Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 9

அத்தியாயம்: 9

நீ..



Advertisement

வாழும்..

நிமிடங்கள்..

Advertisement

Advertisement

எனக்காக..

இருந்தால்..

Advertisement

நான்..

வாழும்..

நிமிடங்கள்..

உனக்காக..

மாறும்..

 இருக்கையில் அமர்ந்திருந்த ஒத்த ரோசாவிற்காக பார்த்திபன் வடித்த கவிதை.

‘ஆக்சலி அவனுக்கு கவிதல்லாம் வராது. இது எங்கயோ எதுலயோ படிச்சது அப்படியே காப்பி அடிச்சது…’

பார்த்திபன் கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தான். நம்ப முடியவில்லை. அவளும் தன்னுடன்!! தன் இருக்கைக்கு பக்கத்தில். ‘கடவுளே உன்னோட கருணை கடலுக்கு எவ்ளோ அடி ஆழம்னு தெரியல. பட் எனக்கு அதுல இருந்து ஒரு முத்து கிடைச்சிருக்கு. கண்டிப்பா அத நான் ப்ரேஸ்லெட்டில் செஞ்சி கையோட வச்சிக்கிறேன். ‘ எனக் கடவுள் அவனுக்கு வைத்திருக்கும் ஆப்பு தெரியாமல் அவருக்கு நன்றிகள் பல கூறியபடி ஒத்தரோசாவை நோக்கி நடந்தான்.

அவளோ கண்களை மூடி தன் முதல் பயணம் வெற்றி பெற வேண்டிக் கொண்டிருக்க, கையில் இருந்த பேக்கை மேலே வைத்து விட்டு அவளைப் பார்த்தபடி நின்றான் பார்த்திபன்.

கண் திறந்தவளின் முன் தன் முப்பத்திரண்டு பற்களும் தெரிய புன்னகை இளவரசன் போல் பார்த்திபன் நிற்க, பயந்திருக்க வேண்டும் அவள். விழி விரிய நெஞ்சில் கை வைத்தபடி பின்புறம் சாய்ந்து சீட்டில் தலை வைத்தாள்.

” Don’t panic.. It’s my seat.. ” என அவளின் பக்கத்து இருக்கையைக் காட்ட, பெண் எழுந்துகொண்டு அவனுக்கு வழி விட்டாள்.

முதல் பயணம் அல்லவா… அதனால் அவளின் உடல் மொழிகள் பயத்தில் படபடத்தன. கண்களில் சிறு மிரட்சியுடன் தன் சீட் பெல்ட்டை அணிந்தாள். இதழ் இறைவனிடம் சத்தமின்றி பேசத் தொடங்கியது.

“அப்படி என்ன வேண்டிக்கிறா?” என நினைத்தவனோ அவளின் அருகில் செல்ல, அங்கிருந்த பணிப் பெண்கள் அவனை ஏற இற பார்த்தபடி சென்றனர்.

இயந்திரப் பறவை தன் இறக்கையை விரித்து வானில் பறக்கத் தொடங்கியது. அவனும் அவள் கண் திறந்தால்… எதையாவது பேசி கரெட் செய்யலாம் என்று நினைக்க, அவள் கண் திறக்கவில்லை.

“உக்காந்த மேனிக்கே தூங்கிட்டா போல. நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான். வந்ததுக்கு சைட்டாவது அடிப்போம். ” எனப் பெண்ணவளின் மதி முகத்தைப் பார்வையால் அளந்தான். அரை மணி நேரம் சென்றிருக்கும் அவளின் கை கடிகாரத்தில் லேசாக சத்தம் வந்தது.

“ஓ… எந்திரிக்கிறதுக்கு அலாரம் வச்சிருக்கா போல. ” என நினைத்தவன் கண்களை மூடி தூங்குவது போல் நடிக்க,

“Excuse me.. Mr.. Hello.. ” என்ற தேன் குரல் காதில் கேட்க, அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுவது போல் கண்களைக் கசக்கியபடி நடித்தான்.

“क्या हम अपनी सीटें बदल लें?.” என ஹிந்தியில் கேட்க, அது தெரியாது முழித்தான் பார்த்திபன்.

அதைக் கண்டவள் அவனுக்குத் தான் பேசியது புரியவில்லையோ என நினைத்து விளக்கம் தர, அந்த விளக்கத்தையும் ஹிந்தியில் தர… பயலுக்கு சுத்தமா விளங்கல…

“One minute… I understand what you are talking about but I don’t understand what you are talking about.. Because.. I don’t know Hindi..” என்றான் ஆங்கிலத்தில்.

அதாவது ‘நீங்க பேசுறீங்கன்னு புரியுது.. பட் என்ன பேசுறீங்கன்னு புரியல.. ஏன்னா எனக்கு ஹிந்தி தெரியாது.. ‘ என்பது தான் பார்த்திபன் விட்ட பீட்டருக்கு அர்த்தம்.

“Shall we change our seats?” என இருக்கையை மாற்றிக் கொள்ளலாமா? எனக் கேட்டாள் பெண்.

“சுயர்… பட் ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?”

‘அவனுங்க இங்கிலீஸ்ல பேசிக்கட்டும் நாம தமிழ்ல மாத்திக்கிவோம்.. ‘

“ப்ளிஸ்… முதல்ல சேன்ஜ் பண்ணிக்கலாமே.. ” எனக் கெஞ்ச, விடுவான பார்த்திபன், ‘இந்த சீட் மட்டும் இல்லங்க.. இந்த ப்ளைட்டே உங்களுக்கு தான்.’ என்பதுபோல் இடைவரை குனிந்து சேவை செய்தான். அந்த சேவைக்கு நன்றி கூட சொல்லாது, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் பெண்.

‘அப்படி என்னத்த இவ்ளோ இன்ட்டெஸ்ட்டா பாக்குறா?’ என எட்டி பார்த்தவனுக்குள்ளும், இருந்த ரசனை உயிர் பெற்று பதப்படுத்தப்பட்ட மம்மி போல் நடமாட தொடங்கியது.

நடு வானம்… அதில் சூரியன் கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்த காட்சி தெரிய. மஞ்சள் வெயில் அந்தக் கண்ணாடி ஜன்னலை தாண்டி பெண்ணவளின் முகத்தில் வண்ணம் பூசியது. பார்த்திபன், மாதவனை ரசிப்பதா! இல்லை மங்கையை ரசிப்பதா! எனத் தெரியாது பட்டிமன்றம் நடத்த இடம் தேடும் அளவிற்கு சென்றான்.

நீளக் கண்கள்… ஆழ் கடல் என்று சொல்வார்களே அது போல் ஆழமாக இருந்து பார்த்திபனை இழுத்துக் கொண்டிருக்க, இளம் வெயிலில் தகித்த செப்பு அதரங்களும், அது புன்னகை சிந்தும் போது விரிந்து கன்னங்களின் செழுமையை எடுப்பாய் காட்டிய விதமும் அழகாய் இருந்தது. மூக்கு, இதை இன்னும் கொஞ்சம் இழுத்து விட்டு நல்ல வடிவத்திற்கு கொண்டு வந்திருக்கலாம்.

 ‘சைனாக்காரனுங்க மூக்கு மாதிரி‌ சற்று சப்பையா இருக்கு.’ என்றான் மனத்தோடு.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். பெண் இப்போது தான் பார்த்திபனை திரும்பி பார்த்தாள், புன்னகையுடன்.

 “இப்ப வேணும்னா நீங்க இந்த சீட்ல உக்காந்துக்கங்க.” என எழ பார்க்க,

“அதெல்லாம் வேண்டாம். இருக்கட்டும்… ஜன்னல் சீட் தான் வேணும்னு அடம்பிடிக்க நான் ஒன்னும் சின்ன கொழந்த இல்ல. அதே நேரம் இது என்னோட முதல் விமான பயணமும் இல்ல. சோ… ப்ளீஸ்…” என்க, பெண் சந்தோஷத்துடன் கீழே தெரிந்த பூமியை சிறு அச்சத்துடன் கண்டு மகிழ்ந்தாள்.

‘என்ன அந்த பக்கம் திரும்பிக்கிட்டா!! இப்ப எப்படி எம்பக்கம் திரும்ப வைக்கிறது.’ என யோசித்தவன்.

“சென்னைக்கா?” என்க, அவள் திரும்பிப் பார்த்தாள் சிறு புருவ முடிச்சுடன்.

“இல்ல சென்னைல தான் இறங்க போறிங்களான்னு கேட்டேன். “

“இல்ல.. பெங்களூர்..”

“பெங்களூரா!!”

“ம்.. பெங்களூர் தான். அந்த ஊர தாண்டி பறக்கும் போது ப்ளைன்ல இருந்து குதிச்சிடலாம்னு இருக்கேன். ” என்ற போது அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. உடன் சேர்ந்து சிரித்தான். சென்னை செல்லும் விமானம் வேறு எங்கு நிற்காது என்பதை குறிப்பிட்டு தன்னைக் கேலி செய்கிறாள் என்று உணர்ந்தாலும் சிரித்தான்.

“இது ஃப்ளைட்… ட்ரெயின் இல்ல… ஒவ்வொரு ஸ்டாபிங்கா நின்று போக…

“அப்ப சென்னைக்கு தான்.” என்றவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

“சென்னை ப்ளைட்ல ஏறி உக்காந்து சென்னைக்கி மட்டும் தான் போக முடியும். லண்டனுக்கா போக முடியும்..” என ஆடவனுக்கு பல்பு கொடுத்தவள் அறியமாட்டாள் அவன் அவளுடன் பேச்சை வளர்க்க அப்படி நடிக்கிறான் என்று.

“ஆமால்ல.. சென்னைக்கி தான போக முடியும். அங்க… எதுக்கு…. போறிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என ராகமாக கேட்க, பெண் அவனை நோக்கி இருக்கையிலேயே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்..

“ஆக்சலி எனக்கு சென்னைல யாரையுமே தெரியாது. எனக்கு லண்டன்ல எம்பீஏ படிக்க சீட் கிடைச்சிருக்கு. இத எங்க வீட்டுல சொன்னேனா… அவங்க கடல் கடந்துலாம் போக கூடாது. எல்லா ஃப்ளைட்டும் வெடிச்சி சிதறிடும்னு கண்ணீர் விட்டு ஒரே ஸீன்னு. “

“ம்… பாத்தேன்… வாசல்ல நின்னு செக்யூரிட்டிட்ட வாதம் பண்ணிட்டு இருந்தாங்க.” என்றான். அவள் அசட்டு சிரிப்பை சிந்தியபடி,

“நான் வெடிக்காதுன்னு சொன்னாலும் கேக்க மாட்டேன்னாங்க. அதா ஃப்ளைட்லாம் வெடிக்காது பாருங்க காட்டுறேன்னு சொல்லி சென்னைக்கி டிக்கெட் போட்டு கிளம்பிட்டேன்.

இது என்னோட ஃபர்ஸ்ட் ஜர்னி. அதா கொஞ்சம் நர்வஸ்ஸா இருக்கு. பட் நீங்க பேச ஆரம்பிச்சதும், கம்பார்ட்டபுல்லா இருக்கு. ஃபீலிங் பெட்டர்… தேங்க்ஸ்.. ” என்றபோது பார்த்திபன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.

“இப்ப சென்னைக்கு போய்டு, எப்ப ரிட்டன்? எங்க தங்குவிங்க? எத்தன நாள் ஸ்டே? ” எனக் கேட்டவன், அவளை எப்படியாவது உசார் செய்து தன் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பலத்த திட்டத்தை மனத்திற்குள் தீட்டினான்.

“இது 7.15க்கு லேண்டு ஆகும். திரும்ப 9.40 க்கு மும்பைக்கே கிளம்பும்னு சொன்னாங்க. அதா ரிட்டன் டிக்கெட் இதே ப்ளைட்டுக்கு எடுத்திட்டேன்.” என டிக்கெட்டி எடுத்த காட்ட, அதைக் கிழித்து எறியும் அளவுக்கு வந்த கோபத்தை அடக்கியவன்,

“அது வர…”

“அதுவர ஏர்போர்ட்ட சுத்தி பாக்க வேண்டியது தான். சென்னை ஏர்போர்ல ரிலாக்ஸ் பண்ண நிறைய இடம் இருக்குன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்லிருக்காங்க.” என்றபோது வட போச்சே என்று மனம் வருந்தியது.

“லண்டன்ல எந்த யுனிவர்சிட்டி. ஏன்னா நானும் அங்க தான் படிச்சேன். என்னால உனக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்ண முடியும். ” என்று கிடைத்த நேரத்தை வீணாக்காது பேசி பேசியே தீர்த்தான்.

இனிக்க இனிக்க பேசுன பொண்ணு இனிப்பா அல்வா குடுத்திட்டு போவான்னு பார்த்திபன் கனவுல கூட எதிர் பாத்திருக்க மாட்டான்…

பாவம்…

இந்த நொடி இப்படியே உறைந்து போகாதா!!

தோளுரசும் கரங்களைத் தன் கரம் கோர்த்து நடக்காதா!!! என்ற ஏக்கத்தைப் பார்த்திபன் மனம் விதைத்தது.

எவ்வளவு பேசினான். என்ன பேசினான் என்றெல்லாம் தெரியாது. ஸ்வீட் நத்திங்ஸ்ஸாக பேசிபடியே இயந்திரப் பறவையில் இருந்து இறங்கியவர்களைச் சென்னை விமான நிலையம் உற்சாகமாக வரவேற்றது.

அங்கிருந்த புக் ஷாப்பில் நுழைந்தவர்கள், யார் எழுதினார் என்றே தெரியாத புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க, நேரம் நகர்ந்தது.

“Time’s up… நான் போய் ஏர்லயன்ஸ் தர்ற என்னோட பிரேக்பாஸ்ட்டை எடுத்திட்டு வெய்ட் பண்றேன். பை பார்த்திபன். உங்கள சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். Thanks for everything.. ” என்று நடக்க,

“ஹேய்… ப்ரேக் பாஸ்ட் தான. இங்க ஃபுட் கோர்ட் இருக்கும். நல்ல சாப்பாடா… உங்க அம்மா சொன்ன மாதிரி சப்பாத்தி பன்னீர் குருமா கூட கிடைக்கும். “

“கிடைக்கும் தான். பட் இங்க வாட்டர் பாட்டிலோட விலையே ஜாஸ்தி. இதுல டிப்பன்!! யோசிச்சி கூட பாக்க முடியாது.” என்றாள் விழி விரிந்து.

“கமான்… இது என்னோட ட்ரீட். என்னோட காலை பொழுத இனிமையா உதையமானதுக்கு. ” என்றவனைபப் புருவங்களை உயர்த்தி குறுஞ்சிரிப்புடன் பார்க்க,

“அதாவது இன்னைக்கி என்னோட கிரான்ட் பேரன்ஸ்க்கு மேரேஜ். அதுக்கு நான் குடுக்குற சின்ன விருந்தா இது இருக்கட்டும். கல்யாண சாப்பாடு மாதிரி. உன்ன கூட்டீட்டு போகலாம்னு நினைச்சேன் பட் முடியாததுனால இந்த ட்ரீட். என்னோட தாத்தா பாட்டி சந்தோஷப்படுவாங்க.” என்க, அவள் அனந்தராமன் அகல்யா தம்பதியினரைப் பற்றி கேட்டு ஃபோனில் அவர்களுடன் உரையாடி வாழ்த்துக்கள் சொல்லி அவனுடன் உணவு உண்ண சென்றாள்.

இமை மூடி மூடி திறந்து கருமணிகள் பம்பரமாக சுழல அவள் பேசிய பேச்சு எதுவும் பார்த்திபனின் காதுகளில் சென்றடையவில்லை. பிடிக்காத இட்லி கூட தேவாமிர்தமாக இனித்தது அவனுக்கு. பில்லை செட்டில் செய்து விட்டு உணவை முடித்துக் கொண்டு எழ,

“டிப்பனுக்கு நீங்க பே பண்ணிங்க. நான் காஃபி வாங்கி தர்றேன். ” எனச் சொல்லி இருவருக்கும் காஃபி மெசினில் காஃபி வாங்கினாள்.

“எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ்?”

“எனக்கு எதையும் ஓசில வாங்கி பழக்கம் இல்ல. எனக்கு என்ன கிடைக்கிதோ அதே அளவு இல்லன்னாலும் முடிஞ்ச அளவு திரும்பி செஞ்சி தான் பழக்கம். அப்பத்தா ஒரு திருப்தி கிடைக்கும்.” என்றவளுடன் சேர்ந்து நடந்த போது, எதிரே வந்த ஒருவர் பார்த்திபனின் கரத்தைத் தட்டிவிட, கையில் வாங்கி வைத்திருந்த காஃபி அவனின் சட்டையைக் கரையாக்கியது.

“ஓ..ஷிட்.. ” எனச் சூடு தாங்காது உதறினான் அவன்.

“அச்சோ… சுடுதா பார்த்திபன். ” எனப் பதறி போய் மங்கை கேட்க,

‘ச்ச எனக்காக ஒத்தரோசா துடிக்கிதே..’ என குஷியானவன், ஆம் என தலையசைக்க, அவள் தன் தளிர் கரத்தால் மார்பை துடைத்து விட்டாள்.

‘பையன் பறக்க ஆரம்பிச்சிட்டான்.’

“விட்டா இது கரையாகிடும்.. பாத்ரூம்ல வாஷ் பண்ணிடுங்களே.”

“அப்படியா சொல்ற! ஓகே.. நீ இத பாத்துக்க. நான் இப்ப வந்திடுறேன். ” என்றவன் தோளில் மாட்டியிருந்த பேக்கைக் கழற்றி கொடுத்து விட்டு, ஆண்கள் கழிவறைக்குள் சென்று கழுவி வந்தான். பின் மங்கைக்கு மனமில்லாமல் விடை கொடுத்து ப்ளைட்டில் ஏற்றி விட்டு பின் விமான நிலையத்தை விட்டு சென்றான்.

மணி பத்து… அவன் வீடு வந்து சேர எடுத்துக் கொண்ட நேரம். தன் ஓட்டை அம்பாசிடர் காரின் ஹாரனில் விரலை அழுத்தி, அதை எடுக்காது ஹாரன் அடித்துக் கொண்டே வீட்டை வந்தடைந்தான்.

‘அத்தனை குஷி மாப்பிள்ளைக்கு.’

ஆனால் அது புஷ் என்று போகப்போகிறது இன்னும் கொஞ்ச நேரத்தில்,

தன் வருகையைப் பிறருக்குச் சொல்ல ஹாரன் அடித்தபடியே அவன் வர, மாணிக்கத்தின் பீபி ஹாரன் சத்தத்தை விட அதிகமாக ஏறியது.

“இந்த கார அவனுக்கு யாரு எடுத்து குடுத்தா? நான் இத கண்டந்துண்டமா உடச்சி காய்லாங் கடைல போட்டு வச்சிருந்தேனே.” எனப் பல்லை கடித்தார் அவர் மனைவியிடம்.

“எனக்கு எப்படிங்க தெரியும்?” என்றார் பத்மினி பாவமாக.

 மாணிக்கத்திற்கு கோபம் வந்தால் அவரின் ஏச்சு பேச்சுக்களை வாங்கி கட்டிக் கொள்ளும் ஒரே ஜீவன் அவர் தான்..

“உம்மகன் என்ன அசிங்கப்படுத்தனும்னே இந்த டப்பா கார எடுத்திட்டு ஊர் சுத்திருக்கான். அதுவும் இன்னைக்கி என்ன நாள்? இந்த வீட்டு பையனா எல்லா வேலையையும் அவன்ல இழுத்துப் போட்டு பாத்திருக்கணும். அப்படி பாக்க முடியாதுன்னா பொறுப்ப எடுத்து பண்ற நம்ம ராம் மாப்ளக்கி துணையா இருக்கணும். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ஊர்ர சுத்திட்டு வர்ற நேரத்த பாரு. ” என மனைவியிடம் கடிந்தார்.

“ஐய்யோ ஊர்லாம் சுத்தலண்ணே. நாந்தா முக்கியமான விசயமா மும்பைக்கி அனுப்பினேன். ” என்றார் சுகுமாரன்.

திரு திருவென முழித்தபடி நின்ற அண்ணியை, கோபமாகப் பல்லை கடித்துக் கொண்டிருந்த அண்ணனிடம் இருந்து காப்பாற்றுவதாக நினைத்து, தானே கரும்பு மிஷினில் தலையை விடப் பார்த்திருக்கிறார்.

தைரியம் தான்.

“மும்பைக்கா… அவெங்கிட்ட என்ன வேலை சொன்ன? முதல்ல நீ அவன்ட்ட எதுக்கு வேலை சொல்ற? அது ஒரு தறுதலன்னு தெரியாதா! அவனால நாம பட்டது போதாதா. எதுக்கு அனுப்புன?” எனப் பொரிந்தார்.

“அது… நம்ம டிசைன் கேட்லாக்க…” என அவர் முழுதாக சொல்லி முடிக்கும் முன் வந்து சேர்ந்தான் பார்த்திபன்.

“ஹாய் சித்தப்பா.. ரொம்ப முக்கியமான விசயத்த பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிங்க போல.‌ எங்கிட்ட எதுவும் சொல்ல மாட்டிங்களா? நானும் என்னோட கருத்த சொல்வேன்ல.” எனப் புன்னகையுடன் கேட்க, மாணிக்கம் தலையில் அடித்துக்கொண்டான்.

“அப்ப கருத்து கேண்சலா!!” என்றவனிடம்,

“காலைல ஏழு மணிக்கே ஃப்ளைட் லேண்டாகிடாச்சி. இப்ப மணி பத்து. இவ்ளோ நேரம் எங்க சுத்திட்டு வர்ற.” என மாணிக்கம் தன் என்கொரியைத் தொடங்கினார்.

“அது வந்து Dad.. first time flight-ல டிராவல் பண்ண பொண்ணுக்கு சில உதவிகள் செஞ்சிட்டு வந்தேன். அதா லேட்டாகிடுச்சி. ” எனப் பெற்றவரிடம் சொல்ல, அவர் கோபமாகி கத்தும் முன்,

“அண்ணா, நம்ம சங்கத்து மெம்பர்ஸ் வர்றாங்க பாருங்க… வாங்க.. ” என அண்ணனை இழுத்து சென்றவர். செல்லும் முன் பார்த்திபனிடம்,

” என்னடா கோலம் இது? பாண்டல் மாதிரி இருக்க. போய் குளிச்சி ப்ரஷ்ஷாகிட்டு வா. பட்டு வேட்டி சட்டை எடுத்து உன் ரூம்ல வச்சிருக்கேன். அதைப் போட்டுட்டு வா. நேரம் ஆச்சி. இன்னும் அரமணி நேரத்துல முகூர்த்தம்… அதுக்குள்ள ஒரு பேரனா அவங்களுக்கு நீங்க செய்ய வேண்டிய பல சடங்கு இருக்கு. போ.. அப்றமா பேசுவோம். கிளம்பு முதல்ல.” எனச் சொல்லி துரத்த,‌ பார்த்திபன் அறைக்குள் சென்று அவர் சொன்னது போல் தயாராகி வந்தான்.

பட்டு வேட்டி சட்டை அவனுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. மணிக்கட்டில் வந்து நின்ற சட்டை கையை மடித்துத் தன் புஜங்களுக்கு ஏற்றி கொண்டே வெளியே வந்தவனைப் பாய்ந்து வந்து அணைத்தாள் விஷாலினி.

“எங்க மாமா போயிருந்த? நான் உனக்கு எத்தன தடவ கால் பண்ணேன் தெரியுமா! நீ தான் பிஸின்னு சொல்லி ரெண்டு செக்கேண்டு கூட ஒழுங்கா பேசாம வைச்சிட்டா. உங்கிட்டு நான் சொல்றதுக்கு எவ்ளோ விசயம் இருக்கு தெரியுமா? ” எனத் தன் கல்லூரி கதைகளை அவனிடம் பேசியபடி அவனின் கரம் கோர்த்து நடந்தாள்..ன

இருவரும் கூடத்திற்கு சென்றனர். அங்கு பார்த்திபன், செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளிலும் விஷாலினி உடன் இருந்தாள். அவனை விட்டு நகரவே மாட்டேன் என அட்டை போல் ஒட்டிக் கொள்ள, பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்ததோ இல்லயோ! தெரியவைத்தார் சண்முகம்.

” எம்பொண்ணும் மாப்ளயும்… ஜோடிப் பொருத்தும் சூப்பர்ல…” எனப் பார்க்கும் அனைவரிடமும் கருத்துக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

“என்னங்க இதெல்லாம்!! இப்படி பேசாதிங்கன்னு சொல்லிருக்கேன்னா இல்லயா? அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க.” என்றார் வரலட்சுமி கண்டிக்கும் தொனியில்.

“அதெப்படி பிடிக்காம போகும். தங்கச்சி மகள மருமகளா ஏத்துக்க கசக்குமா என்ன? நீ தான் உங்கண்ணன்ட்டயும் உங்கப்பாட்டையும் பேசி சீக்கிரம் முடிச்சி வக்கணும்.” என்றவர் மனைவியின் கன்னம் தொட்டு வருட, கணவனின் காதலில் நெகிழ்ந்து போனார் வரலட்சுமி. எத்தனை வயதானாலும் குறையாத தன் கணவனின் அன்பு அவருக்கு வரமாக தெரிந்தது.

“அங்க பாரு. பாக்கவே எவ்ளோ பொருத்தமா இருக்கு இவங்க ஜோடி. நீ மனசு வச்சா நிஜ ஜோடியா வலம் வருவாங்க. நம்மல மாதிரி காதலோட எப்பயுமே இருப்பாங்க.” என்று மனைவியின் நெற்றியில் இதழ் பதிக்க, வரலட்சுமிக்கு வெட்கம் வந்துவிட்டது.

வெட்கம் கொண்டு சிவந்த கன்னங்களை விரலால் வருடி முத்தமிட, வயது முதிர்ந்த பின்னும் கிடைக்கும் கணவனின் அன்பை கண்டு புளகாங்கிதம் அடைந்தார்.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!