Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 15 3

அதற்குள் நாகம்மாளை தூக்கி சுற்றியவன் இறக்கி விட்டு நாகம்மாள் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, “ஐ மிஸ் யூ அவ்வா”  என்று அணைத்து கொண்டான்…

மகனை பார்த்து சந்தோசமா நின்ற மனைவியை பார்த்த வெங்கட்ரவிதேஸ்சா  “பத்மா ஆரத்தி எடுத்துட்டு வா, நா மகனுக்கு திருஷ்டி கழிச்சி உள்ளே கூட்டிட்டு போகலாம்” என்றார்..



Advertisement

உடனே வேகமாக சென்று ஆரத்தி எடுத்து வந்தார் பத்மா.

Advertisement

வெங்கட் மகனை பார்க்க அவனோ பாட்டியை தோள் அணைத்தவாறு வம்பு பேசி அவனின் அவ்வாவிடம் அடி வாங்கிக்கொண்டு சிரித்திருந்தான்.

Advertisement

தன் தாயை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன்..  தந்தையோடு சேர்ந்து  நின்று கொண்டான், பத்மாவதி மகனை பார்த்து சந்தோசத்தில் பழயதை மறந்து சிரிக்க, மகனுக்கோ தாய் திட்டியதை மறக்காதவன் முறுக்கிய படியே நின்று இருந்தான்,…

Advertisement

மகனுக்கு திருஷ்டி கழித்தவர், அதை வேலைகார பெண்மணியை அழைத்து கீழே ஊற்ற சொல்லியவர், மகனை பார்த்து குளிச்சிட்டு வா, என்றார்..

தலையாட்டியவன், அவன் ரூம் செல்ல.

வெங்கட்  அவர்கள் வீட்டில் பறந்து கொண்டிருந்த இரண்டு கோழிகளை பிடித்து அடித்து கட் பண்ணி பத்மா விடம் தர,.

மகனுக்கு நாட்டு கோழி குழம்பு, வறுவல் என்று பல விதமாக உணவுகளை சமைத்து கொண்டிருந்தார், மத்தியம் நெறுங்குவதால் வேகமாக சமைக்க, ரவி தன் அறையில் உள்ள பெட்டில்  சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்தவன் கீழே வரும் போது பத்மா தன் மாமியாருக்கு, உணவை வீட்டு திண்ணைக்கே கொண்டு சென்று கொடுப்பதை பார்த்தவன்,..

திண்னைக்குவர, பேரனை பார்த்த நாகம்மாள் “பத்மா ரவிக்கு போஷனம் வை” என்று சொல்ல.

அப்போது தான் திரும்பி பார்த்தார் மகனை டிசர்டும் சாட்ஸ் அணிந்து ஆறு அடிக்கு மேல் நின்ற மகனை “வா சாப்பிடு” என்று அழைக்க.

தன் அவ்வா பக்கத்தில் சென்று  அமர்ந்து கொண்டான் ரவி..

பேரனுக்கு நாட்டு கோழியோடு ஒரு வாய் உணவை ஆசையோடு ஊட்டி விட.

பாட்டிகொடுத்ததை வாங்கி கொண்டவன், நீ சாப்பிடு பாட்டி என்று டைனிங் டேபிள் வந்தான்.

எங்கே மகனுக்கு அனைத்தையும் சமைத்து வைத்த பத்மா, கணவரை அழைக்க, கோழி அடித்தாதல் குளித்து வந்த, வெங்கட்டை பார்த்த ரவி, “என்னப்பா இப்போ குளிச்சிருக்கீங்க” என்று கேட்க.

“உனக்காக கோழியை  நானே அடிச்சேன் ரவி” என்று கூற.

“ஏன் பா  நம்ம கிட்ட வேலை பாக்குறவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே” என்றான் ரவி..

“அவங்க சரியா சுத்தம் பண்ணி கட் பண்ண மாட்டாங்க, அதுக்கு தான்   நானே கோழி அடிச்சு சுத்தம் பண்ணி பத்மா கிட்ட சமைக்க கொடுத்தேன்” என்றார் மனிதர்.

இந்த மாவட்டத்துக்கே எம் பியாக இருக்கும் தந்தை தனக்காக கோழி அடித்ததை சொன்னதும்  தந்தையை  அணைத்து கொண்டான்.

பத்மா ஏக்கமாக மகனை  பார்க்க..

மனைவியின் பார்வையை பார்த்தவர், “ரவி  உன் அம்மா பாக்குற பேசுடா அவ கிட்ட”,என்றார்..

ரவியோ அமைதியாக இருக்க.

கணவருக்கு, மகனுக்கும் உணவு பரிமாறினார் பத்மா, வெங்கட்  முதலில் வைத்ததை சாப்பிட்டு  விட்டு எழுந்து விட.

“நானா இன்னும் சாப்பிடுங்க” என்ற மகனின் கன்னத்தை தட்டியவர், எனக்கு போதும் ” கோவில் பணி உந்தி” என்று அவர் கிளம்பி விட..

ரவிதேஸ்சா மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக பத்மா சமைத்ததை ஆசையாக  உண்ண.

மகன் தான் சமைத்ததை ஆசையாக உண்பதை கண்டு ரசித்தவர்..

அவன் உண்டு முடித்து கைகழுவியதும், மகனை அணைத்து

 உச்சன் தலையில் முத்தமிட்டார்.

ரவி அமைதியாக இருந்தவன், பத்மா அவனை விடவும் எழுந்து வாசலில் தன் அவ்வாவிடம் சென்று அமர்ந்து கொள்ள..

மகன் தன் கையால் உண்டது, சந்தோஷ பட்ட பத்மா, அவரும் உண்டு விட்டு மாமியார் அருகில் அமர்ந்து வம்பு பண்ணி சிரித்த மகனை பார்த்தவாறு எதிர் திண்ணையில் அமர.

பத்மா அமர்ந்ததும் ரவி பத்மா மடியில் தலைவைத்து  படுத்துக்கொண்டான்..

பத்மாவிற்கு கண்கலங்கிய, அவன் சிறு வயதில் இப்படி  தான் ஸ்கூல் விட்டு வந்தால் மடியில்  படுத்துக்கொள்வான், இன்றும் அதே போல் தன்மடியில் படுக்கவும், மகனின் தலை கோதிவிட.

பத்மாவின் மடியில் படுத்தவன் அப்படியே  கண்அசந்தான்,  தாய் மடிக்கு ஈடாக ஏதாவது பஞ்சு மெத்தை இருக்க என்ன?

அப்படி ஒர் தூக்கம் ரவிக்கு, நாகம்மாள் மருமகளை பார்த்து சிரித்தார், பல மாதமாக பேரன் பத்மாவிடம் சண்டை போட்டு பேசாமல் இருக்க.

இன்று பத்மா மடியில் தூங்கிய பேரனை பார்த்தவர், “உன் மகன் சமாதானம் ஆகிட்டான் போல..

சீக்கிரமே  ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வை பத்மா” என்று மாமியார் கூற.

“சரி”  என்று தலையாட்டினார் பத்மா..

நீண்ட  நேரம் தூங்கியவன் எழுந்து பார்க்க, பத்மாவும் திண்ணையிலே சாய்ந்த படியே கண்மூடியிருந்தார், மகன் எழுந்ததும், “காபி குடிக்கிறீயா ரவி” என்று கேட்டதும்., “வேண்டாம்” என்றவன்..

“கதிர் எப்போ வருவான்” என்றான்.

“4. 10 க்கு  பஸ் வந்துரும் ரவி, நான் போய் அவனை  கூட்டிட்டு வர்ரேன் டைமாச்சு” என்று பத்மா எழ…

“நான் போறேன் மா” என்றவன். தனது புல்லெட்டை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாப் வர, சரியாக 4, பத்துக்கு ஏ, வி, ஸ்கூல் பஸ் வர, அதில் இருந்து, பல குட்டி பிள்ளைகள் முதலில் இருக்க, கதிரும் இறங்கினான்  5 வயதில் கொழு, கொழுவென இருந்தா தன் நண்பன் மகன்  கதிர்ஹாசன்  பார்த்தவனுக்கு கண்கலங்கியது.

கதிர் இறங்கியதும் பத்மாவை தேட.

ரவியை அவன் எதிர் பார்க்கவில்லை ரவி கதிரை பார்த்து சிரித்த வண்ணம் நிற்க,

ரவியை பார்த்த கதிர்  “நானா” என்று ஓடிவந்து அணைத்து கொண்டான்..

மகனை ஆசை தீர தூக்கி கொஞ்சியவன்,…

புல்லட்டை காட்டி “போலாமா” என்றதும், “டுர், டுர்” என்று சத்தம் மிட்ட குட்டி கதிர் ரவிக்கு முத்தமிட்டு புல்லெட்டில் ஏறிக்கொள்ள, ஊரையே இரண்டு சுத்து, சுத்தி வீடு வந்தனர்.

குட்டி கதிர் வரும் போதே, “நாக்அவ்வா, நா நானா” என்று ரவியின் கையை பிடித்து நாகம்மாளுக்கு  அறிமுகம் படுத்தி வைக்க.

“நீ நானாவா”  என்று தன் தாடையில் கைவைத்து நாகம்மாள் கேட்க.

“ஊம்ம் நா நானா”..என்று அந்த சின்ன சிட்டு.. கூறி விட்டு.

“பத்து அவ்வா” என்று பத்மாவை பார்க்க உள்ளே  ஓடினான்.

பத்மா பேரனுக்காக பூரி சுட்டுக்கொண்டு இருந்தார்…

“பத்து அவ்வா” என்று ஓடி  வந்த பேரனை பார்த்தவர்..

“ஏன்டி ரா” என்று கேட்க.

“நா நானா” என்று  கூறி கதிர் வெட்கப்பட..

“நீ போயி  யூனிபார்ம்  மாத்திட்டு , பேஸ் வாஷ் பண்ணிட்டு வா, அவ்வா உனக்கு பூரி தர்ரேன்” என்றதும் அவன் அறைக்கு சென்றவன், பத்மா எடுத்து வைத்த உடையை அணிந்து கொண்டு கை முகம் கலுவி வந்தவன் அவ்வா என்று பத்மாவின் காலை கட்டி கொள்ள..

“நா பங்காரம்”, என்றவர் பேரனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பூரியின் மேல் கறிக்கொழம்பை ஊற்றி எடுத்து வந்தவர், நாகம்மாள் அருகே அவனை இறங்கி விட்டு பூரியை ஊட்டி விட.

ரவியின்  தோள் மீது மேல் ஏறி  அமர்ந்து கொண்டவன், பத்மா கொடுத்த பூரியை உண்டு கொண்டே ரவியிடம் கதை பேச.

தன் மகனுக்கு பூரி சமைத்து  எடுத்து வந்து ஊட்டும் தாய்யை பார்த்தவனுக்கு, பத்மாவிடம் சண்டை போட்டது தவறோ என்று நினைத்தவன்.

“அது என்ன உங்க பேரனுக்கு மட்டும் பேஷலா பூரி”?. என்று கேட்டு பத்மாவை வம்பு பண்ண..

“அவனுக்கு கோழி கொழம்புன்ன பூரி சுட்டு குடுத்தா நல்லா சாப்பிடுவான், அதான்”  என்ற தாயை அணைத்து கொண்டான் ரவி.

நான் சொல்ல ஒரு சொல்லுக்காக சொந்த பேரனை போல்  கதிரை பார்த்துக்கொள்ளும் தன்  தாயை, தந்தையை  என்ன சொல்வது…என்று பூரித்து போனவன் தாயை அணைக்க.

“நா பத்து அவ்வா'”  என்று கதிரும்

 பத்மாவை  அணைத்து கொள்ள.

இந்த காட்சியை பார்த்த படியே வெங்கட் வீடு வந்தார்,.

“என்ன ஒரே பாச மலர்  படமா இருக்கே” என்று சிரித்தபடியே வெங்கட் வர.

“தாத்தையா”  என்று  அவரிடம் ஓடிய கதிர் அவர் கையில் கொண்டு வந்து கவரை பிரித்து பார்க்க, அதில் கதிருக்கு பிடித்த தின்பண்டங்கள் இருக்க அதை வாங்கி கொண்டு போயி நாகம்மாளிடம் கொடுத்தான் குட்டி கதிர்,,.

அதை பிரித்து  பார்த்த நாகம்மாள் கதிருக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்..

தன் நண்பன் மகனுக்கு தான்  பார்க்கலாம், தன் குடும்பமே  அவனை தாங்குவதை பார்த்த ரவிக்கு உள்ளம் நிறைந்து போனது.

“கதிர் டுர், போலாமா” என்று ரவி கேட்டதும், ஊம்ம் என்று தலையாட்டிய மகனை தூக்கி கொண்டு சென்றான் ரவி..

 ரவி இரண்டு நாட்களாக மகனோடு ஹைதெராபாத்தை சுத்திக்கொண்டிருந்தான், ரவிக்கு ஏனோ தன்னை யாரோ தொடர்வது போல தெரிய..

திரும்பி பார்த்தபடியே புல்லட்டை ஓட்டிக்கொண்டு வர.

தூரத்தில் ஒரு லாரி வேகமாக வருவதை பார்த்தவன்,  புல்லேட்டை ஓரமாக, மெதுவாக செல்ல லாரி அவர்களை இடிப்பது போல் வருவதை பார்த்தவன், சட்று வேகமாய் சென்று மரத்தின் பின் நிற்க.

லாரியோ மரத்தின் மீது மேதியது..

ரவிக்கு தெரிந்து விட்டது தன்னை மோத தான் வந்திருக்கிறான் லாரிக்காரன் என்று, புல்லெட்டில் இருந்து இறங்கியவன், கதிரை பயபடமா இரு என்றவன்,  லாரி டிரைவரை  பிடித்து கீழே தள்ளி அவனை பிரட்டி எடுக்க, உண்மையை சொல்லிவிட்டான், யார் ரவியை  கொல்ல அனுப்பியது என்று.

ரவிக்கு ஆத்திரம், தமிழ் நாட்டில் இருந்து யாரோ சீரஞ்சீவி, சிவா என்று இருவரும்   தன்னிடம் வந்து பணம் கொடுத்து ரவியை கொல்ல சொன்னதை லாரி  டிரைவர் சொல்லிவிட.

ஆத்திரம் தாங்க முடியாத ரவி, சீதாவுக்கு அழைத்திருந்தான், சீதா அன்றைக்கு தான்  கன்னட படம்  டப்பிங்,பேசி முடித்திருந்தாள்..

ரவி விடமால் அழைக்கவும் “என்ன ரவி எதுக்கு கூப்பிடுற” என்று சத்தமாக கேட்க.

“ஏன்டி உன் பிரண்ட்டுங்க  என்னை கொல்ல ஆள் அனுப்பி வச்சு இருக்காங்க நீ சொன்னீயா  என்னை கொல்ல சொல்லி”? என்றும்..

 சீதாவுக்கு தூக்கிவாரி போட்டது, “என்ன கொலையா”?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!