Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… 6 1

நெஞ்சம் ஏங்குதே…

 அத்தியாயம் – 6.



Advertisement

Advertisement

Advertisement

 மொத்த இந்தியாவுமே சந்தோஷமாக இருந்தது,, இந்தியா உமன்ஸ் வேர்ல்ட் கப் வின்  பண்ணியதை பார்த்து.

 மொழிக்கு கண் கலங்கியிருந்தது..

Advertisement

 வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன், என் லட்சியத்தில் ஜெயித்து விட்டோம் என்று நிம்மதி கொண்டாள்..

 நிஷா அணைத்ததும் அவ்வளவு சந்தோஷம் கண்கலங்கிய படியே அருள் மொழி நிற்க..

 “நாம ஜெயிச்சிட்டோம் டி”, என்று இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்..

 மொத்த டீமும் அருள்மொழியை கட்டி அணைத்து நன்றி சொல்ல..

 சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அருள்மொழி..

 மேன் ஆப் தி மேட்ச் கப் அவளுக்கு வழங்கப்பட்டது..

 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மூன்று நாள் கழித்து ஆசியா நாட்டில் இருந்து இந்திய மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்  இந்தியன் டீம் பெண்கள் .

 முதலில் டெல்லிக்கு சென்று அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு பண்ணிய நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர் பெண்கள் ….

 பிரதமர் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் ஊரில் உள்ள இடத்தில் தனியாக வீடு கட்டிக் கொடுக்கவும்,  பரிசுத்தொகை, மெடல், கப் என்று கௌரவப்படுத்தியே அனுப்பி வைத்தார் அவரவர்கள்  ஊருக்கு.

 சென்னை ஏர்போர்ட்டில் அருள்மொழிக்காக அவள் சொந்த பந்தங்கள் காத்திருந்தனர்..

 தன் குடும்பத்தை பார்த்த அருள்மொழிக்கு  கண்கலங்கியது..

 அனைவரையும் பார்த்ததைவிட அருள் ஜோதியை பார்த்தவர்களுக்கு இன்னும் சந்தோஷம் தாங்க முடியவில்லை..

 அக்காவை கட்டி அணைத்து கன்னத்தில்  முத்தமிட்டிருந்தாள்..

 குகனும் வந்து அக்காவை கட்டி அணைத்துக் கொண்டான்.

 ஐயப்பனுக்கும் தேவகிக்கும் அவ்வளவு பெருமையாக இருந்தது..

 அனைத்து டிவி சேனல்களிலும் அருள் மொழியின் பேட்டி கேட்க காத்திருந்தனர்..

 அவளோ  ஒரு, இரு வரிகளில் பதில் சொல்லிவிட்டு தன் குடும்பத்தோடு கிளம்பி விட்டாள்.

 சுதாவும் ராமமூர்த்தியும் தங்கள் வீட்டிற்கு அருள் மொழியை அழைக்க.. “இல்ல மாமா நாளைக்கு அவார்ட் பங்ஷன் இருக்கு..

 முடிச்சுட்டு நாங்க திருநெல்வேலிக்கு  போறோம்”  என்று ஹோட்டலில் ரூம் எடுத்து தான் தங்கினாள்.

 அவளுக்கு  ரிஷி வீட்டுக்கு செல்ல மனமே இல்லை, அவன் வீட்டுக்கு செல்லக்கூடாது என்று முடிவோட தான்  இருந்தாள்.

 ராமமூர்த்தி எவ்வளவு சொல்லியும் அவள் அவர்கள் வீட்டுக்கு  வரவில்லை,  ” ஒரு ரெக்வஸ்ட் மாமா அக்காவை இரண்டு நாள் என் கூட வச்சுக்கட்டுமா” என்று ஆசையாக அருள் மொழி கேட்க..

 “சரிமா பத்திரமா பாத்துக்கோ” என்று ராமமூர்த்தியும் சுதாவும் கிளம்பி விட..

 அக்காவுடன் இருக்கும் இந்த தருணத்தை அவ்வளவு ரசித்து இருந்தாள் மொழி.

 சகோதரி இருவர்களும் அவ்வளவு கதை பேசினர்..

அந்த இரண்டு நாளும்,  அதில் ரிஷியை பற்றி ஒரு விஷயம் கூட பேச வில்லை..

 ரிஷியை  பத்தி தங்கையிடம் பேசினால் கஷ்டப்படுவாள் என்று ஜோதி பேசவில்லை..

தன் அக்கா கணவரை பற்றி பேசினால் அவளும் மன வருத்தப்படுவாள் என்று இவளும் பேசவில்லை ஆக மொத்தம் இவர்கள்  நடுவில்  ரிஷி இல்லவே இல்லை என்று முடிவு கட்டியிருந்தனர்….

 வெற்றி பெற்ற மொழிக்கு முதலமைச்சர் பல பரிசுகள்  வழங்கினார்..

 மொழிக்கு சென்னையிலேயே ஒரு பெரிய கவர்மெண்ட் வீடு தங்க வழங்கப்பட்டது..

 பரிசுத்தொகையாக பல லட்சங்களும் வழங்கப்பட்டன..

 தேவகிக்கு மகள் வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என்று  சந்தோஷப்பட்டு கொண்டார்..

 மகளின்  வெற்றி, சாதனையை பார்த்து அவ்வளவு சந்தோஷம் அந்த பெண்மணிக்கு..

 இதோ எட்டாவது மாதம் நடந்து கொண்டிருந்தது  அருள் ஜோதிக்கு.

 அருள்ஜோதியின் குடும்பம் சென்னையிலே மொழிக்கு   பரிசு அளித்த வீட்டில் தான் தங்கி இருந்தனர்..

 அருள்ஜோதிக்கு வசதியாக போனது பகல் முழுவதும் இவர்களோடு இருப்பவள் இரவு மாமனார், மாமியார் வீடு சென்றுவிடுவாள்.

 அருள்ஜோதி அழைத்துக் கொண்டு  மொழி வெளியே எங்கும் செல்லவில்லை வீட்டிலே அவர்கள் பேசி, உண்டு, படங்கள் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.

 அக்காவுக்கு நிறைய வாங்கி கொடுத்தால் மொழி..

 தங்கை  வாங்கி கொடுத்ததை ஆசையாக வாங்கிக் கொண்டால் அவளும்.

 பல நேரங்களில் சுதாவும் இவர்களோடு வந்துவிடுவார்..

 ஒன்பது மாத  தொடக்கத்தில் அருள் ஜோதி வளைகாப்பு செய்ய முடிவு செய்தனர்..

 அந்த விஷயத்தை ரிஷிக்கு சொல்லப்பட அவனும் வருவதாக சொல்லி இருந்தான்..

  ரிஷி வரும்போது  நான் இங்க இருக்க கூடாது என்று முடிவெடுத்த மொழி, இலங்கைக்கு  டெஸ்ட் மேட்ச் ட்ரெய்னிங் போகிறேன் என்று இலங்கைக்கு கிளம்ப தயாரானாள்.

 அனைவரும் வளைகாப்பு  முடிந்து விட்டு செல் என்க.

 அருள் ஜோதிக்கு அவள் ஏன்  செல்கிறாள் என்று புரிந்து. அவள் தங்கையை கட்டாயப்படுத்தவில்லை.

 இதோ வளைகாப்பிற்கு  இரண்டு நாள் இருக்கும் முன்பே மொழி இலங்கைக்கு கிளம்பி இருந்தாள்.

 ராமமூர்த்தி நேரில் சென்று மகனை கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்ல வர்ரேன் என்று மட்டும் மொட்டையாக சொல்லியிருந்தான்.

 இதோ அதோ என்று அழகாக விடிந்தது அருள்ஜோதியின் வளைகாப்பு நாள்..

  பெரிய மண்டபம் பிடித்து பிரம்மாண்டமாக செய்திருந்தனர் வளைகாப்பை..

 கண்டிப்பாக காலையில் ரிஷி வருவான் என்று  எதிர்பார்த்த அனைவருக்கும் அவன் வரவில்லை என்பது அவ்வளவு வேதனை கொடுத்தது…

ரிஷி  வளைகாப்பிற்க்கு போக வேண்டும் என்று  தான் நினைத்திருந்தான். அவன் பொல்லாத நேரம் அங்கே  வேலை செய்யும் இடத்தில் இரு வேறு பிரிவில்  இருப்பவர்களுக்கு  பெரிய பிரச்சினை செய்து அடிதடியாகி அந்த பில்டிங் மேலே இருந்து கீழே விழுந்து இருவர் இறந்து விட   அவனால் நகர முடியவில்லை..

 இதை சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்கள் தன் பெற்றோர்,  என்று  நினைத்தவன்,  இரண்டு நாள்  கழித்து செல்லலாம் என்று  போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தான்..

 அருள்ஜோதிக்கு தாளவே முடியவில்லை அப்படி என்ன செய்து விட்டேன் நான்  அவருக்கு, என்றவளுக்கு  கண்ணீர் நின்ற பாடுடில்லை..

 இதற்காக  கண்டிப்பாக வருவான் என்று ஆசையாக எதிர் பார்த்து இருந்தாள்.

 ஐயோ பரிதாபம் வளைகாப்பு முடிந்தும் அவன் வரவில்லை.

 மிகவும் சோர்ந்து போனாள் அர்ள் ஜோதி..

 நாளை திருநெல்வேலி செல்லலாம் என்று அனைவரும் நினைத்திருக்க..

 அன்று விடியற்காலையிலே தனியாக குஜராத் கிளம்பி இருந்தாள் அருள்ஜோதி..

 யாருக்கும் தெரியவில்லை அனைவரும் முதல் நாள் வளைகாப்பு வேலை களைப்பில்  தூங்கி விட …

 காலை ஒன்பது மணிக்கு மேலே தான் அவளை தேடி இருந்தனர்.

 அவர்கள் போன் செய்த போது “நான் குஜராத் வந்து இறங்கிவிட்டேன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என் கணவரை பார்த்து விடுவேன் என்னை தேட வேண்டாம்” என்று சொல்ல அனைவருக்கும் சந்தோஷமே..

 பரவாயில்லை கணவனை தேடி அவளே சென்று விட்டால் இருந்தாலும் தனியாக சென்றதை நினைத்து கஷ்டமாக இருந்தபோதும்.

 சுதா மருமகளை  அழைத்து “ரிஷியை பார்த்த உடனே போன் பண்ணு” என்றார்..

 “சரி அத்தை” என்றவள்.

இரண்டு மணி நேரம் கழித்து ரிஷி வேலை செய்யும் பில்டிங் வந்துவிட்டவள்.

சுதாவுக்கு போன் செய்து “அத்தை  அவரை பார்த்துவிட்டு அப்புறம் நான் சாயங்காலமாக போன் செய்கிறேன், என் போனில் சார்ஜ் இல்லை” என்று சுதாவிடம் சொல்ல.

 “சரி நீயும் அவனும் சந்தோஷமாக இருந்தால் சரி,,  நீ வீட்டுக்கு போய் சார்ஜ் போட்டு போன் போடு என்று சுதா சொல்ல..

 தேவகி சுதாவை பார்த்தார், “அவ போயிட்டாளாம் ரிஷி  வேலை செய்ற இடத்துக்கு, போன்ல சார்ஜ் இல்லையாம் வீட்டுக்கு போய் சார்ஜ் போட்டு கூப்பிடுறேன் சொல்லுற” என்றதும்..

 “சரி சம்மந்தி அப்ப நாங்க திருநெல்வேலி கிளம்புறோம் மாப்பிள்ளையும் பொண்ணு வந்தா சொல்லுங்க வந்து கூட்டிட்டு போறோம்” என்று சொல்லி தேவகியும், ஐயப்பனும் திருநெல்வேலி கிளம்பி இருந்தனர்..

  அட்ரஸ் கண்டுபிடித்து ரிஷி வேலை செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள் அருள்ஜோதி..

 அங்கே உள்ள ஒரு வாச் மேன் இவளை  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை..

” இங்கே பில்டிங் வேலை நடந்துட்டு இருக்குமா யாரும் உள்ளே போகக்கூடாது ஐடி கார்டு இல்லாமல்” என்று அவளை உள்ளே அனுமதிக்கவில்லை.

 யாரா இருந்தாலும் வெளியே வரும்போது பார்த்துக்கொள் என்று விட்டார்.

 அவள் எவ்வளவு கெஞ்சியும் விடவில்லை அந்த  வாட்ச்மேன்.

 அவள் பேசும் இங்கிலீஷும் அவனுக்கு தெரியவில்லை.

 போனில் சார்ஜ் இல்லை. அருள் ஜோதிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை..

 அங்கே பல நூறு தொழிலாளிகள் வந்து சென்று கொண்டிருந்தனர்.

 இதில் நான் எப்படி ரிஷியை கண்டுபிடிப்பேன் என்ற புலம்பியவள்.

 அப்படியே அந்த கேட் வாசல் ஓரத்தில் அமர்ந்து விட்டாள்.

 கையில் ஹேண்  பேக் மட்டுமே கொஞ்சம் பணம் இருந்தது.

 உடை கூட எடுத்து வரவில்லை. ரிஷியை  பார்த்தாக வேண்டும்,  அவரிடம் பார்த்து பேசி சண்டை போட வேண்டுமென்றே வந்தாள்,. அவன் மேல் அவ்வளவு கோபமாக வந்தவளுக்கு, இப்போது அவனை ஒரு முறை பார்த்து சென்று விட்டால் போதும் என்றே தோன்றியது..

 சாயங்காலம் வரையும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தால் காலையில் பிளைட்டில் கொடுத்த உணவை உண்டது தான் , பசி வயிறை கிள்ளியது பக்கத்தில் சென்று ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வந்து குடித்து அமர்ந்திருந்தாள் .

 அந்த வாட்ச்மேனுக்கு இவளை பார்க்க பாவமாக இருந்தது,  நிறை மாத கர்ப்பமாக இருக்கிறாளே என்றவன்..

 அவனுக்கு தெரிந்த ஒரு ஆங்கிலம் பேசுபவனை அழைத்து வந்து அந்த பெண்ணிடம் பேச வைத்தான்.

 அவளோ  “என் கணவன் இங்கே இன்ஜினியராக வேலை செய்கிறார் இந்த பில்டிங் காண்ட்டிராக்ட் எடுத்திருப்பார்  பெயர் ரிஷிநந்தன்” என்று சொல்ல..

 அவனுக்கு தெரிந்து ரிஷி என்ற பெயரில்   யாருமே இல்லை.

ரிஷியை  எல்லாரும் ஆர், என் சார்  என்று தான் அழைப்பார்.

 ரிஷி நந்தன் என்றதும் “இங்கு அப்படி யாரும் இல்லையே வேற பில்டிங் செல்லுங்கள்” என்று அவன் சொல்ல.

 “இல்லை என் மாமனார் சொல்லி இருக்கார் இந்த பில்டிங்கில் தான் அவர் வேலை செய்கிறார்” என்று அவள் சொல்ல.

 அவனோ “அப்படி யாரும்  இங்கே இல்லை நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட.

 அவளோ மீண்டும் வந்து கேட் வாசலில் அமர்ந்து கொண்டாள்.

 அவளுக்கு யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை..வாச்மேனிடம்  போன் வாங்கி மாமனாருக்கு அழைத்தால் , மாமனாரோ வளைகாப்பு நல்லபடியா முடிந்தால் கோவில் செல்கிறேன் என்று அவர் ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று இருக்க அங்கே சிக்னல் கிடைக்கவில்லை..

 தன் வீட்டில் சொன்னால் கவலைப்படுவார்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை அவள்.

 என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் எப்படியும் ரிஷி   வெளியில் வருவார்  தானே என்று,  அவள்  வெளியில்  வரும் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ஐயோ பாவம் ரிஷி அன்று  பில்டிங்கிற்க்கே   வரவில்லை..

 இரவு வெகுநேரம் அந்த கேட்  வாசலிலே அமர்ந்திருந்தாள்.

 அந்த வாட்ச் மேன்  இவளை  பாவமாக பார்த்து,  அவன் தங்கி இருக்கும் குட்டி அறையிலேயே அவளை நைட்டு தங்க  சொன்னான்.

 அந்த குட்டி அறையில் காலை நீட்டி அமர்ந்த படியே  தூங்கி  இருந்தாள் அருள்ஜோதி.

 சுதாக்கு ஏனோ மனமே சரியில்லை காலையில் கணவர் வந்ததும் விசயத்தை சொன்னார்.

 போனே பண்ணல மருமக என்று சொல்ல உடனே கிளம்பி  இருந்தனர் இருவரும்..

 அங்கு உள்ள வாட்ச்மேன் அருள் ஜோதிக்கு டீ வாங்கி கொடுத்து “வீட்டுக்கு செல்” என்று சொல்ல.

 அவளோ “நான் போக மாட்டேன்” என்று சொல்ல..

 ,”போன் நம்பர் இருக்கா”? என்று கேட்க.

“அவள் போன் நம்பர் இருக்கு,  போன் சார்ஜ் இல்லை” என்று சொல்ல..

 அவரின் சார்ஜ் பின்,  அவள் போனுக்கு செட்டாக வில்லை.

 “சரிம்மா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் பத்து மணிக்கு மேல நீ வேணா உள்ளே போய் தேடி பாரு,  உன் புருஷனை” என்று சொல்ல “சரி” என்றாள் இவள்.

 வாட் மேன்  அவளுக்கு காலை உணவை வாங்கி வந்து கொடுத்தான்.

 அவனைப் பார்த்து நன்றியோடு கையெடுத்து கும்பிட்டாள் அருள்..

 “பரவால்லைம்மா எனக்கு சிஸ்டர் மாதிரி இருக்க,   உன்னை பார்க்க பாவமாக இருக்கிறது” என்று அவன் குஜராத்தில் சொல்ல..

 இவளுக்கு  அந்த வாச்மேன்  பேசுவது புரியாமல் இருந்தாலும் அவனின் முக பாவனைகளை வைத்து புரிந்து கொண்டவள் நன்றி என்று சொல்லி விட்டு..

 10 மணிக்கு மேல் அனைவரும் வேலைக்கு வந்துவிட இவள் ஒவ்வொரு பில்டிங்காக சென்று ரிஷியை தேடிக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!