Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் – நிறைவு பகுதி 

“எனக்கு டை கட்டிவிடு சின்னு” என்றான் வசி வழக்கம் போல.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க தயாராகி கொண்டிருந்தவள் டையை எடுத்தக் கொண்டு அவனெதிரே சென்று தன் இருகரங்களையும் விரிக்க  அவளை தன் உயரத்திற்கு தூக்கி கொண்டான்.


Advertisement

அவன் கழுத்தில் டையை மாட்டிக்கொண்டே “மாமு” குழைந்தாள்

Advertisement

“ம்”

Advertisement

அவன் மீசையை முறுக்கிவிட்டு அழுத்தமான உதடுகளில் தன் இதழ்களை கொண்டு உரசினாள்.

Advertisement

“சின்னு, முக்கியமான அப்பாயின்ட்மென்ட் இருக்குடி. மாமுவுக்கு மூடை ஏத்தாதே” 
“அப்படியென்ன முக்கியமான அப்பாயின்ட்மென்ட்?”
“இன்னைக்கு ஒரு பொண்ணை மீட் பண்ண போறேன்”
“யார?”
“மீட் பண்ணிட்டு வந்து சொல்றேன்” என்று கண் சிமிட்டினான்.
“அப்போ கீழே இறக்கி விடுங்க, சட்டை கசங்கிட போவுது”
“யார மீட் பண்ண போறேன்னு கேட்டு சட்டைய பிடிச்சு சண்டை போடுவனு நினைச்சா, சட்டை கசங்கிட போவுதுனு பீல் பண்றீயே சின்னு”
“எனக்கு உங்க மேல நம்பிக்கையிருக்கும் போது நான் ஏன் சண்டை போட போறேன். உங்க வேலைக்கு நீங்க எத்தனையோ பேரை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றவளின் கன்னத்தில் இதழ்பதித்து அவளை கீழே இறக்கி விட்டான்.
சின்னபொண்ணு தயாரானதும் அரசாங்க கார் வந்து நிற்க அதில் கிளம்பி சென்றாள். அவளுக்கான அறையில் திருமதி. வேண்டாவசீகரன் ஐஏஎஸ் என்று அச்சிடப்பட்ட பெயர் பலகை இருந்தது. உள்ளே சென்றவள் மாவட்டத்தின் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கோட்டாச்சியர்கள் உடனான சந்திப்பை ஏற்பாடு செய்ய சொல்லி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“மேடம் உங்களை பாக்கறதுக்கு தேசிய உள்கட்டமைப்பு நிறுவனத்தோட எம்டி வந்திருக்காரு, அவர் பேரு” என்று அவளின் உதவியாளர் கூறி முடிக்கும் முன்,
“மீட்டிங் முடிச்சுட்டு தான் மீட் பண்ண முடியும், ஓகேனா வெயிட் பண்ண சொல்லுங்க, இல்லனா இன்னொரு நாள் வரச்சொல்லுங்க” என்றுவிட்டு அவர்களிடம் மாவட்டத்தின் முக்கியமாக தரவுகளை கேட்டுக் கொண்டிருந்தாள். ஒருமணி நேரத்திற்கு பின்பு அவளின் உதவியாளர் மீண்டும் வந்து, “மேம் அந்த சாரை வரச்சொல்லட்டுமா?”
“சரி வரச்சொல்லுங்க” என்றவள் கோப்புகளில் மூழ்கியிருக்க
“வணக்கம் கலெக்ட்டர் மேடம்” என்ற வசீகரனின் அழுத்தமான குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“மாமு” அவள் இதழ்கள் அவனை அழைக்கும் முன் அவன் அவளை எச்சரிக்கையாக பார்க்கவும் அவனுடன் இருந்தவர்களையும் மற்ற அரசு அதிகாரிகளையும் கண்டு வார்த்தைகளை விழுங்கி கொண்டாள்.
“வணக்கம், சாரி ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன்” 
“பரவால்ல கலெக்ட்டர் மேடம்” என்றவன் புன்னகையுடன் அவளிடம் ஒரு பத்திரிக்கையை நீட்டினான்.
கேள்வியோடு அவள் அதை பிரித்து பார்த்தபோது, National Infrastructure Private Limited (தேசிய உள்கட்டமைப்பு நிறுவனம்) என்ற தொழில் கட்டிடத்தின் திறப்பு விழா அழைப்பிதழ் இருந்தது. சிறப்பு விருந்தினர்கள் இடத்தில் போக்குவரத்து துறை அமைச்சரின் பெயரோடு மாவட்ட கலெக்ட்டரான திருமதி. வேண்டாவசீகரன் ஐஏஎஸ் என்றும்  இருந்தது. அழைப்பவர்கள் இடத்திலும் வசீகரன்-வேண்டா என்று அச்சிடப்பட்டிருந்தது.
தொழில் தொடங்கியிருக்கிறான், அதற்காக தீவிரமாக உழைக்கிறான் என்பதுவரை அவளுக்கு தெரியும், ஆனால் அது எந்த அளவில் இருக்கிறது என்று அவள் இதுவரை விசாரித்ததில்லை. காரணம் அவர்கள் இருவருமே அவளின் ஐஏஎஸ் தேர்ச்சியின் மீது கவனமாக இருந்ததால் அதைப்பற்றிய பேச்சுவார்த்தை அவர்களிடையே நடந்ததேயில்லை. அவளுடைய கனவையும் நிறைவேற்றி அவனுடைய குறிக்கோளையும் அடைந்திருக்கிறான் அவளுடைய மாமு.
ஆச்சர்யத்தோடு அவனையே விழியெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து இருபுருவங்களையும் ஏற்றி இறக்கினான். தலைமுடியை கோதுவது போல யாருமறியாமல் ஒற்றை கண்ணை வேறு அவன் சிமிட்ட, அவள் கன்னம் நொடியில் சிவந்து போனது. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, “மேடம் கண்டிப்பா திறப்பு விழாவுக்கு வந்துடணும்” என்றான்.
“கண்டிப்பா வரேன்” 
“தேங்க்ஸ் மேடம்” என்று கிளம்பி சென்றான்.
உணவு இடைவெளியின் போது கணவனுக்கு போன் செய்தாள், “என்னை பாக்கறதுக்கு எதுக்கு ஆபிஸ்க்கு வந்து காத்துட்டு இருந்தீங்க மாமு? வீட்லயே சொல்லியிருந்தா வந்திருக்க மாட்டேனா?”
“வீட்ல சொல்லியிருந்தா என் பொண்டாட்டிக்கு சொல்ற கணக்கு. கலெக்ட்டர் ஆபீஸ்ல வந்து அழைச்சா தானே கலெக்ட்டரை அழைச்ச மாதிரி இருக்கும்?”
“சாரி மாமு, வந்திருக்கறது நீங்கனு தெரியாம காக்க வச்சுட்டேன்”
“பரவால்ல சின்னு, அதனால தான் ஒரு கலெக்ட்டரா மீட்டிங்ல நீ பேசிட்டு இருக்கற அழகை ஜன்னல் வழியா பாத்து ரசிக்க முடிஞ்சது”
“ஒரு பொண்ண மீட் பண்ண போறதா சொன்னீங்களே? அது நான் தானா?”
“ஆமா, சின்னபொண்ணை மீட் பண்ண தான் சூப்பரா ரெடியாயிட்டு இருந்தேன். அவ என்னை பாத்ததும் மயங்கிட்டானு நினைக்கிறேன், கன்னம் ரெண்டும் சிவந்து போயிடுச்சு தெரியுமா?” என்றான் உல்லாசமாக
 
“புடவையில எப்படி இருந்தா தெரியுமா?” என்று தொடர்ந்து அவன் அவளை வர்ணிக்கவும் அவளின் காதுமடல்கள் சூடாகிவிட, “போதும், வீட்ல பேசிக்கலாம்” என்றாள் கிசுகிசுப்பாக
“வீட்ல பேசறதா இல்ல, ஒன்லி ஆக்ஷன் தான்”
“ஐயம் வெயிட்டிங்” என்றவளின் பதிலில் ஆடிப் போனான், “சின்ன பொண்ணுனு நினைச்சா, ரொம்ப பெரிய பொண்ணா ஆயிட்டே சின்னு. உன்னை அம்மாவாக்காம விட போறதில்லடி” என்றான்.
“ஆல்ரெடி அம்மாவாக்கிட்டீங்கனு தான் நினைக்கிறேன்”
“சின்னு! நிஜமாவா சொல்றே?” ஆர்வத்துடன் கேட்டான்.
“ஈவ்னிங் சீக்கிரம் வந்து என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போங்க, கன்பார்ம் பண்ணிக்கலாம்”
“அதுவரைக்கும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாதுடி. பர்சனல்னு சொல்லிட்டு கிளம்பி வா. நான் வெளியே வெயிட் பண்றேன்” என்றான்.
கணவன் பேச்சை மறுக்காமல் சின்னபொண்ணு கிளம்பி வெளியில் வர வசி அவளுக்காக காத்திருந்தான். அவளை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது சரவணன் உட்பட அனைவரும் அங்கே இருப்பதை கண்டு “சின்னு இவங்களுக்கு முன்னாடியே விஷயத்தை சொல்லிட்டியா?” என்றான்.
“இல்லையே மாமு” 
சரவணன் வசியின் அருகே வந்து, “வசி உனக்கெப்படிடா விஷயம் தெரிஞ்சது. இப்போ தான் லதாவை டெலிவரிக்கு அட்மிட் பண்ணிட்டு உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன். அதுக்குள்ள ரெண்டு பேரும் வந்து நிக்கறீங்க” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டது. வெளியே எட்டிபார்த்த செவிலியர் “சரவணன் லதாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று கூறினார்.
வசீகரன் மருத்துவமனைக்கு வந்த காரணத்தை சொல்லி சின்னபொண்ணுவை மருத்துவரிடம் கூட்டி சென்றான். அவர்களும் அவளின் கர்ப்பத்தை உறுதிசெய்ய வசி மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
இரவின் தனிமையில் வசியின் மார்பில் சாய்ந்திருந்த சின்னபொண்ணு “என்னோட இன்னொரு ஆசைய கூட நிறைவேத்திட்டீங்க மாமு, லவ்யூ”
“எதை சொல்றே சின்னு?”
அவள் இடையை சுற்றியிருந்த அவன் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள். அவன் அவளின் மணிவயிற்றை மெல்ல வருடி குனிந்து அங்கே மென்மையாக இதழ் பதித்தான்.
“ஆதிக் மாதிரி நம்ம குழந்தையும் உங்க நெஞ்சு மேல தூங்க போறான்”
“இல்ல, என் மேல நீயும் உன் மேல நம்ம குழந்தையும்” என்று வசி அவளை பார்த்து கண்சிமிட்ட, நாணத்துடன் அவள் முகத்தை மூடிக் கொண்டாள். வசியோ சொன்னவாறே தன் மார்பின் மேல் அவளை குழந்தையென சாய்த்துக் கொண்டான்.
**********
அன்று தேசிய உள்கட்டமைப்பு நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய கட்டிடத்தின் முன்னே இருந்த மேடையில் போக்குவரத்துதுறை அமைச்சர் பொன்னுரங்கம் மற்றும் திருமதி.வேண்டாவசீகரன் ஐஏஎஸ் இருவரும் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவளின் அருகே வசீகரன் அமர்ந்திருந்தான். அமைச்சருக்கு அடுத்து ஐபிஎஸ் மற்றும் கோட்டாட்சியர் அமர்ந்திருந்தனர்.
பார்வையாளர்கள் அமரும் இடத்தில் முதல்வரிசையில் வசீகரன் சின்னபொண்ணுவின் குடும்பம் அமர்ந்திருந்தது. கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த லதா சின்னபொண்ணுவின் வளர்ச்சியை கண்டு மலைத்தாள். 
‘நான் எம்எல்ஏ பொண்ணு’ என்று பெருமை பேசிக் கொண்டிருந்த லதா இன்னுமே அதே இடத்தில் தான் இருக்கிறாள். யாரை தனக்கு சமமில்லை என்று நினைத்தாளோ அவள் அமைச்சருக்கு நிகராக சிறப்பு விருந்தினர் இடத்தில் அமர்ந்திருக்கிறாள். 
நாம் பிறந்த இடமும் வளர்ந்த விதமும் எப்போதும் நமக்கு உயர்வை தராது. அப்படியே தந்தாலும் அது நிரந்தரமல்ல. நம் வாழ்கின்ற வாழ்க்கையும் தனிமனித முன்னேற்றமும் தான் நம்முடைய உண்மையான வளர்ச்சி, அது தான் நம்மை உயர்த்தும் என்று நன்றாக புரிந்து கொண்டாள். 
அருகிலிருந்த கணவனிடம், “சரவணன், நான் எம்பில் படிச்சிட்டு சும்மா தானே இருக்கேன். குழந்தை வளர்ந்ததும் காலேஜ்ல புரபசர்க்கு டிரை பண்ணட்டுமா?”
“தாராளமா டிரை பண்ணு லதா. எம்எல்ஏவோட பொண்ணு, நான் வேலைக்கு போகணும்னு அவசியமில்லனு நீ ஒருநாள் சொன்னதால தான், இதுவரைக்கும் நான் உன் கேரியர் விஷயத்துல தலையிட்டதில்ல. உனக்கு என்ன இன்ட்ரஸ்ட்டோ அதை செய், நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்ற கணவனை நன்றியோடு பார்த்தாள்.
அலமேலு சின்னபொண்ணு லதா மூவரும் மேடையிலிருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின்பு, வசீகரனின் பிரம்மாண்ட அலுவலகத்தை மாவட்ட ஆட்சியராக சின்னபொண்ணு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாள். அதற்கு பின்பு போக்குவரத்து துறை அமைச்சர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான அரசாங்க டென்டரில் அனுமதி கையெழுத்திட்டு வசீகரன் கையில் கொடுத்தார்.
சின்னபொண்ணுவிற்கு கணவனை நினைத்து பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இனி நெடுஞ்சாலை அமைக்கும் பணியை நேரில் சென்று கண்காணிப்பதற்காக அவளும் அடிக்கடி வசீகரனின் அலுவலகம் மற்றும் பணிநடக்கும் இடங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். எனவே அலுவலக நேரத்திலும் வசீகரனின் பார்வை வட்டத்தில் இருக்கலாம். வசீகரனுக்கும் அதே எண்ணம் தான். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை வேலை நேரத்திலும் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பாக கருதினான்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
எல்கேஜி படிக்கும் ஆதிக் தன் தாத்தா நடராஜனுடன் பள்ளிக்கு கிளம்ப, அவன் தங்கை ஆதிரா தளிர் நடையிட்டு அழுதுக் கொண்டே “அண்ணா, நான் வரேன்” என்று அவன் பின்னால் சென்றாள். 
வசீகரனின் மகன் ஆரவ் ஆதிராவின் பின்னால் நான்கு கால் பாய்ச்சலில் அழுதுக் கொண்டே ஓட “முத்தண்ணா நில்லுங்க” என்று மூச்சிரைக்க அலமேலு அவர்கள் பின்னால் ஓடினார்.  முத்துமாணிக்கத்தின் நினைவாக வசியின் மகனை முத்தண்ணா என்று செல்லமாக அழைத்தார். 
பாட்டியின் குரலில் ஆரவ் சமத்தாக அமர்ந்து கொள்ளவும் அவனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, அழுது கொண்டிருக்கும் ஆதிராவை சமாதானம் செய்தார். 
ஆதிக் பள்ளிக்கு கிளம்பும் போது தினம் இருவரும் செய்யும் ஆர்பாட்டத்தை கண்டு ரசித்தவாறு சரவணனும் வசீகரனும் மாடியிலிருந்து கீழே இறங்கினார்கள். லதாவும் சின்னபொண்ணும் உணவை சாப்பாட்டு மேஜையில் வைத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சரவணா? வீட்ல ரொமான்ஸ் பண்ணி வருஷத்துக்கு ஒண்ணுனு ரிலீஸ் பண்ணது பத்தாதுனு அண்ணிய புரபசராக்கி உன்கூடவே காலேஜ்க்கு கூட்டிட்டு போயிட்டே? டே அன்ட் நைட் ரொமான்ஸே பண்ணிட்டு இருந்தா நாமளே தனியா ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்கணும் போலருக்கு” என்று அண்ணனை வம்பிழுத்தான் வசீகரன்.
“ரொமான்ஸா? ரெண்டு பசங்களும் என்னய தூங்க விட்டா போதாதா? இதுல ஆரவ்வும் அவங்களோட விளையாடறதுக்கு எங்க ரூமுக்கு வந்திடறான். மூணும் நடுராத்திரியானாலும் தூங்காம விளையாடிட்டு இருக்குதுங்க” 
“அதுக்கு தான் உடனுக்குடனே பெத்துக்க கூடாது. ரெண்டு குழந்தைக்கும் நடுவுல இடைவெளி இருக்கணும்னு சொல்றது. ரொமான்ஸ்ல எப்படி கன்ட்ரோலா இருக்கறதுனு தம்பிய பாத்து கத்துக்கோ சரவணா” என்று வசி அண்ணனின் தோளை தட்டினான்.
நால்வரும் சாப்பிட்டு கிளம்பும்போது சின்னபொண்ணு திடீரென்று வாந்தியெடுக்க அலமேலுவும் லதாவும் பதட்டத்தோடு அவளருகே சென்றனர். 
“லதா இங்கே ரொமான்ஸ்ல எப்படி கன்ட்ரோல இருக்கறதுனு ஒருத்தர் பாடம் எடுக்கறதா சொன்னாரு. அவரை பாத்தியா?” என்று சரவணன் வசீகரனை பார்த்துக் நக்கலடிக்க, வசி கேள்வியாக மனைவியை பார்த்தான். அவள் வெட்கத்துடன் தலையசைத்தாள். 
லதாவும் சரவணனும் வசியை குறும்புடன் பார்க்க, அவனுக்கும் வெட்கம் வந்துவிட்டது. இருகரங்களால் தலையை கோதுவது போல தன் வெட்கத்தை மறைத்தான்.  
இருவரும் மருத்துவமனைக்கு சென்று கருவை உறுதி செய்துக் கொண்டு அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர். சின்னபொண்ணு மாவட்ட ஆட்சியராக திறம்பட நிர்வாகத்தை நடத்தினாள். வசீகரன் தன் கனவை நிறைவேற்றும்விதமாக தரமான தேசிய நெடுஞ்சாலையை அமைத்து கொண்டிருந்தான். 
காதலில் இணைவது ஒன்றே குறிக்கோளாக இருந்தால் இணைந்தபின்பு காதல் இல்லாமல் போகலாம். ஆனால் காதலுடன் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் குறிக்கோளாக கொண்டு இருவரும் சேர்ந்து பயணித்தால் வசி சின்னுவின் வாழ்வை போல சிறப்பானதாக இருக்கும்.
அன்றிரவு சின்னுவின் அருகில் ஆரவ் படுத்து உறங்கியிருக்க வசீகரன் அவளின் வயிற்றில் முகம் புதைத்து படுத்திருந்தான்.
“மாமு, நமக்கு ஆரவ் இருக்கறதால ரெண்டாவதா ஆதிரா போல பொண்ணு வேணும்னு தோணுது. உங்க மைண்ட்ல என்ன இருக்கு? பையனா? பொண்ணா?”
படுத்திருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்து முறைத்தான்.
“ஏன் மாமு?”
“உன் கேள்வியே தப்பு சின்னு, பையன் பொண்ணுனு ஏன் எதிர்பார்க்கணும். எந்த குழந்தையா இருந்தாலும் அது நம்ம குழந்தைடி” என்றவனை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 
வசி தன் இரண்டாவது குழந்தையோடு பேச ஆரம்பித்துவிட, சின்னு பெருமிதத்தோடு தன் கணவன் தலையை கோதியபடி மெளனமாக படுத்திருந்தாள். வசியின் இதழ்கள் சின்னுவின் வயிற்றில் பட்டதில் அவள் மேனி சிலிர்த்திட நிமிர்ந்து மனைவியை மோகத்துடன் பார்த்தான்.
வசீகரன் என்னும் மோகனம் சின்னு என்னும் மெளனத்தை கலைத்து மோகன ராகத்தை இசைக்க துவங்கியிருந்தது.
சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!