சீதா சென்னை வருகிறேன் என்று சிரஞ்சீவியிடம் சொல்லிவிட்டாள் ஆனால் அவளுக்கு கிளம்பவே மனம் வரவில்லை..
Advertisement
அவள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து வெளியே வந்தவள், பால்கனியிருந்து வெளியே பார்க்க, குளிர்ந்த காற்று அவளை தாக்கியது, எங்கும் பார்த்தாலும் வெள்ளை, வெள்ளென்று பனிமூடிய மலைகள், எந்த ஒரு போக்குவரத்து புகை இல்லாத அமைதியான இடம் தூரத்தில் கண்டக நதி ஓடிக்கொண்டிருக்க பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது அந்த கண்டாங்கி ஊர்…
Advertisement
பார்ப்பதற்கு சிறிய கிராமம் தான் இந்த கிராமத்தில் மொத்தமே 200 வீடுகள் தான் சிறிய பள்ளிக்கூடம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருந்தது அந்த ஊர்…
சென்னையில் இருந்து சீதா இங்கே வந்தபோது மனம் வேதனையோடும், ஆயிரம் கவலை, பிரச்சனையோடு வந்தாள் இங்கே.. வரும் வழியிலே இந்த இயற்கை சூழ்நிலை பார்த்து மனம் லேசானது சீதாவுக்கு.
அவளை அந்த நேபாளி குடும்பம் தன் குடும்பத்தில் ஒருத்தி போல நன்கு பார்த்துக் கொண்டனர்..
பக்கத்தில் உள்ள அவர்களின் மஞ்சுநாதா சாமி கோயில்,,, நேபாளத்தில் உள்ள முக்தி நாத் கோவிலை பார்க்க சென்றவளுக்கு, சொர்க்கம் எங்கே அது இங்கே என்பாள், அவளுக்கு முக்கிநாதரை பார்க்கும் போது கிடைத்த அனுபவம் ஏறாலம்..
நீண்ட பயணத்திற்கு பிறகு கடவுளை கண்ணாற பார்த்து அப்படியே வெளியே வந்து பனி மலைகளை பார்த்து அமர்ந்து விட்டாள், சீதா இது போலவெல்லாம் அவள் எந்த ஒரு கோவிலுக்கும் வந்தது இல்லை,..
அமைதியான இடம், சுற்றிலும் பனிபடர்ந்த மலை,, இயற்கை சூழல்,, கடவுளை பார்த்துவிட்டு வந்தவளுக்கு கண்ணீல் இருந்து கண்ணீர் அருவிமாதிரி கொட்டியது…
அப்போது தான் ஒரு பெண் சாது வந்து, அவளின் தலைமீது கைவைத்து “எந்த ஒரு சூழ்நிழையிலும் அழக்கூடாது,.. அழுகை எந்த பிரச்சனைக்கு தீர்வாகாது, அழுதாள் பிரச்சனை குறையுமா என்ன?.நீ இவ்வளவு தூரம் சாமியை பார்க்க வந்திருக்கிறாய், கடவுளை சந்தோஷமாக பார் ,, அவர் நாம் நன்றாக வாழத்தானே அனைத்தையும் படைத்தார், இந்த இயற்கையை பார் எவ்வளவு அழகாய் இருக்கிறது, சிரி, கண்ணை தொட, இப்பிறவியில் உனக்காக நிறைய பொறுப்புகளும், கடமைகளும் கடவுள் உனக்கு கொடுத்திருப்பார் அதை செய்.. நடப்பது யாவும், அவர் அவரின் கர்மா படி தான் நடக்கும்,..
இனி வரும் காலங்களில் உன்னால் முடிந்ததை கஷ்டபடுவர்களுக்கு உதவி செய், அங்கே நீ கடவுளை காணலாம், இவ்வளவு தூரம் வர தேவையில்லை, இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கடவுளே,, உன் உடலை நன்றாக பார்த்துக்கொள், உன்னால் முடிந்த உதவியை அடுத்தவருக்கு செய், பலனை எதிர்பாராதே,, மனநிம்மதியோடு வாழ்வாய் மகளே என்று அவளுக்கு செந்தூரம் வைத்து விட்டு மறைந்து விட்டார் அந்த பெண் சாது…
சீதா கண்திறந்து பார்த்த போது அங்கே யாருமில்லை,, இப்போது தன்னிடம் பேசியது யார், அதுவும் தூய தமிழில், அவளுக்கு கடவுளே வந்து தன்னிடம் பேசியது போல இருக்க..
உற்சாகமாக முக்திநாத் கோவிலிலிருந்து இறங்கி கீழே வந்தவளுக்கு, இங்கேயே இருந்து விடலாமா என்று ஆசை வர.
அந்த கிராமத்து வீட்டிலே ஒரு வாரம் இருந்து ஊரை சுற்றி பார்த்தால், அந்த ஊர் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பள்ளிக்கு செல்வதை பார்த்தவளுக்கு கவலையாக இருந்தது இப்பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தாள் சீதா,, அப்போது தான் ஒரு மினி பஸ் வாங்கி கொடுத்தால் என்ன என்று யோசனை வர, தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து மினிபஸ் வாங்கி கொடுத்தால் சீதா அப்பள்ளி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று வர..
அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சீதாவை பாராட்டி வாழ்த்து சொல்ல,, அவர்களிடம் எனக்கு இங்கே ஒரு வேலை கிடைக்குமா என்று கேட்க, அவர்கள் உடனே ஆங்கில ஆசிரியராக சீதாவை அப்பள்ளியில் வேலைக்கு சேர்த்து விட்டனர்.
அன்றிலிருந்து சீதாவில் இருப்பிடம் நேபாளாக மாறியது , அந்த நேபாளி வீட்டிலே அவளை இருக்க சொல்ல, மாட்டேன் என்றவள், அவர்கள் வீட்டின் பக்கத்திலே ஒரு குட்டி மாடி வீட்டில் வசிக்கிறாள்,, அழகான ஊர், அவள் இருக்க ஒரு பாதுகாப்பான இடம், அன்பாய் பழகும் ஊர் மக்கள், பிடித்தமான வேலை, அவளுக்கு போதும் அளவிற்கு சம்பளம், நேபாளத்தைவிட்டு வர மனமில்லை சீதாவிற்கு,,.
தனது நேபாள நண்பர்கள் குடும்பத்திடம் சொல்லிவிட்டு, சென்னை வர ஏர்போர்ட் வந்திருந்தாள் சீதா..
சிவா, சீதா அனுப்பிய மெஜேஜ்சை பார்த்து அவளுக்கு கால் செய்ய.
அதை எடுத்தவள், “சிவா நான் ஏர்போர்ட் செக்கிங்ல இருக்கேன், டூ ஹவர்சுல சென்னை வந்திடுவேன் பார்க்கலாம்” என்று கூற..
“ஓகே சீதா பாத்து வா” என்று போனை வைத்திருந்தான் சிவா.
அங்கே சிரஞ்சீவின் வீட்டில் சீதாவுக்கு பிடித்த அனைத்து உணவு வகைகளையும் சமைக்க சொல்லி மாலாவை தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி..
சீதாவை இங்கதான் தங்க சொல்ல வேண்டும் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க லதாவும் மாலாவும் சிரித்துக் கொண்டனர்.
இன்று காலையில் எழுந்ததிலிருந்து வீட்டை சுற்றி, சுற்றியே வந்து கொண்டிருந்த சிரஞ்சீவியை பார்க்க பார்க்க அவர்களுக்கு சிரிப்பாக வந்தது..
பத்து மணிக்கே ஏர்போர்ட்டுக்கு கிளம்பி நின்ற மகனை பார்த்து சிரித்தார் மாலா,,
“சீதா பிளைட் வர 1 மணிமேல ஆகும் தானே 10 மணிக்கே கிளம்புற” என்றார் மகனிடம்..
“நான் டிராபிக்ல போறதுக்கு டைம் ஆயிடும்மா இப்பவே போனா தான் சரியா இருக்கும்” என்று கிளம்பியவனை பார்த்து சிரித்தனர் இருவரும்,,
சிரஞ்சீவியோ பத்தே முக்காலுக்கு எல்லாம் ஏர்போர்ட்டுக்கு வந்து விட்டான், எப்போது ஒரு மணி ஆகும் என்று அவன் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்க.
இன்று ஏனோ நேரம் மெதுவாக செல்வது போல் இருந்தது சிரஞ்சீவிக்கு.
அவனின் நீண்ட காத்திருப்பிற்க்கு பின் நேபாளத்திலிருந்து வரும் பிளைட் சென்னை வந்து இறங்கியது..
பிளைட் வந்து இறங்கி அரை மணி நேரம் கழித்து தான் சீதா வெளியில் வந்தாள் ….
நேபாளத்தில் இருந்து வரும் பிளைட்டுக்காக காத்திருந்தவன் அழைப்பு வந்ததும் நேபாளத்தில் இருந்து வரும் பயணிகளை பார்த்து வண்ணமே இருந்தான்..
அதில் சீதாவை அவன் தேடிக் கொண்டிருந்தான் அனைவரும் நேபாளிகள் போலவே வர சீதா எங்கே தென்படுகிறார் என்று அவன் கண் அவளை தேடிபார்த்துக் கொண்டிருக்க.
ஒரு பெண் சீதா போலவே தெரிந்தாள் இவன் கண்ணிற்கு, இல்லை அவள் சீதா இல்லை என்று அவன் அந்த பெண்ணை பார்த்து விட்டு, சீதாவை தேட, அந்த பெண் இவனை பார்த்து சிரித்தபடி இவன் அருகில் வர..
அந்த பெண்ணின் முகம் பார்க்க சீதா போலவே இருந்தது ஆனால் அவளின் தோற்றம் மிக வித்தியாசமாக இருந்தது,, “டேய் சிரஞ்சு” என்று அவள் அழைத்ததும் தான் சீதாவா இது என்று உற்றுப் பார்த்தான்.
தன் தோழியை கண்டவனுக்கு ஆச்சரியம் அவளின் தோற்றம் அவ்வளவு வித்தியாசமாக இருந்தது இங்கிருந்து போகிறப்போ, ஒல்லியாக மாடல் போல் இருந்தவள், இப்பொழுது மிகவும் குண்டாக இருந்தாள், அதுவும் அவளின் மேடிட்ட வயிரை பார்த்தவனுக்கு சர்வாங்கமும் அடங்கியது.
“சீதா சீதா வா நீ” என்று அவன் சீதாவை பார்த்து கேட்க.
“கண்ணு தெரியலையா டா உனக்கு ” என்று அவனை ஒரு அடி அடிக்க.
“சீதா” என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்..
“டேய் விடுடா உன் பாசத்துல என்னை போட்டு அமுக்குற” என்று..
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் மேல் ஃபோட்டோவின் வெளிச்சம் பட.. இருவரும் என்னவென்று திரும்பி பார்த்தனர்
நிறைய மீடியோ காரர்கள் இவர்களை போட்டோ எடுத்து, பேட்டி கேட்க வர..
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது போல் தான் இருவரும் பார்த்து நின்றனர்..
“மேம் கீதா மேம், எப்படி இருக்கீங்க எந்த ஊருக்கு போனீங்க மேம்” என்று மீடியாக்காரர்கள் சீதா விடம் முன் மைக்கை நீட்ட இவளோ சிரஞ்சீவியை பார்த்து சிரித்தாள் ..
சிரஞ்சீவி சீதாவை பார்த்து “மேடம் அப்புறம் பேசுவாங்க, நீங்க போங்க போங்க” என்று சீதாவை அழைத்துக்கொண்டு செல்ல பார்க்க.
“மேம் மேம் கொஞ்ச நேரம் மேம் நாங்க ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்குறோம் மேம், நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க மேம், மேம்” என்று சீதாவின் பின்னாடியே வர..
“இரு சிரஞ்சீவி” என்ற சிரஞ்சீவியை தடுத்தவள் “கேளுங்க என்ன கேட்கணும்” என்றாள் மீடியோ காரர்களை பார்த்து சிரித்து.
“மேம் நீங்க நடிச்ச இந்திர சேனா படம் சூப்பர் ஹிட் ஆச்சு நீங்க ஏன் மேம் வேற படத்துல நடிக்கல” என்று அவர்கள் கேட்க..
“உங்களுக்கே தெரியும் இந்த படத்தின் டைரக்டர் சிரஞ்சீவி என்னோட பிரண்டு அவருக்காகத் தான் நான் இந்திரா சேனா படத்துல நடிச்சேன்.. எனக்கு நடிக்கிறதுல அவ்வளவு விருப்பம் இல்ல,,
என் பிரண்டுக்காக தான் நடிச்சேன், தெலுங்குல எனக்கு பிடிச்ச ஹீரோவோட படம் வந்தது அதனால நடிச்சேன்.
அப்பறம் கன்னடா படம்,, அந்த டைரக்டர் ரொம்ப போர்ஸ் பண்ணாருன்னு நடிக்க சொல்லி அதனால அந்த படம் நடிச்சேன்,, எனக்கு நடிக்கிறதுல அவ்வளவு விருப்பம் இல்ல அதனால நான் என் எதிர்காலத்த தேடி போயிட்டேன்,” என்றால்.
“உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாங்க இப்போ உங்களுக்கு எத்தனை மாசம்” என்று ஒருவர் கேட்க.
“எனக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் ஆச்சு, லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டேன் என்னோட கணவர் நேபாள்ல பிசினஸ் பண்ணுறாரு, எனக்கு இப்போ ஏழாவது மாசம் போதுமா”.. என்று சொல்ல..
“மேம் உங்க ஹஸ்பண்ட் பேரு மேம் அவங்க என்ன பிசினஸ் பண்றாங்க”.
“சாரி என் ஹஸ்பண்டுக்கு மீடியா எல்லாம் பிடிக்காது,,சாரி” என்றவள்..
“நாளைக்கு அவார்ட் ஃபங்ஷன்ல பார்க்கலாம் பாய் பாய்” என்று சிரஞ்சீவியை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்..
சிரஞ்சியும் சீதாவும் காரில் வரும்போது அமைதியாக வந்தனர்.