Skip to content
Post Views: 148
“நல்லா சொன்னீங்க டீச்சர்!
என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்க தான்!
இந்த ஊர் ஜனங்க எல்லாம் யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவாங்க.
அதுல எந்த அளவு உண்மை இருக்குன்னு யோசிக்கறத விட, அந்த விசயத்த அப்படியே நம்பிடுறது ரொம்ப ஈசியா இருக்குல்ல.. அதான்!
Advertisement
ஆனா அதால ஒரு குடும்பமே பாதிக்க படுது.. ஒரு பிஞ்சு மனசு காயப்படும்னு எல்லாம் யோசிக்கிறது இல்ல..!” புலம்பியபடி உள்ளே வந்தாள் நந்தினி.
முதல் பார்வையில் தெரியாவிட்டாலும், அடுத்த சில நிமிடங்களில் கவிக்குப் புரிந்தது, நந்தினி ஒரு திருநங்கை என்பது!
ஆனால் அதை வெளியே காட்டி, ஒரு இரக்க பார்வை பார்த்தால் கூட அந்த நந்தினி காயப்படக் கூடும் என்றே நினைத்து, இயல்பாக பேசினாள் கவி.
Advertisement
நந்தினிக்கும் அது புரிந்து, சட்டென ஒரு நட்பு உணர்வு, மதிப்பு கவியின் மேல் உண்டாயிற்று அந்த கணமே!
Advertisement
“வாங்க.. நீங்க தான் நந்தினியா? ஹவுஸ் ஓனர் சொன்னாங்க. நீங்க தான் இங்க தோட்டத்தை பார்த்துக்கறீங்கன்னு”.
“ஆமா.. எனக்கு செடிங்க ன்னா உயிர். மஞ்சுவுக்கும் அப்படி தான்!
நான் டவுன்ல ஒரு நர்சரியில தான் வேலைப் பார்த்துட்டு இருந்தேன்.
Advertisement
நானும் பாட்னி படிச்சேன். ஆனா செகண்ட் இயர்லயே டிஸ்கண்டின்யு பண்ணிட்டேன்.
சொந்த ஊரு கொடைக்கானல். ஆனா இப்ப அங்க போறது கிடையாது.
இப்ப ஒரு ரெஸ்ட்டாரண்டில் காபி மாஸ்டரா இருக்கேன்.
ஷிப்ட் டுயுட்டி தான்.
அங்க வேலைப் பார்த்த நேரம் இங்க வந்து தோட்டத்த பார்த்துப்பேன்.
இங்க பக்கத்து தெருவுல தான் வீடு.
உங்க சொந்த ஊர் எது டீச்சர்?”
“நான் திருச்சி தான்! மணச்சநல்லூர்”.
“குடும்பம் எல்லாம்..”
“நான், அம்மா தம்பி. தம்பி லா காலேஜ்ல படிச்சுட்டு இருக்கான்”.
“ஓ.. சரிங்க டீச்சர். உங்களுக்கு எந்த உதவி வேணுமினாலும் என் கிட்ட கேளுங்க.
இவ்வளவு பெரிய வீட்டை உங்களால் எல்லாம் மாப் பண்ண முடியாது.
நான் பண்ணி தர்றேன்.
பால் நல்ல படியா காய்ச்சிட்டீங்களா?”
“ம்ம். முதல்ல காய்ச்சுனப்போ திரிஞ்சு போய்டுச்சு. அதுக்கு இந்த அன்னம் அக்கா வேற இந்த வீடு சரியில்ல.. ஆவி நடமாட்டம் இருக்கு. சீக்கிரம் காலி பண்ணுங்கன்னு சொல்லி பயமுறுத்தி விட்டுடுச்சு. அப்புறம் ஹவுஸ் ஓனர் அக்கா தான் ஆள் மூலம் வேற பால் கொடுத்து விட்டாங்க”.
“அன்னமா.. அது சரியான புளுகு மூட்டை! அவ கிட்ட அதிகம் வச்சுக்காதீங்க. கொஞ்சம் நல்லா பேசினாவே கடன் கேட்டு வந்துடும்.
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டீங்க.. அவ்வளவு தான்! நீங்க என்னமோ பெரிய கொடுமைக் காரி மாதிரி பேச ஆரம்பிச்சுடும். மஞ்சுவே அப்படியே நிறைய பட்டுருக்கு அவ கிட்ட.
அதே மாதிரி அந்த ரஞ்சிதமும் நல்ல ஆள் இல்ல. நான் இப்படி சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க. நீங்க ஒவ்வொரு வாட்டி ஹவுஸ் ஓனர் ஹவுஸ் ஓனர்ன்னு அந்த பொம்பளைய சொல்லும் போது எனக்கு காண்டாகுது.
அது ஒண்ணும் இந்த வீட்டு ஓனர் இல்ல. ஓனர் மஞ்சு.
அவ அப்பா சீதனமா கொடுத்த பணத்துல அவ ஆசை ஆசையா கட்டுன வீடு இது!
பார்த்து.. பார்த்து செதுக்கி செதுக்கி கட்டினா இந்த வீட்டை!
வீடு மட்டுமா.. அவ ரகு அண்ணனைத் துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதும், ஆசை ஆசையா குழந்தை பெத்ததும்! எல்லாமே அவ்வளவு அழகு!
ஆனா இப்ப..” நந்தினியின் கண்கள் கலங்கின!
கேட்டுக் கொண்டிருந்த கவிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது!
“சரி.. சரி விடுங்க. உள்ளே வாங்க. பால் காய்ச்சி, நான் மட்டும் தான் குடிச்சேன்.
வாங்க நீங்க ஒரு டம்ளர் குடிங்க”. என்று அவளை உள்ளே அழைத்துப் போய் பால் டம்ளரைக் கொடுத்தாள்.
அதை கையில் வாங்கிக் கொண்டே அந்த வீட்டின் ஹாலில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த மஞ்சுவின் படத்தின் அருகில் போய் நின்றாள் நந்தினி இன்னமும் கலங்கும் கண்களுடன்!
போட்டோவில் இருந்த மஞ்சுவின் கண்களும் கலங்குவது போல தோன்றியது அவளுக்கு!
எங்கே மஞ்சு போன?
உன் மாமாவை விட்டுட்டு, உன் ஆசை மகளை மீனுவை விட்டுட்டு அப்படி எங்க தான் போன?
உன்னால அப்படி போக கூட முடியுமா?
நிச்சயம் முடியாது!
யாரோ என்னமோ உன்னை செஞ்சுருக்காங்க!
யாரு?
அந்த ரியல் எஸ்டேட் ஏஜென்டா?
இல்ல அந்த மணல் குவாரி ஓனரா?
இல்ல.. அந்த பண்ணையார் ராஜசேகரா?
இல்ல உன்னோட நாத்தனார் ரஞ்சிதாவே ஏதாச்சும் பண்ணிட்டாளா உன்னை?
அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லையே அவ! உன் கிட்ட கொஞ்சம் காசு புடுங்குவா.. அதுக்கு மேல எல்லாம் அவ ஒர்த் இல்ல..
ஆனா அந்த வடிவேலுவையும் காணோமே!
இங்க அவன் உன் கூட தான் பைக்கில் ஊரை சுற்றி கடன் வசூல் செஞ்சுட்டு இருந்தான்!
உன்னோட சேர்த்து அவனையும் காணோம்ன உடனே, உன்னையும் அவனையும் இல்ல சேர்த்து வைச்சு பேசுது இந்த ஊரு.
இப்படி உன்னோட பேர் கெட்டுப் போற அளவு, உன் மாமா மனசு உடைஞ்சு போய் பிசினெஸ் பண்றேன்னு சாக்கா வச்சு வீட்டுக்கே வராம, பிள்ளையையும் பார்க்க வராம அப்படியே நார்த் இந்தியாவுல சுத்திட்டு இருக்காரு.
உன் பிள்ள இங்க அவ அத்தை கிட்ட கஷ்டப்பட்டுட்டு இருக்கு!
இப்படி எல்லாத்தையும் தவிக்க விட்டுட்டு நீ எங்க தான் போன?
நந்தினி போட்டோவைப் பார்த்த படி மனதுக்குள் குமுறிக் கொண்டு இருந்தாள்.
“நந்தினி..” என்று கவியின் குரல் கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பியவள்,
“சமையல் நீங்களே பண்ணிப்பீங்களா.. இல்ல சமைக்க ஆள் ஏதும் வேணுமா டீச்சர்?”
“ரொம்ப பிரமாதமா சமைக்க வராது தான். ஆனா பசிக்கு ஏதாச்சும் செஞ்சு சாப்பிட தெரியும்! அது போது எனக்கு!” என்று சிரித்தாள் கவி.
“எனக்கு காலை டுயுட்டி இருக்கிறப்போ முடியாது. ஈவனிங் ட்யூட்டி இருக்கிறப்போ வேணுமின்னா நான் சமைச்சு தர்றேன். நான் நல்லா சமைப்பேன் டீச்சர்”.
“ஒரு வாரம் பார்க்கிறேன். அப்புறம் வேணுமின்னா நீங்க வாங்க” என்றவள், “நீங்களும் அந்த மஞ்சுவும் ரொம்ப திக் ஃப்ரன்ட்ஸா?”
“ஆமா.. டீச்சர். இந்த கிராமத்துல ஜெண்டர் பார்க்காம பிரண்டா பழகினது அவ தான்!
அவளுக்கு நான் மட்டுமில்ல.. வடிவேலுன்னு ஒரு பையன்!
அவனும் ஒரு ஃபிரன்ட்.
அவன், அம்மா அப்பா இல்லாம அனாதை ஆசிரமத்துல வளர்ந்த பையன்! எப்படியோ கஷ்டப்பட்டு தட்டிமுட்டி படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்டான்.
அப்புறம், ஒரு மைக்ரோ ஃபினான்ஸ் கம்பெனியில அசிஸ்டெண்ட் மேனேஜரா வேலைப் பார்த்துட்டு இருந்தான்.
லோன் ரெக்கவரி டிவிஷன்.
சுத்துப்பட்டு கிராமத்துல இருக்கும் சுயஉதவி குழுவுக்கு எல்லாம் அவன் கம்பெனி தான் லோன் கொடுக்கும்!
கொடுத்து விட்டு வாரா வாரம் அவன் தான் வசூலுக்கு வருவான்.
அவன் ரொம்ப சாது. நியாயமா அவன் அந்த வேலைக்கு எல்லாம் வந்திருக்கவே கூடாது!
ஆனா பாவம்.. அவனுக்கு இந்த வேலை தான் கிடைச்சது.
ஆனா இந்த ஊர் பொம்பளைங்க நிறைய பேர் வாங்கின கடனை கொடுக்காம, வார வசூலுக்கு வரும் அவனை ஏமாத்திட்டு போய்டுவாங்க.
கமபெனியில் அவன் தலை தான் உருளும்.
அப்ப தான் மஞ்சு அவனுக்கு உதவி பண்ணினா!
அவன் கூட அவன் பைக்கிலோ, இல்லைனா, தன்னோட பைக்கிலோ அந்த பொம்பளைங்க இருக்கிற இடத்தைத் தேடித் பிடிச்சு வசூல் செய்ய நிறைய ஹெல்ப் பண்ணினா.
அப்ப நிறைய பொம்பளைங்க அவள கண்டபடி திட்டுங்க.
அப்ப திட்டுன பொம்பளைங்க.. அப்ப ஒழுங்கா வாங்கின கடனை திருப்பி கட்டாத பொம்பளங்க எல்லாம் சேர்ந்துட்டு தான் இப்ப மஞ்சுவை தப்பா பேசிட்டு அலையுதுங்க.
ஆனா அதுங்க வாய்க்கு அவல் கொடுக்கிற மாதிரி இந்த வடிவேலையும் அவ காணாம போன நாள்ல இருந்து காணோம்.
ரெண்டு பேத்தோட போனும் போக மாட்டேங்குது.
பத்தாததுக்கு என்னோட போனையும் டவுன்ல சர்வீஸ் கொடுத்து வாங்கிட்டு வர போனா மஞ்சு. கடைசியா அவ காணாம போன அன்னிக்கு! அதுவும் எங்க போச்சுன்னு தெரியல. போன் போக மாட்டேங்குது!
எனக்கு அன்னிக்கு ஈவனிங் டுயூட்டி. லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். வந்து அப்படியே படுத்துட்டேன்.
போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னதுக்கு, அந்த ரஞ்சிதா அப்படி என் கிட்ட சண்டைக்கு வந்துச்சு அன்னிக்கு!
அதான் அவ தெளிவா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்காளே!
மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்னு! அப்புறம் என்ன?
போலிசுக்கு போய் அவங்க அதை நோண்டி எடுத்து, என் தம்பி அசிங்கப்பட்டு தெருவுல நடமாட முடியாம போகணுமா அப்படின்னு.
ஆனா இப்ப அதுவே தான் வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் என்னோட தம்பி பொண்டாட்டி வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டான்னு சொல்லிட்டு திரியுது!
உங்க கிட்டயும் அப்படி தானே சொல்லுச்சு?” என்றாள் நந்தினி ஆதங்கத்துடன்!
கொஞ்சம் சங்கடத்துடன் தயக்கமாக “ஆ.. ஆமாம்” என்றாள் கவி.
“பாருங்க டீச்சர். அப்படி ஆசையா ஆசையா லவ் பண்ணின புருசனை, ஆசை ஆசையா பெத்துகிட்ட புள்ளைய விட்டுட்டு, இந்த வீட்ட இந்த தோட்டத்தை விட்டுட்டு அவளால ஓடி போக முடியுமா?
அந்த வடிவேலும் ரொம்ப நல்லவன் தான்!
அம்மா இல்லாத எனக்கு அம்மா மாதிரி சோறு போட்டவ மஞ்சுன்னு அவனே பல முறை சொல்லி இருக்கான்!
அவன் கிட்டய அப்படி தாயன்போட நடந்துகிட்ட அவ, தன்னோட புள்ளைய எப்படி வளர்த்தா தெரியுமா?
ஏய்.. இங்க பாரு.. மத்தவங்க மாதிரி எல்லாம் நான் ஏதோ கல்யாணம் பண்ணினோம். கர்ப்பம் ஆனோம் பிள்ளைய பெத்தொம்னு எல்லாம் இருக்க மாட்டேன்.
நான் என்னோட பிள்ளைய ரசிச்சு ரசிச்சு சுமப்பேன். பெத்துக்குவேன். வளர்த்து எடுப்பேன் அப்படின்னு சொல்லி சொல்லி வளர்த்தா!
அவ அப்படி சொல்லும்போது தான் எனக்கு கடவுள் அந்த பாக்கியம் கொடுக்கலையே கொஞ்சம் பொறமை கூட அவ மேல எனக்கு வந்திருக்கு!
அப்படி எல்லாம் பெத்த பொண்ணு, இன்னிக்கு அம்மாவை காணோம்னு மனசுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கு!
ஆறு வயசு தான் ஆகுது மீனு குட்டிக்கு. அழுகைய உள்ளுக்குள்ள அடக்கி வைக்கிற வயசா அதுக்கு!
ஆனாலும் அப்படி தான் இருக்கு மீனு பாப்பா. அவ அத்தைக்கு பயந்துகிட்டு! ரகு அண்ணனாவது அவ கூட இருக்கலாம். அவரும் இல்ல கூட! அந்த பிஞ்சு மனசு ரொம்ப பாவம்!
என்கிட்டயும் விட மாட்டேங்குது ரஞ்சிதா!
டவுன்ல ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல வேன்ல போய் படிச்சுட்டு இருந்துச்சு. இப்ப அவள உங்க கவர்மென்ட் ஸ்கூலில் சேர்த்துருக்கு ரஞ்சிதா”.
“கவர்மென்ட் ஸ்கூலிலும் நல்லா படிக்கலாம் நந்தினி”.
“அய்யோ டீச்சர்.. நீங்க தப்பா நினைக்காதீங்க. மீனுவுக்கு நல்ல எஜுகேசன் கொடுக்க ஒண்ணும் இங்க சேர்க்கல அவங்க.
காலையில் எழுந்து சீக்கிரம் சமைக்கணும் பாப்பாவுக்கு. அதனால தான் இங்க சேர்த்துருக்கு.
நீங்க எந்த கிளாஸ் டீச்சர்?”
“நான் செவன்த் ஸ்டான்டர்டு கிளாஸ் டீச்சர்.”
“பாப்பா இப்ப தான் ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டு படிக்கிறா. கொஞ்சம் பார்த்துக்கங்க. பேர் ஆர்.மீன நேத்ரா”.
“கண்டிப்பா!” உறுதியளித்தாள் கவி.
வீட்டை ஒழுங்குப்படுத்த கவிக்கு கொஞ்சம் உதவி விட்டு கிளம்பினாள் நந்தினி.
அவள் சென்றவுடன் சுவற்றில் இருந்த மஞ்சுவின் போட்டோவின் மேல் எல்லாம் ஒரே ஈரம்!
இது எப்படி இவ்வளவு ஈரம் வந்துச்சு?
நந்தினி இதுல கோலின் ஸ்ப்ரே அடிச்சு விட்டுட்டு துடைக்க மறந்துடுச்சு போல! என்று மனதுள் சொல்லிக் கொண்டு தன் கையில் இருந்த துணி கொண்டு அந்த போட்டோவை துடைத்து விட்டு கை கால் கழுவ பாத்ரூம் நோக்கி சென்றாள் கவி.
போட்டோவில் மஞ்சுவின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்!
********
“டீச்சர்.. டீச்சர்..” கையில் டீ டம்ளரை எடுத்து கொண்டு ஹாலில் அமர வந்த கவி சிறுமிகளின் குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தாள்.
இரண்டு சிறுமிகள்!
ஒருத்தி கவுன் அணிந்த படி.
இன்னொருவள் இன்னமும் ஸ்கூல் யுனிஃபோர்மில்! தலைப் பின்னல் ஒரு பக்கம் அவிழ்ந்து ரிப்பன் தொங்கிக் கொண்டு இருந்தது!
ஆனால் களைப்பாக தோன்றினாலும் நல்ல களையான முகம்!
சற்றே பெரிய கண்கள். நன்றாக மை போட்டு விட்டால், உண்மையிலே மீன் போல தோன்றும் கண்கள்!
அடர்ந்த இமைகள்! சின்ன கூரான மூக்கு! பெரியவள் ஆனால் ஆளை அசர வைக்கும் அழகியாக இருப்பாள் என்றே தோன்றியது!
“என்னம்மா எதுக்கு வந்துருக்கீங்க?’ என்றாள் கவி.
“டீச்சர்.. இவங்க வீடு பூட்டி இருக்கு. இவ அத்தை டவுனுக்கு போய் இருக்காங்களாம். இன்னும் வரல வீட்டுக்கு. எங்க வீட்டில் தான் பேகை வச்சுட்டு வந்துருக்கோம்.
இவளுக்கு இந்த வீட்டில் இருக்கும் ஊஞ்சலில் ஆட ஆசையாம்! அதான் இங்க வந்திருக்கா” என்றாள் அந்த கவுன் அணிந்த பாப்பா.
“உன் பேர் என்னம்மா?”
“மீன நேத்ரா!”
“ரொம்ப பொருத்தமான பேர் தான்” என்றாள் கவி சிரித்துக் கொண்டே!
அப்போது வேகமாக ஒரு முறை காற்று அடித்து அவர்கள் நின்று இருந்த இடத்தின் அருகில் இருந்த பவள மல்லி மரத்தில் இருந்து நிறைய பூக்கள் கவியின் தலையில் விழுந்தன!
மஞ்சள் லில்லி பூக்கும்!
error: Content is protected !!