Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 8 1

அத்தியாயம்….8 (1)

மணிமேகலையின் சடங்கு அன்று, சங்கரி தன் அண்ணன் மகளுக்கு, சீர் வரிசையை  பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். அதை பார்த்த அவர் கணவன் கூட…

“என்னடி  உன் அண்ணன் மகள் சடங்குக்கு தானே வரிசை வைக்கிற…என்னவோ கல்யாணத்துக்கு வைப்பது போல அடுக்கிட்டே போற…” என்று  செல்வரத்தினம் தன் மனைவியை கிண்டல் செய்தார்.

செல்வரத்தினம் எப்போதும் சிக்கனம் என்பதை பார்க்க மாட்டார். வசதி இருக்கிறது. ஆனால் பெற்றோர் இல்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் போதே… தன் மனைவியிடம் பணம் கொடுத்து…



Advertisement

“நீயும் வாங்கிட்டு உன் அண்ணிங்களுக்கும் வாங்கி கொடு.” என்று  வீட்டு அரசியல் தெரியாது  கத்தை பணத்தை கொடுப்பார்.

ஆனால் சங்கரி தனக்கு மட்டும் வேண்டியதை வாங்கிக் கொண்டு  மற்றதை தன் கணவனிடமே கொடுத்து விடுவார்.

“ஏன்டி…நீயுமா நாத்தனார் புத்திய காமிக்கிற…” என்று கணவர் கேட்டால்…

Advertisement

“ஆமா இதுவும்  ஒரு வகையான  நாத்தனார் புத்தி தான்.” என்று சொல்லும் மனைவியை செல்வரத்தினம் குழம்பி போய் பார்த்தால்…

Advertisement

“தோ பாருங்க ஆம்பிளைங்களுக்கு வீட்டு நிலவரம் தெரியாது. இப்போ நீங்க கொடுத்த பணத்தில் எனக்கு வாங்கினது போலவே மூன்று அட்டிகை வாங்கிட்டு எங்க அண்ணிங்களுக்கு கொடுத்தா…என் இரண்டாம் மூன்றாம் அண்ணிங்க…

“என்ன இது தங்கத்துல வாங்கி இருக்க…என் அம்மா வீட்ல வைரத்திலேயே  ஐந்து செட் கொடுத்தாங்க என்று சொல்லுவாங்க…நம்ம பணத்தையும் போட்டு நம்ம  மரியாதையை கொடுக்கனுமா…?” என்று  சொன்ன மனைவியின் பேச்சு செல்வரத்தினத்திற்க்கு நியாயமாக தான் பட்டது.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

ஆனாலும்… “சரிடி அப்போ அவங்கல விடு. உன் பெரிய அண்ணிக்காவது ஏதாவது வாங்கி கொடுக்கலாம்லே…” என்று கேட்டார்.

செல்வரத்தினத்தை  பொறுத்த வரை, அந்த வீட்டில் அவர் ஏதாவது செலவு செய்யனும். சாப்பாட்டுக்கு என்று கொடுக்கும் அளவுக்கு அந்த வீட்டின் நிலவரம் இல்லை.

சுற்றியில் இருக்கும்  அரிசி ஆலைக்கே, இவர்கள் நிலத்தில் இருந்து தான்  நெல் போகிறது. அது போல தான் காய்கரி தோட்டம் …வீட்டிலேயே மாடு வளர்ப்பது கோழி வளர்ப்பது என்று இருக்கும் வீட்டில், என்ன சொல்லி காசு கொடுப்பது.

அதனால் வருடத்திற்க்கு ஒரு முறை தன் மனைவிக்கு நகை வாங்க பணம் கொடுப்பார். அதோடு தன் மச்சான் மனைவிமார்களுக்கும் நகை வாங்க பணம் கொடுத்த போது தான் இந்த பேச்சு எல்லாம்.

அப்போது கூட விடாது… “சரி உன் மத்த இரண்டு அண்னிங்கல விடு. உன் முதல் அண்ணிக்காவது வாங்கி கொடுக்கலாம்லே…நீங்க மட்டும்  கொத்து கொத்தா நகை போட்டுட்டு இருக்கிங்க…

அவங்க கண்ணுக்கு கூட தெரியாத அளவுக்கு மெலிசா ஒரு  தாலி கொடி தான் போட்டுட்டு இருக்காங்க. என் கண்ணுக்கு தெரிஞ்சது உன் கண்ணுக்கு தெரியலையா…?” என்று செல்வரத்தினம் கேட்டால்…

“நான் அவங்களுக்கு மட்டும் வாங்கி கொடுத்தா ஒன்னா இருக்க குடும்பம்  ரெண்டு பட்டு போயிடும். பரவாயில்லையா…?” என்று திருப்பி தன் கணவரை சங்கரி கேட்க…

கை மேலே தூக்கிய வாறு ஒரு கும்பிட்டு  போட்ட மனுஷன்… “வீட்டு அரசியலை பார்த்தா இந்த நாட்டு அரசியலே பரவாயில்ல போல…வேண்டாம் டி வேண்டாம்.” 

அன்றோடு இது செய்… அது செய்…என்று  வாய் திறக்காத மனுஷனயே சங்கரி அடுக்கிய சீர் வரிசையில்ய் திறக்க வைத்து விட்டார்.

தன் மகனின் மனது தெரிந்த உடன்… மணிமேகலைக்கு பத்து பவுனில் ஆராம் போல் வாங்கிய நகைக்கு தோதாக..நெக்லஸ் …கம்பல்..வளையல்…என்று முப்பது சவரனை தன் கணவனோடு வாங்கி வந்தது மட்டும் அல்லாது…

“வீட்டில் வந்து விக்குற சேல எல்லாம் தரமா இல்லேங்க…வாங்க  கடை தெருவுக்கு போய் நல்லதா வாங்கி வரலாம்.” என்று சொல்லி அழைத்து சென்றவர், தன் கணவனை ஒரு வழி செய்து விட்டே  வீடு வந்தார்.

கடையில் இருக்கும் அனைத்து சேலைகளையும்  அந்த கடைக்காரன் கொட்டி கடை விரித்த பின்னும்… இரு சேலையை கையில் வைத்துக் கொண்டு… “ஏம்பா இந்த கலர் பார்டர்… இதுல வந்து இந்த உடம்புல இருக்க கலர்  இந்த சேலையின் முந்தியில இருப்பது போல இருக்கா…?” என்று  கேட்டால்…

அந்த கடை முதலாளியே முழித்ததில், பாவம் பார்த்து செல்வரத்தினம் தான்… மனைவி கையில் இருந்த  “இரண்டு புடவையும் எடுத்துகோ சங்கரி. இதுவே நல்லா தான் இருக்கு.” என்று மனைவியை நம்ப வைத்து வாங்கி வருவதற்க்குள் அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

இதோ  நேற்று வரிசையில் அடுக்க பிஸ்தா பாதம் அக்ரூட்…என்று அடுக்கியதோடு…ஒரு தட்டில் சுடி…ஒரு தட்டில் பாவடைகள்..ஒரு தட்டில் கட்சீப்… இதை எல்லாம் பார்த்து பொறுமையின் சிகரமே…பொங்கி விட்டார்.

“என் அண்ணன் மகளுக்கு மட்டும்  சீர் செய்வது என்றால் பரவாயில்ல…என் மருமகளா வரப்போறவளுக்கு பார்த்து பார்த்து செய்ய வேண்டாமா…?” என்ற  சங்கரியின் பேச்சில்…

 தன் விளையாட்டு தனத்தை கை விட்ட செல்வரத்தினம்… “தோ பாரு சங்கரி. நீயா இது போல ஆசை எல்லாம் வளத்துக்காதே…அதே போல் உன் அம்மா கிட்டேயும் சொல்லாதே…உன் மகனுக்கு இது எல்லாம் பிடிக்காது.” என்று திட்ட வட்டமாக பேசும் கணவனை கிண்டல் பார்வை பார்த்த சங்கரி…

“உங்க மவன் தான் சொன்னதே…அந்த புள்ளைக்கு குச்சி கட்டுனதே …என்னை விட்டு எவன் கட்டுவான்னு…அப்படி இருக்க தாலிய வேறு எவனையாவது கட்ட விட்டுடுவானா…?” என்ற மனைவியின் பேச்சில்…

செல்வரத்தினம்… “என்னடி சொல்ற…? இது விளையாட்டு பேச்சு இல்லடி…” என்று மனைவியின் பேச்சை  நம்ப முடியாது சொன்னார்.

 

[the_ad id=”6605″]

 

 

“நம்பலேன்னா உங்க மவனே  வர்றான்… கேட்டுக்குங்க…எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு.” என்று சொன்னவர், உடல் முழுவதும் நகைகளாக ஜொலிக்க…ஒரு கை அங்குலத்திற்க்கு காஞ்சிபட்டு உடலை தழுவி இருக்க…அந்த வரிசை தட்டை வேலையாள் மூலம் வேனில் ஏற்றிக் கொண்டு  இருந்தார்.

“உங்க மவனையே கேளுங்க…” என்று சொன்னதில் தன் மகனை திரும்பி பார்த்தவர்…அவன் எப்போதும் போல் உடையணிந்து..சாதரணமாக வந்து அமர்ந்தவன்…

தன் தந்தையிடம்… “என்னப்பா எல்லாம் எடுத்து வெச்சாச்சா…?” என்று கேட்டவனை பார்த்து செல்வரத்தினம் இன்னும் குழம்பி தான்  போனார்.

“உன் அம்மா என்ன என்னவோ சொல்றாளேப்பா…?” என்று செல்வரத்தினம்  தன் மகன் வீராவை பார்த்து கேட்கும் போதே அவர்கள் முன் வந்து நின்ற சங்கரி…

மகனின் சாதரண உடையை பார்த்து… “என்னடா இது. மனசுக்கு பிடிச்ச பொண்ணு விழாவுக்கு போற…சும்மா ஜம்முன்னு உடுத்தாம..இப்படி உடுத்திட்டு வந்து இருக்க…” என்ற மனைவியின் பேச்சில் மகன் திட்டாது இருக்கும் போதே…

ஓ தன் மனைவி சொன்னது உண்மை தான் என்று நம்பிய செல்வரத்தினம்… அவரும் தன் பங்குக்கு…

“போன தீபாவளிக்கு வாங்குன பட்டு வேஷ்ட்டி… பட்டு சட்டை போட்டு வா வீரா.” என்று  செல்வரத்தினம் இந்த தன் பேச்சின் மூலம் தன் மகன்  விருப்பத்திற்க்கு சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் அவர் மகன் வீராவோ… தன் அன்னையை  பார்த்து… “தோ பாருங்க இப்போ இந்த விழா உங்க அண்ணன் மகள் விழா…அவ்வளவு தான்.  சும்மா அங்கே போய் இது போல் பேச்சு எல்லாம்  பேச கூடாது.” என்று திட்ட வட்டமான மகனின் பேச்சில் சங்கரி…

“ஏன்டா…”  என்று கேட்டவரின் குரல் காத்து போன பலூனின் நிலை போல் ஆனது.

“ஏன்னா…அம்மா அவ குழந்தைம்மா…இப்போ தான் பதினான்ங்கு   வயசு ஆகுது. அடுத்த வருடம் தான் பத்தாவது போக போறா…

இனி தான் அவ படிப்பே  தொடக்கம். இந்த சமயத்தில் இது போல் பேச்சு எல்லாம் அவ காதுல விழ கூடாது. இந்த விசயம் நம்மோட இருக்கட்டும்..அம்மத்தாக்கு கூட தெரிய கூடாது.” என்று சொன்னவனின் பேச்சுக்கு ஏற்ப தான் அவன் பெற்றோர்களும் நடந்துக் கொண்டனர்.

இதோ இன்று வரை…யாருக்கும் எதுவும் தெரியாது. மணிமேகலையின் படிப்பு முடிய இதோ ஏழு வருடம் காத்திருந்தவனுக்கு, இனி இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமா…?என்று நினைத்தாளே வீரேந்திரனுக்கு மலைப்பாக தான்  இருந்தது. இது போல்  மணிமேகலையின் நினைவில்  வீரா திளைத்துக் கொண்டு இருந்தான்.

************************************************************

கலிபோனியாவில்… நம் ஜான் விக்டர் பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டு  கண்ணாடி முன்  அப்படி இப்படி என்று தன்னை திருப்பி பார்த்தவனுக்கு, ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது.பின் தான் தன் கூலரை கண்ணில் மாட்டி விட்டு பார்த்தவன் மனதில் முழு  திருப்பி எழ சாப்பிட கீழே சென்றான்.

ஜான் விக்டர் எப்போதும் உடையில் அதிக கவனம் எடுத்து தான் அணிந்துக் கொள்வான். ஒருவரின் கவுரவம் அவர்கள் உடையை பொறுத்தே இருக்கிறது என்பது அவனின் எண்ணம்.

அதனால் உடை விசயத்தில் அவன் எப்போதும் அதிக கவனம் செலுத்துவான். இன்று ஏனோ அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினான். இன்றாவது தன்னை அவள் பார்க்க மாட்டாளா…? என்று நினைத்துக் கொண்டே தான்  அவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

மலர் விழி… “காலேஜில் ஏதாவது பங்ஷனா ஜான்…”  புது உடையை பார்த்து வினாவினார்.

“இல்லேம்மா ஏன் கேட்குறிங்க…” என்று தன் அன்னையிடம் கேள்வி கேட்டாலும், நேரத்தை பார்த்த வாறே விரைவாக உணவை உண்டுக் கொண்டு இருந்தான்.

ஜான் விக்டர் பக்கத்தில் வந்து அமர்ந்த வில்சன் விக்டர்… “பையனின் மேக்கப் இன்னைக்கு கொஞ்சம்  தூக்கல தெரியுதே…அதை பார்த்து தான் என் மலர் கேட்டு இருப்பாள்.” என்று மகனுக்கு பதில் அளித்துக் கொண்டே…

“மலர்  உன் டார்லிங்கையும்  கொஞ்சம் பாருடா…” என்று தன் மனைவியிடம் எப்போதும் போல் காதல் வசனம் பேசினார்.

மலர் விழியும் என்றும் போல் இன்றும் கன்னம் சிவந்து கணவனின் பேச்சு பிடித்து இருந்தாலும், மகனின் முன் …என்ன இது… என்று சிணுங்கல் பாதி, கோபம் மீதியுமாய்… தன் கணவனை பார்த்த வாறே பரி மாறினாள்.

“டாடி இனி இந்த வீட்டில் என் ரொமான்ஸ் மட்டும் தான் நடக்கும். என் பெல் கூட…இனி நீங்க உங்க ஒய்ப்பை  கூட்டிட்டு தனி குடுத்தனம் போயிடுங்க.” என்று தந்தையிடம் சொன்ன ஜான்…

தாயின் கன்னத்தை தட்டி… “உங்க மருமகள பாக்க  டைமாயிடுச்சி… மத்த விசயத்தை ஈவினிங் வந்து பேசிக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

“என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்…” என்று கவலையுடன் மலர் விழி தன் கணவரை  பார்த்து கேட்டாள்.

“அவன் கிடக்குறான் சின்ன பைய்யன். இந்த வீட்டில் எப்போதும் நம்ம ரொமான்ஸ் தான் ஐப்பிச்சில்  இருக்கும். நீ கவலை படாதே…” என்று தன் மனைவி என்னவோ அதற்க்கு தான் கவலை படுவது போல் வில்சன் விக்டர் பதில் அளித்தார்.

“உங்கல உங்கல…” என்று மனைவி பல்லை கடிக்க…

“நீ என்னை என்ன வேணும் ஆனாலும் செய்யலாம். அதற்க்கான உரிமை  உனக்கு மட்டும் தான் இருக்கு மலர்.” என்று திரும்பவும் மனைவியை கிண்டல் செய்தார்.

 

[the_ad id=”6605″]

 

 

ஆனால் அதற்க்கு  பிரதி பலன் மனைவியின் முகத்தில் இல்லாது போக…தன் விளையாட்டு பேச்சை கைய் விட்டவராய்…

“மலர் என்னம்மா…?” என்ற கணவனின் அனுசரணையான பேச்சில்… அவர் தோள்  சாய்ந்த மலர் விழி…

“இல்ல ஜானுக்கு எதுன்னாலும் அவன் விருப்பத்துக்கு கிடச்சிடும். கிடச்சிடனும்…இப்போ அந்த  பொண்ணு பத்தி பேசும் போது கூட…இவன் விருப்பத்தை வெச்சி தான் சொல்றானே தவிர…

அந்த பொண்ணுக்கு தன்னை பிடிக்குமா…? யோசிக்க கூட மாட்டேங்குறானே…அது தான் கொஞ்சம் பயமா இருக்கு. எல்லாம் நல்ல விதமா நடந்துட்டா பரவாயில்ல…அந்த பெண் வேறு யா…” 

அதற்க்கு மேல் தன் மனைவியை பேச விடாது வாய் மூடிய வில்சன் விக்டர்… “அது போல சொல்லாதே மலர். நம்ம மகன் விருப்பபட்டது எல்லாம் அவனை வந்து சேரும். நம்ம மகனுக்கு என்ன குறச்சல்…? ஒரு பெண் மறுக்கும் அளவுக்கு  நம்ம மகனுக்கு எந்த குறையும் இல்ல மலர். அதனால நல்லதே நினை. நல்லதே நடக்கும்.” என்று ஏதேதோ சொல்லி தன் மனைவியை சமாதானப்படுத்திய வில்சன் விக்டர் மனதிலும் இதே தான்…ஒரு வேளை அந்த பெண் மறுத்து விட்டாள்.

மனைவியிடம் சொல்லி விட்டார். நம் மகனுக்கு என்ன குறை …?என்று. காதல் மனதில் எழுந்து விட்டால் குறை இருந்தாலும், அதில் நிறையை பார்க்கும் என்று  தெரிந்திருந்தாலும், ஒரு தகப்பனாய் தன் மகனின் ஆசை நிறைவேற…கடவுளிடம் வேண்டினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!