கழுகு தன் அதீத பார்வை திறனால் தொலை தூரத்தில் பறந்தாலும் தரையில் இருக்கும் இரையை துல்லியமாக வேட்டையாடுமாம். அது போல் பார்த்திபனின் விழிகள் பாரதியின் இளமையை வேட்டையாட முயன்று கொண்டிருந்தது.
Advertisement
முதல் முறை ஒரு பெண்ணை கழுத்திற்கு கீழ் உற்று நோக்கி கவனிக்கிறான். வெண்கழுத்து அதில் இன்று காலை அவன் அணிவித்த தங்க தாலியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவள் தோள்பட்டையில் ஜாக்கெட் மாட்டியிருக்கும் இடத்தில் சிறிய மச்சம் இருந்தது. அது பார்த்தினை கள்ளுண்ட கயவன் போல் மயக்கம் கொள்ள செய்தது.
இதுவரை வெயில் படாத இடம் போலும் ஜாக்கெட்டின் இடைவெளியில் இருந்த நிறத்திற்கும், கண்ணாடி வளையல் சினுங்கிய இடத்தின் நிறத்திற்கும் நிறைய வேறு பாடு. வெளிர் நிறத்திற்கு மத்தியில் இருந்த மச்சம் அவனுள் பிச்சு திங்க வைக்கும் எண்ணத்தை விதைத்தது.
Advertisement
Advertisement
அப்படியே தன் பார்வையெனும் கேமராவை கீழே இறக்கியவனுக்கு மார்பை மறைக்கும் ஜாக்கெட்டின் மீதும், அதை மூடியிருந்த சேலையின் மீதும் கோபம் கோபமாக வந்தது கிழித்து எறகயும் அளவுக்கு. அவனின் இடது பக்கம் நங்கை இருப்பதால் பாவம் அவனுக்கு பெண்ணவளின் வெண்ணை இடையும், மாராப்பு மறைக்க முயன்று தோற்று தெரியும் ஒரு பக்க இளமையையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
முதுகு அது எங்கே தெரிந்தது. தன் குட்டை முடியைப் பரவ விட்டு அதை போர்வை போல் மூடி இருந்தாள்.
Advertisement
கழுத்து முதல் பாதம் வரை அவனுக்கு அந்தப் பட்டு புடவை மட்டுமே காட்சி தந்தது.
“ச்ச.. ஃபஸ்ட் நைட் ரூம்கு ஏந்தா சேலய கட்டி அனுப்புறாங்களோ! ஒரு ப்ராக்… மிடி… ஷாட் மிடியா இருந்தா எப்படி இருக்கும்? செம்ம மூட இருக்கும்.. ஏன் அப்படில்லாம் டிரெஸ் பண்ணிட்டு அனுப்ப மாட்டேங்கிறாங்க. என்ன காரணமா இருக்கும்?” என ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியவனின் பார்வை அவளின் முகத்தில் வந்து நின்றது.
கலவையான முகம். ஆனால் அதில் பருவ பெண்ணுக்கான துருதுருப்போ… அறியாமை என்று சொல்லப்படும் இன்செஸ்ட் தன்மையும் இல்லை. வயதை மீறிய முதிர்வும் பக்குவமும் இருந்தது.
‘இவளுக்கும் எங்கப்பாக்கும் செட் ஆகிடும்.. ஏன்னா அவரு எதிர் பாக்குற எல்லா குவாலிபிகேஷனும்… ஐ மீன் பொறுப்பு பருப்பு எல்லாம் அளவுக்கு மீறி விளைந்து அறுவட பண்ண தயாரா இருக்கு.’ என்று நொந்து கொண்டவன்,
‘இந்த முகம் லவ்வோட வெட்கத்தோட என்னைப் பாத்தா எப்படி இருக்கும்? என்ன பண்ணி வெட்கத்த கொண்டு வர்றது?’ என்ற ஆராய்ச்சியில் இறங்க, பாரதி தலை திருப்பி பார்த்தாள்.
பார்த்திபன் உற்று உற்று பார்த்துக் கொண்டு இருந்தான் அல்லவா! அதை உணர்ந்து விட்டாள் பாரதி. அவனின் பார்வையின் வீச்சு தாங்காது வெட்கம் எல்லாம் வரவில்லை. கோபம் தான் வந்தது.
” இன்னாய்யா அப்படி லுக்கு வுடுற. மூஞ்சிய அந்தான்ட திருப்பு. ” என்கு, அவன் அவளை அருகில் வருமாறு விரலாசைத்தான்.
‘இன்னாத்துக்கு கூப்பிடுறான். பார்வையே சரியில்லயே.’ என யோசித்தவள், சில நொடி மறுப்பிற்கு பின் அவனின் பிடிவாதத்தால், அந்த இதய வடிவம் செய்யப்பட்ட மலரில் மேல் கரம் வைத்து அவனை நோக்கி நகர்ந்து அமர்ந்து, ‘என்ன?’ எனச் செதுக்கப்படாத தன் புருவங்களை உயர்த்தினாள்.
“உன்ன சேலைல பாக்குறப்ப செம்…ம அழகா இருக்கியே.. ஏன்.. ” எனக் கேட்க, ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்து முறைத்து,
“ரொம்ப முக்கியம்…” என்று விட்டு எழப் போனவளை எழ விடாது கரம் பற்றி இழுக்க, பெண்ணவள் மெத்தையில் பொத்தென விழுந்தாள்.
“எனக்கு முக்கியம் டி.. நீ மட்டும் ஏன் என்னோட கண்ணுக்குச் சேலைல தேவதை மாதிரி தெரியுற?”
“உனக்கு நான் மட்டுமில்ல… எல்லா பொண்ணுமே தேவதையாத்தா தெரிவாளுக. வுடு என்னை. நானே எப்படா இத அவுத்து எறியலாம்னு பாத்துக்கின்னு இருக்கேன். நீ வேற… அழகா இருக்க அப்சரஸ்ஸா இருக்கன்னு காமெடி பண்ணிக்கிட்டு. பட்டு சேலைக்குள்ள அவிஞ்சி போய் கிடக்குறது அவ அவளுக்கு தான் தெரியும்.” என்றபடி எழுந்தவள்,
“உ டிரெஸ் எதாவது இருந்தா குடு. ஏங்கிட்ட மாத்து ட்ரெஸ் இல்ல.” என்றாள் அதிகாரமாக. அவன் மாட்டேன் என்பது போல் தலையசைத்து,
“இப்படியே இருடி.. இது தான் கும்முன்னு இருக்கு. ஒரு மாதிரி மூடாவும் இருக்கு. ” என்று குதூகலமாகச் சொல்ல, அவள் திரும்பி தன் கண்கள் இடுங்க முறைத்தாள்.
” நான் பால்கனில போய் படுத்துக்கிறேன். ” எனப் போர்வையையும் தலையணையையும் எடுக்க போனாள்.
“அங்க ஏன் போகணும்?”
“பெறவு எங்க தூங்குறதாம்? வெளில போனாக்க உங்கத்த வந்து நிப்பாங்க. பரவாயில்லயா?”
“ம்ச்… இங்கயே படு டி. நாம பெட்ட ஷேர் பண்ணிக்கக்லாம். ஒன் பெட் ஒன் பில்லோ. என்ன சொல்ற?” எனக் கண்சிமிட்டி கேட்க,
“தண்ணிய கீண்ணிய போட்டுன்னு வந்துக்கிறயா என்ன? ” என அவனின் அருகில் வந்து முகர்ந்து பார்த்தாள்.
“வந்ததுல இருந்து ஒரு மார்க்கமாவே பேசிக்கின்னே கெடக்க. மூடிட்டு இருந்தா பேட்ல படுக்கலாம். இல்லன்னா ICU ல தாஅன உனக்கு பெட்டு. ஜாக்கிறத..” என விரல் நீட்டி மிரட்ட,
“ஏய் என்ன டி வாய் அதிகம் பேசுற. எவ்வீட்டுல வந்து என்னையே ICU அட்மிட் பண்ணுவேன்னு சொல்ற. உனக்கு கொழுப்பு அதிகம் தாண்டி..” எனக் கோபமாக எழ,
“இதோ பாரு உனக்கு நான் அக்ரிமெண்ட் பொண்டாட்டித்தா. அதுக்கின்னு டி போட்டு கூப்பிடுற வேலயெல்லாம் வச்சிக்கின்ன. மூஞ்சிய டாரா கீச்சிடுவேன்.” என்றவளின் மிரட்டல் அவனுக்கு குதூகலமாய் இருந்திருக்க வேண்டும். மெத்தையில் கிடந்த மல்லிகையைக் கரத்தில் சுருட்டியபடி சில்மிஷமாய் அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
அவனுடன் பதிலுக்கு பதில் வாதிடுவது நேர விரயம் என்றுணர்ந்தவள், அவனின் கபோர்டை திறந்தாள். அதில் அவளுக்கான உடைகள் அனைத்தும் இருந்தது.
இது… இது தான் பார்த்திபன். பெண்களிடம் மட்டும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வான். அவனின் இந்த அக்கறை தான் காதல் கொள்ள வைத்தது. உடையைக் கையில் எடுத்துக் கொண்டு புன்சிரிப்புடன் குளியலறையை நோக்கி செல்ல,
” சைஸ் எல்லாம் சரியா இருக்கும். கவல படத் தேவையில்ல மைம்மா.. ” என்றவனின் குரலை காதில் வாங்கி கொள்ளாது உடை மாற்றிக் கொண்டு வந்தால், அறை வேறு விதமாக இருந்தது.
ஒற்றை மெத்தைக்குப் பதில் இரண்டு மெத்தைகள். இரண்டிற்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது. பூ அலங்காரங்கள் மொத்தமாய் குப்பை தொட்டியை நிறைத்திருந்தது. கூடவே அவளுக்கான உணவும் வந்திருக்க,
“மைம்மா பால்கனி போலாமா சாப்பிட. ” என்றான். மெல்லிய தலையசைப்புடன் அவனுடன் சென்றாள்.
பேச்சும் சிரிப்புமாக அவளைச் சீண்டியபடி அவனை முறைத்தபடி உணவுண்டனர் இருவரும். ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது.
எந்தக் குடும்பத்தை தன் அன்னை வெறுத்து ஒதுக்கினாரோ! அந்தக் குடும்பத்து பையனைத் திருமணம் செய்து கொண்டு, மருமகளாகி இருப்பது தெரிந்தால் தன் அன்னையின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என நினைத்தவளுக்கு உறக்கம் வராமல் இருப்பது நியாயம் தானே!
இவர்கள் செய்த செயலுக்கு மன்னிப்பை வழங்கவோ! தண்டிக்கவோ முடியாத நிலைக்கு தன்னைத் தள்ளிவிட்டது இறைவன் தான் எனக் கடவுளைத் திட்டப்படி இருந்தவளை நித்திராதேவி வெகு விரைவிலேயே அணைத்துக் கொண்டாள். பார்த்திபனைத் தான் அணைக்கவில்லை. விடியும் வரை அவள் முகம் பார்த்தபடி படுத்திருந்தான்.
இந்த முறை என்ன திட்டத்துடன் வந்திருக்கிறாள்? மாமா சொல்வது போல் சொத்திற்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் வந்திருக்கிறாளா! அல்லது தங்களின் எதிரி நிறுவனமான RKG ஜுவல்லரி ஓனரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான குணசேகரனின் மகனான வீரமாறனுக்காக வேவு பார்க்க வந்திருக்கிறாளா?
இதற்கு முன் மாறனுக்காகத் தானே வேலை செய்தாள். இப்போதும் அவனுக்காக வந்திருக்கிறாளோ!! எனப் பலவாறு சிந்தித்தவனிற்கு முதல் முறை பாரதி, தன்னை ஏமாற்றி சென்றது நினைவு வந்தது.
கூடவே மனம் இதமாய்த் தென்றல் காற்று வந்து பாயும் சோலையாக பூப் பூத்து மணம் எங்கும் வீசியது.
மும்பை…
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம்…
அதிகாலை நான்கு மணியைக் கடிகாரம் காட்டினாலும் அந்த விமான நிலையத்தில் மட்டும் மக்கள் அதிகமாகவே இருந்தனர். சூரியனுக்குப் பதிலாக மின் விளக்குகளை ஒளிற விட்டதால் விடிந்துவிட்டது என நினைத்து மக்கள் நடமாடுகின்றனரோ! என்று எண்ணும் அளவுக்கு அந்த இடம் ஜெகஜோதியாக… மக்கள் கூட்டமாக… திருவிழா கோலமாக இருந்தது.
பல வெளிநாட்டு முகங்கள் கண்ணில் தெரிந்தது. பல கோட் சூட்டாக… பக்கத்தில் சென்றாலே மயங்கி விழும் அளவுக்குச் செயற்கை நறுமணங்களை அள்ளிப் பூசிக் கொண்ட பிஸ்னஸ் மேன் மற்றும் பிஸ்னஸ் விமன், சில குட்டிஸ், டீனேஜ்ஜர்ஸ் எனப் பலர் இருந்தனர்.
கையில் துப்பாக்கி ஏந்திய கார்ட்ஸ்… வெள்ளை நிற சீருடை அணிந்த சுங்கத்துறை அதிகாரிகள்… சுத்தம் செய்பவர்கள்… பயணம் செய்து வந்தவர்கள்… செல்ல காத்திருப்பவர்கள்… செல்பவரை வழியனுப்ப… வந்தவரைக் கூட்டிச் செல்ல… என அந்த அதிகாலை வேளையிலும் பிஸியாக இருந்தது அந்த விமான நிலையம்.
இந்தியாவின் தலைசிறந்த விமான நிலையத்தில் சத்ரபதி சிவாஜி விமானநிலையத்தின் வசதிகள் அனைத்தும் அளப்பரியது.
தடுக்கி விழுந்தால் டாக்ஸி சேவை கிடைக்கும். அதாவது அங்கு டாக்ஸி எளிதில் கிடைக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
அப்படி ஒரு டாக்ஸியில் தான் நம் நாயகன் பயணம் செய்து கொண்டிருக்கிறான். அவனை வரவேற்பது போல், குதிரை மேல் அமர்ந்திருந்து வாள் ஏந்தி கம்பீரமாக காட்சி தந்த சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலை இருக்க,
அதைக் கண்டவனுக்குள், ‘நான் தான் அந்த வீர மன்னனின் மறு பிறவி.’ என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்.
குதிரையில் இருந்து இறங்குவதாக நினைத்து ஸ்டெயில்லாக நீலமும் வெள்ளையும் கலந்த அந்த டாக்ஸியில் இருந்து குதித்திறங்கினான். பெற்காசுகளை அள்ளித் தெளிப்பது போல் ஓட்டுனருக்கு சில்லரை காசுகள் இல்லா ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்ட,
‘காலைலயே வந்துட்டான் பாரு சாவு கிறாக்கி. ‘ என ஹிந்தியில் நினைத்த ஓட்டுனரும் மீதி காசை தந்துவிட்டு திரும்பி பார்க்காது சென்றார்.
உற்சாகம் பார்த்திபனின் முகத்தில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்த அதிகாலை இருளில் உடலை ஊடுவிச் சென்ற குளிர் காற்று அவனுக்கு அதைத் தந்திருக்க வேண்டும்.
தன் துள்ளல் நடையுடன் ஏர்போர்ட்டுக்குள் செல்லாது அங்கிருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
ஏனெனில் வந்திருங்கும் சில நங்கைகள் அதிலும் வெள்ளைகார துரையம்மாக்களை சைட் அடிக்க அது தான் வசதி. அவனின் விமானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நேரம் இருக்கிறது. உள்ளே சென்றால் சில மாதுக்களை மட்டுமே பார்க்க முடியும். அதிலும் வெளிநாட்டு விறலிகளைக் காண வேண்டும் என்றால் வாசலில் தானே நிற்க வேண்டும்.
காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, கண்கள் பரபரக்க அங்கிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவன், தன் கடிகாரத்தை பார்க்க அது 4.45 என்றது. 5.15 விமானம் என்றால் குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே போர்டிங்க பூத்தில் அமர்ந்திருத்தல் நலம் என்பதால் வேகமாக தன் கரத்தை கால் சட்டைக்குள் விட்டு, கல்லூரி மாணவன் போல் ஒரு பேக்கை மாட்டிக் கொண்டு நடந்தவனை நகரவிடாமல் செய்தது அந்த சம்பவம்.
காக்கி உடை அணிந்த ஒரு செக்யூரிட்டி ஹிந்தியில் காச்மூச் எனக் கத்திக் கொண்டே, வாக்கி டாக்கியில் பலரை உதவிக்கு அழைத்தபடி இவனைக் கடந்து சென்றார்
“பாக்க பைல்வான் மாறித்தான் இருக்கான்! இவனே சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டமா! துப்பாக்கியெல்லாம் எதுக்கு வச்சிருக்கான். அத காட்டி விரட்ட வேண்டியது தான.” என நினைத்து வேக நடையுடன் கூட்டம் கூடியிருந்த இடத்தை நோக்கி சென்றான்.
அவனுக்குத் தேடும் வேலை எதுவும் வைக்காது நம் நாயகி நின்று கொண்டிருந்தாள். உடன் அவளின் குடும்பம். கூட்டத்தில் இருந்து தனித்து தெரிந்தாள் அவள். காரணம் பாரதி பெண்களின் சராசரி உயரத்தை விட சற்று அதிக உயரம் கொண்டவள்.
மஞ்சள் வண்ண லாங்க ஸ்கெட். அது அவளின் முட்டிக்குக் கீழே கணுக்கால்களைக் காட்டியபடி இருந்தது. கருப்பு நிறத்தில் முழு கைகள் வைத்த டீ-சர்ட். இளமையின் வனப்பைப் பிறருக்கு காட்டி விட கூடாது என்பதற்காக துப்பட்டாவால் கழுத்தைச் சுற்றி முன்னழகு மறைக்கும் வண்ணம் இறக்கி விட்டிருந்தாள். கூந்தல் ஃப்ரீ ஹேர் என்று விரித்தும் விடாமல், பின்னலிட்டு கட்டவும் செய்யாமல் சிறிய கேச் கிளிப் கொண்டு சில முடிகற்றைகளை மட்டும் கோர்த்து கட்டி, முடி முகத்தை மறைக்காதபடி நீட்டாக இருந்தது தலை அலங்காரம்.
மெல்லிய அலங்காரம் தான். ஆனால் அதில் பார்த்திபனை கவர்ந்ததோ அவள் தலையில் சூடிய பெரிய மலர் தான்.
‘ப்ரதர் அந்த பொண்ணு தலைல இருக்குறது ரோஸ் இல்ல. ‘ மி..
‘அப்ப அதுக்கு பேர் என்ன?’
‘அது.. அது.. ‘
‘உங்களுக்கே தெரியாததுனால தான மலர்ன்னு போட்டு விட்டிங்க.. நான் அதுக்கு ரோசான்னு பேர் வச்சதுல என்ன தப்பு? அத்தோட அந்த ரோசாவ சூட்டியிருக்குற என்னோட ஆள பாக்கும் போது ஒத்த ரோசான்னு கூப்பிட தோணுது.. ‘
“எது… இவன் ஆளா!!” என்றால் பார்த்திபன் முறைப்பான்.
ஒரு சைன் போர்டில் சாய்ந்து நின்று பாரதியை மட்டுமல்லாது கூச்சலிட்டு கொண்டிருந்த அவளின் குடும்பத்தையும் ரசித்தபடி நின்றான் அவன்.
முதல் முறை விமானத்தில் பயணம் செய்கிறாள் போலும். அதனால் வழி அனுப்ப எனச் சொந்தம் பந்தம் என ஊரே வந்திருந்தது. அவளுக்குப் பல அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தனர்.
“ப்ளைட்ல முன்ன பின்ன தெரியாதவங்க பிஸ்கட் குடுத்தா வாங்கி திங்காத. ஜன்னல தலைய விட்டு எட்டி பாக்காத. கைய நீட்டாத. கண்டெக்டர்ட்ட சொல்லி வை. அப்பதா நம்ம ஸ்டாப் வந்ததும் கரெட்டா இறக்கி விடுவாரு. இல்லன்னா வேற ஊருக்கு போய் இறங்கிடுவ. சப்பாத்தியும் குருமாவும் இந்த டப்பாள இருக்கு பசிச்சா எடுத்து சாப்பிடுக்க.” என்பது போன்ற பல அறிவுரைகள் வழங்க, பாரதி அவர்களைச் செல்லும்படி சொல்லும் முன், செக்யூரிட்டி வந்தார். இந்த இடத்தில் நிற்க கூடாது, எனச் சொல்லி அனுப்ப முயன்றார்.
“ம்கும்… எங்க பொண்ணு ப்ளைட்டுல ஏறி உக்காந்து எங்கள பாத்து டாட்டா காட்டுனாத்தா நாங்க போவோம்.” என்பது போல் அடம்பிடிக்க, அவர்களை வெளியே இழுத்து செல்லத்தான் அந்த செக்யூரிட்டி உதவிக்கு ஆள் தேடி சென்றார்.
நின்று ரசிக்க அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் இந்த ப்ளைட்டை விட்டு விட்டால் மாணிக்கத்தை யார் சமாளிப்பது? அதை விட முக்கியம் இன்று அவனின் செல்ல தாத்தாவின் பிறந்த நாள். 80 வயதாகும் அவருக்கும் அவனின் பாட்டிக்கும் இன்று சதாபிஷேக வைபவம்.
விடியும் சமயம், அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையான பார்த்திபன் அங்கு இருக்க வேண்டும. ஒத்த ரோசாவா இல்ல ஓல்டு தாத்தாவா எனக் காசைச் சுண்டி விட்டு பூவா தலையா போட்டு பார்த்தவனுக்குத் தாத்தா தலையாக கிடைக்க, தன் போர்டிங்க கேட்டிற்கு சென்றான். மனமே இல்லாமல் தான் விமானத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
எத்தனை மெதுவாக நடந்து சென்றாலும் படிக்கட்டை எறி முடித்து விட்டான். அழகிய புன்னகையுடன் ஏர்ஹவுஸ்டர்ஸ் வரவேற்றாலும், அடர் சிவப்பு நிற சாயத்தை அதரங்களில் பூசிய அவனின் ஒத்த ரோஜா மதியில் ஏறி நின்று கொண்டாள்.
“அவ்வளவு தான்.. ஒத்த ரோஜா என்னை ஒத்தைல விட்டுட்டு போய்ட்டா. ” என மனத்தை தேற்றிக் கொண்டவனுக்கு இன்ப அதிர்ச்சி தருவது போல் அவனின் ரோஜா அவன் அமரும் சீட்டிற்கு பக்கத்து சீட்டிலேயே மலர்ந்திருந்தாள்.