Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி…..11

குட் லக் சுந்தரி…11

லண்டன் விமான நிலையத்தில் அமர்ந்திருந்தான் விக்ரம்.இரு கன்னத்திலும் கை தடம் பதிந்திருந்தது.அதை மறைப்பதற்காக கோர்ட்டின் காலரை எடுத்துவிட்டுருந்தான்.முகமும்,அகமும் உலைகலன் போல கொதித்துக் கொண்டிருந்தது.

“நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட தாத்தா….என்னை சீண்டிருக்க கூடாது…..என்னையேவே அடிச்சட்டல்ல….இதுக்கான தண்டனையை நான் கொடுக்கமா ஓயமாட்டேன்….”என்ற விக்ரமின் முகத்தில் கோபம்,வெறுப்பு,வன்மம் அனைத்தும் குடிகொண்டிருந்தது.

“ரிலாக்‌ஸ் விக்ரம்….அவசரப்படாத….இப்ப நீ போற காரியம் நல்ல படியா நடந்தாகனும்….அது தான் முக்கியம்….அதுக்கு அப்பறம் அவங்களை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்கலாம் என்றவனுக்குள் இரண்டு நாட்கள் முன்பு ரவி கூறியவை தான் நினைவில் வந்தது.



Advertisement

நேசன் வந்துவிட்டு சென்று இரண்டு நாட்கள் கடந்திருந்தது.விக்ரம் தன் அறையில் அடிப்பட்ட சிங்கம் போல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.அவன் முகத்தில் தெரிந்த மிதமிஞ்சிய கோபம் தாண்டவமாடியது.நேசன் அவனை அடித்தது மட்டுமல்லாமல் மிரட்டிவிட்டு தான் சென்றிருந்தார்.

“இனி நீ சுந்தரியோட பேரைக்கூட சொல்லக்கூடாது….”என்றவர்,மகனையையும் விட்டு வைக்கவில்லை,

“இது தான் உன் வளர்ப்பு பார்த்தியா…என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்குறான்னு….இனி அம்மா,அப்பான்னு ஊருக்கு வந்துடாத….”என்றுவிட்டு சென்றிருந்தார்.ரவிக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ விக்ரமின் கன்னம் வீங்கும் அளவிற்கு விட்டார் ஒரு அறை,

Advertisement

“இதுவரை உன்னை நான் எதுவும் கேட்டதில்ல….ஏனா நீ என் புள்ள தப்பான வேலை எதுவும் செய்யமாட்டனு நம்பிக்கை ஆனா இன்னைக்கு அந்த நம்பிக்கையை நீ குழி தோண்டி பொதைச்சுட்ட….என் அப்பா உடைஞ்சு போய் நான் பார்த்ததே இல்லடா…அவரையே உடைச்சிட்ட….இனி என்கிட்டேந்து எதையும் எதிர்பார்க்காத….நீ உருவாக்கி வச்சிருக்கியே உன்னோட கம்பெனி அதோட மெயின் ஷேர் கோல்டர் நான் தான் நியாபகம் இருக்குள்ள…எங்க அப்பா வந்து உன்னை மன்னிச்சுட்டேன் சொன்னா மட்டும் தான் உன் கம்பெனி கைக்கு வரும்…..இல்ல….”என்றவர் கைவிரித்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

Advertisement

“உன் அம்மாகிட்ட சொல்லி நினைச்சதை சாதிக்கலாம்னு நினைக்காத….இனி உன்னோட விஷயத்துல யார் என்ன சொன்னாலும் நான் கேட்கறதா இல்ல…அது அவளா இருந்தாலும் சரி தான்….”என்றுவிட்டு சென்றிருந்தார்.இந்த சம்பவங்கள் நடக்கும் போது நிரோஷா அங்கு இல்லாமல் போனது கூட நல்லது தான் என்று நினைத்தார் ரவி.தன் முன்னே இறுகி போய் நின்ற மகனைக் கண்டு ரவிக்கு நெஞ்சம் அடைத்தது தந்தை வேறு அடித்திருக்க இப்போது அவர் அடித்தன் தடமும் இருக்க,

“விக்ரம்….”என்று மகனின் தலையை தடவ போக வேகமாக அவரை விட்டு விலகி நின்றான் அவன்.

“உனக்கு இப்ப என் மேல கோபம் இருக்கும் ஆனா…நீ செஞ்சது சரி கிடையாது விக்ரம்….”என்றவர் மேலும் ஏதோ கூற வர,

Advertisement

“கிளம்புங்க…. என் கம்பெனியை எப்படி காப்பாதிக்கனும் எனக்கு தெரியும்….நீங்க கிளம்பலாம்…”என்று கூற,மகனின் எண்ணம் ரவிக்கு புரிந்ததோ என்னவோ,

“முட்டாள் தனமா ஏதாவது காரியத்தை செஞ்சு….மொத்தமா உன் எதிர்காலத்தை பாழாக்கிக்காத….என்னை மீறி உனக்கு இங்க யாரும் உதவ மாட்டாங்க….”என்றுவிட்டு அவர் சென்றுவிட,

“ஆஆஆஆ……”என்று கத்தியவன் வீட்டில் உள்ள அனைத்தையும் உடைக்க ஆரம்பித்துவிட்டான்.கோபம்,கோபம்,கோபம் மட்டுமே கண்முன்னே நேசனும்,சுந்தரியும் இருந்திருந்தால் இருவரையும் தும்சம் செய்யும் அளவிற்கு அவனின் கோபம் அறிவை மழுங்கடிக்க செய்து கொண்டிருந்தது.அடுத்த அரைமணிநேரத்தில் டேவிட் விக்ரமின் வீட்டில் இருந்தான்.

“டேய்…என்னடா இது….ஏன் இப்படி????”என்று வீடு இருக்கும் கோலத்தைக் கண்டு கேட்டுக் கொண்டே வந்த டேவிட் விக்ரமின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்து நின்றுவிட்டான்.இதுவரை அவனை யாரும் அவனை திட்டிக் கூட பார்த்திராதவன் இரு கன்னங்களும் கன்றி போகும் அளவிற்கு அடி வாங்கியிருக்க,

“என்னடா ஆச்சு???”என்றான் தன் நண்பனின் நிலை கண்டு கலங்கியவாரே,

“போ….”என்று அவனின் கையை தட்டிவிட்ட விக்ரமின் முகமும் இப்போது கலக்கத்தில் இருக்க,

“ப்ச்…டேய்….இரு வரேன்….”என்று வேகமாக உள்ளே சென்று ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து விக்ரமின் கன்னத்தில் வைக்க,

“ஆஆஆ…..போடா…ஆஆஆ…..”என்று பெருங் குரலெடுத்து கத்தியவனைக் கண்டு டேவிட்டிற்கே பயம் பிடித்துக் கொண்டது.அதுவே இரண்டு நாட்கள் தொடர,

“நீ இப்படியே இருந்தா எல்லாம் சரியாகாது விக்ரம்….அங்கிள் வேற மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருக்கார்….”என்று டேவிட் விக்ரமிடம் கூறிக் கொண்டிருந்தான்.

“ஏதாவது பேசு….உன் கிட்ட தான் கேட்குறேன்…..”

“எனக்கு கேட்குது…..”என்று வாய் திறந்தான் விக்ரம்.முழுதாக இரு நாட்களுக்கு பிறகு பேசுகிறான்.தொண்டை அடைத்து வார்த்தைகளே மிக மெல்லியதாக தான் வெளிவந்தது.

“என்ன செய்யலாம்…..”என்று டேவிட் கேட்க,

“நீ போ….அந்த பைலை எடுத்துட்டு போ….இப்போதைக்கு எதுவும் செய்யமாட்டார்….ஆனா நாம சீக்கிரமா அவர் கிட்ட இருக்குற ஷேரை வாங்கிடனும் இல்ல கண்டிப்பா பிரச்சனை பண்ணுவார்….நீ உன் டேடிக்கிட்டேந்து ஷேரை உன் பேர்ல மாத்திடு….இனி இது முழுக்க நம்ம கம்பெனியா தான் இருக்கனும்…நமக்கு யார் உதவியும் வேண்டாம்….”

“சரி பணத்துக்கு என்ன பண்ண போற….அங்கிள் தான் எல்லாத்தையும் லாக் பண்ணியிருக்காரே…..”

“கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடுவேன்….”என்றவனை புரியாமல் டேவிட் பார்க்க,

“நான் இண்டியா போறேன்….”என்று கூற,

“ரிவெஞ்ச்….”

“ம்ம் நாட் லைக் தட்….பட் அப்படி தான் வச்சுக்கோயேன்….”என்று கூற,

“எனக்கு புரியலடா…..”

“உனக்கு புரிய வேண்டாம்….நான் போறதுக்கு ஏற்பாடு பண்ணு….”என்றுவிட்டு மீண்டும் ஜன்னலை வெறிக்க தொடங்கிவிட்டான்.

“டேய் விக்ரம்…..”என்ற சத்ததில் நிகழ்வுக்கு வந்தான் விக்ரம்.விமான நிலையத்தில் அமர்ந்திருந்தான்.இன்னும் அவனின் விமான அறிவிப்பு வர நேரமிருக்க,

“நான் என் டேட் கிட்ட பேசிட்டேன்டா….அவரும் ஓகே சொல்லிட்டாரு….”என்று டேவிட் கூற,

“ம்ம் குட்….சீக்கிரமா ஷேரை உன் பேருக்கு சேஞ்ச பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு….இந்த நம்பர் உன்கிட்ட மட்டும் இருக்கட்டும் யாருக்கும் கொடுக்காத….”என்றான்.

“டேய் நீ சொல்லுறத எல்லாம் பார்த்தா…ஏதோ கடத்தல் பண்ண போற மாதிரியே இருக்கு….”என்று டேவிட் கூற,விக்ரம் அதற்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க,

“ஏதாவது பேசுடா…..”

“இனி எல்லாம் அக்‌ஷன் தான்…..”என்றான் தன் தோள் பையை மாட்டிக் கொண்டு,

“ம்ம்….அது சரி….என்னவோ பண்ணு…..ஆனா இந்த தடவையாவது மாட்டிக்காம பண்ணு….”என்று கூற,

“இனி அவ தான் என்கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு படப் போறா….லெட் வெயிட் அண்ட் ஸி….பை…”என்றுவிட்டு செல்லும் விக்ரமை பார்த்துக் கொண்டிருந்த டேவிட்ற்கு என்ன நடக்க போகிறதோ என்ற பயம்.அதே போல தான் சுந்தரியும் இங்கு நேசனை திட்டிக் கொண்டிருந்தாள்.

“நீங்க பண்ணிட்டு வந்துருக்க காரியத்துக்கு அவருக்கு இன்னும் தான் கோபம் தான் வரும்….இது தேவையில்லாத பிரச்சனையை இழுத்துட்டு வந்த மாதிரி இருக்கு….”என்று கூற,

“என்னடீ என்னனென்னவோ பேசுற…..எனக்கு பயமா இருக்கு….”என்ற வசந்தியை பார்த்த சுந்தரிக்கு பாவமாக இருந்தது.இந்த இரண்டு நாட்களாக அவர் சரிவர தூங்கவே இல்லை,அவர் மட்டுமா இதோ லட்சுமியும் தான்.தன் பேரனா இப்படி ஒரு செயலை செய்தது என்று நினைத்து நினைத்து மறுகி கொண்டிருக்கிறார்.

“நான் என்னமா தப்பு செஞ்சிட்டேன்….அவன் பண்ண தப்புக்கு நான் தண்டனை கொடுத்துட்டு வந்தேன்….”என்று நேசன் பேச,அவரை அயர்ச்சியாக பார்த்தவள்,

“தாத்தா ஒண்ணு புரிஞ்சுக்குங்க….உங்க பேரனை நான் சாதாரணமா தான் திட்டுனேன்….அதுவும் அவரோட தாத்தா,பாட்டிக்காக தான் பேசினேன்….அது கூட புரியாம என் பேரை இப்படி கெடுத்திருக்கார்னா….இப்ப நீங்க பண்ணிட்டு வந்திருக்க காரியத்துக்கு என்ன நடக்க போகுதோ….”என்ற சுந்தரியின் வார்த்தைகளில் அங்கிருந்த அனைவருக்குமே சற்று பயம் பிடிக்க தான் செய்தது.

“என்ன செஞ்சிடுவான்….என்னை மீறி எதுவும் நடக்காது….நான் பார்த்துக்குறேன்….”என்று சுந்தரிக்கும் தனக்கும் சேர்த்தே தைரியம் மூட்டினார் நேசன்.சுந்தரிக்கு ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று மனது எடுத்துரைத்தாலும் அதை வெளியில் கூறவில்லை.ஏற்கனவே பயத்தில் இருப்பவர்களை மேலும் பயம் கொள்ள செய்ய வேண்டாம் என்று அமைதியாகிவிட்டாள்.

“ப்பா…நானும் சுந்தரியும் வேற எங்காயவது போயிடட்டுமா……”என்று வசந்தி நடுக்கத்துடன் கேட்க,நேசன் ஏதோ சொல்ல வரும் முன்,

“வேண்டாம்மா….”என்று முதலில் மறுத்த சுந்தரி,

“அது சரிவராது….பேய்க்கு பயந்து நாம பிசாசு கிட்ட மாட்டின கதையா மாறிடகூடாது….அவசரப்படாத….யோசிக்கலாம்….”என்றுவிட்டாள்.அவளுக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை முதலில் தான் தெளிவு பெற வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் இனி அவள் வாழ்வில் யோசிக்க கூட முடியாத நிகழ்வுகள் நிகழ போகின்றன என்பதை அவள் அறியவில்லை.

சுந்தரி கூறியதைக் கேட்ட நேசன் அன்று இரவே தன் மகன் ரவிக்கு அழைத்துவிட்டார்.

“உன் மகன் எங்கடா இருக்கான்…..”என்று மகன் எடுத்ததும் எகவசனத்தில் பேச,ஏற்கனவே மகனை அடித்துவிட்டோம் என்ற தவிப்பில் இருந்தவருக்கு தந்தை மீண்டும் மகனை திட்டவும் கோபம் வந்துவிட்டது.

“ப்பா ஏதோ ஒரு தடவை என் பையன் தப்பு பண்ணிட்டான் அதுக்காக அவனை நீங்க சும்மா திட்டறதை நான் அனுமதிக்க முடியாது…..”என்று அவரும் கோபமாக பேச,எதிர் முனையில் அமைதி.ரவிக்கு மிகவும் கஷ்டமாகி போனது யாரை பார்ப்பது ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் மகன்.இருவரும் அவரின் வாழ்வில் முக்கியமானவர்களே.

“ப்பா….ப்பா லையன்ல இருக்கீங்களா….”

“ம்ம்….ரவி வசந்தி வீட்டை காலி பண்ணட்டுமானு கேட்குது….”என்று கூற,

“என்ன???”என்றவருக்கு அத்தனை அதிர்ச்சி,சிறுவயதில் இருந்தே வசந்தியை தெரியும்.இருவருக்கும் பத்து வருட வேறுபாடு.தன் சொந்த அக்காவை போல தான் வசந்தியை பாவித்தார் ரவி.

“ப்பா….நான் வேணா பேசுறேன் ப்பா…இனி தப்பு நடக்காதுப்பா….அவனை கண்டிச்சிட்டேன்….”என்று கூற,

“இனி கண்டிச்சு என்னாக போகுது…..”என்றவருக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை.தான் கூறி எதுவும் மகனின் குடும்பத்தில் நடக்க போவது இல்லை பின் எதற்கு கூற வேண்டும் என்று விட்டுவிட்டார்.

“ப்பா…என்னப்பா பேசமாட்டேங்குறீங்க…நான் வசந்திக்கிட்ட பேசுறேன்…..”என்று மீண்டும் கூற,

“வேண்டாம் ரவி நான் பார்த்துக்குறேன்….நீ உன் புள்ளையை பாரு….”என்றுவிட்டு வைத்துவிட்டார்.வீடே ஏதோ மயானம் போல் தான் இருந்தது யாரும் யாருடனும் சரியாக பேசுவதில்லை.சுந்தரி மட்டும் கடைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்று சுந்தரி தன் கடைக்கு சென்று வீடு திரும்பும் போதே நேரம் கடந்திருக்க,

“ஏன்டீ….இவ்வளவு நேரம்…..”என்று வசந்தி கேட்டார்.இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது.

“ஒண்ணுமில்லமா…..கொஞ்சம் வேலை…..”என்றவிட்டு தன் அறைக்குள் நுழைந்துவிட்டாள் சுந்தரி.வசந்தி இப்போதெல்லாம் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை இன்னும் தீவிரமாக்கி இருந்தார்.நேசனும் தன் பங்கிற்கு வரன்களை தேட துவங்கியிருக்க இன்னும் எதுவும் தழைத்து வரவில்லை.

“சுந்தரி…சுந்தரி…..”என்று இரு முறை கதவை தட்டியும் மகள் கதவை திறக்காததால் வசந்தி பயத்துடன் இன்னும் வேகமாக தட்ட துவங்க,

“ம்மா…வந்துட்டேன்….”என்று கத்தியபடியே கதவை திறந்தாள் சுந்தரி.முகத்தை கழுவியிருப்பாள் போலும் முகமெங்கும் நீர் திவளைகள் ஆங்காங்கே இருந்தது.

“நீ பாட்டுக்கு உள்ள போய் கதவை சாதிட்ட….அதான்….”என்று வசந்தி பயத்துடன் கூற,

“ம்மா….எதுக்கு பயம்….நான் வாஷ் ரூம் போயிருந்தேன்….”என்றவளின் குரலே என்னவோ போல் இருந்தது.

“என்னடீ…என்னவோ போல இருக்க…..”என்று வசந்தி கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லமா….நான் நல்லா தான் இருக்கேன்….”

“இல்லடீ….உன் முகம்….”என்று ஏதோ கூற வந்தவரை தடுத்த சுந்தரி,

“ம்மா….பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு வா….”என்று அனுப்பி வைத்தவளுக்கு,

“ப்பா….எவ்வளவு கேள்வி கேட்குறாங்க….இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்தா கூட உளறியிருப்பேன்….”என்றவளுக்குள் இன்று வந்த அழைப்பை பற்றிய நினைவு தான்.அன்று கடையில் வேலை அதிகம் என்பதால் அதை முடித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.

“க்கா….இந்த பிளவுஸ் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டு நீங்க கிளம்புங்க…மத்ததை நாளைக்கு பார்த்துக்கலாம்…..”என்று கூறிக் கொண்டிருக்க அப்போது தான் அவளின் கைபேசி இசைந்தது.ஏதோ புது நம்பராக வரவும் முதலில் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் தொடர்ந்து வரவும் எடுத்துவிட்டாள்.

“ஹலோ…..”

“சு…சுந்தரிஇஇஇ…..”என்ற குரலிலேயே அது யார் என்று தெரிந்துவிட்டது.விக்ரம் தான் அழைத்திருந்தான்.சுந்தரிக்கு திக் என்று இருந்த போதும் அதை மறைத்துக் கொண்டு,

“யாரு???”

“அட தெரிஞ்சுகிட்டே கேட்டா நான் என்ன பண்ண…..”என்றவனின் குரலில் அதிகத்திற்கும் நக்கல் வழிந்தது.

“பேர் சொன்னா தான் தெரியும்….”என்று அவளும் விடாமல் பேச,

“ம்ம்….அப்போ நான் யாருனு உனக்கு தெரியலை…..அப்படி தான….”

“ஆமா…வை போனை….”என்றுவிட்டு அவள் வைக்க முற்பட,

“தப்பாச்சே…..இனி மறக்கவே மாட்ட….மறக்கவும் விடமாட்டேன்…..உனக்கும் சரி அந்த பெரிய மனுஷனுக்கும் சரி…..சீக்கிரம் மீட் பண்ணுவோம் பை…..”என்றுவிட்டு அவன் வைத்துவிட்டான்.சுந்தரி தான் பேசியை காதில் வைத்தபடியே நின்றிருந்தாள்.மனதில் பயம் சூழ்ந்து கொண்டது அவனின் வார்த்தைகளில் இருந்தும் தன்னை சமாளித்து கொண்டு தான் வீடு வந்தாள்.ஆனாலும் ஏதோ நெருடிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவன் என்ன பெரிய இவனா என்ன தான் செஞ்சிடுறான்னு பார்க்கலாம் என்று தன்னை தைரிய படுத்தியவளுக்கு தெரியவில்லை தன் தைரியம் அனைத்தும் வடிந்து நிற்க போகிறாள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!