பத்மாவுக்கு பேரனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைதான்.
சீதா ஏதாவது நினைத்து விடுவாளோ என்று சீதாவை பார்க்க அவளும் தலையை ஆட்டி ” பேரு வைங்க அத்தை” என்றாள்.
Advertisement
பத்மா பேரன் காதில் “விஷால் கிருஷ்ணா, விஷால் கிருஷ்ணா” என்று பெயர் கூற.
அனைவரும் நல்லா இருக்கு பேர் என்று கூறினார்கள்.
Advertisement
Advertisement
சீதாவுக்கு , ரவிக்கும் மகனை “விஷால் கிருஷ்ணா”, என்று மூன்று முறை காதில் சொல்லி பிள்ளைகளோடு சேர்ந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
மூன்று வருடம் கழித்து, ரவி தனது பிள்ளைகளின் மூன்றாவது பிறந்த நாளை தனது புது ஷிப்பில் வைத்து கொண்டாட ஏற்பாடு பண்ணி இருந்தான்.
Advertisement
அவன் அந்த ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து விட்டு வர.
சீதா தன் பிள்ளைகளை ரெடி பண்ணி
பத்மாவிடம் கொடுத்தவள், அவள் குளித்து வந்து உடையை எடுத்துக்கொண்டிருக்க,
ரவி அதிரடியாக அறை உள்ளே நுழைந்தான்,, சீதா அவனை பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே நிற்க.
அவளின் கோலத்தை பார்த்து சிரித்தவன், உல்லாசமாக விசில் அடித்துக்கொண்டே சீதா அருகில் வந்தான்,
சீதா ரவியை பார்த்து “ரவி, நோ நான் குளிச்சிட்டேன்”, என்று கூற.
“என்னோடு மறுபடியும் குளிபேபி” என்றவன்.
அவளை அள்ளிக்கொண்டு சும்மிங் பூலில் குதித்தான்.
சீதா எவ்வளவு மறுத்தும், சில பல ஜல பல ஜங்கை சும்மிங் பூலிலே வைத்து முடித்தே அவளை விட்டாள்..
சீதா முறைத்த படியே பிறந்த நாள் பார்ட்டிக்கு ரெடியாக.
“என்னடி முறைப்பு”, என்றான்.
“இல்ல கேப்பு கிடைக்குற நேரத்துல எல்லாம் கெட வெட்டுறீங்களே அதான் பார்த்தேன்”.
“உன் மூனு பசங்களும் உன்னை விடுறதே பெருசு, நீ தனியா சிக்குன ஐயோவுக்கு ஜாலிதான்” என்று சீதாவிடம் சரசம் பேசிக்கொண்டே பிறந்த நாள் விழா நடக்கும் ஹாலிற்க்கு அழைத்து சென்றான்.
சிவப்பு வண்ண உடையில் ரெடியாகி இருந்த தன் ரெட்டை பிள்ளைகள் இரண்டையும் தன் கையில் அள்ளிக்கொண்டான் ரவி.
பிள்ளைகள் இரண்டு “டாடி, டாடி” என்று அவன் கன்னத்தை நிறைக்க.
அவனும் ஆசை திர முத்தமிட்டிருந்தான்.
“டாடி டைம் ஆச்சு கேக் வெட்டுங்க” என்று கதிர் கூற.
பிள்ளைகளை சீதாவிடம் கொடுத்தவன் கதிரையும் அணைத்து முத்தமிட. பிள்ளைகளின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாகம்மாள் பாட்டி இறந்து ஒரு வருடமாகியிருந்தது..
மூன்று மாதம் கழித்து ரவியின் குல தெய்வம் பஞ்சமா தேவி கோவிலில் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் மொட்டை அடிக்க ஏற்பாடு பண்ணியிருந்தான் ரவி.
பிரபு மடியில் ஒரு பிள்ளையும், சிரஞ்சீவி மடியில் இன்னொரு பிள்ளையையும் வைத்து, மொட்டை அடித்து காது குத்தினார்கள்.
அனைவரும் சந்தோஷமாக இருக்க.
சீதா ஏனோ சோர்வாக இருந்தாள்.
அதை பார்த்த கதிர் சீதாவுக்கு குடிக்க சூஸ் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி கொண்டு சீதா பருக.
கதிரை போலவே, பிரபுவும், சிரஞ்சீவி, சிவாவும் கூட சீதாவுக்கு குடிக்க பழச்சாறு எடுத்து கொண்டு சீதா அருகில் வர..
தான் சோர்வாக இருப்பதை பார்த்து தான் இவர்கள் தனக்கு பழச்சாறை கொண்டு வருகிறார்கள் என்ற சீதாவிற்க்கு இவர்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போனவள்.
எல்லா பழச்சாற்றையும் வாங்கி குடித்து முடித்தவளுக்கு அவ்வளவு திருப்பி, அனைவரையும் சாப்பிட போங்க என்று சீதா அனுப்பி வைக்க.
ரவி சீதாவை முறைத்த படியே கையில் பழச்சாற்றை எடுத்துக்கொண்டு வந்தான்.
சீதா ரவியை பார்த்து சிரித்திருந்தாள்.
“எனக்கு தெரியாது நீ குடிச்சே ஆகனும்” என்றான்.. முடியாது சாமி, முடியாது உங்க பாசத்தை இப்படி சூஸ்லயை காட்டு வீங்க எல்லோரும்” என்று.
சீதா ரவியை பார்த்து வாய்விட்டு சிரிக்க.
“என் பொலப்பா பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா” என்று ரவி கேட்க.
சிரஞ்சீவிக்கும் , சிவாவுக்கும் சீதாவை எண்ணி எந்த கவலையும் இல்லை சீதா நிறைவாக வாழ்வதை பார்த்து சந்தோஷ பட்டனர்.
சீதா பிரபுவுக்கு ரவியின் சொந்தத்தில் ஒரு பொண்ணை பார்த்து தம்பி திருமணத்திற்கு அவனிடம் பேச,.
அவனோ “நான் ரவி மச்சான் கிட்ட சொல்லிட்டேன் கேட்டுக்கோ” என்று சென்னை கிளம்பினான்,
சீதா பிரபுக்கு ஒரு பெரிய ஹாஸ்பிடல் கட்டி கொடுத்திருந்தாள், அங்கே தான் பிரபு இருக்கிறான்.
இரவு பிள்ளைகளை பத்மா அறையில் தூங்க வைத்து விட்டு சீதா ரவிக்காக அவர்கள் அறையில் காத்திருக்க.
மொட்டை அடித்து முடித்து அனைவரும் கிளம்ப. அனைத்து வேலைகளை முடித்துவிட்டு.. இரவு குளித்து விட்டு மனைவி அருகில் வந்தான் ரவி ..
“எங்கடி பிள்ளைங்க” என்று கேட்க.
“அத்த ரூம்புல இருக்காங்க”, என்றாள்..
“ஓ இன்னைக்கு ஜல பொல ஜங்கா” என்றான் ரவி..
“வாயில போடு ஏற்கனவே பர்த்டே பார்ட்டிக்கு முன்னாடி ஜல போல ஜங்கை சும்மிங் பூலில் பண்ணித்தான் இப்போ என் வயிறு வீங்கி போய் இருக்கு” என்றாள்.
“ஏய் சீதா சொல்லவே இல்லை எத்தனை மாசம்” என்றான்..
“மூனு” என்றாள் சீதா..
“ஏன்டி முதல்லே சொல்லல்ல”..
” எனக்கு தெரியாது ரவி, கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் கன்பாம் பண்ணேன்” என்றவளை.. இறுக்கமாக அணைத்திருந்தான் ரவி..
சீதா அவனின் அணைப்பில் கட்டுன்டவள்,,..
“உனக்கு சந்தோசமா ரவி” என்றாள்.
சீதாவின் இதழோடு, தன் இதழை மெல்ல ஒட்டி எடுத்தவன், அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தான்..
“பாவா” என்றிருந்தாள் சீதா.
“ஏய் சீதா” என்றவன் அவளை அள்ளி மடியில் போட்டு கொள்ள..
“இன்னொரு தடவை சொல்லு டி,” என்று அவளை கெஞ்ச.
“பாவா, பாவா” என்று அவனை அழைத்து அவனை ஒரு வழி பண்ணி இருந்தாள் சீதா.
சிறு கூடலுக்கு பின் சீதாவின் தலைகோதியவன்.
கஷ்டமா இருக்கா என்றான்.
இல்லை என்ற சீதா ரவியின் மார்பில் படுத்துக்கொண்டு,..
“நீ சந்தோஷமா இருக்கீயா ரவி” என்றாள்.
“அதை என் வாயில் சொல்லனுமா, இல்லை செயலில் காட்டனுமா,” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து கொள்ள.
“வாயில் சொல்லு ரவி” என்றாள்.
“வாழ்க்கையை வாழ தெரியாம தப்பா வாழ்ந்துட்டு இருந்தேன் சீதா, யாரு மேலையோ உள்ள கோபத்தால தப்பா வாழ்ந்தவனை திருத்தி, அழகான குடும்பத்தை உருவாகி கொடுத்திருக்க மை ஸ்விட் பொண்டாட்டி சீதா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவன்..
“நீ சொல்லு நீ சந்தோஷமா இருக்கீயா சீதா” என்றான்.
“அதை வாயால் சொல்லவா, இல்ல செயலிலும் காட்டாலாமா” என்று அவனை போலவே இவள் கேட்க.
அவனை முத்தம் மழையில் நனைத்தவள் “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ரவி” என்றாள்.
“சொர்க்கம், நான் வாழுகிற வாழ்க்கையை சொர்க்கம் மாதிரி மாத்தி கொடுத்திருக்க ரவி.. அப்பா அம்மா இல்லன்னு எவ்வளவோ வருத்தப்பட்டிருக்கேன் ரவி.
இப்போ அப்பா, அம்மாவுக்கு மேல பாத்துகிற, அத்தை மாமா, எனக்கு எதுவுன்னா துடிக்குற நீ, என்னை பாத்துகிற என் கதிர், நான் கொஞ்சி விளையாட நம்ம பிள்ளைகள், அப்பறம் என்னுடைய நண்பர்கள், என் ஆசை தம்பி, என் தோழி அழகுமலர், என்னை சுத்தி, எனக்கு அன்பை கொடுக்க இத்தனை பேர் இருக்கீங்க.
அப்போ நான் வாழும் வாழ்க்கை சொர்க்கம், தானே ரவி.அப்புறம் எனக்காக ஒரு கல்லூரி கட்டி என்னை பார்த்துக்கு சொல்லி இருக்கீங்க, என் கனவு எல்லாம் நடந்துருச்சு, இன்னும் ஒன்னே ஒன்னு தான்..
தம்பி கல்யாணம் முடிஞ்சா, சூப்பரா இருக்கும்” என்றாள்..
“அப்பறம் சொல்ல மறந்துட்டேன் ரவி.
கல்யாணம் பத்தி பிரபு கிட்ட பேசனா, அவன் உங்க கிட்ட பேச சொல்லுறான் என்ன விசயம்” என்றால் சீதா.
“ஒன்னும் இல்ல சீதா உன் தம்பி நாலு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்”.
“என்ன நாலு வருசாமா? அதை என்கிட்ட சொல்லவேண்டியது தானே”.
“உன் தம்பி லவ் பண்ணுறது, ஒரு பாரின் பொண்ணா”..
“என்னது வெள்ளகாரியா, ஏன் அவனுக்கு தமிழ் நாட்டுல பொண்ணே கிடைக்கலியா” என்றவள், கோபப்பட்டு தம்பிக்கு போனில் அழைக்க போக.
அதைதடுத்த ரவி, “அவன் நீ ஒத்தக்க மாட்டேன்னு ரொம்ப பயப்படுறான் சீதா, நீ தானே அவனுக்கு எல்லாம், கோபப்படாத நிதானமா யோசி, நமக்கு பிரபு சந்தோஷம் தான் முக்கியம்”, என்று சீதாவுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தான் ரவி..
சீதா கணவன் சொல்லியதை கேட்டு தம்பி காதலுக்கு பச்சை கொடி காட்டி விட.
சீதாவை காதலாகஅணைத்து கொண்டான் ரவி.
இந்த தீர காதல் ஒருவனை எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றி நல்வழி படுத்தும் அதே போலதான் ரவியின் வாழ்க்கையும், அவன் இஷ்டபடி அவன் வாழ்ந்து கொண்டிருக்க.
அவனின் வாழ்க்கையை நல்வழிபடுத்தி அவனுக்கு ஒரு அழகான குடும்பத்தை உருவாக்கி கொடுத்திருந்தாள் சீதா.
எப்படி பட்டவனையும் நல்வழி படுத்த ஒரு உண்மையான காரணம் போதும், ரவிவின் மாற்றத்திற்க்கு சீதா தான் காரணம்.
அவளின் நேர்மை, எந்த சூழ்நிலையிலும், ரவியின் பணத்தை பார்த்து ஆசைப்படாத அவளின் தூய்மையான அன்பு தான் காரணம்..
சீதாவிற்கு ரவியோடு கல்யாணம் வைபோகமாக நடக்கவில்லை, ஆனால் அவள் வாழ்வே வைபவமாக மாற்றியிருந்தான் ரவி,, சீதாவுக்காக ரவி ராமனாக மாறினான் அங்கே சீதா கல்யாணம் வைபோகமானது..
நிரந்தரம் இல்லா வாழ்வில், அனைவரிடமும் அன்பாய் இருப்போம், போகும் போது எதுவும் எடுத்து செல்ல போவதில்லை, அனைவரிடம் அன்பினை விதையை விதைத்து செல்வோம்…
அன்பு பெரிய மரமாக நாடெங்கும் வளரட்டும்… அன்பே சிவம்…