விழி கொல்லும் விஷமா நீ.. Epi 26

விழி கொல்லும் விஷமா நீ
Episode 26
Advertisement
யாதவ்வின் வீட்டில் நெருக்கமான சில சொந்தபந்தங்கள் மட்டுமே கூடியிருந்தனர்.
வீட்டிற்கு வெளியில் மீடியாக்காரர்கள் பரபரப்பாக இருக்க, உள்ளேயும் வெளியேயும் பாதுகாவலர்கள் நின்றிருந்தனர்.
Advertisement
Advertisement
அழுகையும் கண்ணீருமே வீட்டை நிரப்பியிருக்க, தன் முன்னே உயிரற்ற சடலமாக இருந்த வசுந்தராவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்.
விழிகள் குளம் கட்டியிருந்தன. இமை சிமிட்டினால் கண்ணீர் விழுந்துவிடுமோ என்ற பயத்திலேயே கண்ணீரை உள்ளிழுத்து வைத்திருந்தான் அவன்.
Advertisement
இத்தனை நேரம் தூரத்திலிந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்திற்கு உள்ளுக்குள் ஒரு கோபம் இருக்கத்தான் செய்தது.
அவனருகே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு வந்து நின்றுக்கொண்டவன், “இப்போ புரிஞ்சதா யாதவ், இருக்கும் போது யாரோட அருமையும் தெரிய மாட்டேங்குது. ஆனா இல்லாதப்பா அவங்களுக்காக அழுறோம். இப்போ கூட உன் கண்ணீருக்கு வேல்யூவே இல்லடா” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.
மனதிலிருந்ததை வாய்விட்டு சொல்லிவிட்டான். யாதவ்விற்கு உள்ளுக்குள் சுருக்கென்று தைத்தது.
தன் நண்பனை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் வலி அப்பட்டமாகத் தெரிய, சித்தார்த்திற்கும் இப்போது ஒரு மாதிரியாகிப் போனது.
சட்டென்று ஒரு மெல்லிய கரம் யாதவ்வின் தோளைத் தொட, “சார்…” என்ற குரல் காதில் விழுந்தது.
அது யாரென்று உணர்ந்த மறுகணம் வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.
அது சாட்சாத் நிஹாரிகாவேதான்..
“ஆஃபீஸ் ஐடிய காமிச்சுட்டு உள்ள வந்தேன், ஆதிராவ உள்ள விட மாட்டேங்குறாங்க…” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பெண்ணவள் எதிர்பார்க்காது அவளை தாவி இறுக அணைத்துக்கொண்டான் யாதவ்.
இத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த விழிநீர் மடை திறந்த வெள்ளம் போல கன்னத்தின் வழியே ஓட, எந்த எதிர்வினையும் காட்ட முடியாமல் சிலையாகி நின்றுக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.
அவன் முதுகைத் தடவி தேற்றவென்று கையை கொண்டு செல்வதும் பின் ஏதோ ஒரு சங்கடத்தில் கரத்தை இழுத்துக்கொள்வதுமாக அவள் தடுமாறிக்கொண்டிருக்க, “ப்ளீஸ் நீஹா… ப்ளீஸ்…” என்றான் ஆடவன் கெஞ்சலாக.
அவன் எதை சொல்கிறான் என்பதை உணர்ந்தவளாய் உடனே அவனை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டவள் விழிகளை மூடி அப்படியே இருக்க, சுற்றியிருந்தவர்களுக்கும் ‘யாரிந்த பெண்?’ என்ற ஆச்சரியம்தான்.
“நீஹா… நீஹா நான் தப்பு பண்ணிட்டேன், அவங்க கூட நான் பேசியிருந்திருக்கணும். ஆனா இப்போ… அவங்கள நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று அவன் தன்னை மீறி அவளிடம் மனம் திறந்து பேச, எந்த பதிலும் சொல்லவில்லை அவள்.
பக்கத்தில் நின்றிருந்த சித்தார்த்தும் சில கணங்கள் அவர்கள் இருவரை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் பின் உடனே சுதாகரித்தவனாய், “லுக், உள்ள எந்த மீடியாகாரங்களும் வந்துர கூடாது, யாரும் ஃபோட்டோ எடுக்க கூடாது கொட் இட்?” என்று காவலாளிகளிடம் கட்டளை பிறப்பித்துவிட்டு வாசலை நோக்கி ஓடினான்.
அங்கு பெரிய வாசற்கதவுக்கு வெளியே ஆதிரா பாவமாய் நின்றுக்கொண்டிருக்க, தூரத்திலிருந்து அவளை பார்த்தவனின் விழிகளில் தன்னை மீறிய ஒரு குற்றவுணர்ச்சியும் ஏக்கமும் மிதந்தது.
அங்கிருந்த காவலாளிகளிடம் சொல்லி அவளை உள்ளே அனுமதித்தவன், அவளை பார்ப்பதற்கு சங்கடப்பட்டே அவள் பக்கம் திரும்பாமல் ஒருபக்கமாய் இருக்க, அவனின் முகபாவனையை ஆதிராவும் கவனிக்காமலில்லை.
வசுந்தராவுக்கான காரியங்கள் முடிய, அடுத்தநாள் யாதவ்வும் நிஹாரிகாவும் அணைத்துக்கொண்டிருக்கும் காட்சிதான் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் பரவியது.
“ஓ ஷீட்! என்ன நீஹா இது. இந்த மீடியாகாரங்களுக்கு வேற வேலையே இல்ல. உள்ள விடாம பண்ணியும் எப்படிதான் வீட்டுக்குள்ள நடந்தத ஃபோட்டோ எடுத்தாங்களோ? ச்சே…” என்று ஆதிரா சலித்துக்கொள்ள, இறுகிய முகமாக தரையை வெறித்திருந்தாள் மற்றவள்.
திடீரென கதவு தட்டப்பட்டது.
இரு பெண்களுமே ஒருசேர திரும்பிப் பார்க்க, யோசனையோடு சென்று கதவைத் திறந்தாள் ஆதிரா.
வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து அவளுடைய புருவங்கள் முடிச்சிட, “அது.. நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன். இப்போதான் சோஷியல் மீடியாவுல நியூஸ் பார்த்தேன். அதான் சும்மா யாதவ் சாரோட கேர்ள் ஃப்ரென்ட பார்த்துட்டு போகலாமேன்னு…” என்றுக்கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தான் ஒருவன்.
நிஹாரிகா பயத்தில் விழிக்க, பதில் சொல்லாது பட்டென்று கதவை மூடினாள் ஆதிரா.
அந்த ஒருவனும் சில நிமிடங்கள் காத்திருந்து பின் சென்ற பத்தே நிமிடங்களில் மீண்டும் வீட்டின் அழைப்புமணி ஒலிக்க, இப்போது கதவை திறந்தது என்னவோ நிஹாரிகாதான்.
“மேடம், உங்கள பார்த்ததுல சந்தோஷம், நாங்க ஸ்டார் நியூஸ் சேனல்லயிருந்து வர்றோம். நீங்க இன்டர்வியூ கொடுத்தீங்கன்னா…” என்று ஒரு சேனல் நிபுணர் ஆரம்பிக்க, “இல்லை சாரி…” என்று உடனே கதவை மூடிக்கொண்டாள் இவள்.
“ஏய் நீஹா, நம்ம வீட்டயே பார்த்துக்கிட்டு நிறைய பேர் நின்னுட்டு இருக்காங்க, என்ன பண்றது இப்போ?” ஆதிராவின் குரலில் பதற்றமும் பயமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
இருவரின் அலைப்பேசிக்கும் தெரிந்தவர்கள் மூலமாக தொடர்ந்து அழைப்புக்கள் வேறு வர, திக்குமுக்காடி போய்விட்டனர் இருவரும்.
அலைப்பேசியை அணைத்து தூக்கிப் போட்டுவிட்டு இரு பெண்களும் தலைமேல் கையை வைத்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்க, முதல் முறை பிரபலங்களின் மனநிலையை உணர்ந்தாள் நிஹாரிகா.
சுதந்திரமாக இருக்க முடியாத சிறை வாழ்க்கையல்லவா அது!
அடுத்தநாள், எப்படியோ போராடி தன் கம்பனிக்கு போய் சேர்ந்த ஆதிரா முதலில் சென்று நின்றது என்னவோ சித்தார்த்தின் முன்னேதான்.
அவனோ ஒரு முக்கியமான ஃபோட்டோ ஷூட்டுக்காக தயாராகிக்கொண்டிருந்தவன், “சித்தார்த்…” என்ற குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.
“சொல்.. சொல்லு ஆதிரா” என்றவனிடத்தில் ஒரு தடுமாற்றம். அவனால் அவளை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை.
அவனின் தடுமாற்றத்தை உணர்ந்தாலும் அதைப்பற்றி மேலும் யோசிக்காமல் நடந்ததை அவள் கூறி முடிக்க, ‘ஷீட்!’ என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனுக்கு அவர்களின் நிலைமை புரியாமல் இல்லை.
“ஐ அன்டர்ஸ்டேன்ட், நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கறது சேஃப் இல்ல. இஃப் யூ டோன்ட் மைன்ட், என்னோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, என் கார அனுப்புறேன், உன் ஃப்ரென்ட ரெடியா இருக்க சொல்லு.. அங்க உங்க ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இருக்காது. ட்ரஸ்ட் மீ!” என்று அவன் உடனே யோசித்து சொல்ல, புருவத்தை நெறித்து தீவிரமாக யோசித்தாள் ஆதிரா.
அவளுக்குமே அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது போல!
“ம்ம்ம்… சரி ஓகே, பட் நான் இந்த வீட்டுக்கு கொடுக்குற வாடகைதான் உங்களுக்கும் கொடுப்பேன். அதிகமா கேட்டீங்கன்னா நாங்க வேற எங்கேயாச்சும் வீட்ட பார்த்துக்குறோம்” என்று ஆதிரா முடிவாக சொல்ல, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையாட்டி வைத்தான் சித்தார்த்.
“என்ட்… நிஹாரிகா நார்மலா இல்ல, எப்போவும் ஒரு மாதிரியா இருக்கா. என்னால அவள இப்படி பார்க்க முடியல. அவள எப்படியாச்சும் யாதவ் கூட சேர்த்து வைக்கணும்” என்று அவள் சொல்ல, அப்போதுதான் அன்றிரவு போதையில் யாதவ் பேசியதும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
“சேம் ஹியர் ஆதி, யாதவ்வும் அப்படிதான் இருக்கான். ஏதோ ஒன்னு ரெண்டு பேருக்கும் இடையில சேர விடாம தடுத்துட்டு இருக்கு. மே பீ… அவங்க பேசிக்கிட்டாலே எவ்ரிதிங் வில் பீ ஓகே” என்றான் சித்தார்த் யோசனையோடு.
ஆதிராவும் நாடியை நீவி விட்டவாறு யோசித்தாள். சட்டென அவளுடைய மூளைக்கு ஒரு மின்னல் வெட்டியது.
“ஐ ஹேவ் அன் ஐடியா.. இது கண்டிப்பா வர்க் அவுட் ஆகும்” அவள் சொல்லிவிட்டு தன் யோசனையை சொல்ல, சித்தார்த்திற்கு இப்போது இதைவிட்டால் வேறுவழி இல்லையென்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
புன்னகையோடு தலையாட்டி வைத்தவன், தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்த திருப்தியோடு செல்லப் போனவளை மீண்டும் அழைத்து நிறுத்தினான்.
“ஆதி…” அவன் அழைத்ததும் அவன் விழிகளை அவள் கூர்மையாக நோக்க, அந்த பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை அவனால்.
“அது… அது வந்து.. ஐ அம் சாரி! நான்…” என்று அவன் ஏதோ சொல்ல வர, கை நீட்டி தடுத்தவள், “நமக்குள்ள பேசிக்க எதுவும் இல்ல மிஸ்டர் சித்தார்த், என் ஃப்ரென்டுக்காக மட்டும்தான் உங்ககூட பேசுறேன். எல்லாத்தையும் நான் மறந்துட்டதா நீங்களா நினைச்சுக்காதீங்க” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு பேசிவிட்டு நகர்ந்தாள்.
அந்த வார்த்தைகளில் சித்தார்த்தின் முகமே வாடிப்போக, அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்திருந்தான் அவன்.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
ஒருபக்கம் தன் பொருட்களை நிஹாரிகா தயார்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தொண்டை தண்ணீர் வற்ற தன் தந்தையோடு மன்றாடிக்கொண்டிருந்தாள் ஆதிரா.
“அய்யோ அப்பா இப்போ கெளம்பதான் போறோம், பத்திரமா வந்து சேர்ந்துருவோம்”
—————–
“ட்ரெயின் கிடையாது, கேப்லதான் வர்றோம். அது.. அது ஃப்ரீதான் எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க ட்ரான்ஸ்போர்ட்டுக்கு ஸ்பான்ஸர் பண்ணியிருக்காங்க, நீங்க பயப்படாதீங்க”
——————
“அப்பா… அப்பா.. பேசுறது எதுவுமே கேக்க மாட்டேங்குது.. ஹெலோ.. ஹெ…லோ.. அப்பா..” என்று கேட்காதது போல பாவனை செய்தவாறு உடனே அழைப்பைத் துண்டித்தவள், ‘ஊஃப்ப்… எம்புட்டு போராட்டம்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டவாறு தோழியைப் பார்த்தாள்.
“கண்டிப்பா உனக்கு எங்க ஊர் பிடிக்கும் நீஹா, திருவிழா வேற, செம்மயா இருக்க போகுது” என்றாள் அவள் உற்சாகமாக.
ஆனால், நிஹாரிகா எதுவும் பேசவில்லை. அமைதியான ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டாள் ஆதிரா.
அதேநேரம், வசுந்தராவின் மாலையிடப்பட்ட பெரிய புகைப்படம் சுவற்றில் தொங்க விடப்பட்டிருக்க, அதற்கு நேரெதிரே சோஃபாவில் அமர்ந்திருந்த யாதவ்வோ இறுகிய முகமாக கையிலிருந்த அலைப்பேசித் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“டேய் யாதவ்…” என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தவன் அவனருகே அமர்ந்து தோழனின் பார்வை இருக்கும் திசையைப் பார்க்க, மறுகணம் அவன் விழிகள் பெரிதாய் விரிந்துக்கொண்டன.
“இது… அப்போ நீ நீஹாவ லவ் பண்ற நேரம் அவ கூட எடுத்துக்கிட்ட ஃபோட்டோல்ல, பிரிஞ்சப்போவே எல்லாத்தையும் டிலீட் பண்ணேன்னு நினைச்சேன்” என்று குறையாத அதிர்ச்சியோடு சித்தார்த் கேட்க, வலி நிறைந்த புன்னகையோடு இல்லையெனும் விதமாக தலையாட்டினான் யாதவ்.
தோழனை கூர்மையாகப் பார்த்த சித்தார்த்திற்கு ஒருபக்கம் அவனின் அமைதியில் கோபம் ஊற்றெடுத்தாலும் இன்னொரு புறம் இப்போதாவது மனம் மாறினானே என்ற நிம்மதி உள்ளுக்குள் பரவியது.
“சரி உன் ட்ரெஸ் எல்லா பேக் பண்ணிரு, டூ டேய்ஸ்ல ஒரு இடத்துக்கு போறோம். முடியாதுன்னு மட்டும் சொல்லாத, யூ நீட் சம் ப்ரேக், நானே உன்ன பிக்கப் பண்றேன்” அவன் சொல்லிவிட்டு எங்கு எடக்குமடக்காக கேள்விகளைக் கேட்டுவிடுவானோ என்ற பயத்தில் எழப் போக, அவனிடத்தில் வெறும் அமைதி மட்டுமே..
‘அப்பாடா’ என்றுவிட்டு உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவன் அடுத்த இரண்டு நாட்களில் அவனை அழைத்துக்கொண்டு ஆதிராவின் சொந்த ஊரை நோக்கிச் சென்றான்.
‘தேனி’ என்ற ஊர்ப்பெயரைத் தாங்கிய பெரிய பலகை கண்ணில் பட, இத்தனை நேரம் ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டு வந்த யாதவ்வின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
“சித்து, இந்த ஊருக்கு எதுக்கு வந்திருக்கோம். பொதுவா ப்ரேக் எடுக்குறதுன்னாலே இன்டர்நேஷனல் ட்ரிப்தான் அழைச்சுட்டு போவ? இப்போ என்ன புதுசா உள்ளூர்லயே..”
இத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் இப்போது மனதில் தோன்றிய கேள்வியை கேட்டுவிட்டான்.
‘அய்யய்யோ… ரோபோவுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சு..’ என தனக்குள் அலெர்ட் ஆகிக்கொண்டவன், “அது.. அது யாதவ் இங்கதான் என் ஒன்னுவிட்ட மாமா இருக்காரு. ரொம்பநாளா என்னை வரச் சொல்லி ஒரே தொல்லை, அதான் இப்போ ஊர் திருவிழா வேற நடக்கப் போகுதா… உன்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருக்கேன். என்ட் யூ டோன்ட் வொர்ரிடா, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், இங்க உனக்கு டிஸ்டர்பன்ஸ் இருக்காது ஹிஹிஹி…” என்று வாயிற்கு வந்ததை சொல்லி எப்படியோ சமாளித்தான்.
யாதவ்விற்கு அப்போதும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. விழிகளை கூர்மையாக்கி சந்தேக பார்வைப் பார்த்தவன் பயணக் களைப்பில் அதற்குமேல் எதுவும் கேட்காமல் அமைதியாகிவிட்டான்.
சில மணித்தியாலங்களும் கடந்தன. அந்த பெரிய வீட்டின் முன்னே காரை நிறுத்தினான் சித்தார்த்.
யாதவ்வோ கண்ணாடி வழியே குனிந்து சுற்றிமுற்றி பார்த்தவன், “சித்து யார் வீடுடா இது?” என்றுக்கொண்டே இறங்க, “வாங்க வாங்க தம்பி… எப்படி இருக்கீங்க?” என்று கத்திக்கொண்டே வெளியே வந்த மார்த்தாண்டமோ அவனை அணைத்துக்கொண்டார்.
பெக்க பெக்கவென விழித்தவாறு யாதவ் நிற்க, “உங்களுக்கு இவன தெரியுமா அங்கிள் ஓ ஷீட்! சாரி இவன தெரியாம இருக்காதுதான்…” என்றான் மற்றவன் ஞாபகம் வந்தவனாய்.
ஆனால் சித்தார்த்தின் தோளில் தட்டிய பெரியவரோ, “அட தம்பி, இவர் இப்போ பெரிய ஆளுதான். ஆனா கொஞ்ச வருஷத்துக் முன்னாடி இந்த தம்பிதான் எங்களுக்கு உதவி பண்ணுச்சு” என்று உதவியை மறக்காதவராக அன்று நடந்ததை நினைவுக் கூர்ந்து சொல்ல, அப்போதுதான் யாதவ்விற்கும் நினைவுக்கு வந்தது.
“என்.. என்னை மன்னிச்சிருங்க, எனக்கு இப்போதான் நியாபகமே வந்துச்சு” என்று அவன் சொன்னதும், “விடுங்க தம்பி.. மறதிங்குறது மனுஷ இயல்புதானே! நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க, ஊர்ல எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன், என் ஆளுங்களும் உங்கள சுத்திதான் இருப்பாங்க, ஊரை விட்டு போற வரைக்கும் எவனும் உங்கள தொல்லை பண்ண மாட்டான். அதுக்கு நான் கேரண்டி” என்று கெத்தாக தன் பெரிய மீசையை முறுக்கிக்கொண்டார் மார்த்தாண்டம்.
பெரியவர் பேசிக்கொண்டே போக, தலையை சரித்தபடி அவரைத் தாண்டி வீட்டு வாசலை எட்டிப் பார்த்தான் யாதவ்.
அங்கு ஆதிராவோடு தன் முட்டை விழிகளை மேலும் விரித்தபடி நிஹாரிகா நின்றுக்கொண்டிருக்க, அவனும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.
ஸ்லோ மோஷனில் சித்தார்த்தை அவன் திரும்பிப் பார்க்க, ‘அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே..’ என்று திருதிருவென விழித்தவாறு நகரப் போனவன் நண்பனின் முகத்தில் தெரிந்த தேஜஸில் ஆச்சரியமாகப் பார்த்தான்.
“நீ தெரிஞ்சு பண்ணியோ தெரியாம பண்ணியோ வாழ்க்கையில மொதல் தடவை ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க” என்று யாதவ் சொல்லிவிட்டு மார்த்தாண்டத்தோடு உள்ளே செல்ல, போகும் அவனை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
*************
-Sheha zaki..
