Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

25. Kala Palaniappan - காஃபி வித் காதல்

காஃபி வித் காதல் 26.2

காஃபி ஷாப்பில் இருந்து கார்த்தியும் எழிலும் கிளம்பவே மனமில்லாமல் கிளம்ப எழுந்தனர்.

“என்ன பாஸ் காஃபி எப்படி இருந்துச்சு?”



Advertisement

“நீ சொன்ன மாதிரி, ஜில்லுனு  நல்லாவே இருந்துச்சு. ஒரு மணி நேரம் பேசிட்டே மெதுவா குடிக்க சரியான சாய்ஸ்.. இனிமே நான் உன்ன ஜில்லுன்னு கூப்பிடவா?”

“கூப்பிடுங்க பாஸ்.. சூப்பரா இருக்கு” என்றாள் பூரிப்பாக.

Advertisement

Advertisement

“நாட்டுல நம்மளை மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போலவே.. இந்த நேரத்துல  இத்தனை பேர் காஃபி ஷாப் வராங்களே?” என்று கூறி சிரித்துக்கொண்டே ஒரு முறை சுற்றி பார்த்தாள்.

“பாலு அண்ணா..” என்று ஒரு நிமிடம் ஜெர்க்காகி விட்டாள்.

Advertisement

கார்த்தியும் அங்கே பார்த்து, ஒரு நிமிடம் பயந்து விட்டான்.

“வா ஜில்லு, சத்தமில்லாமல் கிளம்பிடலாம்” என்றான் கார்த்தி பதட்டமாக.

“இருங்க பாஸ்.. அண்ணா கூட யாரோ ஒரு பொண்ணு இருக்காங்களே?” என்று எழில் அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டாள்.

“நம்மளை பார்த்தா மாட்டிப்போம். இப்ப கிளம்புவோம், அப்புறம் அது யாருன்னு பார்த்துக்கோ.”

“இப்ப போயிட்டா அப்புறம் எப்படி பார்க்கிறது?” என்று எழில் சத்தமாக கேட்டுவிடவே, இவள் குரலை கேட்டு பாலுவும் எழிலை நேருக்கு நேர் பார்த்து விட்டான்.

எழிலை போல இல்லாமல் பாலு பதட்டமாகிவிட்டான்.

“ஹாய் அண்ணா” என்று கை காட்டினாள் எழில்..

“போச்சு போச்சு” என்று இந்தப்பக்கம் கார்த்தியும் அந்த பக்கம் பாலுவும் தான் பதறினார்கள்.

வேறு வழியில்லாமல் பாலு இவர்களை நோக்கி வரப்போக அவனுக்கு முன்னே எழில் வேகமாக அவர்கள் இருந்த மேஜைக்கு சென்று விட்டாள்.

இவளை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்று சிரித்தாள் அங்கே அமர்ந்திருந்த பெண்.

“நீ எங்க இங்க எழில்?” என்றான் பாலு எழிலின் கவனத்தை திருப்ப. 

“அதுவா, கார்த்தி எனக்கு ட்ரீட் கொடுக்க கூட்டிட்டு வந்தாங்க”

கார்த்தியும் “ஹாய் அண்ணா” என்றான் சங்கடமாக.

“அது என்ன எழிலுக்கு மட்டும் தனியா ட்ரீட்?”

“பின்ன நான் தானே அவங்க தாத்தா பாட்டி கூட எல்லாம் சேர ஐடியா கொடுத்தேன்.. நீங்களா கொடுத்தீங்க? அப்புறம் இவங்க..” என்றாள் அங்கே இவர்களை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை காட்டி.

அவளுக்கு காலையில் பார்த்த புகைப்படுத்தில் இருந்த பெண் தான் இது என்று தெளிவாகவே தெரிந்தது. ஆம், போட்டோவில் இவளும் தமிழும் பார்த்து பாராட்டிய லேசான தெத்துப்பல்லும், வலது நெற்றியில் இருந்த சின்ன மச்சமும் அது லாவண்யா என்று உறுதி செய்தது.

“என் பிரண்ட் .. லாவண்யா” என்றான் பாலு தலையை சொரிந்து கொண்டே.

“முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது என்னன்னு இப்ப தான் புரியுது..”

என்று பாலுவிற்கு மட்டுமே கேட்குமாறு கூறினாள்.

பின் அங்கே இருந்து விடைபெற்று கிளம்பினார்கள் எழிலும் கார்த்தியும்.

“என்ன பாலன், யாருக்கும் தெரியாம கல்யாணம் வரை கொண்டு போயிடலாம்னு நினைச்சா இப்படி மாட்டிக்கிட்டோமே?” என்றாள் லாவண்யா பாவமாக.

“எழில் தானே பார்த்தா, என் கிட்ட பேசாமல் வீட்ல மாட்டி விட மாட்டா லயா.. நான் சமாளிச்சுகிறேன்.. கவலை பட வேண்டாம்” என்று லாவண்யாவிடம்  கூறினாலும், மனதிற்கு கார்த்தியுடன் எழில் தனியாக இவ்வளவு தூரம் வந்திருப்பது நெருடலாக இருந்தது.

பாலுவும் லாவண்யாவும் ஒரு வருடமாக காதலித்து கொண்டிருக்கிறார்கள்.

கவினுக்கு மட்டும் இது தெரியும். லாவண்யாவின் அண்ணன் சத்யன், கவின் இருவரும் ஒரே அலுவலக்தில் வேலை செய்பவர்கள். கிரௌண்டிற்கு இவர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்லும்பொழுது தான் பாலுவுக்கு பழக்கம். ஒரு நாள் விளையாடும்பொழுது சத்யனுக்கு அடிபட்டுவிடவே அவனை அவன் வீட்டில் விட சென்றிருந்தான் பாலு. அங்கே தான் முதன்முதலாக லாவண்யாவை பார்த்தான். பார்த்ததும் மனதிற்குள் புகுந்துவிட்டாள் லாவண்யா.

சற்று நேரத்திலே சத்யனின் கால் வீங்க ஆரம்பிக்கவே அவனுக்கு பிராக்சர் என்று புரிந்து போனது. சத்யன் லாவண்யாவின் பெற்றோர்கள் அப்பொழுது திருப்பதி சென்றிருந்தார்கள். லாவன்யாவால் தனியாக சத்யனை மருத்துவமனை கூட்டி செல்வது கஷ்டம் என்று தோன்றவே, பாலு உடன் இருந்து அன்று முழுவதும் அவர்களுக்கு  உதவி செய்தான்.

அதில்  இருந்து லாவண்யாவிற்கும் பாலுவை பிடித்துப்போனது. அன்றிலிருந்து யாருக்கும் தெரியாமல் அழகாக ரகசியமாக வளர்ந்து வருகிறது இவர்களது காதல்.

கவின்  மூலமாக காய் நகர்த்தி எதேர்ச்சியாக வரன் அமைவது போல எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.

இவர்கள் ஆட்டம் தெரியாமல் கவியரசி அங்கே ஒரு ஆட்டத்தை ஆரம்பித்திருந்தாள், “பாலுவுக்கு நல்ல பொண்ணா பார்க்க வேண்டியது என் பொறுப்பு. எங்க மீனா அத்தை மனசு கஷ்டபடற மாதிரி ஆகிடுச்சுல.. வேற பொண்ணு பார்க்கலாம்” என்று.

 

——————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!