ல நான் படுக்கூடாதாம் அருவருப்பா இருக்குமாம்….அப்படி என்ன நான் குறைஞ்சி போயிட்டேன்…..”என்றவளின் கண்களில் கரகரவென இறங்க வீரா பதறிவிட்டான்,
“ஏய்….ரிலாக்ஸ்….நான் கீழ படுத்துக்குறேன்….நீ அழாத….”என்றவனுக்கு அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு மனது தாளவில்லை.
“நா….நான் ஏதோ பேசப்போய் ஏதோ பேசிட்டேன்….சாரி…..”என்றவளுக்கு குற்றவுணர்வாகி போனது இப்படி அவனை தேற்றுகிறோம் என்று தான் உடைந்துவிட்டேமே என்று அவள் மேலே அவளிற்கு கோபம் எழந்தது.
“விடு நமக்கு நடந்தது எதுவுமே நல்லதா நடக்கலை இனி நடக்குறதாவது நல்லதா நடக்குதானு பார்க்கலாம்…..”
“அது என்ன பார்க்கலாம்னு சந்தேகமா சொல்லுறீங்க…நல்லதே தான் நடக்கும்….சரி தூங்குறேன்….குட் நைட்…..”என்றுவிட்டு போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டு அவள் படுத்துவிட,வீரா இவளை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாது திகைத்து நின்றுவிட்டான்.
