Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 31 2

மற்றவர்களை நோட்டம் விட்டபடி ‘முடியாது’ என இவள் தலையசைக்க, ‘ப்ச்..வாடி’ அப்படி ஒரு பார்வை பார்த்தான் கிரி.

‘விட மாட்டானே’ என இவளும் அவனருகில் சென்று சேரை இழுத்து போட்டு அமர “தனியா பேசனும்டி” என கிரி குரலே ஒரு மார்க்கமாய் இருக்க

“ஏன் இங்கேயே பேசுங்களேன், தனியா தானே பேசிட்டு இருக்கோம்” இவள் கூற

“இல்லை..” மறுப்பாய் தலையசைத்து “தனியா.. நாம இரண்டு பேரு மட்டும், இருக்கனும். நான் மட்டும் உன்கிட்ட பேசனும்” ஏற்கனவே வசீகரிக்கும் குரல் அவனது. இதில் ஹஸ்கியாக இவன் பேச.. எச்சில் கூட்டி விழுங்கினாள் கமலி.



Advertisement

“கண்டிப்பா முடியாது கிரி கூட்டத்தை பார்த்தீங்கல்ல” இவள் மறுத்திட

“வருவியா.. மாட்டியா!” கிட்டதட்ட இவன் உறுமி, விழிகளாலேயே அவளை தின்று கொண்டிருந்தான் கிரி.

அவன் பார்வையை கண்டு திடுக்கிட்டவள்.. ‘இவன் சரியில்லையே’ என நினைத்து கொண்டு, “நான் போறேன்” என இவள் எழ எத்தனிக்க

Advertisement

“ஏன்!” ஒற்றை புருவம் ஏற்றி கேட்டவனிடத்தில், மரியாதையா உக்காரு.. என்ற மறைமுக ஆணை இருக்க,

Advertisement

“உங்க பார்வை சரியில்லை கிரி” என இவள் கூற

“இல்லை இப்போ தான் ரொம்ப சரியா இருக்கு..” இன்னுமே இவள் பார்த்திட ‘ஸப்பா…’ படுத்துறானே. அவனருகில் அமர முடியாமல் தவித்து போனாள் கமலி.

அந்நேரம் கமலி என்ற சத்தத்தில் இருவருமே திரும்பிட, “இங்க வா..” என அழைத்து கொண்டிருந்தான் கர்ணா,  அவள் எண்ணம் புரிந்தவன் “கமலி.. போகாத முதல்ல.. என்னை சரி பண்ணிட்டு போ..” மிக மிக வித்யாசமாய் வந்தது வார்த்தைகள்.

Advertisement

“வரேண்ணா..” என அமர்ந்திருந்த படியே குரல் கொடுத்தவள், கிரியிடம் திரும்பி “சரிபண்ணனுமா!” என புருவம் உயர்த்தி “ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க.. மறுபடியும் எதையும் இழுத்து வச்சிடீங்களா?” என கையில் இருந்த டிரேயை சேரில் வைத்துவிட்டு, நெற்றி கழுத்து என இவனில் சோதனையை தொடங்கியது இவள் விரல்கள்.

அதற்கே அவனது கண்கள் கிறங்கி முடிக்கொள்ள, ‘என்னடா நடக்குது இங்க’ என பார்த்து வைத்தான் செந்தில். சுபா, மோகன் இருவருக்குமே சிரிப்பு தான்.

அவனை சோதித்தவளோ “டெம்பரேச்சர் கூட நார்மலா தானே இருக்கு!” என கிரியிடம் பேசிக்கொண்டிருந்தவளை “கமலி.. வாயேன் ஒரு நிமிஷம்” கர்ணா அவசரப்படுத்தியதில், “இந்த அண்ணன் வேற!” என  வாய்க்குள் வைதவள், “இருங்க கிரி வந்துடுறேன்” என அவனிடம் விரைந்தாள்.

மடியில் பிரணி, கையில் டீ என அமர்ந்திருந்தவனால், கமலியை பிடித்து வைக்க முடியாமல் போக, கோபத்தில் டீயை டங்கென கீழே வைத்துவிட்டான். ‘சரி்தான்’ என ஒரு லுக் விட்டான் செந்தில்.

ஆனாலும் அன்னமென நடந்து சென்றவளின் மேல் படர்ந்த பார்வை.. கர்ணாவோடு தீவரமாய் பேசிக்கொண்டிருந்த போதும், அவன் ஏவி விட்ட வேலைகளை செய்யும் போதும் கமலியை விட்டு இம்மியும் நகரவில்லை இவன் விழிகள்.

அவனை பார்த்த செந்திலோ “என்னடா இப்படி ஓபனா சைட் அடிக்கிற, நாங்களும் இருக்கோம்டா” என செந்தில் அடிக்குரலில் பேச

“இருந்துட்டு போ.. அதுக்காக என் பொண்டாட்டியை சைட் அடிக்காமல் என்னால இருக்க முடியாது. நீ வேணா கண்ணை மூடிக்கோயேன்” கடுப்போடு இவன் அட்வைஸ் கொடுக்க, அவனில் பழைய கிரியை கண்டான் செந்தில்.

லேசாய் வாய் விட்டு சிரித்தவன் “காதையும் சேர்த்து வேணா மூடிக்கிறோம்” என்றிட, “இல்லை இப்போ அதுக்கு வேலையில்லை” என இவன் சொல்ல ‘அவ்வ..’ என வாயிலேயே செந்தில் அடித்து கொள்ள

 “ம்.. பங்கஷன் முடியற வரை அப்படியே வயை மூடிட்டு இரு” என இன்னுமே அவன் வாயை அடைத்துவிட்டு கமலியை சைட் அடிக்கும் வேலையில் இவன் இறங்கிவிட்டான் கிரி.அ

அதன் பின் மேடையில், உயர்ரக அலங்கார விரிப்பு விரிக்கப்பட்டு, அதில் நடுநாயகமாய் அமர வைக்கப்படனர் பிரபாவும், கர்ணானும். கண்ணாடி வளையல்கள், பழங்கள், சாக்லேட்டுகள் என பதினாறு வகை தாழ்பூலங்கள் அடுக்கி வைக்கபட்டபின் ஆரம்பித்தது வளைகாப்பு விழா.

பிரபா வீட்டு ஆட்கள், கர்ணனின் வீட்டு ஆட்கள் என பெரியவர்கள், நெருங்கிய சொந்தங்கள் என அனைவரும் மேடையில் நின்றிட, கமலியும் உடன் நின்று கொண்டாள்.

முதலில் வேம்பு காப்பை (வேப்பமரத்தின் இலைகளாலும், காம்புகளாலும் செய்யப்பட்ட காப்பு) பிரபாவின் கைளில் அணிவித்து வளைகாப்பை நன்முறையில் துவங்கி வைத்தார் பிரபாவின் பாட்டி மீனாட்சி.

அடுத்து கண்ணாடி வளையலை போட்டு, கூடவே வெள்ளி காப்பையும்   அணிவித்திட, அடுத்து அத்தை முறையில் இருப்பவர்களின் முறையானது, அதன் பிறகு வயதில் பெரியவர்கள், என தொடர்ந்தது.

“அடுத்து வளையல் நீதான் போடனும் கமலி..” என மல்லிகா இவள் காதோரமாய் குனிந்து கூறிட, இவளோ மேடையில் நின்றபடி கிரியை பார்க்க.

இத்தனை நேரமும் நொடியும் தவரவிடாது இவளையே பார்த்து கொண்டிருந்தவன், ‘இப்போ தான் நான் உன் கண்ணுக்கே தெரியுறனா?’ முறைத்து தள்ளி, அவள் தன்னை  தேடுவதை உணர்ந்து, கண்களாலேயே ‘என்னடி’ என்றான்.

‘வெள்ளி வளையல்’ என இவளும் உடல் மொழியிலும், வாயசைப்பிலும் கூறிட,

‘தோ.. வரேன்’ என, மடியில் இருந்த பிரணியை செந்திலின் கையில் கொடுத்துவிட்டு, பேண்ட் பாக்கெட்டில் வந்திருந்த வெள்ளி வளையலை எடுத்து கொண்டு மேடையேறினான்.

வளையலுக்காக இவள் கை நீட்ட, ‘நான் கூப்பிட்டும் நீ வரலை தானே! தனியா சிக்கிடாத’  பற்களுக்கிடையில் பறந்து வந்த பதிலில் இவள் திடுக்கிட்டு இவன் முகம் பார்க்க, ‘நான் சொன்னதெல்லாம் 100 சதவீத உண்மை’ என கூறியபடி அவனின் கூரிய பார்வை அவளை உயிரோடு துளைத்தது.

வளையலை இவளின் கையில் திணித்துவிட்டு இவன் விலக “நீங்களும் நில்லுங்க மாப்பிள்ளை” தன் அருகில் நிறுத்தி கொண்டார் செல்வம்.

கமலியோ கிரி கொடுத்த கவரை பிரித்து, அதிலிருந்த வெள்ளி வளையலை எடுத்து கொண்டு பிரபாவை நெருங்கினாள். வெள்ளி வளையலை போட்டு விட்டு, கூடவே இரண்டு கண்ணாடி வளையல்களையும் சேர்த்து போட்டுவிட்டாள்.

அப்போது, அவளை கவனித்த  மீனாட்சி, மல்லிகாவிடம் திரும்பி.. “பிரபா கூட உன் மகளையும், மருமகனையும், உக்கார வை மல்லிகா” என்ற கணீர் குரலில் மேடை மொத்தமும் மீனாட்சியை பார்க்க

“உம்மவளுக்கும், காலகாலத்தில் சீக்கிரம் நல்லது நடக்கனும்னு ஆசையில்லையா.. இதெல்லாம் நம்பபக்கம் வழக்கம் தானே!.  உம்மவளுக்கு நாங்க சொல்லி தான் செய்யனும்னு அவசியமே இல்லை! நீ தான் சொல்லாமலேயே செய்யனும் மல்லிகா” பாடம் எடுத்தார் மீனாட்சி பாட்டி.

ஏனென்றால் சீமந்தம் நடக்கும் இடத்தில், நெருங்கிய உறவில், திருமணமான புது பெண்ணிற்கும் சேர்த்து சடங்கு செய்தால் சீக்கிரம் குழந்தை தங்கும் என்ற ஐதீகம் அவர்களது வழியில் உண்டு. அதை இப்போது மீனாட்சி கூறிட

அவரை அடுத்து மேடையில் நின்றிருந்த சில பெண்மணிகளும், “கமலி அப்படியே உங்கண்ணி பக்கத்துலேயே உக்காரும்மா” என்றதும், சிறிது நகர்ந்து அமர்ந்த கர்ணன், “தள்ளி வா பிரபா” என அவளையும் நகர செய்து, கமலிக்கு இடவசதி செய்து கொடுத்தான். விழி பிதுங்கி நின்று போனாள் கமலி. மற்ற நேரமாக இருந்தால் கொஞ்சமாச்சும் உதவேன், என கிரியை நாடியிருப்பாளோ என்னவோ.. இந்த விசயத்தில் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை இவளால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!