Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 15 1

சீதா கல்யாண வைபோகமே..



Advertisement

அத்தியாயம் -15

Advertisement

Advertisement

ரவி அவனை பற்றி சீதா என்ன சொல்லி இருந்தாலும் சும்மா இருந்திருப்பான்.

Advertisement

அவள்  அவன்  உயிர் தோழிகளை தன்னோடு இணைத்து  சீதா தப்பாக  பேசவும், கோபம் கொண்டவன்.. அவளை தடுத்து நிறுத்த வர.அதற்குள் நான் பண்ணது தப்பு, சீரஞ்சிவி சொல்லியதை நான் கேட்டு இருக்கனும் என்று சீதா  சொல்லவும்..

அவளின் கழுத்தை பிடித்து  நெறித்திருந்தவன்..

“என்னடி ரொம்ப பேசுற, என் பிரண்ட் பத்தி தப்பா சொன்னா, பேச வாய்யிருக்காது பார்த்து பேசு” என்றவன்.

அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன்.

“என்னடி ஓவரா குதிக்குற, நான் உன்னை ஆசை காட்டி மோசம் பண்ணேன்னா,?  இல்ல உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனா. இல்லா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்துனேனா?.. இது மாதிரி ஏதாவது உன்கிட்ட    சொன்னேன்னா,, ஏதோ உன்னை ரேப் பண்ண மாதிரி குதிக்குற, போறேன், போறேன்னு சொல்லுற..

என்னை முதலில் நெறுங்கி வந்தது நீ, உன்னை எனக்கும்  ரொம்ப பிடிக்கும், நீயா என்னை நெறுங்கி வந்தப்போ அத நான் யூஸ் பண்ணிகிட்டேன்,, ஆனா உன்ன  தொடற வரைக்கும் நான் தான் உன்ன முதல்ல தொடுறேன்னு எனக்கு தெரியாது சீதா,, சாரி, உன் பீலிங்சை  நான் மதிக்குறேன்,

அதுக்காக நீ பேசுறதெல்லாம் என்னால கேட்டுட்டு எல்லாம் இருக்க முடியாது, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காக தான் நான் பொறுமையா இருக்கேன்” என்றான்..

சீதாவுக்கு அவன் தோழிகளை பற்றி பேசியது அவனுக்கு எவ்வளவு கோபம்  வருது பார் என்று நினைத்தவள்.

 அவன் கழுத்தை பிடித்து நெறுக்கியதும், அவனை முறைத்து பார்த்தவள்.

அவன் பேச, பேச. அவன் தன்னிடம் காதல் சொல்லவில்லை, கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றும் சொல்லவில்லை நான் தானே அவனை அணைத்து முத்தமிட்டது, நான் தானே ஆரம்ப புள்ளி இதில் ரவியை தப்பு சொல்ல என்ன இருக்கு.

எந்த நம்பிக்கையில் அவனை உன்ன தொட அனுமதித்தாய்,

நீ இடம் கொடுக்காமலா அவன் உன்னிடம் வந்தான், அவன் உன்னை படுக்க வைத்து விட்டு தூங்கு என்று தானே சொல்லி சென்றான், நீ தானே அவனை அழைத்து பேசி, கட்டி அணைத்து,  என்னை பிடிக்குமா என்று கேட்டாய், அவன் உன்னிடம் சம்மதம்  கேட்டு தானே உன்னை அனுகினான், அவனை குறை சொல்ல முடியாது..

அவன் திருமணத்தை வெறுப்பவன் என்று உனக்கு தெரிந்தும், அவனிடம் நெருங்கியது    யாரு தப்பு சீதா என்று அவளை அவளே கேள்வி கேட்டு கொண்டவள்..

அவன் எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் என்று உனக்கு தெரியும்,  அவன் சிப்பே 6000 கோடி என்றால், அவன் இருக்கும் இடம்! உனக்கு தெரியாத, தெரிந்தும் தப்பு பண்ணியது நீ,, ரவியை மட்டும் நீ தப்பு சொல்ல முடியாது, என்று நினைத்தவளுக்கு,  நான் ஏன் ரவியை அணைத்தேன், முத்தமிட்டேன் அவன் என்னை தொட  அனுமதி கேட்ட போது, ஏன் சம்மதம் சொன்னேன், எனக்கே புரியவில்லையே,..

என்று தனக்குள் புலம்பியவள், ரவியை எனக்கு பிடித்திருக்கிறது, ஐ லவ் ஹிம், அது மட்டும் தான் காரணம், என்று புரிந்து கொண்டவள்,,….

ரவியும் என்னை விரும்புகிறான் என்று தானே நினைத்தேன், அவன் கண்ணீல் காதலை கண்டேனே அது பொய்யா? அவன் அப்போ என்னை விரும்ப வில்லையா?, ஒரு பொண்ணை விரும்பாமல் எப்படி இவ்வளவு பாசம் காட்ட முடியும், அப்போ நடித்தானா?, அவன் நடித்தது போலவும் தெரியவில்லை, ஐயோ என்று கத்தனும் போல இருந்தது சீதாவுக்கு,  இனி கத்தி ஒன்னும் நடக்க போறது இல்லை..

அவனிடம் சென்று நான் உன்னை காதலிக்கிறேன்,  என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா என்று எப்படி கேட்பது,  என் பணத்தை பார்த்து தான் என்னை   நீ கல்யாணம்  பண்ண நினைக்குறீயா  என்று கேட்டால் எவ்வளவு பெரிய அசிங்கம், போதும் சீதா போதும் நிம்மதியாக இருக்க என்ன வழி என்று யோசி..

யாரையும் வழுக்கட்டாயமாக காதல் செய், கல்யாணம் பண்ணு என்று சொல்ல கூடாது,  அவர்களுக்கே தோன்ற வேண்டும்,…

ரவி உனக்கு பண்ணியதை மட்டும் யோசி, அவன் உன்னை நல்லா தானே  பார்த்து கிட்டான், இந்த நான்கு நாட்கள் நீ எவ்வளவு சந்தோஷமாக, பாதுகாப்பாய் இருந்தாய், உன்னை தப்பாக ஒரு பார்வை பார்த்து இருப்பானா. தப்பான தொடுதலை நீ உணர்ந்தாயா,..

அவன் வாழும்  சூழ்நிலை  அப்படி, அவன் வாழ்வில் என்ன நடந்ததோ, அவன் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறானோ, யாருக்கு தெரியும்?

அமைதியாக இரு, தப்பு உன்மேலையும் இருக்கு, என்று மனம் சொல்ல.

எழுந்து நின்ற சீதா, “சாரி ரவி, நான் பேசினது தப்பு தான், அதுவும் ஜூலியையும், கண்மணியையும் நான் அப்படி பேசியிருக்க கூடாது, சாரி ப்பார் எவ்ரி திங்” என்றவள்..

அவன் முகம் பார்க்காமல் குனிந்த படியே பேச.

“சீதா என்னை பாரு”, என்றான்.

அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை,.

“சீதா” என்று அருகில் வர.

“நான் போறேன் ரவி, என்னை விட்டுடு, நான் போறேன் சாரி” என்றவள்..

அவள் தன்னை பார்க்காமல்  வேதனையான குரலில் பேசியதும்.

அவள் அருகில் சென்று  அமர்ந்தவன்.

“நமக்குள்ள நடந்த விசயத்தை மறந்திடு சீதா, உன் வாழ்க்கை மட்டும்  பாரு,  நல்லா நடி சாம்பாத்தியம் பண்ணு, ஒரு அஞ்சு வருசம் கழிச்சு, உனக்கு பிடிச்ச பையனை பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழு” என்று அவன் சொல்வதை பல்லை கடித்துக்கொண்டு கேட்டவள்..

விறுட்டென்று வேகமாக  எழுந்து கொள்ள..

“சொன்னது புரிந்ததா சீதா” என்றான்.

“உன்”  வேலையை பார்த்தட்டு போ என்று  ஏதோ மறுப்பு ரவியிடம்   சொல்ல வந்தவள்.  வாய்யை முடிக்கொண்டவள்..

“நான் கிளம்புறேன் ரவி உன் அட்வைஸ்க்கு ரொம்ப நன்றி” என்றவளுக்கு,..

அவன் பேச, பேச கோபமாக வர.

பல்லை கடித்தபடியே அமைதியாக இருந்தால்.

“நான் நீ போனது ஜாலியாக இருப்பேன்  சீதா, சிப், பிஸ்னஸ் பார்ட்டி, கேள்பிரண்ட், வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்வேன் சீதா.. நீயும் அதே மாதிரி  லைபை என்ஜாய் பண்ணி வாழு, எதுக்கும் பீல் பண்ணாத, நான் உன் வாழ்க்கையில் வந்த ஒரு புக்  பேஜ் மாதிரி தான், என்னை கிளிச்சு  போட்டுட்டு, உன் வாழ்க்கையை பாரு, இன்னும் உனக்கு எவ்வளவோ இருக்கு”, என்று பேச.

“நீ  எனக்கு புக், பேஜ் மாதிரி யா ரவி, அதை நான் கிழிச்சு போடனுமா, அப்போ நீ என்னை  எத்தானவது புக் பேஜ்ஜ எண்ணி  கிழிச்சு போட்ட?..

ஆனா என்னால உன்ன புக் பேஜ்ஜா நெனச்சு கிழிச்சு போட முடியல..

உள்ளுக்குள்ள ரனமா வலிக்குது ரவி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரவி, அதே மாதிரி தான் நீயின்னு நெனச்சேன், ஆனா நான் உனக்கு புக் பேஜ்ஜு மாதிரியின்னு  நீ சொல்லிட்ட..

என்னால அப்படி முடியாது, உன் கருத்தை நீ சொல்லிட்ட.

உன் கால் விழுந்து  எனக்கு வாழ்க்கை குடுன்னு நான் கேட்க, மாட்டேன் என் வாழ்க்கை நான் வாழ போறேன், அன்பே இல்லாதவன் கிட்ட, அன்ப கேட்டு கெஞ்சி வாங்குறது தப்பு,..

எனிவே தாங்யூ ப்பார் எவ்ரிதிங்” என்றவள் கிளம்ப.

“ஓகே சீதா, இவ்வளவு தெளிவான சீதாவை எனக்கு பிடிச்சிருக்கு, உன் வாழ்க்கை பயணத்திற்க்கு வாழ்த்துகள், நல்லா நடிச்சு பெரிய நடிகையா வரணும், உனக்கு ஏதாவது உதவின்னா என் கிட்ட கேளு”. என்றான்.

அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்தவள், “இந்த உலகத்துல இனி ஒரு நாளும் உங்களை பார்க்க கூடாது நான், உங்களை எவ்வளவு நேசிச்சேனோ, அந்த அளவுக்கு அதிகமா வெறுக்குறேன் நான், பாய் ” என்றவள்.

மனதில் அத்தனை வேதனையோடு ஏர்போர்டிலில் இருந்து வெளியே வந்தாள்,, சிவாவுக்கு இவள் சென்னை வந்தது தெரிந்து ஏர்போர்டிற்கு ஓடி வந்திருந்தான்,,.

மூச்சு வாங்க தன்னை தேடி வந்த சிவாவை பார்த்தவளுக்கு அழுகையோடு சிரிப்பும் வர.

சிவா நீட்டிய கையை பிடித்து கொண்டாள்..

சிவா அவள் கையை தொட்ட நொடி  அவள் உடல் சூட்டை உணர்ந்தவன்.

அவளின் கன்னத்தையும், தலையையும்  தொட்டு பார்த்தவன்,..

“சீதா என்ன இப்படி சூடா இருக்கு உன் உடம்பு” என்று அவளை ஹாஸ்பெட்டலுக்கு அழைத்து சென்றான்.

டாக்டர் சீதாவை  பார்த்து விட்டு “பீவர் 105 இருக்கு, அட்மீட் பண்ணிடுங்க, பீவர் குறைந்ததும் போகலாம்” என்று கூறிவிட..

சீதாவை அட்மீட் பண்ணி விட்டான் சிவா,, டாக்டர் சீதாவை செக் பண்ண.

சீதா காலில் அடிபட்டு தையல் போட்ட இடம், ஈரம் பட்டு காலில் புண் ஆராமல் சீல் பிடித்திருக்க, காலில் உள்ள காயத்தை சுத்தம் பண்ணிய டாக்டர் சீதாவை திட்ட.

சீதா எதுவும் பேசவில்லை, டாக்டர் சொல்லியதை கேட்டு  அமைதியாக இருந்தாள்.

‘எப்படி அடி பட்டது” என்று டாக்டர்  கேட்ட போது, “கீழே விழந்து விட்டேன்” என்றாள் சீதா.

சிவா சிரஞ்சீவியிடம் சீதாவை ஹாஸ்பெட்டலில் அட்மீட் பண்ணியதை சொல்ல.

தன் குடும்பதோடு வந்து விட்டான்..

அவளை பார்க்க.

அவன் வரும்போது சீதா தூங்கிக்கொண்டு இருக்க.

தோழியை சிறிது நேரம், நின்று பர்த்தவன்.

சிவாவிடம் வந்து “எப்போ வந்த சீதா” என்றான்.

“அந்த ரவிதான் சீதாவை ஏர்போர்ட்டில் வந்து விட்டுட்டு எனக்கு போன் பண்ணி சொன்னான், சீதாவுக்கு உடம்பு சரியில்ல, வந்து கூட்டிட்டு போன்னு” .

“நீ அவனை பார்த்து சும்மாவா விட்ட”?..

உன்ன மாதிரி மீண்டும் அவன் கிட்ட சண்டை போட சொல்லுறீயா..

நீ அமைதீயா  இருந்திருந்தா, சீதாவுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா,, எல்லாம் உன்னால, இப்பாவது அமைதியா இரு, சீதா கண்முளிக்கட்டும், அவ என்ன சொல்லுறான்னு பார்த்துட்டு, அதுக்கு அப்பறமா அந்த ரவியை என்ன பண்ணலாமுன்னு பார்க்கலாம்” என்றான் சிவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!