அருள் ஜோதி ரிஷிக்கு போன் போட்டால் அவன் எடுப்பதில்லை,,,. அவள் அனுப்பிய எந்த மெஜேஸ்சையும் அவன் பார்க்கவும் இல்லை..
கணவனுக்கு போனில் அழைத்து, அழைத்து ஓய்ந்து போனவள்..
போனை உபயோகிப்பதே இல்லை அவள் இப்போது,..
சுதாவும் மகனுக்கு அழைக்க, அவன் யாருடைய அழைப்பையும் ஏற்க வில்லை..
அவனை, அவனே தண்டிப்பது போல, அனைவரிடமும் பேசவில்லை..
ராமமூர்த்திக்கு மகனின் போக்கு பிடிக்க வில்லை, நேராக குஜராத்திற்க்கு சென்றவர்.. “நீ பண்ணுறது சரியில்லடா.
ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அம்போன்னு அங்க விட்டுட்டு இங்க வந்துட்ட, ஒரு போன் கூட பேச மாட்டேங்குற? என்ன நெனச்சிட்டு இருக்குறா, உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா? பிரச்சனையா? சொல்லு பேசி தீர்க்கலாம்” என்று கேட்க…
“சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை” என்று ரிஷி கூறினான்.
“அப்பறம் போன் பேசுறதுக்கு என்னடா, பிரச்சனை உனக்கு? மருமகமுகத்தை பார்க்கவே முடியலடா, பாவம்டா அந்த பொண்ணூ.. நீ ஒரு தடவை வீட்டுக்கு வந்துட்டு போ, இல்ல போனாவது பேசு, இல்லை இங்க கூட்டிட்டு வந்துடு” என்று ராமமூர்த்தி சொல்ல..
“வீட்டுக்கு வர பார்க்குறேன்” என்றான்….
“சரி” என்று ராமமூர்த்தி சென்னை கிளம்பி விட….
வீடு வந்த சேர்த்த, ராமமூர்த்தியின் முகத்தையே ஏக்கமாக பார்த்தாள் அருள் ஜோதி..
மருமகள் தன் முகத்தை பார்க்கவும், “அவன் வந்து விடுவான் மா, வர்ரேன்னு சொல்லி இருக்கான்” என்று மாமனார் கூறியது சந்தோஷமானவள், சுதாவை அணைத்துக்கொண்டு,.
“அவர் வந்து விடுவார் தானே அத்தை”?. என்றாள்.
” வருவான் டா, ” என்றார் அவரும்.
ஒரு வாரம் ஆனது, ரிஷி வந்த பாடில்லை, பத்து நாளானது, அருள்ஜோதிக்கு அழுகையாக வந்தது, அவன் தன்னை வெறுத்து விட்டானா? நான் என்ன பண்ணேன், அவர் என்னை பார்த்து சிரித்தார், பேசினார், காத்திருக்க சொன்னார், காத்திருந்தேன் என்னை கல்யாணம் செய்துக்கொண்டு, ஒரு வாரம் வாழ்ந்து விட்டு, என்னை விட்டு செல்ல எப்படி அவருக்கு மனம் வந்ததது,
நான் அவ்வளவு தானா? , அவருக்கு மொழியை தான் பிடிக்குமோ, என்னை பிடிக்க வில்லையா? அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணார் என்று அவளுக்குள் அவளே பேசி, அவள் மனதோடு சண்டை போட்டு, சரியாகவே சாப்பிடவில்லை, நன்றாக தூங்கவும் இல்லை, சுதா எவ்வளவு கண்டித்தும்.
அவள் ரிஷியின் நினைவிலே இருக்க.
சுதாவுக்கு மருமகளை பார்க்க முடியவில்லை, அவள் முகம் கலையிழந்து போயிருந்தது…
மகனை போனில் அழைக்க, அவன் போனை எடுத்தால் தானே,..
அவருக்கு வந்த கோபத்தில் மருமகளை பார்த்து திட்டி விட்டார்.
“என்னடி உங்களுக்குள்ள பிரச்சனை, சொன்னா தானே தெரியும். ஏதோ பிரச்சனை உங்க ரெண்டு பேர் குள்ள இருக்கு, இல்லன்னா அவன் உன்னை விட்டு இருக்க மாட்டான், சொல்லு அருள்” என்று மருமகளிடம் கேட்க.
அவளோ இவ்வளவு நாள், தாய்யை விட அன்பாக பார்த்துக்கொண்ட மாமியார் என்ன பிரச்சனை என்று கோபமாக கேட்டதும், ஏங்கி, ஏங்கி அழுதவள், மயங்கி சரியா..
ஹாஸ்பெட்டலில் அனுமதிக்க பட்டாள்.
ராமுமூர்த்தி, சுதாவையும், அவர் மகனையும் திட்டிக்கொண்டிருந்தார்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் மருமகளை கொடுமை படுத்துறீங்க, உன்னை யாருடி மருமககிட்ட சண்டை போட சொன்னது, பண்ணுற தப்பெல்லாம் உன் மகன், கேள்வி கேட்குறது என் மருமகளையா?” என்று அவர் சுதாவை திட்ட.
“நான் அவங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனையின்னு தான் கேட்டேன், வேறேதுவும் கேட்கல” என்று அவரும் அழ.
“வாய மூடு” என்று சுதாவை திட்டி சண்டை போட…
“இங்க அருள்ஜோதி பேசன்ட் அட்டன்டர் யாரு” என்று ஒரு நர்ஸ் கேட்க.
சுதாவும், ராமமூர்த்தி “நாங்க தான்” என்று எழுந்து டாக்டர் ரூம் வர..
“நீங்க பேசன்டுக்கு யாரு”? என்றார் டாக்டர்..
“நாங்க மாமியார், மாமானார்” என்றனர்.
“என்ன இப்படி அஜாக்கிரதையா இருக்கீங்க, அவங்க மாசமா இருக்குறது உங்களுக்கு தெரியுமா, தெரியாத”? என்ற கேட்க…
அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!.
“என் மருமக மாசமா இருக்கா?”. என்று..
“ஆமாம், மூனு மாசம் முடிஞ்சிருக்கு, இது நாளாவது மாசம், இது கூட உங்களுக்கு தெரியாம என்ன பண்ணீங்க, பேசன்ட் ரொம்ப வீக்க இருக்காங்க, எச், பி லேவல் ரொம்ப கம்மியா இருக்கு, இரண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும், டிரிப்ஸ், ரத்தம் ஒரு யூனிட் ஏத்தி பார்ப்போம்”, என்று கூற.
ராமமூர்த்தி, சுதாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி, மகன் இந்த செய்தியை கேட்டவுடன் கண்டிப்பா வந்து விடுவான் என்று நினைத்தவர்,.
அவனுக்கு போன் போட..
அவன் அதுக்கு போனை எடுக்க வேண்டுமே, பல முறை ராமமூர்த்தி கால் பண்ண, போனை எடுக்காதவன், மெஜேஜ் போடுங்க மீட்டிங்கில் இருக்கிறேன், என்றான்..
உடனே மகனுக்கு “நீ அப்பாவாக போறடா, மருமக மாசமா இருக்கு” என்று மெசேஜ் போட..
அந்த மெசேஜ் பார்த்தவனுக்கு, வேதனையாக இருந்தது, இன்னும் கூனி குறுகிப் போனான்.
ஏற்கனவே இருந்த வருத்தம் போக இன்னும் பாரம் ஏறிக்கொண்டு ரிஷிக்கு.
ஏற்கனவே அவளை ரொம்ப வருத்தப்பட வைக்கிறோம் என்று நினைத்தவன், இப்ப கர்பமாக இருக்கிற பெண்ணை பார்க்காமல் பேசாமல் இன்னும் அவ்வளவு வேதனை பட வைக்கிறோமோ என்ற வேதனையை அவனை கொல்லாமல் கொன்று தின்றது..
ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது இன்னொரு பக்கம் ஒன்றும் தெரியாது பொண்ணை இப்படி அம்போன்னு விட்டு வந்து விட்டோமே என்ற வேதனையாக இருந்தது…
கொஞ்ச நாட்கள் கழித்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..
பின்பு அவளை எப்படி பார்ப்பேன் என்னை விட்டு ஏன் போனாய் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்..
என்று யோசித்தப்படியே,அவன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தான்..
இதோ இரண்டு நாட்கள் அவளுக்கு வைத்தியம் பார்த்து உடல் தேறி இருந்தாள் அருள் ஜோதி..
ஸ்கேன் செய்து பார்த்தபோது இரட்டைப் பிள்ளைகள் என்று டாக்டர் சொன்ன போது இன்னும் சந்தோஷமாக உணர்ந்தனர் ராமமூர்த்தி சுதாவும்,,. அவர்களுக்கு ஒரே பிள்ளையாக ரிஷி இருக்க.
தன் மகனுக்கு 2 குழந்தைகள் என்று சந்தோஷப்பட, இருவரும் மருமகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்..
ரிஷிக்கு இந்த விஷயம் சொல்லப்பட உடனே கிளம்பி வந்து இருந்தான் மனைவியை பார்க்க…
இவன் வந்த நேரம் அருள் ஜோதியின் பெற்றோரும் அங்கே தான் இருந்தனர்.
இவன் காலடி எடுத்து வைக்கும் போதே.
அருள் ஜோதியின் சிரிக்கும் சத்தத்தை கேட்டபடியே தான் வீட்டினுள்ளே நுழைந்தான் ரிஷி..
மொழியிடம் வீடியோ காலில் அருள்ஜோதி பேசிக் கொண்டிருக்க…
மனைவியின் மகிழ்ச்சியான சிரிப்பு சத்தத்தை கேட்ட படியே ரிஷி அருள் ஜோதி அருகில் வர…
அவளுக்கு ரிஷி வந்தது கூட தெரியவில்லை, இவள் போனில் “மொழி, மொழி நீ எப்பா வருவா, என் பிள்ளைகள் சித்தி எப்போ வருவான்னு என்று கேட்குறாங்க”, என்று சிரித்து பேச..
ரிஷிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை, இவள் என்னை தேடுகிறாள், வருத்தமாக இருக்கிறாள், என் பிள்ளையை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்று நான் இவளை பார்க்க வர.
இவள் தங்கையோடு கொஞ்சி
பேசி சிரித்துக்கொண்டிருக்கிறாள்..
என் மன நிம்மதியில்லாமல், ஊர், ஊராகா திரிந்து கொண்டிருக்கிறான், அக்காலும், தங்கச்சி கொஞ்சுறாலுங்க, என்று நினைத்தவன்.
வந்த வழி செல்ல.
மாப்பிள்ளை வாங்க, எப்போ வந்தீங்க என்று தேவகி கேட்க, அப்போது தான் அருள்ஜோதி ரிஷியை பார்த்தாள்.
மாப்பிள்ளை என்று தேவகி சத்தம் கேட்டவுடனே, போனை கட் பண்ணியிருந்தாள் மொழி.
நான்கு மாதம் கழித்து சகோதிரியிடம் இன்று தான் வீடியோ காலில் பேசி சந்தோஷப்பட்டாள், இனி அக்கா வாழ்வு நன்றாக இருக்குமென்று அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி, அவள் உண்டானதில் இருந்து, அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை இருக்க, இன்று தான் அழைத்து பேசியிருந்தாள் அருள்ஜோதியிடம், வந்து விட்டான் ரிஷி..
மனைவியை முறைத்தபடியே ரிஷி நிற்க.
அவளுக்கு ரிஷியை பார்த்தும் சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது,.
மனைவியை பார்த்து முறைத்தவன் வந்த வழியே செல்ல பார்க்க.
“அத்தான், அத்தான்” என்று அவன் பின்னாடி ஓடினாள் அருள்ஜோதி..
தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை மாப்பிள்ளை ஏன் கோபித்து கொண்டு செல்கிறார், என்று பயந்தவர், கிச்சனில் வேலை செய்துக்கொண்டிருந்த சுதாவிடம் மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்று சொல்ல.
மகன் வந்து விட்டானா என்று சந்தோஷபட்டவர்.
வேகமாக வெளியில் வர.
அங்கே வாசல் படியில் கதறி, கதறி அழுதுகொண்டிருந்த அருள்ஜோதியை தான் இருவரும் பார்த்தனர்.
“என்னடி என்னாச்சு, ஏன் இப்படி அழற மாப்பிள்ளை எங்கே”? என்று தேவகி கேட்க..
அவன் கார் சென்ற திசைபக்கம் கை காட்டி, “அத்தான் என்கிட்ட பேசமா போய்ட்டாங்கமா” என்று கதறி அழுத அருள் ஜோதியை யாராலும் சமாதானம் பண்ண முடியவில்லை.
சுதாவால் மருமகள் கதருவதை பார்க்கவே முடியவில்லை, அவள் கதருவதை பார்த்தவர், மகனை கண்ட படி திட்டி விட்டு மருமகளை அணைத்து ஆருதல் படுத்தியவர்..
அவளை வீட்டினுள்ளே அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து சமாதானம் பண்ண.
“அத்தை, அத்தை, அவர் ஏன் போனார், என் மேல என்ன கோபம், வீட்டுக்கு வந்துட்டு ஏன் என்கிட்ட பேசமால் போனார்”? என்று சுதாவை கட்டிக்கொண்டு அழுதாள் அருள்ஜோதி, மருமகளை தாங்கி பிடித்துக்கொண்டார் சுதா.
வெளியில் சென்ற ராமமூர்த்தியும், ஐயப்பனும் வந்தவர்கள்
எதற்கு அழுகிறாள் அருள் ஜோதி என்று கேட்க..
” மாப்பிள்ளை இப்போ வந்தார், என்ன கோபம்முன்னு தெரியல, உடனே கிளம்பிட்டார், அதுக்கு தான் பாப்பா அழகுற” என்றார் தேவகி…
தேவகிக்கு மகள், மருமகனுக்கு ஏதோ சண்டை போல எதுக்குன்னு தெரியலையே, என்று பயந்தவர், மகள் அழுவதை அவராலும் பார்க்க முடியவில்லை,..
“ஏதுக்கு அழற, அழுகாத என்றவர், நீ திருநெல்வேலி கிளம்பு, நாம போகலாம்”என்று கூற.
ஐயப்பனும் மனைவி சொல்வது தான் சரி என்றவர், “கிளம்பு டா பாப்பா நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இரு, எல்லாம் சரியாகும், மாப்பிள்ளை கோபம் குறைந்து வந்து உன்னை கூட்டிட்டு வரட்டும் ” என்றார்.
அவருக்குமே மகள் அழுவதை தாங்கவே முடியவில்லை, என்ன பிரச்சனை இருந்தா என்ன, மாசமா இருக்குற பிள்ளையை இப்படி அழ வைக்குறதா?..
“கிளம்புடா”?, என்றார் மகளை.
அவளோ சுதா முகத்தையும் ராமமூர்த்தியும் பார்க்க.
அவர்களுக்கு கூட ரொம்ப வருத்தமாக தான் இருந்தது கண்கள் கலங்கி இருந்தது, மகன் இப்படி நடந்து கொண்டது அவர்களுக்கும் வருத்தமாக இருக்க, இதில் அருள்ஜோதி விட்டு அவர்கலாளும் இருக்கவே முடியாது…
பெத்த பிள்ளை கலங்கி இருக்கும் போது அழைத்து செல்ல வேண்டும் என்று நிற்கும் தாயும், தகப்பனை அவர்களால் தடுக்க முடியுமா என்ன..
அவர்கள் அமைதியாக இருக்க.
“நான் வரலப்பா இங்கே இருக்கேன் அத்தை மாமா என்னை நல்லா பாத்துக்குறாங்க” என்றால் அருள் ஜோதி ..
“நான் அவங்களை குறை சொல்லல டா நீ தான் இப்ப அழுகுறியே மாப்பிள்ளை நினைச்சு அதனால தான், கொஞ்ச நாள் வந்து நம்ம வீட்ல இரு வா கிளம்பு” என்றார் ஐயப்பன்.