“கிரி” என இவள் அதிர, இவனோ “பிடிக்கலைன்னு சொல்லிட்டல்ல” அவன் குரலில் இருந்தது அப்படி ஒரு விரக்தி. இரண்டு சென்டி மீட்டர் இடைவெளியில் இருந்த அவள் முகத்தை பார்த்து, “பிடிக்காதவனோட, வாழ வேண்டாம்..” “பேச வேண்டாம்” “பார்க்க கூட வேண்டாம்” ஒவ்வொரு வார்த்தைகளாய் சொல்லியபடி இவள் கன்னங்களை விட, இரண்டடி அதை விட வேகமாய் விலகி, வலித்த இடத்தை தடவியபடி இவளும் விலகி நின்றாள்.
கிரியின் குரல் இன்னதென்று என தெரியாத அளவிற்கு பெரும் மாற்றத்தோடு இருந்தது. கடந்த அரை மணி்நேரத்திற்குள் அவன் முகம் காட்டிய மயக்கம், அதிர்ச்சி, கோபம், ஆத்திரம் என எல்லாவற்றையும் அசால்ட்டாய் கடந்து வந்தவளுக்கு, இந்த முழு விரக்தியும் ஏமாற்றமும் மட்டுமே கலந்த கிரியின் தற்போதைய முகம் அவளுள் பல பூகம்பங்களை நிகழ்த்தியது.
அந்த நிமிடம் அவர்களது கஷ்டத்தை உணர்ந்தாரோ மல்லிகா.. “கமலி” என சத்தம் கொடுத்தார், அவனை காப்பதற்காகவே. அவளை பார்க்க கூட மாட்டதாவனாய், வேகமாய் நடையை கட்டியவன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டான். அதன் பின் எதுவுமே நடவாதது போல முகத்தை வைப்பது தான் பெரும் பாடாய் போனது.
Advertisement
“வாங்க கிரி..” சோபாவில் தள்ளி அமர்த்து கிரிக்கு இடம் கொடுத்தான் கர்ணா. லேசாய் சிரித்து வைத்தவன் சிரமப்பட்டு தான் இயல்பிற்கு திரும்பினான்.
அதற்குள் “கமலி” என மல்லிகா கிரியை பார்த்து கேட்க, “இதோ வந்துடுவா” என சொல்லி முடிக்கையில், கமலியும் அறைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டாள்.
மகளை நிமிர்ந்து பார்த்து விட்டு, “மாப்பிள்ளை கூட இருடி” என கண்ணால் ஜாடை காட்டி சொல்ல.. மெதுவாய் நடந்து வந்து இவளும் அவனோடு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
Advertisement
அதன் பின் கமலியின் பெற்றோர்கள் வைத்த விருந்தில் வயிறும், கமலி வைத்த விருந்தில் மனமும் நிறைந்து போய் தான் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
Advertisement
அப்படி கிளம்பியவனை தடுத்து “நீயும் கிரி கூட போகலையா கமலி.. மாப்பிள்ளை உன்னை கையோட கூட்டிட்டு போக தான் நேரா இங்க வந்ததே.. நீயென்ன கிளம்பாமல் நிக்கிற?” என செல்வம் கமலியை கேட்க
‘இதென்ன புதுசா ஏதோ சொல்றார் அப்பா’ மனதிற்குள் சொல்வதாக நினைத்து இவள் வெளிப்படையாய் பேசிவிட
“என்ன புதுசு, எல்லாம் பழசு தான், மாப்பிள்ளை நேத்து பிளைட் ஏறியாச்சுனு சொல்லி, உன்னை பத்தி தான் விசாரிச்சாரு. ஊருக்கு வந்தவுடனே அப்படியே உன்னை அழைச்சிட்டு போகவான்னும் கேட்டாரு. நாங்க சொல்லாமலேயே நீ அவரோட கிளம்புவன்னு நினைச்சா.. சொல்லியும் கிளம்பாமல் நிக்கிற” என செல்வம் முதல் முறையாய் கமலியை சாட, ‘இதெல்லாம் உண்மையா?’ என்பது போல கிரியை பார்த்தாள் கமலி. அவனோ இவளை அழுத்தமாய் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டான். அவனிடம் அப்படி ஒரு வெறுப்பை உணர்ந்தாள் கமலி.
Advertisement
இவள் என்ன சொல்வதென தெரியாமல் முழிக்க, “பரவாயில்லை மாமா.. வளைகாப்பு பங்க்ஷன் இருக்கு தானே.. முடிச்சிட்டு அதுக்கு பிறகு கமலி வரட்டும்” என கிரி முடித்து வைத்தான். அதன் பின் கிளம்ப எத்தனிக்க, “வாங்க கிரி, நானே வீட்டில் விட்றேன்” என கர்ணா கூற, “சரி” என கிரியும் கூறிவிட்டான்.
கமலியை தவிர்த்து அனைவரிடமும் சொல்லிகொண்டு கிளம்ப தயாரானான். தன்னை முற்றிலும் தவிர்த்து நின்ற கிரியை இவள் விடாது பார்த்து வைக்க,
கொஞ்சமும் பிடிப்பே இல்லாமல் இருக்கும் கிரியை கண்டு மல்லிகாவிற்கு கமலியின் மீது கோபம் ஏற்பட, செல்வமும், கர்ணனும் ஆணின் மனம் அறிந்தவர்களை போல் ‘ஏதோ சரியில்லை’ என்பதை போல பார்வையை பரிமாறிக்கொண்டனர்.
“கிளம்பலாமா கர்ணா” என கிரி கேட்டிட, “இதோ சாவி எடுத்துட்டு வரேன்” என தங்கள் அறைக்குள் சென்றான் கர்ணா. அங்கே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மகனையும், மனைவியையும் பார்த்து “இவ சொந்த பந்தம் வந்தா தூங்குறதே இல்லை. எங்க வீட்டு ஆளுங்க வந்தா எங்க இருந்து தான் வருமோ, தூக்கம்” என எரிச்நல் பட்டவனாய் சாவியை எடுத்து கொண்டு வந்து, “போலாம் கிரி” என அழைத்து கொண்டு வெளியே சென்றான்.
இவர்களை பார்த்தபடி, கமலியை நெருங்கிய மல்லிகா “என்னடி மாப்பிள்ளை முகமே சரியில்லை.. என்னடி பண்ணி தொலச்ச” என சப்தம் போட, “அதெல்லாம் ஒன்னுமில்லை மா” என தரை பார்த்தே பதிலுரைத்தவள், தாயிடம் மாட்டுவதற்கு முன் தன் அறைக்குள் வேகமாய் சென்றுவிட்டாள்.
“கமலி ரூமில் தான் இருக்கும் போய் எடுத்துட்டு வாங்க கிரி” என கர்ணா சொல்ல, மீண்டும் வீட்டினுள் வந்தான். “என்ன மாப்பிள்ளை” என பறந்த அத்தையிடமும், மாமாவிடமும் காரணத்தை கூறிவட்டு, மெதுவாய் கமலியின் அறைக்கு சென்றான்.
கதவை தட்ட எத்தனிக்க, கதவோ இவனது சிறு அழுத்ததில் திறந்து கொண்டது. அந்த சத்தத்திற்கே திடுக்கிட்டு திரும்பியவள், கையிலிருந்ததை முதுகின் பின் மறைத்து, நின்றாள்.
அவளையும் முதுகின் பின்னால் எதை மறைக்கிறாள், என கண்களால் துளைத்தபடியே இவளது அறைக்குள் வந்தாள் கிரி, பின் கட்டிலில் கிடந்த போனை எடுக்க, இவளோ அவசரமாய் நகர்ந்து நின்றாள்.
இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் கதவின் அருகே சென்றவன், ஏதோ தோன்ற, திரும்பி கமலியை உன்னிப்பாய் கவனித்தான்.
முதுகின் பின் மறைத்தாலும் வால் பிடித்தார்ப்போல் தொங்கி கொண்டிருந்ததை கண்கள் மின்ன அவள் எதை மறைக்கிறாள் என கண்டுகொண்டான் கிரி. ஆனால் அந்த மின்னல் தெறிக்கும் விழிகளில் கோபமும் ஆத்திரமும் ஒருங்கே போட்டி போட்டது.
கால்களால் கதவை அடித்து சாத்த, டப் என்ற சத்ததில் மிரண்டாள் கமலி. தலை குனிந்தபடி கையிலிருந்ததை இறுக பற்றி கொண்டாள்.
அவளை நோக்கி நெருங்கிய அந்த நீள கால்களை படபடப்போடு பார்த்து நின்றிருந்தாள். ஒவ்வொரு நொடியையும் கடந்து இவளை நெருங்கி விட்டான் கிரி.
சில நிமிடங்கள் மூச்சு காற்றை தவிர வேறெந்த சத்தங்களுக்கும் இடமில்லாது போக, மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள் கமலி.
அதற்கெனவே காத்திருந்தார்ப்போல், ‘கொடு’ என்பதாய் அவள் முன் கை நீட்டினான். அவன் கையையும், கோபத்தில் இறுகிய முகத்தையும் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கியவள், ‘மாட்டேன்’ என தலையசைத்தாள்.
“குடுடி” அறைக்குள் ஓங்கி ஒலித்தது இவன் குரல். இவள் கையிலிருந்ததை இன்னும் இறுக பற்றி நின்றிருக்க, அவனின் வலது கை இவளை சுற்றிகொண்டு சென்று, அவள் கையிலிருந்ததை பிடுங்க எத்தனிக்க, துள்ளி திமிறினாள் கமலி.
அதில் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று மோதி நின்றது. இவன் பிடுங்குவதிலும், அவள் விலகுவதிலுமே கவனமாயிருக்க, இருவரின் உடலும் உரசி கொண்டதை உணரவே இல்லை இருவரும். ஒரு கட்டத்தில் அவள் கையிலிருந்ததை பிடுங்கியே விட்டான் கிரி. அவன் கையில் இருந்ததோ குளியலறையில் இவன் கழட்டி போட்ட அந்த சட்டை.
இவள் கண் முன்னே காட்டி, “என்னடி இது” சட்டையையும், இவளையும் பார்த்து “இதை வச்சு நீ என்னடி பண்ணிட்டு இருந்த?” ஆத்திரமாய் கேட்க
கிரி பார்த்த பார்வையில், கேள்வியில் தரைக்குள்ளே புதைந்து விடலாம் போல இருந்தது இவளுக்கு.
“கேட்கிறது காதில் விழுதா இல்லையா?” அவன் கையிலிருந்த சட்டையை நழுவ விட்டவன், அவள் கழுத்தை இறுக பிடித்தான். அதிர்ச்சியடைந்தவள் விழி பிதுங்கி இவனை பார்க்க, “வாயை திறந்து பதில் சொல்லுடி” என இவன் கேட்க கேட்க, வலியில் கண்களை இறுக மூடினாளே தவிர வாயை திறந்தாள் இல்லை.
“வாயை திறக்க மாட்டேல்ல..” பற்களுக்கிடையில் தெறித்து வந்தது வார்த்தைகள், ‘திறக்கவைக்கிறேன்டி’ என மௌனமாய் சூல் உரைத்து கொண்டு அவள் உதடுகளோடு நச்சென பதித்தான் தன் இதழ்களை.
மூடியிருந்த இவள் விழிகள் அகல விரிந்து திறந்து கொள்ள, அவன் இதழ்களை தன் இதழ்கள் கொண்டு திறந்தான் திறக்கையிலேயே வன்மையாய் ஆரம்பித்திட, அது சிறு சத்தத்தோடு முத்தமாய் மாறி, அப்படியே தொடர்ந்து ஆழ்ந்த முத்தமாய் தடுப்பாறின்றி தொடர்ந்து, அவன் கைகளுக்கு கட்டளைகளை விடுவிக்க, இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கொண்டான். ஆரம்பம் வன்மையாக இருந்த தென்றால், முடிவு அதை விட வன்மையாய் முடிந்தது.