பத்மாவுக்கு மனம் நிறைந்திருந்தது. ரவியை இப்படி குடும்பத்தோடு ஒன்றாக பார்க்க.
Advertisement
நாளை அதிகாலையிலே கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு வருவதால் சீக்கிரம் கிளம்புங்கள் என்று வெங்கட் சொல்ல..
கதிர் ரவியின் தோளில் தொங்கிக்கொண்டு,,”நானா நீங்களும் வாங்க” என்றான்..
“நானாக்கு வேலை இருக்குடா செல்லம்,, நீங்க சீத்தாம்மா கூட போங்க நாளைக்கு அப்பா கூட இருக்கலாம்” என்று மகனை கொஞ்சி சீதாவோடு அனுப்பிவைத்தான்.
வெங்கட் பத்மாவையும், சீதாவையும், கதிரையும் அழைத்துக் கொண்டு வீட்டில் வந்து விட்டவர்..
திரும்பி கோவிலுக்கு வந்தார் நாளைக்கு கும்பாபிஷேகத்துக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க.
ரவி அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான் கும்பாபிஷேகத்திற்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்ன தேவை என்று தேவைகளை வாங்கி வரச் சொல்லிவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க..
வெங்கட்டிற்க்கு பாதி வேலை குறைந்தது..
மகன் சோர்ந்து இருப்பதை பார்த்தவர் மனது கேட்காமல் “வீட்டுக்கு வந்து தூங்கிட்டு காலைல வாடா” என்று அழைக்க..
தந்தை அழைத்துக்கும் மகிழ்ச்சியானவன் “கொஞ்சம் வேலை இருக்குப்பா முடிச்சிட்டு காலையில வரேன்” என்றான்..
ரவி அனைத்து வேலைகளையும் முடித்து வீட்டுக்கு கிளம்ப அதிகாலை ஆகி இருந்தது..
இவன் வந்த நேரம் அனைவரும் எழுந்து கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்க இவனும் வந்து குளித்து விட்டு வேகமாக கிளம்பினான்.. ரவியை பார்த்த கதிர் “நான் நானா கூட கார்ல போறேன்” என்று குதிக்க..
பத்மாவதி ரெடியாகி இருந்தார், பூஜை சாமான்களை எல்லாம் பத்மாவதி காரியில் ஏற்றிக் கொண்டிருக்க வெங்கட்டும் ரெடியாக இருந்தார்.
சீதா மட்டும் இன்னும் கிளம்பாமல் இருக்க..
கதிரை அழைத்த பத்மா “உங்க அம்மாவை கூட்டிட்டு உங்க நானா காரில் வாங்க” என்று சொல்லி சென்று விட்டார்..
சீதாவுக்கு இது தெரியாது..
சீதா கதிரை ரெடி பண்ணி விட்டு அவள் ரூமில் கிளம்பி கொண்டிருந்தாள்.
“அத்தை நான் ரெடி” என்று புடவையை சரி பண்ணிக் கொண்டே சீதா வெளியே வர.
வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
ரவி கண்களை மூடியபடியே சேரில் அமர்ந்திருக்க..
அவன் மடியில் கதிர் அமர்ந்திருந்தான்…
சீதாவை பார்த்த கதிர் “சீத்தாம்மா பத்மா அவ்வா நானா காரில் வர சொன்னாங்க”.. என்று சொல்ல.
இவன் காரில்ல என்று அதிர்ச்சியான சீதா ரவியை பார்க்க..
மயில் வண்ண காஞ்சி பட்டில் ஜொலித்த சீதாவை ரசிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.
அவளிடம் இருந்து பார்வை திருப்பியவன் “போலாம் கதிர் உங்க அம்மாவை காரில் ஏற சொல்லு” என்றவன் நாகம்மாளிடம் “கோவிலுக்கு வாங்க அவ்வா” என்று அழைத்து பேசிக் கொண்டிருக்க.
“கூட்டம் அதிகமாக இருக்கும் ரவி சாயங்காலமா வர்ரேன்” என்றார் நாகம்மாள்..
சீதா நாகம்மாளிடம் சொல்லிவிட்டு ரவியின் காரின் பின் சீட்டில் ஏறிக்கொள்ள.
கதிரை முன் சிட்டிலில் உட்கார வைத்த ரவி காரை கோவிலை நோக்கி கிளப்பி இருந்தான்…
சீதா இறங்கும் போதுதான் ரவி அவளை நன்றாக பார்த்தான் அவள் தலையில் பூவில்லாமல் இருக்க..
“நீ முன்னாடி போ சீதா” என்று அவளை அனுப்பி வைத்தவன்.. பூவை வாங்கி, அதை ஒரு கவரில் வைத்து அதை கதிரிடம் கொடுத்தவன் “இதை உன் சீதா அம்மாவுக்கு கொடு” என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்கச் சென்றான்.
ஒரு கவர் நிறைய பூவை கொண்டு வந்து கதிர் சீதா மடியில் வைத்தவன்.
“நானா குடுக்க சொன்னாங்க” என்றான் அதில் அவளுக்கு பிடித்த பிச்சி பூ இருக்க, அதை எடுத்து வைத்துக்கொண்டாள் சீதா.
கும்பாபிஷேக பூஜைகள் நடந்து கொண்டிருந்தது .
பெரிய, பெரிய ஹோம குண்டத்தில் ஓம பூஜைகள் நடந்து கொண்டிருக்க.. ஓம குண்டத்தின் பக்கத்தில் வெங்கட்டும், ரவியும் பூஜையில் அமர்ந்திருந்தனர் அவர்களுக்கு முதல் மரியாதையாக மாலை அணிவித்து தலையில் பட்டு துணியில் தலைப்பாகை கட்டி பூஜையில் அமர்ந்திருந்தனர்.
சீதா ரவியின் மனைவி என்பதால் அவளுக்கும் சிறிய சடங்குகள் இருந்தது. அவளுக்கும் மாலை அணிவித்து இருந்தனர்.. பத்மாவும் மாலை அணிந்து வெங்கட் அருகில் அமர்ந்திருக்க சீதாவும் ரவி அருகில் அமர்ந்திருந்தாள்.
கதிர் ஏக்கமாக பார்க்க,அவனுக்கும் சிறிய மாலை அணிவித்து தன் மடியில் அமர்த்தி வைத்துக் கொண்டிருந்தான் ரவி..
சீதாவுக்கு நீண்ட நேரம் ஓமத்தில் உட்கார முடியவில்லை ,, கஷ்டப்பட்டவளை தன் பின்னாடி உட்கார்ந்து கொள் என்று ரவி சொல்ல.
அனைத்து பூஜைகளும் முடிந்து கும்பத்தில் புனித தீர்த்தத்தை ஊற்ற எடுத்துக் கொண்டு , மேலே உள்ள கும்பத்தில் அபிஷேகம் செய்ய கிளம்பிய ரவி சீதாவை பாதுக்காப்பான ஒரு இடத்தில் அமர வைத்தவன், கோபுரத்தின் உச்சிக்கு சென்றான்..
மூன்று கோபுர கும்பத்திற்கு அபிஷேகம் செய்ய ஏற்ப்பாடாகி இருக்க, கோவில் தலை வாசலில் உள்ள பெரிய கும்பத்திற்கு ரவி சொல்ல.
அதற்கு அடுத்தாக இருந்த கோபுரத்திற்கு வெங்கட் மேல தாளத்தோடு தீர்த்த கலசத்தை எடுத்துக்கொண்டு பல ஐயர்கள் மந்திரம் ஓதியபடியே கோபுரத்தை நோக்கி வெங்கட் செல்ல..
வெங்கட்டின் சித்தப்பா மகன் ஒருவர் கதிரை தூக்கிய படியே மூன்றாவது கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.., நல்லா நேரத்தில் அனைத்து கோபுரத்திலும் பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடக்க,, கூடியிருந்த மக்கள் அனைவரும் கோவில் கோபுரத்தை மேலே பார்த்தபடியே நிற்க, கோபுரத்தில் அபிசேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தது..
அனைவரின் மேலும் தீர்த்த நீரை தெளிக்கும் ட்ரோனை ஏற்ப்பாடு பண்ணியிருந்தான் ரவி அதே போல. அனைவரின் மீது கும்பாபிஷேகம் நீர் தெளிக்கப்பட, அனைவரும் கடவுளை வழிபட கோவிலுக்கு செல்ல.
ரவி கோபுரத்தின் மேலே இருந்து கீழே இறங்கி வந்தான்..
கோவில் வாசலில் ஏதோ சத்தம் கேட்க..
என்னவென்று வந்து வெளியில் பார்த்தான் ரவி, .
வெங்கட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்திருக்க..
கருப்பு உடை அணிந்து ஒரு 50 பேர் வந்து கோயிலை சூழ்ந்து கொண்டனர்.
“யார் நீங்கள்” என்று கருப்பு முகமூடி அணிந்திருந்தவர்களை ரவி தடுக்க போக..
“இவன் தாண்டா அவன், போட்டோல இருக்கிறது இவன் தான் இவனை அடியுங்கள்” என்று ஒருவன் சொல்ல..
ஊர் மக்களை தள்ளி நிற்க வைத்தவர்கள் ரவியை தாக்க ஆரம்பித்தார்கள்..
ரவி அவர்களை தாக்க சண்டை பெருசானது.
கும்பாபிஷேகத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அனைவரையும் ஏற்கனவே இந்த கருப்பு உடையை அணிந்திருந்தவர்கள், ஒரு அறையில் போலீஸ் காரர்களை கட்டி வைத்திருந்தனர்.
ரவியை தாக்குவதை பார்த்த வெங்கட்டும் ஊர்காரர்களும் சிலர் வர ஊர்காரர்களை பிடித்து தள்ளி விட்டவர்கள்,, கத்தியை காட்டி மிரட்ட..
அங்கே இருந்தது வெங்கட்டும், ரவியும் தான், இருவரும் அவர்களிடம் சண்டை போட ஐம்பது பேர் என்பதால் இருவராலும் சமாளிக்க முடியவில்லை, ஒரு கட்டத்துக்கு மேல்.. இருவரையும் அந்த கருப்பு உடை அணிந்தவர்கள் இவர்களை அசைய வீடாமல் பிடித்து கொள்ள..
சீதாவுக்கு வெளியில் ஏதோ சண்டை சத்தம் கேட்டு கதிரை தூக்கிய படியே சீதாவும், பத்மாவும் வெளியில் வர..
அங்கே ரவியையும், வெங்கட்டையும் கருப்பு முகமூடி அணிந்தவர்கள் பிடித்து வைத்திருக்க..
“ஐயோ” என்ற சீதாவும், பத்மாவும் அவர்களை தடுக்க போக..
சீதாவை பார்த்த ரவி “சீதா வராதே உள்ள போ சீதா வராத உள்ளே போ” என்று கூற.
“ரவி” என்றவள் அவனை நோக்கி வர.
அவளையும் சேர்த்து ஒரு மூன்று பேர் பிடித்துக் கொண்டனர்..
பத்மா வெங்கட்டிடம் செல்ல அவரையும் ஒரு இரண்டு பேர் பிடித்து வைத்துக் கொண்டனர் …
என்ன நடக்கிறது என்று பத்மாவுக்கும் சீத்தாவுக்கும் புரியவில்லை..
வெங்கட்டை அடிக்க வில்லை ஆனால் ரவியை அடி அடி என்று அடித்தனர்.
சீதா கதிரை இடுப்பில் வைத்துக் கொண்டு “டேய் ரவியை அடிக்காத விடுடா விடுடா அவரை ” என்று கத்த..
அவர்களோ மலையாளிகள் சீதா பேசுவது பாதி புரியவில்லை,, அவர்களுக்கு ரவி கால் கையை உடைக்க வேண்டும் இல்லை என்றால் வெட்ட வேண்டும் என்பதே அவர்களுக்கு கொடுக்க பட்ட வேலை.
வெங்கட்டுக்கு மகனை அடிக்கவும் தாங்க முடியவில்லை “டேய் என் மகனே விடுங்கடா” என்று அவரும் கத்த..
பத்மாவும் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தார், “டேய் யாருடா நீங்க என் பிள்ளையை விடுங்கடா” என்று..
யாரும் யாரிடம் செல்ல முடியவில்லை அந்த கருப்பு உடை அணிந்தவர்கள் தனித்தனியே எல்லோரையும் பிடித்து வைத்துக் கொள்ள..
அப்பொழுது தான் ஒருவன் பெரிய அருவாளை எடுத்துக் கொண்டு ரவி அருகில் வர..
பயந்து போனாள் சீதா..
“ஐயோ ரவி” என்று சீதா கத்த …
சீதா கத்தியதை கேட்டவன் “சீதா நீ கத்தாத எனக்கு ஒன்னும் ஆகாது” என்றான்..
ரவியும் தன் பலம் கொண்டு அவர்களை எவ்வளவோ தள்ள முயற்சி பண்ண 10 பேர் சேர்ந்து அவனின் கையையும், கால்களை பிடித்துக் கொள்ள அவனால் அசைய முடியவில்லை..
சீதா அருவாளை பார்த்தவுடன் தன் பலம் கொண்டு மூன்று பேரையும் தள்ளிவிட்டவள் வேகமாக ரவி அருகில் ஓடி வந்தவள்..
அருவாளை வைத்திருப்பவனை பார்த்தவள்,, “என் ரவி மேல கையவச்ச நான் உன்னை சும்மா விட மாட்டேன், கொன்னு போட்டுறுவேன்” என்றவள்..
கதிரை ஓரமாக நிற்க வைத்தவள்,, இவர்களை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க, ஐயோ அப்படி ஒன்று தெரியவில்லை பக்கத்தில் தேங்காய் கடையிருக்க, அவளை பிடிக்க வந்தவர்களை தேங்காய்யை தூக்கி எரிந்தவள், ரவியை பிடித்திருந்தவர்களையும் தேங்காய்யை எடுத்து அவர்கள் மேலே எரிய..
சிலர் கீழே விலவும்,, ரவி அவர்களை தாக்க, இருவரும் சண்டை போட்டனர்.
ஒரு பெண் தேங்காயை அடித்து தன் கணவனை , காப்பாற்றியதை அந்த ஊர் மக்கள் ஆச்சரியமாக பார்க்க,, சீதாவும், ரவியும் பலரை அடித்துக்கொண்டிருக்க.
ஒருவன் சீதாவின் பின்னிருந்து வந்து சீதாவின் முடியை பிடித்து இழுத்து, “ஒரு பொண்ணு நீ, எங்கள அடிக்கிறீயா”?, என்றவன்..
சீதாவை ஓங்கி ஒரு அரை அரைந்தவன், சீதாவை இன்னொருவனை வர சொல்லி இருவரும் பிடித்துக்கொள்ள..
சீதாவை அடிப்பதை பார்த்த ரவி துடித்து போனவன், “சீதா” என்று அவள் அருகில் ரவி வர…
அவனை பின்னிருந்து ஒருவன் கட்டையால் தாக்க,, சீதா என்று கத்திய படியே கீழே விழுந்தான் ரவி..