அத்தியாயம் 12.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
“மூனும் செத்துருந்தா இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன்”, என்றாள் அவள்.
“முடிச்சு விட்டுறவா டி?”
Advertisement
“வேண்டாம், அவனுங்க வாழனும் ஆனா வாழ்க்கையை வெறுத்து வாழனும். அதுக்கு ஏதாவது பண்ணு. இப்ப டைவர்ஸ் வாங்கணும்”
Advertisement
“நான் லாயர் கூட்டிட்டு வரவா?”
Advertisement
“இப்ப நீ இதுல தலையிட வேண்டாம். அப்பா எல்லாம் பாத்துக்குவாங்க. அவங்களால முடியலைனா நான் உன் கிட்ட தான் கேப்பேன். ஆனா அவன் டைவர்ஸ் தருவானா?”
Advertisement
“அதை நினைச்சு நீ எதுக்கு கவலைப் படுற? நான் பாத்துக்குறேன். அவன் கண்டிப்பா கொடுப்பான். உன் நோட்டீஸ் போகும் போது அதுல அவன் கையெழுத்து போடுவான். ஏய் அப்புறம் இப்ப நீ சொன்னது உண்மையா?”
“எது?”
“ரதிக்கும் அரவிந்துக்கும் கல்யாணம் ஆகலையா?”
“அக்கா மச்சானை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கா. அவங்களை எப்படியாவது சேத்து வைக்கிறியா? எனக்கு ரதி அக்கா சந்தோஷமா இருக்கணும்?”
“கண்டிப்பா சேத்து வைப்போம் டி. அமர் இங்க தான் வந்துட்டு இருக்கான். ரதிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குன்னு தான் நினைச்சிட்டு இருக்கோம்”
“அவியும் மச்சானோட பையன் தான். சொன்னேன்ல மூணு குழந்தைங்கன்னு”
“இதை கேக்க சந்தோஷமா இருக்கு டி. அவங்க வாழ்க்கையை சரி பண்ணி உன்னை அந்த நாய் கிட்ட இருந்து முழுசா விடுதலை வாங்கிட்டு தூக்கிட்டு போறேன் டி”
“இப்ப இப்படி பேசுற? உன் வொய்ஃப் உயிரோட இருந்திருந்தா என்னை மறந்திருப்ப தானே?”
“அவ உயிரோட இருந்திருந்தா உதவிக்கு கூட நீயும் என்னை கூப்பிட்டுருக்க மாட்ட தானே?”, என்று அவனும் கேட்க அவள் அமைதியாக இருந்தாள்.
“சில நிதர்சனம் இப்படி தான் டா திவி இருக்கும். ஆனா என்ன இருந்தாலும் உன்னை நான் மறக்கவே இல்லை. அது மட்டும் சத்தியம். இதை நீ நம்புறியா? மறக்கணும்னு நினைச்சு நினைச்சு அதிகம் உன்னை நினைச்சிருக்கேன்”, என்று சொல்ல “ம்ம்”, என்றாள். அவளது நிலையும் அது தானே?
“இது வரை நடந்த எல்லாத்தையும் விடு. நாம நேத்து தான் மீதி பண்ணிருக்கோம்ன்னு நினைச்சிக்கோ. நேத்து தான் நமக்குள்ள ரோட்ல சண்டை நடந்துச்சு. இன்னைல இருந்து நான் உன்னை லவ் பன்றேன். அவ்வளவு தான். இடைல நடந்தது எதுவுமே உண்மை இல்லை. உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவு தான்”
“உங்க அப்பா.. கொஞ்சம் பயமா இருக்கு”
“அவருக்காக நான் நிறைய பண்ணிருக்கேன். இப்ப எனக்காக என் தம்பிக்காகவும் நமக்காகவும் சில விஷயம் பண்ண மாட்டேனா? அவரை எங்க எப்படி ஆப் பண்ணணும்னு எனக்கு தெரியும். சரி நான் அமர் கூட சென்னை கிளம்புறேன். நீ சந்தோஷமா இரு. நல்லா சாப்பிடு டி. நான் பாத்த திவி நீ இல்லை. ரொம்ப மெலிஞ்சு போய்ட்ட”
“இன்னொரு தடவை நீ என்னை கட்டிப் பிடிக்கும் போது என் எலும்பு உன்னைக் குத்தாது சரியா?”, என்று அவள் சிரிப்புடன் கேட்க அவனோ உல்லாசமாக சிரித்தான். ஏனோ வெகு நாட்களுக்கு பிறகு சிறகை விரித்து பறந்தது போல ஒரு உணர்வு இருவருக்குமே.
அவர்கள் போன் பேசி விட்டு வைக்கும் போது அமரும் அங்கே வந்திருந்தான். வந்ததும் தன்னிடம் என்ன நடந்தது எதற்கு இங்கே வந்தாய் என்று கேட்பான் என்று சாணக்கியன் எதிர்பார்க்க அவனோ ஒரு மாதிரி முகம் கசங்கி இருக்க பதறிப் போனான்.
“அமரா என்ன ஆச்சு டா?”, என்று கேட்டான்.
“வரும் போது ரதியை பாத்தேண்ணா, அதுவும் அரவிந்த் கூட. பாக்குற வரைக்கும் ஒண்ணும் தெரியலை. பாத்ததும் என்னோட இழப்பு ரொம்ப பெருசா இருக்குண்ணா. ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ சந்தோஷமா இருக்குறது நல்லா தான் இருக்கு. ஆனா எனக்கு இல்லாம போய்ட்டா தானே?”
“அவ மேல உனக்கு கோபம் வெறுப்பு ஏதாவது இருக்கா அமரா?”
“எதுக்கு?”
“அவ வேற கல்யாணம் பண்ணினதுக்கு? குழந்தையை நம்ம கிட்ட கொடுத்துட்டு அவ வாழ்க்கையை பாத்துகிட்டதுக்கு அவளை சுயநலவாதியா நினைக்கிறியா?”
“சே சே அவ தான் என்னை அப்படி நினைக்க சான்ஸ் இருக்கு. நான் தான் அவளை ஏமாத்தி சின்ன பிள்ளைன்னு கூட பாக்காம அவ கூட வாழ்ந்து படிக்கிற வயசுல பிள்ளையை வயித்துல சுமக்க வச்சு.. அவளுக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன். அவ இல்லைன்னு தான் வலியா இருக்கே தவிர அவ மேல கோபமோ வெறுப்போ இல்லவே இல்லை. அவ என் ரதி. எப்படி இன்னொருத்தன் கையில இருக்கலாம்னு பொறாமையா தான் இருக்கு அண்ணா”
“அப்படினா வா உன் ரதியை தூக்கிட்டு வந்துறலாம்? இந்த அமரதேவனுக்கு ஏற்ற ரதிதேவி அவ தான் போதுமா? அவ உன்னோட ரதி தான்”, என்று சிரிக்க அண்ணனை வியப்பாக பார்த்தான்.
“என்ன சொல்ற நீ?”
“நீ எப்படி குழந்தையோட அவளை நினைச்சிட்டு இருக்கியோ அது போல அவ வாழுறதும் உனக்காக தான், உன்னை நினைச்சு தான்”
“அப்ப அரவிந்”
“அவன் எப்பவும் அவளுக்கு நல்ல நண்பன் மட்டும் தான்”
“குழந்தை”
“டேய் அது உன் மகன் டா. அப்பா சொன்ன மாதிரி அன்னைக்கு மகாபலிபுரத்துல பவுண்டேஷன் ஸ்ட்ராங்கா தான் போட்டுருக்க. உனக்கு பிறந்தது மூணு பிள்ளைங்களாம். பிறக்கும் போதே ஒரு பாப்பா இறந்துருச்சாம்”, என்று சொல்ல அவன் கண்கள் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது. அவனால் இந்த உண்மையை தாங்கவே முடியவில்லை.
ஆனந்த அதிர்ச்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இப்போது தான் அமருக்கு புரிந்தது. அதைக் கண்ட சாணக்கியன் “உன் வாழ்க்கை சரியாக போகுது டா. நான் சரி செய்வேன். இனி எந்த தருமர் வந்தாலும் இந்த சாணக்கியன் பாத்துக்குவேன் டா”, என்றவன் தம்பியைக் கட்டிக் கொள்ள அமரின் கண்கள் கண்ணீரால் நிறைந்து தான் போனது.
“வா போகலாம். ரதி கிட்ட பேசணும். இரு அவங்க அட்ரஸ் கேக்குறேன்”, என்று சாணக்கியன் சொல்ல “எனக்கு தெரியும் வீடு வரைக்கும் பாலோ பண்ணிட்டு தான் வந்தேன்”, என்று சிரித்த படி சொன்னவன் அண்ணனைப் பார்த்துக் கண்ணடிக்க ஏனோ பழைய அமரைப் பார்த்த நிறைவு சாணக்கியனுக்கு. அவர்கள் இருவரும் அவர்கள் வாழ்க்கையை தேடிச் செல்ல நினைக்க தன்னுடைய வாழ்க்கையை முடிக்கப் போகும் பேப்பரை கையில் எடுத்தாள் சகுந்தலா.
ஆம் அவள் கையில் இருந்தது விவாகரத்து பத்திரம். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடைய அறையில் அழுக்கு உடைகளை துவைப்பதற்காக எடுத்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா.
வேலைக்கார பெண் தான் துவைப்பாள் என்றாலும் கூடையில் எடுத்துப் போடுவது இவள் தானே? அப்போது தான் தருமரின் வெள்ளை உள் பனியனில் ஒரு பெண்ணின் நீளமான தலைமுடி சிக்கி இருந்தது பட்டது.
சகுந்தலாவுக்கு நீண்ட கூந்தல் எப்போதும் கிடையாது. பாப் கட்டிங் போல தான் வைத்திருப்பாள்.
அதனால் “இது யாரோடாதா இருக்கும்? அதுவும் உள் பனியனில் வரும் அளவுக்கு?”, என்று கேள்வி வந்தது. கூடவே அடிக்கடி காணாமல் போகும் தருமரின் நடவடிக்கையும் சேர்ந்து சந்தேக விதையைத் தூவ அடுத்த நொடி தன்னுடைய ஜூனியரை அழைத்து விட்டாள்.
நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவளிடம் ஒரு டீமே உண்டு. அவள் ஒரு கேஸ் எடுத்தால் அதை முடிக்க அவ்வளவு போராடுவாள். அவளிடம் இருக்கும் ஜூனியர் அனைவரும் அவளுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜட்ஜ் பதவிக்கு வாய்ப்பு வந்த போதும் கூட சில வருடங்கள் போகட்டும் என்று எண்ணி லாயர் பதவியில் இருப்பவள். அவளுக்கு சந்தேகம் வந்தால் அதை சரி செய்ய தானே பார்ப்பாள்.
“மேடம்”, என்றான் அர்ஜூன்.
“அஜ்ஜு ஒருத்தங்களைப் பாலோ பண்ணி ரிப்போர்ட் தரணும்”
“எஸ் மேடம்”
“நம்ம டீம்க்கு தெரியக் கூடாது. யார் என்னன்னு விவரம் அனுப்பியிருக்கேன். பாத்துட்டு டவுட்னா கேட்டுரு”, என்று சொல்ல அவன் புருவம் நெறித்த படி புகைப்படத்தைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
“மேடம், இது சார்”, என்று அவன் திகைக்க “சொன்னதை செய். பாலோ பண்ணி ரிப்போர்ட் கொடுத்துட்டு இன்செண்டிவ் வாங்கிக்கோ”, என்று சொன்னவள் போனை வைத்தது விட்டாள்.
அடுத்த நான்கு நாட்களில் தருமர் எங்கெல்லாம் எந்த பெண்களுடன் ஒன்றாக இருந்தார் என்ற தகவல் எல்லாம் அவள் டேபிளில் இருக்க தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
என்ன தான் தைரியமான பெண் தான் என்றாலும் இத்தனை வருடம் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்ற வலியும் தன்னுடன் ஏற்படுத்திய உறவை மற்ற பெண்களிடமும் அவன் அனுபவித்திருக்கிறான் என்ற அருவருப்பும் அவளை வெகுவாக காயப் படுத்தியது.
ஒரு கேஸ் கொடுத்து அவனை உள்ளே தூக்கி வைத்து விடலாம். இல்லை மீடியாவில் சொல்லி அசிங்க படுத்தி விடலாம். ஆனால் அதற்கு பிறகு? அவளை நம்பி வரும் அப்பாவி மக்களுக்கு எப்படி நீதி வாங்கிக் கொடுக்க முடியும் அவளால்.
“அவ வாழ்க்கையே காப்பாத்த முடியலை, இவளா நமக்கு நீதி வாங்கிக் கொடுப்பாள்?”, என்ற பெயர் தானே வரும். அதற்காக இவ்வளவு பெரிய கசப்பான உண்மையை சகித்துக் கொண்டு அவனுடனே வாழ அவளால் முடியாது.
“இனி திருந்தி என் கூட மட்டும் தான் வாழ வேண்டும்”, என்று பிச்சை கேட்கும் சராசரி பெண்ணும் அவள் கிடையாது. தன்னுடன் படித்த நண்பர் ராதாகிருஷ்ணன் இப்போது நீதிபதியாக இருக்க அவனிடம் ஐடியா கேட்டவள் யாருக்கும் தெரியாமல் மியூச்சுவல் டைவர்ஸ் செய்வதற்கான பேப்பரை தயார் செய்தாள்.
இத்தனை வருடங்கள் சட்டத்தை கரைத்துக் குடித்ததன் பலன் என்று அவளுக்கே கிடைத்தது.
பேப்பரை தயாராக வைத்திருந்தவள் வீட்டுக்கு எடுத்து வந்திருந்தாள். அப்போது தான் இரண்டு மகன்களும் வீட்டில் இல்லாதது தெரிந்தது.
சாணக்கியனை அழைக்க அவன் டீ குடிக்க சென்றிருந்ததால் போனை எடுக்க வில்லை. அடுத்து அமரை அழைத்து “எங்க டா இருக்கீங்க?”, என்று கேட்டாள். அவளுக்கு ஏனோ இரண்டு மகன்களிடம் அடைக்கலம் புக வேண்டும் போல இருந்தது. என்ன இருந்தாலும் அவளும் பெண் தானே? கணவனுக்கு அடுத்து அவளுக்கு ஆறுதல் அவள் பிள்ளைகள் தானே?
ஆனால் அன்னை உணர்வுகள் புரிய வில்லை அமருக்கு. அவன் இருந்த மனநிலையில் அவனுக்கு எதுவுமே கருத்தில் பதிய வில்லை என்பது தான் நிஜம்.
“அம்மா நாங்க இப்ப எங்க இருக்கோம் தெரியுமா?”, என்று கேட்ட அமர் ரதி வாழ்வில் நடந்த அத்தனையும் சொல்ல சகுந்தலா கையில் இருந்த விவாகரத்து பேப்பர் அவள் கரத்தில் இருந்து நழுவி கீழே விழுந்தது.
அவள் கவலையெல்லாம் பின்னுக்கு போய் சந்தோஷம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம். இதை விட அந்த தாய்க்கு வேறு என்ன வேண்டுமாம்?
“அன்னைக்கு கூட கேட்டேனே டா? அவ ஒண்ணுமே சொல்லலை பாரேன்? எத்தனை குற்றவாளியை கண்டு பிடிச்சிருப்பேன்? ஆனா அவ கண்ணைப் பாத்து என்னால கண்டு பிடிக்க முடியலையே? அது மட்டுமா நிறைய விஷயம் என் கண்ணுல இருந்து தப்பிக்குது அமர். உன் அம்மா ஏமாளியா தான் இருந்துருக்கேன் டா”, என்று அன்னை உளறி விட அன்னை மனதில் இருக்கும் வலி புரியாதவன் ரதியிடம் பேசுவதை மட்டும் எடுத்துக் கொண்டு அது எப்போது என்ன என்று கேட்டு அன்னையை ஒரு வழி ஆக்கினான்.
“சரி டா பழசை விடு. அவ கிட்ட தெளிவா பேசி என் மருமகளை கூட்டிட்டு வா. இனி உன் அப்பன் என்ன எந்த கொம்பன் வந்தாலும் உங்களை பிரிக்க முடியாது”, என்று சொல்லி போனை வைத்த சகுந்தலா அடுத்து சிறிது நேரம் யோசித்தாள். ஏனோ இப்போது தான் அமரின் அருகில் இருக்க வேண்டும் போல தோன்றியது. அதனால் அடுத்து அவள் அழைத்தது ஸ்வேதாவுக்கு தான்.
“சொல்லுங்க அத்தை”
“எங்க மா இருக்க?”
“பாப்பாவும் நானும் மூவி பாக்க வந்தோம்”
“அவளை ஏர்போர்ட் கூட்டிட்டு வரியா இப்ப?”
“என்ன அத்தை திடீர்னு”
“நீ நேர்ல வா சொல்றேன்”, என்று சொன்ன சகுந்தலா வேலைக்கார பெண்ணிடம் “உங்க ஐயா வந்தா கேஸ் விஷயமா வெளிய போறேன். நாளைக்கு தான் வருவேன்னு சொல்லிரு. பாப்பாவையும் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி விட்டு குழந்தைக்கு தேவையானது தனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைத்து கிளம்பி விட்டாள்.
ஏனோ சாணக்கியன் கூட இருந்தாலும் ஒரு அன்னையாக அமருக்கு துணைக்கு அங்கே தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ரதியை தானே சென்று அழைத்தால் தான் அது மரியாதை என்றும் தோன்றியது. அவந்திகாவும் அங்கே இருக்க வேண்டும் என்று தான் இந்த முடிவை எடுத்தாள்.
சகுந்தலா ஏர்போர்ட் வரும் போது ஸ்வேதாவும் குழந்தையுடன் அங்கே இருந்தாள்.
“என்ன அத்தை திடீர்னு டிரிப்?”
“அம்மாடி, நீ இதை எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை”, என்று ஆரம்பித்தவள் அமர் ரதி பற்றி சொல்ல “எனக்கு சந்தோஷம் தான் அத்தை. அமர் அத்தானைப் பிடிக்கும் தான். அதுக்காக அவர் சந்தோஷத்தைக் கெடுக்குற அளவுக்கு வில்லி நான் இல்லை. நானும் உங்க கூட வரவா?”, என்று கேட்டாள்,.
சகுந்தலா எப்படி மறுப்பாளாம்? “உனக்கு தேவையானது அங்க போய் வாங்கிக்கலாம். உன் அம்மா அப்பாவுக்கு மட்டும் தகவல் சொல்லிரு டா. இல்லை வேண்டாம், அவங்க கிட்ட நானே பேசுறேன்”, என்று சொன்ன சகுந்தலா கேஸ் விஷயமாக அவளையும் அழைத்து செல்லவதாக சொல்லித் தான் அனுமதி வாங்கினாள். ஏனோ இந்த விஷயம் தருமருக்கு இப்போது தெரிவதில் சகுந்தலாவுக்கு உடன்பாடு இல்லை. பொய்மையும் வாய்மை இடத்து அல்லவா?
“அவ உங்க பொண்ணு சம்பந்தி. அவளைக் கூட்டிட்டுப் போக உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு”, என்று அவர் சொல்ல இந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு தன்னுடையது தான் என்று புரிந்தது சகுந்தலாவுக்கு.
போகும் போது “ரதி தான் உன் அம்மா”, என்று சகுந்தலா ஒரு வார்த்தை சொன்னது தான் தாமதம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த அவந்திகா ஆயிரம் கேள்விகள் எழுப்ப எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னாள் சகுந்தலா.
“உனக்கு ஒரு அண்ணன் அங்க இருக்கான் டி. ரெண்டு பேரும் ஒண்ணா தான் பிறந்துருக்கீங்க. உங்க அம்மா மறைச்சிட்டா”, என்று வேறு சொல்ல அவளுக்கோ ரெட்டை சந்தோஷம்.
“அவன் என் கிட்ட பேசுவானா ஆச்சி? நம்ம வீட்டுக்கு அவன் வருவானா? நான் என் பொம்மை எல்லாம் அவனுக்கு கொடுப்பேன். நான் அவன் அம்மா அப்பா நீ எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல இருக்கலாமா?”, என்று குழந்தை கேட்க அந்த காட்சி சகுந்தலா கண்ணில் கனவாக தெரிந்தது.
இதுவரை கணவருக்கும் பிள்ளைகள் பொது என்று எண்ணி தான் அமர் வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக இருந்தாள் சகுந்தலா. ஆனால் தந்தை தறிகெட்டு வேறு வழியில் சென்று விட்டார் என்னும் போது இனி பிள்ளைகள் பொறுப்பு தாயுடையது தானே?
அது மட்டுமல்லாமல் அமரும் சரி ரதியும் சரி அவர்களே முடிவு எடுத்து ஒதுங்கி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியுமாம்?
அமருக்கு அழைத்த சகுந்தலா “டேய் அண்ணன் கிட்ட போனைக் கொடு”, என்றாள்.
“சொல்லு மா”
“என்ன டா பண்ணுறீங்க?”
“ரதி வீட்டுக்கு தான் கிளம்பலாம்னு இருக்கோம். மணி ஆறு தானே ஆகுது? அதுவும் அப்பவே போயிருப்போம். உன் சின்ன மகன் தான் பொண்ணு பாக்க போற மாதிரி மினுக்கி கிட்டு இருக்கான். ரெண்டு பிள்ளைகளை பெத்து கிழவன் ஆன அப்புறமா இவன் பண்ணுற அழும்பு இருக்கே?”, என்று சிரிக்க ஏனோ சாணக்கியனையும் பல வருடங்கள் கழித்து உயிர்ப்புடன் பார்த்த நிம்மதி அந்த தாய்க்கு.
“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க. நாங்களும் வந்துறோம். பிளைட் கிளம்ப போகுது. சேந்து போகலாம்”
“அம்மா, அப்பாவை கூட்டிட்டு வரியா?”, என்று அதிர்வுடன் கேட்டான் சாணக்கியன்.
“எதுக்கு மறுபடியும் அவர் அவங்களைப் பிரிச்சு விடவா? நானும் குட்டியும் தான் வறோம் டா, ஸ்வேதா கூட வாரா”
“சரி வாங்க. சேந்து போகலாம்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு தம்பியை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.
அன்னையும் குழந்தையும் வருவது சந்தோஷம் தான் என்றாலும் நேரம் தான் போகாமல் நிற்பது போன்ற உணர்வு அமருக்கு. சகுந்தலா தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்க அமர் மற்றும் சாணக்கியன் காரில் அங்கே காத்திருந்தார்கள்.
“பெரியப்பா”, என்ற படி அவந்திகா சாணக்கியனிடம் தாவ அவளை தூக்கி உச்சி முகர்ந்தவன் சாவியை தம்பியிடம் கொடுத்து விட்டான்.
“ஒரு வழியா என் கிட்ட இருந்து ரெண்டு அத்தானும் எஸ்கேப் ஆகிட்டீங்க போல?”, என்று சிரித்தாள் ஸ்வேதா.
“கவலைப் படாத வாயாடி. நீ கொடுமை படுத்துறதுக்குன்னு ஒரு ஆளை உனக்கு பாத்து கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு மா”, என்று அமர் சொல்ல அவள் முறைக்க என அழகான தருணமாக இருந்தது அது.
“பெரியப்பா ரதி அம்மா தான் என்னோட அம்மாவாம்?”, என்று குழந்தை சொல்ல “ஏன்டி பட்டு ஒரு நாளாவது என் கிட்ட சொன்னியா ரதியை பாக்குறேன்னு?”, என்று கேட்டான் அமர்.
“ஆச்சி சொல்லக் கூடாது சொல்லிருக்கா. அன்னைக்கு கொலுசு வாங்கி தந்தாங்கன்னு சொன்னேன். நீ கேக்கலை பா”, என்று சொல்ல அன்னையை ஒரு பார்வை பார்த்தான் அமர்.
“சரி சரி வாங்க, எனக்கு என் மருமகளைப் பாக்கணும். நேரா அவங்க வீட்டுக்கே போ”, என்று சொல்லி அனைவரையும் கிளப்பினாள் சகுந்தலா.
அமர் காரை எடுக்க அவன் அருகே சாணக்கியன் குழந்தையுடன் அமர்ந்தான். பின்னே ஸ்வேதா மற்றும் சகுந்தலா இருவரும் அமர்ந்தார்கள்.
“நீங்க எதுக்கு டா இங்க வந்தீங்க? அலைச்சல் தானே? நாங்க கார் பிடிச்சு வந்திருப்போம் தானே?”, என்று கேட்டாள் சகுந்தலா.
“அம்மா இவன் ரூம்ல என்னை நிம்மதியா இருக்க விடலை மா. அதுக்கு தான் இங்க வந்தாளாவது அடங்குவானான்னு பாத்தேன். இவன் கையில சிக்குனா ரதி பாவம் தான்”, என்று சாணக்கியன் கிண்டல் செய்ய அனைவரும் சிரித்தார்கள்.
ரதியின் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் போது மணி பதினொன்று. இந்நேரம் போக வேண்டுமா என்று சகுந்தலாவுக்கு கேள்வி எழுந்தது. ஆனால் போகும் விஷயம் எவ்வளவு முக்கியம் என்னும் போது மணி என்னவாக இருந்தால் என்ன?
ஒரு மாதிரி அனைவருக்கும் ஆனந்த பரபரப்பு. “இந்த வீடு தான். அம்மா நீங்க முன்னாடி போங்க”, என்று சொன்ன அமர் அண்ணன் அருகே நின்றான்.
சகுந்தலா அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருக்க அனைவருக்கும் இதயம் பயங்கரமாக தான் துடித்தது.
தொடரும்..
