இருவரும் பயத்தில் முளிக்க, “முட்டாளா நீங்க இரண்டு பேரும், எதுக்கு ரவியை கொல்ல ஆள் அனுப்புனீங்க.. “?.
Advertisement
,”எங்களுக்கு உன்னை தெரியாத சீதா, உன் முகமே காட்டி குடுக்குது அந்த ரவி ஏதோ உன்னை பண்ணியிருக்கான், நீ ஹாஸ்பெட்டல இருந்தது எங்கள மறக்க சொல்றீயா, உன் முகத்தை பார்த்தே எங்களால சொல்ல முடியும், உனக்கு என்ன கோவாவுல நடந்ததுன்னு” என்று சீரஞ்சீவி சொன்னது…
“ஓ அதுக்கு தான் ரவியை கொல்ல ஆள் அனுப்புனீங்களா? “.
Advertisement
Advertisement
“ஆமா சீதா, ரவி இருக்குற வரை அவன் உன்னை சும்மா விட மாட்டேன்” என்று சிவா சொல்ல.
“நீங்க எப்படி சிவா இவன் கூட சேர்ந்து இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க,..
Advertisement
உங்க இரண்டு பேரையும் பார்க்க எனக்கு ஆத்திரமா வருது,,.
ரவியை பலி வாங்கி என்ன சாதிக்க போறீங்க,, இப்போ போலிஸ் வந்து உங்களை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனா உங்க லைப் என்ன ஆகும், யோசிக்க மாட்டீங்களா இரண்டு பேரும், நீங்க ஜெயிலுக்கு போனா, உங்க குடும்பம் என்ன ஆகும், உங்க எதிர்காலம் என்னவாகுமுன்னு இரண்டு பேருக்கும் யோசிச்சு பார்த்தீங்களா, உங்களுக்கு மூலமலிங்கிடுச்சா”?.. என்று சீதா ஒவ்வொன்றாக கேட்கும் போது தான், அவர்களே அவர்கள் பண்ணிய காரியத்தின் வீரியம் தெரிய.
“இப்போ என்ன பண்ணுறது சிரஞ்சீவி” என்று சிவா கேட்க.
சீரஞ்சீவி தலையில் கைவைத்து விட்டான்.
“இப்போ யோசிச்சு ஒன்னும் ஆக போறது இல்ல”.. என்ற சீதா.
“அந்த ரவி காலுல வீழாத குறைய கேட்டு உங்கள இதுல இருந்து தப்பிக்க வச்சுருக்கேன்”, என்றும் இருவரும் குற்றவுணர்வில் அமைதியாக இருக்க,..
“நீ யேன் அவன் கிட்ட பேசுனா” என்றான் சிரஞ்சீவி..
“அப்போ உங்களை போலீஸ் வந்து பிடிச்சிட்டு போகட்டுமா? அத நான் பார்க்கனுமா, எல்லாரும் வாழ்க்கையும் வீணா போயிடும் ரவி, இனி எத செய்தாலும் யோசிச்சு செய்.. அப்பறம் நீங்க இரண்டு பேரும் ரவி சார் சென்னை வந்ததும் போய் பார்த்து மன்னிப்பு அவர்கிட்ட கேட்குறீங்க” என்று சீதா சொன்னதும், முடியாது என்பது சீரஞ்சீவி பார்க்க.
“இதுக்கு மேல என்னால முடியாது, இனி உங்க பிரச்சனை நீங்களே பார்த்துக்கோங்க” என்றவள்.
அவள் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள்.
சீதாவை பல டைரக்டர்கள் கதை சொல்ல தொந்தரவு பண்ண, இவள் நடிக்க விரும்பம் இல்லை என்று சொன்ன போதும், இவளை நடிக்க கேட்க பல பேர் இவளை போன் செய்து தொந்தரவு பண்ண போனை தூங்கி போட்டு உடைத்திருந்தாள்…
அடுத்த என்ன செய்யலாம், என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, சீதாவுக்கு நேபாளத்தில் இருந்து ஒரு லட்டர் வந்திருந்தது, இவள் ஊப்பர் கார் ஓட்டும் போது சந்தித்த குடும்பம், இவள் நடிகை ஆனதை தெரிந்து இவளுக்கு வாழ்த்து மடல் அனுப்பி இருக்க அப்பாட என்று ஒரு முடிவை எடுத்தவளாக பெருமூச்சு விட்டவள்…
அவள் வங்கியில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்தவள் புதிய வங்கிக்கு மாற்றியவள், அவள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை அழைத்து, எனக்கு வெளியூரில் வேலை கிடைத்திருக்கிறது, நான் போறேன், நீங்க வாரம் ஒரு முறை வந்து வீட சுத்தம் பண்ணிட்டு போங்க, நான் எப்போ வருவேன்னு தெரியாது, உங்க அக்கவுண்டுக்கு மாதம், மாம் பண வர்ர மாதிரி ரெடிபண்ணிடுறேன் வீட பாத்துக்கோங்க, யார் வந்து என்னை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லனும்” என்றவள்.
தன் போன், சிம் கார்ட் பணம் இருக்கும் வங்கி என்று, அனைத்தையும் மாற்றியவள் தனது தம்பிக்கு மட்டும் போன் நம்பரை கொடுத்தவள், “எனக்கு நடிக்க பிடிக்கலைடா”, என்று மட்டும் சொல்லியிருந்தவள்.
நேபாளத்துக்கு கிளம்பி இருந்தாள்.
ரவி இரண்டு நாள் கழித்து சென்னை வந்திருந்தான், சிவா சிரஞ்சீவியிடம் நல்லது, கெட்டதை எடுத்து சொல்லி ரவி ஆபிஸ்சுக்கு அழைத்து வந்திருந்தான்…
இருவரும் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின், “உங்களை பார்க்க முடியாதுன்னு ரவி சார் சொல்லிட்டார் நீங்க போகலாம்” என்று சொல்லி விட.
இருவரும் அவமானம் பட்டு திரும்பி வந்தனர்,..
சீதாவை சென்று பார்க்கலாம் என்று சிவாவும், சிரஞ்சீவியும் சீதா வீட்டிற்க்கு வர, வீடு பூட்டி இருந்தது, எங்கே போனாள் என்று இருவருக்கும் தெரியவில்லை,..
சீதாவை போனில் அழைக்க போன் ஸ்விச்சாப் என்று வந்தது…
அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் கேட்க..
அனைவரும் சீதா யார் என்றே தெரியாது என்று சொல்லி விட…
சீதா வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தேடி போனார்கள், சிவாவும், சிரஞ்சீவியும், அந்த பெண்மணியிடம் சீதாவை பற்றி கேட்க.
“எனக்கு தெரியாது, ஏதோ டீச்சிங் வேலைக்கு போறாத சொன்னாங்க ஆனா எங்கே என்று தெரியாது” என்று கூறிவிட..
உடனே சீதா தம்பி பிரபுவிற்கு சிரஞ்சீவி போனில் அழைக்க..
போனை எடுத்த பிரபு “சொல்லுங்க அண்ணா” என்று கேட்டதும்.
“சீதா எங்கே பிரபு எங்க போயிருக்கா”? என்று சிரஞ்சீவி கேட்க..
“சாரி ணா அக்கா யாருக்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்கா”?..
“பிரபு சொல்லுடா நான் அவ கிட்ட பேசணும் எங்க இருக்க சீதா சொல்லு” என்று கேட்டதற்கு…
“சாரி ணா அக்கா என்கிட்டயே, நான் தான் உனக்கு போன் பண்ணுவேன் நீ என்னை கூப்பிடாதேன்னு போன் நம்பர் கூட கொடுக்கல, அவ நல்லா இருப்பாண்ணா,, அவளுக்கு புடிச்ச வேலை அவளுக்கு பிடிச்ச இடத்தை தேடி போய் இருக்கா அவ கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா இருக்கட்டுமே விடுங்க, கொஞ்ச நாள் கழிச்சு, நான் போன் நம்பர் வாங்கி தரேன்” என்று பிரபு கூறிவிட.
சிவா என்ன என்பது சொல் கேட்க..
“எங்கேயோ போயிட்டா போல சிவா எங்க போனான்னு தெரியல பிரபு கிட்ட கூட சொல்லல போல, எல்லாம் என்னால” என்று புலம்பியவன்,,..
“சீக்கிரம் வருவா, கொஞ்சம் நாள் ஆகட்டும் நாமாலும் தேடுவோம்” என்றவன், அவர்களின் வேலையை பார்க்க சொல்ல..
இரண்டு மாதம் ஓடி இருந்தது,, ரவியும் சீதாவை தேடிக்கொண்டிருந்தான், அவளிற்கு நல்ல, நல்ல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருந்தது, எங்கே போனாட இவ,, என்று ரவி தனக்கு தெரிந்த வரை விசாரிக்க,.
அவனுக்கு தெரிய வந்ததுதெல்லாம் சீதா அன்று சண்டை போட்டதோடு சரி இரு நண்பர்களோடு பேசவில்லை சீதா எங்கே போனாள் என்று யாருக்கும் தெரியவில்லை, சீதாவை தேடி, தேடி சொர்ந்து போனவன், அன்று இரவு பார்ட்டியில் மது அருந்திக்கொண்டு இருக்க.
ஒரு மாடல் பொண்ணு வந்து ரவியை அணைத்து அவளோடு அழைக்க, “நோ இன்ட்ரஸ்ட் ” என்று விலகி வந்திருந்தான், ஏனோ எந்த பெண்ணையும் தொட முடியவில்லை ரவியால், ஏதோ குற்றவுணர்வா, இல்லை சீதாவை அவன் மனம் தேடுகிறதா ஒன்றும் தெரியவில்லை..
தினமும் இரவு சீதாவின் ஞாபகத்தில் தான் ரவி தூங்குகிறான், எங்கடி போன சீதா, எங்கே இருக்க என்று இவன் இரவெல்லாம் சீதாவை நினைத்து கழித்தான்..
இங்கே சிரஞ்சீவி சீதா வாழ்க்கையை நான் தான் கெடுத்து விட்டேனோ, அவ எங்க இருக்காளோ, தனியா கஷ்டபடுறாலோ, தெரியலையே என்று சிரஞ்சீவி சீதாவை நினைத்து புலம்பியபடியே இருக்க.
இந்திர சேனா படம் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்திருந்தது,, ரிலீசான அனைத்து தியேட்டர்களும் இன்னும் ஓடிக்கொண்டிருக்க பழமொழிகளிலும் டப் செய்து படம் ஓடிக்கொண்டிருந்தது, ஆகமொத்தத்தில் இந்திர சேனா படம் நன்றாக ஓடி 1500 கோடி மேல் லாபம் தந்திருந்தது ரவி தேஸ்சாவிற்கு.
ரவிக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்க, இன்னொரு ஒரு பக்கம் சீதா எங்கே என்று கவலையாக இருந்தது இந்த படம் மட்டும் இல்லை,, அவள் நடித்த கன்னட பேய் படம் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்க,,, தெலுங்கிலும் அவள் நடித்த படம் கூட நன்றாக இருந்தது, மூன்று மொழிகளிலும் ஹிட் கொடுத்தா நம்ம கீதா நடிகை எங்கே என்று பல கேள்விகள் வர.
நிறைய டைரக்டர்கள் கூட சீதாவை தேடிக்கொண்டிருந்தனர், யார் கண்ணீலும் சிக்காமல் சந்தோஷமாக இருந்தாள் சீதா.
ரவி இந்திர சேனா பட வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட,, அந்தப் படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் யாரும் வரவில்லை..
கேமரா மேன், இவன் மற்ற இதர நடிகர், நடிகைகள் எல்லாம் வந்து அதை கொண்டாட அதுவும் மீடியாவில் பேசும்பொருளாகிவிட்டது ,,.
என்ன பிரச்சனை டைரக்டருக்கும் புரொடியூசருக்கு, ஏன் ஹீரோ, ஹீரோயின் வரவில்லை என்று.
சிரஞ்சீவி வேற டென்ஷனில் இருந்தான் லதா வீட்டில் திருமணத்திற்கு நச்சரிக்க..
சீதா இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சிரஞ்சீவி அடம் பிடித்துக் கொண்டிருந்தான்..
பிறகு அனைவரும் அவனுக்கு எடுத்து சொல்லி சிரஞ்சீவிக்கு புரிய வைத்து திருமண நாளை உறுதி செய்தனர்.
திருமணநாள் உறுதி செய்ததிலிருந்து ட்டுட்ரரிலும், பேஸ்புக்கிலும் சீதாவை தேடிக்கொண்டிருந்தான் சிரஞ்சீவி திருமண அழைப்பிதழை அதில் போட்டவன்,, வெயிட்டிங் ஃபார் யுவர் பிரண்ட் கம்மிங் மை மேரேஜ் டே என்று அதில் பதிவு செய்திருந்தான்.
அப்போது கூட சீதா அவனை தொடர்பு கொள்ளவில்லை..
ஏன் திருமணத்திற்கு கூட வரவில்லை இப்போது திருமணம் முடிந்து லதா 4 மாத கர்ப்பமாக இருக்கிறாள்.. சீதா சென்று ஏழு மாதங்கள் ஆகிறது,,.
சிரஞ்சீவி தனது மூன்றாவது படத்தை இயக்கிக் கொண்டிருந்தான்,,..