“சொல்லுங்க.. எப்போ இதை பத்தி பேசினாலும் சரியா பதில் வரதில்லை. இப்போ எனக்கு தெரிஞ்சாகனும்” இவளின் உறுதி, கிரிக்கு இரத்த கொதிப்பையே உண்டாக்கிவிடும் போல் இருந்தது.
“ப்ளீஸ் சொல்லிடுங்க.. நான் ஒரு முடிவுக்கு வந்திடுவேன். இதுவா அதுவானு கிடந்து தத்திளிக்க தேவையில்லை.. எத்தனை நாள் தான் என்னை ஏமாத்துவீங்க! முதலில் உங்க மேல இருந்த நம்பிக்கை எல்லாம் இப்போ குறைஞ்சிட்டே வருது. இருக்குற நம்பிக்கையையாவது காப்பாதிடுங்க” அவளின் உறுதி அவனை அசைக்க தான் செய்தது.
Advertisement
ஒற்றை கையால் முகத்தை அழுந்த தேய்த்தவன் “ராஜி, உன்னோட ஒரிஜினில் போட்டோவை, ஏஐல போட்டு, என்னோட டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி அழகான பொண்ணா மாத்தி, அனுப்பிட்டா.
அது ஏஐனு தெரியாமல் மனசுலயும், மூளையிலையும் பதிஞ்சு போய்ட்டா அவ” என்றதில் இமைக்க மறந்து சுவற்றையே பார்த்திருந்தாள்.
“இங்க நெஞ்சுக்குள்ள இருக்குற அந்த கமலி வெளியே போனா தான் இந்த கமலி உள்ள வர முடியும்!”
Advertisement
“அதுக்காக தான், இப்போ கொஞ்ச நாளா நானும் டிரை பண்ணிட்டே தான் இருக்கேன் முடியல! அதுக்கு என்னை, என் மூளையை ரெடி பண்ணனும் கொஞ்சம் டைம் குடுத்தா தான் முடியும்”
Advertisement
இவன் சொல்வதையெல்லாம் நம்பவே முடியவில்லை கமலிக்கு. சென்னதையெல்லாம் , சரியாய் மூளைக்குள் ஏற்றுவதே மிக கடிமாக தான் இருந்தது. ஆனால் அது ஏறிய பின்போ..
“ஏஐக்கும் ஒரிஜினல்க்கும் வித்யாசம் தெரியலையா?”
“தெரியாத அளவுக்கு நேச்சுரலா இருந்தது. தவிர நாம வீடியோ கால் பேசுறதுக்கும் சரியான சந்தர்ப்பம் அமையவுமில்லை” என்றதில், இவளுக்கும் அந்த நேர நிமிடங்கள் கண் முன் ஓடி மறைந்தது.
Advertisement
ஆம் பேசவில்லை தான், பேசும் நேரங்கள் அமைந்தாலும் அவனுக்கோ இல்லை தனக்கோ ஏதாவது இடையூருகள் வந்து தொலைத்ததே. இப்படியெல்லாம் நடக்குமா! என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் கமலி.
“இதெல்லாம் ஒரு காரணமானு நீ நினைக்கலாம் கமலி. அதான் சொல்லாமலேயே இருந்தேன்” என்றவன் “சாரி..” என கேட்க
“அக்கா பண்ணதுக்கு, உன் மேல இப்போ வரை கோபத்தை காட்டிட்டே இருக்கேன்”
“எவ்வளவு அடிக்க முடியுமோ, அடிச்சிட்டு, சாரி வேறல்ல..” இதழ்கள் விரக்தியில் சிரித்தது.
“உங்க அக்கா எதுக்காக இந்த வேலை பார்க்கனும்? எதுக்காக என்னை…?” அதற்கு மேல் பேச முடியவில்லை இவளால்.
ஆனால் அதை சரியாய் புரிந்து கொண்டவனோ.. “வாயில்லா பூச்சியா இருக்க, கேட்டதும் நகையெல்லாம் தூக்கி கொடுத்திருக்க. வீடு அவளுக்கு தான்னு தெரிஞ்சும் இவ்வளவு அமைதியாய் இருந்திருக்க.. அதுக்காக தான்” கேட்டவளுக்கோ இருட்டிக்கொண்டு வந்தது.
கூடவே, ‘இதெல்லாம் எதுவுமே தெரியாம லூசு மாதிரி இருந்திருக்கேன்ல’ மனதினுள்ளே நினைக்க தான் முடிந்தது. அவனிடம் பேசும் நிலையை கடந்துவிட்டாள், வாய் திறந்தால் கூட பேச்சு வருமா என தெரியவில்லை.
இவள் புறம் எந்த ஒரு பதிலும் வராது போக, “கமலி, ஹலோ.. கமலி..” என இவன் சத்தமிட, இவளோ போனை கட் செய்து அருகிலேயே துக்கியும் எறிய , பீப் என்ற சத்தத்தோடு போன் கட்டாகிவிட்டது.
என்னதிது, கட் பண்ணிட்டாளா? தனக்குள்ளே கேட்டு கொண்டவன், அழறாளோ? என திரும்ப அவளுக்கு அழைத்தான். எத்தனை முறை அழைத்தும் எடுக்கவில்லை இவள்.
அடுத்த இரண்டொரு நிமிடங்களில், மேசேஜ் நோட்டிபிகேஷன் வந்து விழுந்தது.
அதுவரை கட்டிலின் விளிம்பையே வெறித்து பார்த்திருந்தவள் பார்வை அருகில் தூக்கி எறிந்த போனில் பதிந்தது.
“இப்போ நீ கால் எடுக்கலை, கர்ணா போனுக்கு கூப்பிடுவேன்” என்ற மிரட்டல் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது.
டபுள் டிக் காட்டிய மறு கனமே இவளுக்கு அழைத்துவிட்டான் கிரி. அதுவும் வீடியோ கால் வேறு.
எங்கே கர்ணனுக்கு அழைத்திடுவானோ என பயந்தே வீடியோ காலை எடுத்துவிட்டாள்.
“பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ற? என்ன பழக்கம் இது..? படுத்துற நீ” தலையை கோதிக்கோண்டே அழுத்தமாய் பார்த்து வைத்தவன் இப்போதும் அவளை முழுமையாய் ஈர்த்தான்.
எப்போதும் போல ஹோல்டரில் கிடந்த போன் வழியே அவனை ஊடுருவினாள். இம்முறை அடர் நீல டீசர்ட், வாராத கலைந்து கிடந்த தலைமுடி,
அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் இந்த கண்ணை பொசுக்கிவிடும் எண்ணம் தான் அவளுள்.
இதே நினைப்போடு அவள் அவனை பார்த்துகொண்டிருக்க, இவனோ அவளை ஆராய்ந்தான்.
அவள் அழவில்லை, ஆனால் அடக்கப்பட்ட உணர்வுகள் கொட்டி கிடந்தது அவள் முகத்தில். இதுவரை காணாத ஏதோ ஒன்று அவனை தடம்மாற செய்து கொண்டிருந்த நேரத்தில்
“டைவர்ஸ் பண்ணிக்கலாமா” என்ற கமலியின் வார்த்தைகள் அபஸ்வரமாய் கேட்டது அவன் காதுகளில்.
சட்டென இவன் முகம் கடுமை காட்ட “மூஞ்சு, உடையதான் போகுது பாரு” சொன்னவனின் குரலில் அவ்வளவு கோபம்.
அப்போதும் அவள் அதே பார்வையை இவள் பார்த்து வைக்க
“நீ எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் இது தான். உன்னை விடற ஐடியா எனக்கில்லை” இவன் பேச, அதை நம்பாத பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள் கமலி.
“அப்படி பார்க்காத! நம்பு, நிஜமா தான் சொல்றேன்” எப்போதும் கடுமை காட்டும் அவன் குரல் கெஞ்சிற்று அவளிடம். இருந்தும் சிறிதும் அசைவில்லை அவளிடம்.
“நம்புடி” என்றான் ஒன்றை வார்த்தையில்.
“நம்புற மாதிரி ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்” கமறியது குரல். பின் ஒரு கனம் கூட தாமதிக்காதவனாய் “ஒன்னென்ன? நிறைய இருக்கு கேளு” திமிறாய் புருவத்தை உயர்த்தி,
“எவ்வளவு மனஸ்தாபம் இருந்தாலும் மூஞ்சில கூட காட்ட மாட்ற.. எப்போ போன் பண்ணினாலும் சாப்பிட்டிங்களானு தான் முதல்ல விசாரிக்கிற.. என்னை பிடிச்சிருக்குனு எங்கிட்டயே சொல்ற! எப்போவுமே என்னை சுத்தி சுத்தி வர்ற?” அடுக்கிக்கொண்டே இருந்தவன் “உன்னை அப்படியே விட்டுட்டு என்னை எங்க போக சொல்ற? அப்படியே போனாலும் நிம்மதியா இருக்க மாட்டேன் கமலி” என்றதில் அழுகை வெடிக்க தயாரானது கமலிக்கு. அடக்கி கொண்டாள்.
“புருஷன் பின்னாடியே சுத்துற பொண்டாட்டிலாம் காட்ஸ் கிப்ட். என்ன கொஞ்சம் பெரிய சைஸ் கிப்டா போச்சு! பாராமா தெரிஞ்சாலும் சுமக்க நான் ரெடி ஆகிட்டேன். மனுசன சாவடிக்காம கொஞ்சம் டைம் தான் தாயேன்டி!” இவன் பேசிக்கொண்டே சென்றதில், கண்கள் சிவந்து நீர் கோர்த்து கமலிக்கு. அழுகையை அடக்க அடக்க,அடக்க வேகமாய் நீர் நிறைய துவங்கியது.
அவள் முகத்தையே பார்த்திருந்தவன்
“அழாதடி..” சொன்ன கனம், வெடித்தழுதாள் கமலி. போனை அப்படியே விட்டிருக்க, அது மல்லாந்து விழுந்தது.
போனில் சீலிங் பேன் ஓடுவது மட்டுமே தெரிய, கூடவே அவள் அழும் குரல் மட்டுமே அவன் காதுகளை எட்டியது.
அழவிட்டுவிட்டான். ஆனால் போனை அனைக்கவும் இல்லை. அவளுக்காக காத்திருந்தான். வெடித்து அழுத அழுகை வீரியம் குறைய நேரமானது.
வெகு நேரம் சென்று தான் அவன் லைனில் இருப்பதே உறைத்தது.
அதன் பின் அவளே வந்து போனை எடுத்தாள். அவன் பார்வை வேகமாய் ஆராயந்தது அவளை.
முகம் நன்றாக கழுவி துடைக்கப்பட்டிருந்தது.
“வச்சிடறேன்” என இவள் முடிக்கும் முன்..
“தப்பு என் மேல தான் கமலி.. நீ ஏன் அழற..” கேட்கையிலேயே, இவளுக்கு மீண்டும் கண் கலங்க துவங்கியது.
“அழாதன்னு சொல்றேன்ல. நிம்மதியா என்னால் இங்க இருக்க முடியாது கமலி.. தயவு பண்ணி அழாத” இவன் குரல் உயர்த்த, பட்டென கண்களை அழுந்த துடைத்து கொண்டவள்..
“இப்போ அழல.. நீங்க போன் வச்ச பிறகு அழுதா?” இவள் திமிராய் கேட்க
“அழ மாட்டா என் கமலி” என்றான் இவனும் அவளை விட திமிராக….