சீதாவுக்கு ரவிவை பார்க்க சங்கடமாக இருக்க, காரில் இருந்து இறங்கிய ரவி, நாகம்மாளில் கைபிடித்து மெல்ல இறக்கிவிட்டவன்.
தூங்கும் கதிரை பத்மாவதியிடமிருந்து வாங்கிக்கொண்டு அவனின் தாயின் அறைக்கு செல்ல.
சீதாவுக்கே ஆச்சரியம் ரவி தன்னிடம் பேசாமல் போனது.
இப்படியே இருந்து விட்டால் நல்லது, கும்பாபிஷேகம் முடிந்ததும் கிளம்பி விடலாம், என்று நினைத்தவள் மெல்ல இறங்க..
“வா சீதா” என்ற பத்மா, சீதாவை கைபிடித்து அழைத்து வந்தவர், வீட்டு திண்ணையில் அவளை உட்கார சொல்ல, அந்த சாயங்காலப் பொழுது இதமாக இருந்தது,.
எதிர் திண்ணையில் நாகம்மாள் அமர்ந்திருக்க, பத்மா உள்ளே சென்றவர், சீதாவுக்கு இளநீர் எடுத்துக்கொண்டு வந்து தர.
சீதாவுக்கும் தாகமாக தான் இருந்தது, பத்மா கொடுத்ததும், “தாங்க்ஸ் ஆண்ட்டி” என்று கூறி அதை வாங்கி குடிக்க.
நாகம்மாள் சீதாவை பார்த்து, “பத்மாவை அத்தை சொல்லுட, ஆண்ட்டி வேண்டாம்” என்று கூற.
“சரி பாட்டி” என்றாள்.. சீதா.
பத்மாவின் சத்தம் உள்ளே இருந்து சத்தமாக வர.
“என்னடி பத்மா” என்றார் நாகம்மாள்..
கோபமாக வந்த பத்மா, “இந்த ரவி இப்பவே சென்னை போறேன்னு சொல்லுறான், சாப்பிட்டு போன்னு சொன்னா, கேட்கமா, கிளம்பிட்டு இருக்கான்” என்று சொல்லும் போதே.
“லேப்டாப் பேக்கோடு” வந்தவன்,..
நாகம்மாளை பார்த்து “நான் வர்ரேன் அவ்வா” என்று கிளம்ப.
“கும்பாபிஷேகத்துக்கு வந்துவிடனும் ரவி கண்டிப்பா நீ வரணும், உன்னோட பொறுப்பில் தான் எல்லாம் நடக்கணும்” என்று கூற..
“சரி சரி” என்று தலை ஆட்டியவன் காரில் ஏறி கிளம்பி இருந்தான்..
சீதாவுக்கு அப்பாடா என்றிருந்தது, எப்படியோ ரவி சென்று விட்டான் கொஞ்சம் ப்ரீயாக இருந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
காரில் சென்று கொண்டு இருந்த ரவி தன் தாய்க்கு போனில் அழைத்தான்.
“சொல்லுடா வீட்ட விட்டு போயிட்டு எதுக்குடா போன் பண்ணுற”? என்றார் கோபமாக
“மா என் ரூம்புல தவிர வேற ரூம்ல ஏசி இல்லை அதனால சீதாவை என் ரூம்புல தங்க வை” என்றான் ரவி.
“சரிடா” என்றார் பத்மாவதி…
என்ன அதிசயமா இருக்கு யார் வந்தாலும் அவன் ரூம்மே தரமாட்டான், சீதாவுக்கு ரூம்பை தருகிறானே” என்று யோசித்தார் பத்மா.
மாமியாருக்கு தட்டில் உணவே கொண்டு வந்து கொடுத்த பத்மா,
” நீ வா சீதா வந்து சாப்பிடு” என்று அவள் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவர்.
ரவியின் ரூம்பை காண்பித்து இங்கே உன் பேக்கை வைத்து இருக்கேன். “ரெஸ்ட் ரூம் போயிட்டு கை, கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்” என்று கூற.
அந்த அறையினுள் சென்ற உடனே இது யாருடைய அறை என்று தெரிந்து கொண்டவள்.
போன வேகத்தில் திரும்பி வந்து.. “அந்த ரூம் வேணாம் அத்தை வேற ரூம் இருக்கா” என்று பத்மாவதியிடம் கேட்க..
“இல்லடா அந்த ரூம்முல தான் ஏசி இருக்கு அதுதான் ரவி உன்னை அங்க தங்க சொன்னான், ” என்று மகன் சொல்லியதை சொன்னவர்.
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அந்த ரூம்ல தங்கிக்கோ நாளைக்கு கெஸ்ட் ரூம்ல ஏசி மட்ட சொல்லிடுறேன்” என்று சொல்ல..
“பரவாயில்லா அத்தை எனக்கு ஃபேனே போதும் ” என்றவள்..
கெஸ்ட் ரூம் எது என்று கேட்டவள் அந்த அறைக்கு செல்ல போக..
“ரவி திட்டுவாண்டா நீ ஏசி இருக்குற ரூம்ல படுத்துக்கோ நாளைக்கு கெஸ்ட் ரூம்பல ஏசியை மாட்ட சொல்றேன்” என்று பத்மா கூற.
‘எல்லாம் அவன் வேலை தானா என்று நினைத்தவள்,, “பரவாயில்ல அத்தை” என்று கெஸ்ட் ரூம் சென்று முகம், கைகால் கலுவி வந்தாள்.
பத்மாவதி காலையிலே சமைத்து வைத்து விட்டு சென்றிருக்க, இப்போது சூடாக சாதம் மட்டும் வைத்து சீதாவுக்கு பரிமாற..
அந்தக் காரக்குழம்பை ரசித்து ருசித்து சாப்பிட்டவள், “ரொம்ப நல்லா இருக்கு அத்தை” என்றாள்.
“கும்பாபிஷேகம் நடக்குது இல்லனா உனக்கு நான் கோழி அடிச்சு சாப்பாடு போட்டு இருப்பேன்” என்று கூற….
” பரவால்ல எனக்கு வெஜ் ரொம்ப பிடிக்கும்” என்று சீதா கூற.
“இரு நாளைக்கு நான் ஹோட்டலில் இருந்து ரவி அப்பாவை உனக்கு பிரியாணி வாங்கிட்டு வர சொல்றேன்” என்றார்.
“ஐயோ வேண்டாம் அத்தை மாமா கிட்ட சொல்ல வேண்டாம்” என்று:சீதா கூற..
“அட நீ வேறம்மா வெளியில் இருந்து வாங்கிட்டு வந்தா தப்பு இல்ல நீ எங்க கெஸ்ட் உன்னா அப்படியே விட முடியுமா, நல்லா கவனிக்கணும் தானே” என்று கூறியவர். சீதாவோட சேர்ந்து அவரும் சாப்பிட்டு முடித்தவர்.
நாத்தனார் மகளிடம் கதை பேசிக்கொண்டே திண்ணைக்கு வந்து அமர ..
நாகம்மாள் பேத்தியின் கையை பிடித்துக் கொண்டு “இங்க வாடா” என்று அழைக்க.
ஆமாம் என்று பத்மாவுக்கு “இதே மாதிரி ஒரு பொண்ணு ரவிக்கு பொண்டாடியா வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’,,. என்று கூற..
“எனக்கும் அதே தான் தோணுது பத்மா, உன் மூத்த மருமகள் மாதிரி வந்தா குடும்பமே இன்னும் நாலா பிரிஞ்சு போய்விடும்'” என்றார் புலம்பிய படியே உண்டு விட்டு சென்றார்..
சீதாவுக்கு நிம்மதியான தூக்கம் தன் தாயின் வீட்டுக்கு வந்தது போல் உணர்ந்தவள் நன்றாக தூங்கி எழ..
சீதா கையில் வெதுவெதுப்பான பாலை கொண்டு வந்து கொடுத்தார் பத்மா..
அதை வாங்கி பருகிய படியே, “கதிர் முழிச்சிட்டானா அத்தை” என்றால் சீதா..
இல்லடா நல்லா தூங்குறான் என்று மூன்று பேரும் திண்ணையில் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு கார் வந்து நின்றது நாகம்மாள் வீட்டு வாசலில் ..
யார் என்று பார்க்க, ரவியின் அண்ணன் வந்திருந்தான்..
பத்மாவதி மூத்த மகனை பார்த்ததும் சந்தோஷப்பட்டவர் “வாடா” என்று மகனை அழைக்க.
“அப்பா இருக்கிறாரா” என்று கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன் சீதாவை ஒரு பார்வை பார்த்தபடியே உள்ளே செல்ல..
பத்மா மகனுக்கு பின்னாடியே ஓடினார்..
சீதாவுக்கு ரவியின் ஜாடையில் இருந்த அவன் அண்ணனை பார்த்தவள், யார் என்று புரிந்து கொண்டாள், பத்மா வாடா என்றதும்…
அவரின் மூத்த மகன் என்று புரிந்து கொள்ள.
நாகம்மாளிடம் “உங்க மூத்த பேரனா”? என்று கேட்க..
“ஆமாம் மூத்த பேரன் தான் வந்திருக்கான், அவன் அப்பன் கூட சண்டை போட..
எதுக்கு என்று சீதாவுக்கு வாய்வறை வார்த்தை வந்தாலும், அமைதியாக நாகம்மாளை பார்க்க “அவன் எதுக்கு இங்கே வருவான் ஏதாவது பணம் கேட்டு வருவான் வேறு எதுக்கு வருவான் அளிக்க பிறந்தவன்” அவன் என்றவர்.
ரவிக்கு எதுவுமே ஆக்க தான் தெரியும்..
ஆனா இவனோ எல்லாத்தையும் வித்து வாங்கிட்டு போய் பணத்தை பொண்டாட்டி கையில கொடுப்பான் பொண்டாட்டி ஒரு வார்த்தில் செலவு பண்ணிட்டு மறுபடியும் பணம் கேட்பா, இவனோ இங்க வந்து நிற்பான் அவங்க அப்பா கிட்ட சண்டை போடுவான்.
இது மாசம் ஒரு முறை நடக்கிறது தான்..
“என்ன பாட்டி இப்படி சர்வ சாதாரணமா சொல்றீங்க”?
“வேற என்ன சொல்றது மா இருக்கிற சொத்தை எல்லாம் பாதி வித்து வாங்கிட்டு போயிட்டான் இப்ப இருக்கிறது ரவியோட சொத்து அதையும் அவன் கேட்கிறான் படுபாவி பய” என்று மூத்த பேரனை நாகம்மாள் திட்ட.
நமக்கு எதுக்கு வந்தது கும்பாபிஷேகம் முடிஞ்சதும் கிளம்பி விடலாம் என்று சீதா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
நேரமாக, மாக சத்தம் அதிகமாக கேட்க நாகம்மாள் பயந்து போனவர் “நீ போய் பாருமா, எனக்கு கால் வலிக்குது” என்று சொல்ல