தனத்தின் முன்பு கலையும் இலக்கியாவும் நிற்க அவர் முகமோ கடுங் கோபத்துடன் இருந்தது.
“என்ன தான்டே நெனைச்சுக்கிட்டு இருக்க”
Advertisement
“இப்ப என்ன செஞ்சுட்டேன் னு கத்துறத்தா”சலிப்பாக கலை கேட்க
Advertisement
Advertisement
“என்ன செஞ்சியா…நீ வீட்டு பக்கம் வந்து எத்தனை நாள் ஆவுதுனு தெரியுமாடா. ஒனக்குனு ஒருத்தி இங்க இருக்கா ஆத்தா அப்பன் நாங்க இருக்கோம் அதாச்சும் தெரியுமா ஒனக்கு”
“தம்பிக்கு கொஞ்சம் க்ரிட்டிக்கலா இருக்கு”அமைதியாக பதில் அளித்தாள் இலக்கியா.
“உன்னைய ஆஸ்பத்திரிக்கு ஏன் போறேன் னு கேட்கல. இவன கூட ஏன் கூட்டிட்டு போகாம தனியா அலையிறன்னு தான் கேட்கிறேன்”என்ற தனம் “இந்தாருய்யா நீ மாமனைப் போய் பாரு வேணாம் னு சொல்லல. ஆனா ரவைக்கு வூடு வந்து சேரு. ஒனக்கு அம்புட்டுக்கு சங்கட்டமா இருந்தா மாமன் கூட தங்க ஆள் போடுவோம் சரித்தான ஆனா ரெண்டு பேரும் இனிமேட்டுக்கு இப்படி இருந்தா எதுவும் சரி வராது பாத்துக்கிடுங்க”என்று அழுத்தமாக தனம் சொல்ல இருவரும் மௌனமாய் நின்றனர்.
“சரினு தான் சொல்லேன்யா வேணுமென்டா நா கூட ஒத்தாசைக்கு போய் இருக்கேன்”என்றார் கணேசன்.
“அத்தெல்லாம் வேணாம். இதுக்கு வேற வழி பாக்குதேன்”என்றவன் அறைக்குள் சென்று விட அவன் பின்னால் இலக்கியாவும் சென்று விட்டாள்.
“ரெண்டையும் ஒண்ணு சேத்து”என்று பெருமூச்செறிந்தபடி தனம் போய்விட கணேசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
கலை பெருமூச்சுடன் படுத்துவிட இலக்கியா கழிவறைக்குள் சென்றாள்.
மனம் மகனுக்காக வேதனை கொள்ளவா இல்லை சொத்து கேட்டு பிரச்சினை செய்யும் சகோதரனை நினைத்து வருந்தவா இப்படி ஒரு அவசரத் திருமணத்திற்குள் இணைந்த இவனை நினைக்கவா என்று அலைகழிக்க தவித்து நின்றாள் பெண் .
முகம் கழுவி விட்டு வரும் போது கலை எழுந்தமர்ந்திருந்தான்.
“என்னாச்சு”என்று அவள் வினவ
சுற்றும் முற்றும் பார்த்தவன்”ஓஓஓ என் கிட்ட தானா”என்றான் எள்ளலாக.
“செல்வா”என்று அதட்ட
“இல்லை என் கிட்ட பேச எல்லாம் செய்றீங்க அதான் ஆச்சரியம்”என்றவன்
”பிடிக்கலையா விலகிப் போயிடணும். அதை விட்டுட்டு சும்மா எனக்கு உரிமையான இடத்தில் எல்லாம் இருந்துகிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு நான் பேசினா கடந்து போய்கிட்டு மத்தவங்க கிட்ட நல்லா பேசிட்டு இருக்கிறது மேனர்ஸ் கிடையாது” என்று எரிச்சலாக பேசினான் கலை.
இலக்கியா அமைதியாக நின்றாள்.
“உன்னை ஹர்ட் பண்ணா நீ பேச வேண்டியது என் கிட்ட தானே தவிர, மத்தவங்க கிட்ட போய் இவன் சரியில்லை அது இதுனு சொல்லக் கூடாது. பிடிக்கலையா கிளம்பி போயிடு உள்ளவே இருந்துகிட்டு எரிச்சல் உண்டாக்காத” என்று மீண்டும் கொந்தளிக்க
“நான் தான் எதுவுமே பேசறதில்லையே அப்புறம் என்ன? “அவளும் பதிலுக்கு கோபமாய் பேச
“அதுதானே கடுப்பா இருக்கு. என் கூட தானே இருக்க… அப்புறம் என் கிட்ட பேச உனக்கு என்ன வந்தது. சும்மா லேசா சிரிக்கவும் ஏதாவது சொன்னா கோவப்படவும் இருந்தா போதுமா என்ன. இனி பதில் பேச விருப்பம் இருந்தா மட்டும் கூட இரு இல்லையா தயவு செய்து கிளம்பிடு இங்க உன் இருப்பிற்காக யாரும் காத்துகிடக்கல” என்று கோபமாய் பேசி விட்டு வெளியேறினான்.
இலக்கியாவிற்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
‘நான் கேட்டேனா திருமணம் செய்து கொள் என்று. ஏதேதோ பேசி திருமணம் செய்து விட்டு இப்போது இப்படி பேசினால் என்று வருந்த மீண்டும் உள்ளே வந்தான் கலை.
“போய் ஒறங்கத்தான அதையும் நா தான் சொல்லணுமா…”என்றபடி பாய் தலையணை போர்வையை எடுக்க
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை”என்றாள் கடுப்பாக.
அவளையேப் பார்த்தவன் “நா ஓ மவனை ஒங்கிட்ட இருந்து புடுங்கி எடுத்துக்கிட்டா போறேன். என்னத்துக்கு அங்கன அம்புட்டு பாடுபடுதவ. அவேன் கிட்ட பேசத்தான செஞ்சேன். பழக தான செஞ்சேன். அதுக்கே மொகரைய தூக்கி வச்சுட்டு இருக்க. வேற என்ன செய்ய நானு. ஏ அவேன் மேல எனக்கு உரிமை இல்லையா நா பேசக் கூடாதா…”என்றவன் “தாலி கெட்டி இருக்கேம்த்தா. ஒம்புள்ள எம்மவன் இல்லியா. அவங்கூட இருக்க எனக்குத்தான் உரிமை இல்லையா. இல்லையெண்டா ஒத்த வார்த்த சொல்லிடு இப்படி அவன் கூட பேசும் போதெல்லாம் கட்டைய போடாத. எம்புட்டு ஆசையா பேசுனான் அவேன்.”என்றவன் “என்ன அவன் கிட்டயே விடமாட்டைக்கிற. பொறவு இந்த ஒறவுக்கு தான் என்ன அர்த்தம்”என்றான் வலி மிகுந்து.
“சாரி”என்று தலை குனிந்தாள்.
“எல்லாத்தையும் நீயே சொமக்க நெனைக்காத…சாரியாம் சாரி”என்று சலித்தவன் அவள் முகத்தை மூடிக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கவும் சற்று மனம் கனிந்து அவளருகில் அமர்ந்தான்.
“இலா”என்று அவளின் தோளைத் தொட அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்திருந்தது.
“இலா என்னத்தா”என்றதும் “முடியலை செல்வா”மனம் தாளாமல் கண்ணீர் விட்டாள். அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவனுக்கு சங்கடமாய் போனது. முதன் முதலாக அவனது அணைப்பு ஆனால் அதை அவளால் உணரக் கூட இயலவில்லை. அத்தனை மனச் சோர்வு. எதையும் தாங்கும் பெண்ணாய் நிற்பவள் இன்று துவண்டு போய் இருக்கிறாள் அதுவே அவனுக்கு வருத்தமாக இருந்தது.
சற்று முன் தானும் திட்டி விட்டோமே என்று வருந்தியவன் “எல்லாஞ்செரியாப் போவும் நான் இருக்கேன்ல”என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“நத்திங் நத்திங் ஐம் ஓகே”என்று தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டு புன்னகைத்தாள்.
“ஒனக்கு இம்புட்டு புடிவாதம் ஆவாதுத்தா”என்று புன்னகையுடன் சொல்லியவன் என்றவன் அவளை விட்டு விலகி அமர
“அத்தைக்கு ரொம்ப கோவம் வருமோ”என்றாள்.
“கோவம் வந்தா ஆரு என்னானு பாக்காது. அடி பின்னிடும்”என்றவன் “செரியாயிடும் விடு”என்று போய் தன் இடத்தில் படுக்க மறுபக்கத்தில் அவளுமே படுத்துக் கொண்டாள்.
“இனிமே அங்கே போக வேண்டாம் செல்வா.”என்று கூறவும்
“நெசத்துக்கும் இந்த கோவத்துனால போகலை”என்றான் புன்னகையுடன்.
“இல்லை அதுக்கு சொல்லல அவங்க வருத்தப்படும் போது கஷ்டமா இருக்கு.”என்று விளக்கம் தரவும் “செரிப்பா நான் போகலை.வேற ஏதாச்சும் ஏற்பாடு பண்றேன்”என்றான் .
இருவரும் உறங்கிப் போயினர். விடியும் பொழுதினில் இருவரின் முகமும் சற்று அருகருகே அவர்கள் மனதைப் போல நெருங்கியும் நெருங்காமலும் இருந்தது.
முதலில் விழித்தது என்னவோ கலைச்செல்வன் தான்.
அவளது வதனம் இவ்வளவு அருகில் தெரியும் என்று எதிர்பாராதவன் விழுக்கென எழுந்து கொண்டான்.
அவனது அசைவில் இலக்கியா சற்று திரும்பி படுத்தாள். போட்டிருந்த டாப்ஸ் விலகி இடுப்பு மட்டும் தெரிய தலையை உலுக்கிக் கொண்டவன் “பேசாம மாமன் வீட்டில் படுத்து இருக்கலாம். ஆத்தா பேச்சைக் கேட்டு”என்று புலம்பிக் கொண்டு கீழிறங்கப் போக மீண்டும் திரும்பி படுத்து அவனின் அவஸ்தையைக் கூட்டினாள்.
“ஸ்ஸப்பா”என்று மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டபடி போய் விட்டான்.
பின்வாசலில் போடப்பட்டிருந்த குழாயில் நீரைப் பிடித்து முகத்தில் அடித்தவன் நன்கு தேய்த்து கொண்டான்.
“எய்யா டீத்தண்ணி கொண்டாரவா”தனம் சமையலறை வாசலில் இருந்து குரல் கொடுக்க “இருத்தா பல்லை தேச்சுட்டு வாரேன். ஆத்தி வைக்காத வாயில வெக்க முடியாது”என்று அவசரமாக வேப்பங்குச்சியை ஒடித்து பல்லைத் தேய்த்தான்.
“என்னமா தான் கொதிக்க கொதிக்க குடிக்கிறான் ஓ தெரியலை”என்றபடி தனம் தேநீரை வடிகட்டி மட்டும் வைத்தார்.
அதற்குள் இலக்கியாவும் எழுந்து பின்வாசலுக்கு வந்து விட்டவள் வழக்கமாய் செய்யும் சூரிய நமஸ்காரத்தை செய்ய அவள் கையைத் தூக்கி செய்யும் வணக்கத்தை தலையை சொறிந்தபடி அந்த பக்கம் இந்த பக்கம் என் தலையை திருப்பி பார்த்தபடி சமையலறைக்குள் புகுந்து கொண்டான்.
“தெனமும் இப்புடி தான் செய்வாளோ”அன்னையிடம் கேட்க
“ஆமா ஆமா. செஞ்சு போட்டு மொகம் கழுவிட்டு வரும். எதுவும் குடிக்க மாட்டா. எப்பவாச்சும் வெறும் வரத்தண்ணி போடுவா”என்றார் தனம்.
“வரத்தண்ணி தெனமும் குடிச்சு”என்று இவன் இழுக்க
“இத்தெல்லாம் கூட தெரியாம இருக்க நீ. அந்த லட்சணத்தில் குடும்பம் நடத்துற”என்று கடிந்து கொண்டவர்”என்னவோ சீனியும் போடாம ஒண்ணும் போடாம தான் குடிப்பா. வெண்ணை எதுவும் எடுத்தேன்னா அது போட்டு குடிப்பா”என்றார் மகனிடம்.
“கெரகத்த வெண்ணைய போட்டா”என்று அவன் முகம் சுளிக்கவும் அவள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
இருவரையும் பார்த்துக் கொண்டே தனக்கான தேநீரை அவள் தயாரிக்க தனம் நாசூக்காக “என்னங்க டீயி”என்றபடி நகர்ந்து விட்டார்.
“வெறும் வரத்தண்ணி தான் குடிப்பியாம்”என்று கலை கேட்கவும்
“அது பழகிடுச்சு”என்றாள்.
“சீனி எல்லாம் ஆவாதோ”என்று வினவவும்
“எடுத்துப்பேன் ஆனா கம்மியா.”என்றவள் கையில் பிஸ்கெட் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர அவனுமே அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
“தினமும் இங்கே தான் உட்காருவியோ”என்று கேட்கவும் அவள் மெலிதாய் விசில் அடிக்கவும் சரியாக இருந்தது.
“ஏத்தா”என்று அவன் சற்று அதிர்ந்து சுற்றி முற்றிப் பார்க்க அவளோ இன்னும் கொஞ்சம் சத்தமாக விசில் செய்ய ஒரு அணில் குடுகுடுவென ஓடி வந்தது.
“என்ன இன்னைக்கு லேட்டு. வொஃய்போட ரொமான்ஸா”என்று சிரித்தபடி பிஸ்கட்டை உடைத்து போட அந்த அணில் ஒன்றை எடுத்து கொறித்து தின்றது.
“ஏய் என்ன நீ அணிலு கூட எல்லாம் பேசுற”என்று வியப்பாக அவன் விழி விரிக்க
“ஒரு நாள் வந்தது பிஸ்கட் குடுத்தேன் அப்புறம் டெய்லி வர ஆரம்பிச்சது. வரலைனா அது போலவே விசில் பண்ணா வரும்”என்றிட
“யாத்தே பல வித்தைய கையில வச்சிருக்கியே”என்று அவன் சிரிக்க இலக்கியா புன்னகைத்தாள்.
“நான் வந்தா ஓடிடுமா”என்று கேட்டபடி அவன் பக்கத்தில் செல்லவும் இருந்த பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டு அந்த அணில் தாவி குதித்து ஓடி விட்டது.
இலக்கியா இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைக்க “வேணும்னு செய்யலத்தா”என்று பாவமாய் அவன் பார்க்க பக்கென்று சிரித்து விட்டாள் அவள்.
இருவரின் சிரிப்பு சத்தம் கேட்கவும் எட்டிப்பார்த்த தனத்திற்கு மனதே நிறைந்து போனது.
இருவரும் இலகுவாய் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தனம் மெதுவாய் வாசற்கதவை சாத்தி விட்டார்.
“இன்னைக்கு எதுவும் வொர்க் இருக்கா”என்று அவள் வினவ
“சோலியெல்லாம் நாமளா பாத்துக்கறது தான். நீயி என்ன வேணும் னு சொல்லுத்தா”என்று கேட்க
“கோவிலுக்கு போகலாமா”என்றாள் அவன் முகம் பார்த்தபடி.
“முருகனைப் பார்க்கவா இல்லை அவங்கம்மைய பாக்கவா”என்று கேட்கவும் “அவர் மாமனைப் பார்க்க”என்றாள் சிரித்துக்கொண்டே.
“அழகரையா… என்னவாம் திடுதிப்புனு செரித்தான் போவோமே”என்று எழுந்து கொண்டான்.
இருவரும் காலை உணவை முடித்துக் கொண்டு தனத்திடம் சொல்லிக் கொண்டு கள்ளழகரைப் பார்க்க கிளம்பி இருந்தனர்.
அவள் அங்கே வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்று தான் மகனை சரி செய்து திருப்பி கொடு இல்லையா அவனை உன்னோடு வலி இல்லாமல் அழைத்துச் சென்று விடு என்பது தான்.
சமீபமாக சஞ்சய் படும் பாட்டை அவளால் தாங்கவே முடியவில்லை. பிள்ளை துவண்டு போவதை விட அடிக்கடி எல்லாம் மறந்தும் போகிறான். ரத்தம் வாயில் கசிந்து கொண்டு வேறு இருக்க உணவே சரிவர அவனால் எடுக்க இயலவில்லை. இத்தனை ரணங்களைப் பொறுத்துக் கொண்டு எப்படி தான் அவனால் இருக்க முடியும் என்ற தவிப்பு அவளுள். ஏதேனும் அதிசயம் நடந்து பிள்ளை சரியாகி விட மாட்டானா என்ற ஏக்கம் பிறக்க தான் அவனை இப்போதெல்லாம் காணவே செல்கிறாள்.
கலைச்செல்வனின் வேண்டுதலும் அதுவாகத் தானிருந்தது.
அன்று மருத்துவமனையில் பார்க்கும் போதே மனமுடைந்து போனான் கலைச்செல்வன்.
இந்த சிறு வயதில் இத்தனை பெரிய நோயை இவனுக்கு தந்திருக்கிறாயே தெய்வமே என்று நொந்து கொண்டான்.
“கெளம்புவோமாத்தா”என்று எழுந்து அவளுக்கும் கை கொடுக்க மெதுவாய் எழுந்து கொண்டாள் இலக்கியா.
இருவரும் வண்டியில் கிளம்ப அங்கிருந்த பேக்கரியில் தேநீர் அருந்தி விட்டு செல்வோம் என்று நிறுத்த சொன்னாள் இலக்கியா.
“பார்றா பால் டீயெல்லாம் கேக்குற”என்றபடி தான் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
இருவருக்குமான தேநீரை வாங்கிக் கொண்டு வந்தவன் அவளிடத்தில் தர மெல்லிய புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
“இன்னும் நீ எத்தனை பொண்டாட்டி கட்டினாலும் அடுத்தவன் வாரிசுக்கு தான் அப்பனாக முடியும்டேய்”என்று ஒரு குரல் கேட்கவே எங்கோ யாரிடமோ பேசுகிறார்கள் என்று ரீதியில் அவர்கள் இருவரும் தேநீரை அருந்த சட்டென்று ஒரு கரம் டம்ளரை தட்டி விடவும் அது இலக்கியாவின் காலருகில் விழுந்து தெளிக்கவும் சரியாக இருந்தது.
“ஷ்ஷ்ஷ் அவுச்”என்று கண்களைச் சுருக்கி அதற்குள் கலை தட்ட விட்டவனின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“இதுல ஒஞ்சண்டியர்தனத்தை காட்டி”என்று எதிரில் இருந்தவன் நக்கலடிக்க கலை கையை ஓங்குவதற்குள் இலக்கியா அவனைத் தள்ளி அடித்து விட்டிருந்தாள்.
“ராஸ்கல் பிச்சிடுவேன் டீ கிளாஸ் தள்ளி விட்டதும் இல்லாம டயலாக் அடிக்கிற. ஸ்டுபிட்”என்று திட்டி விட்டு “க்ளின் பண்ணிட்டு கிளாஸ் உடைச்ச பணத்தை வச்சுட்டு போ”என்றதும் அடிவாங்கியவன் சுள்ளென்று எழுந்து இலக்கியாவை அடிக்க வர கலை விட்ட அறையில் சற்று தள்ளி போய் விழுந்தான் அவன்.
“அண்ணே அண்ணே போங்கண்ணே பிரச்சினை வேணா.யக்கா கூட்டு போக்கா.”என்று கடையில் இருந்த பையன் ஓடி வந்து சமாதானம் செய்ய
“அவன் வேணும்னே வந்து தட்டி விட்டான்”இலக்கியா சண்டைக்கு நிற்க பரிதாபமாக விழித்தான் அந்த பையன்.
“வா இலா போவோம். “என்று கலை தான் அவளை அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.
“உங்களுக்கு தெரிஞ்சவனா”என்று எடுத்ததும் கேட்க
“நம்மூரு தான்.”என்றவன் “இதை இத்தோட விடு. வீட்டில் பேச வேண்டாம்”என்றான் முடிவாக
“ப்ப்ச் நம்ம ஊர் னு சொல்றீங்க பிரச்சினை பண்ணி இருக்கான் அவனை எப்படி சும்மா விட”கடுப்படித்தாள் இவள்.
“சந்தியாவுக்காக இதை விடு”என்றதும் அமைதியாகிப் போனாள் இலக்கியா.
வீட்டிற்கு வந்ததும் சந்தியா இறப்பிற்கு காரணம் சண்டை போட்டவனின் குடும்பம் தான் என்று சொல்லி இருக்க இன்னும் கோபமானாள் இலக்கியா.
“இவ்வளவு நடந்தும் நீங்க ஏன் அமைதியா வந்தீங்க”என்று திட்ட
“எவன் காரணமோ அவன் எல்லாம் இப்போ உயிரோட இல்லை. இவன் அதுக்கு பழி வாங்க என்னை ஒரண்டை இழுத்துக்கிட்டு திரியிறான். நானும் பொறுமையா போறேன். இவனுக்கு என்ன நடந்தது னு தெரியுமா தெரியாதா எதுவும் புரியலை. சின்னபயனு தான் இவ்வளவு பொறுமையும்”என்றான்
“அவங்க சாவுக்கு காரணம்”என்று இவள் கேட்க
“நான் கொல்லலை. தெய்வம் இருக்குல்ல அதான் போயிட்டானுக”என்றதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.
“கலை”என்றதும் “எப்படி விடச் சொல்ற இலா. எப்படி விட முடியும். திருவிழால தான் முடிச்சு விட்டோம் வேண்டப்பட்டவங்க செஞ்சாங்க. இதை இத்தோட விடு பேசாத”என்று முடித்துக் கொண்டான்.
“அவ பட்ட பாட்டுக்கு இதெல்லாம் கம்மி. எஞ்சாமி அவ சாவுக்கு ஒருத்த ஒருத்தனையும் பழி தீர்த்துட்டேன் அவ்வளவு தான்.”என்றவனுக்குள் இன்றளவும் அந்த வலி மிதமிஞ்சி விரவிக் கிடந்தது.
“என்ன பார்க்கிற கொலைகாரப்பயன்னா”என்று வினவ இல்லை என்று தலையாட்டியவள் “இனி பேசலை”என்றாள்.
“ஹ்ம்ம்”என்றவன் “ஏற்கனவே நெறய சம்பவம் பண்ணி இருப்பானுக போல. பெரிய தலை எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கு. தம்பி முடிக்கப் போறோம் உன் சாதிக்காரனுகளைனு கேட்டாங்க. முடிங்க நாங்க கேட்க மாட்டோம் னு விலகி நின்றுட்டேன். அவங்க குடும்பம் வந்து சண்டைக்கு கூப்டாங்க. எம்மூட்டு சாமிய செதைச்சதுக்கு கெடைச்ச பரிசு நா ஏன்டா வரணும் வர முடியாது எங்க தலைக்கட்டு எதுவும் வராதுன்னு நெலையா நின்னேன் நம்மாளுகளும் நின்னாக அந்த வன்மம் இருக்கும் ல அவனுகளுக்கு. என்னை நேரடியாக எதுவும் செய்ய முடியல அதான் ஒரண்டை இழுத்து பாக்கானுவ”என்றான்.
“ஹ்ம்ம் சரி தான்”என்றதும் “ஒறங்கறதென்டா ஒறங்கு கொஞ்சம் தோப்பு வரைக்கும் போயிட்டு வாரேன்”என்று எழுந்து கொள்ள