Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 17 3

 “சரி சிரஞ்சீவி,  சிவா நான் என் வீட்டுக்கு போறேன்” என்று சீதா கிளம்ப.

 “ஏய்  எங்கே போற” என்று இருவரும் அவளை  தடுத்து நிறுத்தி..



Advertisement

“இங்கேயே  இரு  போக வேண்டாம் இங்க தான் இருக்க வேண்டும்” என்று சொல்ல.

Advertisement

 “இல்ல  சிரஞ்சீவி பிரபு  நாளைக்  கழிச்சு வந்துருவான்,, அங்க  வீடு  எப்படி இருக்குன்னு பாக்கணும்,, பிரபுவை  பாத்து மாச கணக்கு ஆகுது” என்று சீதா சொல்ல..

Advertisement

 “நாளை கழிச்சுத் தானே உன் தம்பி வரான் அப்ப போய்க்கோ  இப்ப இரு” என்று இருவரும் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க..

Advertisement

 “இல்ல சிரஞ்சீவி லதாவும் பிரக்னண்டா இருக்கா,  நானும் பிரக்னண்டா இருக்கேன் ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதுடா நான் என் வீட்டுக்கு போறேன்  என்று கிளம்ப”..

 “அப்போ நாங்களும் உன் கூட வர்ரோம்”  என்று இருவரும் சீதாவுடன் கிளம்பினார்கள்…

 மாலா  சீதாவை விடவில்லை “இரண்டு பேரும் இருந்தால் என்ன நான் பாத்துக்குவேன்” என்றார்.

சீதா தம்பி வரும்  காரணத்தை  சொல்லி சிரஞ்சீவி வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு கிளம்பி வந்து இருந்தாள்.

 சீதாவிற்கு இந்த வீட்டுக்கு வந்ததும் ஏதோ எங்கேயோ தேடி அலைந்து தன் கூட்டிற்க்கு  வந்த உணர்வு.

முதல்  முதலில் அவள் வாங்கிய வீடு அல்லவா அந்த வீட்டை பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது..

 அப்பா அம்மா இருந்தால்,  எவ்வளவு நன்றாக  இருக்கும்  என்று நினைத்துக் கொண்டே  வீட்டிற்க்குள் சென்றாள். வீடு  அவ்வளவு சுத்தமாக இருந்தது,  அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் சீதா வருவதை சொன்னது நன்றாக சுத்தப்படுத்தி   வீட்டிற்க்கு  தேவையான அனைத்து மளிகை  பொருளையும் வாங்கி வைத்திருந்தாள்..

 சீதா வந்ததும், “எப்படி இருங்கீங்க மா” என்று விசாரித்து விட்டு, “என்ன  சாப்பிடுறீங்க  மா செய்து தர்ரேன்” என்று கூற..

” இப்போதைக்கு ஒன்னும் வேண்டாம் நீங்க போங்க நான் காலையில கூப்பிடுறேன்” என்று அவள் சொல்ல..

 “சரிமா” என்று கிளம்பி விட்டார்..

 நண்பர்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டே இருந்தனர், அவர்களின்  படம், நடிப்பு டைரக்ஷன்,,  இப்படி பேசி க்கொண்டே  சிரித்து,  இரவு வெகுநேரம்  அவர்கள் பேசிக் கொண்டே இருந்து விட்டு, இரவு உணவை  ஆர்டர் போட்டு உண்டு கொண்டிருந்தனர்..

 ரவிக்கு  சீதா  அவள் வீட்டிற்க்கு வந்துவிட்டால் என்று தகவல் தெரிந்தவுடன்,  அவன்  அவளை பார்க்க வீட்டு பக்கத்தில் வந்து  சீதா வீட்டை பார்த்துக் கொண்டே காத்திருந்தான்..

 சிவாவும் சிரஞ்சீவியும்  சென்றவுடன் சீதாவுடன் பேச வேண்டும் என்று அவன் நீண்ட நேரம்  காரில் காத்திருக்க அவர்கள் பேச்சும் சிரிப்பும் சத்தம் தான் அவன் காதில் கேட்டது,,.

 சிவாவும் சிரஞ்சீவையும் இரவு ஒரு மணி வரைக்கும் அவர்கள் வீட்டுக்கு செல்வதாக தெரியவில்லை,, பேச்சும் சிரிப்புமாக இருக்க..

 ‘இன்னைக்கு இவனுங்க சீதாவை விட்டு  போக மாட்டானுங்க போல ஏழு மாச கதையை இன்னைக்கே  உட்கார்ந்து பேசுவானுங்க போல’ என்ற ரவி  அவன் வீட்டில் கிளம்பி விட்டான்..

 மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் போதே சீதா  தூங்கி தூங்கி விழ,  அவளை பார்க்க பாவமாக இருந்தது சிவாவுக்கு.

” நீ தூங்கு சீதா நாங்க கிளம்புகிறோம்” என்றார்கள்..

 “கதவை  சாத்திக்கோ”  என்று சொல்லிவிட்டு “பத்திரமா இருந்துப்ப  தானே” என்று கேட்க

“நான் இருந்திருப்பேன்டா என் வீடு எனக்கு என்ன பயம்”  என்று சொன்னவுடன் இருவரும் கிளம்பினார்கள்….

 சீதாவுக்கு மனது நிறைவாக இருந்தது நன்றாக தூங்கி எழுந்தாள்.

காலையிலே 7.30 மணிக்கே  சிரஞ்சீவி சீதா  வீட்டின்  கதவின் பெல்லை  அடித்திருந்தான்,,.

 “என்னடா இவ்வளவு காலையிலேயே” என்று  சீதா கேட்க.

அவன்  கை நிறைய உணவு பாத்திரங்கள்,, சீதா  என்னவென்று கேட்க..

 “அம்மா சமைச்சு கொடுத்தாங்க நீ  இங்க இருக்கிற வரைக்கும்  உனக்கு  எங்க வீட்டு சாப்பாடு தான்” என்று  சொல்லி சிரித்தான்.

” உள்ளே வா” என்று அழைத்தாள் சீதா…

இருவரும் காலையில் உண்டு முடிக்க..

 “சாயங்காலம்  5 மணி அவார்ட் பங்ஷன் சீதா நாம ஒரு 3  கிளம்பிடலாம், என்று  சிரஞ்சீவி கூற.

“சரி, சிவா எங்கே காணும்”.

“அவனுக்கு முக்கியமான  ஒரு வேலை இருக்குன்னு சொன்னான், அவார்ட் பங்ஷனுக்கு சரியா வந்திடுவான்” என்றான் சிரஞ்சீவி.

“எனக்கு அவார்ட் பங்ஷனுக்கு போடுற மாதிரி சேரி வாங்கனும், டி நகர் போலாம் வர்ரீயா, என் காரை சர்வீஸ் விட்டு இருக்கேன்” என்று சொன்னதும்,,.

“வா போலாம், என்று இருவரம் டி நகர் கிளம்ப.

ரவி காலையில் ஆபிஸ் போகும் போது சீதாவை பார்க்கலாம் என்று காரில் வந்தான் சீதா வீட்டு வழியே..

சீதா சிரஞ்சீவியுடன் காரில் செல்வதை பார்த்து ரவி, இவனுங்க சீதாவை தனியா விடமாட்டானுங்க போலவே, என்றவன் வந்த வழியே சென்று விட்டான்…

சீதாவும் சிரஞ்சீவி டி, நகரில் உள்ள குமரன் சில்க் கடைக்கு வந்திருந்தனர்.

சீதா அவளுக்கு, அழகுமலருக்கு, மாலாவுக்கு, லதாவுக்கு என்று புடவைகள் எடுத்தாள்..

பின்பு,  தன் நண்பர்களுக்கும் எடுத்தவள், தம்பிக்கும் சரவணா ஸ்டோர்சில் துணி எடுத்தவள், அவள் புடவைக்கு ஏற்ற வாறு ரெடிமேட் ப்ளாவ்ஸ் எடுத்து ஆல்ட்ரேஷன் பண்ணி விட்டு வர.

மதியானமானது, பின்பு இருவரும் வீட்டிற்க்கு வந்து மாலா குடுத்து விட்டதை உண்டு முடிக்க..

 “நான் வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி வர்ரேன் சீதா”  என்று  சிரஞ்சீவி கிளம்பி விட.

சீதா சிறிது நேரம் படுத்தவள் அவார்ட் பங்ஷனுக்கு கிளம்பினாள்…

சிரஞ்சீவிக்கு  முன்னாடியே சிவா சீதா  வீட்டிற்க்கு வந்து விட்டான் ,, சீதாவை அழைத்து செல்ல..

சீதா பெல் சத்தம் கேட்டு யாரு என்று பார்க்க, சிவா கொர்ட் சூட் அணிந்த அவார்ட் வாங்க கிளம்பி வந்ததை பார்த்த சீதா,,.

“வாவ் சிவா இந்த லைட் கலர் கோர்ட் சூட்டுல, செம்மா ஹான்சமா இருக்கீங்க,, ஹீரோ சார்,” என்று அவனை கலாய்க்க.

“சீதா நீ என்ன இன்னும் ரெடியாகாம இருக்க.”.

“டென் மினிட்ஸ் புடவை கட்டிட்டு வந்துடுறேன் நீங்க  உள்ள வாங்க சிவா” என்று அழைத்து சிவாவுக்கு பருக சூஸ் கொடுத்தவள்..

சொன்னது போல.

பத்து நிமிடத்தில் பிளாக் பட்டு  சேரில் கிளம்பி  தேவதை பெண் போல கிளம்பி வந்திருந்தாள்.

ஹேய் சீதா, யூவர் லுக்கிங் கார்ஜீயஸ்” என்று சீதாவை சிவா புகழ.

“காமெடி பண்ணாத சிவா நான்  நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு குண்டு பூசணிக்காய் போல இருக்கேன்”..என்று வருத்தபட்டவளை.

பார்த்து சிரித்தவன், “பிரக்னண்டா இருக்குறவங்க இப்படி தான் இருப்பாங்க சீதா, இப்போ தான் நீ ரொம்ப  அழகா இருக்க, ஆனா கொஞ்சம்  மேக்கப் போட்டுக்கோ, அப்பதான் பார்க்க  ப்பிரைட்டா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சிரஞ்சீவி வந்தான்..

சீதா ரெடியானதும், மூன்று பேரும் சேர்ந்து அவார்ட் பங்ஷனுக்கு சிரஞ்சீவி காரில் சென்றனர்..

சீதா பின் சீட்டில் அமர்ந்து கொள்ள..

சிவா கார்வோட்டினான்.

அந்த  ஹவார்ட் பங்ஷன் நடக்கம் இடம்  பெரிய ஹோட்டல் ஹாலில், முன்னாடி  மீடியா ஆட்கள் கேமராவோடு காத்திருக்க அவார்ட் பங்ஷன்  வருபவரை வருவேற்று அழைத்து செல்ல  சிறப்பு பாடி காட்ஸ்சை நியமித்து இருந்தனர்..

சிரஞ்சீவி காரில் இருந்து இறங்கி சீதா இறங்க பின் சீட்டின் காரின் கதவை திறக்க.

சிரஞ்சீவியின் கையை பிடித்த படியே இறங்கினாள் சீதா ..

சிவா கார்பார்க் பண்ண செக்குருட்டியிடம் கார் சாவியை கொடுத்தவன்.

சீதாவை மீடியா ஆட்கள் நெருங்காமல் அரணாக வந்து  அவள் பக்கம் வந்து நின்றான்..

அனைவரின் போக்கஸ்சும் கீதா, சிரஞ்சீவி, மற்றும் சிவாவின் மீது தான்.

அவர்கள் தானே இன்றைய ஹீரோ, ஹீரோயின், பலபேர் மைக்கை எடுத்துக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டே சீதாவின் மேல் விழுவது போல் வர.

பாடிகார்ட் தடுத்தும், போட்டோ வீடியோ காரர் சீதாவை நெருங்கி வர.

சிரஞ்சீவியும், சிவாவும் சீதாவை யாரும் அருகில் நெருங்காத வாரு அழைத்து செல்வதை, லைவ் டெலிகாஸ்ட் மூலம்  பார்க்கொண்டிருந்தான் ரவி, இவர்கள் மூன்று பேரும் நிகழ்ச்சி தொடங்குவதர்க்கு  முன்னே  வந்திருக்க, சீதாவை நடுவில் அமர வைத்து  சிவாவும், சிரஞ்சீவியும் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொள்ள.

முதல் வரிசை வி ஐ பி மற்றும் சூப்பர் ஸ்டார்களுக்கும் என்று பெயர்கள் எழுத பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது, முதலில் இறைவணக்கம் பாடி, வாழ்த்து மடல் வாசித்து, பரத  நாட்டியத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது, இப்போது ஒவ்வொரு வி. ஐ. பி கலாக ஹவார்ட் பங்ஷனுக்கு  வந்து கொண்டிருந்தனர்..

அங்கே ரசிகர் கூட்டத்தில் ஓரே சத்தம் “தீப்தி, தீப்தி” என்று சத்தம் வர.. அனைவரும் யாரு அந்த  தீப்தி என்று பார்க்க.

புது முக  நடிகை தீப்தி ரவிதேஸ்சாவின் கையை கோர்த்த படியே ஹவார்ட் பங்ஷன் நடக்கும் ஹாலிற்க்கு இருவரும் சேர்ந்து வர…

சீதா யாரு அந்த தீப்தி என்று வாசலை பார்த்தாள்..

வெள்ளை நிற கோர்ட் சூட்டில் சம்மென்று  இருந்தான் ரவி,, அந்த தீப்தியோ அறைகுறை ஆடை அணிந்து ரவியின் கைகோர்த்த படியே வர..

அதை பார்த்த சீதாவுக்கு இவன் திருந்தவே மாட்டான் என்று நினைக்க.

முன் வரிசையில் இருந்த சோணாலியை இப்போது தான் பார்த்தாள் சீதா.

அவள் ரவியை பார்த்ததும் எழுந்து  வேகமாக அவனிடம் சென்றவள், “

“ஹாய் ரவி கம்” என்று அணைத்து விட்டு , அவள் உட்கார்ந்து இருக்கும், பக்கத்தில் அவனை அழைத்து செல்ல..

தீப்தி ரவியை அட்டை போல் ஒட்டிக்கொண்டிருந்தவள்..

அவனோடு சேர்ந்தே  அவளும் அமர்ந்தாள்..

மேடையில் உள்ள தொகுப்பாளினி.

“ஹாய், ஹாய் ஹாய் ரவிதேஸ்சா சார், உங்க புது பட ஹீரோயினோட வந்ததுக்கு  நன்றி, ஹாய் தீப்தி” என்று மேடையில் இருந்து கை காட்ட..

“ஹாய்” என்ற தீப்தி எழுந்து நிற்க. அங்கே இருந்தா அனைத்து இளைஞர்களும் “தீப்தி, தீப்தி” என்று கத்த.

ஹாய் என்று கத்திய ரசிகர்  கூட்டத்தை பார்த்து கையசைத்த தீப்தி ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு, ரவியின் கையை மீண்டும் தன் கையோடு பிணைத்து வைத்துக்கொள்ள.

ரவி  தீப்தியின்  கையை எடுத்து விட்டான்…

அவளோ “ரவி” என்று அவனிடம் செல்லம் கொஞ்சி பேச..

சீதாவுக்கு தலைவலி ஆரம்பம் ஆனது.

இந்த கண்ராவியை பார்க்கவா நான் வந்தேன் என்றிருந்தது சீதாவிற்கு..

இனி ரவி இருக்குற பக்கம்  கூட பார்க்க கூடாது என்று நினைத்தவள் நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!