Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 35

அத்தியாயம் 35

தன்னவன் பட்ட துன்பங்களை தாங்க முடியாமல் அழுதவள், அவனை பாய்ந்து கட்டிக் கொண்டு “எப்படி மாமா.. நானாவது அவன் எனக்கு துரோகம் பண்ணுனது தெரியுற வரைக்கும் நிம்மதியா இருந்தேன்.. ஆனா நீங்க தினம் தினம் நெருப்புல நின்னு இருக்கீங்க.. எப்படி தாங்கிகிட்டீங்க?…” என்று கதற



Advertisement

அவளை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டவன், அருகில் படுத்து இருந்த அவன் மகளரசியின் தலையை தடவி “இதோ என் குட்டி செல்லம்மா என் கூட இருந்தா…” என்று சொல்ல

“என்னால தானே எல்லாமே…” என்று அஞ்சனா கேட்க

Advertisement

Advertisement

“அப்படி இல்ல செல்லம்மா.. எல்லாம் விதி.. அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு…” என்றவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, அவளையும் இழுத்து தன் மார்பில் அணைத்துக்கொள்ள, தங்கள் மனதை ஆற்றுப்படுத்த அந்த இதம் வேண்டுமாக இருந்தது இருவருக்கும்.

அவள் நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டே இருந்தான் பிரபாகரன். சிறிது நேரத்தில் அந்த முத்தம் கன்னத்திற்கு இடம் மாறியது, உடல் கூச அவனுக்குள்ளாகவே நெளிந்தாள் பெண்ணவள்.

Advertisement

அவனின் மூச்சு காற்றின் வேகம் வேறு அதிகரிக்க, கன்னத்தில் ஊர்ந்த அவன் உதடுகள் இதழை நெருங்கும் நேரம், அவன் எண்ணம் புரிய “மாமா ஆதூ…” என்று கட்டிலில் குழந்தை இருப்பதை ஞாபபடுத்த,

கட்டிலில் இருந்து இறங்கியவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு, அந்த அறையோடு சேர்ந்து இருந்த சிறிய அறைக்கு தூக்கி வந்தான்.

ஆதூரி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் ஆர்டிஃபிஷியல் புல்தரை வாங்கி விரித்து இருக்க, பஞ்சு பொம்மைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்க, அந்த மென்மையான தரையில் தன் அன்னத்தை கிடத்தினான்.

அவனும் அவளின் அருகே படுத்துக் கொள்ள, வெட்கம் தாங்காமல் உருண்டு அவனை விட்டு தள்ளி போக முயல ஒரு கட்டத்தில் முடியவில்லை, அவள் என்னவென்று திரும்பி பார்க்க, அவள் சேலை முந்தானை அவன் கையில் இருந்தது.

உதடு கடித்து சிரித்தவன் சுண்டி ஒரு இழுவை இழுக்க, அவனிடமே உருண்டு வந்தாள்.

தன்னை ஒட்டி கிடந்தவளின் இடையோடு கையை போட்டு இறுக்கி அணைத்துக் கொண்டான் கட்டழகன்.

நெற்றியில் ஆரம்பித்து முத்தங்கள் வைத்து வந்தவன், இதழை நெருங்கும் நேரம் தயங்கி, பின் மல்லாந்து படுத்துக் கொண்டான்.

இதழ்கள் பிணைந்தால் அடுத்து மேலும் முன்னேற வேண்டுமே, இவளிடமும் தன் உணர்வுகள் முழுதாக விழித்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணத்தை தடுக்க முடியவில்லை.

கண்கள் மூடி இதழ் முற்றுகைக்கு காத்திருந்தவள் அவன் விலகவும் விழி திறந்து பார்த்தாள். அவன் விட்டத்தை வெறித்திருக்க “என்னாச்சு மாமா?…” என்று கேட்டாள்.

“இல்ல செல்லம்மா உன் கூட முழுசா இணைய முடியுமானு கலக்கமா இருக்கு.. என் உணர்வுகள் உன்கிட்டயும் தோத்து போயிடுச்சுனா என்ன பண்றது…” என்று தவிப்பாக சொல்ல

அவன் மீது ஏறி அமர்ந்தவள் “அதையும் பாக்கலாம்.. நான் உங்க செல்லம்மா.. என்கிட்ட மட்டும் தான் உங்க மொத்த உணர்வும் வெளிப்படும்…” என்றவள் அவள் சட்டை பொத்தான்களை கழட்டி விட்டு, அவன் முகத்தில் தொடங்கி உடல் முழுவதும் முத்தம் வைக்க,

அவள் சொன்னது உண்மைதான் என்பது போல், அவன் மனம் நிறைந்தவள் தொடுகையில் மொத்த உணர்வுகளும் கிளர்ந்து எழுந்தது.

ஆறடி உடலும் முறுக்கி, சிலிர்த்து நிற்க, பெண்ணவளின் முத்த தாக்குதலில் மயங்கி, கிறங்கி இருந்தவன், அவளை கீழே தள்ளி, மொத்தமாக அவளில் படர்ந்து, தன்னவள் ஈர இதழ்களை கவ்விக் கொண்டான்.

எச்சில் பறிமாற்றதுடன் ஆழமான வன்முத்தம் அது.

முத்தமிட்டே மொத்த உடைகளுக்கும் விடுதலை கொடுத்து, பெண்ணவளை தனக்குள் சிறை வைத்துக் கொண்டான்.

தயக்கங்கள் எங்கோ மறைந்து கொள்ள…

தாபம் கொடி நாட்ட…

மோக முத்தங்களும் முனகல் சத்தங்களும் ஆட்சி புரிய…

போர் வாள் கொண்டு தாக்குதல் நடத்தியவன் தோற்றுப் போக… அவனை தாங்கிக் கொண்டவள் வெற்றி வாகை சூடினாள்.

விடியும் வரை நடந்த மன்மத யுத்தத்தில் விடிந்த பின்னர் தான் கலைத்து கண்ணயர்ந்தனர் இருவரும்.

*****

அஞ்சனாவால் கண்களை திறக்க முடியவில்லை. அடித்துப் போட்டது போல் அப்படி ஒரு சோர்வு, இருந்தும் குழந்தையை பார்க்க வேண்டுமே, வெகு நேரம் தூங்க முடியாமல் எழுந்து கொண்டவள், தனது புடவையை போர்த்திக் கொண்டு தூங்கும் தன் கணவனை பார்த்து வெட்க புன்னகை பூத்தாள்.

அவன் தலைமுடியை செல்லமாக கலைத்துவிட்டு, அவன் முகத்தை ஒற்றை கையால் வருடியவள் “மாமா!.. புடவைய குடுங்க…” என்று கேட்க

“ம்ம்ம்…” என்றவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொள்ள,

“அச்சோ விடுங்க.. ஆதுகுட்டி எந்திரிச்சிருப்பா…” என்று சொல்ல

குழந்தைக்காக அவளை விட்டவன், அவள் கேட்ட புடவையையும் கொடுத்துவிட்டு, திரும்பி படுத்து கொண்டான்.

அஞ்சனா எழுந்து குளித்து முடித்து வரும் வரை நல்லவேளையாக அதூரி எழுந்திருக்கவில்லை.

‘அச்சோ இன்னைக்கு ஸ்கூல் போச்சா.. இவ்வளவு நேரமாச்சு இந்த நித்தி கூட கூப்பிட்டதா தெரியலையே…’ என்று நினைத்தவள்

அதுரியை கொஞ்சி, கொஞ்சி எழுப்பி குளிக்க வைத்து, வெளியே அழைத்து வந்தாள்.

குழந்தைக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும், அதற்கு முன் பால் காய்ச்சி கொடுக்கலாம் என்று சமையலறைக்குள் வந்தவள், நித்தியா அப்போதுதான் காஃபி போட்டுக் கொண்டிருக்க

“ஏய் நித்தி!.. என்ன இப்ப தான் காஃபி போடுறயா…” என்று கேட்க

சோர்வாகவே அவளை திரும்பிப் பார்த்த நித்தியா “என்னனு தெரியல அஞ்சு.. இன்றைக்கு எந்திரிக்க நேரமாச்சு.. எதுவுமே பண்ணல, காஃபி போட்டு முடிச்சிட்டு தான் டிபன் செய்யணும்…” என்று சொல்ல

“ஏன் இப்படி டயர்ட் ஆகுற அளவுக்கு என்னாச்சு?…” என்று அவள் இடையை கிள்ளி கேட்க

“அடி போடி!.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. ரெண்டு நாளாவே இப்படி தான் இருக்கு.. அஞ்சு காஃபி நீ போடுறயா என்னவோ பால் மணம் ஒருமாதிரி இருக்கு…” என்று சொன்னவள் அதிர்ந்து வாயில் கையை வைத்தாள்.

“ஏன்டி? எதுக்கு இந்த ரியாக்ஷன்?…” என்று அஞ்சனா கேட்க

“இந்த மாசம் அஞ்சு நாள் டேட் தள்ளி போயிடுச்சு.. இரண்டு நாளா டயர்டா இருக்கு, இப்போ பால் மணம் சேர மாட்டேங்குது.. பிரக்னண்டா இருப்பேனோ…” என்று கேட்க

“ஹேய் நித்தி சூப்பர்டி…” என்று அஞ்சனா அவளை கட்டிக் கொள்ள

“ஏய் இருடி கன்ஃபார்ம் இல்ல.. முதல்ல செக் பண்ணலாம்…” என்று நித்தியா சொல்ல

“சரி இரு.. நான் போய் பார்மசில கிட் வாங்கிட்டு வாரேன்…” என்ற அஞ்சனா அவசரமாக செல்ல

“ஏய் காஃபி குடிச்சிட்டு பொறுமையா போடி…” என்ற நித்தியாவின் வார்த்தைகள் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் வாங்கி வந்திருந்த கவரை நித்தியாவிடம் கொடுக்க, அவளும் பரிசோதித்து பார்க்க, அவள் கர்ப்பமாக இருப்பதாக இரண்டு இளஞ்சிவப்பு கோடுகள் கட்டியம் கூறியது.

அஞ்சனாவிடம் சந்தோஷமா சொல்ல, அவளுக்கும் அத்தனை மகிழ்ச்சி.

காஃபி கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த கிருபாகரனை தனியாக அழைத்து வந்த நித்தியா விஷயத்தை சொல்ல,

அவனுக்கும் அளவில்லாத சந்தோசம். அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கியவன் நெற்றியில் இதழ் பத்தித்து “ரொம்ப சந்தோஷமா இருக்கு, இந்த முறை எதையும் மிஸ் பண்ண மாட்டேன்.. உன் கூட தான் இருப்பேன்..பையன் விஷயத்துல எதை எல்லாம் விட்டேனோ இந்த குழந்த கூட சேந்து அணு அணுவா ரசிச்சு அனுபவிக்கணும்.. எத்தன தடவை கேட்டாலும் போதாது, இருந்தும் கேட்கிறேன் சாரிடி…” என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக்கொண்டு நிற்க.

“என்ன மச்சான் இது.. சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன் ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று நித்தியா கேட்க,

அவள் இதழில் அழுந்த இதழொற்றி எடுத்தவன் “ஃபீல் பண்ணல.. ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கேனா அதான் அத எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியாம ஏதேதோ உளறிட்டு இருக்கேன்.. நம்ம பொண்ணு என் கைக்கு வார வரைக்கும் இப்படித்தான் இருக்க போறேன் போல…” என்று சொல்ல

“ஓஹோ பொண்ணுனு இப்பவே முடிவு பண்ணிட்டீங்களா?…”

“ஆமா, பொட்ட புள்ள பெத்து குடுனு உன்ன சீண்டுனத மறந்துட்டியா.. கண்டிப்பா பொண்ணுதான்…” என்று அடித்துக் கூறியவன் தன் சரிபாதியை நெஞ்சோடு சாய்த்து அணைத்துக்கொண்டான்.

****

தூங்கிக் கொண்டிருந்த பிரபாகரனிடமும் அஞ்சனா மகிழ்ச்சியான செய்தியை கூற, எழுந்து வந்தவன் தம்பிக்கு வாழ்த்து கூறினான்.

பரணி துர்க்காவிற்கும் தகவல் சொல்லப்பட, அவர்களும் நேரில் வந்து வாழ்த்து சொல்ல, அன்று மதிய விருந்து அமர்க்களப்பட்டது.

****

அன்று இரவு அவன் தேடலை முடித்துக் கொண்டு தன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்த பரணியிடம் “அத்தான்!.. உங்க துணையா கடைசி வரைக்கும் நான் கூடவே இருப்பேன்னு நம்புறீங்களா?…” என்று துர்க்கா கேட்க

“ம்ம்.. நம்புறேன், ஏன் இந்த கேள்வி?…”

“அப்போ வாக்கிங் ஸ்டிக் இல்லாம நடக்க முயற்சி பண்ணலாமே…” என்று துர்க்கா சொல்ல

“ஏன் நான் இப்படி இருக்கிறது உனக்கு பிடிக்கலயா?…” என்றான் தலையை தூக்கி

அவன் தலையை தன் மார்போடு மீண்டும் அழுத்திக் கொண்டவள்

“குதர்க்கமா பேசாதீங்க அத்தான்.. உங்களால முடியும்னும் போது முயற்சி பண்ணலாமே…” என்று துர்க்கா சொல்ல

“பாக்கலாம்…” என்று பேச்சை முடித்தவன், அவள் மீண்டும் பேசாமல் இருக்க இதழ் கொண்டு இதழை அடைத்து விட்டான்.

*****

அடுத்த நாள் காலையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் வேலைகளை செய்தாள் துர்க்கா.

பரணி அவளை கண்டுகொள்ளவில்லை, குளித்து முடித்து கடைக்கு செல்ல தயாரானவன்,

எப்போதும் போல் சாப்பிட்டுவிட்டு, அவள் சேலை முந்தானையில் கையை துடைத்துக்கொண்டு, அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்தவன் “கடைக்கு போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.. நீ டவுனுக்கு போக ரெடியா இரு.. வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்…” என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல முனைய,

தன் சேலை முந்தானையை எடுத்து கீழே போட்டவள் “அத்தான்!…” என்று அழைக்க,

கதவு வரை போனவன் திரும்பி மனைவி பல்லவச் சிற்பம் போல் நிற்பதை பார்த்து “ஏய் அம்மு என்னடி…?” என்று அவன் முன்னேற பார்க்க

“அங்கேயே நில்லுங்க…!” என்று ஒறடி பின் சென்றவள்

“உங்க பொண்டாட்டி மானத்த மறைக்கணும்னா.. ஸ்டிக் இல்லாம நடந்து வந்து முந்தானைய எடுத்து மேல போட்டு விடுங்க.. இல்ல நான் இப்படியே தான் சுத்திவருவேன்…” என்று துர்க்கா சொல்ல

யாரும் வந்து விடுவார்களோ என்று கதவை அடைத்தவன் “படுத்துறடி!…” என்று திட்டிக்கொண்டே, வாக்கிங் ஸ்டிகை சுவரில் சாய்த்தவன், மெல்ல மெல்ல எட்டு வைத்து அவளை நோக்கி முன்னேற

அவனை அதிக தூரம் நடக்க வைக்க வேண்டாம் என்று அவளும் அவனை நோக்கி முன்னேற, பத்து பாதச்சுவட்டில் இருவரும் நெருங்கி இருக்க, அவனை சுண்டி இழுக்கும் அவள் பளிங்கு இடையில் கிள்ளியவன் “சேட்ட…” என்று செல்லமாக கடிந்து கொண்டு மாராப்பை எடுத்து அவள் மேல போட்டு விட

“ஆ!…” என்று இடையை தடவிக் கொண்டவள் “நீங்க நல்ல புள்ளையா நான் சொல்றத கேட்டா நான் எதுக்கு சேட்ட பண்ண போறேன்.. டெய்லி காலைல ஸ்டிக் இல்லாம நடக்க ப்ராக்டிஸ் பண்றோம் ஓகேவா…” என்று கேட்க, சரி என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு கடைக்கு கிளம்பினான்.

துர்க்கா நினைத்தது போல் பரணியை கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் ஸ்டிகின் உதவி இல்லாமல் நடக்க வைக்க முயற்சி எடுத்தாள்.

முரண்டு பிடிக்கும் நேரங்களில் சேலை முந்தானை பரிதாபமா கீழே கிடக்கும்.

நடக்க கஷ்டமோ, இல்லை அவளை அப்படி ரசிக்க இஷ்டமோ, அடிக்கடி செல்லமாக முரண்டு பிடித்தான் சேட்டைக்காரன்.

இதோ ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் தனது வேலைகளை செய்ய துவங்கி விட்டான் பரணி. அமர்ந்து கொண்டால் எழுந்து கொள்ள மட்டும் யாரேனும் உதவி செய்ய வேண்டும், மற்றும் படி அவனாகவே அனைத்து வேலைகளையும் சாதாரணமாக செய்தான்.

அவன் சற்று சாய்ந்து நடந்து வரும் அழகை எப்போதும் ரசிப்பாள் துர்க்கா. இப்போதும் கடைக்கு செல்ல மெரூன் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேஷ்டியுமாக ஆண்மையின் இலக்கணமாக, தோரணையாக வருபவனை இமை சிமிட்டாமல் பெண்ணவள் ரசிக்க

அவள் பார்வையில் அவனுக்கு தான் வெட்கம் வந்து தொலைத்தது. அதுவும் அவனுக்கு அழகை கூட்ட பேரழகனாகவே தெரிந்தான் அணங்கவளின் கந்தர்வன்.

அவளுக்கு என்று ஃபோன் வாங்கி கொடுத்து இருக்க, அதில் ஒரு பாடலை தேடி எடுத்தவள் ஓட விட

அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்…

அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்… ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்… கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்…

என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்காச்சே…

அவன் ஒரு விரல் தீண்டி நொருங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே… என்ற வரிகளை அவள் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்ய

அவனு எத்தனை நேரம் தான் இல்லாத பொருளை தேடுவது போல் நடிப்பது.

அவளை நெருங்கி பாட்டை நிறுத்தியவன் “ராட்சசி எப்ப பாரு என்ன சீண்ட வேண்டியது.. சேட்ட கூடி போச்சு…” என்று அவள் தலையில் செல்லமாக கொட்ட

வலிக்காத தலையை தடவி கொண்டவள் “புள்ளதாச்சி பொண்ண அடிக்காதீங்க அத்தான்…” என்று சொல்ல

அவள் போற போக்கில் சொல்வது போல் சொல்லிவிட, நிறுத்தி நிதானமாக அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள அவனுக்கு தான் நேரம் எடுத்தது.

செவிவழி சேர்ந்த செய்தி அவன் மூளையில் விரிந்து, இதயத்தை இனிக்க வைக்க “துர்க்காம்மா.. இப்ப என்ன சொன்ன?…” என்று அவள் தோள்களை பிடித்து கேட்க

அவன் முகம் பார்க்க நாணப்பட்டவள் “மாசமா இருக்கேன்னு தோணுது.. ரொம்ப நாள் தள்ளி போச்சு, உடம்புல சில மாற்றம் எல்லாம் சேந்து நீங்க அப்பாவாக வாய்ப்பு இருக்குனு சொல்லுது அத்தான்…” என்று மெல்லிய குரலில் கூறி முடிக்க

அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவன் இதயம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது.

கடைசி வரை அவன் இருண்ட உலகத்தில் அவன் மட்டுமே என்று நினைத்திருக்க, கண்ணின் மணியாக வந்து சேர்ந்தாள் அவன் காரிகை. இதோ இப்போது அவன் வாழ்வின் வண்ணங்களாக அவன் வாரிசு, அவன் மகிழ்ச்சியின் எல்லையை கூறிவிட முடியாது.

கண்ணின் ஓரம் கண்ணீர் துளிர்க்க “தேங்க்ஸ் அம்மு…” என்றான் கரகரத்த குரலில்

அவன் நெஞ்சில் தலை வைத்திருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “அத்தான் ஹாஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்துடலாம்…” என்று சொல்ல

குனிந்து அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றி எடுத்தவன் “போலாம்…” என்றான். வழக்கத்திற்கு மாறாக உணர்வு பிழம்பாக மாறி நின்றது பரணி தான்.

துர்க்காவிற்கு ஐம்பது சதவீதம் தான் இருக்குமோ என்று இருந்தது வைத்தியர் நூறு சதவீதம் உறுதிப்படுத்திய பின்னர் தான் அவளால் முழுதாக சந்தோஷப்பட முடியும்.

பரணி உள்ளங்கை தண்ணீரை பாதுகாப்பது போல் பத்திரமாக மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்திருந்தான்.

வைத்தியர் பரிசோதித்து ஆம் என்று உறுதிப்படுத்தும் வரை அவனின் உள்ளத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை. வைத்தியர் இருவரிடமும் அவர்கள் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்த, இருவருக்குமே கண்களில் ஆனந்த கண்ணீர்.

துர்க்கா அங்கேயே அழுதுவிட்டாள். அறியாத வயதில் இழந்திருந்தாலும் அவளின் இன்னல்களின் போது அவளுக்கு துணை இருந்தது அவள் மூத்த மகவு தானே, முகம் கூட பார்க்காமல் வாரி கொடுத்து விட்டாளே, அந்த வலி இருக்க தானே செய்யும்.

இதோ மறுபிறவி கிடைத்தது போல் இன்பமாக வாழ்கின்றாள். இந்த முறை சரி தன் வயிற்றின் முத்தை பத்திரமாக ஈன்றெடுக்க வேண்டும் என்ற தவிப்பு இப்போதே அவளுள் எழுந்து விட்டது .

பரணியும் உணர்வின் பிடியில் இருந்தாலும், மனைவியை தோளோடு அனைத்து அரணவனைத்து வெளியே கூட்டி வந்தான்.

மருத்துவமனையை விட்டு வெளியேறலாம் என்று பரணியும் துர்க்காவும் வரவும், அஞ்சனாவை கையில் தூக்கிக்கொண்டு பிரபாகரன் பதற்றமாக உள்ளே வந்தான்.

முதலில் அவனை கண்டு “அண்ணா!” என்று திகைத்து பின் அவன் கையில் இருந்த அஞ்சனாவை பார்த்து “ஐயோ அஞ்சுக்கு என்னாச்சு?…” என்று துர்க்கா பதற

“தெரியல துர்க்காம்மா.. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா.. தண்ணி தெளிச்சும் எழுந்திருக்கல, அதான் உடனே தூக்கிட்டு வந்துட்டேன்…” என்று தங்கைக்கு பதில் சொன்னவாரே மருத்துவரின் அறையினுள் நுழைய

அவர் அஞ்சனாவை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியே இருக்கும் படி சொல்ல, பிரபாகரனும் தன் செல்லம்மாவை கட்டிலில் படுக்க வைத்து விட்டு, பதைபதைத்த மனதுடன் வெளியே வந்து நின்று கொண்டான்.

பரணி நண்பனுக்கு ஆறுதலாக கையை பிடித்துக் கொண்டான்.

துர்க்கா “அண்ணா அஞ்சுக்கு எதுவும் இருக்காது.. எதையும் யோசிக்காதீங்க…” என்று தைரியம் கூறினாள்.

சிறிது நேரம் கழித்து அவர்களை உள்ளே அழைத்த வைத்தியர் “குட் நியூஸ் தான்.. அவங்க பிரக்னண்டா இருக்காங்க…” என்று சொல்ல அதைக் கேட்ட மூவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

பிரபாகரனை சொல்லவும் வேண்டாம், தன் செல்லம்மா அம்மா ஆகிவிட்டாள், அவனை இனி கையில் பிடிக்க ஆள் இருக்காது.

வேகமாக எழுந்தவன் கட்டிலை மறைத்து போட்டு இருந்த ஸ்கிரீனை எடுத்துவிட்டு பார்க்க, வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் அஞ்சனா.

கிடைக்கவே கிடைக்காது என்று இருந்த வரம் இன்று அவள் காதல் கணவனால் கிடைத்து விட்டது.

அவளை நெருங்கிய பிரபாகரனை கட்டிக்கொண்டு அழுது கரைந்தாள். “ஹேய் செல்லம்மா எதுக்கு இத்தன அழுக…” என்று அவள் கண்களை துடைத்து விட்டவன்

“நீ அம்மாவாக போற.. சந்தோஷமா இரு…” என்று சொல்ல

துர்க்கா “அம்மா மட்டும் இல்ல அத்தையும் ஆகிட்டா…” என்று சொல்ல

திகைத்து தங்கையை பார்த்த பிரபாகரன், பின் பரணியை பார்த்து “உண்மையாவா?…” என்று கேட்க

“ஆமா தாய்மாமன் சீர் செய்ய தயாரா இரு…” என்று பரணி சொல்ல

“பதிலுக்கு நீயும் செய்யனு…” என்று பிரபாகரன் சொல்ல

நான்கு பேர் முகத்திலும் அழகிய, ஆத்மார்த்தமான, விரிந்த புன்னகை.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 35

  • Gayathri Sgh

    Wowww super….. Congrats prabha and parani appa aanathukku 🤝🤝.. 😍😍💞💞💞

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!