Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 23 4

அவனை பரிசோதித்துவிட்டு, “சாதாரண காய்ச்சல் தான் என” ஊசி போட்டு மாத்திரைகளோடு அனுப்பி வைத்தனர்.

ராம் பைக் எடுக்க சென்றுவிட, நாசுக்காய் ஊசி போட்ட இடத்தை தேய்த்துவிட்டபடி நின்றிருந்தான் கிரி.

மருத்துவமணையை விட்டு வெளியே வந்த அந்நேரம் கடைதெருவிற்கு வந்த கமலியின் கண்களில், மருத்துவமணைக்கு வெளியே நின்றிருந்த கிரி பட்டான்.

கிரியையும் அவன் பின் இருந்த அந்த பெரிய மருத்துவமணையையும் பார்த்து விரைந்தாள் அவனிடம்.



Advertisement

“என்னாச்சு! ஹாஸ்பிடல் வர்ற அளவுக்கு!” முதுகின் பின்னால் கேட்ட குரலில் திரும்பினான் கிரி. அங்கே கமலி நின்றிருக்க, நிற்பது அவள் தானா இமைதட்டி விழித்தான் கிரி.

இளஞ்சிவப்பு நிற சுடிதாரில், உச்சியில் சிறிதாய் கிளப் மாட்டி, ப்ரி கேரில் பேரழகியாய் நின்றிருந்தாள். இவனால் உண்டான இதழோர வெட்டு கூட அம்சமாய் இருந்தது. ஏனோ அந்த காயத்தில்  கூடுதலாய் பதிந்தது இவன் பார்வை.

‘காலையில் தானே இவகிட்ட அவ்வளவு வாங்கி கட்டின.. ரோசமே இல்லை உனக்கெல்லாம், வெட்கங்கட்டவன்டா நீ..’ மனசாட்சி காரி துப்பினாலும், இவளை பார்த்து அசந்து நின்றிருந்தவனிடம் “உங்கட்ட தான் கேட்கிறேன்! என்னாச்சு, ஏன் இங்க நிக்கிறீங்க, கையில மாத்திரை கவரெல்லாம் இருக்கு” என கமலி மீண்டும் கேட்டிட, “லைட்டா பீவர்” என எங்கோ பார்த்தபடி கூற,

Advertisement

“தனியாவா வந்தீங்க! சொல்லி இருக்கலாம்ல.. கூட வந்திருப்பேனே” என கேட்டிட

Advertisement

“யார் நீ.. அதுவும் என் கூட..” என அவளை ஒரு தீயாய் முறைத்து “தேவையில்லை.. அண்ணே கூட தான் வந்தேன்” என சொல்லி கொண்டிருக்கையிலேயே அவனருகில் பைக்கில் வந்து நின்றான் ராம். கல்லூரியில் பார்க்கையில் கூட சிறு புன்னகையை பரிமாறிய ராம், இப்போது யாரோ போல நின்றிருக்க, அவனிலும் படிந்து மீண்டது இவள் விழிகள்

“நீ தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” இம்முறை அவள் முகம் பார்த்து கேட்டான் கிரி.

“அண்ணி வளைகாப்பு வருதுல்ல.. பிளவுஸ் தைக்க கொடுக்க வந்தேன்” என எதிரில் இருந்த கடையை காட்டினாள்.

Advertisement

அந்த கடையை பார்வையிட்டவன் “ம்.. அதான ரொம்ப முக்கியமான வேலை.. பாரு பாரு” என அவள் முகத்தை கருக்க செய்தவன் “எப்படி போவ.. கொண்டு வந்து விடவா?” என கிரி கேட்க

“இல்லை நான்  என் டூவீலர்ல்தான் வந்தேன்.. போயிப்பேன்” என்றிட

“சரி் பார்த்து போ..” என கிரி சொல்லிவிட்டு ராமின் பின்னால் அமர்ந்து கொள்ள, ராமின் பைக் வேகமெடுத்தது.

வண்டியின் பின்னிருந்த கிரியின் மேல் இவளும், ரோட்டோரமாய் நின்றிருந்தவளை பைக் கண்ணாடி வழியாக அவனும், என ஒருவரை ஒருவர் பார்த்து வைத்தனர்.

************

ராம் அவனை வீட்டில் இறக்கிவிட்டு செல்கையில் இரவு ஏழை கடந்திருந்தது.

வீட்டினுள் சென்றவனை, தூக்கு தூக்கு என சுற்றி வளைத்தனர் மருமகனும், மருமகளும்.  அவர்களின் கன்னங்களை பிடித்து கொஞ்சிவிட்டு ஒதுங்கி போனான் கிரி.

“ஏண்டா, குழந்தைங்க எவ்வளவு ஆசையாய் வருது, தூக்க கூட மாட்டியா?” என வசந்தா வர

இறுக கண் மூடி “காய்ஞ்சல்ம்மா.. குழந்தைகளுக்கு ஒட்டிக்கிட்டா பரவாயில்லையா” என்றதும், “காலையில் லேசா தானடா இருந்தது” என அவன் கழுத்தில் கை வைத்து பார்க்க வர, கையை தட்டிவிட்டு, பாய் தலையணையை எடுத்து கொண்டு மாடிக்கு செல்ல எத்தனிக்க

“டேய், கீழ்படுடா, அதான் ஒரு ரூம் சும்மா இருக்கே” என வசந்தா கேட்டதற்கு, “வேணாம்னா விடேம்மா” என எரிச்சலானான் கிரி

“சரி.. கஞ்சி ஏதாவது வச்சி தரேன் கிரி.. சாப்பிட்டுட்டு அப்புறமா தூங்க போ” என ராஜி கூறிட

“இல்லை வேணாக்கா..” என சொல்லிவிட்டு பாய் தலையனையோடு மாடியேறிவிட்டான் கிரி.

******

பிளவுஸை தைக்க கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தாள் கமலி. “ஒரு நிமிஷம் வெளிய வா கமலி” என வழியிலேயே கையோடு இழுத்து சென்றான் கர்ணா.

“என்னண்ணே..” என சீணுங்கியபடி தான் அவனுடன் சென்றாள். போர்டிகோவை ஒட்டிய இடத்திற்கு அவளை இழுத்து வந்து, “உனக்கும் கிரிக்கும் உன்ன பிரிச்சனை.. என் பக்கமிருந்து எதுவும் ஹெல்ப் வேணுமா?” என நேரடியாகவே கேட்டிட, திரு திருத்தவள், ஏதோ சொல்ல வர “அப்படிலாம் ஒன்னுமில்லைனு பொய் சொன்ன!” மிரட்டி “இப்போ சொல்லு” என

சில பல நிமிடங்கள் அமைதியாகவே நின்றவள், கர்ணா தன்னை விடமாட்டான் என தெரிந்து கொண்டு.. “அதை உன்கிட்ட சொல்ல முடியாதுண்ணா” என்றாள் கமலி.

பெருமூச்சு விட்டவன், அவன் போனை எடுத்து, வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து யாரோ வைத்திருந்த ஸ்டேட்டஸை ஓட விட்டு, “இதை பாரு” என கொடுத்தான். அது ராமுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தான்.

அதை பார்த்தவளோ “கிரியோட சித்தப்பா குடும்பம், அவங்க பேமிலி போட்டோவை ஸ்டேட்டஸா வச்சிருக்காங்க.. இதில் என்ன இருக்கு?” என போனை அவனிடமே திருப்பி கொடுத்திட

மீண்டும் அவன் கையிலேயே கொடுத்து, “நல்லா கவனி” என்றான்.

இவளும் குழப்பத்தோடு அதை வாங்கி மீண்டுமாய் பார்த்தாள். குழந்தையை தூக்கி வைத்திருந்த ராம், அவனருகில் சீதா, அதற்கடுத்து மோகன், சுபா, இவர்களுக்கிடையில் இடையில்  கௌரி என புன்னகை எங்களுக்கே சொந்தம் என நின்றிருந்த ராமின் குடும்பமும், தன்னந்தனியாய் ஒற்றை ஆளாய் கடைசியாய் சிரிப்பை மறந்து நின்றிருந்த கிரியும் அப்போது தான் அவளது பார்வையில் பதிந்தான். கூடவே “Time to celebrate my dreams with my family” என்ற வார்த்தைகள் அந்த படத்தின் கீழ் நிலைத்து நின்றிருந்தது.

“கண்டிப்பா, உன்னையும் கடைக்கு கூப்பிட்டுருப்பாரு கிரி.. ஏன் போகல?” கிரியன் மனம் அறிந்தவனாய் கேட்டான் கர்ணா.

போனிலிருந்து பார்வையை நிமிர்த்தி “அது..அது” என இவள் இழுக்க

“கடை ஆரம்பிக்க போறேன்னு என்கிட்ட, அப்பாகிட்ட சொல்லிட்டு, கமலிக்கு சர்பிரைஸா காட்டனும். நீங்க அவகிட்ட சொல்ல வேண்டாம் நான் பார்த்துகிறேன்னு, ஏற்கனவே எங்க கிட்ட சொல்லிட்டாரு” எனவும் அதிர்ந்து போய் இவள் கர்ணாவை பார்க்க

“ஒத்தைல விட்டுடாத..!  அவரோ அம்மா, அக்கா இவங்களுக்கும் உனக்கும் வித்யாசமே இல்லாம போய்டும். நீ இங்க இருந்தா ஒன்னும் செய்ய முடியாது. கிரி வீட்டுக்கு நீ கிளம்பு..” “ப்ச்.. ப்ச்.. உன் வீட்டுக்கு சீக்கிரம் கிளம்புற வழிய பாரு” என அண்ணனாய் சொல்லிவிட்டு கர்ணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

தன் அறைக்குள் வந்து விழுந்தவளுக்கும், குடும்பத்துடன் நிற்க வேண்டியவன் தன்னந்தனயாய் நின்றிருந்தது தான்  கண் முன் வந்து போனது. அதுவும் இப்போது மருந்து மாத்திரைகளை கையில் ஏந்தியபடி மருத்துவமணை வாசலில் பார்த்ததும் நியாபகம் வர ‘கர்ணா சொல்வதைப்போல அவனை தனியாக விட்டுவிட்டோமோ!’ என நெஞ்சை பிசைந்தது. கடந்து போகின்ற நிமிடங்கள் அவள் நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக குலைத்திட, எழுந்து துப்பட்டாவை எடுத்து போட்டு கொண்டு, வண்டி சாவியையும் எடுத்து கொண்டு கிரியின் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் கமலி.

எங்கே போகிறாள் என தெரிந்து கொண்டு, கர்ணா அர்த்தமாய் பார்த்து வைக்க, ‘நல்லது நடந்தா சரி தான்’ என பார்த்துவைத்தார் மல்லிகா.

************

பாயில் தலைக்கு கீழ் கை கொடுத்து மல்லாந்து கிரி படுத்திருக்க, போன் வழியே பாடல் ஓடிக்கொண்டிருந்தது… ஆனால் அதையும் மீறி கிரியின் கவனத்தை இழுத்தது மெல்லிய கொழுசு சத்தம். படுத்த வாக்கிலேயே இவன் திரும்பி பார்க்க, அங்கே நின்றிருந்தாள் கமலி. கனவோ என இமை தட்டி விழித்து நிஜமென கண்டுணர்ந்தான்.

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது!..

பாடல் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, இவனது பார்வையோ கமலியையே விடாது பார்த்திருந்தது.

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக் கேள்வி கேட்குது.. கேள்வி இன்று கேலியாகிப் போனது!

இவன் மனநிலையை அப்படியே பிரதிபலித்து கொண்டிருந்தது, கிரியின் போனிலிருந்து.

பாடல்வரிகள் ஒவ்வொன்றும் இவனுக்கென எழுதியதை போல அப்படியே நூறுசதவீதம்  ஒத்து போனது,

அதை அப்படியே கண்களில் மூலம் பிரிதிபலித்தது இவன் விழிகள்.

இருட்டிலும் ஜீவாலையாய் பளபளத்த கிரியின் விழிகளை கண்டு கமலியுமே விக்கித்து நின்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!