Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 6 1

சீதா கல்யாண வைபோகமே..

  அத்தியாயம் – 6



Advertisement

Advertisement

Advertisement

   சீதா காலையிலே எழுந்து குளித்து ரெடியானவள்,,  தனக்கு தேவையான சில பொருள்களை, மட்டும் பேக் செய்தாள்.. அதை கொண்டு போய் காரில் ஏற்றியிருந்தாள்,,..

Advertisement

சிரஞ்சீவி  சீதாவை ஒன்றும் எடுத்து வராதே, எங்க வீட்டீலே சாப்பிடு என்று சொல்லிருக்க,, இவளுக்கு அடுத்தவர்களை தொந்தரவு பண்ணகூடாது என்று நினைத்தவள்,, சமையல் செய்ய தேவையான பொருள்களை மட்டும் எடுத்து கார் டிக்கியில் போட்டவள்..

கார்செட்டின் சாவியையும்,, அவளிடமிருந்து காரின் சாவியையும் எடுத்துக்கொண்டு பகுதூர் இல்லம் வந்தாள்..

சின்மய் அப்போது  தான் காலை பூஜையை முடித்துவிட்டு, துளசி பூஜை பண்ணிவிட்டு வீட்டுக்குள் செல்லும் போது சீதாவை பார்த்தார். ரெடியாகி வந்து நின்ற சீதாவை பார்த்து முறைத்தவர்,, “இன்னைக்கு எல்லாம் லீவு தரமுடியாது, ”  என்று திட்டுவது போல்  பேச..

சீதாவோ தன்னிடம் இருந்த சாவிகளை  சின்மய் இடம் கொடுத்து விட்டு.. “எனக்கு வேலை கிடைத்திருக்கு  மேடம், நான் கார் செட்டை காலி பண்ணிட்டு போறேன்” என்று சொல்ல..

ஆடி தீர்த்து விட்டார் சின்மய்,, சீதா காதுகளை மூடிக்கொண்டாள்…

பத்து நிமிடம் அவளை வீடாத திட்டியவர்,, “முதலில்  எங்க கிட்ட வாங்கின காச எடுத்து வை, காச எடுத்து வச்சிட்டு  நீ கிளம்பு” என்று திட்ட..

“எவ்வளவு பணம் தரணுமுன்னு சொல்லுங்க மேம்”… என்றதும்..

“எவ்வளவு தரணுமா,,  அவ்வளவு பணம் வச்சுயிருக்கீயா நீ,,,5 லட்சம் மேல பணம்  தர வேண்டியது இருக்கும்”.. என்றதும் சீதாவுக்கு பயம் வந்து விட்டது..

அவளிடம் இருப்பதோ 5 லட்சம் இவர் 5 லட்சம் மேலே சொன்னாள் நான் எப்படி தருவேன் என்று முளித்துக்கொண்டு நிற்க..

சீதா முழித்துக்கொண்டு நிற்பதை  பார்த்து ரசித்த சின்மய்..

“என்ன 5 லட்சம் மேல காசு வச்சு இருக்கீயா, காச குடுத்துட்டு கிளம்பு” என்றதும்….

” மேம்  அப்பா மாசம் மாசம் சம்பளம் பணத்துல  15,000 கொடுத்தார்,, நானும் இரண்டு  மாசம் சம்பளத்தையும்  வாங்கல,, பகதூர் சார்கிட்ட கேளுங்க  பணம் 5 லட்சத்துக்கு கம்மியா தான் வரும்”, என்றாள்..

 “என்ன உங்க அப்பா மாசம், மாசம் பணம் கொடுத்தாரா நீங்க இருக்கிற வீடு கரண்ட் பில் அதெல்லாம் யாரு கட்டுறது,, உங்க அப்பா கொடுக்கிற காசு அதுக்கே சரியா போயிடுச்சு.. நீ கொடுக்குற  காசு 5 லட்சம்  பணம் வட்டிக்கே பத்தாது, 5 லட்சம் பணத்துக்கு வட்டி போட்டு  சேர்த்து 7,50,000  பணம் குடுத்துட்டு நீ கிளம்பளாம்” என்று சின்மய் சொல்ல..

சீதாவின் கண்ணீல் இருந்து மல, மலவென  கண்ணீர் இறங்கியது,,.

அதை பார்த்தும் மனம் இறங்காத சின்மய்,, “நான் சொன்ன பணத்த தராம நீ  இங்கே இருந்து போக முடியாது, போ போய் கார் ஓட்டுற வேலையை பார்” என்று சத்தமாக பேச..

வாக்கிங் சென்ற வந்த பகுதூரை பார்த்த சீதா ஏதோ சொல்ல வர. கணவரை பார்த்த  சின்மய்,, சீதா பேசவருவதற்கு முன் ஹிந்தியில் ஏதோ, சொல்லி சீதாவை  பார்த்து திட்ட..

“என்ன சீதா சின்மய் ஏதோ சொல்லுற..

ஏதோ கணக்கு கேட்டியாமே”?.. என்றார்..

சீதா கண்களை துடைத்து விட்டு..

“எனக்கு வேலை கிடைத்திருக்கு சார், நான் இந்த இடத்தை விட்டு போறேன், நாங்க வாங்குன 5 லட்சத்துல மீதி எவ்வளவு பணம் தரணுமுன்னு சொன்னீங்கன்னா, நான் தந்துடுவேன்” என்றதும்..

“என்ன வேலைமா” என்றார். அவளின் மேல் உள்ள அக்கரையில்..

“என் பிரண்ட் எற்பாடு பண்ணி தர்ரதா சொல்லி இருக்காங்க சார்,, அவங்க வீட்டுலயே தங்கி வேலை செய்ய போறேன்” என்றதும்..

“சரி மா, பார்த்து போ,  உன் வாழ்க்கையை பாரு,, தம்பியை பார்த்துக்கோ நீ கிளம்பளாம்”.. என்றார்..

சின்மய் கணவனை பார்த்து சத்தம் போட,,.

“வாய்யை மூடு”, என்று மனைவியை திட்டியவர்,, “நீ போ சீதா” என்றார் மனிதர்…

சீதா  தயங்கி நின்றவள் “நான் தரவேண்டியது பணம்  இருக்குமே சார் “…

“அது தான் உன் அப்பா மாதம், மாதம்  பணம் கொடுத்தாரே,, நீயும் இந்த ரெண்டு மாதம் சம்பளம் பணம் வேண்டாமுன்னு  சொல்லிட்ட, குடுத்த வரைக்கும் போதுமா, நீ போ” என்றார்..

சின்மய் விடுவதாக இல்லை “அவகிட்ட பணம் வாங்காம அவளை அனுப்ப மாட்டேன்” என்று பகதூரிடம் சண்டை போட…

மனைவியை பார்த்து முறைத்த பகதூர்,, “சின்மய் உள்ள போ”, என்றார்..

“நான் போக மாட்டேன், அவகிட்ட ஏன் பணம் வேண்டாம் சொல்லுறீங்க, காரணம் சொல்லுங்க” என்று முறைத்த படியே நிற்க….

“நம்ம கிட்ட வேலை பாக்குறவங்கலுக்கு நம்ம வருசா வருசம் போனஸ் தர்றோம், கண்ணன் குடும்பத்துக்கு நம்ம ஏதாவது போனஸ் கொடுத்து இருக்கோமா? அது மட்டும் இல்ல, 24 மணிநேரமும் எப்போ கூப்பிட்டாலும் உடனே வந்து கார் ஓட்டுவாரு கண்ணன்,,..சீதாவும் அப்படி தான் ரொம்ப  நல்ல பொண்ணு,, கார் ஓட்டிக்கிட்டே படிச்சி பட்டம் வாங்கி இருக்கிற பொண்ணு,, கண்ணன் செத்தத கூட நம்ம கிட்ட சொல்லி காசு வாங்காம, தனியா எல்லாத்தை பார்த்துருக்கு,,,, கண்ணன் இறந்தத  சொன்னா நம்ம சந்தோஷம் கெடுமுன்னு நினைக்குற பொண்ணு,, எனக்கே சீதாவை இப்படி தனியே விட்டுட்டோமேன்னு  கஷ்டமா இருக்கு,, இன்னும் கொஞ்ச நாள் கழித்து நானே  ஒரு நல்லா பையனா பார்த்து சீதாவுக்கு  கல்யாணம் பண்ணி  வைக்கலாமுன்னு நெனச்சிருந்தேன்,,.. ஆனா சீதாவே

 போறப்போ சந்தோஷமா அனுப்பி வைக்கனும், நீ போ சீதா,, இதுவரைக்கும் நீங்க பணம் கொடுத்ததே போதும் மா,, உனக்கு வேற  உதவி தேவைப்பட்ட என் கிட்ட  சொல்லு” என்றதும்..

அவரை கையெடுத்து  கும்பிட்டு நன்றி சொன்னா  சீதா,..

சின்மய்யை பார்க்க,, அவரோ கோபத்தில்  ம்ம் என்று முகத்தை திருப்பி கொண்டு உள்ளே செல்ல….

பகதூரை பார்த்து தலையசைத்த சீதா அவளின் கார் எடுத்துக்கொண்டு சிரஞ்சீவி வீடு வந்து சேர்ந்தாள்….

மனதில் சின்மய் பேசியது வேதனையை  தர.. அமைதியாக சிரஞ்சீவி இல்லம் வந்து சேர்ந்தாள்…

சிரஞ்சீவியின் தாய் மாலா சீதாவை எதிர்  பார்த்து காத்திருந்தவர், அவளை பார்த்ததும் “வா, வா சீதா” என்று பாசமாக அழைத்து வீட்டின் உள்ளே அழைத்து சென்றவர்,அவளிடம் பேசிக்கொண்டே உணவு பரிமாற..

“நான் அப்பறம் சாப்பிடுறேன் ஆண்ட்டி” என்றாள்..

“சிரஞ்சீவி சொல்லிட்டு தான் போனான்,, நீ தங்கறது மட்டும் தான் மேல மத்தபடி எல்லாம் கீழே தான் சாப்பிடு சாப்பிட்டு, இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுமா”.. என்று பேசிக்கொண்டு இருக்க..

சிரஞ்சீவியின் இரண்டாவது  தம்பி சஞ்சய் வந்தவன்,, சீதாவை பார்த்து “அக்கா, சீதாக்கா வாங்கக்கா எப்படி இருக்கீங்க,, ” என்று பேச.

“நான் நல்லா இருகேன்டா சஞ்சய், சஞ்சய் தானே உன் பேரு?”…

“ஆமாம் கா”..

“என்ன பண்ணுற சஞ்சய்?”.

” இஞ்ஜினியரிங் பைனல் இயர் படிக்கிறேன் கா”..

“பெரிய தம்பி  எங்கே”?..என்று  முகந்தனை கேட்டாள்..

சிரஞ்சீவியின்  கூட பிறந்தது இரண்டு தம்பிகள், சிரஞ்சீவி தந்தை பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்,, மிகவும் இனிமையான மனிதர், அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், மூன்று பேரையும் நன்றாக படிக்க வைத்தார், சில வருடம் முன் தான் நெஞ்சு வலியால் இறந்து போனார்..

மாலா தன் பிள்ளைகளை கணவர் இறந்த பிறகு பார்த்துக்கொள்கிறார்..

மூத்தவன் தான் சிரஞ்சீவி, இரண்டாவது முகுந்தன், மூன்றாவது சஞ்சய்..

முகுந்தன் படித்து முடித்து  ஒரு பொண்ணை காதல் திருமணம்  செய்து பெங்களூரில் இருக்கிறான்..

சிரஞ்சீவி தான்  மூத்த மகன் என்பதால் முதலில் திருமணம் செய்து கொள்  என்று மாலா கேட்ட போது,,.. நான் முதலில் டைரக்டர் ஆகனும்  அதன் பிறகு திருமணம்  செய்து கொள்வேன்  என்று சொல்லி  விட்டான்,,..

ஆனால் அதற்கு  இன்னொரு காரணமும்  இருக்கு, அவன் லதா என்கிற ஒரு பொண்ணை பள்ளி காலத்தில் இருந்து விரும்புகிறான்,, அவளும் இவனுக்காக காத்திருக்கிறாள்..

லதா நல்ல வேலையில் இருக்கிறாள்,, அவள் கூட பிறந்தது, ஒரு அண்ணன் மட்டுமே, அதனால சிரஞ்சீவி படம் எடுத்து முடிப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறாள்…

சஞ்சய் சீதாவோடு இணைந்து கதைபேச ஆரம்பித்து விட்டான்,, சீதாவுக்காக ஒதுக்கபட்ட அறைக்கு அவளின் உடைமைகளை எடுத்து செல்ல உதவியவன்,, அவளுக்கு தேவையான பொருள்களை வாங்க கடைக்கு அழைத்து சென்றான்..

மாலா சீதாவிடம் சொல்லிவிட்டார், நீ இங்கே இருக்குற வரைக்கு எங்க வீட்டுல தான் சாப்பாடு, நீ சமைக்க கூடாது, உனக்கு என்ன வேணுமோ கேளு, அம்மா செஞ்சு தர்ரேன்” என்றார்.. பெண் பிள்ளை இல்லாத வீடு அல்லவா, அதனால் சீதாவை ரொம்ப பிடிக்கும்…

சீதாவுக்கு தன் வீடு போல் ஒரு உணர்வு வந்தது,, அதுவும் சஞ்சய்யை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது,,..

நீண்ட நாள்  கழித்து வாய்விட்டு பேசி சிரித்திருந்தாள்,, இரவு சிரஞ்சீவி சீதா அறைக்கு வரும் போது கூட, சீதாவின் சிரிப்பு  சத்தமே அவனை வரவேற்றது,, சஞ்சய்யின் தோளில் அடித்தபடியே கண்ணீல் நீர் வர சிரித்த சீதாவை பார்த்த சிரஞ்சீவிக்கு மனம் நிறைந்து இருந்தது,..

இனி இந்த சிரிப்பு உன்னை விட்டு போகமால் பார்த்துக்கொள்வேன் சீதா என்று மனதில் நினைத்தவன்.. இருவரின் பக்கத்தில் வந்து அமர..

சஞ்சய் அண்ணனை பார்த்து  இன்னும் அவன் கலேஜில் நடந்த  கமெடியான விசயத்தை  பத்தி பேச, மூன்று பேரும் சிரித்திருந்தனர்..

மாலா கீழே இருந்து இவர்களை அழைக்க, இதோ வர்ரோம் என்று சாப்பிட சென்றனர்….

மூன்று  பேரும் சாப்பிட அமர,, மாலா பரிமாறினார்,, சீதா மாலாவை “நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க மா” என்று சொல்ல.

“நான்  7 மணிக்கே சாப்பிட்டேன் மா,”. என்றவர்.. அவர்களுக்கு பார்த்து, பார்த்து பரிமாற,, சீதா தான் நீங்க போய் தூங்குங்க நான் பாத்துக்கிறேன் என்றுசொல்ல,,

“சரிமா சரிமா சாப்பிடுங்க” என்றவர் அவர் அறைக்கு போக,, சிவா வந்திருந்தான் சீதாவை பார்க்க…

சீதா சிவாவை பார்த்து “வாங்க சார் சாப்பிடலாம்” என்று அழைக்க..

நான்  எங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வந்தேன் சீதா என்றதும்,,..

அவர்கள் ஏதோ பேச போரார்கள் என்று நினைத்த சஞ்சய் வேகமாக உண்டு விட்டு ,, சீதாக்கா  நான் போய் தூங்குறேன் என்று சொல்லி விட்டு செல்ல..

சீதா சாப்பிட்டதை எடுத்து வைத்து சுத்தம் பண்ணி வந்தாள்,,,..

அவளுக்காக சிரஞ்சீவியும், சிவாவும்  காத்திருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!