அவளுக்கு வேதனையாகி போனது, தன்னை ஆசைபட்டு கல்யாணம் பண்ணிக்கொண்டான் ரிஷி என்று நினைத்தவளுக்கு, நிச்சய தார்த்தம் அன்றே தெரிந்து விட்டது அவள் மொழி என்று நினைத்து தான் தன்னை திருமண செய்கிறான் என்று.
மொழி அவள் பக்கத்தில் இருந்தாள், தங்கையை ரிஷிக்கு கண்டிப்பாக மணமுடித்து வைத்திருப்பாள், அவளோ சரியாக பிளான் போட்டு ரிஷி வருமுன் கிளம்பி விட்டாளே அவளை என்ன செய்ய.
Advertisement
விதி இவர்கள் மூன்று பேரின் வாழ்க்கையில் இப்படி விளையாடி விட்டாதே,..
Advertisement
இருவருக்கும் புரிந்து விட்டது, யார் மேலும் தப்பு இல்லை,..
Advertisement
ஆனால் ரிஷியால் அப்படி இருக்க முடியவில்லை மொழி மீது பயங்கர கோபத்தில் இருந்தான், தன்னை விட்டு கொடுத்து விட்டாளே, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே, நான் அவளுக்கு வேண்டாமா, ஏன்டி இப்படி பண்ண..
Advertisement
நீ தான்டி என் மனசு பூர இருக்குற.
உன் அக்காவை என்று சொல்ல வாய் வரவில்லை, தன் முன் அழுது கொண்டிருந்தா அருள் ஜோதியை பார்த்தவன்,, “போய் தூங்கு” என்றான்.
அவளோ அவனை பார்த்த படியே நிற்க.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு, தூங்கு போ” . என்றான்.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக சென்று படுத்துவிட்டாள் கண்ணீல் இருந்து கண்ணீர் வழிந்தது..
ரிஷிக்கு மொழியை மறக்க முடியவில்லை அவனின் அங்கமாகி போனவளை, விட்டு அவளின் அக்காவிடம் காதலை சொல்லி தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தியவனுக்கு.
அந்த இடத்தில் இருக்கவே பிடிக்க வில்லை..
அருள் ஜோதி தூங்கியதும் கிளம்பிவிட்டான் குஜராத்திற்கு.
அவனால அருள்ஜோதியோடு வாழ முடியவில்லை, மனதில் மொழியை வைத்துக்கொண்டு அருள் ஜோதியை அருகில் சொல்ல, அவனால முடியவில்லை, அவளோடு ஒரு வாரம் குடும்பம் நடத்தி விட்டு, வந்த அவனை அவனே வெறுத்தான்.
அவனுக்கு குழப்பம் ஏமாற்றம்..
மொழிமீது கோபம், அவன் மீதே அவனுக்கு அதிக கோபம்.
காதலித்தவளை கூட அடையாளம் தெரியாத முட்டாளா நீ.. என்று..
காலையில் எழுந்த அருள்ஜோதி ரிஷியை தேடினாள்.
அவன் அந்த அறையில் இருப்பது போல் தெரியவில்லை…
எழுந்து குளித்து கீழே சென்றாள் அருள்ஜோதி
மருமகளை பார்த்த சுதா, “வா அருள், அவன் குஜராத்துக்கு ஒரு கான்ட்ராக்ட் விசயமா போயிருக்கான் மா, அத முடிச்சிட்டு வருவான், நீ நல்லா தூங்கிட்டு இருந்தீயாம், என்கிட்ட சொல்லி போயிட்டான்” என்றவர்.
மருமகளை அழைத்து உணவு பறிமாற..
அமைதியாக உண்டாள் அருள் ஜோதி.
மனது பாரமாக இருந்தது ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாமே என்று,.
நாட்கள் அதன் போக்கில் சொல்ல.
ஒரு மாதமாகி இருந்தது,..
தேவகி அருள் மொழியை திட்டிக்கொண்டே இருந்தார், இப்படி வெளிநாட்டுல போய் தனியா இருக்காளே என்று சின்ன மகளை திட்டி தீர்த்தார், நல்லா வேலையை விட்டுட்டு இப்படி ஆம்புளை பையன் மாதிரி கிரிக்கெட் விளையாட சென்ற மகளை எண்ணி புலம்பிய படியே இருந்தார்…
அவள் கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு எப்பவுமே பிடிக்காது.
அவர்களுக்கு தெரியாமல் தான் இவள் சென்று கொண்டிருந்தால் கோச்சிங் கிளாஸ்க்கு..
ஐயப்பனுக்கும், தேவகிக்கும் எப்பொழுதும் மகள் கிரிக்கெட் ஆடுவது பிடிக்காது.
அவளுக்கு ஃபுல் சப்போர்ட் அருள்ஜோதியும், குகனும்..
அவள் பிளஸ் டூ படிக்கும் வரை உள்ளூரில் விளையாடிக் கொண்டிருந்தவள், காலேஜ் சேர்ந்தவுடன் சென்னையில் உள்ள பெரிய கிரிக்கெட் டீமில் சேர்ந்து விட்டாள்.
அவளுக்கு படிப்பு பெரியதாக இருந்தாலும் கிரிக்கெட் அதை விட பெரியது, கிரிக்கெட் தான் லட்சியம் என்று வாழ்பவள்..
நாள் பூராவும் விளையாடச் சொன்னாலும், விளையாடுவாள் ஏனென்றால் கிரிக்கெட் மீது பைத்தியம் என்றும் கூறலாம்..
அவள் இன்ஜினியரிங் படித்து முடித்து, வேலை பார்த்துக்கொண்டே காலை, மாலை என்று கோச்சிங் செல்ல..
போட்டி நாள்களில் லீவோ, இல்லை வோர்க் பிரம் ஹோம் செய்து கொண்டு வேலை பார்த்தாள்,.
இந்தியன் டீம்மில் இவள் செலக்டாகி விட.. வேலையை விட்டு விட்டாள்.
தேவகி ஆடி தீர்த்து விட்டார்.
உனக்கு எதுக்கு இந்த வேலை, இதெல்லாம் பர்முனட்டு கிடையாது, நீ இரண்டு மேச் சரியா ஆடலன்னா உன்னை கிரிக்கெட்ல இருந்து தூக்கிருவாங்க, அப்பறம் என்ன செய்வா நீ, இருக்குற வேலையை பாரு, அருள் ஜோதிக்கு கல்யாணம் பண்ணிட்டு, உனக்கு நல்ல பையனா பார்க்குறேன் என்று மகளிடம் பேச.
அருள் மொழி எதுவும் பேச மாட்டாள் அமைதியாக இருந்தே சாதிப்பாள்…
அவள் வெளியூரில் மேச் ஆடிக்கொண்டிருக்க திடிர்னு என்று போன் அக்காவுக்கு கல்யாணம் சீக்கிரம் கிளம்பி வா என்று,,.
அருள்மொழி தன் கூட பிறந்த உடன் பிறப்பு கல்யாணம் என்று சந்தோஷமாக ஊர் வந்து சேர்ந்தாள்.
மாப்பிள்ளை யாரு என்று தாயிடம் கேட்க.
“நம்ம செல்லம்மா பாட்டி பேரன் டி,” என்று சொல்லவும் அதிர்ச்சியானவள்.
தன்னவனா?, என்று குழம்பியவள்…
மீண்டும் பல கேள்விகள், மாப்பிள்ளை வீடு எப்படி வந்தாங்க, என்ன கேட்டாங்க என்று தேவகியிடம் கேட்க.
நாங்களும் அந்த பையன பத்தி விசாரிச்சோம், அந்த பையன் நல்ல மாதிரி தான் தெரிஞ்சது, உங்க அக்கா கிட்ட கேட்டோம், அவளும் சரியின்னு சொன்னா, பெரிய குடும்பம் அவங்களா வந்து கேட்டதும் சரியின்னு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டோம்’ என்று சொல்ல.
மொழிக்கு தன் தவறு புரிந்தது, ரிஷியிடம் தன் பெயரை அருள் என்று சொன்னது தவறு தன் முழுபெயரையும் சொல்லாமல் விட்டது தப்பு என்று தோன்ற..
இந்த கல்யாணத்தை எப்படி நிப்பாட்ட, என்று யோசித்தவள், அக்காவிடம் சொல்லி புரிய வைக்கலாம், அவள் புரிந்து கொள்வாள், என்று அருள் ஜோதியிடம் மொழி பேச வர..
அவனோ ரிஷியை நினைத்து கல்யாணம் கனவோடு இருக்க.
மொழி ரிஷியை பத்தி பேசியதும், அவனுக்காக தான் இந்த இரண்டு வருடமும் வந்த வரனை எல்லாம் பிடிக்க வில்லை என்று சொல்லியதை சொன்னவள்.
ரிஷியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மொழி என்றவன், அவன் வாங்கி தந்த வளையலை தங்கையிடம் காண்பித்து இது ரிஷி எனக்கு வாங்கி கொடுத்தது, எனக்காக காத்திரு என்று சொன்னாரு மொழி, அதே மாதிரி வந்துட்டாரு என் ரிஷி, என்று கண்கள் மின்ன, சொன்னவளிடம் என்ன சொல்ல..
அமைதியாக வந்து விட்டாள்.
ரிஷி ஏன் ஜோவிற்க்கு வளையல் வாங்கி தர வேண்டும், எனக்கும் அவளுக்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை அவனுக்கு,..
இனி பேசி ஒரு பிரோஜனம் இல்லை என்று தோன்ற அமைதியாக இருந்தாள்.
கல்யாணத்தில் தன்னை பார்த்தாள், ரிஷி என்னை கண்டுபிடித்து விடுவானே என்ன செய்ய என்று அருள் மொழி யோசிக்க. சரியாக வந்தது அந்த ஈமெயில்.
நீங்க இந்தியன் வோல்டு கப் மேச்சில் 14 வது ஆளாக செலக்ட் ஆகியிருக்கீங்க என்று,.
உடனே முடிவு பண்ணி விட்டாள், ரிஷி வரும் போது நான் இங்கே இருக்க கூடாது என்று,. கல்யாண வேலைகளை அனைத்தையை பார்த்து, தன் உடன் பிறப்புகளிடம் மட்டும், மேச் விளையாடு போகிறேன் என்று சொல்ல, அவர்களுக்கு மொழியை நினைத்து சந்தோஷம்,..
கல்யாணம் முடிந்தவுடன் போ என்று சொன்னார்கள், சரி, சரி என்று சொன்னவள்..
ரிஷி வரும் முன் கிளம்பி விட்டாள்.
போகும் வழியில் அவனை டீகடையால் பார்ப்பேன் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை,..
தற்செயலாக பஸ் பைபாசில் உள்ள டீகடை நிற்க.
ரிஷி தன் நண்பர்களோடு டீ அருந்துவதை பார்த்த மொழி, கீழே இறங்கி பக்கத்தில் உள்ள ஒரு பொக்கே சாப்பில் ஒரு பூங்கொத்தை வாங்கி, சாரி வாழ்த்துக்கள் என்று எழுதி, ஒரு சின்ன பெண்ணிடம் அதை ரிஷியிடம் தருமாறு சொல்லி விட்டு பஸ்சில் ஏறிவிட்டாள்..
ரிஷி பொக்கே கொடுத்தது யார் என்று தேடுவதையும், பார்த்தவள், அவனை கடைசியாக தன் கண்ணீல் புகைப்படமாக எடுத்து, அதை தன் மனதில் பத்திரமா வைத்து, கனத்த மனதுடன் சென்றாள்.