Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே 13 3

ரவியின் நண்பர் அதிகாலையில் கிளம்பிவிட்டனர், துரசாகர் வாட்டர் பால்ஸ்சை பார்க்க.

 துரசாகர் பாஸ்சை பார்க்க மூன்று வழிகள் இருக்கிறது.. தொடர்வண்டி முலமாகவும்  சென்று பால்ஸை பார்த்து ரசிக்கலாம், மலைமீது இருந்து அருவி பால் போல கொட்டுவதை பார்க்க அழகாய் இருக்கும்,,



Advertisement

 ரவியின் நண்பர் பல தடவை  கோவா வந்து சுத்தி பார்த்திருக்கிறார்கள் இந்த பால்ஸ் மட்டும் வந்து பார்க்கவே முடியவில்லை, இது பாரஸ்ட் ஏரியாவில் இருப்பதால், அதிக மலை வந்தால் அனுமதி கிடையாது.. எனவே பல முறை வந்த போது இங்கே வர அனுமதி கிடைக்க வில்லை , இப்போது கிடைத்திருக்க.. நண்பர் ஒன்றாக சேர்ந்து  கிளம்பி வந்தனர்.

மூன்று வழி உள்ளது பால்ஸை பார்க்க,, தொடர்வண்டி மூலம் சென்றால், வண்டியில் இருந்து கொண்டே தான்  பால்ஸை பார்க்க வேண்டும், பத்து நிமிடம் தொடர் வண்டி பால்ஸ் கொட்டி கொண்டு  இருக்கும் எதிர் பாலத்தின் மீது தொடர்வண்டி நிற்கும் பால்ஸை பார்ப்பவர்கள் பத்து நிமிடத்தை பார்த்து விட்டு வர வேண்டும், இந்த அருவில்  குளிக்க எல்லாம் முடியாத, பார்த்து ரசிக்க மட்டும் தான், குளிக்க வேண்டும் என்றால், கீழே பல சிற்றருவிகள் உள்ளது அதில் குளிக்கலாம்..

Advertisement

Advertisement

அடுத்த பாதை அருவிக்கு செல்ல ஜீப் வழி 14 நான்கு கீழே மீட்டர் ஜீப் வழியே  வந்து ஒரு கீழே மீட்டர் நடந்து சென்றால்  துரசாகர் அருவி வரும்..

அடுத்த வழி 9 கீழே மீட்டர் ஜீப் வழி வந்து 2 கீழே மீட்டர் காட்டு வழி நடந்து வந்து. பின்பு  மூன்று, நான்கு கிலோ மிட்டர் ரயில் தண்டவாளத்தின் மீது நடந்தால், அருவிக்கு செல்லலாம்,,.

Advertisement

ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது குட்டி, குட்டி நீர்வீழ்ச்சி வரும், பார்த்து ரசிக்க அவ்வளவு அழகாய் இருக்கும் இரண்டு கீலோ மீட்டர் காட்டு பாதையில் நேச்சரை  ரசித்துக்கொண்டே வரலாம் அதனால் ரவி மூன்றாவது வழியாகவே நண்பர்களை அழைத்து வந்தான்.

ஜீப் வழி 9 கீலோ மீட்டர் வந்து சேர்ந்தவர்கள், காட்டில் குளுமையை ரசிச்சவாறே ஜீப்பில் இருந்து இறங்கினார்கள்..

“டேய்   ரவி  சூப்பரா இருக்குடா” என்று நண்பர்கள் பேசிக்கொண்டே  காட்டு பாதையை நடந்தனர்..

ரவி, சீதா, ஜூலி, ஜூலியின் கணவர் பிள்ளைகள் இரண்டும்  பேர், அப்பறம் கண்மணி அவளின்  கணவர், அவர்களின்  6 வயது மகன் என்று  மொத்தம் 9 பேரு பால்ஸை நோக்கி சென்று கொண்டிடுந்தனர்.

ஜூலியின் மூத்த மகள் ஸ்வீட்டி தன் தந்தை  ரமேஷின்  கையை பிடித்து கொண்டு  பேசிய படியே வர,.

ஹாப்பி சீதாவின் தோளில் படுத்திருந்தாள்,  ஜீப்பில் வருப் போது ஜூலியிடம் இருந்தவள், ஜீப்பை விட்டு இறங்கியதும், சீதாவை தூக்கு என்று சொல்லி அவளின் தோளில்  முகத்தை வைத்துக்கொண்டு   காட்டை வேடிக்கை பார்த்து கொண்டே வர.

சீதாவால் கொஞ்சம்  நேரத்திற்கு மேல் தூக்கிக்கொண்டு நடக்க முடியவில்லை, “ஜூலி என்கிட்ட கூடு” என்று ஹாப்பியை கேட்க.

மூச்சு வாங்கி கொண்டு நடத்து ஜூலியை பார்த்த ரவி..

“நீ நட ஜூலி” என்று ஹாப்பியை தூக்கிக்கொண்டு நடந்தான், சீதாவுக்கு கால் வலிக்க ஒரு பாறை மீது அமர்ந்து விட்டாள், அனைவரும் இவளை பார்க்க.

“நீங்க போங்க நாங்க வர்றோம்” என்றாள்,, கண்மணியின் மகன் காட்டை பார்த்ததும் சந்தோசத்தில் பெற்றோரின் கையைபிடித்து  ஓடிக்கொண்டிருந்தான்..

கண்மணி கணவன்  பிள்ளையோடு முன்னாடி  செல்ல..

ஜூலி தன் கணவன்  கைகோர்த்து படியே  தன் மூத்த மகளோடு  சென்றாள்.

ரவி ஹாப்பி தூக்கி இருந்தான், சீதாவுக்கு கை கொடுத்து அழைக்க. நீட்டிய ரவியின் கையை பிடித்துக்கொண்டவன் ஹாப்பியோடு பேசி சிரித்துக்கொண்டே குழந்தையை  மாற்றி மாற்றி தூக்கிய படியே அருவிக்கு வந்து  சேர்ந்தனர்.

ஜூலியும், கண்மணியும் அவர்கள்  துணையோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள.

ரவி  ஹாப்பியை தோளில் வைத்தபடியே சீதாவோடு  புகைப்படம்  எடுத்துக்கொண்டான்..

ஜூலிக்கு ரவிவையும், சீதாவையும் இணைத்து பார்க்க, பார்க்க, இவர்கள் இருவரும் ஜோடி  சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று பிராத்தனை பண்ணிக்கொண்டாள்.

அருவியை ரசித்து பார்த்தவர்கள்.

புகைபடம் எல்லாம் எடுத்து முடித்ததும். தண்டவாளம் வழி நடந்து கீழே உள்ள இன்னொரு  பால்ஸுக்கு செல்ல..

ஸ்வீட்டி வேகமாக ஓடி கொண்டிருந்தாள், ஜூலியால் மகளின் பின் ஓட முடியவில்லை.. “நீங்க இருங்க ஜூலி” என்று சீதா ஸ்வீட்டியின் பின் சென்று குழந்தையை பிடிக்க போனாள், ஸ்வீட்டி தண்டவாளத்தில் மேல் ஓடியவள், தண்டவாளத்தில்  ஒரு  பகுதி  பழுது அடைந்திருப்பதால்,  நீண்ட  கம்பியை  தண்டவாளத்தில் பொறுத்தி வைத்திருக்க அதில் கொஞ்சம் இடைவேளி இருக்க அதில் தெரியாமல் தன் காலை உள்ளே  விட்டு கீழே விழுந்து விட்டாள் ஸ்வீட்டி.

சீதா ஸ்வீட்டியின் பின்னாடி  ஓடியவள், குழந்தை கீழே விழுந்து அழுததும்,, அவளை தூக்கி நிறுத்தி அழாதே செல்லம் என்றவள்.., குழுந்தையின் காலை எடுத்து விட முயற்சி பண்ணினாள், அது இரண்டே இஞ் இடைவேளி என்பதால், காலை எடுக்க கஷ்டமாக இருந்தது,, ,  எப்படியோ கஷ்டபட்டு மெல்ல, மெல்ல குழந்தையின் காலை ஆட்டி எடுத்து விட்டவள்,,  அவளின் காலை இரண்டு இஞ் கம்பி இடைவேளியில் விட்டு விட்டாள்..

அனைவரும் ஸ்வீட்டி என்று அவள் அருகில் வர..

ஸ்வீட்டியின் காலில் அடிப்பட்டு இருந்தது,, சீதா தன் காலை எடுக்க முயல அவளால் முடியவில்லை.

அனைவரும் ஸ்வீட்டியை பார்த்தார்களே தவிற சீதாவை பார்க்க வில்லை,, ரவி ஹாப்பியை தூங்கி வந்தவன், ஸ்வீட்டியை பார்த்து பின்பு சீதாவை பார்க்க.

அவளோ அந்த இரண்டு இஞ் கம்பி  இடைவெளியில் உள்ள  தண்டவாளத்தில் காலை விட்டு, எடுக்க முடியாமல் கஷ்ட படுவதை பார்த்தவன்,,.

“சீதா என்னாச்சு” என்றான் ரவி.

“கால் மாட்டிக்கிச்சு ரவி,, ஸ்வீட்டியை தூக்கும் போது என் கால் உள்ள மாட்டிகிச்சு” என்றாள்..

“என்ன சீதா”?  என்றவன்..

கம்பி இடைவெளியை பார்த்தான், “இந்த கேப்பில் எப்படி உன் காலை விட்ட,  சீதா எப்படி  காலை எடுக்குறது” என்று புலம்பினான்.

அப்போது அனைவரும் சீதா அருகில் வந்து பார்க்க…

சீதா தண்டவாள கம்பியில் காலை விட்டு கண்கலங்கி நிற்க.

அனைவரும் வந்து பார்த்து, இந்த கேப்ல எப்படி உன் கால் போச்சு சீதா,, என்று கேட்டு, அனைவரும் சீதா காலை எடுக்க பார்க்க, யாராலும் முடியவில்லை, ரமேஷ் பார்த்தவன் டேய் ரவி இத நம்மலால எடுக்க முடியாது,  நான் உதவிக்கு ஆள் கூட்டிட்டு வர்ரேன் என்று அவன், செல்ல,

சுரேஷ் பாபு சீதா கால் வைத்திருக்கும்   இடத்தை பார்த்தவன்,..

டேய் கம்பியை கட் பண்ணாம காலை  எடுக்க முடியாது, நான் ரயில் ஊழியர்களை கூட்டிட்டு வர்ரேன் என்று அவன் சென்று விட.

சீதாவுக்கு  அந்த சிறிய கேம்பில் கால் வைத்திருப்பது வலியை தர.

கண்ணீல் வலிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் நின்றிருந்தாள்.

ரவி யாரிடம் பேச வில்லை சீதாவின்  காலை இதில் இருந்து எப்படி எடுப்பது

என்று யோசித்தவன், அவள் காலை தண்டவாள கம்பியில் இருந்து எடுக்க பார்க்க, அவனால் முடியவில்லை, அவன் காலை பிடித்து இழுத்தாலே வலியில் கத்தி இருந்தாள் சீதா..

ரவி கோபம், “இந்த இரண்டு இஞ் கேம்பில்  எப்படி காலை விட்ட சீதா,” என்று அவளை திட்டுவது  போல் பேச.

“நான் ஸ்வீட்டியை காப்பத்துற அவசரத்துல கம்பி குள்ள காலை விட்டுட்டேன்” என்று வலியில் முணங்கினாள்.

ஜூலியும், கண்மணியும் சீதாவை பார்த்து  “அழாதா சீதா, காலை வெளியில் எடுத்திரலாம்” என்று அவளை சமாதானம் பண்ண,..

ரவியோ தன்னிடம் இருந்த சிறிய வகை கத்தி எடுத்து,.

சீதா கால் செருப்பை முதலில் கட்பண்ணி எடுத்தவன், பின்பு அவனின் காலை எடுக்க பார்க்க, ஐயோ அது மட்டும் முடியாவே இல்லை, மீண்டும் மீண்டும், ரவி சீதா காலை பிடித்து மேலே இழுக்க, கால் கொஞ்சம் கூட வர, வில்லை காலில் இருந்து ரத்தமே வந்து விட, கால் வலியில் சீதா கத்தியதும், அவளை சமாதானம் பண்ணிய ரவி, ஜூலியிடம் ஏதாவது ஆயில், கீரீம் இருக்கா என்று கேட்டு வாங்கி சீதாவின் காலில்  அதை போட்டு தேய்த்து விட்டவன்.

காலை எடுக்க முயச்சி பண்ண.

ஐயோ இவர்கள் கெட்ட  நேரம்,,   அந்த தண்டவாளத்தில் செல்லும் ட்ரெயின் வரும் சத்தம் கேட்க. பதறிபோனவர்கள், ட்ரெயின் வரும் பாதையை பார்க்க, தூரத்தில் ட்ரெயின் பெரும் சத்தத்தோடு வர.. இது ஒரு ட்ரெயின் மட்டுமே வந்து செல்ல, உள்ள ஒற்றை தண்டவாளம்.

 ட்ரெயினை பார்த்து பதறி போன கண்மணி ஐயோ ட்ரெயின் வருது, ரவி சீதா காலை வேகமாக எடு, என்று கத்த, தன்னிடமிருந்த அனைத்து கீரிமை சீதா காலில் தடவியவன் சீதாவின் காலை எடுக்க, பார்க்க காலை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை,.

ஜூலி பயந்து போனாவள். “ரவி ட்ரெயின் பக்கதுல வருது, ஐ யோ சீதா ரவி” என்று அவள் ஒரு பக்கம் கத்தி புலம்ப.

“ஷ்ஷ் நீங்க இரண்டு பேரும், கொஞ்சம்  சத்தம் போடமா தள்ளி போங்க” என்று தோழிகளை  தள்ளி  நிற்க சொன்னவன், சீதாவின் கால் கீழே அமர்ந்து காலை வெளியில் எடுக்க முயற்சி பண்ண,  சீதாவின் கால்  வெளியே வர வில்ல, சீதா கால்  வலியில் கத்தியது  தான்  மிச்சம், ரவி மீண்டும், மீண்டும் சீதாவின் காலல மெதுவாக தன் விரல் விட்டு எடுக்க பார்க்க, ஒன்னுமே முடியவில்லை.

ட்ரெயின் சத்தம்  அருகில் கேட்டதும் சீதா நிமிர்ந்து பார்த்தாள்.. தன் கண்முன்னே ட்ரெயின் வருவது தெரிய..

ரவி ரவி, ட்ரெயின் வருது ரவி எனக்கு பயமா இருக்கு என்று சீதா அழ.

“ஏய் அழாதடி காலை மெல்ல ஆட்டு எடு, உன் காலை எடு” என்று ரவி சொல்ல.

சீதாவால் அவள் காலை எடுக்க முடியவில்லை, காலை மெல்ல கூட அசைக்க முடியவில்லை,

என்னால முடியல ரவி, நீங்க போங்க ட்ரெயின் வருது, நீ போ ரவி என்றவன், அவனை தள்ளி விட.

லூஸ்சு அடிச்சிடுவேன் என்றவன் சீதா கால் அருகே அமர்ந்து மீண்டும் அவள் காலை எடுக்க முயற்ச்சி பண்ண.

ஜூலியும், கண்மணியும் ரவியால் சீதாவை காப்பாத முடியாது என்று நினைத்தவர்கள், “ரவி நீ வா ட்ரெயின் பக்கத்துல  வருது வா டா”, என்று கத்த.

தோழிகளின் அழைப்பை காதில் வாங்கதவன், சீதாவின் காலை தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சி பண்ணிக்கொண்டு இருந்தவனின் மிக அருகில் ட்ரெயின் வரும்  சத்தம் கேட்க.

திரும்பி பார்த்தான் ரவி..

 ரயில் மிக அருகில் வர.

சீதாவின் காலை வெகமாக இழுக்க..

அவள் வலியில் கத்தியதும் விட்டவன்,,  என்ன பண்ணலாம் என்று யோசிக்க..

 “ரவி நீ வா ட்ரெயின் பக்கத்துல வந்துடுச்சு வா, வா”   என்று ஜூலி  கத்த..

ட்ரெயின் மிக அருகில் வந்ததும், அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது என்ற சீதா தன் கண்களை மூடியவள் “ரவி நீ போ, போ ரவி” என்று கத்த.

  ட்ரெயின் பக்கத்தில் வந்திருப்பதை உணர்ந்த ரவி   சீதாவை இறுக  அணைத்தபடியே நிற்க,, பெரும் சத்தத்தோடு சீதாவின் அருகில்  வந்தது ட்ரெயின் ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!