Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 19 1

சீதா கல்யாண வைபோகமே..

 அத்தியாயம் – 19



Advertisement

Advertisement

Advertisement

 சீதாவுக்கு ரவியை  இங்கே பார்த்ததும் பூமி  தலைகீழாக சுத்துவது போல இருந்தது..

Advertisement

 இவன்  என் சொந்த தாய் மாமன் மகனா?  என்ன நடக்குது இங்கே என்று அவள் புலம்பியபடியே நிற்க.

ரவி கையெழுத்து போட்டு முடித்ததும்,  திரும்பி பார்க்க.

“நானா” என்ற கதிர்  பத்மாவதியிடமிருந்து  ரவிமேல் தாவ.

 “டேய் கதிர்” என்று மகனைப் பிடித்துக் தூக்கி  கொண்டவன்..

“என்னம்மா கதிருக்கு ஃபீவர் எப்படி இருக்கு”?.. என்றான்..

” இப்ப பரவாயில்லடா” என்றார் பத்மாவதி.

 கதிர் கையில் பாரின் சாக்லேட் இருக்க. அதை பார்த்த ரவி. “டேய் இப்பதான ஃபீவர் விட்டிருக்கு  அதுக்குள்ள பாரின் சாக்லேட்”? என்றான்.

 அவனோ  சீதாவை காண்பித்து “சீதா ஆன்ட்டி” என்று கூற..

 அப்போதுதான் சீதாவை பார்த்தவன்..

“சீதா”  சீதா எப்படி இங்கே வந்தாள்? என்றவன் அவள்  அருகில் செல்ல..

 “இங்கே நீ எப்படி”? என்று அவளிடம் கேட்க..

 பத்மாவதி பதில் சொல்லியிருந்தார் “அவ தான் உங்க அத்தை வரலட்சுமியோட பொண்ணு,அது அவளோட தம்பி பிரபு ரெண்டு பேரும் சைன் போட   வந்திருக்காங்க” என்று கூற.

 “வரலட்சுமி அத்தையோட பொண்ணா சீதா” என்று ரவி அதிர்ச்சியாகி நிற்க..

 ரெஜிஸ்டர் ஆபீஸிற்குள் வேற ஆட்கள் வர இவர்கள் வெளியே வந்தனர்.

 “சீதா பிரபுவிடம்  போகலாம்” என்று சொல்ல ..

 ரவிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை மூச்சடைத்து போய் நின்றான். சீதா  என் சொந்த அத்தை பொண்ணா  என்றவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை..

 அவன் அவளிடம் என்ன பேசலாம் ஏதாவது பேசினால் தப்பா புரிந்து கொள்வாளோ,, இல்லை  நீ உன் அத்தை மகள் என்று தெரிந்து என்னை ஏமாற்றினாயா என்று அவனிடம் கேட்டால் என்ன சொல்வது.. என்று  அமைதியாக ரவி அவளை பார்த்திருக்க.

 பிரபு லாயரை பார்த்து “நாங்கள் கிளம்புறோம்” என்று சொல்ல..

 “அட இருப்பா உங்க  தாய் மாமா , உங்களுக்கு ஏதோ கொடுக்கனுமுன்னு சொன்னார்” என்ற லாயர் வெங்கட்டை பார்க்க..

  காரில் இருந்து பெரிய பையை எடுத்து வந்த வெங்கட்ரவிதேஸ்சா  லாயரிடம் தர..

லாயர் அதை பிரித்துப் பார்த்தவர் பிரபுவிடம் சென்று “இந்தாங்கப்பா நீங்க இந்த சொத்தை எழுதி கொடுத்ததற்கு உங்க மாமா உங்களுக்கு பணம் கொடுக்கிறார்” என்று பணத்தை  கொடுக்க..

 “எங்களுக்கு பணம் வேண்டாம்” என்றான் பிரபு..

 “சும்மா ஒன்னும் கையெழுத்து போட்டுட்டு போக  வேண்டாம் பணத்தை வாங்கிட்டுபோக சொல்லுங்க, இது போததுண்ணா இன்னும் கொஞ்சம் பணம் தரவா” என்றார் வெங்கட் லாயரை பார்த்து.

 “நீங்க கோயில் சொத்து விசயம்  சைன் பண்ண வர சொன்னீங்க சைன் பண்ணிட்டோம் எங்களுக்கு இந்த பணம் வேண்டாம்” என்ற சீதா அந்த பண பையின்  ஜிப்பை மூடி லாயரிடம்  தந்து விட்டு “பிரபு கிளம்பு” என்று சொல்ல..

“சரிக்கா” என்றவன் தமக்கை யோடு  காரில் ஏற போக…

பத்மாவதி சீதாவின் கையை பிடித்துக்கொண்டவர்.

“சீதா எங்க வீட்டுக்கு  வந்துட்டு போமா, மாசாமா வேற இருக்க, வாம்மா” என்று கூற..

“இல்ல ஆண்ட்டி நீ எங்களை கூப்பிட்டதே போதும், நாங்க வர்ரோம்” என்று கூறியவள்..

காரில் ஏறி இருந்தாள்.. லாயர் பிரபுவிடம் பிளைட் எத்தன மணிக்கு என்று கேட்க.

“நைட் பிளைட் தான்,, கொஞ்சம் நேரம்  ஹோட்டல்ல ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புறோம்”.. என்று கூறி சென்றான்..

 சரியாக கூட பேசாமல் சீதா வேக வேகமாக கிளம்ப..

 வெங்கட்  காசு வேண்டாம் என்று சொல்லி சென்ற தன் தங்கை பிள்ளைகளை பார்த்திருந்தார்,, இந்த காலத்தில் காசு வேண்டாம் என்று கூட சொல்வார்களா,,அவர்களை  பார்த்தால் அவ்வளவு வசதியாக இருப்பது போல் தெரியவில்லை.

 தங்கை பிள்ளைகளை பார்த்து நின்றார் வெங்கட்,  மணி மணியாக இரண்டு பிள்ளைகளை  பெத்து வளர்த்தவளுக்கு   அவர்கள் கூட இருக்க முடியவில்லை, என்று தங்கையை நினைத்து புலம்பியவர்.. “பத்மாவதி வா” என்று கூப்பிட அவரோ கண்ணீல் நீரோடு நின்றிருந்தார்.

 “ஏண்டி  இப்போ அழுவுற நீ கூப்பிட்டு அந்த பிள்ளைகள்  போயிருச்சு நீ எதுக்கு இப்ப பீல் பண்ற வா போலாம் வீட்டுக்கு” என்றார் வெங்கட்..

 “என்னால முடியல பாவா அந்த பிள்ளைங்களை பார்க்க பாவமா இருக்கு,  அப்பா  அம்மா இல்லாம பிள்ளைங்க தனியா இருக்கு பாவா நம்ம ஏதோ பாவம் பண்ற மாதிரி இருக்கு,, அந்த பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யணும்” என்றார் பத்மாவதி.

 “அதான் பணம் கொடுத்தோமே, வாங்க மாட்டேங்கிறாங்க”.

” நமக்கு இதெல்லாம் ஒரு  பணமா பாவா அந்த இடம் எத்தனை கோடி போகும் நீங்க ஏன் இவ்வளவு  கம்மிய பணம் கொடுத்தீங்க” என்றார். பத்மா.

 “பல லட்சம்  பணத்தையே வேண்டாமுன்னு சொல்லிட்டு   போய்ட்டாங்க,  நீ கோடி, கோடியா  பணம்  கொடுத்தா வாங்குவாங்களா அந்த பிள்ளைங்க”?.

என்றார் வெங்கட்.

 “நீ சொல்லு அந்த பொண்ணு சீதாவை உனக்கு எப்படி தெரியும்” என்றார் வெங்கட் ரவியை பார்த்து.

 “என் படத்துல நடிச்சிருக்கா பா சீதா  ரொம்ப நல்ல பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு பீ, எச் டி முடிச்சு டீச்சரா வேலை பார்க்குறா,   தம்பியையும் டாக்டருக்கு படிக்க வைக்குறா, ரொம்ப நல்ல பொண்ணு”. என்றான் ரவி.

 வெங்கட் மனதில் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்திருந்தார் தங்கை பிள்ளைகள் பணம் வாங்கிக்கொண்டு   சென்றால் அப்படியே விட்டு விடலாம்.

 சப்போஸ் அவர்கள் பணம் வாங்கவில்லை என்றால் தங்கள் உறவை வளர்த்துக் கொள்ளலாம் என்று தான் மனதில் நினைத்திருந்தார் ஆனால் இப்போது இரண்டு பிள்ளைகளை பற்றி   கேட்டபோது இரண்டு பிள்ளைகளையும்  தனியே விட மனம்மில்லை அவருக்கு, சற்று யோசித்தவர்..

 மனைவியை  அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர..

 பத்மாவதி கணவனிடம் பேசவே இல்லை  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேரனோடு  காரில் இருந்து இறங்க.

 நாகம்மாள் மருமகளை பார்த்து “என்னடி போன காரியம் எல்லாம் முடிந்ததா” என்று கேட்க அவரோ கண் கலங்கியவாரே   வீட்டினுள் சொல்ல போக..

 “ஏ… பத்மா இங்க வா” என்று மருமகளை அழைக்க..

 அவரோ கண்களை துடைத்தவாரு பேரனை ரவியிடம் கொடுத்தவர் மாமியார் பக்கம் வந்து  அமர்ந்து கொள்ள.

 “ஏம்மாயிந்தி  பத்மா ஏமி, எந்துக்கு  ,  அழுவுற” என்று மருமகளை கேட்க.

 மாமியாரை அணைத்துக் கொண்டு அழுதார் பத்மா..

 “ஏண்டி ஏண்டி  எந்துக்கு அழுவுற” என்று மருமகளை கேட்க.

” எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தையா” என்றார்..

 “ஏன் அந்த ஓடுகாலி,  ஓடுகாலி பெத்த புள்ள,புருஷனை  எல்லாம் பார்த்தியா”?..

 “இல்ல அத்தை  அங்க யாருமே வரல நம்ம வரு, வரலஷ்மி  இறந்துட்டா போல ,, அவ புருஷனும் இறந்துட்டார், வரலட்சுமியோட  ரெண்டு பிள்ளைங்க தான் வந்துச்சு அந்த பிள்ளைங்க எப்படி இருக்காங்க தெரியுமா மணி மணியா இருக்காங்க.

 இந்த பிள்ளைகளை அப்படியே விட்டுட்டு வர எனக்கு மனசு இல்ல அதுவும் அந்த பொம்பள புள்ள மாசமா இருக்கு பார்க்க எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா,,  யாருமே இல்லாத மாதிரி அந்த பிள்ளைங்க ரெண்டும் அனாதை மாதிரி  காருல போகுது..

 உங்க புள்ள பணம் கொடுத்தத கூட அந்த பிள்ளைங்க வாங்கல”..

 “வரலட்சுமி இறந்துட்டாளா”  என்று அதிர்ச்சியாகி நாகம்மாள் கேட்க..

” ஆமா உங்க பொண்ணு இறந்து அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சாம் வரலட்சுமி புருஷன் இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது” என்று சொல்ல,,

நெஞ்சில் கை வைத்திருந்தார்  நாகம்மாள்..

 அவளை  பெற்றவள் நான் இங்கே குத்துக்கல்  மாதிரி இருக்க,  நான் பெத்த பிள்ளை இறந்து விட்டாளா? என்று அதிர்ச்சியானவர்.

மகனை பார்க்க..

 நாகம்மாள் அருகில் வந்து அமர்ந்த வெங்கட், அம்மாவின் தோளை தொட்டு “கவலைப்படாதம்மா வரலஷ்மி  இறந்து போயி ரொம்ப வருஷம் ஆகுது..  நீ இப்ப வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை” என்றார்.

  மகளை நினைத்து சிறிது நேரம் அழுதவர்,,..

 “என் பேத்தி பேரனை நான்  பார்க்கணும்”  என்று விசும்ப..

 “ம்மா போனவங்க போகட்டும் விடு,  அவங்களே  பணம் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க” என்று வெங்கட் சொல்ல.

“ஓ அப்படியே விட்டுவிடலாமுன்னு  நினைச்சுட்டீயா   நீ,” என்று  மகனை முறைத்து பார்த்தவர்…

 “ரவி கார்ரெடு  அந்த பிள்ளைகளை போய் பார்த்து கூட்டிட்டு வரலாம்” என்று  நாகம்மாள்  சொல்ல..

 “அவங்க தான் கிளம்பிட்டாங்களே” என்றார் வெங்கட்..

“இல்லப்பா இங்க தான், பக்கத்து ஊருல   ரூம் எடுத்து ஸ்டே பண்ணி இருக்காங்க” என்றான் ரவி..

 “உனக்கு எப்படி தெரியும்” என்றார் வெங்கட்,,

 “லாயர் கிட்ட அந்த பிரபு பையன் சொன்னான்பா” என்றான் ரவி.

 “சரி என்னவோ பண்ணுங்க நான் போறேன்” என்று வெங்கட் கிளம்பி விட,,

 பத்மாவும், நாகம்மாளும், ரவியும் கதிரோடு கிளம்பினார்கள் சீதாவையும், பிரபுவையும்  அழைத்து வர.

 சரியாக அவர்கள் ரூம் வாசலில் நாகம்மாளையும் பத்மாவதியை  ரவிவிட்டவன் மகனை தூக்கியபடியே  கீழே இறங்கி வந்து விட்டான்..

 தன்னை பார்த்தால்  சீதா  கோபப்பட்டு வீட்டுக்கு வர மாட்டாள் என்று அவனுக்கு நன்கு தெரியும் அதனால் அவன் கீழே இறங்கி வந்து விட்டான்…

 மனதில் சீதா தன் வீட்டிற்க்கா என்று அவ்வளவு சந்தோஷமாக இருந்தான்.. அவள் வரவேண்டும் என்று அவன் நினைத்திருக்க.. அவள் என்ன சொல்வாளோ .. என்று ஒரு பக்கம் பயமாக இருந்தது.

 ரூமுக்கு வந்ததிலிருந்து சீதா அமைதியாக பெட்டில் படுத்து விட்டாள்.

 “சாப்பிட ஏதாவது வேண்டுமா அக்கா” என்று பிரபு கேட்டபோதும்..

 “ஒன்றும்  வேண்டாம்” என்றவள்.. தலையணையில் முகத்தை மூடி படுத்துவிட்டவளுக்கு  கண்களில்  இருந்து கண்ணீர் வந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!