Skip to content
Post Views: 52
அத்தியாயம் 32
நிலவு மகளுடன் வெண் மேகங்கள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றை வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தான் பரணி.
Advertisement
தன் பெண்நிலவு உள்ளே படுத்து இருந்தாலும், வின் நிலவிலும் தன்னவள் முகம் தான் தேடினான் இந்த அநியாய காதலன்.
ஆம் நாளை பிரபாகரன் வீட்டு விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மயில் கழுத்து வண்ணத்தில் புது புடவை எடுத்து வந்திருந்தான் தன் மான்குட்டிக்காக.
Advertisement
Advertisement
அதை கைகளில் வாங்கி கண்கள் மின்ன, ஆசையாக அவள் தடவி பார்த்த போது அவள் முகத்தில் வந்து போன பாவனைகளை இப்போதும் நிலவு முகத்தில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
மணி இரவு பத்தரையை கடந்து விட்டது. அவனுக்கு தான் தூக்கம் வரவில்லை, அவன் தூக்கத்தை பறித்தவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாள் போலும்.
Advertisement
இரவில் பேய்க்கும் நோய்க்கும் மட்டும் கொண்டாட்டம் கிடையாது. காதலுக்கும் காமத்துக்கும் இரவில் தான் கொண்டாட்டம். அப்படித்தான் அவனையும் காதலும் காமமும் ஒன்றாக சேர்ந்து ஆட்டிப்படைத்தது.
நாளை நண்பன் வீட்டு விசேஷம் முடிந்த பிறகு எப்படியாவது தன் மனைவியை தாஜா செய்து தாம்பத்தியத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருந்தான்.
தூங்கிக் கொண்டிருந்த துர்க்காவிற்கு முழிப்பு வந்து விட, எழுந்தவளுக்கு தாகமாக இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என்று பார்த்தால் எடுத்து வைக்கவில்லை.
சரி சமையலறை சென்று குடித்துவிட்டு வரலாம் என்று வெளியே வந்தவள் கண்டது, முகத்தில் ஒற்றை கையை மடித்து வைத்துக் கொண்டு தூங்கும் அவள் கணவனை தான்.
அப்போதுதான் அவனும் எப்படியாவது தூங்க வேண்டும் என்று கண்களை மட்டுமே மூடி இருந்தான்.
அவனை பார்க்கலாம் என்று முற்றத்தில் கால் வைத்தவளுக்கு பனியின் குளிர் மேனியை ஊசியாய் குத்தியது.
அருகில் இருந்த கட்டினை கையால் தடவி பார்க்க மழைச் சாரல் பட்டது போன்று அப்படி ஒரு ஈரம். இத்தனை பனியையும் தன்னில் வாங்கிக் கொண்டுதான் தன்னவன் உறங்கிக் கொண்டிருக்கின்றானா என்று நினைத்த மறுநொடி உள்ளம் பிசைந்தது.
உடனே கணவனை நெருங்கியவள் “என்னங்க!.. என்னங்க!…” என்று அழைக்க
தன்னவள் வந்த அரவம் தெரிந்தாலும் தூங்குவது போல் கண்ணை மூடி படுத்து இருந்தான் கள்வன். அவனவளா இரண்டு முறை அழைத்த பின்னர் தான் முகத்தில் இருந்த கையை எடுத்து விழி திறந்து பார்த்தான்.
“என்னங்க இது இப்படி குளிருது.. பனி பெய்து.. அப்படியே படுத்து இருக்கீங்க.. எந்திரிச்சு உள்ள வந்து படுங்க…” என்று அழைக்க
“பெருசா தெரியல அம்மு.. நீ போய் படு…” என்று உள்ளே துள்ளும் குதூகலத்தை மறைத்துக் கொண்டு அவன் சொல்ல
“அட முதல்ல எந்திருச்சு உள்ள வாங்க…” என்று பிடிவாதமாக அவளும் அழைக்க
“சரி நான் ஹால்ல படுத்துக்குறேன்…” என்று இன்னமும் அவன் நாடகத்தை தொடர
“ஹால்ல கொசு தொல்லையா இருக்கும்.. உள்ள வந்து படுங்க.. சொன்னா கேளுங்க…” என்று அவள் கெஞ்ச ஆரம்பிக்க
இதற்கு மேல் முரண்டு பிடித்து மொத்தமாக எல்லாவற்றையும் ஊற்றி மூட விரும்பாதவன் எழுந்து அறையினுள் சென்றான்.
சொல்லப்போனால் அவனால் குளிரை தாங்க முடியாமல் தான் இருந்தது. துர்க்கா வரவில்லை என்றால் சற்று நேரத்தில் எழுந்து அவளை தொந்தரவு செய்யாமல் ஹாலில் படுத்திருப்பான்.
ஆனால் இப்போது பம்பர் பரிசு கிடைத்த மனநிலையில் துள்ளி குதித்து தனதறைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
துர்க்காவும் தண்ணீர் அருந்திவிட்டு, குடிப்பதற்கு ஒரு போத்தலில் எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.
ஒரே கட்டிலில் தன்னவனுடன் படுக்க வேண்டும் என்றதும் கூச்சமும் வெட்கமும் ஓடி வந்து ஒட்டிக்கொண்டாலும், காட்டிக்கொள்ளாமல் கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள்.
அவள் உள்ளே வந்ததிலிருந்து படுத்துக்கொள்ளும் வரை கட்டிலில் அமர்ந்திருந்து அவளையே இமைக்காமல் பார்த்து இருந்தவன், ஒருவித வசீகர புன்னகையுடன் சரிந்து படுத்து கொண்டான்.
ஒட்டியும் ஒட்டாமல் இருவரின் மேனிகளும் உரசி கொண்டன. பரணியின் மீது ஏற்கனவே பனி பொழிந்து ஈரமாக இருக்க, ஃபேன் வேறு வேகமாக சுற்றிக் கொண்டிருக்க, அவனுக்கு உடலில் சிறு நடுக்கம் பிறந்தது.
குளிருக்கு இதமாக அருகில் கதகதப்பு தருவதற்கு கட்டியவள் இருக்க, அவள் புறம் நெருங்கி சரிந்து படுத்தவன் தயக்கமாகவே அவள் இடையில் கையை போட
துர்க்காவிற்கு உடல் சிலிர்த்துக் கொண்டது. அவளும் தன் கையை எடுத்து தன் இடையை வளைத்து இருந்த தன் மன்னவன் கையின் மேல் வைத்து சம்மதம் என்பது போல் அழுத்தி கோர்த்துக் கொள்ள,
கதகதப்பு தேடிய அவனது கை மேலும் முன்னேறி சேலையோடு நுழைந்து அவள் வெற்று வயிற்றில் தஞ்சம் புகுந்தது.
துர்க்காவிற்கு சற்று படபடப்பு தான். ஆனாலும் கணவனை ஏற்க, தாங்க தயாராக இருந்தாள்.
நெகிழ்ந்து பூத்து நின்ற பெண்ணவளின் உடல் மொழியே ஆடவனை பித்துக் கொள்ள செய்ய,
பூவையவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து…
தட்டி தட்டி தாள் திறந்து…
முட்டி முட்டி மொட்டுகளை மலரச் செய்து…
முத்தங்கள் மேடு பள்ளங்கள் நிரப்ப… மோக மூச்சுக்கள் ஸ்ருங்காரமாக… அவன் ஆள அவள் அள்ளி கொடுக்க… அவன் கொடுக்க அவள் வாங்க என்று இனிதே இயல்பாக அரங்கேறி முடிந்தது அழகிய தாம்பத்யம்.
மூச்சு வாங்க பிரிந்து கிடந்தனர் இரு அன்றில்களும். இருவரும் சுகத்தில் திளைத்து இருந்தனர்.
பெண்ணவளால் நிலை கொள்ளவே முடியவில்லை. இன்னமும் தன்னவன் தனக்குள் மூழ்கி இருப்பது போன்றே இருந்தது.
அவள் அறிந்த தாம்பத்யம் வலியும் வேதனையுமான அந்த அருவெறுப்பான நிகழ்வு, அதை தாம்பத்யம் என்றால் இதை என்னவென்று சொல்வது
ஒரு சேவகனாக மாறி அவள் பெண்மைக்கு சேவை செய்தானே… அவளை ஒரு மகாராணியாக உணர வைத்தானே…
அவன் ஒவ்வொரு தொடுகையிலும் அத்தனை மென்மை… அவன் தொட்ட அத்தனை இடத்திலும் சுகம் மட்டுமே… மீண்டும் வேண்டும் அந்த மன்மத வாசம் என்று ஏங்க வைத்து விட்டானே இதுவல்லவோ தாம்பத்தியம்.
திரும்பி அருகில் படுத்து இருந்தவனை பார்த்தாள் துர்க்கா. பூரித்த முகமாக, முதல் முறை பள்ளியறை சுகம் கண்ட புது பொலிவுடன் அவளைத்தான் பார்த்திருந்தான். உதட்டில் அதே மயக்கும் புன்னகை .
அவள் தன்னை பார்க்கவும் “கஷ்டபடுத்திட்டேனா?.. உனக்கு உனக்கு புடிச்சு இருந்துசா?…” என்று என்ன சொல்வாளோ என்று கேட்க
அவன் மீது படர்ந்தவள் அவன் முகம் முழுவதும் ஆவேச முத்தங்கள் பதிக்க ஆரம்பித்தாள். இதை விட அவள் சந்தோஷத்தின் அளவை வார்த்தைகள் சொல்லி விடுமா என்ன
முகம், கழுத்து அவன் மார்பு என்று முத்தங்களை வாரி வழங்கியவள், இறுதியில் இதழ்களை சிறை பிடித்து விட, இன்பத்தில் திளைத்து இருந்தவன் அவள் செயலை அவனுடையதாக மாற்றிக் கொண்டான்.
இந்த முறை அவளாகவே தன்னை அள்ளிக் கொடுத்தாள், ஒரு முறை அல்ல ஆழ்ந்து அனுபவித்து இன்பங்களை வாங்கிக் கொண்டவன் ஓய்ந்து போகும் வரை வாரி வழங்கினாள் மங்கையவள்.
அவன் தான் பாவம் பார்த்து “துர்க்காம்மா போதும்டா.. கொஞ்ச நேரம் தூங்கு.. உன் அண்ணங்க வீட்டு விஷேசத்துக்கு போகணும்…” என்று சொல்லி பெண்ணவளை தூங்க வைத்தான்.
இரண்டு மணிநேரம் தான் இருவராலும் தூங்க முடிந்தது. அதன் பின் எழுந்து தயாராகி விசேஷ வீட்டிற்கு சென்றனர்.
பிரபாகரன் கிருபாகரன் இருவரின் புது வாழ்வின் தொடக்கமாக, மெருகேற்றி புதுப்பொலிவுடன் இருந்த வீட்டிற்கும், தொழிலுக்குமாக சேர்த்து ஒரு சில சடங்குகளும் பூஜைகளும் நடந்து முடிந்தது.
தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் புது துணி எடுத்து இருந்தனர். அதை பரணியிடம் கொடுக்கும் போது “இனிமே நான் என் தங்கச்சிக்கு செய்றத நீ தடுக்க முடியாது…” என்று சொல்லித்தான் கொடுத்தான் பிரபாகரன்.
நல்ல முறையில் அனைத்தும் முடிந்து, சந்தோஷமாக அனைவரும் மதிய உணவையும் உண்டு முடித்த பின்னர், ஒரு பெரிய மாமரத்தின் கீழ் அனைவரும் அமர்ந்திருந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.
ஆண்கள் தொழிலை பற்றியும், பெண்கள் அவரவர் கணவர்களை பற்றியும் என்று பேச்சு சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது.
குழந்தைகள் இருவரும் அவர்களை விட்டு சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயம் எப்படி எங்கிருந்து வந்தனர் என்று தெரியாமல் கிட்டத்தட்ட பத்து ஆட்கள் திபுதிபுவென அவர்களை சுற்றி வளைக்க, அனைவரும் ஒரு நொடி திடுக்கிட்டாலும் ஆண்கள் உடனே சுதாகரித்து பெண்களை பாதுகாப்பது போல் மறைத்து நிற்க,
அந்த பத்து பேருக்கு நடுவில் கொடூர சிரிப்புடன் வந்து நின்றான் அகிலன். அவனால் இன்னமும் ஒற்றை காலையும் கையையும் சரிவர அசைக்க முடியவில்லை தான். ஆனாலும் அடங்காமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அழகிய குருவிக் கூட்டை கலைக்க அடியார்களுடன் வந்திருந்தான்.
“என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல.. ஆனா எனக்கு பிடிக்கல .. என்ன அசிங்கப்படுத்தி, அடிச்சு மிரட்டி என்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டு இந்த ***யா சந்தோஷமா இருப்பா.. நான் பாத்துட்டு விரல் சாப்பிட்டு போவேன்னு நினைச்சீங்களோ…” என்று வன்மமாக பேசியவன்
“சொன்னத செய்யிங்கடா…” என்று அடியாட்களுக்கு கட்டளையிட, அவர்கள் தாக்க ஆரம்பிக்கவும், பரணி உடனே “துர்க்காம்மா அண்ணிங்கள கூட்டிட்டு குழந்தைங்க கிட்ட வா…” என்று சொல்ல
பெண்கள் மூவரும் பரணியின் பாதுகாப்போடு குழந்தைகள் இருவரையும் கைக்குள் வைத்துக்கொண்டு நின்று கொண்டனர்.
அதில் அதிசயம் என்னவென்றால் ஒற்றை கையில் லாவகமாக தாக்க வந்தவர்களை ஒற்றையடியில், இரண்டு மூன்று விரல்களை மட்டும் பயன்படுத்தி அசைய முடியாத அளவிற்கு தாக்கியிருந்தான் பரணி
பெண்கள் மூவரும் அவனை விழி விரித்து ஆச்சரியமாக பார்த்திருந்தனர். அதற்கு இடையில் கிருபாகரனும் பிரபாகரனும் மற்றவர்களை அடித்து துவம்சம் பண்ணி கொண்டு இருக்க
மூன்று பேரிடம் கத்தி இருக்க, அவர்களை எளிதாக வீழ்த்த முடியவில்லை. பரணியால் பெண்களையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு போகவும் முடியவில்லை.
அதில் ஒருவனை கிருபாகரன் லாவகமாக கத்தி வைத்திருந்த கையைச் சுற்றி முழங்கையுடன் முறித்து, அவனுடன் போராட
மேலும் கத்தி வைத்திருந்த இருவரும் பிரபாகரனை மும்முறமாக தாக்க முயன்று கொண்டிருந்தனர். அதில் ஒருவன் வீசிய கத்தி பிரபாகரனின் சட்டையை கிழித்துக்கொண்டு செல்ல, அதை பார்த்திருந்த அஞ்சனா “மாமா!…” என்று உயிர் துடிக்க அவனை நோக்கி ஓடிச் செல்ல
நிலைமை நமக்கு சாதகம் இல்லை என்பதை புரிந்த அகிலன், யாருக்காக அவள் அண்ணனும் பிரபாகரனும் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தனரோ அவள் இருக்கக் கூடாது என்பதற்காகவே, தன் கையில் இருந்த அருவா போன்ற நெடிய கத்தியை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி வேகமாக வர
பரணி அஞ்சனாவை தடுப்பதற்கு முன்னரே அவள் ஓடி இருக்க, “அஞ்சு!…” என்று பரணி அவளை காப்பாற்ற முன்னேறும் முன் அகிலன் அஞ்சனாவை நெருங்கியிருந்தான்.
அவர்களை நோக்கி சென்று கொண்டிருந்த பரணியை தாண்டி வேகமாக சென்ற துர்க்கா, தன்னோடு போராடிக் கொண்டிருந்த இருவரை முயன்று தாக்கிக் கொண்டிருந்த பிரபாகரனை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவை அகிலன் கத்தியை வீசும் நேரம் “அஞ்சு!…” என்று தள்ளி விட்டு நிற்க
அகிலன் குறுக்கே துர்க்கா வந்ததால் சற்று நிதானித்தாலும் அவனையும் மீறி கத்தி கழுத்துக்கும் தோளுக்கும் நடுவில் ஆழமாக இறங்கி இருந்தது.
“ஆஆஆ!…” துர்க்கா சரிந்து விழ, அடியாட்கள் அத்தனை பேரையும் அரை உயிராக்கி போட்ட பிரபாகரன் கிருபாகரன் இருவருக்கும் என்ன நடந்தது என்பதை உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் எடுத்தது.
அதற்கு முன்னே தன் உயிர் தன் கூட்டை விட்டு போனது போல் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டான் பரணி.
அஞ்சனா திகைப்பில் இருந்து மாறாமல் அப்படியே நின்று இருக்க, நித்தியா குழந்தைகளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவள் “ஐயோ துர்க்கா!…” என்று அலறவும் தான் மற்றவர்களுக்கு உணர்வே வந்தது.
அகிலனுமே அஞ்சனாவை கொல்லும் ஆத்திரத்தில் இருந்தானே அன்றி துர்க்காவை காயப்படுத்த நினைக்கவில்லை. அதனால் அவனுமே திகைத்து நிற்க, கிருபாகரன் பாய்ந்து அவனை அடி வெளுக்க ஆரம்பித்து விட்டான்.
ஏற்கனவே ஒற்றைக்கால் முடியாமல் இருந்தவனால் கிருபாகரனின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓட முடியவில்லை. நான்கைந்து அடிகள் என்றாலும் தரமாக விழுந்தது.
அதற்கிடையில் பரணி தன் ஊன்றுகோளை கூட மறந்தவனாக அதைக் கீழே விட்டு விட்டு “அம்மு!…” என்று வேகமாக அள்ளி தூக்கிக் கொண்டான் துர்க்காவை.
பரணி எதையுமே உணரும் நிலையில் இல்லை. தன் உயிரானவள் குருதி சிந்தி சரிந்து கிடக்க, அவன் மொத்த உலகமும் ஸ்தம்பித்துப் போன நிலை.
தன்னால் முடியுமா முடியாத என்பதை கூட யோசிக்காமல் அவளை தூக்கிக்கொண்டு வேகமாக வீதியை நோக்கி ஓட ஆரம்பித்தான். கால் வலிக்கத்தான் செய்தது ஆனால் அவனுக்கு அது தெரியவே இல்லை. மனது ரணமாக வலிக்கின்றதே, தன்னவளை காக்க தவறிவிட்டோமோ என்று தன்னை தானே நொந்து கொண்டான்.
பிரபாகரன் உடனே ஜீப்பை எடுத்தவன் வேகமாகக் கொண்டு வந்து பரணியின் முன்பு நிறுத்தி “டேய் என்னடா பண்ற.. ஜீப்ல ஏறு…” என்று சொல்லி அவனிடம் இருந்து துர்க்காவை வாங்க முற்பட
யாரிடமும் அவளை கொடுக்கும் மனநிலையில் அவன் இல்லை. இன்னும் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டு “அம்மு! அம்மு என்ன பார்டி.. ஹாஸ்பிடல் போலாம்…” என்றவாறு தூக்கிக்கொண்டு ஓட தான் முயன்றான்.
அவனை உலுக்கி, ஒருவாறு ஜீப்பில் ஏற்ற, அஞ்சனாவும் ஓடி வந்து ஏறிக் கொண்டாள். பின் சீட்டில் அமர்ந்து இருந்த பரணியின் மடியில் துர்க்காவின் தலை இருக்க, அவள் கால்கள் அஞ்சனாவின் மடியில் இருந்தது.
தாங்க முடியாத வலி இருந்தாலும், மயக்கம் வருவது போல் இருந்தாலும் முயன்று எதையும் முகத்தில் காட்டாமல், கலங்கி துடித்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த கணவனுக்கு தைரியம் கூறினாள் துர்க்கா.
“அ..த்தான்!…” முதல் முறை அவனை உறவு சொல்லி அழைக்கின்றாள். உள் வாங்கி சந்தோஷப்படும் நிலையில் அவன் இல்லை .
“அ..த்தான் பயப்படாதீங்க.. எனக்கு.. ஒன்னும் இல்ல…” என்று தட்டு தடுமாறி சொல்ல
அவளது புடவை முந்தானையை தான் காயத்தில் வைத்து அழுத்தி பிடித்திருந்தான். முந்தானையையும் தாண்டி அவன் கையை நனைத்த குருதியில் தான் அவன் கண்கள் இருந்தது. அவள் ஆறுதலை ஏற்க்கும் நிலையில் பரணி இல்லை.
அஞ்சனாதான் “ஏன்டி இப்படி பண்ணுன?…” என்றாள் அழுது கொண்டே
மெலிதாக சிரித்தவள் “அழகான காதல் உங்க ரெண்டு பேருக்கு இடையில இருந்தும் நீங்க பிரிஞ்சு போனதுக்கு ஒரு வகையில நானும் காரணம்.. நான் மட்டும் சரியா இருந்திருந்தா என்ன மாதிரியே உன் தங்கச்சி வாழ்க்கையும் பாதியில நின்னுடுமோனு பயந்து நீ அண்ணாவ விட்டுட்டு போயிருக்க மாட்ட.. அண்ணாவும் உன்ன.. அண்ணாவும் உன்ன போக விட்டு இருக்க மாட்டாரு.. தங்கச்சி ஒருத்தி வீட்டுல அப்படி இருக்க உன்ன எப்படி வலுக்கட்டாயமா தன் கைக்குள்ள எடுக்க நினைப்பாரு.. அதான் விலகி நின்னுட்டாரு.. அது மட்டும் இல்லாம விதி எங்கப்பா செஞ்ச சாதியினு எல்லாத்தையும் தாண்டி இப்பதான் ஒன்னு சேர்ந்து இருக்கீங்க.. பட்ட கஷடம்லாம் போதும்.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும்.. என் அண்ணன் வாழ்க்கையே நீதான்.. அண்ணா முதல் கல்யாண வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்பட்டார்னு நல்லா தெரியும் இனி அவர சந்தோஷமா பாத்துக்க நீ வேணும் அதுதான்.. பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் ஆகாது…” என்று சாதாரண சொல்ல
தங்கை பேசியதை கேட்டுக்கொண்டு வண்டி ஓட்டியவன் கண்களும் கலங்கி பாதையை மறைக்க, தோள்பட்டையால் துடைத்துக் கொண்டவன் வேகமாக ஹாஸ்பிடலை நோக்கி வண்டி செலுத்தினான்.
அஞ்சனாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “பைத்தியமாடி.. நீயும் நல்லா வாழனும்னு தானடி இவ்வளவு பண்ணுனேன்.. நீ சொன்ன மாதிரி உனக்கா எதுவும் ஆகாது…” தனக்கும் சேர்த்து தைரியம் கூறிக் கொண்டாள்.
அதற்கிடையில் மருத்துவமனை வந்துவிட, துர்க்காவை யார் கைக்கும் கொடுக்காமல் பரணியே தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, அவனைத் தடுத்து ஸ்ட்ரெச்சரில் அவளை படுக்க வைத்து எமர்ஜென்சி அறைக்கு கொண்டு சென்றனர்.
error: Content is protected !!