Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 24 1

சீதா  கல்யாண வைபோகமே..

 அத்தியாயம் – 24



Advertisement

Advertisement

Advertisement

 சீதாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள்..

Advertisement

 உடல் சோர்வு மனசோர்வு, பயந்தது சண்டை போட்டது எல்லாம் சேர்ந்து என்று நீண்ட நேரம் மயக்கத்திலிருந்து கண்விழித்தாள் சீதா…

 அவள் கண் விழித்ததும்  தேடியது ரவியை தான்..

 ரவியை தவிர மற்ற அனைவரும் அங்கே தான் இருந்தனர்.

 கதிர் சீதா பக்கத்திலே அமர்ந்திருக்க மகனை பார்த்தவள்  அவனை வாரி அணைத்து முத்தமிட்டிருந்தவள்.

 “உனக்கு ஒன்னும் ஆகல தானேடா கண்ணா”? என்று  மகன் உடல் முழுதும் தொட்டு பார்க்க..

 “எனக்கு ஒன்னும் இல்ல சீதாம்மா”? என்றான் கதிர்.

 சீதா நிமிர்ந்து பார்க்க  அங்கேதான் வெங்கட்டும், பத்மாவும் இருந்தனர்.. பக்கத்தில் சிரஞ்சீவியும், சிவாவும் இருக்க..

“நீங்க எப்படி இங்கே வந்தீங்க” என்றாள் சீதா. சிரஞ்சீவியையும், சிவாவையும் பார்த்து..

 “பிரபு தான் சொன்னான் உனக்கும், ரவிக்கும் திடிர்னு  கல்யாணம் ஆகிருச்சுன்னு,  அதான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தோம் சீதா.. இங்க வந்து பார்த்தா எல்லாம் தலைகீழா நடந்துகிட்டு இருக்கு..

 நாங்க வந்தது நல்லதா போச்சு ..

ஆமா யார் அந்த கருப்பு டிரஸ் போட்டிருந்தவங்க யாரு அது?”….

 “அவங்க வேற யாரும் இல்ல.. என் மூத்த பிள்ளை ரவி கிருஷ்ணன் அனுப்பி வச்ச ஆளுங்க தான்.அவன் சொல்லித்தான் இவங்க ரவியை கையையும், காலையும்  வெட்ட வந்துருக்காங்க”? என்றார் வெங்கட்.

 “என்ன சார் சொல்றீங்க” என்றார்கள் சிரஞ்சீவி சிவாவும்…

“அவர் அண்ணனே தம்பியை வெட்ட ஆள அனுப்பி விட்டிருக்காரா”?.

 “ஆமாப்பா என் சின்னப் பையன் ரவி போன வாரம் நடந்த  பிரச்சனையில என் பெரிய  பையன் காலை  ஒடச்சான் அதுக்கு பதில் தான், ரவியின் கால், கையையை வெட்ட வந்திருக்காங்க”.. என்றதும்..

 இப்படியும் கூட இருப்பார்களா என்று இருவரும் யோசிக்க.

 பத்மா தான் சீதாவிடம் “இவங்க யாரு”? என்று சிரஞ்சீவியையும் சிவாவையும் பார்த்து கேட்க..

 “இவங்க  இரண்டு பேரும் என்னுடைய பிரண்ட்ஸ்  அத்தை, இவன் சிரஞ்சீவி டைரக்டர் என் கூட படிச்சவன், அவர் சிவா ஹீரோவா படத்துல நடிக்கிறாங்க”.. என்று இருவரையும் அறிமுகம் படுத்தி வைக்க.

 “வணக்கம் பா, ரொம்ப நன்றி,  நீங்க வந்தது ரொம்ப நல்லாத போச்சு” என்று அவர்களிடம் நன்றி சொல்லி விட்டு பேச.

 வெங்கட்டும் இருவருக்கும் நன்றி சொன்னார்..

 சீதாவின் கண்கள் ரவியை தேடியது.. பத்மாவதி அதை  புரிந்துகொண்டு “ரவி இங்கே இல்லை சீதா கேரளா போயிருக்கான்” என்று சொல்ல..

 “அவர் ஏன் அங்க  போயிருக்காரு அத்தை? அவரை கொல்ல  ஆள் அனுப்பி இருக்காங்க , அவங்க இடத்துக்கே” என்று அவள் பயப்பட..

“நீ பயப்படாத சீதா அவன் கையில கன் வச்சிருக்கான் எதுனாலும் அவன் சமாளிச்சுட்டு வருவான் நீ பயப்படாதே” என்று  பத்மா கூறினாலும்..

சீதாவுக்கு பயமாக தான் இருந்தது. இப்பதான் செத்து பொழச்ச  மாதிரி பொழச்சு இருக்கான்  மறுபடியும் கேரளா போயிருக்கானா? இவனை! என்று பல்லை கடித்தாள்.

 சிரஞ்சீவியும் சிவாவும் “உனக்கு ஒன்னு அடி படலியே சீதா” என்று கேட்க.

” நான் நல்லா இருக்கேன் சிரஞ்சீவி” என்றாள்..

 டாக்டர் வந்து  சீதாவை பார்த்துவிட்டு “சீதா இப்போ ஓகே தான் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்று சொல்ல.

 சீதா சிரஞ்சீவி சிவாவையும் பார்த்து  “வீட்டுக்கு வாங்க” என்று அழைக்க.. பத்மாவும் “வாங்க தம்பி எங்க ஊர்ல கும்பாபிஷேகம் நடந்து இருக்கு வந்து ரெண்டு நாள் இருந்து, சாமியை பார்த்துட்டு போங்க”  என்று அழைத்தார்..

 “இல்லம்மா நாங்க சீதாவை பார்க்கத் தான் வந்தோம்  எங்களுக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல சென்னைக்கு பிளைட் நாங்க இப்படியே கிளம்புறோம்” என்று அவர்கள் இருவரும் கிளம்ப..

 நண்பர்களை முறைத்து பார்த்தாள் சீதா.

 “வேலை இருக்கு சீதா உன்னை பார்க்கவே நாங்க ஒரு நாள் லீவு போட்டு தான் வந்தோம்,, உனக்கு குழந்தை பிறக்கட்டும் நாங்க அப்ப வந்து இங்கே இருக்கிறோம், உடம்ப பாத்துக்கோ  சீதா” என்றவர்கள்.. பத்மாவை பார்த்து,”எங்க பிரண்டை பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர் “

 வெங்கட்டு போலீஸ் டேஷன் வரை செல்கிறேன்  என்று  சென்றுவிட பத்மா, சீதா, கதிர் மூன்று பேரும்   வீட்டுக்கு வந்தனர்…

 நாகம்மாள்  மூன்று பேரையும் பார்த்து அழுதே விட்டார்.. “என் பேரன் எங்கடி”? என்று பத்மாவிடம் கேட்க..

அவன்  “கேரளா போயிருக்கான் அத்தை” என்றார் பத்மா..

 “அவனை எதுக்கு தனியா விட்ட” என்றதும்..

 “அவன் கோபத்துல போனான் அத்தை என்ன பண்ணுவான்னு தெரியல”?…

 சீதாவையும் கதிரையையும் தொட்டுப் பார்த்தவர்,, “முதலில் இவங்க இரண்டு பேருக்கும் சுத்திப்போடு” என்றவர்..பேரனை நினைத்து புழம்பிக் கொண்டே இருக்க ..

 சீதாவுக்கு முழுவதும்  ரவியின் நினைவு தான் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ,  ஏன் அங்கே சென்றான் அவன், என்று  யோசித்த படிய அவள் அறைக்கு சென்று படுத்துக் கொள்ள.

 அங்கே கேரளாவில் உள்ள அண்ணன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் ரவி வெறியோடு…

 தன்மேல்  கை வைத்திருந்தாலும் அமைதியாக இருந்திருப்பான் சீதாவின்  மேலும், கதிரின் மேலும் கை வைத்திருக்க, கிருஷ்ணனை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்..

 சரியாக அவர்கள்   வீட்டுக்குள் ரவி நுழைய..

 சத்தியமாக கிருஷ்ணன் மனைவி இதை எதிர்பார்க்கவில்லை. அவன் தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு வேகமாக கேரளா வருவான் என்று அவள் நினைக்க வில்லை  அதிர்ச்சியாக  அவனை பார்க்க..

 அவன் வந்த வேகத்தில் தன் கையில் துப்பாக்கி எடுத்து அவன் அண்ணியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான்..

 கிருஷ்ணன் மனைவி பயந்து நடுங்க “ஒரே ஒரு அழுத்து தான், அழுத்துனேன்  பொட்டுன்னு போயிடுவ” என்றான்..

 அவளோ “வேண்டாம் ரவி என்னை விட்டுவிடு என்னை விட்டுவிடு” என்று நடுங்க..

 “இவ்வளவு பயம் இருக்குல எதுக்கு என்னை அடிக்க ஆள அனுப்பி வச்சீங்க, என்ன அடிச்சாலும் பரவால்ல என் குடும்பத்தின் மேல் கை வைக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?”..

 என்று கத்திய ரவியின்  தோற்றத்தை பார்த்து பயந்து கிருஷ்ணனின் மனைவி பயந்து போய் நடுங்கிக்கொண்டிருக்க.

கிருஷ்ணன் பிள்ளைகள் வந்து ரவியிடன் “சித்தப்பா அம்மாவை விடுங்க ” என்று அழுக.

, “இந்தப் பிள்ளைகளுக்காக உன்னையும் உன் புருஷனையும் விடுறேன் இல்லனா வந்த கோபத்தில் இரண்டு பேரையும் ஒரே அழுத்து  தான் ரெண்டு பேரும் பரலோகம் போயிருப்பீங்க..

 எதுக்கு உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை,..பணம் பணம் இருந்தா போதுமா? உங்களுக்கு எல்லாமே பணம்  குடுத்துருமா, உங்களுக்கு பணம் தானே தேவை” என்றவன், தன் பிஏவை அழைக்க அவனோ ஒரு மூடை பணத்தை கட்டி எடுத்து வந்திருந்தான்.

 கிருஷ்ணனின் மனைவியின் முன் அந்த மூடையில் உள்ள பணத்தை கொட்டியவன் “இதை எடுத்துக்கோ  உன் புருஷன், என்  அண்ணனுக்கு இதில்  சமாதிக்கட்டி  படுக்க வைத்துக்கொள்” என்றான் கோபமாக…

    கிருஷ்ணனின் மனைவி அதிர்ச்சியாகி ரவியை  பார்க்க..

“இந்த  பணத்துக்காக தானே இதையெல்லாம் பண்ணுறீங்க இதோ இங்கே  நீங்க கேட்டதுக்கு மேலே பணம் இருக்கு,  இனிமே என்  குடும்பத்து மேல உங்க காத்து கூட படக்கூடாது இனிமே உங்களை நான் பார்த்தேன் அவ்வளவுதான் சும்மா இருக்க மாட்டேன் “.

 வந்த வேகத்தில் கிளம்பி இருந்தான் ரவி.. மனதில் அத்தனை  வேதனை. சீதாவுக்கு  கதிரும் ஏதாவது நேர்ந்திருந்தால் என்  வாழ்க்கையே இல்லாமல் போயிருக்குமே? பணத்துக்காகவா இவ்வளவும் செய்தார்கள் தன் அண்ணனும், அண்ணியும் என்றவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை..

 சீதாவின் கதறலும் துடிப்பபையும் உணர்ந்தவனுக்கு  இப்போதும்  உடல் நடுங்கியது,, சீதா ரவி, ரவி என்று சொல்லிய அத்தனை சொல்லும் அவன் ஆள் மனதில் அப்படியே இருக்க..

 உனக்கு என்னை  அவ்வளவு பிடிக்குமாடி நான் உனக்கு வேண்டுமாடி, அப்புறம் ஏன்டி வெறுப்பை என் மேலே காட்டுற..

 உன் காதலுக்கு நான் தகுதியானவனே இல்ல சீதா..

 உன்னை என்னால்  பேஸ் பண்ண  முடியலையே..

 என் மேல ஏண்டி இவ்வளவு பாசம் வச்ச..

 கதிருக்காக உன் உயிரை கொடுக்கத் துணிந்து விட்டாயா  சீதா.என் குடும்பத்து மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கியே சீதா.

 இந்த அன்புக்கு நான் என்ன செய்வேன் சீதா..

 எனக்கு கொஞ்சம் டைம் கொடுடா உன்னவனாக நான் மாற.. என்று மனதில் சீதாவை புலம்பிய படியே இருந்தான்.

 சீதாவை அவனுக்கு பிடிக்கும் ஆனால் சீதாவின் கதலறை கேட்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!