Skip to content
Post Views: 116
சீதா கல்யாண வைபோகமே..
அத்தியாயம் -2
Advertisement
Advertisement
Advertisement
மூன்று நாட்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தாள் சீதா.. பகல், இரவு என்று பார்க்காமல் காரை ஓட்டிக் கொண்டே இருந்தவள் தூக்கத்திற்கு மட்டும் சிறிது நேரம் ஒதுக்கினாள்,,, வேளை வேளைக்கு தந்தைக்கு சமைத்து கொடுத்தவள்,, அவளும் உண்டு விட்டு கார் ஓடிக் கொண்டிருந்தாள்..
Advertisement
மூன்று நாட்கள் நிற்காமல் ஓடியும் அவளால் 20 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை பெட்ரோல் செலவு அது இது என்று அவள் சம்பாதிப்பது பாதி பெட்ரோலுக்கே போய்விட,, என்ன செய்வது என்று முளித்துக் கொண்டு எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சவாரியை இறக்கி விட்டு நின்றிருந்தாள்..
அடுத்த சவாரி அழைப்பு வரவதிற்க்காக அவள் காத்திருக்க,, பக்கத்தில் ஒரு வட நாட்டவர் வந்து இவளிடம் தங்குறதுக்கு நல்லா ரூம் கிடைக்குமா, டிராப் பண்ணுறீங்களா என்று கேட்க.
சீதா அவர்களை பார்த்து என்னவென்பது போல் கேட்க.”நாங்க ஐந்து பேர் குடும்பமாக சென்னையை சுத்தி பார்க்க நேபளாத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று ஹிந்தியில் இவளிடம் கூற.
“சரி வாங்க” என்று அந்த ஐந்து பேரை தன் காரில் ஏற்றிக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் இறக்கி விட்டாள் சீதா..
அவர்கள் இவளிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே வர..
சீதாவும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வந்தாள்..
இவள் ஒரு நல்லா ஹோட்டலில் அவர்களை டிராப் செய்துவிட்டு அடுத்த சவாரியை பார்க்க சென்றுவிட.. சாயங்காலம் போல் சீதாவுக்கு போனில் அழைத்தனர் அந்த நேபாளி குடும்பம்,, நீங்களே வர முடியுமா பீச்சுக்கு போக வேண்டும் என்று,,,
சீதா பீச்சை விட்டு ரொம்ப தூரம் தள்ளி இருந்ததால்..
“நான் வர அரை மணி நேரம் ஆகுமே வெயிட் பண்ண முடியுமா? அப்படி இல்லை என்றால் வேற கார் புக் பண்ணி செல்லுங்கள்”என்று கூற..
“பரவாயில்லை நீ எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் சரி, காத்திருக்கிறோம், நீயே வா” என்று சொல்லி விட.
அவளோ அரை மணி நேரம் கழித்து அந்த ஹோட்டலின் முன் வந்து நின்றாள்..
அவர்களுக்கு சீதாவை மிகவும் பிடித்து விட, சீதாவின் காரில் செல்வதே அவர்களுக்கு பிடித்திருக்க, அதனால் சீதாவை வர சொல்லியிருந்தனர்,..
அவள் வந்து அனைவரையும் பீச்சுக்கு அழைத்து சென்றாள்,, அவர்கள் பீச்சில் நன்றாக சுத்தி பார்த்துவிட்டு வர.. பின்பு அவர்களை ரூம்பில் அழைத்து சென்று விட்ட பின்,, இவள் கிளம்ப…
“நாளை காலை எங்கேயாவது தீம் பார்க் செல்லலாம் நீயே வா சீதா” என்று அழைக்க..
அவளும் “சரி’ என்று சொல்லி விட்டு.. மறுநாள் தீம் பார்க் அவர்களை அழைத்து சென்றாள்..
அவர்கள் சீதாவையும் சேர்த்து தீம் பார்க் அழைத்து சென்றனர்,, சீதா எவ்வளவு மறுத்தும் அவர்கள் கேட்க வில்லை..
அவர்கள் குடும்பத்தோடு ஒன்றி போனாள் சீதா.. இரண்டு வயதான தம்பதியினர், ஒரு கணவன், மனைவி அவர்களின் பத்து வயது பெண் குழந்தை,,
அவர்களுக்கு சீதா கார் ஓட்டுவது மிகவும் பிடித்திருந்தது, வட நாட்டிலும் கார் ஓட்டுகிறார்கள் தான் இருந்தாலும் சீதாவை அவர்களுக்கு ரொம்ப பிடித்தது..
சீதாவை பற்றி விசாரிக்க.. அவளோ தன் படிப்பு, குடும்பம் பி,எச் டி படித்து முடிக்க போவதை பற்றி சொல்ல..
அவர்களுக்கு ஆச்சரியம் இவ்வளவு படித்துவிட்டு இந்த பெண் கார் ஓட்டுகிறாளே என்று கேட்க..
அவர்களிடம் தன் கஷ்டத்தை எடுத்து சொன்னாள் சீதா,, தன் தம்பி டாக்டருக்கு படித்துக்கொண்டிருக்கிறான், அவனுக்கு பீஸ் கட்ட பணம் தேவை, என்று அனைத்தையும் அவர்களிடம் கூறி இருந்தாள்..
சீதா சொல்லியதைக் கேட்டவர்கள் தாங்களே அந்த மொத்த பணத்தையும் தருவதாக சொல்லி தாங்கள் ஐந்து நாட்கள் சென்னையில் இருக்கப் போகிறோம் எங்களுக்கு சென்னையை சுத்திக்காட்ட முடியும என்று கேட்டனர்..
சீதா சரி என்று ஒப்புக்கொண்டவள்..
ஐந்து நாட்களில் சென்னை முழுக்க அவர்களுக்கு சுத்திக்காட்டி இருந்தாள்,, இதில் திருத்தணி, திருப்பதி வேறு அழைத்து சென்று வந்திருந்தாள்..
அவர்களுக்கு மிகவும் த்திருப்தி சென்னையையே பார்த்து விட்ட சந்தோஷம்,,
எல்லாம் முடித்து அவர்களை சென்டரல் ரயில்வே ட்டேசனில் இறக்கிவிட்டாள்,, அந்த குடும்பத்தை பிரிய சீதாவுக்கே மனம் வர வில்லை அனைவரையும் கைப்பிடித்து கட்டியணைத்து வழி அனுப்பி வைக்க.. அவர்கள் சீதாவுக்கு ஒரு விலையுயர்ந்த புடவையை பரிசளித்து விட்டு விடைபெற்று சென்றனர்..
அந்த நேபாளி குடும்பத்தை நீண்ட நேரம் பார்த்த படியே நின்றவள்.. பின்பு அவர்கள் தனக்கு தரவேண்டிய பணம் கொடுக்கவில்லையே? அவர்கள் மறந்துவிட்டார்களா என்று ஃபோனின் பணம் வந்து விட்டதா? என்று செக் பண்ணி பார்க்க,, அவளின் போனில் எந்த பணமும் வரவில்லை..
ஐயோ எப்படி அவர்களை அழைப்பது என்று அவர்கள் சென்று பிளாட் பார்ம், முன் ஓடினாள் பணத்தை வாங்க,,..
ஐயோ பாவம் அவர்கள் போகும் ட்ரெயின் எப்பவோ கிளம்பி இருக்க,, இவளிடம் இருந்த மொத்த பணத்தையும் பெட்ரோல் போட்டு செலவு பண்ணி இருந்தாள்..
அவர்களிடம் பணத்தை கேட்டு வாங்காத தன் முட்டாள் தனத்தை எண்ணியவள் சோர்வோடு காரில் ஏறி அமர்ந்தாள்..
பின்பு தன் கையில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள் அதில் ஒரு அழகான பட்டு புடவை, ஒரு டப்பாவில் இனிப்பும், மற்றும் ஒரு கட்டு பணம் இருக்க…
அதை பார்த்த சீதாவின் கண்ணில் இருந்து கண்ணீர் மட, மடவென இறங்கியது,, அந்த பணத்தை எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு தேம்பி, தேம்பி அழுதாள்,, இந்த பணத்திற்கு தான் ஒரு வாரத்திற்கு மேல் ஓடி, ஓடி உழைத்தது,, அந்த பணத்தை தொட்டு தடவியவள் அதற்கு முத்தம் வைத்தவள்.
உடனே பேங்க் சென்று தம்பிக்கு பீஸ் கட்டி விட்டு,, தம்பியை அழைத்து பீஸ் கட்டி விட்டேன், நல்லா படி டா, என்று சொல்லி விட்டு மீதம் இருந்த பணத்தில் காருக்கு பெட்ரோல் போட்டவள்.
இந்த மாதம் எனக்கும் சம்பளம் வராது, தந்தையின் சம்பளத்தையும் வாங்கி செலவு பண்ணி விட்டோம், இந்த மாதத்தை எப்படியாவது ஓட்டியே ஆகா வேண்டும்,, தனக்கு வேலைக்கு சென்று வர ரயில்வே பாஸ் உள்ளது..
மீதி உள்ள பணத்தில் இந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தாள் சீதா..
இரவு 9 மணிக்கு மேல் ஆகி விட்டது, வேகமாக சென்று தந்தைக்கு சமைக்க வேண்டும் என்று வேகமாக வீட்டுக்கு வந்தவள், கதவை திறக்க..
கண்ணன் வந்து படுத்திருந்தார்,,..
தந்தையை பார்த்தவள்,, “ஏன் பா லைட் போடாம தூங்குறீங்க”? என்றவள் லைட்டை ஆன் பண்ணிவிட்டு, என்னப்பா வேலை சீக்கிரமா முடிஞ்சதா, நைட் என்ன சமைக்கட்டும்,, உங்களுக்கு பிடிக்குமுன்னு பாதம், முந்திரி எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் பா” என்று தந்தையிடம் சீதா பேசிக்கொண்டே வாங்கி வந்த பொருள்களை எல்லாம் எடுத்து வைக்க..
கண்ணன் எதுவும் பேசாமல் அமைதியாகி படுத்திருக்க,, “பா, என்ன பா பேச மாட்டிங்குறீங்க, வெண்பொங்கல் சட்னி வைக்கவா?, உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே,, பொங்கலுல முந்திரி போட்டு தாளிச்சு தர்ரேன்” என்றவள் பேசிக்கொண்டே இருத்தாள்.
கண்ணன் நன்றாக சாப்பிடுவார்,, தனலட்சுமி தெலுங்கு காரர், சமையல் எல்லாம் சூப்பராக சமைப்பார் கார சாரமாக இருக்கும்,, அவர் வெண்பொங்கலில் முந்திரி போட்டு தாளித்து கணவனுக்கு ஆசையாக பரிமாறுவார்,, அதை நன்றாக உண்பார் கண்ணன்,, சீதாவும் நன்றாக சமைப்பாள்,, ஆனால் அவளால் குடும்பம் வருமானம் கருதி ஏதோ இருக்கிறதை வைத்து, சோறு, குழம்பு மட்டும் வைப்பாள்,, அதுவும் இல்லை என்றாள், லெமன் சாதமும், தயிர் சாதமும் தான், இதில் எங்கே இருந்து, கண்ணனுக்கு பிடித்த மாதிரி சமைப்பது,, இன்று ஏனோ தந்தைக்கு பொங்கல் செய்து கொடுக்க வேண்டும் என்று தோன்ற..
சமையல் செய்ய தயாரானவள்.. தந்தையை திரும்பி பார்க்க, அவர் நீண்ட நேரம் அசையாமல் அப்படியே படுத்திருப்பதை பார்த்தவள்..
“பா, உடம்பு சரியில்லையா?, இல்ல குடிச்சிட்டு வந்தீங்களா?” என்று கோபமாக கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்து “ப்பா” என்று அவரை எழுப்பா..
கண்ணன் எந்த ஒரு அசைவு இல்லாமல் அப்படியே படுத்திருந்தார்.
“ப்பா,, என்னாச்சு பா,,” என்றவளுக்கு பயம் வந்து விட..
சீதா அழைத்தும் கண்ணன் எழுந்துக்காமல் அப்படியே படுத்திருக்க.
அவள் அவரை தட்டி அழைத்தும் முழித்துக் கொள்ளாமல் இருக்க…
தந்தையின் முகத்தை பார்த்தாள்,, அவரின் மூக்கில் இருந்து இரத்தம் வந்து உரைந்து போய் இருக்க.. கண்ணனின் உடலெல்லாம் ஜில்லென்று இருக்கா,, “அப்பா எனக்கு பயமா இருக்கு, பா எழுந்துக்கோங்க பா, அப்பா பிலிஸ்பா என்கிட்ட பேசுங்க ஏன் பேசமா இருக்கீங்க,, நீங்களும் என்னை விட்டு போக போறீங்களா, ப்பா, பா!! ” என்றவள்,, தந்தையின் இதய துடிப்பதை செக் பண்ணி பார்த்தாள் அது எப்பவோ நின்று போய் இருக்க.
‘நான் என்ன பண்ணுவேன்,, கையில் காசு இல்லையா? நான் எப்படி என் தந்தைக்கு செய்ய வேண்டியதை செய்யவேன்,, இப்படி என்னை தவிக்க விட்டு போயிட்டாரே,, ஐயோ என்று தன் தலை மேல் கைவைத்து அமர்ந்தவள்’..
பகதூர் சிங் வீட்டுக்கு ஓடினாள்..
அவர்களின் வீடோ வண்ண, வண்ண விளக்குகளால் மின்ன, வீடு நிறைய சொந்த பந்தம் வந்து இருக்க, வீடே திருவிழா போல் இருந்தது,, அப்படியே வாசலில் நின்று விட்டாள்..
சீதாவை பார்த்த வாச் மேன், ” என்ன சீதா அப்படி பாக்குற உனக்கு விசயம் தெரியாதா ” என்றான்..
“என்ன பங்சன் நடக்குது பகதூர் சார் வீட்டில்” என்று சீதா கேட்க..
“உனக்கு தெரியாதா சாருக்கு நாளைக்கு அறுபதாவது பர்த்டே, கண்ணன் உன்கிட்ட சொல்லல்ல புது டிரஸ் எல்லாம் கொடுத்திருக்காங்களே,, நாளைக்கு காலையில இருந்தே பங்ஜன் தான் “?.. என்று கூற..
“அப்படியா” என்று கேட்டவள்.. அமைதியாக வீட்டினுள் வந்து அமர்ந்தவள்….
பகதூர் சாருக்கு நாளைக்க 60 பிறந்த நாள்,, அவர்களின் சந்தோசத்தை நாம கெடுக்க வேண்டாம்,, அப்பா இறந்ததை சொல்ல வேண்டாம்,, சின்மய், பூஜை, பூஜை என்று அதிகம் பார்ப்பார்,, தந்தை இறந்தது தெரிந்தால் என்ன செய்வாறோ தெரியாது, நமக்கு என்ன சொந்தமா பந்தமா இருக்கிறது எடுத்து செய்ய.. பழகிய நண்பர்கள் கூட,, தனலட்சுமி உடம்பு முடியாமல் இருந்தப்போ எங்கே தன்னிடம் பணம் கேட்டு விடுவார்கள் என்று விலகி சென்றிருக்க”,, யாரிடம் சொல்லி என்ன நடக்க போகிறது, இறந்தவர் திரும்பி வர போறார்,, என்று ஒரு முடிவை எடுத்தவள்..
தம்பிக்கு போனில் அழைத்திருந்தாள்.. அவன் போனை எடுக்காமல் இருக்க, இரண்டு,,மூன்று தடவை போன் சென்று ஆப் ஆக..
சீதா மறுபடியும் மறுபடியும் அழைக்க போனை எடுத்தான் பிரபு..
போனை எடுத்த உடனே,, “ஏன்கா திரும்பத் திரும்ப கூப்பிடுற நான் ஒரு அர்ஜெண்டா கேரளா வரைக்கும் போயிட்டு இருக்கேன்” என்றான்..
“பிரபு எங்கடா இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு வாடா, அப்பாவுக்கு முடியல, சீக்கிரமா சென்னைக்கு வா” என்றாள்..
எங்கே அப்பா இறந்ததை சொன்னால் தம்பி அழுதுவிடுவானோ, இங்கே வந்ததும் சொல்லிக்கொள்ளலாம், என்று சீதா நினைக்க.
அவனோ ” அக்கா நான் கேரளா போயிட்டு இருக்கேன், கேரளாவில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு நிறைய பேர் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, அவங்களை காப்பாற்ற போறேன், உயிரே போற பிரச்சனை இருந்தாலும் நான் அங்க வர முடியாது, எங்க ஹாஸ்பெட்டல் டீம் முழுக்க அங்கே தான் போறோம்,, “? என்று போனை வைத்து விட்டான்….
“பிரபு, பிரபு” என்று இவள் அழைப்பதை கூட அவன் கேட்க வில்லை போனை அனைத்து வைத்திருந்தான்..
சீதா மீண்டும் தம்பிக்கு அழைக்க அது நாட் ரீச்சபல் என்று வந்தது..
என்ன செய்வது என்றே தெரியவில்லை சீதாவுக்கு.. கையில் காசும் இல்லை சொந்த பந்தம் யாரும் இல்லை, நண்பர்கள் மட்டுமே, மணி இரவு ஒன்பது மணிக்கு மேலாகுது இனிமேல் யாரை அழைப்பது நண்பர்களை அழைத்தால் பகதூர் சிங்கிற்கு தெரிந்து விடும்,, சின்மய் என்ன சொல்லுவாறோ ..,, இந்த கார் செட்டில் வைத்து தந்தைக்கு என்ன செய்ய.. தம்பி வந்தால் மறுநாள் வரை வைத்திருக்காளாம், அவனும் நான் வரமுடியாது என்று போனை ஆப் பண்ணி விட்டான்….
அனைவருக்கும் சொல்லி செய்ய உனக்கு யாரு இருக்க சீதா,, என்ன இருக்கிறது உன்னிடம்,, பகதூர் தங்களுக்கு செய்ய உதவியை நினைத்து பார்த்தவள் அந்த நல்ல மனிதரின் சந்தோசத்தை கெடுக்க மனம் வரவில்லை சீதாவுக்கு..
என்ன செய்ய, என்ன செய்ய என்று அவள் யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு..
அனைத்தையும் அவளே தனியாக செய்யலாம் என்று முடிவெடுத்தவள் தந்தையை தூக்கினாள்,, அவரை அவளால் தூக்க முடியவில்லை, எப்படியோ தம் கட்டி அவரை தூக்கி சேரில் உங்கார வைத்தவள்…
பின்பு அவரின் கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு உடம்பு முடியாதவரை அழைத்து செல்வது போல் பின் வாசல் வழியே அவரை அழைத்து வெளியே வந்தாள்.
சீதாவுக்கு தெரிந்த ஒரு பெண்மணி சீதாவை பார்த்து, “என்னம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா”? என்று கேட்க..
“ஆமாம்” என்று தலையாட்டியவள்,, முன்சீட்டில் கண்ணனை உட்கார வைத்தவள்,அவருக்கு சீட்பெல்டை போட்டு விட்டு காரை எடுத்தாள்…
கூகுளில் பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக் மயானத்துக்கு செல்ல லோகேஷனை ஆன் பண்ணியவள்.. அந்த எலக்ட்ரிக் சுடுகாட்டிற்கு செல்ல,, அந்த இரவு நேரத்தில் அத்தனை கூட்டம், ஒரு பெரிய பணக்காரர் இறந்திருப்பார் போல…
அத்தனை மாலைகள், பட்டாசு வெடித்து குப்பைகளாக கீழே கிடக்க….
நிறைய ஆட்கள் வந்த போய்க்கொண்டு இருந்தனர்..
சீதா அமைதியாக காத்திருந்தாள் காரிலே,, சிறிது நேரம் கழித்து அனைவரும் சென்று விட…
இவள் காரை விட்டு கீழே இறங்கி.. அந்த எலக்ட்ரிக் சுடுகாட்டுக்குள்ளே நுழைந்தாள்,, அங்கே இருவர் மட்டும் காக்கி கலர் யூனிபார்ம் அணிந்து அமர்ந்திருக்க,,
இவளை பார்த்ததும் “என்னம்மா இந்த நேரத்தில்” என்று கேட்க..
“அப்பா இறந்துட்டாங்க” என்று அவள் மெதுவாக சொல்ல..
“எங்கம்மா இருக்கு பாடி” என்றார்.
“காருல ” என்றாள் சீதா..
“சரி வா” என்று காரின் பக்கத்தில் வந்தவர்..
கண்ணனை தொட்டு பார்த்துவிட்டு “சரிமா டெத் சர்டிபிகேட் எங்கே” என்று கேட்க..
“டெத் சர்டிபிகேட் டா?” என்றாள் சீதா…
error: Content is protected !!